Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாநில உரிமைகளை மத்திய அரசிடம் பறி கொடுத்துவிட்ட திராவிட கட்சிகள்: சீமான் கடும் சாடல்

Featured Replies

2 hours ago, பையன்26 said:

நேர்மையான‌ த‌ன்மான த‌மிழ‌ன் த‌மிழ‌க‌த்தை  ஆள‌னும் தமிழ‌க‌ம் இன்னொரு  டென்மார்க் போல் வ‌ந்து விடும் அதோடு இந்தியாவின் முன்னேறிய‌ முத‌ல் மானில‌மாக‌ தமிழ‌க‌ம் இருக்கும் ?

அதாவது சிறந்த நிர்வாகத்திலும் பொருளாதாரத்திலும் இந்தியாவில் இன்று இரண்டாவது மானிலமாக இருக்கும் தமிழகம் முதலாவதாக வரும் என்கின்றீர்கள்?

 

25 minutes ago, nunavilan said:

ஒரே மேடையில் என்கூட பேச ரெடியா ? : சவால் விடும் சீமான்

 

ஸ்டாலின் நிற்கும் தொகுதி எங்கும் எதிர்த்து தான் நிற்பேன் என்று சூளுரைத்த மாதிரி இந்த சவால் இருக்காது என நம்புவோம் 😌

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, நிழலி said:

 

 

ஸ்டாலின் நிற்கும் தொகுதி எங்கும் எதிர்த்து தான் நிற்பேன் என்று சூளுரைத்த மாதிரி இந்த சவால் இருக்காது என நம்புவோம் 😌

துணிவிருந்தா வரச்சொல்லுங்கள். பார்த்தே வாசிக்க மாட்டாதவர்கள் விவாதிப்பதா??🤣😜

1 minute ago, nunavilan said:

துணிவிருந்தா வரச்சொல்லுங்கள். பார்த்தே வாசிக்க மாட்டாதவர்கள் விவாதிப்பதா??🤣😜

பார்த்து சரியாக வாசித்தால் நாங்கள் வாய்விட்டு சிரிக்க எங்கே போவதாம்?😃

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

பார்த்து சரியாக வாசித்தால் நாங்கள் வாய்விட்டு சிரிக்க எங்கே போவதாம்?😃

 

தமிழ்நாட்டின் எதிர்கால முதல்வர்.இப்பவே கண்ணை கட்டுது.

12 minutes ago, nunavilan said:

தமிழ்நாட்டின் எதிர்கால முதல்வர்.இப்பவே கண்ணை கட்டுது.

இவர் முதலமைச்சர் ஆகவும் திமுக ஆபாச பேச்சாளர் லியோனி துணை முதல்வராகவும் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nunavilan said:

தமிழ்நாட்டின் எதிர்கால முதல்வர்.இப்பவே கண்ணை கட்டுது.

தெலுங்கு ல் எழுதி வைத்து படித்து தமிழர்களை அடிமையாக்கும் கனவில் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழனை இன்னெரு தமிழன் அடக்கியாளும் தமிழ் நாட்டில் ....கொண்ட கொள்கையில் உறுதியும்  பற்றுமற்ற தலைவர்களையும்  ...கட்சிகளையுமுடைய தமிழ் நாட்டில். ..அயல்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் சார்பாக இந்தியாமத்தியரசை செயல்படும்படி துண்டமுடியாத தமிழர்களைக்கொண்ட தமிழ்நாட்டில்....கடலில் கலந்து உப்புநீராகி வீணகிப்போகும் நதிநீரை தமிழ்நாட்டுக்கு திருப்பி வறச்சியைப்போக்க முடியாத தமிழர்களைக்கொண்ட தமிழ்நாட்டில்.. யார் முதலமைச்சர்யாகிலும்  என்ன பிரயோசணம்?...ஈழத்தமிழனுக்கும் தனிநாடே...மாநில சுயாட்ச்சியே..கிடைக்கப்போவதில்லை.

மனிதர்கள் ஆசைக் கனவுகள் வளர்த்துச்செயல்பட முனைவதும் காலம் அவற்றைச் சிதைத்து விடுவதும் வாழ்வில் நடந்தவாறே இருக்கின்றன 

தமிழ்நாட்டு அரசியலில் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது ?பணம் என்னும் 

பேப்பரைக் கட்டு கட்டாகக் கொடுத்தால் தலைவர்களை...கட்ச்சியை...ஏன்?தமிழ்நாட்டையே விலைக்கு வேண்டலாம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொடி பிடிக்கப் பணம்; கோஷம் போடப் பணம்; நாங்கள் சொந்தப் பணத்தில் பெட்ரோல் போட்டுக்கொண்டு மக்கள் பணிக்கு வருகிறோம்: நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் பேட்டி

kaali-ammal-s-interview  

நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் காளியம்மாள். அக்கட்சியின் சார்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் பூம்புகார் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டி.

* கடந்த மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியீட்டீர்கள். இது நீங்கள் சந்திக்கும் இரண்டாவது பொதுத் தேர்தல். அந்த அனுபவம் எப்படி இருக்கிறது? பூம்புகாரில் உங்களுக்கான வரவேற்பும், கள நிலவரமும் எவ்வாறு உள்ளது?

அனுபவம் சிறப்பாக உள்ளது. நான் போட்டியிடும் பூம்புகார் தொகுதி மிகப்பெரிய தொகுதி. எல்லாத் தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து வருகிறேன். அவர்களின் இத்தனை ஆண்டுகால வலிகளை கண்டுணரக் கூடிய வாய்ப்பாக இதனைப் பார்க்கிறேன். பின்னொரு காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது மக்கள் இத்தகைய பிரச்சினைகளைச் சந்திக்கக் கூடாது என்ற உறுதி உள்ளது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இரண்டு முக்கியக் கட்சிகளும் செய்யும் பணப் பட்டுவாடா அச்சத்தைத் தருகிறது.

* திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரச்சாரத்தை முன் வைத்து வருகிறது. இந்தத் தேர்தலில் நீங்கள்தான் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்பதை மக்களிடம் எவ்வாறு முன்னிறுத்துகிறீர்கள்?

அதிமுக, திமுக அரசியல் மாற்றம் குறித்து நாங்கள் பேசுவதில்லை. நாங்கள் அடிப்படை அரசியல் மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறோம். மிக முக்கியமாகப் பார்ப்பது நிலமும், வளமும் எம் மக்களுக்கானதாக இருப்பதில்லை. அடுத்த தலைமுறை குறித்த கவலை இல்லை. ஆனால், அவர்களுக்கு எங்கள் வாக்கு மட்டும் வேண்டும். திராவிடக் கட்சிகள் மக்களிடம் உண்மையைக் கூறி வாக்குச் சேகரிக்க முடிகிறதா? அவ்வாறு இருந்தால் ஏன் திராவிடக் கட்சிகள் வாக்குக்குப் பணம் கொடுக்கின்றன. மக்களின் வறுமையை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழக அரசு அவ்வளவு கடன் சுமையில் இருக்கும்போது அக்கட்சியின் அரசியல் தலைவர்களிடத்தில் மட்டும் அவ்வளவு பணம் எவ்வாறு சேர்கிறது?

பணம் இருக்கிறவர்கள், செல்வாக்கு இருக்கிறவர்கள் மட்டும்தான் அரசியலுக்குவர வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். என்னைப் போன்ற எந்தப் பின்புலமும் இல்லாத சாமானிய மக்களும் சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும். அதுதானே ஜனநாயகமாக இருக்க முடியும். இதைத்தான் நாங்கள் முன்னிறுத்துகிறோம்.

* திராவிடக் கட்சிகள் முன்னெடுத்த சானிட்டரி நாப்கின் வழங்குதல் போன்ற முற்போக்கான சுகாதாரத் திட்டங்கள், உலகின் பல வளர்ந்த நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கையில் சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதை இழிவான செயல் என்ற தொனியில் பேராவூரணி தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திலீபன் கூறியிருந்ததது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அதுகுறித்து உங்கள் கருத்து?

நான் குக்கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளேன். அவர் பேசியதை நான் இதுவரை கேட்கவில்லை. இதுதான் உண்மை. எனினும் சில பேர் என்னிடம் இதைப் பற்றிக் கூறினார்கள். இந்தச் செய்தியை நான் கேள்விப்பட்டதும், அவரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். அவருக்கு அழைப்பு போகவில்லை. நிச்சயம் அவரிடம் அதற்கான விளக்கத்தை நான் கேட்பேன். நீச்சயம் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தால், கட்சியில் விளக்கம் கேட்பார்கள்.

எந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பேசி இருந்தாலும், நான் அதனைப் பார்த்தபிறகுதானே கேட்க முடியும். என்னைப் பொறுத்தவரை ஒருவர் தவறு இழைத்திருந்தால் அதனை அவர் வாயிலாகக் கேட்ட பிறகுதான் நான் பதில் கூறுவேன். எனவே நான் முழுமையாக அறிந்தபின் இதற்கு பதிலளிக்க முடியும். ஆனால், சங்கடமாகும்படி பேசி இருந்தால் அது சரியில்லைதான்.

* தடுப்பூசிகள் மக்களிடம் சென்றடைவதற்கான நெடிய பயணத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வாறு இருக்கையில் தடுப்பூசிகள் என்பது ஒரு வர்த்தகம். நான் எனது குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடவில்லை என நீங்கள் பேசிய பேச்சு தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறீர்களா?

நான் எனது தனிப்பட்ட மருத்துவருடன் ஆலோசனை செய்தேன். தடுப்பூசிகள் என்பது குறிப்பிட காலத்திற்குத்தான் உடலில் வேலை செய்யும். வாழ்நாள் முழுவதும் அது செயல்படாது. எனவே, உணவுச் சத்துகளில் கிடைத்திராத சத்து தடுப்பூசிகளில் கிடைத்துவிடாது என்று மருத்துவர் எடுத்துரைத்தார். அதனைத்தான் நான் மேடையில் பேசினேன். நான் எல்லாத் தடுப்பூசிகளையும் கூறவில்லை. போலியோ போன்ற தடுப்பூசிகளை நான் கூறவில்லை.

ஆனால், இன்று தடுப்பூசிகளை வைத்து தனியார் மருத்துவமனைகள் மிகப்பெரிய வர்த்தகம் செய்து வருகின்றன. பத்து, பதினைத்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மருத்துவமனைகளையும், தற்போதுள்ள மருத்துவமனைகளையும் ஒப்பிடுங்கள். நான் கூறுவது ஒன்றுதான். ஆயிரம் தடுப்பூசிகள் போடுவதற்கு பதிலாக குழந்தைகளுக்குச் சத்தான உணவளித்து வளர்த்தெடுங்கள். இயற்கையோடு இணைந்த உணவை வழங்குங்கள். இதுதான் நான் கூறுவது. குழந்தைகளை நோயற்றவர்களாக வளர்ப்பதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி அல்ல. இதுதான் என் தனிப்பட்ட கருத்து.

* சர்வாதிகாரத்துக்கும், அடக்குமுறைக்கு எதிராகவும் வலுவாகக் குரல் கொடுக்கும் சமூகமாகவே தமிழ்ச் சமூகம் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது அன்பான சர்வாதிகாரம் செய்ய வாய்ப்பளியுங்கள் என்று சீமான் கூறுகிறார். இது வன்முறையாகத் தெரியவில்லையா?

குப்பையைக் கொட்டாதீர்கள் என்று வாசகம் எழுதப்பட்டுள்ளது. அதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள். வெளிநாடுகளில் நீங்கள் சாலை விதிகளை மீறினால் சிசிடிவி கேமராவில் அதனைக் கண்டு அவர்களைத் தண்டிக்கிறார்கள். இதனை நீங்கள் என்னவாகப் பார்க்கிறீர்கள்? பல வெளிநாடுகளில் இது நடைமுறையில் உள்ளது.

இன்னொரு விஷயத்துக்கு வருவொம். யார் வேண்டுமானாலும் மரத்தை வெட்டலாம் என்ற சூழல்தான் தற்போது உள்ளது. காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நாம் தமிழர் கட்சி மரம் வளர்க்கிறது. அது ஏன் யார் பார்வைக்கும் செல்லவில்லை. யாரும் அதை ஏன் விவாதிப்பதில்லை. மரங்களை வெட்டினால் அதனை வெட்டியவருக்கு தண்டனை கொடுத்து நூறு மரங்களை அவர் வளர்க்க வேண்டும் என்று கூறுவது எப்படி சர்வாதிகாரமாக மாறுகிறது? தவறு செய்தால் தண்டனைதானே இருக்க வேண்டும்.

சர்வாதிகாரம் என்றால் நீதிமன்றம் எதற்கு, சிறைச்சாலைகள் எதற்கு? சர்வாதிகாரம் என்ற வார்த்தையைப் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் எல்லாம் உள்ளது. நீங்கள் சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால் சரியாக இருக்கும். தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறாக இருக்கும்.

* இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழரின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? அடுத்தகட்டப் பயணம்?

வெற்றி வாய்ப்பு நன்றாகவே உள்ளது. சின்ன கட்சி என்று ஓரமாக வைத்திருந்தார்கள். ஆனால், தற்போது 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் என்று தேர்தல் ஆணையமே கூறுகிறது. கிராமப்புறங்களில் மக்களிடம் நன்றாக வரவேற்பு உள்ளது. கொடி பிடிக்கப் பணம், கோஷம் போடப் பணம் என உள்ள இந்தக் காலகட்டத்திலும் நாங்கள் சொந்தப் பணத்தில் பெட்ரோல் போட்டுக்கொண்டு மக்கள் பணிக்கு வருகிறோம். நாங்கள் மக்களைப் பிரதானமாக வைத்துதான் அரசியல் செய்து வருகிறோம். இளைஞர்கள் கூடுகிறார்கள். மாற்று அரசியல் தேவை என்ற மனநிலை மக்களிடம் உள்ளது. இந்தத் தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய உயர் நிலைக்குச் செல்வோம். அடுத்த தேர்தலில் நீங்களே பார்ப்பீர்கள்.

 

https://www.hindutamil.in/news/reporters-page/651840-kaali-ammal-s-interview-4.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர் பாரம்பரியத்தை பிரபலப்படுத்தும் நாம் தமிழர் கட்சி

ntk திருவொற்றியூர் தொகுதியில் பிரச்சாரத்தின்போது சிலம்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்.

தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 7 நாட்களே உள்ளன. அதனால் தேசிய, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களும் காலை, மாலை நேரங்களில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.

மக்களைக் கவர்வதற்காக தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சிகள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். அதிமுக தேர்தல் பிரச்சாரத்திற்காக ஓபிஎஸ்., இ.பி.எஸ். போன்ற தலைவர்கள் வரும்போது குறிப்பிட்ட இடத்தில் மக்களைக் கவர்வதற்காக மேடை அமைத்து ஆடல், பாடல் காட்சிகள் அரங்கேறும். ஆண்கள், பெண்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாடல்களை இசைத்து நடனமாடுவார்கள். அதைக் காண்பதற்கு கூட்டம் கூடும். தலைவர்கள் வந்து பேச்சைத் தொடங்கும் வரை ஆடல், பாடல் காட்சிகளைக் காணலாம். அமமுக பிரச்சாரத்தில் சில இடங்களில் இதை காண முடிகிறது.

திமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வருகையின் போது பெரும்பாலும் கட்சியின் கொள்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் கொண்ட பிரச்சாரப் பாடல்களே இடம்பெறுகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் மக்களைக் கவரும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி பிரச்சாரத்தின்போது அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் வரை தமிழரின் பராம்பரிய விளையாட்டுக்களை இளம் தலைமுறையினரிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் சிலம்பாட்டம் போன்றவற்றை அரங்கேற்றுகின்றனர். சிறுவர், இளைஞர் என பலரும் இந்த நிகழ்ச்சியை நடத்துவது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தேர்தல் பிரச்சாரத்தில் புதிய யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.

https://www.hindutamil.in/news/tamilnadu/651790-ntk.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்னாட்சி அதிகாரமுள்ள வருமானவரித் துறையை தனக்கான அமைப்பாக மாற்றும் பிரதமர் மோடி: சீமான் குற்றச்சாட்டு

seeman-accuses-modi-of-turning-autonomous-income-tax-department-into-his-own-body புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசுகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

புதுக்கோட்டை

பிறரைப் பழிவாங்கும் நடவடிக்கைக்கு வருமான வரித்துறையை ஒரு கருவியாக மத்திய அரசு பயன்படுத்துகிறது எனவும் தன்னாட்சி அதிகாரமுள்ள துறையை தனக்கான அமைப்பாகப் பிரதமர் மோடி மாற்றி வருவதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து புதுக்கோட்டையில் இன்று (மார்ச் 27) அவர் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு வருவது என்பது மத்திய அரசின் கையாலாகாத் தனத்தையும், இயலாமையையும்தான் காட்டுகிறது.

தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் ஏற்றுவார்கள். ஏற்கெனவே ஏற்றி இருப்பதையே மக்களால் சமாளிக்க முடியவில்லை. தன்னாட்சி அதிகாரமுள்ள வருமான வரித் துறையை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தி தனக்கான அமைப்பாக மாற்றி வருகிறார் பிரதமர் மோடி. பிறரைப் பழிவாங்கும் நடவடிக்கைக்குக் கருவியாகவும் வருமான வரித்துறை பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கருத்தைக் கூறியோ, ஆட்சியின் சிறப்புகளைக் கூறியோ, வாக்குறுதிகளை அளித்தோ வாக்குக் கேட்பதற்கு அதிமுக, பாஜக கூட்டணியினரிடம் ஒன்றும் இல்லாததால் இரவில் மின் இணைப்புகளைத் துண்டித்துவிட்டு பணப்பட்டுவாடாவில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தேர்தல் களம் நாம் தமிழர் கட்சிக்கு சிறப்பாக உள்ளது'' என்று சீமான் தெரிவித்தார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/651348-seeman-accuses-modi-of-turning-autonomous-income-tax-department-into-his-own-body.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி வென்றால் அது புரட்சி- சீமான்

நாம் தமிழர் கட்சி வென்றால் அது புரட்சி- சீமான்

பெரம்பலூர்:

பெரம்பலூர் (தனி)தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

காங்கிரஸ், தி.மு.க. சிங்களர்களுக்கு கைகொடுத்து ஈழத்தில் தமிழர்களை அழித் தொழித்தனர். இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு ஆள வேண்டிய நோக்கம் மட்டுமே உள்ளது. மக்கள் வாழவேண்டும் என்று நினைக்கவில்லை.

இந்தியாவின் பொருளாதாரத்தை வலிமைப்படுத்தும் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்திற்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரி வருவாய்களை மத்திய அரசு தரவில்லை. மத்திய அரசை எதிர்க்க சிங்கப்பெண்ணே பாடலைப்போல் மம்தா பானர்ஜி உள்ளார்.

இந்தியாவை விற்பதில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் போட்டி நடக்கிறது. நான் பத்தாண்டுகளுக்கு முன்பு சொன்ன போது யாரும் நம்பவில்லை.

மக்களின் புரட்சி ஒன்று தான் இவற்றை எல்லாம் சரிசெய்யும். நமக்கு கிடைக்காத நீர் முதலாளிகளுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது என யோசித்து பார்க்க வேண்டும்.

அம்பேத்கர் நள்ளிரவு வரை படித்து கொண்டிருந்ததைப்போல் நான் இவற்றை எல்லாம் எப்படி சரி செய்வது என சிந்தித்து கொண்டிருக்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய சீமான், முட்டாள் தேருக்கு முட்டுக் கொடுப்பவன், மடையன் மடைப்பகுதிகளை பராமரிப்பவன் என இரண்டு சொல்லுக்கு விளக்கமளித்த சீமான் கண்டிப்பாக வர வேண்டும் என சொல்லக் கூடாது, உறுதியாக வரவேண்டும் என்று சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் அ.தி.மு.க., தி.மு.க. வெல்வது நிகழ்வு. நாம் தமிழர் வென்றால் அது வரலாறு, புரட்சி என்றார்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2021/03/28135718/2482445/Tamil-News-Naam-Thamizhar-Katchi-seeman-Campaign.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மண்ணில் தாமரை மலராது; எத்தனை முறை நட்டா தமிழகம் வந்தாலும் நோட்டாவுக்குக் கீழ்தான் பாஜக: சீமான் பேச்சு

no-matter-how-many-times-natta-comes-the-votes-are-under-nota-seeman-speech  

அரவக்குறிச்சி

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா எத்தனை முறை தமிழகம் வந்தாலும், நோட்டாவுக்குக் கீழ்தான் பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்துக் களம் காண்கின்றன. இதற்கிடையே நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அனிதா பர்வீனை ஆதரித்து பள்ளபட்டி பகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, ''காங்கிரஸ் எங்கள் இனத்தை அழித்தது. பாஜக மனிதகுல எதிரி. இந்த இரண்டு கட்சிகளையும் ஏற்கமாட்டேன். ஒரு காலத்திலும் இரண்டையும் என் இனத்துக்குள் உள்ளே விடமாட்டேன். அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று ஒரு தடவையாவது ஸ்டாலின் சொல்வாரா?

பாஜகவுக்குக் கதவு திறந்துவிட்டவர்கள் அதிமுகவும், திமுகவும்தான். எத்தனை முறை இங்கு நட்டா வந்தாலும், நோட்டாவுக்குக் கீழ்தான் பாஜகவுக்கு வாக்குகள் விழும். தமிழ் மண்ணில் தாமரை மலராது'' என்று சீமான் தெரிவித்தார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக தமிழகம் வந்துள்ளார். சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து, திறந்த வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாக நட்டா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/651318-no-matter-how-many-times-natta-comes-the-votes-are-under-nota-seeman-speech.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திமுக, அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலும், லஞ்சமும் தொடரும்: திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் விமர்சனம்

seeman-election-campaign  

திருப்பூர்

திமுக, அதிமுக ஆட்சிக்கு வந்தால்ஊழல், லஞ்சம் இருந்துகொண்டேதான் இருக்கும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.

திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, தாராபுரம், காங்கயம் உட்பட திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களான ஈஸ்வரன், சண்முகசுந்தரம், சுப்பிரமணியன், சோபா, சனுஜா, சிவானந்தம், ராஜேந்திர பிரசாத், ரஞ்சிதா ஆகியோரை ஆதரித்து, திருப்பூர் புஷ்பா திரையரங்கு வளைவு, வளர்மதி மேம்பாலம், பல்லடம் என்.ஜி.ஆர். சாலை மற்றும் காங்கயம்ஆகிய பகுதிகளில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

பள்ளி, கல்லூரிக்கு படிக்க சென்றால் கல்விக் கொள்ளை நடக்கிறது. மருத்துவமனைகளில் உயிர் வியாபாரமாகிவிட்டது. ஆற்று மணல் கொள்ளை எனஎல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்கிறோம். பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள். ஆசிரியர் பணி நியமனம், இடமாற்றம், பிறப்பு - இறப்பு சான்றிதழ் என அனைத்துக்கும் லஞ்சம் வாங்குகிறார்கள். ஊழல், லஞ்சத்தை ஒழிப்பதற்காக செயல்படும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மூலமாக, ரூ.26 லட்சத்தை மீட்டு மக்களிடம் ஒப்படைத்துள்ளோம். கடந்த 50 ஆண்டு கால ஆட்சிகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

திமுகவுக்கு மாற்றாக அதிமுகவுக்கும், அதிமுகவுக்கு மாற்றாக திமுகவுக்கும் வாக்களிக்கிறார்கள். இது அல்ல மாற்றம். ஆட்சியில் இருந்த ஆட்கள் மாறுவார்கள். ஆனால், ஆட்சி அமைப்பு முறை மாறவில்லை. இரண்டு கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல், லஞ்சம் இருந்துகொண்டேதான் இருக்கும். இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் சாராய ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் வடமாநிலங்களை சேர்ந்த ஒன்றரை கோடி பேர் பணிபுரிகிறார்கள். அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்யதொடங்கிவிட்டார்கள். மின் பொறியாளர் பணி, தபால் துறை உள்ளிட்டவற்றில் வடமாநிலத்தவருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இங்குள்ள அடிமை அரசுகள். ரயில்வே துறையிலும் வடமாநிலத்தவர்தான் அதிகளவில் உள்ளனர். தமிழர்களை குறைவாக பணியமர்த்துகின்றனர்.

தமிழகத்தில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லை, வீதி பெயர்களும் தமிழில் இல்லை. வாக்களிக்க மட்டுமே அரசுப் பள்ளிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். காங்கிரஸும், திமுகவும் கைகோர்த்து தமிழர்களை அழித்து, ஈழத்தில் 60 ஆண்டு கால கனவை நசுக்கின. வரும் தேர்தலி்ல் போட்டியிட திமுகவில் பெண்களுக்கு 12 இடங்களும், அதிமுகவில் 11 இடங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், நாங்கள் மட்டுமே 117 இடங்களை வழங்கியுள்ளோம். சம காலத்தில் சமூக நீதி,பெண் விடுதலையை காப்பது நாம் தமிழர் கட்சி மட்டுமே. கோடிகளை கொட்டி தேர்தலை சந்திக்கவில்லை; கொள்கைகளை கொட்டி சந்திக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/651173-seeman-election-campaign.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவினர் எவ்வளவு முயற்சித்தாலும் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை ஒருபோதும் மாற்ற விடமாட்டோம்: திருச்சி பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் உறுதி

seeman-election-campaign  

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களான பிரபு (திருச்சி கிழக்கு), வினோத் (திருச்சி மேற்கு), சோழசூரன் (திருவெறும்பூர்), கிருஷ்ணசாமி (மண்ணச்சநல்லூர்), செல்வரதி (ரங்கம்), கனிமொழி (மணப்பாறை), மலர் தமிழ் பிரபா (லால்குடி), தமிழ்ச்செல்வி (துறையூர்), தேவி (முசிறி) ஆகியோரை ஆதரித்து திருச்சி மலைக்கோட்டை கீழரண் சாலையில் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

அதிமுக, அமமுக ஆகிய இரு கட்சிகளும் ஜெயலலிதா ஆட்சி கொடுப்போம் என்கின்றனர். அதேபோல மு.க.ஸ்டாலின், கருணாநிதி ஆட்சி நடத்துவேன் என ஒருமுறை சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் அவர்களுக்கு ஒரு இடத்தில் டெபாசிட் கிடைக்காது. அதனால்தான் திமுகவினர் அதுபற்றி பேசாமல் இங்கே மோடி ஆட்சி, பாஜக வந்துவிடும் என்கின்றனர். ஓட்டு விழாமல் போய்விடும் என்பதால் மோடி படத்தை அவரது கட்சிக்காரர்களே போடாமல்தான் இங்கு ஓட்டுக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றிவிடுவோம் என பாஜகவினர் கூறுகின்றனர். அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற விடமாட்டோம். வெறும் 20 சீட் வாங்கிக் கொண்டு ஏன் இந்த வேலை. அதிலும் வெற்றி பெறப் போவதில்லை. இதற்கு ஓட்டுக் கேட்க பிரதமர், மத்திய அமைச்சர்கள், பிற மாநில முதல்வர்கள் எல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர்.

திரும்ப, திரும்ப திமுக, அதிமுகவுக்கே ஓட்டு போடுவதால் என்ன நடக்கப் போகிறது? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்துவோம். தனித்திறன் கல்விக்கு முன்னுரிமை அளிப்போம். உயிர்காக்கும் சிறந்த மருத்துவம் அளிப்போம். தாய்மொழியில் கல்வி கொடுப்போம்.

நச்சு ஆலைகளை நம்பிக் கொண்டிருக்காமல் நிலவளம் சார்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். சிற்றூரின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்போம். நஞ்சில்லா உணவு வழங்குவோம் என்றார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/651033-seeman-election-campaign.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

 

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் ஒரு கட்சி சார்பாக பிரசார திரியை நடத்த வேண்டாம் என்றால் சீமானின் தம்பிகள் கேற்க்க மாட்டார்கள். பின்னர் குத்துது குடையுது என்று குறைசொல்லக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, zuma said:

நிர்வாகம் ஒரு கட்சி சார்பாக பிரசார திரியை நடத்த வேண்டாம் என்றால் சீமானின் தம்பிகள் கேற்க்க மாட்டார்கள். பின்னர் குத்துது குடையுது என்று குறைசொல்லக்கூடாது. 

திரியை குழப்பி அடிக்க, மிளகாய் தூளை கொண்டு திருஞ்சனியல்.

இப்ப நல்ல, பிள்ளை மாதிரி புத்திமதியோ?

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவு, பல இடங்களில் பேசி, மயிலாடுதுறை  வரும் போது, 10 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சீமான், மேடைக்கு பக்கத்திலேயே, பிரச்சார வாகனத்தினை நிறுத்தி, மேடைக்கு போகாமல், வானிலிருந்தே, பேச தொடங்கி, மீதமுள்ள நேரத்தினை சரியாக பயன்படுத்தி, 10 மணிக்கு முடித்துக் கொண்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்னாட்சி அதிகாரமுள்ள வருமானவரித் துறையை தனக்கான அமைப்பாக மாற்றும் பிரதமர் மோடி: சீமான் குற்றச்சாட்டு

seeman-accuses-modi-of-turning-autonomous-income-tax-department-into-his-own-body புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசுகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

புதுக்கோட்டை

பிறரைப் பழிவாங்கும் நடவடிக்கைக்கு வருமான வரித்துறையை ஒரு கருவியாக மத்திய அரசு பயன்படுத்துகிறது எனவும் தன்னாட்சி அதிகாரமுள்ள துறையை தனக்கான அமைப்பாகப் பிரதமர் மோடி மாற்றி வருவதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து புதுக்கோட்டையில் இன்று (மார்ச் 27) அவர் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு வருவது என்பது மத்திய அரசின் கையாலாகாத் தனத்தையும், இயலாமையையும்தான் காட்டுகிறது.

தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் ஏற்றுவார்கள். ஏற்கெனவே ஏற்றி இருப்பதையே மக்களால் சமாளிக்க முடியவில்லை. தன்னாட்சி அதிகாரமுள்ள வருமான வரித் துறையை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தி தனக்கான அமைப்பாக மாற்றி வருகிறார் பிரதமர் மோடி. பிறரைப் பழிவாங்கும் நடவடிக்கைக்குக் கருவியாகவும் வருமான வரித்துறை பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கருத்தைக் கூறியோ, ஆட்சியின் சிறப்புகளைக் கூறியோ, வாக்குறுதிகளை அளித்தோ வாக்குக் கேட்பதற்கு அதிமுக, பாஜக கூட்டணியினரிடம் ஒன்றும் இல்லாததால் இரவில் மின் இணைப்புகளைத் துண்டித்துவிட்டு பணப்பட்டுவாடாவில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தேர்தல் களம் நாம் தமிழர் கட்சிக்கு சிறப்பாக உள்ளது'' என்று சீமான் தெரிவித்தார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/651348-seeman-accuses-modi-of-turning-autonomous-income-tax-department-into-his-own-body.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர், மணல் கொள்ளை தமிழகத்தில் தான் அதிகம் நடக்கிறது: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு

naam-tamilar-katchi  

அரியலூர்

தண்ணீர், மணல் கொள்ளை தமிழகத்தில்தான் அதிகம் நடக்கி றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டி யிடும் அரியலூர் சுகுணாகுமார், ஜெயங்கொண்டம் நீல.மகாலிங்கம் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜெயங் கொண்டம் அண்ணாசிலை அருகே நேற்று முன்தினம் இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியது: தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மணல், தண்ணீர் அனைத்தையும் சந்தை பொருளாகவே கொள்ளை யடித்து விற்று வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தண்ணீர், மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது.

கல்வி மற்றும் மருத்துவ வளர்ச்சி தமிழகத்தில் இல்லை. விவசாயிகளால் வாழ முடிய வில்லை. விவசாயிகள் விளை விக்கும் பொருட்களுக்கு இடைத் தரகரே விலை நிர்ணயிக்கிறார். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு அவர்களே விலையை நிர்ணயம் செய்கின்றனர்.

இந்த நிலை மாற அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

பின்னர், பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஸ்வரியை ஆதரித்து, பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் நேற்று சீமான் பேசியது:

இங்குள்ள அரசியல் கட்சி களுக்கு ஆள வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே உள்ளது. மக்கள் வாழ வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. இந்தியாவை யார் விற்பது என்பதில் பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் போட்டி நடக்கிறது என்று நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன போது யாரும் நம்பவில்லை. இப்போது தான் நம்புகின்றனர்.

மக்களுக்கான நலத்திட்டங்கள் என்னிடம் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு நாளும் உங்களுக்காக இரவெல்லாம் தூங்காமல் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எனவே அனைவரும் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து குன்னம் தொகுதி வேட்பாளர் ப.அருளுக்கு வாக்கு சேகரித்து லப்பைக்குடிகாட்டில் சீமான் பேசினார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/651963-naam-tamilar-katchi-1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திமுக, அதிமுக என வரலாற்றுப் பிழையை மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள்: செஞ்சியில் சீமான் பேச்சு

seeman-campaign-in-senji சீமான்: கோப்புப்படம்

விழுப்புரம்

திமுக, அதிமுக என வரலாற்றுப் பிழையை மீண்டும் மீண்டும் செய்யாதீர்கள் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆபூ.சுகுமாரை ஆதரித்து நேற்று (மார்ச் 28) சீமான் பேசியதாவது:

''உலகத்தில் தலைசிறந்த கல்வியில் முதல் இடத்தில் தென்கொரியா, இரண்டாம் இடத்தில் ஜப்பான், மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர், நான்காவது இடத்தில் ஹாங்காங், 5-ம் இடத்தில் பின்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்த 5 நாடுகளை முந்திக்கொண்டு தமிழ்நாட்டில் தரமான கல்வியைக் கொண்டுவருவேன். பிள்ளைகள் வீட்டின் செல்வங்கள் அல்ல, நாட்டின் செல்வங்கள். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாகக் கற்பிக்கப்படும்.

ஏன் என்றால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அறிவுதான் முக்கியம். அந்த அறிவு விற்பனைக்கு அல்ல. உயிர் காக்கும் மருத்துவம், தரம் உயர்த்தி ஒரு ரூபாயில் இருந்து ஒரு கோடி வரை இலவசமாக அளிக்கப்படும். முதல் குடிமகனுக்குக் கிடைக்கும் சலுகை, கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றுவேன். இதுதான் ஜனநாயகம்.

அரசு ஊழியர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும். மீறித் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் அரசு சம்பளத்தில் அரசு சரிபாதியாக எடுத்துக்கொள்ளும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை. நான் ஓட்டுக்காக நிற்கவில்லை, நாட்டுக்காக நிற்கிறேன்.

இந்த வரலாற்று வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது. ஆனால், மாற்றம் வரவில்லை. வேறு வழியில்லை என்று சொல்லாதீர்கள். திமுக, அதிமுகவிற்கு மாற்றாக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். எங்கள் ஆட்சியில் வாழ்ந்து பாருங்கள். தமிழகம் சொர்க்கமாகத் திகழும்.

செஞ்சி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஆபூ.சுகுமாருரை வெற்றி பெறச் செய்யுங்கள். அவர் கட்சியின் வேட்பாளர் அல்ல, மக்களின் வேட்பாளர். இது தேர்தல் வெற்றி அல்ல, வரலாற்று வெற்றி. எந்த அரசியல் பின்புலமும் இல்லை. எந்தப் பொருளாதார வழியும் இல்லை. பணம் இல்லை. வாக்குக்குக் காசு கொடுக்கவில்லை. அவர்கள் கோடிகளைக் கொட்டினார்கள். நாங்கள் ஆகப்பெரும் கொள்கைகளைக் கொட்டுகிறோம்.

நல்ல கருத்துகளை விதைத்துவிட்டால் தவறான அரசாங்கம் உருவாகாது. கை நிறைய விதைகளை விதைத்துக் கொண்டிருக்கிறேன். 10 ஆண்டு காலம் விதைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று பல லட்சம் இளைஞர்களை உருவாக்கியிருக்கிறார்கள். திமுக, அதிமுக என மறுபடியும் வரலாற்றுப் பிழையைச் செய்யாதீர்கள்".

இவ்வாறு சீமான் பேசினார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/652299-seeman-campaign-in-senji-1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

50 ஆண்டுகால அதிமுக, திமுக ஆட்சியில் தொலைநோக்குத் திட்டங்களே இல்லை: சீமான்

50-years-of-aiadmk-dmk-rule-has-no-vision-seeman  

சென்னை

50 ஆண்டுகால அதிமுக, திமுக ஆட்சியில் தொலைநோக்குத் திட்டங்களே இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதானக் கட்சிகளோடு, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடுகின்றன. ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சி, தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் காண்கிறது.

சென்னை, போரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் வேட்பாளருக்காக இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், ''தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இலவசங்களைக் கொடுத்தே மக்களை அடிமையாக்கி வைத்திருக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு அல்லது 20, 25 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம். இதனால் இது சரியாகும் என்று எந்தத் தொலைநோக்குத் திட்டமாவது அதிமுக, திமுக ஆட்சியில் வந்திருக்கிறதா?

இதற்குப் பதிலாக பணம், சலுகை, மானியம், இலவசம்தான் அறிவிக்கப்படுகிறது. இந்த நான்கைத் தவிர ஐம்பதாண்டுகளில் ஏதாவது திட்டம் இருக்கிறதா? ஒன்றுகூட இல்லை. வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிக்க வேண்டும் என்கிறீர்கள், சரி வீட்டில் சேகரிக்கிறோம். நாட்டில் எவ்வளவு நீரைச் சேமிக்கிறீர்கள்?

வெறும் 150 டிஎம்சி தண்ணீருக்குக் கர்நாடகாவிடம் கையேந்தி நிற்கிறோம். இறைவன் அருளால் தமிழகத்துக்கு 4 ஆயிரம் டிஎம்சி மழை நீர் கிடைக்கிறது. இதில் 1,500 டிஎம்சி தண்ணீர் மட்டும்தான் சேமிக்கப்படுகிறது. மீதமுள்ள நீர் கடலில் கலக்கிறது. அந்த நீரைக் கூடுதலாகச் சேமிக்க, இந்த நாட்டில் என்ன திட்டம் இருக்கிறது'' என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/652799-50-years-of-aiadmk-dmk-rule-has-no-vision-seeman-1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகளுக்குக் கம்பளி தரும் நரி: உச்சி வெயிலில் சீமான் சொன்ன குட்டிக் கதை

the-fox-who-gives-wool-to-the-goats-seeman-who-told-a-short-story-in-the-peak-sun  

சென்னை

ஆடுகளுக்குக் கம்பளி தரும் நரி குறித்து வெயில் நேரத்தில் சீமான் வில்லிவாக்கம் தொகுதியில் குட்டிக் கதை சொன்னது அங்கிருந்த மக்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி அமைத்துக் களம் காணும் சூழலில், சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் இரா.ஸ்ரீதரை ஆதரித்து, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே சீமான் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''ஒரு ஊரில் ஒரு நரி இருந்ததாம். அந்த நரி செம்மறி ஆடுகளிடம் பேசியதாம். என்னைத் தலைவராக்கி விடுங்கள். உங்கள் எல்லோருக்கும் குளிர்காலம் வரும்போது கம்பளி தருகிறேன் என்றதாம். அப்போது ஆடுகள் அனைத்தும் மண்டையை ஆட்டிக்கொண்டே நரி பின்னால் சென்றன.

அதுபோலத்தான் என்னைத் தலைவராக்கி விடுங்கள், உங்களுக்கு ரூ.1000 தருகிறேன், என்னை முதல்வராக்கி விடுங்கள் ரூ1500 தருகிறேன், வாஷிங் மெஷின் கொடுக்கிறேன் என்கிறார்கள். மக்களும் செவிசாய்க்கிறார்கள்.

கம்பளி செய்ய ஆட்டின் முடியைத்தான் நரி எடுக்கும் என்று தெரியாமல் ஆடுகளும், மக்களின் காசைத் திருடித்தான் இலவசங்களைத் தர முடியும் என்று தெரியாமல் மக்களும் இருக்கிறார்கள்.

பாட்டில்தான் தமிழகம் வெற்றி நடை போடுகிறது; நாட்டில் போடவில்லை. ஸ்டாலின்தான் வர்றாரு; கொள்ளையடிக்கப் போறாரு என்று சிறுமிகள் பாடுகிறார்கள்.

இருக்கும் வரை பாரதியாரைப் பைத்தியக்காரன் என்றார்கள். இறந்ததும் மகா கவி ஆகிவிட்டார். இன்று கத்திக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அருமை புரியவில்லை. ஒருநாள் நீங்கள் தேடும்போது, நான் இருப்பேனா என்று தெரியவில்லை.

நான் ஆட்சிக்கு வந்தால் கடன் இருக்கிறது; தமிழ்நாடு அரசு திவாலாகிவிட்டது என்று மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பேன். தனி மனிதருக்குச் சலுகை காட்டும் அரசு, வங்கிகள், 8 கோடி தமிழ் மக்களுக்குச் சலுகை அளிக்காதா?

இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அது விவசாயி சின்னம். நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் என நினைத்தால் உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் வாக்களியுங்கள். திமுக, அதிமுகவைப் புறக்கணிக்காவிட்டால் ஊழலை அகற்ற முடியாது''.

இவ்வாறு சீமான் பேசினார்.

ஆடுகளுக்குக் கம்பளி தரும் நரி குறித்து வெயில் நேரத்தில் சீமான் வில்லிவாக்கம் தொகுதியில் குட்டிக் கதை சொன்னது அங்கிருந்த மக்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

https://www.hindutamil.in/news/tamilnadu/653645-the-fox-who-gives-wool-to-the-goats-seeman-who-told-a-short-story-in-the-peak-sun-2.html

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் நலன்தான் எங்கள் சுயநலம்: சீமான் பேச்சு

seeman-s-speech  

“எங்களுக்கு ஒரே சுயநலம்தான் இருக்கிறது. மக்களின் நலன்தான் எங்கள் சுயநலம்’’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை, விருகம்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் பேசும்போது, “எங்களுக்கு ஒரே சுயநலம்தான் இருக்கிறது. மக்களின் நலன்தான் எங்கள் சுயநலம். அவர்களின் எதிர்காலப் பாதுகாப்புதான் எங்கள் கனவு. நாங்கள் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதில்லை. ஏனென்றால் எங்களிடம் பணம் இல்லை. இருந்தாலும் நாங்கள் அளிக்கப் போவதில்லை. ஏனென்றால் எங்கள் கொள்கை அதுவல்ல.

கோடிகளைக் கொட்டுபவர்களை நம்ப வேண்டாம். அவர்கள் கோடிகளைக் கொட்டுகிறார்கள். நாங்கள் ஆகச் சிறந்த கொள்கைகளைக் கொட்டுகிறோம். நல்ல கருத்துகளை மக்களிடம் விதைத்துவிட்டால் தவறான அரசு உருவாகாது. உருவானாலும் அது நிலைக்காது” என்று தெரிவித்தார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது. சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தங்கள் ஆட்சியில் தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியன இலவசமாகக் கிடைக்கும் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்

 

https://www.hindutamil.in/news/tamilnadu/653598-seeman-s-speech.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.