Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாஜக பத்மா சேஷாத்ரி பள்ளியின் பாலியல் தொல்லை | அதிர வைக்கும் உண்மை பின்னணி | மதுவந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக பத்மா சேஷாத்ரி பள்ளியின் பாலியல் தொல்லை | அதிர வைக்கும் உண்மை பின்னணி | மதுவந்தி 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் புகாரில் ராஜகோபாலன் கைது!

 

spacer.png
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கே.கே.நகரிலுள்ள பிஎஸ்பிபி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் மீது மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகளை அனுப்புவது, ஆன்லைன் வகுப்பின்போது அரைகுறை ஆடையுடன் வருவது, தவறான நோக்கத்துடன் தொட்டு பேசுவது என பல்வேறு குற்றசாட்டுகளை முன்னாள் மாணவர்கள் அமைப்பு வைத்தது.

 

இதையடுத்து, ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். பிரச்சினை பெரிதாக வெடித்ததையடுத்து, ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடமும், ராஜகோபாலனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வுக்குட்படுத்தினர்.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, பள்ளி மாணவிகளுக்கு அனுப்பிய ஆபாச படம், குறுஞ்செய்திகளை ராஜகோபாலன் நீக்கியுள்ளார். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நீக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீண்டும் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கிட்டதட்ட 6 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளாக 11, 12 ஆம் வகுப்பு மாணவிகளிடம் வாட்ஸ் ஆப் மூலம் சாட் செய்து பாலியல் தொந்தரவு அளித்ததும், மாணவிகளிடம் அந்தரங்க போட்டோவை அனுப்ப வற்புறுத்தியதும், பள்ளியில் தன்னைப் போன்று மேலும் சில கருப்பு ஆடுகள் உள்ளதாக ராஜகோபாலன் கூறியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

பல மணி நேர விசாரணைக்கு பின்பு, ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்கள்  மூலம் புகார் அளிக்க முன்வர வேண்டும். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். எந்தவித அச்சுறுத்தலும் வராது என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் 9444772222 என்ற செல்போனில் தொடர்புக் கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

https://minnambalam.com/public/2021/05/25/13/psbb-teacher-rajagopalan-arrested

 

  • கருத்துக்கள உறவுகள்

இடுப்பிலை.... துவாயை, கட்டிக் கொண்டு...  “ஆன்லைன் வகுப்புகள்” நடத்தியவராம்.

தமிழ் நாட்டில்.... சரியான வெக்கை போலுள்ளது. வாத்தி, காத்தோட்டமாக இருக்கட்டும் என்று... துவாயை கட்டிக் கொண்டு வந்திருக்கிறார் போலுள்ளது. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜாலிக்காக செய்தேன், விபரீதத்தில் முடிந்து விட்டது'- விடிய விடிய நடந்த விசாரணையில் கதறிய ராஜகோபால்

'ஜாலிக்காக செய்தேன், விபரீதத்தில் முடிந்து விட்டது'- விடிய விடிய நடந்த விசாரணையில் கதறிய ராஜகோபால்!

 

ஆன்-லைன்’ வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சென்னை பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பால் பள்ளி-கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு ‘ஆன்-லைன்’ மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சென்னை கே.கே.நகரில் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ‘ஆன்-லைன்’ வழி கல்வியை தவறாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு இவர், ‘ஆன்-லைன்’ மூலம் பாடம் நடத்தும்போது, ‘அரைகுறை அடை அணிந்து கொண்டு மாணவிகளின் உடை, அழகை வர்ணிப்பதாகவும், ‘வாட்ஸ்-அப்’-பில் ஆபாசமான முறையில் தகவல் அனுப்பியும், செல்போனில் அநாகரீகமான முறையில் பேசியும் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும் ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டு வெளியானது.

மாணவர்-ஆசிரியர் என்ற புனிதமான உறவை தாண்டி, வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாணவிகளிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ராஜகோபாலனை ‘சஸ்பெண்ட்’ செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்துக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்த பள்ளி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ஒய்.ஜி.பார்த்தசாரதி நிறுவியது ஆகும். எனவே இந்த விவகாரம் குறித்து நடிகர் ஓய்.ஜி.மகேந்திரன், பள்ளி நிர்வாகத்துக்கு இ-மெயிலில் கடிதம் அனுப்பினார். அதில், ‘சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தவறு இருந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தாயார் உருவாக்கிய பள்ளிக்கு எந்தவிதமான தவறான பெயரும் ஏற்படாத வகையில் பள்ளி நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டும்’ என்றுக் கேட்டுக் கொண்டார்.

பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கல்வியாளர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி கருத்துகளை பதிவிட்டனர்.

இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய கல்வி துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலுக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதமும் அனுப்பினார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார் குறித்து பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி, அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, பத்ம சேஷாத்திரி பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரா, முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார். அப்போது, ஆசிரியர் ராஜகோபாலன் பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்தார். பள்ளி நிர்வாகிகள் தெரிவித்த விளக்கத்தை தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனரிடம் கல்வி அதிகாரி அனிதா அறிக்கையாக தாக்கல் செய்தார்.

இதற்கிடையே பள்ளி நிர்வாகம் சார்பில், பெற்றோர்களின் ‘வாட்ஸ்-அப்’ எண்ணிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், எப்போதும் மாணவர்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம். எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலனை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

பள்ளி மாணவிக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து அசோக்நகர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியும் நேரில் விசாரணை நடத்துவதற்காக நேற்று மதியம் பத்ம சேஷாத்திரி பள்ளிக்கு வருகை தந்தார்.

ஆனால் அவரது விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் போதுமான அளவில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ராஜகோபாலனை அவரது வீட்டில் இருந்து போலீசார் விசாரணைக்காக வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அவரது ‘லேப்-டாப்’, செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆசிரியர் ராஜகோபாலன் மீது முறைப்படி போலீசில் புகார் அளிக்கப்படவில்லை என்றாலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து அதிரடி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

ஆசிரியர் மீது பாலியல் புகார் - சென்னை பிஎஸ்பிபி பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து தியாகராய நகர் துணை ஆணையர் முன்னிலையில்  பிஎஸ்பிபி பள்ளி முதல்வர், தாளாளர்  இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

 ராஜகோபாலனிடம் கைப்பற்றப்பட்ட செல்போன், லேப்டாப்பில் இருந்து அழிக்கப்பட்ட பல குருஞ்செய்திகளையும், போட்டோக்களையும் சைபர் கிரைம் போலீசார் மூலம் மீட்டுள்ளனர். அதில் பல மாணவிகளுக்கு செல்பி அனுப்புவது, சினிமா அல்லது வெளியில் செல்லலாம் என குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள போலீசார், ராஜகோபாலிடம் இது குறித்து விசாரித்த போது ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். 

தன்னிடம் படித்த மாணவிகளிடம் வகுப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபடுவதும், இரட்டை அர்த்ததில் பேசுவதையும் தான் ஜாலியாக தான் செய்து வந்ததாகவும், இது இந்தளவிற்கு விபரீதத்தில் முடியும் என தான் எதிர்பார்க்கவில்லை என வாக்குமூலத்தில் ராஜகோபால் தெரிவித்துள்ளார். 

மேலும் விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி வந்ததாகவும், வாட்ஸ்அப்பில் சாட் செய்யும்படி மாணவிகளை கட்டாயப்படுத்தியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை அனுப்பும்படி வற்புறுத்தியதாகவும் ராஜகோபாலன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெர்வித்து உள்ளனர். 

இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் ஏன் ராஜகோபால் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜகோபாலுக்கு உடந்தையாக இருந்த புகாரில் மேலும் சில ஆசிரியர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகின்றனர்.

இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைதான ஆசிரியர், தனியார் பள்ளி நிர்வாகிக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் முன்னாள் மாணவி மற்றும் முதன்மைக் கல்வி அலுவலருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/05/25160956/I-did-it-for-fun-and-ended-up-in-disarray-Rajagopal.vpf

 

  • இணையவன் changed the title to பாஜக பத்மா சேஷாத்ரி பள்ளியின் பாலியல் தொல்லை | அதிர வைக்கும் உண்மை பின்னணி | மதுவந்தி
  • இணையவன் featured and unfeatured this topic
  • கருத்துக்கள உறவுகள்

ஏ ஆர் ரஹ்மானின் அப்பா திலீப்குமார் இறந்தவுடன் பீஸ் கட்ட முடியாது போனதும் அவரை பள்ளியை விட்டு அனுப்பிவிட்டு, அவர் பெரிய ஆள் ஆனதும், ஆஸ்கார் நாயகன் எங்கள் மாணவன் என விளம்பரம் செய்த கூட்டம்😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

ஏ ஆர் ரஹ்மானின் அப்பா திலீப்குமார் இறந்தவுடன் பீஸ் கட்ட முடியாது போனதும் அவரை பள்ளியை விட்டு அனுப்பிவிட்டு, அவர் பெரிய ஆள் ஆனதும், ஆஸ்கார் நாயகன் எங்கள் மாணவன் என விளம்பரம் செய்த கூட்டம்😡

அதுமாத்திரம் அல்ல, காசு இல்லையெனில் கோடம்பாக்கம் நடைபாதையில் இருந்து பிச்சை  எடுக்கும் படியும் கூறியள்ளார்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, zuma said:

அதுமாத்திரம் அல்ல, காசு இல்லையெனில் கோடம்பாக்கம் நடைபாதையில் இருந்து பிச்சை  எடுக்கும் படியும் கூறியள்ளார்கள்.

 

 

மநு நீதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, zuma said:

அதுமாத்திரம் அல்ல, காசு இல்லையெனில் கோடம்பாக்கம் நடைபாதையில் இருந்து பிச்சை  எடுக்கும் படியும் கூறியள்ளார்கள்.

அதனால் தான் தனி  முயற்சியால் ஆஸ்கார் விருது பெற்றுள்ளார்.
இப்படிக்கு
மதிவந்தி

7 hours ago, goshan_che said:

ஏ ஆர் ரஹ்மானின் அப்பா திலீப்குமார் இறந்தவுடன் பீஸ் கட்ட முடியாது போனதும் அவரை பள்ளியை விட்டு அனுப்பிவிட்டு, அவர் பெரிய ஆள் ஆனதும், ஆஸ்கார் நாயகன் எங்கள் மாணவன் என விளம்பரம் செய்த கூட்டம்😡

Goshan Che anna.

AR ரகுமானின் அப்பா திலீப்குமார் இல்லை. திலீப்குமார் என்பது AR ரகுமானின் இயற்பெயர் இஸ்லாம் மதத்துக்கு மாற முதல். AR ரகுமானின் அப்பா பெயர் சேகர் (முழுப்பெயர் தெரியாது). இவர் ஒரு பிரபல இசைக்கலைஞர் (கிற்றார் or வயலின்). சரி பார்க்கவும்.

இவர் இசைஞானி இளையராஜாவுக்குகூட  இசைக்கருவிகள் வாசித்துள்ளார். இதை இளையராஜா ஒரு மேடை இசை நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Shanthan_S said:

Goshan Che anna.

AR ரகுமானின் அப்பா திலீப்குமார் இல்லை. திலீப்குமார் என்பது AR ரகுமானின் இயற்பெயர் இஸ்லாம் மதத்துக்கு மாற முதல். AR ரகுமானின் அப்பா பெயர் சேகர் (முழுப்பெயர் தெரியாது). இவர் ஒரு பிரபல இசைக்கலைஞர் (கிற்றார் or வயலின்). சரி பார்க்கவும்.

இவர் இசைஞானி இளையராஜாவுக்குகூட  இசைக்கருவிகள் வாசித்துள்ளார். இதை இளையராஜா ஒரு மேடை இசை நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார்.

வணக்கம் சாந்தன். நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. எனக்கு இப்ப அடிக்கடி மூளையில ஷோர்ட் கொனெக்‌ஷன் ஆகுது🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் ராஜகோபாலனின் அதிர வைக்கும் லீலைகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் ராஜகோபாலனின் அதிர வைக்கும் லீலைகள்

சென்னை:

சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபலமான பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்-லைன் வகுப்பின்போது பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜகோபாலனின் அத்துமீறலை பொறுத்துக் கொள்ள முடியாத மாணவி ஒருவர் அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவரிடம் தனது நிலைப்பற்றி எடுத்து கூறி வருத்தப்பட்டுள்ளார்.

தற்போது மாடலிங் துறையில் உள்ள அந்த மாணவி ஆசிரியர் பற்றிய தகவல்களை சேகரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதன் பிறகு இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து பள்ளிக்கூடம் செயல்பட்டு வரும் எல்லைக்குட்பட்ட அசோக் நகர் மகளிர் போலீசார் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சே சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

நங்கநல்லூர் இந்து காலனி 7-வது தெருவில் வசித்து வந்த ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வருகிற 8-ந்தேதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் ராஜகோபாலனிடம் தி.நகர் துணை கமி‌ஷனர் ஹரிகிரண்பிரசாத் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை கமி‌ஷனர் ஜெயலட்சுமியும் விசாரணை நடத்தினார்.

போலீஸ் விசாரணையில், ராஜகோபாலன் பற்றி பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

வணிகவியல் ஆசிரியரான ராஜகோபாலன் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஆன்- லைனில் வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். அவரது ஆன்-லைன் வகுப்பு குழுவில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்துள்ளனர்.

வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதே அரைகுறை ஆடையுடன் ஆன்-லைன் வகுப்பில் ராஜகோபாலன் தோன்றிய புகைப்படங்கள் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மாணவிகளின் செல்போன் எண்களுக்கு ஆபாச வீடியோக்களை ராஜகோபாலன் அனுப்பி இருப்பதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. போலீஸ் விசாரணையின் போது இதனை அவர் வாக்குமூலமாக அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராஜகோபாலனின் லீலைகள் பற்றி போலீசார் வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்கள் வருமாறு:-

ஆன்-லைன் வகுப்புக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவில் மாணவிகளின் செல்போன் எண்களை எடுத்து அவர்களுக்கு தனியாக குறுஞ்செய்திகளை அனுப்புவதை ஆசிரியர் ராஜகோபாலன் வழக்கமாக வைத்து இருந்துள்ளார்.

குறிப்பிட்ட மாணவியின் செல்போன் எண்ணுக்கு அவரது உடை மற்றும் உடலை பற்றி தகவல்களை முதலில் அனுப்புவார். இதற்கு மாணவி அனுப்பும் பதிலை வைத்து அடுத்தக்கட்ட குறுஞ்செய்திகளையும் அனுப்புவார்.

ராஜகோபாலனின் குறுஞ்செய்தி தகவல்களுக்கு மாணவிகள் ஆட்சேபனை தெரிவித்தால், “சாரி, ராங் போஸ்ட் தவறாக அனுப்பி விட்டேன்” என்று தகவல் போட்டுவிட்டு அடுத்த மாணவியின் செல்போனுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார்.

வாட்ஸ்அப்

இதுபோன்று தினமும் பல மாணவிகளுக்கு ராஜகோபாலன் குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேல் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் ஆன்- லைன் மூலமாகவே மாணவ- மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

பத்மசேஷாத்திரி பள்ளியிலும் ஆன்-லைன் வகுப்புகளே நடைபெற்று வருகின்றன. இதனை பயன்படுத்தியே ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த ஓராண்டாகவே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ராஜகோபாலனிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக 5 நாட்கள் அவரை காவலில் எடுக்க அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ராஜகோபாலனின் செல்போன் - லேப்டாப்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் பல்வேறு தகவல்களை அழித்து இருந்தார். ஆனால் “ரெக்கவரிசாப்ட்வேர்” மூலமாக சைபர்கிரைம் போலீசார் அதில் உள்ள தகவல்களை திரட்டினர்.

அப்போது மாணவிகளிடம் தனிப்பட்ட முறையில் ராஜகோபாலன் உரையாடிய தகவல்கள் அனைத்தும் கிடைத்தது.

இதனை வைத்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் போலீசார் ரகசியமாகவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியர் ராஜகோபாலனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட மாணவிகளின் பட்டியலை சேகரித்து அவர்கள் அளிக்கும் தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்து வருகிறார்கள்.

ராஜகோபாலனுக்கு எதிராக போலீசாரின் நடவடிக்கை வேகம் எடுத்துள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2021/05/26100932/2675123/Tamil-News-PSBB-School-Teacher-Rajagopalan-Confession.vpf

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆன்லைன் வகுப்புகள்: குழந்தைகளைத் துரத்தும் பாலியல் தொல்லை - நலன் காப்பது எப்படி?

பிஎஸ்பிபி கே.கே.நகர்

பிஎஸ்பிபி கே.கே.நகர்

ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியதில் இருந்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பல குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டிருக்கின்றன. பாலியல் தொல்லைகளும் நடக்கின்றன. ஆன்லைன் வகுப்புகளின்போது எந்த அளவுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்று அலசுவோம்.

சென்னை கே.கே.நகரில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், அரைகுறை அடை அணிந்து ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவ மாணவிககளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியது, மாணவிகளுக்கு ஆபாச மெஸேஜ் அனுப்பியது உள்ளிட்ட பாலியல் புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகள் அளித்த புகாரின் பேரில் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்புகளில் மட்டுமல்லாது வாட்ஸப் மற்றும் பேஸ்புக் மூலமாக மாணவிகளுடன் பேசிய ராஜகோபாலன் அவர்களது ஆடை மற்றும் அழகை வர்ணிப்பதாகவும், ஆபாச இணைய தளங்களின் லிங் அனுப்புவதாகவும், சினிமாவுக்கு அழைப்பதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மாணவிகள் யாராவது அந்த ஆசிரியரிடம் எதிர்த்து பேசினால் தவறுதலாக அனுப்பிவிட்டேன் என அவர் மழுப்பிவிடுவார் எனவும் பல புகார்கள் எழுந்துள்ளன.

மாணவர்களின் ஆன்லைன் புகார்
 
மாணவர்களின் ஆன்லைன் புகார்

பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் கல்வியாளர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். புகார் தொடர்பாக விசாரணை நடத்தி, அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

 

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு ஆன்லைன் வகுப்புகள் பரவலாக்கப்பட்டன. அது முதல் பல்வேறு பிரச்னைகளும் ஆன்லைன் வகுப்புகளில் உடன் எழுந்திருக்கின்றன. தற்போது அந்த ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் ஒரு முக்கிய பிரச்னையாக உருவாகியிருக்கிறது. குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் போது பெற்றோர்கள் எந்தளவு கவனமாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம். `` இணைய வழியில் நடத்துவது வகுப்பே அல்ல. அப்படி நடத்தவும் முடியாது. ஒரு மாணவருக்கு கற்றல் செயலில் கூடுதலாக ஒன்றைத் தெரிந்துகொள்ள மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த வேண்டும். அதற்குத்தான் இணையமும் கூட.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
 
பிரின்ஸ் கஜேந்திரபாபு

தனது சக மாணவருடன் கலந்து பேசித்தான் ஒரு மாணவர் கற்றுக்கொள்ளவே செய்வார். எந்த விசயத்தையும் ஏன் என்று கேள்வி கேட்பார். அப்படி இல்லை என்று மறுத்துப் பேசித்தான் கற்றுக்கொள்வார். அப்படித்தான் ஒரு குழந்தையின் கற்றல் செயல்பாடு தொடங்கும். இந்த இணையவழி வகுப்புகளில் ஏன் என்ற கேள்வியைக் குழந்தை யாரைக் கேட்கும்? வகுப்புகளில் கேள்வி கேட்கலாம் என்ற தைரியத்தையே குழந்தைகளுக்கு நாம் கொடுக்கவே இல்லையே. பள்ளிக்கு வந்ததும் கைதட்டு, வாயைப் பொத்து, டீச்சர் சொல்வதைக் கேளு என்பதைத்தானே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். டீச்சரை கேள்விக்கு உள்ளாக்கு என்று எங்காவது சொல்லிக் கொடுக்கின்றோமா?” எனக் கேள்வியை எழுப்புகிறார்.

 

மேலும்,``தனிமையில் லேப்டாப், டேப், மொபைல் மூலமாக அமர்ந்து இணைய வகுப்பைக் கவனிக்கும் ஒரு குழந்தைக்கு ஆசிரியர் பேசுவதை, நடந்துகொள்வதைப் புரிந்துகொள்ள முடியுமா? அதைப் புரிந்துகொள்ளவே தவிக்கும் ஒரு குழந்தைக்கு அதில் ஒரு பாலியல் வன்கொடுமையோ வேறு விதமான சிக்கல்களோ ஏற்படுத்தினால் அந்தக் குழந்தையின் இறுதிக்காலம் வரை வடுவாக அவர்களைத் தொடர்ந்து வரும். வகுப்புகளாகவே அங்கீகரிப்பதே தவறு. இணையவழியில் `பெற்றோர் விழிப்பாக இருக்கணும், பெரியவங்க கவனமாக இருக்கணும்' என்று சொல்வது எப்படிச் சாத்தியம்? கொரோனா சூழலால் தானே இணைய வகுப்புகள் தொடங்கப்பட்டன. இணைய வகுப்புகள் என்றால் கட்டணம் இல்லாமலா நடத்துகிறார்கள்?

ஆன்லைன் வகுப்புகள்
 
ஆன்லைன் வகுப்புகள் Representational Image

குழந்தை அருகிலிருந்து கவனித்துக்கொள் என்று பெற்றோரிடம் சொன்னால் அப்புறம் எதற்குக் கட்டணம் செலுத்துகிறோம்? வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள் அலுவலக வேலையைப் பார்த்தால்தானே இணைய வகுப்புகளுக்குக் கட்டணம், அதற்கான உபகரணங்கள், வசதிகளைச் செய்துகொள்ள முடியும். சாத்தியமில்லாத ஒன்றைத் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கிறோம்” எனத் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.

 

மேலும்,``இணைய வழியில் பாடம் நடத்துவதால் யாருக்கு என்ன லாபம். குழந்தை சொன்னால் கேட்டு கொள்ளப்போகிறார்கள். மனப்பாடம் செய்து தேர்வு எழுதப் போகிறார்கள். பிறகு எதற்கு இந்த ஆன்லைன் வகுப்பு. இதன் மூலம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூல் செய்வதுதான் தொடர்கிறது. நோய்த் தொற்று இருக்கக் கூடிய காலகட்டத்தில் பல்வேறு துயரங்களுக்குள் உழன்று வரும் இந்த சூழலில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு குழந்தை இணைய வழியில் வகுப்பைக் கவனிக்க முடியும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய தவறு. இந்தச் சூழலிலும் குழந்தைகளிடம் ஒருவர் இவ்வளவு கேவலமாக நடந்துகொள்ள முடியும் என்று சொன்னால் நிச்சயமாக எப்படி எடுத்துக்கொள்வது என்றே புரியவில்லை. இணையவழி பாதுகாப்பானதா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை. இணைய வழி என்றாலே பாதுகாப்பாற்றதுதான்.

ஆன்லைன் வகுப்பு
 
ஆன்லைன் வகுப்பு

குழந்தையும் சமூகத்தின் ஓர் அங்கம் தான். அந்த சமூகமே மிகப்பெரிய சிக்கலில் மாட்டியிருக்கும் போது என் குழந்தை அமைதியாக அதைப்பற்றி யோசிக்காமல் படிக்க வேண்டும் என ஒருவர் நினைக்கிறார் என்றால் அவரது மனநிலைதான் என்ன? முதலில் இந்த சூழலை எதிர்கொண்டு சரி செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். யாருமே எந்த அசைவுமே இல்லாமல் இருக்கும்போது குழந்தை மட்டும் எதற்கு ஆன்லைன் வழியே படிக்க வேண்டும்? ஒன்றிரண்டு ஆண்டுகள் கல்விச் செயல்பாடுகள் ஏதும் இல்லாமல் குழந்தைகள் சுதந்திரமாக இருக்கட்டுமே” என ஆன்லைன் வகுப்பு குறித்து விவரிக்கிறார்.

 

 

https://www.vikatan.com/news/general-news/violence-against-student-in-online-class-how-parents-should-take-care

  • கருத்துக்கள உறவுகள்
YG மகேந்திரன் பற்றி எனக்கு நன்றாக தெரியும் 
"PSBB கலாச்சாரம் ஆபத்தானது"

- டி. எம். கிருஷ்ணா

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கல்லூரியை அரசே எடுத்து நடத்த வேண்டும்.

ஆசிரியர் செய்ததை விட மோசம் அதை cover up செய்த  நிர்வாகத்தின் நடவடிக்கை.

இதை பற்றி YG, மதுவந்தி கவலை படத்தேவை இல்லை. அவர்கள்தான் வெறும் Trustee ஆச்சே.

கமல்ஹாசன் இதை சாதி பிரச்சனையா திசை திருப்புறாதா குற்றம் சொல்லி உள்ளார். #தசை ஆடும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இந்த கல்லூரியை அரசே எடுத்து நடத்த வேண்டும்.

ஆசிரியர் செய்ததை விட மோசம் அதை cover up செய்த  நிர்வாகத்தின் நடவடிக்கை.

இதை பற்றி YG, மதுவந்தி கவலை படத்தேவை இல்லை. அவர்கள்தான் வெறும் Trustee ஆச்சே.

கமல்ஹாசன் இதை சாதி பிரச்சனையா திசை திருப்புறாதா குற்றம் சொல்லி உள்ளார். #தசை ஆடும்.

memees.php?w=650&img=dmFkaXZlbHUvZ2lybHM

அவனவன் 57 வயது வரை "அரசு ஆசிரியர் வேலை " கிடைக்க வில்லை என்டு தலையால் தண்ணீர் குடிக்கினம். . அவாள் ஸ்கூலில் இவாள் தான் ஆசிரியரா இருப்பினம் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை .. 

முன்னமும் அண்ணாமலை பல்கலை அரசுடமை ஆக்கப்பட்ட போது  இதுதான் நடந்தது . காலணா பெறாதது எல்லாம் "கவர்மொன்ற் எம்பளாயி " ஆகிட்டினம்.

சமூக நீதி / இட ஒதுக்கீடு / தகுதி தேர்வு எல்லாம் இல்லாம ..


இது தான் தோழர் குருட்டு அதிர்ஷ்டம் என்பது..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, standing and text that says 'என்ன எல்லாரும் ஐட்டியோட வந்திருக்கா? டீச்சர் போஸ்ட்டுக்கு ஆள் எடுக்குறாள்... அதான் இப்படி வந்திருப்பா..! Ûe PSBB Teacher'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஆன்லைன் வகுப்பில் மாணவிகளை ஆபாச படம்பிடித்த ஆசிரியர் ராஜகோபாலன்: விசாரணையில் அம்பலம்
ஆன்லைன் வகுப்பில் மாணவிகளை ஆபாச படம்பிடித்த ஆசிரியர் ராஜகோபாலன்: விசாரணையில் அம்பலம்
 

விசாரணையின் போது ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்ததும் தெரியவந்துள்ளது.
பதிவு: ஜூன் 04,  2021 12:30 PM
சென்னை:

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி பெற்றனர். அசோக் நகர் மகளிர் போலீசார், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். 


குறிப்பாக 5 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு புகாருக்கும் 50 கேள்விகளை தயாரித்து அதற்கு பதில் அளிக்கும்படி ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

சுமார் 250 கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்படி போலீசார் தெரிவித்தனர்.

குறிப்பாக பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே இது நடந்ததா? என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. மாணவர்களுக்கான வாட்ஸ்-அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிட்டது, அரைகுறை ஆடையோடு ஆன்லைன் வகுப்பு நடத்தியது பற்றியும் கேள்விகளை கேட்டனர்.

இந்த விசாரணை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜகோபாலன் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த விதத்தையும், பதிவு செய்து குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்ய இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு அதிகப்படியான தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இன்று மாலை 3 மணி வரை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றவுடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் சிலர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/06/04123055/online-class-teacher-Rajagopalan-Leela-Exposed-at.vpf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.