Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசிகள் – மக்களுக்கு ஏற்றும் பணி இன்று ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 50,000 தடுப்பூசிகள் – மக்களுக்கு ஏற்றும் பணி இன்று ஆரம்பம்

 
Sinopharm-1-696x384.png
 2 Views

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றும் திட்டம் இன்று தொடக்கம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கோவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம சேவையாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட மேற்படி கிராம சேவையாளர் பிரிவுகளில் இன்று முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும். தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தடுப்பூசிகள் போடப்படும்.

தெரிவு செய்யப்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பவதி தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும். தெரிவு செய்யப்பட்ட கிராம சேவையாளர் பிரிவு மக்களுக்கு அந்தப் பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையாலும், பிரதேச செயலகத்தாலும் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டவர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் அடையாள அட்டை அல்லது தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஆவணத்துடன் அறிவிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு வருகை தந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மக்கள் தம்மை பதிவு செய்துள்ள கிராம சேவகர் பிரிவு தவிர்ந்த வேறு பிரிவுகளில் தடுப்பூசியை பெறமுடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். குறித்த தினத்தில் தடுப்பூசியை பெறத்தவறுபவர்கள் பிறிதொரு தினத்தில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஏனைய கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள பொதுமக்களுக்கும் அடுத்தடுத்த கட்டங்களில் தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்படும் – என்றும் அவர் தெரிவித்தார்.

 

https://www.ilakku.org/?p=50915

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஆ கேதீஸ்வரன் வைத்திய அதிகாரியா... அல்லது மகிந்த - கோத்தா கும்பல் ஏஜென்டா...??! ஒரு வைத்திய அதிகாரியாக.. மக்கள் சேவை செய்பவராக இவர் நடந்து கொள்வதாகத் தெரியவில்லை.

எனவே இந்த வக்சீன் போட முதல் சமூக ஆர்வலர்களும்.. வைத்திய ஆர்வலர்களும்.. ஊடகங்களும்... மக்களுக்கு கீழ் வரும் விடயங்களை உடனடி தேவை கருதி.. உறுதி செய்து கொள்ளுங்கள்.

 

  • முதலில் மக்களுக்கு இது என்ன வகை வக்சீன் என்று வெளிப்படுத்தலும்..
  • இந்த வக்சீன் எந்த வயதினருக்கு உபயோகிப்பது ஆபத்தில்லை என்பதை தெரியப்படுத்தலும்..
  • இந்த வக்சீனுக்கு தெரிவு செய்யப்படும் மக்களுக்கான ஆலோசனைகள் வெளிப்படுத்தப்படனும்..
  • மேலும்.. எத்தனை தரம் இதை போடனும்..
  • எந்த வயதினர்.. பால் பிரிவினருக்கு.. முன்னுரிமை அளிக்கப்படனும்.. ஏன்..?!
  • இந்த வக்சீனின் பின் விளைவுகள் அல்லது எதிர்பார்க்கப்படும் பக்க விளைவுகள் என்ன.. அதற்கு மக்கள் என்ன பரிகாரம் செய்யனும்..?!
  • எந்த பிரிவினர் இந்த வக்சீனை.. அல்லது வக்சீனைப் போடுவது ஆபத்து என்ன வகையான ஆபத்து.. குறிப்பாக ஒவ்வாமை உள்ள மக்கள் அல்லது நாட்பட்ட நோயாளிகள்.. வயதானவர்கள்.. குழந்தைகள்.. என்று எல்லாமே தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கனும்.
  • எவ்வளவு கால இடைவெளியில் வக்சீனின் அடுத்த ஊசி போடப்படும்.
  • இந்த வக்சீனின் செயற்திறன் என்ன.. இது உலக சுகாதார ஸ்தாபனம்.. சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருந்து பகுப்பாய்வுக்கு உட்பட்டு.. பொதுமக்களுக்கு பாவிக்க அங்கீகரிக்கப்பட்டதா.. அப்படி அங்கீகரிக்கப்பட்டிருப்பின்.. பெறப்பட்ட அங்கீகாரங்களின் உறுதிப்படுத்திய விபரங்கள்.

எமது மக்களின் எதிர்காலம் கருதி.. இவற்றை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் உடனடியாக உறுதி செய்ய அனைவரும் வினையமாக செயற்படுதல் அவசியம்.

இந்த ஊசிகள்.. தகுந்த தகுதி வாய்ந்த வைத்திய தாதிகள் ஊடாகப் போடப்படனுமே தவிர.. இராணுவம் போட அனுமதிக்கப்படக் கூடாது. 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் 12 மையங்களில், தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள 50,000 தடுப்பூசிகளை, அதிக தொற்று ஏற்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குரிய  நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இந்த தடுப்பூசிகளை எதிர்வரும் 15 நாட்களுக்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும்  மிகத் துரிதமாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், கர்ப்பிணி பெண்கள் தவிர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் தடுப்பூசியை வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தவிர வேறு பிரிவுகளில் இருந்தோ அல்லது பெயர் பட்டியலில் இல்லாதவர்களோ தடுப்பூசி வழங்கும் மையத்திற்கு வருகை தர வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

222-2-600x361.jpg

https://athavannews.com/2021/1219117

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

 

 

யாழில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் 12 மையங்களில், தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள 50,000 தடுப்பூசிகளை, அதிக தொற்று ஏற்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்குரிய  நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இந்த தடுப்பூசிகளை எதிர்வரும் 15 நாட்களுக்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும்  மிகத் துரிதமாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில், கர்ப்பிணி பெண்கள் தவிர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் தடுப்பூசியை வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தவிர வேறு பிரிவுகளில் இருந்தோ அல்லது பெயர் பட்டியலில் இல்லாதவர்களோ தடுப்பூசி வழங்கும் மையத்திற்கு வருகை தர வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

222-2-600x361.jpg

https://athavannews.com/2021/1219117

 

சர்வதேச அங்கீகாரம் இல்லாத சீன வக்சீன் தான் போடப்படுகிறது. இதில் இராணுவமும்.. பொலிஸும் என்ன மருத்துவத்துறையா... எதுக்கு சிங்கள இராணுவம் குச்சியை ஆட்டிக்கிட்டு திமிர் காட்டிக்கிட்டு நிற்குது. 

இந்த சைனா வக்சீன்.. பற்றி உடனடியான அறிவுறுத்தல் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வடமாகாண வைத்தியத்துறையின் கடமை ஆகும்.

தாயகத்தில் இப்ப எல்லாமே வெளிப்படை தன்மை அற்று மக்கள் மீது திணிக்கப்படும் நடவடிக்கைகள் தான் அதிகம். அதற்கு தமிழ் அதிகாரிகள் துணை போவது வேதனை. என்ன இராணுவ பிரசன்னைத்தை வைச்சு.. அதிகாரிகளை சுயமாக செயற்பட விடாமல் தடுப்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது. இது ஒரு சிவில் சமூக நடைமுறை சொறீலங்காவில் இல்லை என்பதையே இனங்காட்டுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

The Sinopharm COVID-19 vaccine: What you need to know

The WHO Strategic Advisory Group of Experts (SAGE) on Immunization has issued Interim ( இந்த வக்சீனை பாவிக்க தற்காலிக அனுமதிதான் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் பல கட்டுப்பாடுகள் நிபந்தனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. ) recommendations for the use of the inactivated COVID-19 vaccine BIBP developed by Sinopharm/China National Pharmaceutical Group.

https://www.who.int/news-room/feature-stories/detail/the-sinopharm-covid-19-vaccine-what-you-need-to-know

  • கருத்துக்கள உறவுகள்

பரிசோதனை சாலை எலிகளாக நம்ம சனம் .

நான் இதுக்கை அரசியால் கதைக்க வரல்லை. நான் மருத்துவ துறை சார்ந்தவனும் இல்லை.  எனக்கு தெரிந்ததை எழுதுகின்றான்.

இங்கை நான் வசிக்கும் அபுதாபி பெரும்பாலானவர்களுக்கு சினோபார்ம் தான் கடந்த டிசம்பர் 2020 முதல் போடுகின்றார்கள். நானும் எனது மனைவியும் 2 டோஸும் போட்டுவிடன். எங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. இதுவரை எல்லாம் நோர்மலாதான் இருக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்ட மக்களுக்கு  கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் இன்று ஆரம்பம்

 
image1-696x522.jpeg
 23 Views

யாழ் மாவட்ட மக்களுக்கு  கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசி மருந்து வடக்கு மாகாண ஆளுநரால் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது.

நாடு பூராகவும் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்கு 50,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன..

இன்று காலை 8 மணி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது

யாழ் மாவட்டத்தில் முதற்கட்டமாக அதிக அளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது

யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர், பிரதமரின் வடக்கிற்கான இணைப்பாளர், யாழ் மாவட்ட அரச அதிபர், கடற்தொழில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்,வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்,யாழ் போதனா வைத்திய சாலை வைத்தியர்கள், மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டனர்.

 

https://www.ilakku.org/?p=50926

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நாமல் பணிப்புரை

யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நாமல் பணிப்புரை

யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை  அதிகரித்து, மிகக் குறைந்த நாட்களில் 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், யாழ்ப்பாணத்தினை தொடர்ந்து கிளிநொச்சி, வவுனியா முல்லைத்தீவு ஆகிய  இடங்களிலும்  அடுத்த கட்டமாக தடுப்பூசி வழங்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

ஆகையினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்தத் தடுப்பூசிகளை,  விரைவாக மக்களுக்கு வழங்கும் செயற்பாட்டினை சுகாதார அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும்.

மேலும் இந்த முதல்கட்ட தடுப்பூசியினை விரைவாக வழங்காவிடின் அடுத்த இரண்டாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும்.

ஆகவே தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து, மிகக் குறைந்த நாட்களில் இந்த 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுங்கள்” என  சுகாதார அதிகாரிகளுக்கு,  அமைச்சர் நாமல் பணிப்புரை விடுத்துள்ளார்.

https://athavannews.com/2021/1219212

  • கருத்துக்கள உறவுகள்

 

 

யாழில் முதல்நாளில் 3,000 பேர்வரை தடுப்பூசி போட்டனர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் இரண்டாயிரத்து 948 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் மக்களின் எண்ணிக்கையில் 52 சதவீதம் பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 83 கிராம அலுவலகர் பிரிவுகளில் கொரோனா தடுப்பூசியை நாளை முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் நெறிப்படுத்தலுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 61 கிராம சேவகர் பிரிவுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் கணிப்பிடப்பட்டதுடன் 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் குறித்த கிராமங்கள் தெரிவாகியுள்ளன.

இதன்படி, அவற்றில் 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒரு கிராம அலுவலர் பிரிவு என 11 கிராமங்களில் இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், தெரிவுசெய்யப்பட்ட குறித்த கிராம அலுவலகர் பிரிவுகளில் நாளை முதல் மேலதிகமாக 22 கிராம அலுவலகர் பிரிவுகளில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளன.

அத்துடன், இந்தக் கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

மேலும், தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவு மக்களுக்கு அந்தப் பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை மற்றும் பிரதேச செயலகத்தால் அதுதொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

அந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டவர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் அடையாள அட்டை அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஆவணத்துடன் தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்குச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென வைத்தியர் கேதிஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏனைய கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கும் அடுத்தடுத்த கட்டங்களில் தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1219234

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Shanthan_S said:

இங்கை நான் வசிக்கும் அபுதாபி பெரும்பாலானவர்களுக்கு சினோபார்ம் தான் கடந்த டிசம்பர் 2020 முதல் போடுகின்றார்கள். நானும் எனது மனைவியும் 2 டோஸும் போட்டுவிடன். எங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. இதுவரை எல்லாம் நோர்மலாதான் இருக்குது.

தகவல்களுக்கு நன்றி.
பிரேசில், சேர்பியா,  ஈரான் பாக்கிஸ்தான், மொரோக்கோ துருக்கியிலும் சினோபார்ம் போடுகிறார்கள். எனது நாட்டில் சினோபார்ம் பாவனையில் இருந்தால் நானும் போடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஜூன் 8 முதல் வழங்கப்படும்

sinopharm-vaccine-700x375.jpg

 

சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஜூன் 8ஆம் திகதி முதல் வழங்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் நான்கு வார இடைவெளியில் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அவர், முதல் டோஸைப் பெற்றவர்கள் அவை செலுத்தப்பட்ட திகதியின் அடிப்படையில், அதே மையங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, மே 8ஆம் திகதி முதல் டோஸ் பெற்றவர்கள் ஜூன் 8ஆம் திகதி இரண்டாவது டோஸைப் பெறுவார்கள் என்றும் மே 9ஆம் திகதி முதல் டோஸ் பெற்றவர்கள் ஜூன் 9 ஆம் திகதி இரண்டாவது டோஸைப் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் தங்கள் தடுப்பூசி அட்டைகளை மையங்களுக்கு கொண்டு செல்லுமாறும் மக்களை அவர்  கேட்டுக்கொண்டார்.

சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஜூன் 8 முதல் வழங்கப்படும் – Athavan News

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் 2, 948 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டன – கிராமப் பகுதி மக்கள் பின்னடிப்பு

 
10-1-696x322.jpg
 25 Views

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கொவிட் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 948 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் மக்களின் எண்ணிக்கையில் 52 சதவீதமானோர் தடுப்பூசியை பெற்றுள்ளனர். இதன் மூலம் கிராமப் பகுதி மக்கள் தடுப்பூசி பெறுவதில் பின்னடிக்கின்றார்களா? என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொவிட் – 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம அலுவலகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

11.jpgஇதன்படி 11 கிராம அலுவலகர் பிரிவுகளில் நேற்று கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட மக்கள் தொகையில் 52 சதவீதமானோர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை தெரிவு செய்யப்பட்ட மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் இன்று முதல் மேலதிகமாக 22 கிராம அலுவலகர் பிரிவுகளில் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவு மக்களுக்கு அப் பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினாலும், பிரதேச செயலகத்தாலும் அது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டவர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் அடையாள அட்டை அல்லது தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஆவணத்துடன் அறிவிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=50994

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம்: இரண்டாம் நாளாகவும் இன்று முன்னெடுப்பு

யாழில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இரண்டாம் நாளாகவும் இன்றும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

IMG-20210531-WA0019.jpg

யாழ் மாவட்டத்தில் 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு 12 தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் தடுப்பூசி வழங்குதல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட யாழ் பரியோவான் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு பொது மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து தமக்குரிய தடுப்பூசி மருந்துகளை பெற்று  செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.

IMG-20210531-WA0042.jpg

குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி நிலையத்திற்கு வருகை தந்து தமக்குரிய தடுப்பூசியினை பெற்றுச் செல்வதையும் காணக்கூடியதாகவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

IMG-20210531-WA0046.jpg

குறித்த தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன் ராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்து தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை பார்வையிட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

IMG-20210531-WA0048.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.