Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழரில் படுகு மொழி வேட்பாளர் - தமிழர்க்கு வாய்ப்பில்லையா எனக் கொதிக்கும் நிர்வாகிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
lavanya

lavanya

'தமிழர்கள் ஆளட்டும் மற்றவர்கள் வாழட்டும்' என்ற கொள்கை கொண்ட நாம் தமிழர் கட்சி,வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு படுகர் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வேட்பாளராக அறிவித்திருப்பது கட்சி நிர்வாகிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் குறும்பர்,தோடர்,கோத்தர், இருளர், பணியர், காட்டுநாயக்கர் என 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எண்ணிக்கை அடிப்படையில் பழங்குடி மக்கள்த் தொகை மிகக் குறைவு என்பதால், எந்த அரசியல் கட்சியும் இந்த பூர்வக்குடி மக்களுக்கு தேர்தலில் முன்னுரிமை அளிப்பதேயில்லை.

Ooty
 
Ooty

வாக்கு வங்கியை கருத்தில் கொண்டே குன்னூர், ஊட்டி பகுதிகளில் அதிகம் வாழும் படுகு மொழி பேசும் பெரும்பான்மை மக்களை வேட்பாளராக அறிவிக்கின்றனர். இந்த தேர்தலிலும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய முக்கிய கட்சிகள் ஊட்டி, குன்னூர் தொகுதிகளில் படுகு மொழி பேசும் மக்களில் இருந்தே வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளனர்.

வாக்கு வங்கி அரசியலைப் பின்பற்றியே குன்னூர் தொகுதியில் போட்டியிட படுகு மொழி பேசும் பெண் ஒருவரை நாம் தமிழர் கட்சியின் தலைமையும் தேர்வு செய்திருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.
 
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.

இது குறித்து நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் நீலகிரி நிர்வாகி ஒருவர்,``நாம் தமிழர் கட்சியை மாற்றத்துக்கான ஒரு களமாக கருதி வந்தோம். நீலகிரியில் மொழி உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழர்களாகவே உள்ளனர். ஆனால் மற்ற கட்சிகளைப் போலவே நமது கட்சியும் வாக்கு அரசியலை கணித்து படுகு மொழி பேசும் ஒருவருக்கு வாய்ப்பளித்துள்ளது பலரிடமும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

படுகர் இனத்தைச் சேர்ந்த குன்னூர் நாம் தமிழர் வேட்பாளர் லாவன்யாவிடம் பேசினோம்,`` கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த பேரகணி கிராமத்தைச் சேர்ந்த நான் கடந்த ஓராண்டாக கட்சியில் உள்ளேன். எனது கணவர் சில ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வருகிறார்.

lavanya
 
lavanya

ஒரு போதும் மாற்று மொழி பேசுபவராக என்னை நான்உணர்ந்ததில்லை. படுகு மொழி பேசும் எனக்கும் இந்த கட்சியில் முழு சுதந்திரம் உள்ளது. நீலகிரி மக்களின் குடிநீர் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றுவேன்" என்றார்.

இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவரும், ஊட்டி தொகுதியின் வேட்பாளருமான ஜெயக்குமாரிடம் பேசினோம்,``நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் படுகு மொழி பேசும் மக்களும் நிர்வாகிகளாக உள்ளனர். தலைமை மட்டுமே தமிழராக இருந்தால் போதும். இது தமிழர்களுக்கு மட்டுமான கட்சி அல்ல" என்றார்.

நீலகிரி:நாம் தமிழரில் ஒரு படுகர், குன்னூர் வேட்பாளர் சர்ச்சை | padugar candidate in naam tamilar stirs controversy - Vikatan

Edited by பிழம்பு

லாவண்யா நல்ல வடிவாக இருக்கின்றார். கனடாவில் ரசிகமன்றம் ஒன்றை தொடங்க வேண்டியது தான்.

முப்பது நாளில் படுகு மொழி பயில்வதற்கு ஏதும் புத்தகங்கள் இருக்கின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

லாவண்யா நல்ல வடிவாக இருக்கின்றார். கனடாவில் ரசிகமன்றம் ஒன்றை தொடங்க வேண்டியது தான்.

முப்பது நாளில் படுகு மொழி பயில்வதற்கு ஏதும் புத்தகங்கள் இருக்கின்றதா?

Tamilvanan brought the world into TN homes - DTNext.in

எதற்கும் நீங்கள் தமிழ்வாணன் பதிப்பகத்தில் விசாரித்து பார்க்கவும். இவர் கண்டிப்பா போட்டிருப்பார் .......!   

இதுபோன்ற சமூக சேவைகளுக்கு உதவுவதில் எனக்கு அதிக விருப்பம்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

லாவண்யா நல்ல வடிவாக இருக்கின்றார். கனடாவில் ரசிகமன்றம் ஒன்றை தொடங்க வேண்டியது தான்.

முப்பது நாளில் படுகு மொழி பயில்வதற்கு ஏதும் புத்தகங்கள் இருக்கின்றதா?

sai-pallavi-biography.jpg

அவர்கள் எப்போதுமே அழகுதான் தோழர்..☺️

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

லாவண்யா நல்ல வடிவாக இருக்கின்றார். கனடாவில் ரசிகமன்றம் ஒன்றை தொடங்க வேண்டியது தான்.

முப்பது நாளில் படுகு மொழி பயில்வதற்கு ஏதும் புத்தகங்கள் இருக்கின்றதா?

May be an image of 3 people and text

இந்தத் தகவலை.... திருமதி நிழலியிடம் தெரிவிப்பவர்களுக்கு, ஒரு பச்சைப் புள்ளி வழங்கப்படும்.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text

இந்தத் தகவலை.... திருமதி நிழலியிடம் தெரிவிப்பவர்களுக்கு, ஒரு பச்சைப் புள்ளி வழங்கப்படும்.  🤣

திருவாளர் நிழலிக்கு எந்த ஆபத்தும் திருமதி நிழலியால் நிகழ வாய்ப்பில்லை தமிழ் சிறி. கத்தி, கோடாலி, உலக்கை, அம்மிக்கல் எல்லாம் திருவாளர் கிணற்றுக்குள் போட்டுவிட்டாராம். 😂🤣 

18 hours ago, நிழலி said:

லாவண்யா நல்ல வடிவாக இருக்கின்றார். கனடாவில் ரசிகமன்றம் ஒன்றை தொடங்க வேண்டியது தான்.

முப்பது நாளில் படுகு மொழி பயில்வதற்கு ஏதும் புத்தகங்கள் இருக்கின்றதா?

உங்கள் குணத்தை (Interests:காமமும் கலவியும்) காட்டுதே அப்படி தான் உங்கள் கண்ணும் அறிவுக்கும் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2021 at 12:11, appan said:

உங்கள் குணத்தை (Interests:காமமும் கலவியும்) காட்டுதே அப்படி தான் உங்கள் கண்ணும் அறிவுக்கும் தெரியும் 

காமமும் கலவியும் இல்லையென்றால் நீங்களும் இல்லை, நாங்களும் இல்லை அப்பனே.!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Paanch said:

காமமும் கலவியும் இல்லையென்றால் நீங்களும் இல்லை, நாங்களும் இல்லை அப்பனே.!

இது முற்றிலும் தவறில்லை......இடையில் சோறு என்ற சொல்லையும் சேர்க்க வேண்டும் என கூறி இவ்விடத்தை விட்டு நகர்கின்றேன். 😎
சோறு இல்லா விட்டால் இவ் வையகமே இல்லை.🙃

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் கட்சி படுகர் இனத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நியமித்ததை வரவேற்க வேண்டும். மேற்கு நாடுகளில் குடியேறிய ஈழ தமிழர்களை அந்த நாட்டு கட்சிகள் அரவணைத்து தங்கள் வேட்பாளர்களாக போட்டியிட வைக்கின்றன. சீமானின் கட்சி தனது இனவெறியை கைவிட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமானின் கட்சி படுகர் இனத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நியமித்ததை வரவேற்க வேண்டும். மேற்கு நாடுகளில் குடியேறிய ஈழ தமிழர்களை அந்த நாட்டு கட்சிகள் அரவணைத்து தங்கள் வேட்பாளர்களாக போட்டியிட வைக்கின்றன. சீமானின் கட்சி தனது இனவெறியை கைவிட வேண்டும்.

சீமான் இனவெறி பிடித்தவர் என்று எதை வைத்து தீர்மானிக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சீமான் இனவெறி பிடித்தவர் என்று எதை வைத்து தீர்மானிக்கின்றீர்கள்?

பதிவில் உள்ள முரண்பாடுகளை கவனித்தீரா அமைச்சரே?

ம்..ம்... நீர் எதை கவனித்திருப்பீர்...

படுகர் இனத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நியமித்ததை வரவேற்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே, இனவெறியை கைவிடவேண்டுமாம்....

கவனித்தீரா?

யாரங்கே.... இந்த விளங்க நினைப்பவரை, விளங்கி கொள்ளும் வரை, வாயில், விடாமல் நாட்டுச் சர்க்கரை போட்டுக் கொண்டே இருங்கள். ம்... போங்கள்...

2 hours ago, குமாரசாமி said:

இது முற்றிலும் தவறில்லை......இடையில் சோறு என்ற சொல்லையும் சேர்க்க வேண்டும் என கூறி இவ்விடத்தை விட்டு நகர்கின்றேன். 😎
சோறு இல்லா விட்டால் இவ் வையகமே இல்லை.🙃

2 hours ago, Paanch said:

காமமும் கலவியும் இல்லையென்றால் நீங்களும் இல்லை, நாங்களும் இல்லை அப்பனே.!

சோறு இல்லா விட்டால்.... காமமும்.... இல்லை, கலவியும் இல்லை !!!😰

On 17/3/2021 at 05:38, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text

இந்தத் தகவலை.... திருமதி நிழலியிடம் தெரிவிப்பவர்களுக்கு, ஒரு பச்சைப் புள்ளி வழங்கப்படும்.  🤣

நிழலி, இந்தப்பக்கமே வராமல், தலை தெறிக்க ஓடி விட்டார்... போலை கிடக்குது...

உங்கள் பச்சைப்புள்ளி விருதை, ரத்து செய்து விடுங்கள். இல்லாவிடில், பயத்தில், பேதி போய் கொண்டு இருக்கும் மனிதருக்கு.😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Nathamuni said:

பதிவில் உள்ள முரண்பாடுகளை கவனித்தீரா அமைச்சரே?

ம்..ம்... நீர் எதை கவனித்திருப்பீர்...

Pulikesi Vadivelu GIF - Pulikesi Vadivelu - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2021 at 02:49, புரட்சிகர தமிழ்தேசியன் said:

sai-pallavi-biography.jpg

அவர்கள் எப்போதுமே அழகுதான் தோழர்..☺️

படுகர் இனத்தை சேர்ந்தரா, தோழர்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Nathamuni said:

படுகர் இனத்தை சேர்ந்தரா, தோழர்?

சாய் பல்லவி படுகர் இனம் என்பதை நானும் எங்கேயோ வாசித்த ஞாபகம். ஆனால் தாங்கள் தமிழர்கள் என்றுதான் சொல்லிக்கொள்வார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

சாய் பல்லவி படுகர் இனம் என்பதை நானும் எங்கேயோ வாசித்த ஞாபகம். ஆனால் தாங்கள் தமிழர்கள் என்றுதான் சொல்லிக்கொள்வார்களாம்.

சேச்சி என்று தானே நினைத்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, Nathamuni said:

சேச்சி என்று தானே நினைத்தேன்

இல்லை சேச்சி இல்லை சந்தோசமாய் வாழுற இனம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.