Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தில் பெண்களின் நிலமை...

யாழ் இணையத்தில் பெண்களின் நிலமை! 65 members have voted

  1. 1. யாழ் இணையத்தில் பெண்களிற்கு சம உரிமை இருக்கின்றதா?

    • ஆம்!
      37
    • இல்லை!
      25
    • தெரியவில்லை!
      3

Please sign in or register to vote in this poll.

Featured Replies

இதுல மூக்கி அக்கா பெண்களுக்காக கதைச்சவா ...... அதுக்கப்புறம் காணாம்....... பெண்களுக்காக துணிஞ்சு கதைக்கிறவை கொஞ்ச நாளில் காணாமல் போயிருவினம் :lol:

என்ன சகோதரம் யாழுக்கை சுனாமி வந்து அள்ளிக்கொண்டு போட்டுதோ....??? :P :P :P

பெண்கள் பலவீனமாக இருக்க கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்...!

உயிர்ப்புடன் எழுந்தோம்.. உணர்வுடன் விளித்தோம் எனும் தாயகப்பாடல் இருக்கிறது... எனக்காக அதை ஒரு முறை கேளுங்கோ.....!

  • Replies 120
  • Views 12.7k
  • Created
  • Last Reply

இதே களத்தை களத்திற்கு சம்பந்தமில்லாத சில பெண்கள் மீதுள்ள தனிப்பட்ட கோபதாபங்களுக்காக அவர்களைப் பற்றி ஆண்கள் சிலர் மிகவும் கேவலமாக எழுதுவதற்கு பாவிப்பதை நானே பலமுறை பார்த்திருக்கின்றேன். அப்படியான தனிநபர்கள் தாக்குதல்களும் அநாகரீக விமர்சனங்களும் களத்தைத்தான் பாதிக்கும் என்பதை அதை எழுதுபவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதேபோல் களத்தில் நல்ல பல கருத்துக்களை எழுதி வந்த பல பெண்களையும் பல மாதங்களாக காணவில்லை. இவற்றையெல்லாம் அவதானித்துத்தான் கலைஞன் இக்கருத்தை ஆரம்பித்தாரோ??

:lol: என்னப்பா இது புதுக் கதையாக் கிடக்கு? தை மாதம் இணைந்த கலைஞனுக்கு தெரிஞ்ச விசயம் எனக்கு இவளவு வருசமாத் தெரியாமப் போச்சே?!

நானும் இவளவு வருசமாகருத்துக்களத்தில பெண்களின் படைப்புகளை வாசித்துக் கொண்டுதான் வாறன்... அதில முக்கால்வாசி ஆண்கள் அடக்குகிறார்கள், அடிமைப்படுத்துகிறார்கள், போன்ற தொனியிலைதான் வருது... அதுக்காக நான் அதை பிழை எண்டும் சொல்லமாட்டன்.. அவரவர் தாங்கள் காணுறதுகளை, அனுபவிச்சதுகளை எழுதுறாங்க.. ஆனா ஒன்று... ஒரு மருந்தை சாப்பிடும்போது சில பக்கவிளைவுகளும் ஏற்படும்தானே.. அதைமாதிரி எடுத்ததுக்கெல்லாம் ஆண் ஆண் எண்டு எழுதும்போது.. சிலவேளை அதுவே நல்ல விளைவை தருவதற்குப் பதிலாய் ஆண் பெண் பிரிவினையை வளர்த்துவிடுமோ என்பதையும் எழுதுறவங்கதான் சிந்திக்கணும்.

மற்றும்படி மறைமுகமான கருத்தகளுக்கெல்லாம் கவலைப்படுவதோ அல்லது உணர்ச்சிவசப்படுவதோ.. அத்தகைய கருத்தாளர்களை ஊக்குவிக்கும் செயல்.. அதுக்குத்தான் சொல்லியிருக்காங்க துட்டனைக் கண்டால் தூர விலகு என்று.. வழியில் சேறு இருந்தால் அதை உழக்கிக் கொண்டா போவது.. விலத்திக் கொண்டு போகவேண்டியதுதான்..

நாலுபேர் கவனிக்கிறார்கள் என்றால்தான் அப்படியான கருத்தாளர்கள் உற்சாகத்துடன் மேன்மேலும் எழுதுவார்கள்.. அவை கவனிக்கப்படாவிடின் அவர்கள் ஒருகட்டத்தில் அவர்களாகவே ஓய்ந்துவிடுவார்கள்..

:P

இது ஒரு தேவையில்லாத தலைப்பு பெண்னடிமை என கதைப்பது தற்போது பஸனாகிவிடது இங்கு யாரும் பெண்ணடிமை பற்றி பேசவில்லை யாழ் களத்தில் ச்கோதரிகளுடன் சகோதரர்களாகத்தான் ஆண்கள் பழகுகிறார்கள்.நீங்கள் சொல்லுவதை பார்த்தால் ஆண்களை தாக்கும் விதமாகவும் கருத்து வந்திருகின்றன அப்படி என்றால் ஆணடிமை என இன்னொரு தலைப்பை தொடங்குவீங்களா.கருத்துகள் கருத்துகளத்தில் வருவது சகஜம் ஆனால் அதை பெண்ணடிமை என தூக்கிபிடிப்பது தேவையில்லாத விடயம் என்பது என்கருத்து.

பல பெண்கருத்தாளர்கள் இங்கு இருகின்றனர் யார் மீதாவது இந்த களத்தில் ஒருவர்தன்னும் கீழதரமாக கருத்துகூறியதுண்டா இல்லையே சகஜமாக நண்பர்கள் போலத்தானே பழகிறார்கள்.ஒரே பாலினத்தை கொண்டவர்கள் தம் பாலிணம் சார்பாக கதைப்பது இயற்கை அது பெண்ணாக இருகலாம் ஆணாக இருகலாம் ஆனால் பெண்னை அடிமைபடுத்தவேண்டும் என ஆணோ ஆனை அடிமைபடுத்த வேண்டுமோ என பெண்ணோ நினைத்து களத்தில் எழுதவில்லை

நன் ஆம் எனவே வாக்களித்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

அடடட... யாழ் பெண்களின் நிலமை ரொம்ப பரிதாபமா இருக்கா? :(

ஏன் கலைஞரே, நீங்க தான் பெரிய படைப்பாளியாச்சே, பேசாமல் ஒண்டு செய்யுங்களேன், பெண்களுக்கெண்டு ஒரு களப்பிரிவை ஆரம்பிக்க நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யுங்களேன், அப்படியே அந்த கருத்து பிரிவுகளில் பெண்கள் மட்டும் கருத்துக்கள் முன்வைக்கிறமாதிரி செய்தால் என்னம் பேசா இருக்கும். ஆண்களை தனிய பார்வையாளர்களாக வைத்திருந்தால் அதைவிட பேசா இருக்கும். B)

பல காலமாக களத்தில் இருப்பவன் எண்ட முறையில் யாழ்கள பெண்களை பொறுத்தவரையில் என்னிடம் ஒரு அபிப்பிராயம் உண்டு. அவர்களிடம் நல்ல குணம் ஒண்டு இருக்கின்றது, அதாவது கோவம். (எல்லா பெண்களிலும் இருப்பவை தானே அது), அவற்றால்த்தான் அவர்களுக்கு பிரச்சினன. முன்னாள் உறுப்பினர்கள் பலர் இங்கு இப்பொழுது வருவதில்லை என்று சொன்னார்கள், அவர்களை ஒருக்கால் களத்துக்கு கூப்பிட்டு எதற்காக களத்திலிருந்து விலகினீர்கள் என்று கேளுங்க, என்ன பதில் சொல்கின்றார்கள் என்று பார்ப்போம். அவர்கள் எதற்காக விலகினார்கள் என்று எவருக்குமே தெரியா. B)

அதைவிட அவர்களில் பெரும்பான்மையானோர் வெறும் பார்வையாளர்களாக இருக்க ஆசைபபடுபவர்கள், வாய் வீரம் காட்டுமளவுக்கு எழுத்தில் வீரம் காட்ட தெரியாதவர்கள். இது களம், இங்கே கூடுதலாவனர்கள், உண்மையான பெயர், ஊர், முகவரி தெரியாமலே நண்பர்களாக, உறவுகளாக பழகி வருகிறார்கள். பின் எதற்காக ஒரு கருத்தினை முன் வைக்க பயப்படவேண்டும்? தைரியம் இல்லை என்று நொண்டிசாக்கு சொல்லவேண்டும்? :D

அதைவிட முன்பு வந்த பலர் இப்பொழுது வருவதில்லை, அதற்கு அவர்களின் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம், அவற்றை ஆராயமல், எழுந்தமானத்திற்கு மனதில் நினைப்பதை கொட்டாதீர்கள்.

ஒண்டு செய்யுங்கள் படைப்பாளி அவர்களே, ஒவ்வொரு யாழ்பெண்ணிடமும், ஒரு இன்ரவியு வையுங்க, அங்கே அவர்கள் எதனால் வரவில்லை,என்ன காரணம், அதை எவ்வாறு நிவர்த்தி செய்ய ஏதாவது ஐடியா இருக்கா எண்டு கேளுங்க, அதை அப்படியெ நிர்வாகியிடம் சொல்லிடுங்க, நிர்வாகம் அதற்கு ஏதாவது செய்யும், விரும்பினால் பெண்களுக்கு பிடிக்காதவர்கள், அவர்களை நக்கல் பன்னுபவர்கள் என்று பலர் களத்திலே இருப்பார்கள், அவர்களுக்கு நிர்வாகம் ரெட் காட் காட்டி வெளியேற்றசொல்லுங்க. :lol:

அது இருக்கட்டும், எதற்காக சின்னப்பு, முகத்தார், தவத்தார், பெரியப்பு, சின்னக்குட்டியார், வயசு போனவர்கள் களத்திற்கு வருகிறார்கள் இல்லை?அவர்களையுமா வெருட்டினார்கள் களத்தில்??? பெண்கள் தான் உங்க கண்ணுக்கு கருத்தாளர்களாக தெரிகின்றார்களோ? பழசுகளை சா வயசானவர்கள் கருத்தாளர்கள் இல்லை அவர்கள் ஜொள்ளர்கள் என்று நினைத்துவிட்டீர்களோ?? :) :angry:

coolllllll.......சும்ம்ம்மா அதிர்ர்ருதல்லா..... :P

Edited by Danklas

:D ! :lol: ! :angry: ! :( ! :) ??????????????????????////
  • தொடங்கியவர்

முதலில் கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள் பல!

1. யாழ் இணையத்தில் உள்ள பல பெரிய ஆண் வி.ஐ.பி க்கள் (பெரிய தலைகள்) தாம் எல்லோரும் உடனடியாக Attend பண்ணி, யாழ் இணையத்தில் பெண்களை நீங்கள் கெளரவப்படுத்துவதாகவும், அவர்களை சமநிலையில் வைத்து நோக்குவதாகவும், எனவே இந்த தலைப்பு தேவையில்லாத ஒரு விடயம் என்றும் எழுதி இருக்கின்றீர்கள். உங்கள் மனச்சாட்சிப்படி உண்மையை இங்கு நீங்கள் பேசி இருந்தால் அதற்காக மகிழ்ச்சி அடைகின்றேன். அது உண்மையாக இருந்தால் அது யாழ் இணையத்தினைப் பற்றி நாம் பெருமைப்படவேண்டிய விடயமே!

2. இது பெண்களின் பாதிக்கின்ற பிரச்சனை சம்மந்தமானது. எனவே, இந்த தலைப்பு தேவையா அல்லது தேவையில்லையா என்பதை யாழ் களத்தில் உள்ள பெண்கள் தான் சொல்லவேண்டும். உதாரணமாக, சிறீ லங்கா அரசு "தமிழர்களை நாம் அடக்கி ஒடுக்கவில்லை!" என்று ஐ.நா சபையில் கூறினால் அவர்கள் சொல்வத மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா அல்லது தமிழர்கள் தமது சுதந்திரம் பற்றி என்ன கருத்தை ஐ.நா சபையில் கூறுகின்றார்கள் என்ற கருத்தையும் நாம் கேட்கவேண்டுமா? ஆகையினால், தொடர்ந்தும் யாழ் கள பெண்கள் இதைப்பற்றி என்ன கூறுகின்றார்கள் என்று பொறுமையாகக் கேட்போம்.

3. தை மாதம் இணைந்த எனக்கு தெரிஞ்ச விசயம் இவ்வளவு வருசமாக அங்கத்துவராக இருக்கும் உங்களில் யாருக்காவது தெரியாமல் போய்விட்டது என்பதை நினைத்து கவலைப்படவேண்டாம். நான் தை மாதம் இணைந்திருந்தாலும் கடந்த மூன்று வருடங்களாக யாழ் இணையத்தை பார்வையிட்டு வருகின்றேன். மற்றையது, பல விசயங்கள் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், ஏனடா எனக்கு தேவையில்லாத வம்பு என்று இந்த விடயங்களை பற்றி கதைக்காமல் ஒதுங்கி இருக்கலாம். நாற்சந்தியில் வைத்து மற்றவர்களால் துகிலுரியப்படுவதற்கு யார்தான் விரும்புவார்கள்?

4. ஆண்களிற்கும் ஏதாவது பிரச்சனைகள் யாழ் இணையத்தில் இருந்தால் நிச்சயம் அதுபற்றியும் கருத்தாடலை தொடங்க முடியும்.ஆனால், அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் அறியத்தரலாமே?

5. யாழ் இணையத்தில் பெண்களிற்கு மட்டும்தான் கோபம் இருக்கின்றதா? ஆண்களுக்கு இல்லையா? சரி அவ்வாறாயின், யாழ் இணையத்தில் பெண்களிற்கு மட்டும் அதிகளவில் கோபப்படும் குணம் இருப்பதற்கான காரணம் அவர்களிற்கு ஆண்களைப்போல் நையாண்டி பண்ணத் தெரியாமையால் வந்ததன் குறைபாடாக எடுத்துக் கொள்ளலாமா? கருத்து எழுதும் ஆண்கள் எல்லாம் புத்தபகவான் போல் மனம் சாந்தி அடைந்த நிலையில் புன்னகை புரிந்தபடி தமது கணணிகளிற்கு முன்னால் ஞான - பேரானந்த தெய்வீக நிலையில் இருந்து கருத்து எழுதுகின்றார்களா?

6. தாம் யாழ்களத்தில் அவமானப்பட்டதும் பெண்கள் யாழை விட்டு விலகிச் சென்றதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். அதற்காக, யாழ் களத்திற்கு அடிக்கடி வராத, அல்லது தொடர்ச்சியாக வராத பெண்கள் எல்லாம் யாழில் பட்ட அவமானம் காரணமாகவே வெளியேறினார்கள் என்று அர்த்தம் இல்லை.

7. ஆண்கள் ஒருவரையும் ரெட் கார்ட் காட்டி வெளியேற்றுவதற்காக இந்த கருத்தாடல் ஆரம்பிக்கப்படவில்லை. இப்படி, இப்படி பிரச்சனைகள் இருக்கின்றது என்று முதலில் ஒரு விழிப்புணர்வு களத்தில் ஏற்படவேண்டும். மேலும், இந்த கருத்தாடலை ஆரம்பித்த நான் ஒரு யோக்கியவான் என்றோ அல்லது பெண்களை பற்றி நான் யாழ் இணையத்தில் நக்கல் அடிக்கவில்லை என்றோ இங்கு கூறவில்லை. நானும் ஆரம்பத்தில் பல தடவைகள் பெண்களை தாக்கி கவிதைகளில் எழுதியுள்ளேன். வேறும் ஏதாவது எழுதியுள்ளேனோ என்று தெரியவில்லை. எனது எழுத்தின் மூலம் யாராவது பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, எதிர்காலத்தில் எனது கருத்துக்களில் பெண்களை தாக்கமாட்டேன் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

8. ஆண்களிண் Majority Power தற்போது கருத்துக்கணிப்பில் வெளிப்படுத்தப்படுகின்றது போல் தெரிகின்றது. எல்லா ஆண்களும் உங்கள் கள்ள ஐடிக்களில் வந்து வோட்டு போட்டு ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்! :lol:

அதெப்படியப்பா நேற்றில் இருந்து சற்றுமுன் அரை மணித்தியாலத்தியாலம் வரை இப்படி இருந்த கருத்துக்கணிப்பு

யாழ் இணையத்தில் பெண்களிற்கு சம உரிமை இருக்கின்றதா?

ஆம்! [ 9 ] [33.33%]

இல்லை! [ 16 ] [59.26%]

தெரியவில்லை! [ 2 ] [7.41%]

திடீரென்று இப்படி மாறியது? :)

யாழ் இணையத்தில் பெண்களிற்கு சம உரிமை இருக்கின்றதா?

ஆம்! [ 19 ] [51.35%] இல்லை! [ 16 ] [43.24%]

தெரியவில்லை! [ 2 ] [5.41%]

அதெப்படியப்பா நேற்றில் இருந்து சற்றுமுன் அரை மணித்தியாலத்தியாலம் வரை இப்படி இருந்த கருத்துக்கணிப்பு

யாழ் இணையத்தில் பெண்களிற்கு சம உரிமை இருக்கின்றதா?

ஆம்! [ 9 ] [33.33%]

இல்லை! [ 16 ] [59.26%]

தெரியவில்லை! [ 2 ] [7.41%]

திடீரென்று இப்படி மாறியது?

யாழ் இணையத்தில் பெண்களிற்கு சம உரிமை இருக்கின்றதா?

ஆம்! [ 19 ] [51.35%] இல்லை! [ 16 ] [43.24%]

தெரியவில்லை! [ 2 ] [5.41%]

ஆண்களை அவமதிச்சா கிளம்பிடுவமில்ல

கலைஞன் இப்ப உங்களுக்குச் சந்தோசம் தானே. எனி உங்களுக்குப் பெண்கள் மத்தியில் நல்ல செல்வாக்குக் கிடைக்குமுங்கோ

8. ஆண்களிண் Majority Power தற்போது கருத்துக்கணிப்பில் வெளிப்படுத்தப்படுகின்றது போல் தெரிகின்றது. எல்லா ஆண்களும் உங்கள் கள்ள ஐடிக்களில் வந்து வோட்டு போட்டு ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்! :lol:

வன்மையாக கண்டிக்கப் பட வேண்டிய விடயம். :angry:

ஆண்களை சீண்டுவது நல்லதல்ல..சொல்லிப்புட்டம் :)

பி.கு: தெரியாமல்தான் கேக்கிறன் (டீசன்ரா சொல்லுறதுன்னா.).மகளீருக்கு ஜஸ் வைக்கிறீர்களா?

Edited by Kuddithambi

  • தொடங்கியவர்

மன்னிக்கவும், மகளிரை என்பக்கம் இழுப்பதற்காகவோ அல்லது அவர்களை ஐஸ் வைப்பதற்காகவோ நான் இந்த கருத்தாடலை தொடங்கவில்லை. ஐஸ் வைப்பது எனது நோக்கமாக இருந்திருந்தால் கவிதைப் பூங்காட்டில் காதலைப்பற்றி தேனொழுக கவிதைகள் எழுதி ஒட்டி இருப்பேன். அல்லது வேறு வழிமுறைகளை (மற்றைய ஆண்கள் அறியாத வகையில்)கையாண்டு இருப்பேன். இப்படி பல நூறு ஆண்கள் மூலம் சுடுதண்ணீரில் குளிப்பாட்டப்படும் மடத்தனமான வேலையில் இறங்கி இருக்கமாட்டேன். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும், மகளிரை என்பக்கம் இழுப்பதற்காகவோ அல்லது அவர்களை ஐஸ் வைப்பதற்காகவோ நான் இந்த கருத்தாடலை தொடங்கவில்லை. ஐஸ் வைப்பது எனது நோக்கமாக இருந்திருந்தால் கவிதைப் பூங்காட்டில் காதலைப்பற்றி தேனொழுக கவிதைகள் எழுதி ஒட்டி இருப்பேன். அல்லது வேறு வழிமுறைகளை (மற்றைய ஆண்கள் அறியாத வகையில்)கையாண்டு இருப்பேன். இப்படி பல நூறு ஆண்கள் மூலம் சுடுதண்ணீரில் குளிப்பாட்டப்படும் மடத்தனமான வேலையில் இறங்கி இருக்கமாட்டேன். நன்றி!

ரொம்ப பொறுப்புணர்வோட பதில் கருத்து எழுதுறீங்க படைப்பாளி சார். நன்றி! ;) B)

வணக்கம் எல்லாருக்கும் யார் என்று பார்கிறீங்களோ நாம தான்..............

லேடிஸ் அன்ட் ஜேன்டில்மன்ஸ்

இப்ப நான் என்ன சொல்ல வாறன் என்றா ஒரு சிலர் தாக்கினதிற்கு ஒட்டு மொத்த யாழையும் எடுத்தது மிகவும் பிழை பாருங்கோ.........எவ்வள்வு நல்ல மனிசாக்கள் எல்லாம் இருக்கீனம் அவைய எல்லாம் நீங்க பார்க்க வேண்டும்............சொறி அவை நேரா கருத்து சொல்ல மாட்டீனம் என்பதை மறந்து விட்டேன்...........(சுண்டு நாம சொல்லுறது விளங்குதோ) :P

நாங்கள் முதலில் வாக்கெடுக்க முன்னம் பெண்களையும் இணைத்து எத்தனை செயற்பாட்டில் இறங்கி இருகிறோம் என்று யோசித்து பார்தனீங்களோ.............இல்லை நீங்கள் குறிபிட்ட அரட்டை தொடர்பான கருத்துக்கு...........நான் தான் பதில் சொல்லி ஆக வேண்டும்............பெண்களை பற்றி கதைக்கும் நீங்கள் அரட்டையில் என்ன குற்றம் கண்டு விட்டீர்கள்............அதாவது நாங்கள் நட்பு ரீதியாகவும்,அக்கா,தங்கை என்ற முறையிலும் பல கருத்துகளை வைத்து நல்ல சந்தோசம தான் இருகிறோம் ஆகவே நீங்கள் இதில் பிழை கண்டு பிடிபது எனக்கு சரியாப படவில்லை............... B)

3. அரட்டை களத்தில் கருத்து எழுதும் போது சற்று அவதானமாக இருத்தல். நீங்கள் பகிடியாக எழுதும் பதில் கருத்துக்களே பெண்கள் மீது நையாண்டி செய்யப்படும் கருத்துக்கள் எழுதப்படுவதை ஊக்குவிக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்

[

மற்றவர்களை பற்றி தெறியாது பயந்து கொண்டு எழுதாம இருந்த பெண்களையும் நாங்கள் டைகர்பமிலி என்று உருவாக்கு அதில சில நடைமுறைகளை உருவாக்கி எத்தனை பேரை உள்வாங்கி இருகிறோம் எனியும் உள்வாங்குவோம் அது குறிபிட்ட பெண்களுக்கு தெறியும் என்றே நினைகிறேன் நான் பெயர் குறிபிட விருபவில்லை..........

அரட்டையில் நாங்கள் நக்கலா கதைத்து பதிலா அவையும் நகைசுவையாக கருத்து எழுதுவதன் மூலம் நல்ல ஒரு புரிந்துணர்வு எங்களிடம் இருக்கு.........அந்த வகையில் இளைஞர்கள் எல்லாரும் மிகவும் புரிந்துணர்வுடன் தான் செயற்படுகிறார்கள்.........இனி வரும் காலங்களிலும் அரட்டை பகுதியில் அவ்வாறு தான் கதைபோம்.................

பெண்கள் அடிமைப்டுகிறார்கள் என்று சொல்லி கொண்டு இருபதில் எந்த வித பலனும் இல்லை நாங்களா ஏதாவது செயற்பாடுகள் மூலம் உள்வாங்க வேண்டும் என்றே சொல்லலாம்.........அந்த விதத்தில் நீங்கள் அரட்டையை பற்றி கூறிய விசயங்கள் எனக்கும் சரியாக படவில்லை............ <_<

அப்ப வரட்டா.....................அட நான் வந்துட்டன் எங்கே என்ட நண்பன் பூஸ்குட்டி நான் வந்தா அவர் வருவாரே...........

மீண்டும் சந்திபோம்.

ஏனப்பா யாழ்ல நடக்கிற பிரச்சினைகள் போதாது என்று இப்படியும் ஒரு தலைப்பா?

எந்த பெண்ணாவது தங்களை யாழ் கீழ்த்தரமா நடத்துது என்று சொன்னாரா?

  • தொடங்கியவர்

1. நீதி விசாரணை என்று வந்தால் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் பலரை விசாரித்து நடந்ததை ஆராய்வதே முறையான நடைமுறையாகும். ஒருவர், இருவர் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள். எனவே பேசாமல் இருக்கலாம் என்று கூறமுடியாது. எல்லாம் ஒன்றில் இருந்து தொடங்கியே நூறு, ஆயிரம் என்று போகின்றது.

2. அக்கா, தங்கை என்று அரட்டை அடிப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், அடிப்படை நாகரிகங்கள், விதிகள் இணையமாக இருந்தாலும் பேணப்படுவதே சரியானது. வாழ்க்கை என்பது வெறும் கோமாளிக்கூத்து அல்ல. சிலருக்கு யாழ் இணையத்தில் கருத்தாடல் செய்வது சும்மா முஸ்பாத்தியாக இருந்தாலும், பலருக்கு அது சீரியசான விடயங்கள். நாம் உலகில் எங்கோ தானே ஒரு மூலையில் இருக்கின்றோம். யாரோ தெரியாதவர்களுடன் தானே கதைக்கின்றோம், என்றபடியால் இணையத்தில் என்ன எழுதினாலும் எனக்கு பிரச்சனை இல்லை. என்னை ஒருவரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

அக்கா, தங்கை என்று சொல்பவர்கள் உண்மையில் அக்கா, தங்கைதானா அல்லது அண்ணா, தம்பியா என தெரியவரும்போது பிரச்சனை வருகின்றது. இணையமாக இருந்தாலும், தம்பியை தங்கை என அழைத்து உரையாடுவதோ அல்லது தங்கையை தம்பி என அழைத்து உரையாடுவதோ, வளரும் சமுதாயத்திற்கு அழகல்ல. யாழ் இணையத்தில் பல பெரியவர்கள் எல்லாம் வந்து வாசித்து செல்கின்றார்கள். பால் மாறாட்டம் செய்து யாழ் இணையத்தில் அரட்டை அடிப்பதும் உண்மையான பெண்கள் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகின்றது. பலர் யாழ் இணையத்தில் உள்ள போலிப் பெண்களின் கருத்துக்களை வைத்து உண்மையான பெண்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்ற தப்பான எண்ணங்களிற்கு வரக்கூடும். அரட்டையில் பெண்களாக கருத்தாடும் பலர் உண்மையில் பெண்கள் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், யாழ் கள வாசகர்களிற்கு இவைபற்றி எல்லாம் தெரியாது. எனவே, போலிப்பெண்களால் ஒரு பொய்யான Image, illusion யாழ் இணையத்தில் உருவாக்கப்படுகின்றது. இவை உண்மையான பெண்ணை பாதிக்கின்றன. ஒருவர் செய்யும் பிழை மற்றவர்களையும் பிழை செய்ய ஊக்குவிக்கின்றது. எனவே, உண்மையான பெண்களிற்கு போலிப்பெண்களை பற்றி எச்சரிக்கை கொடுப்பதற்காகவே அரட்டை பகுதியில் கருத்தாடல் செய்யும்போது கவனமாக இருக்கும்படி கூறப்பட்டது.

3. இங்கு எழுதப்பட்ட கருத்தாடலிற்கும் டைகர்பமிழிக்கும் எதுவித சம்மந்தமும் இல்லை. டைகர் பமிழியோ றோயல் பமிழியோ, இங்கு ஒரு பமிழிகளையும் பற்றி பேசுவதற்கோ அல்லது தாக்குவதற்கோ இந்த கருத்தாடல் ஆரம்பிக்கப்படவில்லை.

4. நக்கல் அடிப்பது நகைச்சுவை பண்ணுவதில் பிழை ஒன்றும் இல்லை. ஆனால், அதற்கு பெண்கள் மாத்திரம் தான் உங்களுக்கு கருப்பொருளாக கிடைத்தார்களா? ஆற்றல்மிக்க பல யாழ் கள உறவுகள் தமது நேரத்தையும், Energy ஐயும் பெண்களை கிண்டல் அடிப்பதில் செலவளிக்காமல் நல்ல வேறு ஆக்கங்கள் படைப்பதில் செலவளிக்கலாமே?

5. "எந்த பெண்ணாவது தங்களை யாழ் கீழ்த்தரமா நடத்துது என்று சொன்னாரா?' இப்படி ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது. இந்த கேள்வியை "எந்த பெண்ணாவது தங்களை யாழ் களத்தில் உள்ள சில ஆண்கள் கீழ்த்தரமா நடத்துகின்றார்கள் என்று சொன்னாரா?" இப்படி திருத்திக் கேட்டால், இதற்குரிய பதில் "ஆம்!" இந்தக் கேள்வியைப் பார்த்தால் காயப்படுத்திவிட்டு, "என்ன இரத்தம் வருதே?" எண்டு உடம்பில் காயம் பட்ட ஒருவனைப் பார்த்து கேட்பது போல் உள்ளது.

இப்படியான பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் பெண்களின் பெயரில் கருத்தெழுதும் ஆண்களால்தான்.பலர் அவர்களத்தான் தாக்குகின்றார்கள்.பிரச்சனை எங்கேயோ இருக்க தயவு செய்து இந்த பெண் பிரச்சனையை பூதாகரமாக்கி விடாதீர்கள். <_<

இதை நான் ஆமோதிக்கின்றேன்...

  • தொடங்கியவர்

உங்கள் கருத்திற்கு நன்றி! நான் ஒரு முட்டாள் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். எனினும், அறிவாளியான தாங்களும் அதை மீளவும் நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி! <_<

நான் கூறிய "சில ஆண்கள்" என்பது காலத்திற்கு காலம் அஞ்சலோட்டம் போல் யாழ் இணையத்தில் தொடர்ந்து ஓடப்படுகின்றது. இன்று ஒருவர் அந்த கீழ்த்தரமான வேலையில் ஈடுபட்டால், நாளை வேறொருவர் இந்த வேலையை தொடர்கின்றார். பின் பழையவர் மீண்டும் அதை தொடர்வார். புதிதாய் இணையும் உறுப்பினர்களும் இந்த அஞ்சலோட்டத்தை சிறிதுகாலம் கவனித்துவிட்டு சிஸ்டம் பிடிபட்டதும், காலப்போக்கில் தாமும் இதில் இணைந்துகொள்வார்கள்.

இதேபோல், இன்று ஒரு பெண் பாதிக்கப்பட்டால், நாளை இன்னொருவர், நாளைன்றைக்கு இன்னொருவர் என்று பாதிக்கப்படுவார்கள். மேலும், தொடர்ந்து ஓவர் டைம் ஆக பாதிக்கப்படும் பெண்களும், ஓவர் டைம் ஆக தாக்கும் ஆண்களும் கூட களத்தில் இருக்கின்றார்கள்.

வார்த்தைக்கு வார்த்தை நான் இங்கு என்ன எழுதுகின்றேன் என பார்த்து அதை வைத்து விமர்சனம் செய்யாமல், ஏற்கனவே கருத்து கூறியுள்ள யாழ் கள பெண்மணிகளின் கருத்துக்களையும் பதில் கருத்து எழுதும் போது கவனத்தில் கொள்வது இந்த கருத்தாடல் ஆரோக்கியமான ஒன்றாக அமைய உதவியாய் இருக்கும். நன்றி! :D

மாப்பு,

இப்படி ஒரு பதிவை போட்டதற்கே உங்களை பாராட்டணும். [பின்ன ஒரு தடவை நான் போட்ட பதிவையும், அதன் விளைவுகளை பார்த்தும் நீங்க திருந்தலையே!!]

நான் போட்ட பதிவிற்கே எனக்கு நீதி கிடைக்கவில்லை மாப்பு. ஆனால் ;

இந்த பதிவிற்கான என் கருத்து:

"நான் பார்த்த வரையில் தாயக பறவைகள் பற்றிய கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை"

Edited by தூயா

வணக்கம்,

இத் தலைப்புத் தொடர்பாக பின்னர் கருத்துக் கூறுகிறேன்.

இப்போது: தயவுசெய்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் இருப்பின் மட்டும் எழுதுங்கள். அவசியமற்ற சீண்டல் கருத்துக்களை, தனிநபர்கள் மீதான கோபதாபங்களை இங்கே எழுதி வீண் பிரச்சனைகளை வளர்க்காதீர்கள். தொடர்ந்தும் இப்படியாக எழுதப்படின், எச்சரிக்கை வழங்கப்படும் என்பதை நினைவூட்டுகிறோம். <_<

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

இத் தலைப்புத் தொடர்பாக பின்னர் கருத்துக் கூறுகிறேன்.

இப்போது: தயவுசெய்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் இருப்பின் மட்டும் எழுதுங்கள். அவசியமற்ற சீண்டல் கருத்துக்களை, தனிநபர்கள் மீதான கோபதாபங்களை இங்கே எழுதி வீண் பிரச்சனைகளை வளர்க்காதீர்கள். தொடர்ந்தும் இப்படியாக எழுதப்படின், எச்சரிக்கை வழங்கப்படும் என்பதை நினைவூட்டுகிறோம். <_<

நன்றி

வலைஞன்

உங்களின் பதில் ஏமாற்றத்தை்த தருகின்றது. இத்தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் நண்பர் கலைஞனின் கருத்துக் கூடப் பல இடங்களில் ஆண்களைச் சீண்டும் விதமாகவே இருக்கின்றது. இவ்வளவு காலமும் யாழ்களத்தில் ஆண், பெண் பாகுபாடு பார்க்காமல் பழகி வந்த எங்களுக்குள் இப்படியான ஒரு சிந்தனையை விதைப்பது ஒரு ஈகோப் பிரச்சனையைத் தோற்றுவிக்காதா?

பெண், ஆண் முகமூடிக்குள் இருந்து எழுதுபவர்கள் தான் வெக்கப்பட வேண்டும். அது அவர்களுக்குக் கிடைக்கின்ற அவமானமாகவே இருக்கும்.

மேலும் இங்கே பதிலுக்கு ஆண்கள் பற்றிய தலைப்பையும் கண்ணுற்றேன். அதில் எழுதப்பட்டிருப்பவைக்கும், இதற்கும் என்ன வேறுபாட்டைக் கண்டீர்கள். இரண்டு தலைப்புமே தவறான கண்ணோட்டம் தானே. அந்தத் தலைப்பை நீ்க்கியது குறித்து பெருமைப்படும் அதே வேளை, இத்தலைப்பைத் தாங்கள் நீக்காமல் விட்டுப் பக்கச் சார்பாகவே நடந்து கொள்கின்றீர்கள் என்றே உணருகின்றேன். உண்மையில் அது பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றது.

என்னைப் பொறுத்தவரைக்கும் இங்கே எப்பெண்களுக்கும் இங்கே பால் அடிப்படையிலான வேறுபாட்டை இக்களம் வளங்கவில்லை என்றே நம்புகின்றேன். தனிப்பட்ட விதத்தில்(துரிததூதர் ஊடக), அல்லது விவாதங்களில் பங்குகொள்பவர்கள் தங்களுக்குள்ளே முரண்படும் பட்சத்தில் அதைப் பற்றி அவர்களுக்குள்ளாகவே தனியே தீர்ப்பது தான் சரியானது. அதை விட்டு விட்டு, இங்கே குறிப்பிட்டது போல ஒட்டுமொத்த ஆண்களையும் கேவலப்படுத்துவது என்பது மிகமிக அசிங்கம்.

இப்படியான தலைப்புக்களை அனுமதிப்பதாக இருந்தால், அனைத்தையும் அனுமதியுங்கள். இல்லையென்றால் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் தூக்குங்கள். இது என் ஆலோசனை மட்டுமே.

சொல்லப் போனால் சிலபேர் மீதான உள்குத்தாகவே இத்தலைப்பை நோக்குகின்றேன். அதை தட்டிக் கேட்காமல் விடுவதன் மூலம், அதற்கும் துணை போகின்றீர்களோ என்று அஞ்சுகின்றேன்.

யாழில் இது வரை ஆண் பெண் பாகுபாடு உருவாகியிருந்ததாக நான் எங்கும் பார்க்கவில்லை. யாழில் ஆண்களும் பெண்களும் சமமாகவே பழகுகிறார்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள். இப்படி ஒரு தலைப்பு ஆரம்பிக்கப்பட்டு இல்லாதா பாகுபாட்டை உருவாக்க போகிறீர்களா கலைஞனே? இது வரை எந்த பெண்ணாவது இப்படி குறை கூறி உள்ளாரா பெண்கள் யாழில் பரிதாபமான நிலலயில் இருக்கிறார்கள் என்று.........? அப்படி கூறுபவர்கள் உங்கள் குறைகளை நிர்வாகத்திற்க்கு நேராக முன் வையுங்கள்.ஆண் பெண் என்று பாகுபாடு இல்லாமல் செல்லும் யாழ்களத்தில். அதை முடிவுக்கு கொண்டுவந்து ஆண் பெண் போட்டியை உருவாக்கும்ம் அடித்தளமாகவெ இந்த தலைப்பை எண்ண வேண்டியுள்ளது. இங்கே ஆண்கள் கருத்துக்கள் சொல்வதை விட பெண்களாகவே முன்வந்து தமது கருத்துக்களை கூறுதல் நல்லது

வணக்கம்,இத் தலைப்புத் தொடர்பாக பின்னர் கருத்துக் கூறுகிறேன்.இப்போது: தயவுசெய்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் இருப்பின் மட்டும் எழுதுங்கள். அவசியமற்ற சீண்டல் கருத்துக்களை, தனிநபர்கள் மீதான கோபதாபங்களை இங்கே எழுதி வீண் பிரச்சனைகளை வளர்க்காதீர்கள். தொடர்ந்தும் இப்படியாக எழுதப்படின், எச்சரிக்கை வழங்கப்படும் என்பதை நினைவூட்டுகிறோம். <_< நன்றி
ம்ம். நன்றிகள் அண்ணா! எங்கள் கோரிக்கையயயும் எடுத்து கொண்டு. அவ்வப்போது கருத்துக்கள் கூறுவது. வெகு விரைவில் உங்கள் கருத்தை கூறுங்கள்
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞனின் கருத்தில் உள்ள உள்குத்துக்கள்

1. யாழ் இணையத்தில் உள்ள பல பெரிய ஆண் வி.ஐ.பி க்கள் (பெரிய தலைகள்) தாம் எல்லோரும் உடனடியாக Attend பண்ணி, யாழ் இணையத்தில் பெண்களை நீங்கள் கெளரவப்படுத்துவதாகவும், அவர்களை சமநிலையில் வைத்து நோக்குவதாகவும், எனவே இந்த தலைப்பு தேவையில்லாத ஒரு விடயம் என்றும் எழுதி இருக்கின்றீர்கள். உங்கள் மனச்சாட்சிப்படி உண்மையை இங்கு நீங்கள் பேசி இருந்தால் அதற்காக மகிழ்ச்சி அடைகின்றேன். அது உண்மையாக இருந்தால் அது யாழ் இணையத்தினைப் பற்றி நாம் பெருமைப்படவேண்டிய விடயமே!

இப்படி யாரை நக்கலடிக்கினறார். எங்களுக்குள் இவர் விஐபி, பெரிய தலை சின்னத் தலை, இவர் சாதாரணம் என்ற பாகுபாடு இருந்தனவா? இப்படியான கருத்து என்பது என்பது யாழ்களத்தில் உறுப்பினர்களுக்கிடையே உயர்வு தாழ்வு இருப்பதாக ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கவில்லையா? இங்கே முந்தி இணைந்தவர்கள், பின்பு இணைந்தவர்கள் என்ற வேறுபாட்டோடு யாரும் எழுதவில்லை என்றே நான் சொல்லுவேன். தவிரவும் முன்பு இணைந்தவர்களுக்கு இப்படித் திமிர் இருப்பதாகவும் நான் அறியவில்லை. நான் வந்தது தொடக்கம் இன்று வரை கருத்தெழுத பழைய உறுப்பினர்களின் பற்றுத் தான் காரணம்.

அட கடவுளே... கடைசியில் இந்த தலைப்பையும் ஆண்கள் Lead பண்ணப் போகின்றார்கள் போல இருக்கின்றது.. பெரிய, பெரிய ஆண் வி.ஐ.பி க்கள் ஏற்கனவே மிகவும் அலேர்ட் ஆகிவிட்டார்கள் போல் தெரிகின்றது...

இந்தக் கருத்துச் சொல்லுகின்றபோது, நான் விகடகவி, குமாரசாமி, குட்டித்தம்பி, நெடுங்காலபோவான், யாழ்வினோ, நாதன் போன்றவர்களே பதில் எழுதியிருக்கின்றோம். அதிலும் குமாராமி, நான், விகடகவி போன்றவர்களே ஓரளவு பழையவர்கள். இங்கே விஐபி என்ற வார்த்தைப் பிரயோகம் என்பது உள்குத்தாகவே வெிளப்படையாத் தெரிகின்றது.

ஆண்களிற்கும் ஏதாவது பிரச்சனைகள் யாழ் இணையத்தில் இருந்தால் நிச்சயம் அதுபற்றியும் கருத்தாடலை தொடங்க முடியும்.ஆனால், அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் அறியத்தரலாமே?

இங்கே பிரச்சனைகளை ஊக்குவிப்பது எங்களின் வேலையல்ல நண்பரே. அவை தனிப்பட்ட மனஸ்தாபங்களாக இருந்தால் அவற்றைத் தனிப்பட்ட விதத்திலேயே தீர்த்துக் கொள்ளுவோம். பிரச்சனைகளை ஊக்குவித்து ஆதாயம் தேடுபவர்களுக்குத் தான் அது தேவைப்படும்.

8. ஆண்களிண் Majority Power தற்போது கருத்துக்கணிப்பில் வெளிப்படுத்தப்படுகின்றது போல் தெரிகின்றது. எல்லா ஆண்களும் உங்கள் கள்ள ஐடிக்களில் வந்து வோட்டு போட்டு ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்!

உங்களின் இக்கருத்தை வன்மையாக ஆட்சேபிக்கின்றேன். நீங்கள் இத்தலைப்புப் போட்டு ஒருமணிநேர இடவெளிக்குள் நான் கருத்து எழுதியிருக்கின்றேன். அப்போது பெண்களுக்கு ஆதரவாக விழுந்த இல்லை என்ற வாக்குகள் 12, ஆம் விழுந்த வாக்குகள் வெறும் 4.( என் வாக்கோடு) ஒரு மணிநேரத்தினுள் 12 வாக்குகள் எப்படி விழுந்தது என்று நானும் பிரச்சனை கிளப்பலாம். உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாத பதில்கள் வந்தால் உடனே அது முகமூடி என்றோ, கள்ளவாக்கு என்றே நியாயப்படுத்தாதீர்கள் நண்பரே. முகமூடிக்கும் பதிலடி தான் எம் பாலிசி.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில கூட பெண்கள் பெண்களுக்க அடிபட்டதுதான் கூட..! உதாரணம் அவசியமில்ல.. அவங்களுக்கே புரியும்.

அதுமட்டுமன்றி பெண்களுக்கு சார்பாக வாதாடுவதாகக் கூறி ஆண்களை (நம்மையும் தான்) தாக்கி எழுதிய ஆண்களும் இங்குண்டு.

யாரும் சமூக யதார்த்தத்தை சொல்ல முனையல்ல..!

சோழியான் அண்ணா சொல்வது போல ஆண்களூக்கு எதிரான ஆக்கங்கள் எழுதிவிட்டால் அவர்கள் "புரட்சி" பெண்கள் அல்லது "புரட்சி" சிந்தனையாளர்கள் என்ற தப்பான அபிப்பிராயம் எமது சமூகத்தில் வேரூன்றியுள்ளது. அதற்கு இத்தலைப்பும் ஒரு சான்று.

சமூகத்தில் ஆண்-பெண் சமூக நிலை சமத்துவம் என்பது ஆணின் தேவைகளை ஆணும் பெண்ணின் தேவைகளை பெண்ணும் நிறை வேற்றும் அதேவேளை சமூகத்தின் தேவைகளை தீர்க்க இருவரும் கரங்கோர்த்து செயற்படுவதுமாகும். ஆண் பெண் வேறுபாட்டை குற்றங்களை பெருக்குவதல்ல அதன் நோக்கம்..!

சில சந்தர்ப்பங்களில் பெண்களின் பெயரால் சில கீழ்த்தரமான சொற்பிரயோகங்கள் இங்கும் நடந்துள்ளன. அதை களம் உடனடியாகவே அகற்றியுள்ளது.

களத்தில் இருந்து ஆண்கள் பெண்கள் என்று பலர் வெளியேறியுள்ளனர். அதற்கு எல்லாம் ஆண்கள் தான் காரணம் என்றில்லை. அவரவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பிலும் அது தங்கியுள்ளது.

பெண்களின் தவறுகளுக்கும் ஆண்களை குற்றம் சுமத்தி சுகம் கண்டுவிட்ட எமது சமூகத்தில் இப்படியான விசயங்கள் எப்பவும் சூடானவைதான்.

பெண்களுக்கு பிரச்சனை போல ஆண்களுக்கும் உண்டு. இருவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய விடயங்கள் இருக்க.. பிரிவினைகளைத் தூண்டும் விதமான இவ் நடவடிக்கைகள் ஆரோக்கியமாக அமையாது..!

எம்மைப் பொறுத்தவரை ஆண்கள் பெண்கள் இங்கு பாகுபாடின்றியே கருத்தியல் ரீதியில் உள்ளனர்.

ஒருவர் எழுதத் தயங்குவதற்கு பதில் ஆண் ஆதிக்கமல்ல. அவரின் துணிச்சலின்மை மட்டுமே..! <_<

  • கருத்துக்கள உறவுகள்

அது இருக்கட்டும், எதற்காக சின்னப்பு, முகத்தார், தவத்தார், பெரியப்பு, சின்னக்குட்டியார், வயசு போனவர்கள் களத்திற்கு வருகிறார்கள் இல்லை?அவர்களையுமா வெருட்டினார்கள் களத்தில்??? பெண்கள் தான் உங்க கண்ணுக்கு கருத்தாளர்களாக தெரிகின்றார்களோ? பழசுகளை சா வயசானவர்கள் கருத்தாளர்கள் இல்லை அவர்கள் ஜொள்ளர்கள் என்று நினைத்துவிட்டீர்களோ?? <_< :angry:

coolllllll.......சும்ம்ம்மா அதிர்ர்ருதல்லா..... :P

புத்தனையும் கிழசு என்று ஒரு பெண் வெருட்டினாவா ஆனாலும் புத்து வாரேன் தானே அங்கே தான் நான் நிற்கிறன் பாருங்கோ. :P

தெய்வத்திலேயே அரைவாசியை பெண்ணுக்கு கொடுதிருகிறோம் பிறகு யாழில கொடுக்க மாட்டோமா இது என்ன சின்ன பிள்ளைதனமா இருக்கு......... B)

தூயவன் அண்ணா & வானவில் ,

இந்தத் தலைப்பு தொடங்கியதில் எந்த வித தவறும் இல்லையெண்டு நினைக்கிறன் தலைப்பை தொடங்கியவரை வச்சு நாம் எங்கள் கருத்தை சொல்லக் கூடாது. அவர் எதுக்காகவும் தொடங்கட்டும். அதில் இருக்கும் உண்மையை மறைக்கக் கூடாது இல்லையா?

தூயவன் அண்ணா நீங்க என்னதான் சொன்னாலும் இப்ப கொஞ்ச நாளா நடக்கிறதைப் பார்க்க பெண்களை இங்கிருந்து விரட்ட நினைப்பது போலவே தோணுது.அதுதான் உண்மை!

இங்க பெண்களைச் சீண்டிக் கருத்து எழுதும் போது நீங்களும் தானே பார்த்துக் கொண்டு இருந்தீர்கள்.. இப்ப எங்க சீண்டினம்........... ? எந்த தலைப்பு.........? ஏன் அவை வரையில்லை ,..........? அவைக்கு தனிப்பட்ட காரணம் இருக்கலாம் ?எண்டு நீங்கள் சொல்வது தவறு ........ நான் குறிப்பிட்ட பெண் பெயர்களில் சிலர் எழுதாததுக்கு காரணம் உப்படியான சீண்டல்களே ........ அதைப் பற்றி சிலருக்கு தெரியும்.அதையெல்லாம் விவரிச்சு இங்க காரணம் எழுத முடியாது. பகுடியா எழுதுவது வேறு ....பகுடி எனக்கும் பிடிக்கும்.ஆனால் அதையே மற்றவரை நோகடிக்குறமாதிரி உவாவ எனக்கு பிடிக்காது அதனால் உவாவை சீண்டனும். எண்டு எழுதுவது தவறு,

பெண்களை எதிரிகளாய் பார்க்க வேண்டாம். ஒருவரைப் பிடிக்காவிட்டால் நேரடியா அவையைத் தொடர்பு கொண்டு பேசிப் போடுங்கோ......... !

என்னை யாரும் பேசி எழுதினால் அந்த வருத்தம் ஆறும் வரை யாழில் எழுதுவதை விட்டுவிடுவேன். பிறகு வருவேன். அப்படித்தான் நான். எல்லா பெண்களும் அப்படியல்ல.!

நிறைய கள்ள ஓட்டு விழுந்துட்டுப் போல <_< தூயா சொன்னது போல் இதுலும் நீதி நமக்கு கிடைக்காது . சரி தொடங்கோ நீங்க! :D

என்ன சகோதரம் யாழுக்கை சுனாமி வந்து அள்ளிக்கொண்டு போட்டுதோ....??? :P :P :P

பெண்கள் பலவீனமாக இருக்க கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்...!

உயிர்ப்புடன் எழுந்தோம்.. உணர்வுடன் விளித்தோம் எனும் தாயகப்பாடல் இருக்கிறது... எனக்காக அதை ஒரு முறை கேளுங்கோ.....!

ம்ம்ம்ம் சரி சகோதரம்,

கேற்கக் கூடிய சர்ந்தப்பம் கிடைத்தால் கேக்கிறன். :D

தெய்வத்திலேயே அரைவாசியை பெண்ணுக்கு கொடுதிருகிறோம் பிறகு யாழில கொடுக்க மாட்டோமா இது என்ன சின்ன பிள்ளைதனமா இருக்கு.........

ஹிஹி ..... நல்லாத்தான் இருக்கு..... எங்களுக்கு அரைவசியும் வேணாம் கால்வாசி சம உரிமையும் வேணாம். மொத்ததில் மற்றவர்களை தனிப்பட்ட ரீதியில் சீண்டாமல் கருத்து எழுதனும் எண்டு சொல்லுறம். இதுவே உங்களைச் ஒருவர் சீண்டி கருத்து எழுதினால் துணிச்சலாக அவருக்கு பதில் கருத்து எழுதுவீங்க. அதுவேஒரு பெண்ணை ஒருவர் சீண்டிக் கதைச்சால் பதில் குடுக்காமல் மௌனமாகிடுவார்.. .....(இதில் தமிழ் தங்கையைப் பாராட்டலாம் அவரின் துணிச்சலை) நெடுக்ஸ் தாத்தா சொன்னமாதிரி பெண்களின் துணிச்சலின்மை தான் காரணம். ! <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.