Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுத்தால் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் - அரசாங்கத்தை எச்சரிக்கிறார் சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

நாட்டை விட்டு ஓடிப்போன சில்லறைகள் சம்பந்தருக்கு  துரோகி பட்டம் கொடுத்து  திட்டிக்கொண்டே இருந்த போதிலும்  தாயகத்தில் திருகோணமலை தொகுதி மக்கள் 39000 வாக்குகள் வழங்கி அவரை கடந்த தேர்தலிலும்  தேர்தெடுத்து சிலருக்கு வயித்தெரிச்சலை கொடுத்திருக்கிறால்கள். 😂😂😂😂😂😂😂😂 

சம்பந்தரை சுயேட்சையாக  நின்று 39000 வேண்டாம் 390 வாக்குகள் எடுத்து காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம்.🙃

  • Replies 196
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பிழம்பு said:

sampanthan.jpg

sampanthan.jpg

Vadivelu Vadivelu Comedy GIF - Vadivelu VadiveluComedy VadiveluShocking -  Discover & Share GIFs   arunprasad on Twitter: "Enna maati vidura maathiri irukku...Soona paana  soosagama irukka vendiya neram ithu 😁… https://t.co/KKm28I9raf"

வீரகேசரி போட்ட படம், குறும்பின்... உச்சக்  கட்டம். 
பின்னால் இருந்து, குலைக்கும் கிழவனுக்கு... 
வெள்ளை வான்.. (பாயாசம்
(பாய்சன்) காய்ச்சி விடுவமா தம்பி) என்று கேட்பது போல் உள்ளது. :grin:

சம்பந்தன்  ஐயா... நீங்கள், சொறி லங்காவின் எதிர்க் கட்சித்  தலைவராக இருந்த போது...
தமிழருக்கு செய்ய... நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தது. 

அந்த நேரம்... உங்கள் சாணக்கிய அரசியலை பயன் படுத்தாமல்,
சொந்த நலனில்... அதிக அக்கறை காட்டியதை நாம் மறக்கவில்லை.  

இப்ப வந்து... "சவுண்டு" கொடுத்து, 
தமிழர்களை... "கூழ்  முட்டை  மடையன்" ஆக்க வேண்டாம்.
எங்காவது போய்... ஒய்வு எடுங்கப்பு.  😎

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தள்ளாத வயதிலும், பொல்லாத புலியாக பாயப்போறார்.... எதுக்கும் விலத்தி நிப்பம்... 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

தமிழ் ஈழம் என்ற எண்ணக்கரு அது உருவான காலம் தொட்டே வீழ்சசி போக்கிலேயே தொடர்ந்து சென்றது என்பது வெளிப்படையான உண்மை. புலிகள் இராணுவ வெற்றிகளை அடைந்து உச்சக்கட்ட இராணுவ பலத்தில் இருந்த 2001 காலப் பகுதியில் கூட தமிழீழம் என்ற எண்ணக்கரு உலகில் படுதோல்வி நிலையிலேயே இருந்தது. கிளிநொச்சி சென்ற அத்தனை மேற்குலக ராஜதந்திரிகளும் தமிழ்ஈழத்தை கைவிட்டு ஜதார்தத தீர்வுக்கு போகுமாறே புலிகளை வலியுறுத்தினர்.

அந்த ஜதார்ததத்தை புரியாத   அரசியல் தீர்மானங்கள் இன்று தமிழ் ஈழம் என்ற வார்ததையை காமடியாக மாற்றிவிட்டது.  அகவே தமிழ் ஈழம் 70 வீதம் வெற்றி பெற்றது என்ற உங்கள் காமடிக் கருத்தை primary படிக்கும் பிள்ளைகள் அது படித்து முடித்து Oberstufe போக முதல் கூறுங்கள். ஏனென்றால் Oberstufe போனபின் அதை கேட்டு சிரிக்கக்கூடும். 😂 

அதாவது... ருல்ப்பன், உங்களுக்கு... 
"தமிழ் ஈழம்"  என்ற சொல்லை கேட்டாலே...  "அலர்ஜி"  அப்படித்தானே... ⁉️

தயவு செய்து... ஆம் / இல்லை  என்ற ஒரு வரியில் பதில் சொல்லவும்.
அதன் பின்... உங்களுடன், எப்படி விவாதிப்பது என்று...
நாம், முடிவு செய்வோம். 
:)

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

அதாவது... ருல்ப்பன், உங்களுக்கு... 
"தமிழ் ஈழம்"  என்ற சொல்லை கேட்டாலே...  "அலர்ஜி"  அப்படித்தானே... ⁉️

தயவு செய்து... ஆம் / இல்லை  என்ற ஒரு வரியில் பதில் சொல்லவும்.
அதன் பின்... உங்களுடன், எப்படி விவாதிப்பது என்று...
நாம், முடிவு செய்வோம். 
:)

எப்படி சொல்வது என்னத்தை சொல்வது, பந்தி பந்தியாக இனி வரும்

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

அதாவது... ருல்ப்பன், உங்களுக்கு... 
"தமிழ் ஈழம்"  என்ற சொல்லை கேட்டாலே...  "அலர்ஜி"  அப்படித்தானே... ⁉️

தயவு செய்து... ஆம் / இல்லை  என்ற ஒரு வரியில் பதில் சொல்லவும்.
அதன் பின்... உங்களுடன், எப்படி விவாதிப்பது என்று...
நாம், முடிவு செய்வோம். 
:)

டாக்குத்தர் படிப்பு படிக்க வெளிக்கிட்டனான்.... ஆரம்பத்தில இருந்தே தோல்வி எண்டு தெரின்சதால, வீட்டில்லை பிடித்து, சவூதிக்கு அனுப்பிப் போட்டினம்.

உங்கை வெயிலில படுற கஸ்டத்துக்கு, பேசாம ஊரிலை, படிப்பே வேணாம் எண்டு, மாட்டை, ஆட்டை மேச்சுக் கொண்டு சிவனே எண்டு இருந்திருக்கலாம்.

கோதாரி  பிடிச்ச டாக்குத்தர் படிப்பு...  🙄

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

எப்படி சொல்வது என்னத்தை சொல்வது, பந்தி பந்தியாக இனி வரும்

இனி சீனலங்கா தீர்வு  வைத்திருக்கு என்றா???

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இனி சீனலங்கா தீர்வு  வைத்திருக்கு என்றா???

அது பின்னர் வேறு ஒரு தலைப்பில் விலாவாரியாக  விளக்கப்படும். அது வரை stay tuned.😀

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகாலத்தில் எமது ஆயுதபோராட்டத்தை அங்கீகரிக்க மறுத்த சர்வதேசம் எமது பக்க நியாயங்களை செவி கொடுத்து கேட்கவில்லை.

சர்வதேசம் தமிழர் தரப்பிலிருந்து விரும்புவது ஜனநாயக அணுகுமுறை மட்டும்தான்  என்றால், 

 இப்போது ஜனநாயகவழியில் தெரிவு செய்யப்பட்ட இவர்கள் சர்வதேசரீதியில் ராஜதந்திரமுறையில் அணுகாமல், சும்மா பாரதூரமான விளைவுகள் வரும், பாரம் தூக்கினா கேணியா வரும் என்று சிங்களவனுக்கு மட்டும் கேட்கும்படி அடிக்கடி பேசி வண்டியோட்டுவது,

தமிழ் தலைமைகள் காலம் காலமாக  அரசு பங்களா சொகுசு வண்டியோடுகூடிய  தமது இருப்பை தக்கவைக்க வீர உரைகள்மூலம்  தமிழர்களை உசுப்பேத்தி கையாளும் அதே கடந்தகால பம்மாத்து வேலைகள்தான்.

எங்கோ இருக்கும் பாலஸ்தீன பிரச்சனையை இலங்கையிலிருந்தபடி சர்வதேச அளவில் கொண்டு செல்கிறார்கள் முஸ்லீம் தலைமைகள்.

இலங்கைக்குள் எமக்கு நடக்கும் அநியாயங்களை இலங்கைக்குள்ளேயே அறிக்கைவிட்டு எம்மை ஏமாற்றுகிறார்கள் தமிழ் தலைமைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

துலப்பன் அய்யாவுக்கு விளக்கப்படுத்த இந்த படங்கள் போதுமே... 

Dutch Fort of Jaffna | Jaffna Fort | Jaffna Fort in Jaffna | Dutch  Fortresses in Sri Lanka

தீவில், வன்னி ராஜ்ஜியம், கண்டி ராஜ்ஜியம் தவிர்த்து, தமிழ், சிங்கள பகுதிகளை தனியாக ஆண்ட போர்த்துக்கேயர், தம்மையும் கிளப்பி அனுப்ப, ஒல்லாந்தர் வருவார்கள் என்று நினைக்காமல், கோட்டை கொத்தளங்களை கட்டினார்கள்.

கத்தோலிக்கர்களான போர்த்துக்கேயர் கோட்டை கொத்தளங்களை, சைத்தான் வாசம் செய்வது என்று சீண்டாது, புரட்டஸ்தாந்து ஒல்லாந்தர் மிகப்பிரமாண்டமான கோட்டை கொத்தளங்களை அமைத்தார்கள். ஒல்லாந்துக்கு வெளியே அவர்களது மிக பெரிய, கோட்டை கொத்தளம் யாழ்ப்பாணத்தில் அமைந்தது. ஊர்காவல்துறையில் கடல் நடுவே அமைத்தார்கள். தம்மை அசைக்கவே முடியாது என்று நினைத்தார்கள்.

ஆனால், பிரித்தானியர்கள், ஒரு குண்டு கூட சேதம் இல்லாமல், கவுரவத்துடன் கிளம்புங்கள் என்று சொல்லி, அனைத்தையும் எடுத்துக் கொண்டார்கள்.

பிரித்தானியருக்கு, ஐரோப்பாவில், ஹிட்லர் வைச்சான் பாருங்கோ ஆப்பினை.

ஆக, நாளை வரக்கூடிய தோல்விக்காக, இன்றய முயல்வினை கை விடக்கூடாது என்பது பாடம். 2015ல் தோல்வி அடைந்த மகிந்த, சாரத்துடன், கவலையாக, இருந்த கோலம் உலகமே பார்த்தது.

சரிதான், நம்ம கதை முடிந்தது என்று இருந்தாரா? இன்று வந்த தோல்வி, நிரந்தரம் இல்லை, அது நாளைய வெற்றியின் அடித்தளம்.

புலிகள், தம்மால் முடிந்ததை செய்தார்கள், மிகுதி அடுத்த தலைமுறையின் கையில்.

1757ம் ஆண்டு, பிரெஞ்சு படைகள், மொகலாய அரசரை எதிர்த்து சண்டையிட கல்கத்தாவுக்கு  சென்னையில் இருந்து, போரிட கிளம்பிச் சென்றான், கிளைவ் ராபர்ட்ஸ். மிகப் பலம் பொருந்திய எதிரிகள் தொகை 50,000 மேல். அவர்கள் பகுதி வேறு. 

3000 தமிழ் வீரர்கள், 800 ஐரோப்பிய வீரர்கள். கேணல் பால்ராஜ் ரக யுக்தி... வென்றான். கொல்கத்தா, இந்தியாவின் முதல் தலைநகரமாகியது.

பிரித்தானிய பேரரசின் கிரீடத்தில் இந்திய முத்துக்கான விதையினை அவன் போட்டான். சில வருடங்களிலேயே, கப்பமாக வாங்கிய பெரும் பணத்துடன், இங்கிலாந்து திரும்பி விட்டான். அமெரிக்காவில் நடந்த சண்டைக்கு தலைமை தாங்க போகுமாறு, பிரிட்டிஷ் அரசு கேட்க மறுத்து விட்டான்.

ஆனால், அவன் ஆரம்பித்ததை ஏனையவர்களே முடித்தார்கள். அவனே நின்று தொடர்ந்து யுத்தம் செய்யவில்லை என்று சொல்ல முடியாதே. காலம் அந்த நேரத்தில் அவனை பயன்படுத்தியது. அவ்வளவு தான். 
தோல்விதான் என்று முதலே நினைத்திருந்தால், இந்தியாவும் இல்லை, இலங்கையும் இல்லை.  🙏
   
Edited by Nathamuni

3 hours ago, தமிழ் சிறி said:

அதாவது... ருல்ப்பன், உங்களுக்கு... 
"தமிழ் ஈழம்"  என்ற சொல்லை கேட்டாலே...  "அலர்ஜி"  அப்படித்தானே... ⁉️

தயவு செய்து... ஆம் / இல்லை  என்ற ஒரு வரியில் பதில் சொல்லவும்.
அதன் பின்... உங்களுடன், எப்படி விவாதிப்பது என்று...
நாம், முடிவு செய்வோம். 
:)

இன்றைய நிலையில் தமிழ ஈழம் என்பது அலர்ஜி அல்ல அது ஒரு காமடி.

4 hours ago, nunavilan said:

சம்பந்தரை சுயேட்சையாக  நின்று 39000 வேண்டாம் 390 வாக்குகள் எடுத்து காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம்.🙃

சம்பந்தர் 390 வாக்குக்கள் வாங்குகிறாரோ 39 வாக்குகள் வாங்கவாரோ என்பதல்ல இங்கு விவாதம். சம்பந்தர் ஒரு சாதாரண அரசியல்வாதி. சம்பந்தர் ஏதோ பெரிய அரசியல் சாணக்கிய தலைவர் அல்ல. ஏதோ தற்செயலாக  ரிஎன்ஏ  தலைவராக்கப்பட்டார்.  அவரால் தமிழருக்கு  தீர்வு எடுத்து கொடுக்க முடியாது என்பது இலங்கை அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை. அதுவும்  புலிகளை முற்றாக அழித்து வெற்றி எக்காளத்தின் உச்சத்தில் இருந்த ஒரு அரசாங்கத்திடம் இருந்து சம்பந்தர் அல்ல வேறு எவர் இருந்தாலும் ஒன்றும் வெட்டி புடுங்க முடியாது. உள்ளதையும் பறி கொடுக்க தான் முடியும்.  அப்படியிருக்க சம்பந்தர் என்ற நபரை பலிக்கடாவாக்கி  இங்கு தவணை முறையில்  தனிப்பட்ட தாக்குதல்களை மட்டும் நடத்தி மகிழும்  மன நோயைதான் நான் எனது முதல் கருத்தில் சுட்டிக்காட்டினேன்.   

30 வருடமாக மற்றறவர்கள் எல்லோரையும் தடை செய்து போராட்டத்தை மொத்த குத்தகைக்கு எடுத்த ஒரு விடுதலை அமைப்பாலேயே ஒன்றும் வெட்டி புடுங்க முடியாத போது சம்பந்தர் என்ற சிறு அரசியல்வாதி எம்மாத்திரம். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கபட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யபட்ட பின்னர் கூட அவர்கள் ஒரு ஏவலாளிக்கள் போல தான் நடத்தப்பட்டனர் எனபதை பின்வரும் விடியோ உரையாடலில் அறிந்து கொள்ளுங்கள். எல்லாம் நாங்கள் தான். எங்களுக்கு தான் எல்லா உரிமையும் உள்ளது. சமாதானத்தை முன்னெடுப்பது நாங்கள் தான்.  இவயள நடத்துறதுதம் நாங்கள் தான். அது தான் கூறுகிறேன்

நடத்திய அந்த எஜமானர்களாலேயே முடியாத ஒன்றை அவர்களின் ஏவலாளிகளால் முடியுமா? இது காமடி இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, tulpen said:

இன்றைய நிலையில் தமிழ ஈழம் என்பது அலர்ஜி அல்ல அது ஒரு காமடி.

நேற்றைய (2009 முன்) நிலையில்... அது ஒரு எல்லாத் தமிழர்களின் ஆசை.

அதற்கும்... விதண்டா வாதம், உங்களிடமிருந்து வரும் என்று தெரியும்.

ஆனாலும்... உங்களை, மதித்து... பதில் அளிக்க வேண்டும்  என  மனம் விரும்புகின்றது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இன்றைய நிலையில் தமிழ ஈழம் என்பது அலர்ஜி அல்ல அது ஒரு காமடி.

அப்படித்தான் கிழக்கு திமோரில், இந்தினேசியாவின் ஜகார்தாவில் இருந்து அரசால் அனுப்பபட்ட, காடையர்கள் அங்குள்ள மக்களை தாக்கி, கொலை செய்த போது, கிழக்கு தீமோர் ஒரு கனவு, காமடி என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.

சில மாதங்களிலே ஐநா, உள்ளே புகுந்து, குடியொப்பம் வைக்க, 95% வெற்றியுடன் நாடு பிரிந்தது.

1 hour ago, தமிழ் சிறி said:

நேற்றைய (2009 முன்) நிலையில்... அது ஒரு எல்லாத் தமிழர்களின் ஆசை.

அதற்கும்... விதண்டா வாதம், உங்களிடமிருந்து வரும் என்று தெரியும்.

ஆனாலும்... உங்களை, மதித்து... பதில் அளிக்க வேண்டும்  என  மனம் விரும்புகின்றது.  

இதில் விதண்டாவாதம் எதுவும் இல்லை தமிழ் சிறி. நேரடியாகவே பதில் கூறியுள்ளேன்.  2009 ன் முன் தமிழீழம் எம் எல்லோருக்கும் ஒரு  ஆசை தான். அதற்காக "பெற்றோல் மாக்ஸ் லைட்டே தான் வேணும்", என்று இல்லை. 😂

48 minutes ago, Nathamuni said:

அப்படித்தான் கிழக்கு திமோரில், இந்தினேசியாவின் ஜகார்தாவில் இருந்து அரசால் அனுப்பபட்ட, காடையர்கள் அங்குள்ள மக்களை தாக்கி, கொலை செய்த போது, கிழக்கு தீமோர் ஒரு கனவு, காமடி என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.

சில மாதங்களிலே ஐநா, உள்ளே புகுந்து, குடியொப்பம் வைக்க, 95% வெற்றியுடன் நாடு பிரிந்தது.

 அட அதையும் இதையும் ஒப்பிட்டி நீங்கள் வேற குறுக்கால மறுக்கால காமடி பண்ணிக்கிட்டு. போங்க சார். வேலை வெட்டி இருந்தா பாருங்க.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

 அட அதையும் இதையும் ஒப்பிட்டி நீங்கள் வேற குறுக்கால மறுக்கால காமடி பண்ணிக்கிட்டு. போங்க சார். வேலை வெட்டி இருந்தா பாருங்க.

நீங்கள் தான் அய்யா, பெரும் காமடி பண்ணுகிறீர்கள்.

இங்கே யாராவது, உங்கள் கருத்துடன் ஒத்து போனால் சொல்லுங்கள், ஓடி விடுகிறேன்.

7 minutes ago, Nathamuni said:

நீங்கள் தான் அய்யா, பெரும் காமடி பண்ணுகிறீர்கள்.

இங்கே யாராவது, உங்கள் கருத்துடன் ஒத்து போனால் சொல்லுங்கள், ஓடி விடுகிறேன்.

நீங்கள் ஓடப் போவதில்லை என்று தெரியும் நாதமுனி ஐயா. சும்மா ஜோக்கா சொன்னேன். கொரோனாவால Saturday party இல்லாததால நாங்கள் உங்களோட எல்லாம் இங்க  இழுபட வேண்டி இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

இதில் விதண்டாவாதம் எதுவும் இல்லை தமிழ் சிறி. நேரடியாகவே பதில் கூறியுள்ளேன்.  2009 ன் முன் தமிழீழம் எம் எல்லோருக்கும் ஒரு  ஆசை தான். அதற்காக "பெற்றோல் மாக்ஸ் லைட்டே தான் வேணும்", என்று இல்லை. 😂

 அட அதையும் இதையும் ஒப்பிட்டி நீங்கள் வேற குறுக்கால மறுக்கால காமடி பண்ணிக்கிட்டு. போங்க சார். வேலை வெட்டி இருந்தா பாருங்க.

7 minutes ago, Nathamuni said:

நீங்கள் தான் அய்யா, பெரும் காமடி பண்ணுகிறீர்கள்.

இங்கே யாராவது, உங்கள் கருத்துடன் ஒத்து போனால் சொல்லுங்கள், ஓடி விடுகிறேன்.

நாதம்ஸ்... நானும், யாழ். களத்தை  விட்டே... ஓடி விடுகின்றேன்.
துல்ப்பன்.... தனியே, நின்று புலம்ப வேண்டிய நிலைமை வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நீங்கள் ஓடப் போவதில்லை என்று தெரியும் நாதமுனி ஐயா. சும்மா ஜோக்கா சொன்னேன். கொரோனாவால Saturday party இல்லாததால நாங்கள் உங்களோட எல்லாம் இங்க  இழுபட வேண்டி இருக்கு. 

ஆமாம், நான் ஓடப்போவதில்லை, ஆனால் முடிந்தளவுக்கு, உங்கள் பதிவுகளை தவிர்க்கிறேன். இன்று உரையாட முனைந்தால், உனக்கெல்லாம், என்னுடன் விவாதிக்க என்ன தகுதி இருக்கிறது என்பதுபோல, உணர வைப்பதால், ஓடப்போகிறேன்.

வாறன் போட்டு..🙄

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, tulpen said:

சம்பந்தர் 390 வாக்குக்கள் வாங்குகிறாரோ 39 வாக்குகள் வாங்கவாரோ என்பதல்ல இங்கு விவாதம். சம்பந்தர் ஒரு சாதாரண அரசியல்வாதி. சம்பந்தர் ஏதோ பெரிய அரசியல் சாணக்கிய தலைவர் அல்ல. ஏதோ தற்செயலாக  ரிஎன்ஏ  தலைவராக்கப்பட்டார்.  அவரால் தமிழருக்கு  தீர்வு எடுத்து கொடுக்க முடியாது என்பது இலங்கை அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை. அதுவும்  புலிகளை முற்றாக அழித்து வெற்றி எக்காளத்தின் உச்சத்தில் இருந்த ஒரு அரசாங்கத்திடம் இருந்து சம்பந்தர் அல்ல வேறு எவர் இருந்தாலும் ஒன்றும் வெட்டி புடுங்க முடியாது. உள்ளதையும் பறி கொடுக்க தான் முடியும்.  அப்படியிருக்க சம்பந்தர் என்ற நபரை பலிக்கடாவாக்கி  இங்கு தவணை முறையில்  தனிப்பட்ட தாக்குதல்களை மட்டும் நடத்தி மகிழும்  மன நோயைதான் நான் எனது முதல் கருத்தில் சுட்டிக்காட்டினேன்.   

30 வருடமாக மற்றறவர்கள் எல்லோரையும் தடை செய்து போராட்டத்தை மொத்த குத்தகைக்கு எடுத்த ஒரு விடுதலை அமைப்பாலேயே ஒன்றும் வெட்டி புடுங்க முடியாத போது சம்பந்தர் என்ற சிறு அரசியல்வாதி எம்மாத்திரம். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கபட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யபட்ட பின்னர் கூட அவர்கள் ஒரு ஏவலாளிக்கள் போல தான் நடத்தப்பட்டனர் எனபதை பின்வரும் விடியோ உரையாடலில் அறிந்து கொள்ளுங்கள். எல்லாம் நாங்கள் தான். எங்களுக்கு தான் எல்லா உரிமையும் உள்ளது. சமாதானத்தை முன்னெடுப்பது நாங்கள் தான்.  இவயள நடத்துறதுதம் நாங்கள் தான். அது தான் கூறுகிறேன்

நடத்திய அந்த எஜமானர்களாலேயே முடியாத ஒன்றை அவர்களின் ஏவலாளிகளால் முடியுமா? இது காமடி இல்லையா?

விடுதலை புலிகள் போன்ற  விடுதலை இயக்கங்களை  இரத்த பொட்டு வைத்து உருவாக்கிவர்கள் சம்பந்தர் இருந்த கட்சியின் தானை தலைவன் அமிர் போன்றவர்கள் என்பதை அறியாமல் இருப்பது அல்லது நடிப்பது ஏன் ? இவர்கள் தான் சுயநலவாதிகள் தான் தப்பி மற்றவனுக்கு கையை காட்டி விடும்  (தறு) தலைகள். இதை முதலில்  புரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் புலிகள் மேல் பழியை போட்டு தப்பும் அதே மரபணு உங்களில் இருப்பது போல் எ(ம)னக்கு பலத்த சந்தேகம் உள்ளது.

23 minutes ago, nunavilan said:

நுணா, இங்கு  மேற்கோள் காட்டப்பட்ட  நீங்கள்  பழைய தமிழரசு கட்சி சம்பந்தமாக கூறிய கருத்துடன்  நான் முழுமையாக ஒத்துப்போகிறேன். இதனை எனது முன்னைய கருத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். தமிழர்களின் தோல்விக்கு புலிகள் உட்பட அனைத்து தலைமைகளும் பொறுப்பு என்ற தர்ககரீதியான உண்மையை கூட உங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லையா? 

அதனால் தான்  தான் எமது எதிர்கால சந்ததி இந்த இருவகை தலைமைகளின் அரசியலை முன்னுதாரணமாக கொள்ளாது புதிய வழியில் சிந்தித்து தமக்கான அரசியல் உரிமையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். 

நுணா இறுதியாக, எனது  மரபணுவை எனது தாய் தந்தையர்கள் தந்துள்ளனர். ஆகவே  எனது மரபணுபற்றி நீங்கள் ஆராயவேண்டியது  இல்லை. கருத்துக்கள நிர்வாகத்தால் உறுப்பினர்களின் மரபணு ஆராய்சி நடத்த உங்களுக்கு உரிமை தரப்பட்டுள்ளதா? 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
Quote

எக்காளத்தின் உச்சத்தில்

Quote

வெட்டி புடுங்க முடியாது

Quote

மன நோயை

Quote

 மொத்த குத்தகைக்கு எடுத்த ஒரு விடுதலை அமைப்பாலேயே ஒன்றும் வெட்டி புடுங்க முடியாத

Quote

ஏவலாளிக்கள் 

இவை 30 வருடங்களாக விடுதலை போரை நடாத்தியவர்களை பார்த்து சிங்களவர்களே  கேட்க மாட்டார்கள். அதெப்படி உங்களால் முடிந்தது என்பதால் ஏற்பட்ட மன குமுறல் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

  இவை 30 வருடங்களாக விடுதலை போரை நடாத்தியவர்களை பார்த்து சிங்களவர்களே  கேட்க மாட்டார்கள். அதெப்படி உங்களால் முடிந்தது என்பதால் ஏற்பட்ட மன குமுறல் தான்.

ஒரு மனிதனின்... "இழி நிலை" என்பது...
தன்னுடைய... இனத்தை நோக்கியே... கேள்விக் கணைகளை வீசுவது.

இது... கோடாரிக் காம்புகளின் செயல்.
நல்லவர்கள் போல்... நடிப்பார்கள். அவ்வளவும்... விஷம்.

இந்த... மனிதர்கள், யாழ். களத்தில்... சுதந்திரமாக வலம் வருகின்றார்கள்.

அவர்களுக்கு... ஏற்ற, மொழியில்... பதில் கருத்து எழுதிய...
பல கருத்தாளர்கள்,  மிகவும் வேதனைக்குள்ளாகி....
யாழ். களத்திற்கு  வராமல் இருக்கின்றார்கள்.

இந்த... நடைமுறை... விரைவில் மாற்றப் பட வேண்டும்.

ஒரு... நிர்வாக உறுப்பினரின்... தான் தோன்றி   செயலுக்காக,
நாம்... யாழ். களத்தை,  நிர்க்கதி  ஆக்க முடியாது. 

4 minutes ago, nunavilan said:

இவை 30 வருடங்களாக விடுதலை போரை நடாத்தியவர்களை பார்த்து சிங்களவர்களே  கேட்க மாட்டார்கள். அதெப்படி உங்களால் முடிந்தது என்பதால் ஏற்பட்ட மன குமுறல் தான்.

நுணா, இப்படி சொல்ல்லாக பிரித்து எழுதாமல்  முழு வசனத்தையும் அது தரும் பொருளையும் புரிந்து பதில் கூறுவதே ஒரு கருத்தாளனுக்கு அழகு.   அதை விடுத்த சொற்களை பிரித்து எடுத்து அதை உதாரணமாக காட்டுவது  சிறப்பான விவாதம் அல்ல.

வெற்றி எக்காளத்தில் இருக்கும்  கோத்தா மகிந்த அரசு எமது உரிமைகளை தர மறுப்பதாக  நான் கூறியது தவறா?

"ஏவலாளிக்கள் போல"  என்பதை விடியோ பதிவை கேட்கும் தமிழ் மொழியறிவு உள்ள அனைவரும் உணர்வார்கள். 

அரசியலில்  ஈடுடபடவும் போராடவும்  மற்ற அனைவருக்கும்  தடை விதித்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த‍து ச‍ரி என்றால் அக்காலபகுதியில் நடைபெற்ற அரசியல் தீர்மானங்களுக்கு முழு பொறுப்பும் அவர்களுக்கே உண்டு என்பது சாதாணமானது தானே. இது உலக வழமை தானே. இது எல்லோருக்கும் பொருந்தும் தானே.  இந்த கருத்தில் என்ன தவறு உண்டு. 

நான் பல பதிவுகளில. தெளிவாக கூறினேன்.  அனைத்து தலைமைகளும் என்று. புலிகள் மட்டும் என்று எங்கும் கூறவில்லை. அப்படி கூறியதாக நீங்கள் கூறியது என்மீது பழி சுமத்த நீங்கள் உருவாக்கிய கற்பனை. 

3 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு மனிதனின்... "இழி நிலை" என்பது...
தன்னுடைய... இனத்தை நோக்கியே... கேள்விக் கணைகளை வீசுவது.

இது... கோடாரிக் காம்புகளின் செயல்.
நல்லவர்கள் போல்... நடிப்பார்கள். அவ்வளவும்... விஷம்.

இந்த... மனிதர்கள், யாழ். களத்தில்... சுதந்திரமாக வலம் வருகின்றார்கள்.

அவர்களுக்கு... ஏற்ற, மொழியில்... பதில் கருத்து எழுதிய...
பல கருத்தாளர்கள்,  மிகவும் வேதனைக்குள்ளாகி....
யாழ். களத்திற்கு  வராமல் இருக்கின்றார்கள்.

இந்த... நடைமுறை... விரைவில் மாற்றப் பட வேண்டும்.

ஒரு... நிர்வாக உறுப்பினரின்... தான் தோன்றி   செயலுக்காக,
நாம்... யாழ். களத்தை,  நிர்க்கதி  ஆக்க முடியாது. 

தமிழ் சிறி ஒரு மனிதனின் இழிநிலை என்பது தர்க்கரீதியாக  கருத்து களத்தில் விவாதிக்க முடியாத போது அவரை பார்த்து கோடரிகாம்பு, துரோகி என்று பழி கூறுவது.  கருத்து களம் என்பது சுதந்திரமாக கருத்தாடவே என்று நீங்களே சற்று முன்  கூறிவிட்டு இப்போது  ஒருதலை பட்சமாக செயற்படும்படி நிர்வாகத்தை கேட்கின்றீர்கள்.  இதே யாழ் களத்தில்  மக்கள் பிரதிநிதியான சம்மந்தரைபற்றி அரசியலுக்கு சம்பந்தமே இல்லாமல்  மிக மோசமான பல தனிப்பட்ட தாக்குதல்களை நீங்கள் மேற்கொண்டது ஒரு மனிதனின் இழிநிலை இல்லையா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.