Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தனி ஒருவனாக' 5.40% வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி: 2 தொகுதிகளில் திமுக வெற்றிக்கு முட்டுக்கட்டை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5.40% வாக்குகளை 'தனி ஒருவனாக' பெற்று நாம் தமிழர் கட்சி அசத்தியுள்ளது.

ஊடக செல்வாக்கு, முன்னணித் தலைவர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரம் என அசுர பலத்துடன் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தன. மேலும், தேர்தல் பிரச்சாரக் களத்தில் அமமுகவும், மக்கள் நீதி மய்யமும் செல்வாக்கைப் பெற்றிருந்தன. அவர்களுக்கான பிரச்சார வியூகங்களை முன்னணி ஆலோசகர்கள் வழங்கினர்.

அதே நேரத்தில், எந்த விதமான செல்வாக்கும், பிரச்சார வியூகமும் இல்லாமல் தேர்தலை எதிர்கொண்டது நாம் தமிழர் கட்சி. பிரம்மாண்ட விளம்பரம் ஏதும் இல்லாமல், 'விவசாயி' சின்னம், பட்டிதொட்டியெல்லாம் கொண்டுசெல்லப்பட்டது. சீமான் என்கிற ஒற்றை நபரை நம்பியே களம் கண்டது. இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில், கணிசமான வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டனர் நாம் தமிழர் கட்சியினர். பெரிய அளவில் பிரச்சாரம் இல்லை என்றாலும், நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில், விவசாயி சின்னம் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர். அவர்களது உழைப்புக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

திருவண்ணாமலை தொகுதியில் 13 ஆயிரத்து 995 வாக்குகளும், போளூர் தொகுதியில் 10 ஆயிரத்து 197 வாக்குகளும், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 11 ஆயிரத்து 541 வாக்குகளும், செங்கம் தொகுதியில் 12 ஆயிரத்து 80 வாக்குகளும், கலசப்பாக்கம் தொகுதியில் 8 ஆயிரத்து 822 வாக்குகளும், ஆரணி தொகுதியில் 10 ஆயிரத்து 491 வாக்குகளும், செய்யாறு தொகுதியில் 12 ஆயிரத்து 192 வாக்குகளும், வந்தவாசி தொகுதியில் 9,284 வாக்குகளும் என, மாவட்டத்தில் மொத்தம் 88 ஆயிரத்து 602 வாக்குகள் பெற்றுள்ளனர். 8 தொகுதிகளிலும் பதிவான 16 லட்சத்து 41 ஆயிரத்து 169 வாக்குகளில் 5.40% வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் வியக்கத்தக்க வகையில் அவர்கள் பெற்ற வாக்குகள், திமுக மற்றும் அதிமுக தோல்விக்குக் காரணமாகவும் அமைந்துள்ளது என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள். மேலும், அவர்கள் கூறும்போது, "ஆரணி தொகுதியில் வெற்றி பெற்று அதிமுகவின் வாக்கு வித்தியாசம் 3,128 ஆகும். இந்தத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி 10 ஆயிரத்து 491 வாக்குகள் பெற்றுள்ளது. போளூர் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் வாக்கு வித்தியாசம் 9,725 ஆகும். இந்தத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி 10 ஆயிரத்து 197 வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் திமுகவின் வெற்றிக்கு நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன. இதேபோல், செங்கம் தொகுதியில் அதிமுகவுக்கு பாதிப்பைக் கொடுத்துள்ளது.

திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று, தேர்தல் களத்தில் வெற்றி பெற்றுவிட்டோம் எனப் பெருமையுடன் கருத்து தெரிவிக்கும் கட்சிகளுக்கு விதிவிலக்காக, தனித்துக் களம் கண்டு, தனது செல்வாக்கை ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வரும் நாம் தமிழர் கட்சியைப் பாராட்டலாம்" என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் 'தனி ஒருவனாக'  5.40% வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி: 2 தொகுதிகளில் திமுக வெற்றிக்கு முட்டுக்கட்டை   | NTK performance in tiruvannamalai - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்தல்களில் திமுக வெற்றியை பாதித்த நாம், இந்த முறை அதிமுக வெற்றியை அதிகம் பாதித்தோம் போலவும் தென்படுகிறது. அதிமுக கூட்டணிக்கு செல்வதன் மூலம் திமுக எதிர் வாக்குகளை ஒன்று சேர்க்கும் தேவை இருக்கிறதா ?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழகன் said:

கடந்த தேர்தல்களில் திமுக வெற்றியை பாதித்த நாம், இந்த முறை அதிமுக வெற்றியை அதிகம் பாதித்தோம் போலவும் தென்படுகிறது. அதிமுக கூட்டணிக்கு செல்வதன் மூலம் திமுக எதிர் வாக்குகளை ஒன்று சேர்க்கும் தேவை இருக்கிறதா ?

தமிழருக்கும் திராவிடருக்கும் சம்பந்தமில்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nunavilan said:

தமிழருக்கும் திராவிடருக்கும் சம்பந்தமில்லை என நினைக்கிறேன்.

ஆனால் அண்ணன்கள் எடப்பாடி பழனிச்சாமி,  பன்னீர்செல்வம், அம்மையார் சசிகலா, சகோதரன் தினகரன், ஐயா இராமதாசு, பிஜேபியில் கூட சகோதரர் முருகன் என அங்கே உள்ளவர்கள் யாவரும் தமிழர்கள் அல்லவா?

மறுபுறம் முழுக்க முழுக்க தெலுங்கர் அல்லவா?

அப்போ நாம் முன்னையவர்களுடன் கூட்டுச்சேர்வது காலத்தேவையாக அமையாதா?

அண்ணன் இந்த நிலை எடுத்தால் - நீங்கள் அதை ஆதரிக்க மாட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழகன் said:

இல்லை. முன்னையவர்கள் தேவையானால் நாதக வில் இணையட்டும். அ.தி.மு.க உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகி கொண்டிருக்கிறது. இவர்களுடன் கூட்டா??

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nunavilan said:

இல்லை. முன்னையவர்கள் தேவையானால் நாதக வில் இணையட்டும். அ.தி.மு.க உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகி கொண்டிருக்கிறது. இவர்களுடன் கூட்டா??

**** 

கடந்த தேர்தலில் திமுக பெற்ற சீட்டுகளை விட 15-20 சீட்டுத்தான் குறைவாக இந்த தடவை அதிமுக எடுத்துள்ளது. திமுக ஒரு சீட்டு மட்டும் எடுத்து வாஷ் அவுட் ஆன தேர்தலின் பின்பும் ஆட்சியை பிடித்தும் உள்ளது.

சொல்லப் போனால் இது திமுகவிற்கு பெரிய வெற்றி ஒன்றும் இல்லை. நாம் மட்டும் அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால் தொங்கு சட்டசபை வந்திருக்க கூடும். அதில் தீர்மானிக்கும் சக்தியாக நாம் இருந்து இருப்போம்.

அடுத்த 2024,26 தேர்தல்களில் நிச்சயம் அதிமுக, பாஜக, பாமக ஒரு பலம் மிக்க கூட்டணியாக தொடரும். 

நாம் மறுபடியும் தனித்து போட்டியிட்டு தீம்காவை வெல்ல வழி சமைக்க வேண்டுமா?

நாம் இயக்கமாக இருந்து கட்சியாக மாற்றம் கண்டது ஆட்சி அதிகாரத்தை அடைந்து மாற்றத்தை ஏற்படுத்த அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2021 at 21:22, தமிழகன் said:

கடந்த தேர்தல்களில் திமுக வெற்றியை பாதித்த நாம், இந்த முறை அதிமுக வெற்றியை அதிகம் பாதித்தோம் போலவும் தென்படுகிறது. அதிமுக கூட்டணிக்கு செல்வதன் மூலம் திமுக எதிர் வாக்குகளை ஒன்று சேர்க்கும் தேவை இருக்கிறதா ?

நாம் தமிழர் கட்சி அதிமுக உடன் கூட்டு வைத்தால்  திமுக நிச்சயம் வெல்லும்  எனெனில்...தமிழகத்தில். 100தொடக்கம்150 சட்டமன்றத்தொகுதிகளில் 20000தொடக்கம் 50000வரை தெலுக்கரின் வாக்குகளுண்டு. தெலுக்கர் ஒருபோதும் நாம தமிழர் கட்சிக்கோ...நாம் தமிழர் கூட்டணிக்கோ வாக்கு அளிக்கமாட்டார்கள்  இந்த தெலுக்கர் வாக்குகளை  நாம் திழர் கட்சி பெறுமாயின்  வெற்றி மிக இலகுவாகும்  ஆனால் தெலுங்கர் சீமானை. மகிந்தவாகப் பார்க்கிறார்கள் இந்த தெலுக்கு வாக்குகள்  வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகளாகும்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kandiah57 said:

100தொடக்கம்150 சட்டமன்றத்தொகுதிகளில் 20000தொடக்கம் 50000வரை தெலுக்கரின் வாக்குகளுண்டு. தெலுக்கர் ஒருபோதும் நாம தமிழர் கட்சிக்கோ...நாம் தமிழர் கூட்டணிக்கோ வாக்கு அளிக்கமாட்டார்கள்  இந்த தெலுக்கர் வாக்குகளை  நாம் திழர் கட்சி பெறுமாயின்  வெற்றி மிக இலகுவாகும்

ஒரு திராவிடக் கட்சியின்   ஆதரவாளர்கள் தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சியை எதிர்ப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லையே

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வாத்தியார் said:

ஒரு திராவிடக் கட்சியின்   ஆதரவாளர்கள் தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சியை எதிர்ப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லையே

ஆம் சரி நான் சொல்ல வந்தது. நாதக உடன் கூட்டுச் சேர்வோர்  கிட்டத்தட்ட 100 சட்டமன்றத் தொகுதிகளில் 20000தொடக்கம்50000 வரை வாக்குகளிழப்பார்கள்...அதாவது வெற்றி வாய்ப்பை இழப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kandiah57 said:

தெலுங்கர் சீமானை. மகிந்தவாகப் பார்க்கிறார்கள்

இனவெறியை வெறுக்கும் தமிழ்நாட்டின் 93.15 வீதம் மக்களும் சீமானை மகிந்தவாக பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:

ஆம் சரி நான் சொல்ல வந்தது. நாதக உடன் கூட்டுச் சேர்வோர்  கிட்டத்தட்ட 100 சட்டமன்றத் தொகுதிகளில் 20000தொடக்கம்50000 வரை வாக்குகளிழப்பார்கள்...அதாவது வெற்றி வாய்ப்பை இழப்பார்கள் 

அப்படியொரு நிலைமை ஏற்பட்டால்
நா த கட்சியின் அழிவுதான் எஞ்சியிருக்கும்

அண்ணா நான்  அடிக்கடி கூறுவது    ஒன்றுதான்
திராவிடக் கொள்கை வேறு தமிழ்த் தேசியக் கொள்கை வேறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இனவெறியை வெறுக்கும் தமிழ்நாட்டின் 93.15 வீதம் மக்களும் சீமானை மகிந்தவாக பார்க்கிறார்கள்.

 தமிழர் நாடு தமிழர் உரிமை என சொன்னால் இனவாதமா?

இது பௌத்த நாடு. இது சிங்கள நாடு என செய்திகள் வரும் போது உங்கள் கருத்தை காணவில்லையே!!!! ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழகன் said:

**** 

கடந்த தேர்தலில் திமுக பெற்ற சீட்டுகளை விட 15-20 சீட்டுத்தான் குறைவாக இந்த தடவை அதிமுக எடுத்துள்ளது. திமுக ஒரு சீட்டு மட்டும் எடுத்து வாஷ் அவுட் ஆன தேர்தலின் பின்பும் ஆட்சியை பிடித்தும் உள்ளது.

சொல்லப் போனால் இது திமுகவிற்கு பெரிய வெற்றி ஒன்றும் இல்லை. நாம் மட்டும் அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால் தொங்கு சட்டசபை வந்திருக்க கூடும். அதில் தீர்மானிக்கும் சக்தியாக நாம் இருந்து இருப்போம்.

அடுத்த 2024,26 தேர்தல்களில் நிச்சயம் அதிமுக, பாஜக, பாமக ஒரு பலம் மிக்க கூட்டணியாக தொடரும். 

நாம் மறுபடியும் தனித்து போட்டியிட்டு தீம்காவை வெல்ல வழி சமைக்க வேண்டுமா?

நாம் இயக்கமாக இருந்து கட்சியாக மாற்றம் கண்டது ஆட்சி அதிகாரத்தை அடைந்து மாற்றத்தை ஏற்படுத்த அல்லவா?

***** ********* கூட்டு வைத்த தே தி மு.க வுக்கு நடந்த கதி தெரியுமல்லவா??

37 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இனவெறியை வெறுக்கும் தமிழ்நாட்டின் 93.15 வீதம் மக்களும் சீமானை மகிந்தவாக பார்க்கிறார்கள்.

தி மு.க வின் சாதிய கட்சிகளின் கூட்டு பற்றி அண்ணாச்சியின் கருத்து என்ன??
 
7 minutes ago, nunavilan said:

***** ********* கூட்டு வைத்த தே தி மு.க வுக்கு நடந்த கதி தெரியுமல்லவா??

தி மு.க வின் சாதிய கட்சிகளின் கூட்டு பற்றி அண்ணாச்சியின் கருத்து என்ன??
 
சொல்ல மாட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

***** ********* கூட்டு வைத்த தே தி மு.க வுக்கு நடந்த கதி தெரியுமல்லவா??

தெரியும். ஆனால் விசயகாந்த் உடல்நிலை மோசமாகாது இருந்தால் இப்படி நடந்திருக்குமா? கூட்டு வைக்காமல் போனால் இன்னும் எத்தனை வருடத்துக்கு தொடர்ந்து 234 தொகுதியிலும் தனித்து போட்டி இட முடியும்?

இவர்கள் எவ்வளவுதான் கத்தி மாய்ந்தாலும் கணிசமான வாக்கு எடுத்தாலும் மறு முகாமோடு சேராதவரை இவர்களால் எமக்கு தொந்தரவும் இல்லை, பிரயோஜனமும் இல்லை என நம்மை தவிர்த்து அரசியல் நடந்தால் நாம் தேர்தல் அரசியலில் நாம் ஈடுபட்டுத்தான் என்ன பலன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நாம் தமிழர் கட்சி அதிமுக உடன் கூட்டு வைத்தால்  திமுக நிச்சயம் வெல்லும்  எனெனில்...தமிழகத்தில். 100தொடக்கம்150 சட்டமன்றத்தொகுதிகளில் 20000தொடக்கம் 50000வரை தெலுக்கரின் வாக்குகளுண்டு. தெலுக்கர் ஒருபோதும் நாம தமிழர் கட்சிக்கோ...நாம் தமிழர் கூட்டணிக்கோ வாக்கு அளிக்கமாட்டார்கள்  இந்த தெலுக்கர் வாக்குகளை  நாம் திழர் கட்சி பெறுமாயின்  வெற்றி மிக இலகுவாகும்  ஆனால் தெலுங்கர் சீமானை. மகிந்தவாகப் பார்க்கிறார்கள் இந்த தெலுக்கு வாக்குகள்  வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகளாகும்

அது ஏன் என்று புரியவில்லை. எனக்கு மட்டும் இங்கே சாதிகள் குடிகள் பற்றி எழுத கடும் தடை வகுத்துள்ளார்கள்.

உங்களுக்கு பதில் இட்டாலும் என்னை அது மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும்.

ஆனால் தமிழ்நாட்டில் சாதி அடிப்படையில்தான் ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு சீட்டையும் முடிவாக்குவது வழமை.

பெரிய தலைவர்கள் சினிமா பிரபலங்களின் சீட்டு மட்டுமே விதிவிலக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, nunavilan said:

***** ********* கூட்டு வைத்த தே தி மு.க வுக்கு நடந்த கதி தெரியுமல்லவா??

திருப்பதிக்கே லட்டு. 😁

ஐ மீன் கருத்துக்கள நிர்வாகத்திலை இருக்கிறவருக்கே நியாயினி ஆப்பு வைச்சிருக்கிறா....😜

எல்லாம் பகிடிக்கே...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழகன் said:

தெரியும். ஆனால் விசயகாந்த் உடல்நிலை மோசமாகாது இருந்தால் இப்படி நடந்திருக்குமா? கூட்டு வைக்காமல் போனால் இன்னும் எத்தனை வருடத்துக்கு தொடர்ந்து 234 தொகுதியிலும் தனித்து போட்டி இட முடியும்?

இவர்கள் எவ்வளவுதான் கத்தி மாய்ந்தாலும் கணிசமான வாக்கு எடுத்தாலும் மறு முகாமோடு சேராதவரை இவர்களால் எமக்கு தொந்தரவும் இல்லை, பிரயோஜனமும் இல்லை என நம்மை தவிர்த்து அரசியல் நடந்தால் நாம் தேர்தல் அரசியலில் நாம் ஈடுபட்டுத்தான் என்ன பலன்?

சேர்ந்தால் உள்ளதும் இல்லாமல் போகும் என்பது தான் யதார்த்தம்.

1 minute ago, குமாரசாமி said:

திருப்பதிக்கே லட்டு. 😁

ஐ மீன் கருத்துக்கள நிர்வாகத்திலை இருக்கிறவருக்கே நியாயினி ஆப்பு வைச்சிருக்கிறா....😜

எல்லாம் பகிடிக்கே...:cool:

சுய தணிக்கை.😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, nunavilan said:

சுய தணிக்கை.😜

தெரிந்தே எழுதினேன். 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.