Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

முதலாவது பகுதி எங்கையண்ணை?

On 9/4/2021 at 21:04, தமிழ் சிறி said:

முறுக்கு என்றாலே... மொறுக்கு, மொறுக்கு.. என்று சாப்பிட வேணும் போல் இருக்கும்.
"பத்து நிமிசத்தில் முறுக்கு, தயாரிக்கலாம்" என்று, சொன்னதை நம்பி...
7´மணித்தியாலம்  எடுத்து, நொந்து, நூடில்சாக  வந்தவனின்  சோகக்  கதை. 

tenor.gif

May be an image of 1 person and text that says 'R ΠσΟ வேண்டாம்..... அப்படி எல்லாம் சொல்லக்கூடாது...'

ஏராளன்... வேண்டாம். அப்பிடி எல்லாம்,  கேட்கக்  கூடாது.  :grin:  🤣

  • Replies 66
  • Views 8.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ஓகே.... பிரண்ட்ஸ், நாங்கள்  தொடர்ந்து  முறுக்கு, சுடுவோம்.  ஆறு மாதத்திற்கு முன்பு,  ஆசைப் பட்டு வாங்கின  "கடலை மா..."  அதன், ஆயுட்கலாம்...  முடிய, இன்னும்  இரண்டு கிழமைகள் உள்ளது. நான்...  எ

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இப்போ...எங்கள், முறுக்கு சுடும் கோஸ்டி...  சாப்பாட்டு மேசையில் இருந்து, போட்ட  "பிளான்" படி...   முறுக்கு சுட்ட இறுமாப்பில்,   குசினிக்குள்.... நெஞ்சை நிமிர்த்தி  நகர்ந்து... ஒரு கிலோ, கடலை மாவை

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ஹாய்யா... என்ரை, முறுக்கு படமும், முறுக்கு உரலும்... யாழ். களத்திலை  வந்துட்டுது. 🥰

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

tenor.gif

May be an image of 1 person and text that says 'R ΠσΟ வேண்டாம்..... அப்படி எல்லாம் சொல்லக்கூடாது...'

ஏராளன்... வேண்டாம். அப்பிடி எல்லாம்,  கேட்கக்  கூடாது.  :grin:  🤣

இது அறிமுகம் எல்லோ, தொடருங்கள் அண்ணை.
முறுக்கு எப்பிடி வந்தது? மொறுமொறு என்று இருந்ததா? இல்லை புழுக்கொடியல் போல இருந்ததா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓகே.... பிரண்ட்ஸ், நாங்கள்  தொடர்ந்து  முறுக்கு, சுடுவோம். :grin:

ஆறு மாதத்திற்கு முன்பு,  ஆசைப் பட்டு வாங்கின  "கடலை மா..." 
அதன், ஆயுட்கலாம்...  முடிய, இன்னும்  இரண்டு கிழமைகள் உள்ளது.
நான்...  எப்போதும்  உணவுப் பொருட்களை, வீண் செய்யாத மனப்பான்மை உள்ளவன்.

இப்போ... 11 நாள் விடுமுறை.  நல்ல, சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று....
நிகேயின்... "பத்தே  நிமிடத்தில்... செய்யும், கடலை மா முறுக்கு" செய்வோம் என்று...
மனைவியிடம்.... "அம்மாச்சி" இண்டைக்கு, கடலை மா முறுக்கு செய்வோம் என்று,
பன்மையில் கேட்டேன்.  
(பன்மையில்... கேட்பது, எப்பவும் நல்லது. 
ஏனென்றால்... முறுக்கு  சரி வராவிட்டால், நான் தப்பித்துக் கொள்ளலாம்) 

அதனை... திடீரென்று, கேட்ட  போது... 
அவளுக்கு, பயங்கர  "கொதி" வந்து,
உங்களுக்கு என்ன விசரோ... என்று பேசினாள்.    
நான்... வீட்டில் இல்லாத நேரம், அவள் பார்க்கும்  "தொலைக்காட்சி" நாடகங்கள்,
தவறிப் போய் விடுமே... என்ற கவலை, அவளுக்கு.
ஒரு... மாதிரி, சமாளித்து அவளை என்  வழிக்கு கொண்டு வந்து...
முறுக்குக்கு   "மா" குழைக்க  ஆரம்பித்தோம்.

அந்த இடைவெளியில்...  மனைவி, 
கனடாவில் உள்ள சகோதரிக்கும், சுவிஸில் உள்ள மகளுக்கும்....
நாங்கள்.... "முறுக்கு,  சுடப் போகின்றோம்" என்று.. குறுஞ் செய்தியை அனுப்பி விட்டார்.
அவர்கள்.....  அத்தான், அப்பா...  "குட் லக்" என்ற செய்தி வந்து சேர்ந்து விட்டது.  

இடையில்... நிகேயின், சமையல்  குறிப்பின் படி, என்ன செய்ய வேண்டும் என்பதனை.....
திரும்ப, திரும்ப, திரும்ப... மனப் பாடமாக்கி....
எனக்குத் தெரிந்த, கணித முறைப்படி... 
ஒரு  அட்டவணை தயாரித்து...

எம்மிடம் இருப்பது....  ஒரு கிலோ  கடலை மா.
அதுக்கு... எவ்வளவு,  அவித்த கோதுமை மா.... 
மஞ்சள், எள்ளு, உப்பு, மிளாகாய்த் தூள், எண்ணை....
சுடு தண்ணி... என்ன பதம்...... என்றெல்லாம்  கணக்குப்  பார்த்து,
முடிக்க.... ஒரு மணித்தியாலம் போய்... விட்டது.  :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of text that says 'தொயரத்த....'

நாங்கள் முறுக்கு சுடும், விசயத்தை.... திண்ணையில் போட்டு, 
சனத்துக்கு... பீலா, விட்டுக்  கொண்டிருந்ததை பார்த்த நிழலிக்கும்.....
"கடுப்பு" வந்திருக்க வேணும் போலை...

உடனே.. அவர், இதனை.... சுய ஆக்கங்கள் பகுதியில் படத்துடன் பதியச் சொல்லி..
திண்ணையில் எழுத,  எனக்கும் ஆசை... என்று சொல்லி,
கிருபன்ஜீ டம்  அந்த முறைகளை பெற்று வைத்துள்ளேன்.
தொடர்... முடிய முதல், அந்தப் படங்களை, மனைவியின் அனுமதியுடன் இணைப்பேன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Laughing GIFs - Get the best GIF on GIPHY  Pin on Ultimate Food Guide  Victoria Monét - Jaguar | Page 8 | The Popjustice Forum

சிரிக்க வைத்தும், கழுவி ஊத்தியும் ... கருத்துக்களைப் பகிர்ந்தும் ஊக்கம் தந்த,
அன்பு உறவுகளான....  கந்தையா அண்ணை, யாயினி, சுவி, ஈழப் பிரியன், வாத்தியார், 
புத்தன், நிகே, ஜெகதா துரை, சபேஷ், நிலாமதி அக்கா,  பாஞ்ச்  அண்ணை, 
குமாரசாமி அண்ணை, பசுவூர் கோபி, கிருபன் ஜீ, நுணாவிலான், சுவைப் பிரியன்,  
நந்தன், உடையார், புங்கையூரன், ஏராளன்... ஆகியோருக்கு,
இதய பூர்வமான நன்றிகள்.  🙏

இப்ப... இரண்டாவது பகுதி எழுத ஆரம்பித்துள்ளேன்.  ✍️
ப்ளீஸ்... தொடர்ந்து, கழுவி ஊத்தவும்.  🤣

Bye👋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போ...எங்கள், முறுக்கு சுடும் கோஸ்டி... 
சாப்பாட்டு மேசையில் இருந்து, போட்ட  "பிளான்" படி...  
முறுக்கு சுட்ட இறுமாப்பில்,   குசினிக்குள்.... நெஞ்சை நிமிர்த்தி  நகர்ந்து...
ஒரு கிலோ, கடலை மாவையும்... பெரிய பிளாஸ்ரிக் பாத்திரத்தில் கவிட்டு கொட்டியது.  
எடுத்த கணக்கின் படி.... கோதுமை மா, வறுத்த எள்ளு, மிளகாய்த் தூள், 
உப்பு எல்லாவற்றையும் போட்டு விட்டு... மனிசியை நிமிர்ந்து பார்த்தேன்.
அவளின் முகத்தில்... எல்லாம், திருப்தி என்ற மாதிரி... தலை ஆட்டினாள்.

இஞ்சையப்பா...  இதுக்குள்ளை, கொஞ்ச... 
சின்னச் சீரகம் போடுவமோ... என்று கேட்ட  போது,
(எனது மனைவி,  சில வேளை...   அப்பா...  என்று கூப்பிடுவார். ஆசையாக இருக்கும்.)
"நோ" என்று சொல்லி, அவளின் ஆசையை, நிராகரித்து விட்டேன்.
ஏனென்றால்... முறுக்கு, பிழியும் போது... அது, வேறை அடைத்து விடும் என்ற பயம்.  

எல்லாம்.... போட்டாச்சு, நீங்கள் மெல்லமாக தண்ணியை ஊத்துங்கோ...
நான்,  குழைக்கின்றேன்  என்று சொல்ல,
சுடு தண்ணியை... கொண்டு வந்து ஊத்திய போது,
திரும்பவும்... நிகேயின்... "பத்து நிமிட காணொளியை" பார்த்து,
அது...  "இளம் சூடான சுடு  தண்ணீர் என்று, உணர..."
காலம், கடந்து விட்டது.     

மாவை.... குழைத்தால், கழி  மாதிரி இருக்கு.
அடுப்பில் எண்ணை....  சூடாக, கொதித்துக் கொண்டிருக்கின்றது.
என்னுடைய... கை, "பசை"  ஒட்டின மாதிரி இருக்கு.  

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா முறுக்கை கண்ணிலும் காட்ட மாட்டீர்கள் போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னையா முறுக்கை கண்ணிலும் காட்ட மாட்டீர்கள் போல.

ஈழப் பிரியன்,  முறுக்கை மட்டுமல்ல... முறுக்கு உரலையும்  காட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். 
படம் பெரிதாக உள்ளதென்று,  யாழ். களம்  ஏற்க  மறுக்குது,
எப்படியும்...  வேறு முறைகளிலாவது.... படத்தை இன்று,  இணைப்பேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹாய்யா... என்ரை, முறுக்கு படமும், முறுக்கு உரலும்... யாழ். களத்திலை  வந்துட்டுது. 🥰

  • கருத்துக்கள உறவுகள்

தமிழசிறியர் உங்களின் ஆர்வத்துக்கு முயற்சிக்கும் பாராட்டுக்கள்......முறுக்கு முறுக்காக வந்திருக்கு.....இனி நீங்கள் மீசையை முறுக்கி விட்டுக் கொள்ளலாம் மீசை இருந்தால்......!   👏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

தமிழசிறியர் உங்களின் ஆர்வத்துக்கு முயற்சிக்கும் பாராட்டுக்கள்......முறுக்கு முறுக்காக வந்திருக்கு.....இனி நீங்கள் மீசையை முறுக்கி விட்டுக் கொள்ளலாம் மீசை இருந்தால்......!   👏

சுவியர்... மிக வித்தியாசமான, ஆனந்த உணர்வுடன் உள்ளேன். :grin:
முறுக்கு... சுட்ட கஸ்ரம் ஒரு பக்கம், இருக்க...    
படங்கள்... இணைக்கும், கஸ்ரம்...  மூளைக்கு  அதிக வேலை கொடுத்து விட்டது.
கிருபன் ஜீ...  இயலுமானவரை அவசர  உதவி செய்தார்.  அதனை... என்றும் மறக்க முடியாது.

யாழ். களம்  படங்களை இணைப்பதில், பயங்கர கட்டுப்பாடுகளை  வைத்துள்ளது போல் தோன்றுகின்றது. அது... அவர்களின் நிர்வாகம் சம்பந்தப் பட்ட விடயம் என்றாலும், என்னை... உலுக்கி எடுத்துப்  போட்டுது.  

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

யாழ்கள உறவுகளின் நகர்வுகள் மிக வினோதமானது........எதிரெதிராக கருத்து மோதல்களில் மோதினாலும் உதவி என்று கேட்டால் ஓடிவந்து உதவுகிறார்கள்.....!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

யாழ்கள உறவுகளின் நகர்வுகள் மிக வினோதமானது........எதிரெதிராக கருத்து மோதல்களில் மோதினாலும் உதவி என்று கேட்டால் ஓடிவந்து உதவுகிறார்கள்.....!  👍

ஓம்... சுவியர், அந்த ஒரு மன ஆறுதலுக்காக....
கருத்து... எழுதுபவர்கள் குறைவு என்றாலும்,
குமாரசாமி அண்ணை  போன்றவர்களின்.... ஊர் பாசையை கேட்க...
யாழ். களத்திற்கு... தினமும் மூன்று  ஆயிரம் ஆட்களாவாது வருவார்கள்.
அது... ஈழம் மட்டுமல்ல... தமிழகம் சார்ந்து,  விரிந்த பேச்சு மொழி.

நாம்... அதனை, குறுகிய குடத்துக்குள் அடக்கி வைப்பது சரியல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஹாய்யா... என்ரை, முறுக்கு படமும், முறுக்கு உரலும்... யாழ். களத்திலை  வந்துட்டுது. 🥰

படங்கள் அந்த மாதிரி இருக்கு😀

முறுக்கு மொறுக்குமொறுக்கு என்று இருக்கு!

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

படங்கள் அந்த மாதிரி இருக்கு😀

முறுக்கு மொறுக்குமொறுக்கு என்று இருக்கு!

spacer.png

உண்மையாகவா...   நன்றி, கிருபன் ஜீ...  ❤️
அந்த முறுக்கு உரலுக்கு... 30 வயது.
அதில் உள்ள... பிளாஸ்ரிக் கோப்பைக்கு,  24  வயசு.
எழுத வெளிக்கிட்டால்...  ஒவ்வொன்றும்,  ஒரு கதை சொல்லும். :) 

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்   சிறீ யர் இனி நம்புவோம். பிழிஞ்ச கைக்கு ஒரு மோதிரமும் அடுப்பில நின்ற கைக்கு ஒரு சோடி காப்பும் யாழ்கள உறவுகள்,  பரிசளிக்க, விரும்பினார்கள் கொரோனாவால்   பிளேன் ஓடாததால் சாத்திய படாது ..   கொஞ்சம் வடடம் வடடமாக சுற்றி இருக்கலாமே   ?

Just now, நிலாமதி said:

சபாஷ்   சிறீ யர் இனி நம்புவோம். பிழிஞ்ச கைக்கு ஒரு மோதிரமும் அடுப்பில நின்ற கைக்கு ஒரு சோடி காப்பும் யாழ்கள உறவுகள்,  பரிசளிக்க, விரும்பினார்கள் கொரோனாவால்   பிளேன் ஓடாததால் சாத்திய படாது ..  😀 கொஞ்சம் வடடம் வடடமாக சுற்றி இருக்கலாமே   ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிலாமதி said:

சபாஷ்   சிறீ யர் இனி நம்புவோம். பிழிஞ்ச கைக்கு ஒரு மோதிரமும் அடுப்பில நின்ற கைக்கு ஒரு சோடி காப்பும் யாழ்கள உறவுகள்,  பரிசளிக்க, விரும்பினார்கள் கொரோனாவால்   பிளேன் ஓடாததால் சாத்திய படாது ..   கொஞ்சம் வடடம் வடடமாக சுற்றி இருக்கலாமே   ?

நிலாமதி அக்கா...  
முறுக்கு மா,  சரியாய்  இறுகிப் போய்.... எங்களுக்குள்,
கொஞ்ச... மனப் பதட்டம்  வந்து விட்டது.  
அதனால்... வட்டமாக சுடாமல், வந்த போக்கிலை....
எப்படியும், நாங்கள் தானே, 
சப்பி....  சாப்பிடப் போகிறோம் என்ற துணிவில்...
மனம் போன மாதிரி... பிழிந்து விட்டோம். :grin:

டிஸ்கி:  கோழி.... குருடாக, இருந்தாலும்... குழம்பு ருசியாக இருக்க வேணும் கண்டியளோ....  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஹாய்யா... என்ரை, முறுக்கு படமும், முறுக்கு உரலும்... யாழ். களத்திலை  வந்துட்டுது. 🥰

உதென்ன சிறித்தம்பி? உலாஞ்சி உலாஞ்சி நிண்டு  முறுக்கு புழிஞ்ச மாதிரி கிடக்கு? என்ன பிரச்சனை நடந்ததெண்டு இப்ப சொல்லுறியளோ? 😁
இல்லாட்டி எங்கடை சிஐடி பாஞ்ச் ஐயாவை ஏவி விடட்டோ? 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 முறுக்கு புழிஞ்சது..... எங்கை தொடங்கி எங்கை முடிஞ்சிருக்கு எண்டு தேடி தேடி பாக்கிறன்...... ஆரம்பமும் தெரியேல்லை. முடிவும் தெரியேல்லை. ஒரு சில இடத்திலை குறுக்காலை முறுக்கு பின்னுப்பட்டு போகுது.எப்பிடி உந்த ரெக்னிக்???????😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

உதென்ன சிறித்தம்பி? உலாஞ்சி உலாஞ்சி நிண்டு  முறுக்கு புழிஞ்ச மாதிரி கிடக்கு? என்ன பிரச்சனை நடந்ததெண்டு இப்ப சொல்லுறியளோ? 😁
இல்லாட்டி எங்கடை சிஐடி பாஞ்ச் ஐயாவை ஏவி விடட்டோ? 😎

அடி...  ஆத்தீய்...  அந்தாள் வந்தால்,
தனக்கு, முறுக்கு... தரவில்லை என்று, சன்னதம் ஆடி விடும். 😂

டிஸ்கி: பரவாயில்லை  சொல்லி விடுங்கோ... குமாரசாமி அண்ணை. :grin:
என்ன..  செய்யிறார் எண்டு பாப்பம். ஹா... ஹா... ஹா....  Funny 😜

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உண்மையாகவா...   நன்றி, கிருபன் ஜீ...  ❤️
அந்த முறுக்கு உரலுக்கு... 30 வயது.
அதில் உள்ள... பிளாஸ்ரிக் கோப்பைக்கு,  24  வயசு.
எழுத வெளிக்கிட்டால்...  ஒவ்வொன்றும்,  ஒரு கதை சொல்லும். :) 

இத்தனை வருஷமாக பெளத்திரமாக வைச்சிருக்கிறியள் எண்டால் இப்பத்தான் பாவனைக்கு இறங்குப்பெட்டிக்குள்ளால எடுத்திருக்கிறியளாக்கும்😁

எனக்கு முறுக்கு, பருத்துறை வடை, பயித்தம்பணியாரம் எல்லாம் எவ்வளவு சாப்பிட்டாலும் “கெலி” அடங்காது! முறுக்கு சுட உரல் இல்லை என்பதால் கடையில்தான் வாங்குவது. அது வெறும் மாவாக இருக்கும். ஆனால் சில வீடுகளில் நல்ல தரமாக சுட்டு விற்கிறவர்கள்.  சின்ன ஓர்டர் என்றால் செய்ய பின்னடிப்பார்கள். அதனால் இடைக்கிடை அவர்களிடம் வாங்குவதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அந்த முறுக்கு உரலுக்கு... 30 வயது.
அதில் உள்ள... பிளாஸ்ரிக் கோப்பைக்கு,  24  வயசு.
எழுத வெளிக்கிட்டால்...  ஒவ்வொன்றும்,  ஒரு கதை சொல்லும். :) 

அது சரி சிறி அண்ணை
 முறுக்கும்  இருக்கு. உரலும் இருக்கு.

முறுக்குச்  செய்யக் குழைத்த மா எங்கே ?😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

இத்தனை வருஷமாக பெளத்திரமாக வைச்சிருக்கிறியள் எண்டால் இப்பத்தான் பாவனைக்கு இறங்குப்பெட்டிக்குள்ளால எடுத்திருக்கிறியளாக்கும்😁

எனக்கு முறுக்கு, பருத்துறை வடை, பயித்தம்பணியாரம் எல்லாம் எவ்வளவு சாப்பிட்டாலும் “கெலி” அடங்காது! முறுக்கு சுட உரல் இல்லை என்பதால் கடையில்தான் வாங்குவது. அது வெறும் மாவாக இருக்கும். ஆனால் சில வீடுகளில் நல்ல தரமாக சுட்டு விற்கிறவர்கள்.  சின்ன ஓர்டர் என்றால் செய்ய பின்னடிப்பார்கள். அதனால் இடைக்கிடை அவர்களிடம் வாங்குவதுண்டு.

எங்களிடம் ஒரு...  இட்டலி சட்டி ஒன்று உண்டு. ❤️
அதுக்கு.... பெரிய கதை உள்ளது.

மனைவியின் தாலிக்கொடி செய்ய....  வடக்கு ஜெர்மனியில்,  உள்ள... 
"டோட்முண்ட்"  நகருக்கு, செல்லும் போது....
அந்த மனிதர், அன்பளிப்பாக தந்த பொருட்களில்...
சாமிப் படம், இட்டலி  சட்டி என்று... 
பல பொருட்களை தந்தார்...  🙏

அவரை... எனக்கு, முன் பின் தெரியாது....
இங்கு... வந்து... எத்தனையோ... வீடு மாறிய பின்பும்,
அவை... என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டிருந்த... பொருட்கள்.
அவற்றை... இனி, நான் இழக்கத் தயாரில்லை. :)

எப்படி இருந்தாலும், இரண்டு மூன்று  மாதத்துக்கு ஒரு முறை இட்டலி  அவிப்போம்.
இப்பவும்... அது,  புதுசாக இருக்கும். 💕

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, தமிழ் சிறி said:

அடி...  ஆத்தீய்...  அந்தாள் வந்தால்,
தனக்கு, முறுக்கு... தரவில்லை என்று, சன்னதம் ஆடி விடும். 😂

டிஸ்கி: பரவாயில்லை  சொல்லி விடுங்கோ... குமாரசாமி அண்ணை. :grin:
என்ன..  செய்யிறார் எண்டு பாப்பம். ஹா... ஹா... ஹா....  Funny 😜

நீங்கள் செய்த முறுக்கு சாப்பிட்ட ஆக்கள் எல்லாரும் ஓகேயா? 😁
ஏனெண்டால் பிறகு பாவம் அந்த ஐயா?😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாத்தியார் said:

அது சரி சிறி அண்ணை
 முறுக்கும்  இருக்கு. உரலும் இருக்கு.

முறுக்குச்  செய்யக் குழைத்த மா எங்கே ?😂

வாத்தியார்.... எனக்கு, ஒரு துரும்பு கிடைத்தால்...
ஈயை... பெருமாள், ஆக்கும் சக்தியை... யாழ். களம்  கற்றுத்  தந்தது. 
முறுக்கு தொடர்... இன்னும், முடியவில்லை.
சுவராசியமான  பகுதிகள்.... இன்னும் உள்ளது.
"அப் வாட்டன்"....  😂
  
டிஸ்கி:  "அப் வாட்டன்"....  _____    வெயிட் &  சீ....  🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.