Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்!

Featured Replies

சில நாட்களிற்கு முன் ஐரோப்பாவில் உள்ள பிரபல தமிழ் ஊடகம் ஒன்றில் உரையாடிய ஒருவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் போதைப் பொருட்களிற்கு அடிமையாய் வாழ்ந்ததாகக் கூறியிருந்தார்.

..................................................................

இவ்வாறு தொடங்கும் இந்த தகவலில் ஊடகத்தின் பெயரையும் உரையாடியவரின் பெயரையும் உரையாடிய நாளையும் மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

அந்த ஊடகத்தில் உரையாடியவர்கள்" மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கஞ்சாவுக்கு அடிமை என்ற தலைப்பில் உரையாடினார்களா இல்லை அந்த உரையாடலுக்கு இணையத்தில் பதித்த கலைஞன் கொடுத்த தலைப்பா இது?

ஒரு நாட்டின் தேசியக்கவி என்று உயர்ந்து நிற்கும் பாரதியார் மீது எமது உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன் உட்பட பலரும் உன்னதமான மதிப்பு வைத்திருக்கின்றனர். கவிஞன் ஆக மட்டு மில்லாது கவிஞர்களுக்கு முன்னோடியான பாரதியார் போன்றவர்கள் பற்றிய தகவல்களை எடுத்தான் கவுத்தான் என்று இணைக்காமல் சான்றுகளுடன் இணையுங்கள். ஒரு விசயத்தை எடுத்து விவாதிப்பது தப்பில்லை . கருத்துக்களை பகிர்வது தப்பில்லை ஆனால் விசயங்களுக்கேற்ற பெறுமதியை மதித்து நடக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

Edited by sukan

  • Replies 126
  • Views 36.2k
  • Created
  • Last Reply

புகை பிடித்தல் கன்சா அடிப்பதை விடக் கேடானது, உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை.

கன்சா ஒரு மூலிகைச் செடி.அதனாலையே அது சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன் படுத்தப்படுகிறது.சில அய்ரோப்பிய நாடுகளில் கன்சா அடிப்பது குற்றமாகக் கருதப்படுவதில்லை.இங்கிலாந்த

  • தொடங்கியவர்

மன்னிக்கவும்... எந்த தலைப்பில் அந்த ஊடகத்தில் உரையாடினார்கள் என்பதல்ல முக்கியம் என்ன அங்கு சொன்னார்கள் என்பதுதான் முக்கியம். தேவையற்ற பிரச்சனைகளை ஊடகங்களிடையே வளர்க்காமல் இருப்பதற்காகவே அந்த குறிப்பிட்ட ஊடகம், நேரகாலம் என்பன இங்கு அடையாளம் காட்டப்படவில்லை. இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று ஊடகங்களிடையேயான மோதல்களும் இங்கு அவசியமா?

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியார் கஞ்சா அடித்திருந்தால் என்ன.. இல்லாவிட்டால் என்ன.. அவர் கவிதைகளைப் படிக்கும்போது இவையெல்லாம் தோன்றுவதில்லை, அத்தோடு அவர் மீதுள்ள மதிப்பும் குறைவதில்லை (பலரும் அதைத்தானே சொல்லுகின்றார்கள்). பாரதியைப் போல ஒரு கவிஞன் தமிழ் உலகிற்குக் கிடைத்ததையிட்டு நாமெல்லாம் பெருமைப்படவேண்டும்.

மன்னிக்கவும்... எந்த தலைப்பில் அந்த ஊடகத்தில் உரையாடினார்கள் என்பதல்ல முக்கியம் என்ன அங்கு சொன்னார்கள் என்பதுதான் முக்கியம். தேவையற்ற பிரச்சனைகளை ஊடகங்களிடையே வளர்க்காமல் இருப்பதற்காகவே அந்த குறிப்பிட்ட ஊடகம்இ நேரகாலம் என்பன இங்கு அடையாளம் காட்டப்படவில்லை. இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று ஊடகங்களிடையேயான மோதல்களும் இங்கு அவசியமா?

................................................................................

..........

கலைஞன் அவர்களே இதில் மேதலுக்கு என்ன இருக்கின்றது? பிரபல ஊடகம் ஒன்றில் வெளியான உரையாடலை மேற்கோள் காட்டுவதால் எந்த மோதலும் வர வாய்ப்பில்லை. உங்கள் கருத்துப்படி பகிரப்பட்ட உரையாடல் மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம் தானே ! ஆனால் இந்த விசயத்தை எடுத்து களத்தில் விவாதிக்கும் போது அதன் சாராம்சமே மாறி கரு வே திசைமாறி போகும் போது பாரதி மீது சேறு பூசுவது யாழ்களம் என்று வர வாய்புள்ளது அல்லவா?

ஒரு கருத்தை முன்னிறுத்தி விவாதிப்பதும் அந்த கருத்தின் காலம் சூழலை விவாதிப்பதும் ஆரோக்கியமானது. கருத்தின் சமுகம் சார்ந்த நோக்கத்தை பற்றி விவாதிப்பது தற்போதைய சூழலில் பொருத்தமானது. இதிலிருந்து விலத்தி கருத்தை எழுதியவனை பற்றி விவாதிப்பதால் நமக்கு என்ன நடக்கப்போகின்றது?

இந்த விவாதம் தொடங்கி இதுவரை புதுவை வெத்திலை போட்டதில் இருந்து கள்ளுக்குடித்த கதை. பெரியார் அபின் அடிச்ச கதை . கருணாநிதி என்று பலவும் வந்து விட்டது. இவ்வாறு கருத்தை தாண்டி கருத்தெழுதியவர்களின்மீது குறை கண்டுபிடிக்க முற்படும் போது அவர்களை நேசிக்கும் மக்களின் விசனத்துக்கு நாம் உள்ளாகின்றோம். இது இப்போதய சூழலில் தேவையா?

யாரும் யாரையும் குறையாக கருத்து எழுதியதாக நான் கூறவில்லை. பாரதியிடம் ஒரு பழக்கம்(இது வரை பலர்அதை அறியாதவர்களாக இருந்ததால் தானே ஆச்சரியப்பட்டு இந்த தலைப்பு வந்தது) அது இந்த களத்துக்கு வருமளவில் கஞ்சாவுக்கு அடிமை என்று வந்துவிட்டது. இனி இந்த களத்திலிருந்து ஒருவர் எடுத்து அதை எவ்வாறு அடுத்த தளத்துக்கு மாற்றுவார் என்று யாருக்கு தெரியும்? பாரதியோடு தொடங்கியது என்னும் நாலைந்து பேரை சேர்த்து விட்டது இரண்டு நாளில்.

இங்கு பெரியாரை பிடித்தவர் பிடிக்காதவர். பாரதியை பிடித்தவர் பிடிக்காதவர் என்னும் பலரை பிடித்தவர் பிடிக்காதவர் என்று பலரும் இருக்கலாம். இது பொதுக் கருத்துக்களம். இங்கு பலவிதமான கருத்துக்கள் வரத்தான் செய்யும் ஆனால் நாம் இருக்கும் சூழலும் எமது தாயக சூழலும் கருத்தில் எடுத்து இந்த தலைப்பை நீக்குவது நல்லதென்பதே எனது தனிப்பட்ட கருத்து.

தலைப்பை நீக்குவது தேவையற்றது. வேண்டுமென்றால் "பாரதியார் கஞ்சா பாவித்தாரா" என்பது போன்று மாற்றலாம். கஞ்சாவுக்கு அடிமை என்பது சற்று அதிகம்.

எமது ஈழத் தமிழர்கள் பலருக்கு பல விடயங்கள் தெரியாமலேயே இருக்கிறது.

பாரதியை தனக்கு பிடிக்கும் என்று பெரிதாக கதை விடுவார்கள். ஆனால் பாரதி யானையால் தாக்குண்டு உடனடியாக இறந்து விட்டார் என்றுதான் நம்பிக் கொண்டிருப்பார்கள். பாரதியின் பாடல் ஒன்றைக் கேட்டால் "ஓடி விளையாடு பாப்பா" என்பதைத் தாண்டி போகமாட்டார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் சினிமாவில் வந்த பாரதி பாடல்களை சொல்வார்கள்.

இப்படியானவர்களுக்கு பாரதி கஞ்சா பாவித்தது ஒரு அதிர்ச்சியான விடயம்தான். சிலர் பாரதி கஞ்சா பாவித்ததை விடீயோ எடுத்துக் ஆதாரமாக காட்டச் சொல்வார்கள்.

பாரதி என்று இல்லை. ஆறுமுக நாவலர், சேர்பொன் ராமநாதன், அருணாச்சலம், மகாத்மா காந்தி போன்றவர்களைப் பற்றி இவர்கள் பாடப் புத்தகத்தில் படித்ததை மட்டும்தான் அறிந்து வைத்திருப்பார்கள். அதைத் தாண்டி வேறு விடயங்களை சொன்னால் நம்ப மாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள்.

இந்த மனப்பான்மை மாற வேண்டும்.

பாரதி கஞ்சா அடித்தார் என்ற தகவலால் பாரதியின் பெயர் கெட்டு விட்டது என்றும், இங்கே இதைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்று ஓலமிடுபவர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான்.

பாரதியை சரியாக அறிந்தவர்களுக்கு கஞ்சா பாவித்தது பற்றிய தகவல் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாது. பாரதி பற்றிய மதிப்பை எந்தளவிலும் பாதிக்காது.

ம் ஒரு மாதிரி பாவம் பாரதியாரை ஒரு வாங்கு வாங்கிட்டீங்கள். இனி என்ன அவர் இது செய்தார் இது செய்தார் என்று சொல்ல வேண்டியதுதானே

பாருங்கள் அவரின் வரிகளை......

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருது மேற்கே - அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

.............................

..............................

சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ..

பாருங்கய்யா

எங்கு சென்றாலும் கலைச்செல்வங்களை கொண்டு வந்து தமிழ்மண்ணில் சேர்த்துவிடுங்கள் என்று தமிழ் மக்களிற்கு அன்பால் ஆணையிட்டவர் பாரதி. அவர் கஞ்சா அடித்தால் என்ன கசிப்பு அடித்தால் என்ன . . அதெல்லாம் தேவை இல்லை அவரின் வீரிய வரிகளுடன் ஒன்றிடுங்கள். உயர்வையே காண்பீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரதியார் கஞ்சா அடித்து பாடல் எழுதுகின்றார் என்ற தகவல் அனைவருக்கும் காலம், காலமாக தெரிந்து வந்திருந்தால், பாரதி கூறிய கருத்துக்கள் எமது சமூகத்தில் எடுபட்டு இருக்குமா?

ஏன் கண்ணதாசனின் பாடல்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வைத்து (இன்றும்) பார்க்கப்படவில்லையா?

3. அந்த மாகவி பாரதியே கஞ்சா அடித்துள்ளார்! எனவே, நான் கஞ்சா அடிப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்று ஒருவன் கேட்டால் அவனுக்கு என்ன பதில் உங்களால் கூறமுடியும்?

இதைப்போல ஒரு முட்டாள் தனமான கேள்வி உலகத்தில் இருக்காது என்றுதான் அந்த நபருக்கு சொல்லுவேன்.. அதே மகாகவி பாரதியார்தான் விலை மதிப்பற்ற உயர்ந்த படைப்புக்களை உருவாக்கியுள்ளார். அவ்வாறு நாமும் செய்யவேண்டும் என்று சிந்திப்பதை விடுத்து தவறான விடயங்களை ஏன் செய்யக்கூடாது என்பது கேட்பது........?

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியார் கஞ்சா அடித்தா என்ன கண்ணதாசன் தண்ணி அடித்து எழுதி இருந்தா என்ன யாழில எத்தனை பேர் தண்ணி அடித்து போட்டு எழுதுறனீங்க என்று சொல்லுங்கோ பார்போம்,நான் எழுதி போட்டு தான் அடிகிறனான்.

:P :P

தலைப்பை நீக்குவது தேவையற்றது. வேண்டுமென்றால் "பாரதியார் கஞ்சா பாவித்தாரா" என்பது போன்று மாற்றலாம். கஞ்சாவுக்கு அடிமை என்பது சற்று அதிகம்.

எமது ஈழத் தமிழர்கள் பலருக்கு பல விடயங்கள் தெரியாமலேயே இருக்கிறது.

பாரதியை தனக்கு பிடிக்கும் என்று பெரிதாக கதை விடுவார்கள். ஆனால் பாரதி யானையால் தாக்குண்டு உடனடியாக இறந்து விட்டார் என்றுதான் நம்பிக் கொண்டிருப்பார்கள். பாரதியின் பாடல் ஒன்றைக் கேட்டால் "ஓடி விளையாடு பாப்பா" என்பதைத் தாண்டி போகமாட்டார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் சினிமாவில் வந்த பாரதி பாடல்களை சொல்வார்கள்.

இப்படியானவர்களுக்கு பாரதி கஞ்சா பாவித்தது ஒரு அதிர்ச்சியான விடயம்தான். சிலர் பாரதி கஞ்சா பாவித்ததை விடீயோ எடுத்துக் ஆதாரமாக காட்டச் சொல்வார்கள்.

பாரதி என்று இல்லை. ஆறுமுக நாவலர்இ சேர்பொன் ராமநாதன்இ அருணாச்சலம்இ மகாத்மா காந்தி போன்றவர்களைப் பற்றி இவர்கள் பாடப் புத்தகத்தில் படித்ததை மட்டும்தான் அறிந்து வைத்திருப்பார்கள். அதைத் தாண்டி வேறு விடயங்களை சொன்னால் நம்ப மாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள்.

இந்த மனப்பான்மை மாற வேண்டும்.

பாரதி கஞ்சா அடித்தார் என்ற தகவலால் பாரதியின் பெயர் கெட்டு விட்டது என்றும்இ இங்கே இதைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்று ஓலமிடுபவர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான்.

பாரதியை சரியாக அறிந்தவர்களுக்கு கஞ்சா பாவித்தது பற்றிய தகவல் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாது. பாரதி பற்றிய மதிப்பை எந்தளவிலும் பாதிக்காது. - சபேசன்

................................................................................

..............

நீங்கள் நீக்க கூடாது என்று சொல்லும் காரணமும் நான் நீக்குவது நல்லது என்பதுக்கு சொல்லும் காரணமும் வேறானது. நீங்கள் சொல்லும் காரணத்தோடு நான் முரண்படவில்லை. இந்த தலைப்பு வந்தவுடன் நானும்நல்லது என்று கருதியே கருத்தை பகிர்ந்து கொண்டேன். பின் அதுக்கு மேலதிகமாக வைக்கப்பட்ட கேள்விகளும் நகர்வையும் படித்து இந்த கருத்து எடுக்கபட்ட மூலத்தை மேற்கோள் காட்டுவது நல்லதென்று சொன்னேன். அது ஊடக மோதலுக்கு வழிவகுக்கும் என்றார்கள். தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கருத்துக்களை படித்து

(இந்த விவாதம் தொடங்கி இதுவரை புதுவை வெத்திலை போட்டதில் இருந்து கள்ளுக்குடித்த கதை. பெரியார் அபின் அடிச்ச கதை . கருணாநிதி என்று பலவும் வந்து விட்டது. இவ்வாறு கருத்தை தாண்டி கருத்தெழுதியவர்களின்மீது குறை கண்டுபிடிக்க முற்படும் போது அவர்களை நேசிக்கும் மக்களின் விசனத்துக்கு நாம் உள்ளாகின்றோம். இது இப்போதய சூழலில் தேவையா?) என்று தான் எழுதினேன்.

நீங்கள் சொல்லும் (பாரதி கஞ்சா அடித்தார் என்ற தகவலால் பாரதியின் பெயர் கெட்டு விட்டது என்றும்இ இங்கே இதைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்று ஓலமிடுபவர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான்.) காரணம் வேறு அதனுடன் நான் முரண்படுபவனும் அல்ல. ஆனால் நான் சொல்ல வேண்டி வந்ததின் காரணம்வேறு.

எனக்கு வைரமுத்துவை நிறைய பிடிக்கும். ஆனால் நிறைய பத்திரிகைகளில் அவர் சுயநலவாதி அவர் பொறாமை கொண்டவர் அவர் யாரையும் மதிக்கமாட்டார். தலைக்கனம் பிடித்தவர் என்றெல்லாம் பொரிந்து தள்ளுகின்றார்கள். அதற்காக நான் அவரை வெறுப்பதா ? எனக்கு பிடித்த்து அவரின் கவிதைகள். அவரிகள் எழுத்துக்கள்.

அதேபோல்தான் கண்ணதாசனும். குடித்தாலும் அவர் பேனா எடுத்தாலே அது அமிர்தம்தான்

பாரதியார் கஞ்சா அடித்தா என்ன கண்ணதாசன் தண்ணி அடித்து எழுதி இருந்தா என்ன யாழில எத்தனை பேர் தண்ணி அடித்து போட்டு எழுதுறனீங்க என்று சொல்லுங்கோ பார்போம்,நான் எழுதி போட்டு தான் அடிகிறனான்.

:P :P

ஆஹா! அப்படி போடுங்கய்யா! அப்படி போடுங்க!! :)

  • கருத்துக்கள உறவுகள்

"நீங்கள் சொல்லும் (பாரதி கஞ்சா அடித்தார் என்ற தகவலால் பாரதியின் பெயர் கெட்டு விட்டது என்றும் இங்கே இதைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்று ஓலமிடுபவர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான்.) காரணம் வேறு அதனுடன் நான் முரண்படுபவனும் அல்ல. ஆனால் நான் சொல்ல வேண்டி வந்ததின் காரணம் வேறு."

பாரதி ஒரு சாதாரணமானவன் எனின் அவன் கஞ்சா அடிச்சது ஒரு விடயமாகப் பேசப்படுமா..??! உலகில் எத்தனை பேர் கஞ்சா மற்றும் இதர வகை போதைப் பொருளுக்கு அறிந்தோ அறியாமலோ அடிமையாகி வாழ்வை அழிச்சிட்டிருக்கிறாங்க..! அவங்களைப் பற்றி நாம் கதைக்கிறமா..??! இல்ல விவாதிக்கிறமா..??! ஏன் சுப்பரமணிய பாரதி கஞ்சா அடிச்சது மட்டும்.. விவாத மேடைக்கு வருகுது..!

கண்ணதாசன் மது அருந்தியதை பல பெண்களோடு சரசமாடியதை எவராவது விவாத மேடைக்கு கொண்டு வருகினமா..??!

ஈவே ராமசாமி.. strip dance club போய் டான்ஸ் ஆடினார்.. அதைப் பற்றிப் பேசிறமா..??! ஈவே ராமசாமி.. மதுபோதைக்கு அடிமையாகி வாழ்ந்தார்.. அதற்காக அதை விவாத மேடைக்கு இழுக்கிறமா..??!

ஆனால்.. ஏன் பாரதி கஞ்சா அடித்ததை.. அதுவும் புதுவைக்குச் சென்றபோது அறியாமல் கிடைத்த பழக்கம் ஒன்றினால் ஏற்பட்ட விளைவை வைத்து அவரை "கஞ்சா அடிமை" என்று தலைப்பிட்டு விவாதிக்க வேண்டும்.

அவர் புகழுள்ள தமிழ் கவிஞன் என்பதால் தான் என்பதை உணராத போது..அவரின் தமிழுலகப் பெறுமதியைக் காக்க குரல் கொடுப்பவர்களை ஓலமிடுபவர்கள் என்பது ஆரோக்கியமானதல்ல..!

ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையையும் ஆராய்ந்தல் நல்ல பக்கமும் உண்டு.. கெட்ட பக்கமும் இருக்கும். அவற்றில் பல அவர்களே அறியாமல் செய்த தவறுகளால் கூட இருக்கும். வரலாற்றில் பல திரிபுகள் உள்ள நேரத்தில்.. பாரதியின் மரணத்தில் கூட விலக்க முடியாத மர்மம் உள்ள நிலையில்.. இவை எல்லாம் எதற்கு..??!

இந்த விவாதங்களால் பாரதி கஞ்சா குடிச்சான்.. நாங்க குடிச்சா என்ன..பாரதியே போதைக்கு அடிமை.. நாங்க போதையில மிதந்தால் தப்பா என்பது போன்ற அநாவசிய கேள்விகளும்.. அதற்கான விடை தேடல்களும் தான் தொடரும்..! இவற்றால் சமூகத்துக்கு கிடைக்கும் நன்மை.. கஞ்சா அடித்தலை அங்கீகரிப்பதா.. அல்லது மதுவிலக்கை எதிர்ப்பவர்களை ஆராதிப்பதா..???!

அர்த்தமற்ற விவாதங்களுக்கு வறுமை பிணி..எதிர்ப்புகள் மத்தியில் தம்மை தமிழால் நிலை நிறுத்திய பாரதி போன்ற மனிதர்களைப் பாவிப்பதை நாம் வெறுக்கிறோம். அதை அனுமதிப்பதால் நாம் எவரையும் சமூகப் பெரியவர் என்று மதிக்க வேண்டிய நிலையை அடையத் தேவையில்லை. அந்த வகையில்.. பல தாரம் மணந்த பெரிய மனிதர்கள் வேசம் போட்டுள்ள.. மனிதர்கள் தூசிக்குச் சமனாக நாமும் கருத முடியும்..! மோகன் சார்.. அதை தூக்கிட்டா..அவை உண்மை இல்லை என்றாகிடுமா..! அவரால் அவற்றைத் தூக்க முடியும் என்றால்.. ஏன் பாரதியை கஞ்சாவுக்கு அடிமை என்று சொல்லப் போட்ட தலைப்பை தூக்க முடியாது..??! அவருக்கும் இதில் ஏதோ சமூக நன்மை இருக்கிறது என்றால்.. இது போல பல தலைப்புக்களை வருக்காலத்தில் யாழ் களம் பார்ப்பது தவிர்க்க முடியாததாகும்..! :)

Edited by nedukkalapoovan

நெடுக்காலபோவான்!

என்ன இது? நீங்கள் முதலில் பாரதி கஞ்சா அடிக்கவில்லை, முடிந்தால் ஆதாரம் காட்டுங்கள் என்பது போன்று எழுதினீர்கள்.

இப்பொழுது புதுவைக்கு பாரதி போனதால் இந்தப் பழக்கம் வந்தது என்று நீங்களே சொல்கிறீர்கள்.

பாரதி கஞ்சா அடித்ததை வைத்து அவரை யாரும் இங்கே தரக்குறைவாக எழுதவில்லை. அப்படி எழுதுகின்ற அளவிற்கு இங்குள்ளவர்கள் முட்டாள்கள் அல்ல.

பாரதியை தரக்குறைவாக எழுதுவதற்கும் பேசுவதற்கும் பெரியார் பற்றாளர்களாகிய நாம் இடம் கொடுக்க மாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியார் கஞ்சா அடித்தா என்ன கண்ணதாசன் தண்ணி அடித்து எழுதி இருந்தா என்ன யாழில எத்தனை பேர் தண்ணி அடித்து போட்டு எழுதுறனீங்க என்று சொல்லுங்கோ பார்போம்,நான் எழுதி போட்டு தான் அடிகிறனான்.

:P :P

நல்லவேலை எழுதிப்போட்டு அடிக்கிறீங்க.

அடிச்சி போட்டு எழுதியிருந்தா கதை கந்தல் தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

பாரதி கஞ்சா அடித்ததை வைத்து அவரை யாரும் இங்கே தரக்குறைவாக எழுதவில்லை. அப்படி எழுதுகின்ற அளவிற்கு இங்குள்ளவர்கள் முட்டாள்கள் அல்ல.

ம் உண்மை தான். அந்தளவுக்குக் கிடையாது. :)

ஒருவருடைய மது அருந்ததோ, போதையருந்தல் பழக்கமோ அவரின் திறமைகளைக் குறைத்து எடைபோட்டது கிடையாது. நெடுங்காலபோவான் ஏன் இதற்குக் குழம்ப வேண்டும்?

எம் விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியும், தத்துவசிரியருமான தேசத்தின்குரல் பாலா அண்ணைா கூட மதுப்பழக்கம் உள்ளவர் தான்.( தலைவரால் அனுமதிக்கப்பட்ட ஒரே ஒருவர்) ஆனால் அவரின் திறமைக்கும், கொள்கை வகுப்பு, மற்றும் ஏனைய திறமைகளுக்கும் உள்ள மதிப்பு எள்ளவும் குறைந்ததில்லை.

ஆனால் அவரின் அந்தப் பழக்கம் கூட எம்மில் இருந்து அவரைப் பிரிந்து சென்றதற்கு ஒரு காரணமாக அமைந்தது என்பதையும் துன்பத்தோடு நினைவுபடுத்தத் தான் வேண்டும். எதிர்வரும் 14ம் திகதி அவரின் பிரிவு ஏற்பட்டு 8 மாதங்கள் ஆகின்றது.

Edited by தூயவன்

  • தொடங்கியவர்

பிள்ளைகள், எல்லாரும் சண்டை பிடிச்சது காணும்... நான் தலைப்பை மங்களகரமாக முடிச்சு வைக்கப்போறன்... இனி, இந்த கஞ்சா கதையைவிட்டுப்போட்டு தயவுசெய்து எல்லாருமா சேர்ந்து மகாகவியின்ற பாட்டுக்களை கேட்டு மகிழுங்கோ... :P

காக்கைச் சிறகினிலே

நந்தலாலா - நின்றன்

கரியநிறம் தோன்றுதையே!

நந்தலாலா!

காக்கைச் சிறகினிலே

நந்தலாலா - நின்றன்

கரியநிறம் தோன்றுதையே!

நந்தலாலா!

பார்க்கும் மரங்களெல்லாம்

நந்தலாலா - நின்றன்

பச்சைநிறந் தோன்றுதையே!

நந்தலாலா!

காக்கைச் சிறகினிலே

நந்தலாலா - நின்றன்

கரியநிறம் தோன்றுதையே!

நந்தலாலா!

கேட்கு மொழியில் எல்லாம்

நந்தலாலா - நின்றன்

கீதம் இசைக்குதடா!

நந்தலாலா!

காக்கைச் சிறகினிலே

நந்தலாலா - நின்றன்

கரியநிறம் தோன்றுதையே!

நந்தலாலா!

தீக்குள் விரலை வைத்தால்

நந்தலாலா - நின்னைத்

தீண்டும் இன்பம் தோன்றுதடா!

நந்தலாலா!

நந்தலாலா!

நந்தலாலா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த ஆத்மாவைப்பற்றி தவறாகவே வாழ்ந்திருந்தாலும் தப்பாகக்கதைக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள் எம் முன்னோர்கள். அந்த வகையில் உடல் இறந்தாலும் இறவாப்புகழ் கொண்ட ஒரு ஒப்பற்ற கவிஞனின் இந்த விமர்சனத்தை நான் விரும்பவில்லை.

பாரதி' கஞ்சா" சாப்பிட்டார்" என்பது நான் முன்னமே அறிந்திருந்த செய்தி, அவரைப்பற்றிய இந்த செய்திகள் உண்மையா என்று தமிழறிஞர்கள், மற்றும் கூகுளின் உதவிகளுடன் செய்த ஆராய்ச்சியின் பின் நான் அறிந்த செய்தி ' கவிஞருக்கு பல நேரங்களில் பரிசாய்க்கிடைத்தது "பட்டினி" வரம் தான். அந்த பசியினை மறக்கவே பாரதியார் அவர்கள் "கஞ்சா" வை உட்கொண்டதாகக்கூறப்பட்டிருக

  • தொடங்கியவர்

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே!

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்

வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல

காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்

கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு!

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே!

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்

கண்டதோர் வையை பொருனை நதி - என

மேவிய யாறு பலவோடத் - திரு

மேனி செழித்த தமிழ்நாடு!

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே!

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று

மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்

எத்தனையுண்டு புவிமீதே - அவை

யாவும் படைத்த தமிழ்நாடு!

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே!

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று

நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட

மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்

மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு!

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே!

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல

பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்

பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு!

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே!

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை

அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி

யாரம் படைத்த தமிழ்நாடு!

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே!

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய

தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று

சால்புறக் கண்டவர் தாய்நாடு!

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்

வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்

பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்

பார்த்திவர் நின்ற தமிழ்நாடு!

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே!

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்

தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை

ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக

நன்று வளர்த்த தமிழ்நாடு!

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே!

சக்தி பிறக்குது மூச்சினிலே!

சக்தி பிறக்குது மூச்சினிலே!

  • தொடங்கியவர்

பாயுமொளி நீ எனக்கு! பாா்க்கும்விழி நானுனக்கு!

தோயும்மது நீ யெனக்கு! தும்பியடி நானுனக்கு!

வாயுரைக்க வருகுதில்லை! வாழிநின்றன் மேன்மை யெல்லாம்!

தூயசுடா் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

வீணையடி நீ எனக்கு! மேவும்விரல் நானுனக்கு!

பூணும்வடம் நீயெனக்கு! புதுவயிரம் நானுனக்கு!

காணுமிடந் தோறுநின்றன் கண்ணினொளி வீசுதடி!

மாணுடைய பேரரசே! வாழ்வுநிலையே! கண்ணம்மா!

வானமழை நீ யெனக்கு! வண்ணமயில் நானுனக்கு!

பானமடி நீ எனக்கு! பாண்டமடி நானுனக்கு!

ஞானவொளி வீசுதடி! நங்கைநின்றன் சோதிமுகம்!

ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு! மேவுகடல் நானுனக்கு!

பண்ணுசுதி நீ யெனக்கு! பாட்டினிமை நானுனக்கு!

எண்ணியெண்ணிப் பாா்த்திடிலோா் எண்ணமிலை நின்சுவைக்கே!

கண்ணின்மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!

வீசுகமழ் நீ யெனக்கு! விாியுமலா் நானுனக்கு!

பேசுபொருள் நீ யெனக்கு! பேணுமொழி நானுனக்கு!

நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?

ஆசைமதுவே, கனியே, அள்ளுசுவையே! கண்ணம்மா!

காதலடி நீ யெனக்கு! காந்தமடி நானுனக்கு!

வேதமடி நீ யெனக்கு! வித்தையடி நானுனக்கு!

போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!

நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிா் நீ யெனக்கு! நாடியடி நானுனக்கு!

செல்வமடி நீ யெனக்கு! சேமநிதி நானுனக்கு!

எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!

முல்லைநிகா் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!

தாரையடி நீ யெனக்கு! தண்மதியம் நானுனக்கு!

வீரமடி நீ யெனக்கு! வெற்றியடி நானுனக்கு!

தாரணியில் வானுலகில் சாா்ந்திருக்கும் இன்பமெல்லாம்

ஓருருவ மாய்ச்சமைந்தாய்! உள்ளமுதமே! கண்ணம்மா!

ஆகா.. அருமை எனக்குப் பிடித்த பாடல்கள்..

கலைஞன் உங்கள் பணி தொடரட்டும்..

நன்றி

பலர் பாரதியின் மனைவியின் பெயர் கண்ணம்மா என்று நினைக்கின்றனர். ஆனால் பாரதியின் மனைவியின் பெயர் செல்லம்மா

இந்தக் கண்ணம்மா யார்?

பாரதிக்கு செல்லம்மா ஏற்ற மனைவியாக வாய்க்கவில்லை. இந்த நிலையில் பாரதி தன்னுடைய ஏக்கத்தை கண்ணம்மா என்ற கற்பனைப் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தினாரா?

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணம்மா என்பது பக்கத்து வீட்டுச் சிறுமி என நினைக்கின்றேன். பாடலில் கூட அது குழந்தையாகவே வர்ணிக்கப்பட்டுள்ளார். எனவே வேறு பெண் மீதான ஏக்கமாகத் திரிப்பது தவறு.

பாடலைப் பாருங்கள். அதைப் படிக்கின்றபோதே தெரியும். கண்ணம்மா என்பது சிறு குழந்தை என்று.

-----------------------------------

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே

என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே

அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே

ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி

ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி

உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி

மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி

உன்னைத் தழுவிடலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி

சற்றுன் முகம் சிவந்தால் மனது சஞ்சலமாகுதடி

நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு நெஞ்சம் பதைக்குதடி

உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ

சொல்லு மழலையிலே கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்

முல்லைச் சிரிப்பாலே எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்

இன்பக் கதைகளெல்லம் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ

அன்பு தருவதிலே உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ

மார்பில் அணிவதற்கே உன்னைப்போல் வைர மணிகளுண்டோ

சீர்பெற்று வாழ்வதற்கே உன்னைப்போல் செல்வம் பிறிதுமுண்டோ

"கண்ணம்மா என் காதலி" என்று பெருமையோடு அறிவித்தவன் பாரதி.

சிலவேளைகளில் பாரதி நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் கண்ணம்மா பற்றி மேலும் அறியக் கூடியதாக இருந்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.