Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டியின் கடைசி மன்னன், நாயக்க வம்சம், தெலுங்கு மொழி மற்றும் மலையக மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
<மன்னன் கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்>
 
கண்டியின் கடைசி மன்னன் விக்கிரமராஜசிங்கனின் வாரிசுகள், தமிழகம் வேலூரில் இருப்பதாகவும், அவர்களுக்கு தற்போது அரச மானியம் என்ற ஓய்வூதியம் வேண்டும் எனவும், அதை இலங்கை ஜனாதிபதி கோதாபய, பிரதமர் மஹிந்த ஆகியோரை சந்தித்து, கோர இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளை, இலங்கையில் உள்ள இந்திய தூதுவர் மூலம் இவர்கள் முன்னெடுக்க உள்ளதாகவும், நம்ம “சிலாபம் திண்ணனூரான்” இன்றைய வீரகேசரியில் எழுதியுள்ளார்.
இந்திய தூதுவர் இதற்கு உடன்படுவாரா என்பது அவரது அரசு எடுக்கும் முடிவில் தங்கியுள்ளது. அதுபற்றி நான் எதுவும் சொல்ல போவதில்லை.
இந்த நாயக்க வம்ச மன்னர்கள், தெலுங்கை தாய்மொழியாக கொண்டோர். எனினும் தமிழ்நாட்டில் வாழ்ந்து, ஆட்சி செய்து, தமிழராக உருமாறியவர்கள். ஆகவே இப்போது அவர்கள் அங்கும், இங்கு இலங்கை சரித்திரத்திலும் தமிழர்கள்தான். அதில் ஏதும் பிரச்சினை இல்லை.
கடைசி சிங்கள மன்னன் விமலதர்மன், மதுரை தமிழ் நாயக்க வம்ச இளவரசியை மணந்தார். இதிலேயே இந்த தமிழ் நாயக்க உறவு ஏற்பட்டது.
பிறகு இவரது மகன் நரேந்திரன் வாரிசு இல்லாமல் மரணிக்க, அவரது நாயக்க வம்ச மைத்துனர் கண்டி சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டார். இப்படிதான் நான்கு தமிழ் நாயக்க மன்னர்கள் கண்டியை ஆண்டார்கள்.
 
இவர்கள் உண்மையில் வீர்ர்கள்தான். இவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக படை நடத்தி இந்நாட்டை பிடிக்கவில்லை. ஆனால், படை நடத்தி இந்நாட்டை காத்தார்கள். போர்த்துகீய, ஒல்லாந்த நாடுபிடியாளர்களால், ஏனைய சிங்கள மற்றும் யாழ் தமிழ் ராஜ்யங்களை பிடித்ததை போன்று, கண்டி மண்ணை தொட முடியவில்லை.
எனினும் கடைசியில் பிலிமதலாவ, எகலபொல போன்ற துரோகிகளால் தமிழ் நாயக்க மன்னன் காட்டிக்கொடுக்கப்பட, ஆங்கிலேயே நாடுபிடியாளர்கள், 1815ல் கண்டியை பிடித்தார்கள்.
 
மதுரையை தலைநகராக கொண்ட பாண்டியநாடு இலங்கைக்கு எப்போதும் முக்கியமானதுதான். முதல் “சிங்கள இளவரசன்” விஜயனும், தனக்கும், தன் நண்பர்களுக்கும் தமிழ் பாண்டிய நாட்டு இளவரசியையும், தமிழ் பெண்களையும் இரந்து பெற்று, மணந்துதான் சிங்கள இனமே உருவானது.
அப்படிதான் மகாவம்சத்தை எழுதிய மகாநாம தேரர் கூறுகிறார். அந்த பாண்டிய நாடுதான், பிற்காலத்தில் நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டது.
இங்கே கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம், இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், காடு வெட்டி பெருந்தோட்டங்களை அமைத்து உழைக்க மட்டும் இலங்கைக்கு வரவில்லை. அதற்கு முன் இந்நாட்டை ஆளவும் வந்தார்கள் என்பது சரித்திர உண்மை.
 
1739 முதல் 76 ஆண்டுகள் கண்டியை ஆண்ட, இந்திய வம்சாவளி தமிழ் நாயக்க மன்னராட்சி 1815ல் மன்னனின் கைதுடன் முடிகிறது. எட்டு வருடங்களின் பின் 1823ல்தான் முதல் கட்ட இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்கள் கோப்பி பயிரிட ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறார்கள்.
பின்னர் 1833ல் தான் முழு தீவும், ஆங்கிலேயரால் ஒரே நாடாக்கப்பட்டது.
 
இப்போது இந்த நாயக்க மன்னர்களின் வாரிசுகள், “அரச மானியம் என்ற ஓய்வூதியம் கொடுங்கள்” என எப்படி இலங்கை அரசை கோருகிறார்கள் என எனக்கு விளங்கவில்லை.
 
இந்தியாவிலும், இப்படி பல முன்னாள் மன்னர்களுக்கு கொடுக்கப்பட்ட மானியங்களை பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்து நிறுத்தி விட்டார். அப்புறம் எப்படி இந்திய தூதுவர் இவர்களுக்கு இதில் உதவுவது?
 
மேலும் இப்படி கோரிக்கை விடப்பட்டால், இலங்கை அரசு அதையும் தனது இனவாத போக்குக்கு பயன்படுத்தலாம்.
 
இங்குள்ள பெருந்தேசியவாத சக்திகள், இலங்கையில் அப்போது வெவ்வேறு ராஜ்யங்கள் இருந்ததாகவே இப்போது காட்டிக்கொள்வது இல்லையே. சரித்திரம் முழுக்க ஒரே நாடாகவேதான் இலங்கை தீவு எப்போதும் இருந்ததாக அல்லவா இவர்கள் புது சரித்திரம் எழுதுகிறார்கள்.
தமிழகம் வேலூரில் வாழும் மன்னர் விக்கிரமராஜசிங்கனின் வாரிசுகளுக்கு ஒரு “ஐடியா” சொல்லலாம்.
இலங்கை அரசிடம் மானியம் கேட்பதை விட்டு விட்டு, அப்போது விக்கிரமராஜசிங்க மன்னனை கைது செய்து, வேலூரில் கொண்டு போய் சிறை வைத்த, ஆங்கிலேய அரசிடம் அல்லது நேரடியாக இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் மாளிகையிடம் கேளுங்கள்.
அதேபோல் சங்கிலி மன்னனின் வாரிசுகள் இருந்தால், அவர்கள் போர்த்துகேயரிடம் கேட்கலாம்.
இவற்றில் தர்க்க நியாயம் இருக்கிறது. இங்கே பல நாடுகள் இருந்தன என்பதும் நிறுவப்படுகிறது.
 
--------------

இங்கே பதிவிடும் சில நண்பர்களுக்கு;
 
“தூய” தமிழ் இனத்தை தேடுவது, சில தமிழர்களின் தொடர் வியாதி. தமிழகத்திலோ, இலங்கையிலோ, வேற்று இனத்தவர் தம்மை தமிழர்களாக உருமாற்றி கொண்டார்கள் என்றால் அதை நாம் ஏற்க வேண்டும். ஆங்கிலேயருடன் கடைசி சரணாகதி ஒப்பந்தத்தில் இந்த விக்கிரமராஜசிங்க மன்னன் என்ன, தெலுங்கிலா கையெழுத்து இடுகிறான். இல்லையே, தமிழில்தானே. பின்னே என்ன?
 
வங்காள விஜயனையும், அவனது தமிழ் பாண்டிய இளவரசியையும் சிங்களவர்கள் சத்தமில்லாமல் சிங்களவர்கள் என்கிறார்கள். ஏன், இந்த தமிழ் நாயக்க மன்னர்களையும்கூட அவர்கள், சிங்களவர்கள் என்கிறார்கள். இப்படி யார் தம்மோடு வந்தாலும் அவர்களை தம் இனத்துடன் இணைத்து கொண்டதால்தான் சிங்கள இனம் பெருகி விட்டது.
 
இப்படி, தூய இரத்தம் தேடி தேடித்தான், நாம் நிறைய இழந்தோம். தமிழினத்தில் உள்வாங்கப்பட்ட நபர்கள் தவறு செய்தால், அவற்றை சுட்டிக்காட்டுங்கள். அதைவிட்டு விட்டு, அவன் தமிழன் இல்லை. இவள் தமிழச்சி இல்லை என்று ஒப்பாரி வைக்காதீர்கள். இன்றைய சமகாலத்திலும்கூட, மலையாளியாக இலங்கையில் பிறந்த எம்ஜியார், பல முரண்பாடுகளுக்கு அப்பால், தமிழினத்துக்கு பணியாற்றி உள்ளார். அவரை இப்போது தேடி பிடித்து மலையாளி என்று கூவுவது சரியா? ஏன், இதை எழுதும் எனது தாய்வழி பாட்டி ஒரு மலையாளி வம்சவாளி. ஆனால், நான் ஒரு நூறு விகித தமிழ் இலங்கையன்.
 
இத்தாலிய இனத்தவரான வீரமாமுனிவர் தமிழராக உருமாறி, தமிழ் வரி வடிவத்தையே ஒரு சிறிது மாற்றவில்லையா? அதை நாம் ஏற்க வில்லையா? என்ன பிரச்சினை என்றால், இங்கே பதிவிடும் பலருக்கு பல விஷயங்கள் தெரியவில்லை. நிறைய வரலாற்று சமூகவியல் அறிவியல் மானிடவியல் நூல்களை படியுங்கள்.
 
உலகம் உருண்டோடுகிறது. மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆகவே இந்த நூற்றாண்டில் வந்து தூய தமிழரை (தூய தமிழையும்..!) தேட வேண்டாம். அவர்கள் வாழ்க்கையில் தமிழரா என மட்டும் பாருங்கள். இல்லாவிட்டால் காலக்கப்பல் ஒன்றை பிடித்து, ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னே போய் விடுங்கள். இங்கே வந்து தொல்லை தர வேண்டாம்..! (தூய தமிழ் பற்றி பிறிதொரு நாள் எழுதுகிறேன்)
 
  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொன்னிர்கள் மனோ கணேசன் அவர்களே. என்னப்பா, சீமானின் தம்பிகளுக்கு எல்லாப் பக்கத்தாலேயும் அடியாய் இருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தமிழர் தான் ஆள வேண்டும். ஏனையவர்களுக்கு சகல உரிமையும் தமிழர்களுக்கு உள்ளது போலிருக்கும் என பல முறை சொல்லியும் கடைசி வாங்கு ஆட்களுக்கு விளங்குகிறதே இல்லை.😜😛

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, nunavilan said:

சீமான் தமிழர் தான் ஆள வேண்டும். ஏனையவர்களுக்கு சகல உரிமையும் தமிழர்களுக்கு உள்ளது போலிருக்கும் என பல முறை சொல்லியும் கடைசி வாங்கு ஆட்களுக்கு விளங்குகிறதே இல்லை.😜😛

அது வெளிப்பு இல்லாத பக்கம்........ என்ன சொன்னாலும் ஏறாது..🤣:grin:

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, zuma said:

சரியாக சொன்னிர்கள் மனோ கணேசன் அவர்களே. என்னப்பா, சீமானின் தம்பிகளுக்கு எல்லாப் பக்கத்தாலேயும் அடியாய் இருக்குது. 

சீமானின் தம்பிகளுக்கு அடி விழுவது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்.

உங்களுக்கு என்று கொள்கை கோதாரி என்று ஏதாவது இருக்கின்றதா அல்லது எப்போதும் போலவே பிச்சைக்காறனின் வாந்தி தானா.. 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nunavilan said:

சீமான் தமிழர் தான் ஆள வேண்டும். ஏனையவர்களுக்கு சகல உரிமையும் தமிழர்களுக்கு உள்ளது போலிருக்கும் என பல முறை சொல்லியும் கடைசி வாங்கு ஆட்களுக்கு விளங்குகிறதே இல்லை.😜😛

யாரையா தமிழன், சீமான் என்று அழைக்கப்படும் சைமன் செபெஸ்டியானின் பூர்விகம் மலையாளம் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, zuma said:

யாரையா தமிழன், சீமான் என்று அழைக்கப்படும் சைமன் செபெஸ்டியானின் பூர்விகம் மலையாளம் ஆகும்.

ஆதாரத்துடன் நிறுவவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, zuma said:

யாரையா தமிழன், சீமான் என்று அழைக்கப்படும் சைமன் செபெஸ்டியானின் பூர்விகம் மலையாளம் ஆகும்.

நீங்கள் சொல்லும் சைமன் செபஸ்டியான் என்பதிலிருந்தே உங்கள் இனவாதம் பளிச்சிடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

ஆதாரத்துடன் நிறுவவும்.

அட்ராசக்கை, மறவர்களை சொல்லும் போது( கருணாநிதி, வைகோ, திருமுருகன் காந்தி,  E. V. Ramasamy)   ஆதாரத்துடன் நிறுவ தேவையில்லை.உதுதான் சொல்லுகின்றது தனக்கு வந்தால் ரத்தம் மற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னி.

2 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்லும் சைமன் செபஸ்டியான் என்பதிலிருந்தே உங்கள் இனவாதம் பளிச்சிடுகின்றது.

யாம் சீமானின் தம்பிகள் அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சீமான் தமிழர் தான் ஆள வேண்டும். ஏனையவர்களுக்கு சகல உரிமையும் தமிழர்களுக்கு உள்ளது போலிருக்கும் என பல முறை சொல்லியும் கடைசி வாங்கு ஆட்களுக்கு விளங்குகிறதே இல்லை.😜😛

ஆ.... ஓகே... நல்லது. நடக்கட்டும். சிரிப்புக்கு உத்தரவாதம் தாறீங்கோ. 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

அட்ராசக்கை, மறவர்களை சொல்லும் போது( கருணாநிதி, வைகோ, திருமுருகன் காந்தி,  E. V. Ramasamy)   ஆதாரத்துடன் நிறுவ தேவையில்லை.உதுதான் சொல்லுகின்றது தனக்கு வந்தால் ரத்தம் மற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னி.

யாம் சீமானின் தம்பிகள் அல்லவா.

தனக்கு வந்தால் ரத்தம் மற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது 400 தரத்துக்கு மேல் கருத்து களத்தில் எழுதியுள்ளீர்கள். வேறு சிலவற்றை எழுத முயற்சிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, zuma said:

யாம் சீமானின் தம்பிகள் அல்லவா.

யாம் சீமானுக்கு தம்பிகள் அல்ல. அண்ணன்கள்...... சீமான் தவறு செய்தால் தட்டி கேட்கும் முதலாமவர்களும் நாங்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, zuma said:

அட்ராசக்கை, மறவர்களை சொல்லும் போது( கருணாநிதி, வைகோ, திருமுருகன் காந்தி,  E. V. Ramasamy)   ஆதாரத்துடன் நிறுவ தேவையில்லை.உதுதான் சொல்லுகின்றது தனக்கு வந்தால் ரத்தம் மற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னி.

யாம் சீமானின் தம்பிகள் அல்லவா.

நீங்கள் ஒரு பிரபலமான அரசியல்வாதி அல்லது நடிகர்.

உங்கள் பழைய காலத்தினை மறைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

உங்களுடன் படித்தவர், உங்கள் ஆசிரியர், உங்களுடன் சண்டை போட்டவர்..... யாராவது, உங்களது முந்தையே பெயரை மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா?

அவர்தான், தான் படித்த, பள்ளி, கல்லூரி, வாங்கிய பட்டம் எதனையுமே ஒளிக்கவில்லை. இலையான்குடி ஜாகிர் உசைன் கல்லூரி. ஒருவருக்கு கூடவா, அவர் சீமான் அல்ல, சைமன் என்று தெரியாமல் இருந்திருக்கும்?  மேலும், தனது வேட்பு மனுவில் கூட, சீமான் என்றே போட்டுள்ளார். அதற்கான ஆதார் அட்டை பிரதி கூட, டிவியில் காட்டினார்கள்.

இதுக்கு பின்பும், நித்திரையால எழும்பி வந்து, காட்டு ஆதாரத்தை எண்டால், எங்களுக்கென்ன வேலையில்லாத, வெட்டி ஆட்கள் என்று கருதுகிறீர்களோ  என்று நினைக்க தோன்றுகிறது. முடிந்தால் அவர் சைமன் என்ற ஆதாரத்தை தாருங்கள் பார்ப்போம், நம்புகிறோம்.

இதுக்குத்தான் சொல்கின்றேன்..... உங்கள் நிலைமை வரவர கவலைக்குரியதாக மாறுகிறது.

இந்த தளத்தில், சும்மா அலம்பறை பண்ணாமல், ஒரு லாஜிக்காக பேசுங்கள். இது மேற்கில் வாழும் நமக்கானது. இங்கே தமிழகத்தில் நாலாந்தர அரசியல்வாதிகள் பேசுவது போல, பேசி உங்கள் தரத்தினை குறைத்து மதிப்பிட வைக்காதீர்கள். 

எனக்கு, உங்கள் பதிவுகளை பார்க்கும் போது, நாஞ்சில் சம்பத் நினைவுகள வருவது ஏன் என்று புரியவில்லை.

Edited by Nathamuni

இனவாதத்தின் தீச்சுழல்களால் சுட்டெரிக்கப்பட்ட ஒரு இனம், அதனுடன் நேரெதிரே பொருதி, ஐம்மதினாயிரத்திற்கும் அதிகமான போராளிகளும், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களும் தம் இன்னுயிரை ஈய்ந்தார்கள்... அந்த இனத்திலே வந்தவர்கள் இன்னொருவர் மீது தூய-தமிழ் இனவாதம் கொள்வது, சிங்கள இனவாதத்திற்கெதிராக உயிரைக் கொடுத்த எம்மக்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் செயல் அல்லவா?...

இனவாதத்தினை நியாயப்படுத்த JR க்கும் காரணம் இருந்தது... பால் தாக்ரேக்கும் காரணம் இருக்கிறது... கிட்லருக்கும் காரணம் இருந்தது.... நமக்கும் காரணமும் தேவையும் இருக்கின்றதென்றால், சிங்களவர்களை இனவெறியர் என்றும், ஒடுக்குமுறைக்கெதிரான தார்மீக யுத்தமென்றும், நம்மவர்கள் ஏமாற்றப்பட்டா உயிரைக் கொடுத்தார்கள்?....

தலைவர் ஒரு போதிலும் சிங்களவர் மேல்  இனவாதத்தை ஏவவில்லை.... அவலத்தை தந்தவனுக்கு அதனை திருப்பிக்கொடு என்பதே தலைவர் கோட்பாடாக இருந்தது....

இனவாதம் என்பது இரண்டு பக்கமும் கூரான கத்தி போன்றது.... உங்கள் சொந்த அறிவைக்கொண்டு சிந்தியுங்கள்.....

நன்றி.....

Edited by பராபரன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பல நாடுகள் இருந்ததற்கான சான்றுகள் நிறுவப்படுகின்றன – மனோ கணேசன்

vikramathi.jpg
 45 Views

கண்டியின் கடைசி மன்னன் விக்கிரமராஜசிங்கனின் வாரிசுகள், தமிழகம் வேலூரில் இருப்பதாகவும், அவர்களுக்கு தற்போது அரச மானியம் என்ற ஓய்வூதியம் வேண்டும் எனவும், அதை இலங்கை ஜனாதிபதி கோதாபய, பிரதமர் மஹிந்த ஆகியோரை சந்தித்து, கோர இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளை, இலங்கையில் உள்ள இந்திய தூதுவர் மூலம் இவர்கள் முன்னெடுக்க உள்ளதாகவும், நம்ம “சிலாபம் திண்ணனூரான்” இன்றைய வீரகேசரியில் எழுதியுள்ளார்.

இந்திய தூதுவர் இதற்கு உடன்படுவாரா என்பது அவரது அரசு எடுக்கும் முடிவில் தங்கியுள்ளது. அதுபற்றி நான் எதுவும் சொல்ல போவதில்லை.

இந்த நாயக்க வம்ச மன்னர்கள், தெலுங்கை தாய்மொழியாக கொண்டோர். எனினும் தமிழ்நாட்டில் வாழ்ந்து, ஆட்சி செய்து, தமிழராக உருமாறியவர்கள். ஆகவே இப்போது அவர்கள் அங்கும், இங்கு இலங்கை சரித்திரத்திலும் தமிழர்கள்தான். அதில் ஏதும் பிரச்சினை இல்லை.

கடைசி சிங்கள மன்னன் விமலதர்மன், மதுரை தமிழ் நாயக்க வம்ச இளவரசியை மணந்தார். இதிலேயே இந்த தமிழ் நாயக்க உறவு ஏற்பட்டது.

பிறகு இவரது மகன் நரேந்திரன் வாரிசு இல்லாமல் மரணிக்க, அவரது நாயக்க வம்ச மைத்துனர் கண்டி சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டார். இப்படிதான் நான்கு தமிழ் நாயக்க மன்னர்கள் கண்டியை ஆண்டார்கள்.

இவர்கள் உண்மையில் வீர்ர்கள்தான். இவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக படை நடத்தி இந்நாட்டை பிடிக்கவில்லை. ஆனால், படை நடத்தி இந்நாட்டை காத்தார்கள். போர்த்துகீய, ஒல்லாந்த நாடுபிடியாளர்களால், ஏனைய சிங்கள மற்றும் யாழ் தமிழ் ராஜ்யங்களை பிடித்ததை போன்று, கண்டி மண்ணை தொட முடியவில்லை.

எனினும் கடைசியில் பிலிமதலாவ, எகலபொல போன்ற துரோகிகளால் தமிழ் நாயக்க மன்னன் காட்டிக்கொடுக்கப்பட, ஆங்கிலேயே நாடுபிடியாளர்கள், 1815ல் கண்டியை பிடித்தார்கள்.

மதுரையை தலைநகராக கொண்ட பாண்டியநாடு இலங்கைக்கு எப்போதும் முக்கியமானதுதான். முதல் “சிங்கள இளவரசன்” விஜயனும், தனக்கும், தன் நண்பர்களுக்கும் தமிழ் பாண்டிய நாட்டு இளவரசியையும், தமிழ் பெண்களையும் இரந்து பெற்று, மணந்துதான் சிங்கள இனமே உருவானது.

அப்படிதான் மகாவம்சத்தை எழுதிய மகாநாம தேரர் கூறுகிறார். அந்த பாண்டிய நாடுதான், பிற்காலத்தில் நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டது.

இங்கே கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம், இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், காடு வெட்டி பெருந்தோட்டங்களை அமைத்து உழைக்க மட்டும் இலங்கைக்கு வரவில்லை. அதற்கு முன் இந்நாட்டை ஆளவும் வந்தார்கள் என்பது சரித்திர உண்மை.

kandy-300x184.jpg1739 முதல் 76 ஆண்டுகள் கண்டியை ஆண்ட, இந்திய வம்சாவளி தமிழ் நாயக்க மன்னராட்சி 1815ல் மன்னனின் கைதுடன் முடிகிறது. எட்டு வருடங்களின் பின் 1823ல்தான் முதல் கட்ட இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்கள் கோப்பி பயிரிட ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறார்கள்.

பின்னர் 1833ல் தான் முழு தீவும், ஆங்கிலேயரால் ஒரே நாடாக்கப்பட்டது.

இப்போது இந்த நாயக்க மன்னர்களின் வாரிசுகள், “அரச மானியம் என்ற ஓய்வூதியம் கொடுங்கள்” என எப்படி இலங்கை அரசை கோருகிறார்கள் என எனக்கு விளங்கவில்லை.

இந்தியாவிலும், இப்படி பல முன்னாள் மன்னர்களுக்கு கொடுக்கப்பட்ட மானியங்களை பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்து நிறுத்தி விட்டார். அப்புறம் எப்படி இந்திய தூதுவர் இவர்களுக்கு இதில் உதவுவது?

மேலும் இப்படி கோரிக்கை விடப்பட்டால், இலங்கை அரசு அதையும் தனது இனவாத போக்குக்கு பயன்படுத்தலாம்.

இங்குள்ள பெருந்தேசியவாத சக்திகள், இலங்கையில் அப்போது வெவ்வேறு ராஜ்யங்கள் இருந்ததாகவே இப்போது காட்டிக்கொள்வது இல்லையே. சரித்திரம் முழுக்க ஒரே நாடாகவேதான் இலங்கை தீவு எப்போதும் இருந்ததாக அல்லவா இவர்கள் புது சரித்திரம் எழுதுகிறார்கள்.

தமிழகம் வேலூரில் வாழும் மன்னர் விக்கிரமராஜசிங்கனின் வாரிசுகளுக்கு ஒரு “ஐடியா” சொல்லலாம்.

sangili-king-240x300.jpgஇலங்கை அரசிடம் மானியம் கேட்பதை விட்டு விட்டு, அப்போது விக்கிரமராஜசிங்க மன்னனை கைது செய்து, வேலூரில் கொண்டு போய் சிறை வைத்த, ஆங்கிலேய அரசிடம் அல்லது நேரடியாக இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹாம் மாளிகையிடம் கேளுங்கள்.

அதேபோல் சங்கிலி மன்னனின் வாரிசுகள் இருந்தால், அவர்கள் போர்த்துகேயரிடம் கேட்கலாம்.

இவற்றில் தர்க்க நியாயம் இருக்கிறது. இங்கே பல நாடுகள் இருந்தன என்பதும் நிறுவப்படுகிறது.

https://www.ilakku.org/?p=45695

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.