Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத்திற்கும் கேரளாவுக்கும் உள்ள நீண்ட கால வரலாற்றுத் தொடர்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kadancha said:

இதன் காரணம், நான் முன்பே சொல்லிய 1820 வரை  கேரளத்தில் இருந்த மொழி, அதாவது மலையாளம்மா அல்லது மலையாளத் தமிழ்.  

போத்துக்கேயர் அப்போதைய (1500 களில்) மலையாளம்மாவை அல்லது  மலையாளத் தமிழை, கோரோமண்டல் கரையோர தமிழை (Coromandel Coast, அதாவது இப்போதைய தமிழ் நாடு) மற்றும் ஈழத் தமிழ் இடையே உள்ள நுணுக்கமான  ஆனால் முக்கியமான வேறுபாட்டை அவதானிக்க முற்றப்படவும் இல்லை, அப்படி அறிவதற்கான   நிறுவன மயப்பட்ட மொழியியல், மானிடவியல், சரித்திர மாற்றம் தொல்பொருள் ஆய்வு   அறிவும்  போத்துக்கேயரிடம் இருக்கவில்லை.

போத்துக்கேயர் அப்போதைய, அவர்களுக்கு தெரிந்த தமிழை (மலையாளம்மாவை அல்லது  மலையாளத் தமிழை, கோரோமண்டல் கரையோர தமிழை (Coromandel Coast, அதாவது இப்போதைய தமிழ் நாடு) மற்றும் ஈழத் தமிழ்) Lingua Malabar Tamul என்று அழைத்தனர்.

இதுவே, அதாவது நிறுவன மயப்பட்ட மொழியியல், மானிடவியல், சரித்திர மாற்றம் தொல்பொருள் ஆய்வு   அறிவு இன்மையால்,  முஸ்லிம்களை போத்துக்கேயர் moors என்று வகைப்படுத்தகியதன் காரணமும். முஸ்லிம்களின் தோற்றமும், சமயமும் (மொரோக்கோ மக்களின் தோற்றத்தை ஒத்த தோற்றமும், சமயமும், அதை போத்துக்கேயர் moors என்றே வகைப்படுத்தி வைத்தும் இருந்தனர்). 

ஆனால், இவை (மொழியியல், மானிடவியல், சரித்திர மாற்றம் தொல்பொருள் ஆய்வு) வளர்ந்து வந்த அன்றைய ஜேர்மன் பாதிரியார் இந்த வேறுபாட்டை (அதாவது கேரளா மொழி மாற்றப்பட்ட பின்), அதாவது கேரளம்,  இப்போதைய தமிழ் நாடு, மற்றும் ஈழ தமிழ்  வேறுபாடுகள் பற்றி  அறிந்து எழுதி உள்ளார். 

முன்பு எழுதியதின் ஓர் பகுதியின் பிரதி,

 1875 இல், ஜேர்மன் பாதிரியார் E. R. Baierlein இற்கு தெரிந்திருந்தது இப்போதைய தமிழ்நாடு, மற்றும் ஈழத்தமிழரை தமிழர்கள் என்று. இது அவர் 1875 இல் எழுதிய THE LAND OF THE TAMULIANS எனும் நூலில் இருக்கிறது. 

அதில் இருந்து சில வரிகள்,

"I have not been able to omit the primitive Church of Southern India, although its present place of residence is beyond the present boundaries of the land of the Tamulians. For the separation of Malabar from the Tamil country, is of recent date; even our first missionaries call Tamil land Malabar and the language – even not very much different – Malabarish."

Google இல் இணைப்பு: 

https://books.google.co.uk/books?id=lFoqn9NvLRAC&pg=PA105&lpg=PA105&dq=“I+have+not+been+able+to+omit+the+primitive+Church+of+Southern+India,+although+its+present+place+of+residence+is+beyond+the+present+boundaries+of+the+land+of+the+Tamulians.+For+the+seperation+of+Malabar+from+the+Tamil+country,+is+of+recent+date;+even+our+first+missionaries+call+Tamil+land+Malabar+and+the+language+–+even+not+very+much+different+–+Malabar+Ish.”&source=bl&ots=EjCHBaBGhG&sig=ACfU3U3uxrzm9v-xQDyP0OD_OWXeNrpVWw&hl=en&sa=X&ved=2ahUKEwicyf_XmsfsAhW9SRUIHRIRBDgQ6AEwAHoECAEQAg#v=onepage&q=“I have not been able to omit the primitive Church of Southern India%2C although its present place of residence is beyond the present boundaries of the land of the Tamulians. For the seperation of Malabar from the Tamil country%2C is of recent date%3B even our first missionaries call Tamil land Malabar and the language – even not very much different – Malabar Ish.”&f=false 

முன்பு எழுதிய திரி:

நன்றி கடஞ்சா,

தமிழர்களைதான் போத்துகீசர் மலபாரிகள் என எழுதினார்கள் எனும் உங்கள் கருதுகோளில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. 

போத்துகீசர் மட்டும் அல்ல ஒல்லாந்தர் ஆளுனர் Jaques Fabrice Van Senden என்பவரின் 1786 திருகோணமலை சுற்றறிக்கை, கிராமங்களை, தமிழ், முஸ்லீம், மலபார், சிங்கள, மலாய், வேடுவர் என வகைப்படுத்துகிறது.

ஆகவே திருகோணமலையில் மலபார், தமிழ் என்ற வித்தியாசம் ஐரோப்பியரால் அறியபட்டுள்ளது.

எனது ஊகம். ஊகம் மட்டுமே,

இலங்கையின் வடகிழக்கில் பரவலாக சேர நாடு உட்பட்ட தமிழக்கதின் பல பாகத்தில் இருந்து வந்தோரும், ஆதி பூர்வீக இலங்கை தமிழரும் பன்னெடுங்காலமாக வாழ்ந்துள்ளனர்.

இதில் சேர நாட்டில் இருந்து வந்தவர்கள் யாழ் மாவட்ட பகுதியில் கணிசமாக இருந்திருக்க கூடும்.

ஈற்றில் எல்லாரும் “ஈழ தமிழர்” என்ற அடையாளத்தை அடைய, நம்பூதிரிகள் சதியும் கேரளாவில் அரங்கேற, தமிழில் இருந்து மலையாளம் பிரிய, நாம் எமது சேர அடையாளங்களை ஏனைய அடையாளங்களுடன் சேர்த்து - ஈழத்தமிழர் என்ற அடையாளத்துள் உள்வாங்குகிறோம்.

இதை சொல்வதால் இல்ங்கையில் தமிழர் பூர்வ குடிகள் இல்லை என்பதல்ல. நாம் பூர்வ குடிகள்தான் ஆனால் பாரிய தென்னிந்திய ஆதிக்கம் நம்மீது உண்டு.

ஆங்கிலேய இனத்தின் மீதான ஸ்கெண்டிநேவிய, சக்ஸன், பிர்ஞ்ச் பாதிப்பு போன்றது இது.

10 hours ago, goshan_che said:

வாய்வு ஒன்றன்றி வேறொன்றும் பறையோம் பராபரமே 🤣.

மன்னிக்க வேண்டும் @குமாரசாமிஅண்ணை. இண்டைக்கு மார்கோபோலோ வுக்கு பதிலாக தாயுமானவர்🤣

  • Replies 104
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அட விடுங்கப்பா .. எல்லாரும் திராவிடர்கள்..👍

👍🏿 இப்போ புரிகிறதா தோழர். திராவிடர் என்ற பதம்தான் நமக்கு கசக்கிறது என்றால் வேறு எதையாவது, ஆதி தமிழர், அருந்தமிழர் இப்படி பயன்படுத்தலாம் - ஆனால் பொருள் ஒன்றுதான்.

8 hours ago, தமிழ் சிறி said:

உள்ளி - தமிழ் விக்சனரி

உந்த... வாய்வுப் பிரச்சினைக்குத்தான், 
"உள்ளி" சுட்டு.. சாப்பிட வேணுமென்று ஊரில் சொல்வார்கள்.  🤣

கோமியத்தோட கலந்தடிச்சால் கொரோனா கிளியர் எண்டு யூடியூப்ல பார்த்தனான்🤣.

பொறுப்பு துறப்பு

#பகிடி🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

எனது தந்தையார்

தனது ஒப்பாட்டன்  பெயர் 

ராஐராஐ கொம்பந்த  முதலியார்  என்பார்

உதைக்குதே???

அண்ணை இந்த முதலியார் பெயர் பலதை குறிக்கலாம். எமது சமூக கட்டமைப்பில் வேறு இடங்கள் ஒதுக்கபட்ட வெள்ளாள, செங்குந்த இன மக்களிடம் மட்டும் அல்ல, ஆந்திராவிலும் இந்த பெயர் உள்ளது. சில சமயங்களில் ஒரு surname ஆக மட்டும் பாவிக்க படுகிறது. அத்தோடு காலனித்துவ காலத்தில் இப்படி ஒரு பதவியும் இருந்தது.

அதே போல் கேரளாவில் நிச்சயமா முதலியார்/முதலி உண்டு.

இதே போல் வணபிதா தனிநாயகம் அவர்களின்  நெடுந்தீவு மூதாதை தனிநாயக முதலி.

பல சிங்கள ஊடகங்கள், பத்திரிகையாளர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களையும் மலபாரி வழி வந்தவர் என்று (கேலியாகவும்) சிங்கள ஊடகங்களில் குறிப்பிடுவதுண்டு. அதற்கு ஆதாரமாக தலைவரின் தந்தை வழிப் பாட்டா ஒருவரின் பெயரைக் குறிப்பிடுவார்கள் (பெயர் மறந்து விட்டது). அத்துடன் போர்த்துக்கீசர் யாழ்ப்பாண மக்களை மலபாரிகள் என்று குறிப்பிடுவதாகவும், மலபாரிகளின் வழித்தோன்றல்களுக்குத்தான் தமிழீழம் தேவையாக உள்ளதாகவும் நக்கலாக குறிப்பிடுவர்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

தலைவரின் தந்தை மலையாளி எனும் ஒரு திரி இங்கே ஓடி - அப்படி இல்லை என்று அந்த திரியில் இணைக்கபட்ட ஆவணத்தை வைத்தே நான் நிறுவ முயன்று அதில் கணிசமான வெற்றியும் கண்டதாக நினைவு.

நான் கருதுவது,

பூர்வக்குடி நாகரும், இயக்கரும், தமிழரும், மலையாளிகளும் இன்னும் சில இனக்குழுக்களும் கூட்டாக சேர்ந்து உருவானவர்களே இப்போதைய “நாம்”.

இதில் யாரின் % என்ன என்பது எனக்கு தெரியாது. ஆனால் மொழி தமிழாக தொடர்வதால் பெரும்பான்மை தமிழாக இருக்கும் என கருதினாலும். கேரளாவில் நடந்த மொழி மாற்றம் இங்கே நடக்காத படியால் - நம்மில் பெரும்பான்மையானோர் மலையாளம் மொழியாக முன்னர் இலங்கை வந்த சேர நாட்டு தமிழர்களாயும் இருக்க கூடும். ஏன்றால் ஏனைய வழக்கங்கள், தொனி ஒற்றுமை உள்ளது.

அடுத்து சட்டம். ஐரோப்பியர் சட்டமியற்றும் போது அந்த அந்த இடங்களில் ஆதிக்க குழுவின் சட்டங்களை அந்த இடத்தின் சட்டமாக ஏற்றனர்.

உதாராணமாக வெள்ளாளர் உட்பட பல சாதியினர் மட்டகளப்பில் அப்போ வசித்தாலும், மட்டகளப்பின் சட்டமாக முக்குவிய சட்டமே ஏற்கப்பட்டது.

அதே போல் யாழில் தேச வழமையை ஏற்கும் போது இது மலபாரிகளின் சட்ட நடைமுறை என்ற முன்னுரை கொடுக்க படுகிறது.

ஒல்லாந்தில் இருக்கும் முதன்மை ஆவணிங்களின் பிரதியை பழைய திரியில் இணைத்திருந்தேன்.

ஆனால் இதைவிட மோசமான கலப்பு உள்ள சிங்களவர் நம்மை நக்கல் அடிக்க முடியாது.

அப்படி என்றால் லாடா நாட்டில் போய் நின்றுதான் அடிக்க வேண்டும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

அண்ணை இந்த முதலியார் பெயர் பலதை குறிக்கலாம். எமது சமூக கட்டமைப்பில் வேறு இடங்கள் ஒதுக்கபட்ட வெள்ளாள, செங்குந்த இன மக்களிடம் மட்டும் அல்ல, ஆந்திராவிலும் இந்த பெயர் உள்ளது. சில சமயங்களில் ஒரு surname ஆக மட்டும் பாவிக்க படுகிறது. அத்தோடு காலனித்துவ காலத்தில் இப்படி ஒரு பதவியும் இருந்தது.

அதே போல் கேரளாவில் நிச்சயமா முதலியார்/முதலி உண்டு.

இதே போல் வணபிதா தனிநாயகம் அவர்களின்  நெடுந்தீவு மூதாதை தனிநாயக முதலி.

முதலி முதலியார் இரண்டும் வேறு வேறு சாதிக்குரியவை என எண்ணுகிறேன். ?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

முதலி முதலியார் இரண்டும் வேறு வேறு சாதிக்குரியவை என எண்ணுகிறேன். ?

சரியாக தெரியவில்லை. 

ஆனால் கேரளாவில் முதலியும் உண்டு முதலியாரும் உண்டு.

அத்துலத் முதலி தமிழன் எண்டு கிளம்பாதவரை ஓகே🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தமிழர்களைதான் போத்துகீசர் மலபாரிகள் என எழுதினார்கள் எனும் உங்கள் கருதுகோளில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. 

https://archive.org/details/MalabarEnglishDictionary/page/n3/mode/2up

இது இன்னொமொரு சான்று  'மலபார்' மற்றும் 'தமிழ்' என்பதை ஐரோப்பியர் எப்படி விளங்கி வைத்து இருந்தனர், விளக்கமளித்தனர் என்பதற்கு.   

1 hour ago, goshan_che said:

போத்துகீசர் மட்டும் அல்ல ஒல்லாந்தர் ஆளுனர் Jaques Fabrice Van Senden என்பவரின் 1786 திருகோணமலை சுற்றறிக்கை, கிராமங்களை, தமிழ், முஸ்லீம், மலபார், சிங்கள, மலாய், வேடுவர் என வகைப்படுத்துகிறது.

இதில் அந்த மலபார் என்று அடையாளப்படுத்தப்பட்டோர் என்ன மொழி பேசினார்கள் என்றால் ஓர் தெளிவு பிறகும்.

நான் நினைக்கிறன், ஒல்லாந்தரும், போத்துக்கேயரும், இப்போதைய கேரளத்தில் இருந்து மக்களை கொண்டு வந்தனர் வேலை மற்றும் குளித்த தொழிலுக்காக . அந்த மக்களாக இருக்க கூடும். ஊகம் மட்டுமே. காரணம், மலாயும்  இருப்பதால்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

👍🏿 இப்போ புரிகிறதா தோழர். திராவிடர் என்ற பதம்தான் நமக்கு கசக்கிறது என்றால் வேறு எதையாவது, ஆதி தமிழர், அருந்தமிழர் இப்படி பயன்படுத்தலாம் - ஆனால் பொருள் ஒன்றுதான்

#பகிடி🤣

ஆயிரம் கதைத்தாலும் மலையாளி விட தெலுங்கர் மேல் இவ்விருவரை விட கன்னடர் மேல் ..👍

மல்லுக்கள் முக்கிய துறைகளை எல்லாம் கைப்பற்றி ஊமை குத்தா குத்துகினம்..👌

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

சரியாக தெரியவில்லை. 

ஆனால் கேரளாவில் முதலியும் உண்டு முதலியாரும் உண்டு.

அத்துலத் முதலி தமிழன் எண்டு கிளம்பாதவரை ஓகே🤣

என்ன அத்துலத் முதலி தமிழனா....?

🤣🤣🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலையாளத்தின் தாய் மொழி தமிழ்  என சொல்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆயிரம் கதைத்தாலும் மலையாளி விட தெலுங்கர் மேல் இவ்விருவரை விட கன்னடர் மேல் ..👍

மல்லுக்கள் முக்கிய துறைகளை எல்லாம் கைப்பற்றி ஊமை குத்தா குத்துகினம்..👌

உங்கள் பிரச்சனைகள் புரிகிறது தோழர்.

ஆனால் நான் இதை வரலாற்று பார்வையில் மட்டுமே பார்கிறேன். 

மலையாளிகள் பற்றி மத்திய கிழக்கில் வேலைசெய்யும் தமிழரை கேட்டால் சொல்வார்கள்.

ஆனால் காலனித்துவ காலத்தில் யாழ்பாண தமிழர்கள் பற்றி இப்படி ஒரு பார்வை, வன்னி, கிழக்கு தமிழர்களிடமும் சிங்களவ்ர்களிடமும் இருந்தது என்பதும் உண்மையே.

இயக்கங்களின் வருகைக்கு முன் வன்னியில் “யாழ் அகற்றி சங்கம்” என்று ஒரு அமைப்பே இருந்துள்ளதாக அறிகிறேன்.

இவற்றை எல்லாம் மேவி இடையில் ஒரு பொது அடையாளத்தை ஏற்படுத்தி இருந்தோம் ஆனால் அதுவும் இப்போ உடைந்தழிகிறது.

8 minutes ago, Kapithan said:

என்ன அத்துலத் முதலி தமிழனா....?

🤣🤣🤣

சண்முகம் எடுடா வண்டிய. அடுத்த பஞ்சாயத்து வந்திருச்சி🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆயிரம் கதைத்தாலும் மலையாளி விட தெலுங்கர் மேல் இவ்விருவரை விட கன்னடர் மேல் ..👍

மல்லுக்கள் முக்கிய துறைகளை எல்லாம் கைப்பற்றி ஊமை குத்தா குத்துகினம்..👌

முதலில் இந்த கருத்துக்களை மலையாளி பார்த்தால் கூட்டம் கூட்டமாய் கடலுக்குள் விழுந்து செத்திடுவார்கள் . கதியால் வேலி போட்டு இரண்டு இன்சி தனது எல்லைக்குள் வந்து விட்டது என்பதுக்கு உயிரை எடுக்கும் அளவுக்கு சண்டை போடும் நாம் எங்கே ஒற்றுமையின் சின்னமாக இருக்கும் அவர்கள் எங்கே ?

அப்படித்தான்  சிலவேளை மலையாளியின் அடிப்பொடிகள் தான் என்றால் இதுவரைக்கும் தமிழ் ஈழம் கண்டு இருப்பம் அவர்களின் ஒற்றுமையான குணம் வெற்றி அடைய செய்து இருக்கும் .

ஓணம் பண்டிகை ஆரம்பத்தில் ஹிந்துக்கள் ஆனால் கொண்டாடுவது மலையாளி முஸ்லீம் கிறித்தவர் ஹிந்து நம்பூதிரிகள் அனைவரும் சாதி மதம் பார்க்காமல் கொண்டாடுவார்கள் ஓணத்துக்கு  தமிழ் நாட்டில் கூட விடுமுறை உண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கு தமிழ்நாட்டில் தமிழன் இரந்து  விடுமுறை வாங்க வேண்டி உள்ளது .

என்னதான் அடிபட்டாலும் கொள்ளுப்பட்டாலும் தங்களுக்குள்ளே விடயங்களை வைத்து கொள்ளுவார்கள் @ராசவன்னியன் அண்ணருக்கு  தெரிந்த விடயம் நல்லதொரு சம்பளம் கொடுக்கும் கொம்பனிக்குள் ஒரே ஒரு மலையாளி புகுந்தால் காணும் கரப்பான் பூச்சியை விட அதிகமாக பெருகி மலையாளி மயமாய்  இருப்பார்கள் .அதே கதையை நமக்கு பொருத்தி பாருங்க இருக்கிறவனை  மேல் அதிகாரியிடம் மாறி மாறி  போட்டு கொடுத்தே அழிந்து போய்  இருப்பார்கள் .இந்த பிட்டுகேட்டுக்குள்  மலையாளி வம்சமாம் இந்த கருத்தை பார்த்து சிரித்தே வயிறு நோகுது .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

மலையாளத்தின் தாய் மொழி தமிழ்  என சொல்கிறார்கள். 

ஓம் இதை எவரும் மறுப்பதில்லை.

கள உறவு வாலிக்கு இது பற்றி பல தகவல்கள் தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

ஓம் இதை எவரும் மறுப்பதில்லை.

கள உறவு வாலிக்கு இது பற்றி பல தகவல்கள் தெரியும்.

அப்ப காட்டுமிராண்டி மொழி தமிழ் எண்டதெல்லாம்....? 😁

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

என்ன அத்துலத் முதலி தமிழனா....?

4 minutes ago, goshan_che said:

சண்முகம் எடுடா வண்டிய. அடுத்த பஞ்சாயத்து வந்திருச்சி🤣

உமாமகேஸ்வரன் இந்தியாவில் வந்து அத்துலத் முதலியுடன் ரகசிய தொடர்பை வைத்து இருந்து பின்னாளில் தோழர்களுக்கு தெரியவர அத்துலத் தமிழர் அவரால் தமிழருக்கு தீர்வு தரமுடியும் என நம்பவைக்கப்பட்டனர் கடைசியில் அது சுத்துமாத்து கதை என்று தெரிந்து பொது கூட்டத்தில் தோழர்கள் எகிற உமா போறவை  போகலாம் தன்னால் மலையக இளையோரை கொண்டு இயக்கம் தொடங்க முடியும் என்று சவால் விட்டாராம் நல்லகாலம் மலையக இளையோர்க்கு அதுக்குள் உமாவை போட்டு தள்ளி விட்டார்கள் இதெல்லாம் வெற்றி செல்வனின் தொடரில் சிலது அவருக்கு போட்டியாக தொடங்கிய தொடர்களில் இருந்து நான் அறிந்து கொண்டது .

3 minutes ago, குமாரசாமி said:

அப்ப காட்டுமிராண்டி மொழி தமிழ் எண்டதெல்லாம்....? 😁

நம்ப மாட்டோம் இது குரலை மாத்தி யாரோ கிளப்பி விட்ட  புரளி என்று வருவினம் ஒற்றுமையின் சிகரங்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

முதலில் இந்த கருத்துக்களை மலையாளி பார்த்தால் கூட்டம் கூட்டமாய் கடலுக்குள் விழுந்து செத்திடுவார்கள் . கதியால் வேலி போட்டு இரண்டு இன்சி தனது எல்லைக்குள் வந்து விட்டது என்பதுக்கு உயிரை எடுக்கும் அளவுக்கு சண்டை போடும் நாம் எங்கே ஒற்றுமையின் சின்னமாக இருக்கும் அவர்கள் எங்கே ?

அப்படித்தான்  சிலவேளை மலையாளியின் அடிப்பொடிகள் தான் என்றால் இதுவரைக்கும் தமிழ் ஈழம் கண்டு இருப்பம் அவர்களின் ஒற்றுமையான குணம் வெற்றி அடைய செய்து இருக்கும் .

ஓணம் பண்டிகை ஆரம்பத்தில் ஹிந்துக்கள் ஆனால் கொண்டாடுவது மலையாளி முஸ்லீம் கிறித்தவர் ஹிந்து நம்பூதிரிகள் அனைவரும் சாதி மதம் பார்க்காமல் கொண்டாடுவார்கள் ஓணத்துக்கு  தமிழ் நாட்டில் கூட விடுமுறை உண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கு தமிழ்நாட்டில் தமிழன் இரந்து  விடுமுறை வாங்க வேண்டி உள்ளது .

என்னதான் அடிபட்டாலும் கொள்ளுப்பட்டாலும் தங்களுக்குள்ளே விடயங்களை வைத்து கொள்ளுவார்கள் @ராசவன்னியன் அண்ணருக்கு  தெரிந்த விடயம் நல்லதொரு சம்பளம் கொடுக்கும் கொம்பனிக்குள் ஒரே ஒரு மலையாளி புகுந்தால் காணும் கரப்பான் பூச்சியை விட அதிகமாக பெருகி மலையாளி மயமாய்  இருப்பார்கள் .அதே கதையை நமக்கு பொருத்தி பாருங்க இருக்கிறவனை  மேல் அதிகாரியிடம் மாறி மாறி  போட்டு கொடுத்தே அழிந்து போய்  இருப்பார்கள் .இந்த பிட்டுகேட்டுக்குள்  மலையாளி வம்சமாம் இந்த கருத்தை பார்த்து சிரித்தே வயிறு நோகுது .

ஒரு பக்கம் ஒரு பேராசிரியரின் ஆய்வு. மறுபக்கம் உங்களின் மேற்கண்ட ஆய்வு.

எனக்கு நீங்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்றே படுகிறது?

ஆனால் மலையாளிகளின் குணம் யாழ் மக்களிடமும் உண்டு என்பதற்கு பின் வரும் ஆதாரங்கள்.

1. அவர்களை போலவே இவர்களும் ஒரு காலகட்டத்தில் இலங்கையில் அளவில் குறைவாக இருந்தாலும்  அரச, தனியார் வேலைகளில் கோலோச்சினார்கள்.

2. ஹட்டனுக்கு ஸ்ரேசன் மாஸ்டராய் போன யாழ்பாணத்தவர் அங்கே பூந்தொட்டிக்கு தண்ணி ஊற்றும் வேலை முதல் அத்தனை வேலைகளுக்கும் ஊரில் இருந்து ஆட்களை எடுப்பித்தார். இது இலங்கையில் எல்லா இடங்களிலும், துறைகளிலும் நடந்தது.

3. வெளிநாடு வந்த பலர், அப்படியே தமது ஊரையே அழைத்து கொண்டார்கள். இங்கே யாழில் கூட உள்ளார்கள். தப்பில்லை பெருமைதான். ஆனால் இதுவும் மலையாளிகளின் குணம்.

4. பல துரோகங்கள் கண்ணுக்கு தெரிந்தாலும், ஒரு ஒட்டு மொத்த மக்கட் கூட்டமே, 90% பெரும் துன்பங்களுக்கு மத்தியில், மூன்று தசாப்தங்களா தலைவர் பின்னால் நின்றார்கள். இதுவும் மலையாளிகள் போலத்தான்.

5. இன்றைக்கும் வெளிநாட்டில் உழைக்கும் காசை கேரளா, மன்னிகவும் யாழ்பாணம் அனுப்பி அங்கே வீடும், மதிலும் கட்டுகிறார்கள். கோவில் கட்டுகிறார்கள், பள்ளிகூடத்துக்கு உதவி செய்கிறார்கள். ஆனால் தம்மை வாழ வைக்கும் நாட்டில் அந்த நாட்டினர்கு தர்மகாரியம் செய்ய பின்னடிப்பார்கள். 

கூட்டி கழித்து பாருங்கள் உங்கள் வாதப்படியும் கணக்கு சரியாக வரும் 🤣.

மேலே பின்வரும் ஆதாரம் என்பதை பின்வரும் எடுகோள்கள் என்று வாசிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தொடர்ந்து முக நூல் டுபாகூரை நம்பி ஏமாந்த மனம்- பின்னர் சகலதையும் நம்ப மறுக்கும் நிலைக்கு தள்ளபடுவது இயல்புதான். 

முகநூலை நான் ஒரு போதும் நம்புவதில்லை ஆனால் விடயம் உள்ளவருக்கு பின் தொடர்பவர்களின்  எண்ணிக்கை கருத்துக்கு பெறப்படும் விமரிசனம் போன்றவை சிந்திக்க தூண்டும் ஆனால் நேரவிரயம் கூட அங்கு .

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

அப்ப காட்டுமிராண்டி மொழி தமிழ் எண்டதெல்லாம்....? 😁

பெரியார் தமிழின் எழுத்து சீர்திருத்தத்தை வலியுறுத்தி சொன்ன வார்தைகளை எப்படி ஒரு சின்ன துளியை மட்டும் எடிட் பண்ணி பரப்பி கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றியும் இந்த பொய்யை துகிலிரிதும் முன்பே பல ஆதாரங்களுடன் எழுதியாகிவிட்டது அண்ணை. 

இந்த திரியை திசை திருப்ப விரும்பாமையால் பெரியாரை இத்தோடு விடுகிறேன். தமிழக மக்கள் மத்தியில் அவருக்கு என்ன இடம் இருக்கிறது என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்கள் காட்டுவார்கள்.

அண்ணை,

கண்டாப்போல நீங்கள் முன்னர் எனக்கு அடிக்கடி Charles Fernando என்பவரின் டிவிட்டரை பதிந்து பதில் சொல்வீர்கள்.

இப்ப அவரை பதிவதே இல்லை. ஏதும் விசேட காரணங்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

உங்கள் பிரச்சனைகள் புரிகிறது தோழர்.

ஆனால் நான் இதை வரலாற்று பார்வையில் மட்டுமே பார்கிறேன். 

நம்மட பிரச்சினை என்று கூறுங்கள் தோழர்.. அவயள்தான் ரெல்லி சவுத்- புளோக்கில் வெளியுறவு  கொள்கையை வகுத்து கொண்டு இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

அப்ப காட்டுமிராண்டி மொழி தமிழ் எண்டதெல்லாம்....? 😁

தல 
உந்த வெட்டிட ஒட்டுகிற வேலை தான் வேண்டாம் என்கிறது . இப்படித்தான், நேற்று ஒருவர்வெட்டி ஒட்டி மூக்கு உடைபட்டவர்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

நம்ப மாட்டோம் இது குரலை மாத்தி யாரோ கிளப்பி விட்ட  புரளி என்று வருவினம் ஒற்றுமையின் சிகரங்கள் 🤣

சூசை அண்ணன் ஆடியோ?

அது பக்கா ஒரிஜினல் தம்பி.

பொட்டம்மான் ஆடியோ ?

அது பிராடு தம்பி.

பெரியார் ஆடியோ?

அது பக்கா ஒரிஜினல் தம்பி.

தடா சந்திரசேகர் ஆடியோ?

அது பிராடு தம்பி.

#ஐயோ ஐயா 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, zuma said:

தல 
உந்த வெடி ஒட்டுகிற வேலை தான் வேண்டாம் என்கிறது . இப்படித்தான், நேற்று ஒருவர்வெட்டி ஒட்டி மூக்கு உடைபட்டவர்.

ஆனால் சீமான் விசயத்திலை வேற லெவெல்லை பதில் சொல்லுவீங்கள்?🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நம்மட பிரச்சினை என்று கூறுங்கள் தோழர்.. அவயள்தான் ரெல்லி சவுத்- புளோக்கில் வெளியுறவு  கொள்கையை வகுத்து கொண்டு இருக்கினம்.

உண்மைதான் தோழர். எமக்கு எப்பவும் நம்பியார்கள்தான் வில்லன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Nathamuni said:

சரத் பொன்சேகா ஒரு மலையாளி என்பார்கள்.

அப்போ இவரது மூதாதையர்கள் ரிக்கற் எடுத்தா சிறிலங்காவுக்குள் புகுந்திருப்பார்கள்? அல்லது ரிக்கற் எடுக்காமல்.........😜
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.