Jump to content

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணம்மா என் காதலி என்பது 40களில் வந்த ஒரு திரைப்படத்தின் பெயர்.

Link to comment
Share on other sites

  • Replies 126
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பலர் பாரதியின் மனைவியின் பெயர் கண்ணம்மா என்று நினைக்கின்றனர். ஆனால் பாரதியின் மனைவியின் பெயர் செல்லம்மா

இந்தக் கண்ணம்மா யார்?

பாரதிக்கு செல்லம்மா ஏற்ற மனைவியாக வாய்க்கவில்லை. இந்த நிலையில் பாரதி தன்னுடைய ஏக்கத்தை கண்ணம்மா என்ற கற்பனைப் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தினாரா?

செல்லம்மாவையே ஆசையாய் கண்ணம்மா எண்டு சொல்லியிருக்கலாமே

Link to comment
Share on other sites

தூயவன் இணைத்த பாடலிலும் காதல் ரசம் சொட்டும் வரிகள் நிறைய உண்டு. ஒரு சிறுமியோ என்று சந்தேகப்படுவதற்கு ஏற்றபடியும் வரிகள் உண்டு.

பாரதியின் கண்ணம்மாவை ஆராய்வது ஒரு சுவாரஸ்யமான விடயமாக இருக்கும் என்றுதான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

தூயவன்! "கண்ணம்மா என் காதலி" என்ற தலைப்பில் பாரதியார் சில பாடல்களை எழுதியிருக்கிறார்.

கலைஞன் இணைத்த "வீணையடி நீயெனக்கு" என்ற பாடலும் "கண்ணம்மா என் காதலி" என்ற தலைப்பில் எழுதப்பட்டதுதான்.

பாரதியின் பாடல் தலைப்பை பின்பு 1945ஆம் ஆண்டு வந்த திரைப்படம் ஒன்றிற்கும் வைத்தார்கள்.

கண்ணனையே பாரதி ஒரு பெண்ணாக நினைத்து "கண்ணம்மா" என்று பாடினார்கள் என்று சொல்பவர்களும் உண்டு. மாணிக்கவாசகர் சிவனை பாடியது போன்று பாரதியும் கண்ணனை நினைத்து பாடியிருக்கக் கூடும்.

கண்ணம்மா யார் என்பதற்கு இப்படி பல பதில்கள் சொல்லப்படுகின்றன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி

உன்னைத் தழுவிடலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி

இதைச் சொல்கின்றீர்களா?

அதில் தப்பிருப்பதாகத் தோன்றவில்லை. குழந்தைகள் மீது அதீன அன்பு கொண்டவர்களுக்கு அப்படித் தோன்றலாம். குழந்தையில்லாதவர்கள் பிறர் குழந்தைகளில் அதிக அன்பு செலுத்துவதைப் போல, இந்த வரிகளும் அமைக்கப்பட்டிருக்கலாம். கள்வெறி என்பது அதிக அன்பினைச் சொல்வதற்குக் கவிஞர் பயன்படுத்தியிருக்கலாம்.

கண்ணம்மா பற்றிய ஊகத்தைத் திண்ணையிலும் படிக்கக் கிடைத்துது. ஆனால் அது பற்றிய பூரணமான விளக்கத்தைக் காணமுடியவில்லை. அந்தத் தொடர்பு என்பது காதல் ஏக்கத்தில் தானா என்பது பற்றிச் சொல்லப்படவில்லை.

பாரதியாருக்கு கண்ணம்மா என்ற பெயரில் ஒரு பெண்ணின் தொடர்பு இருந்ததாகவும், அந்தப் பெண்ணின் தம்பி என்று ஒருவரைச் சமீபத்தில் பெங்களூரில் தமக்கு அறிமுகம் செய்தார்கள் என்றும் ஒருவர் தெரிவித்தார். ஆவணப்படத்தில் பாரதியாருக்கு அபின் அருந்தும் பழக்கம் இருந்தது பற்றிய குறிப்பு இடம் பெற்றிருந்தது அனாவசியம் என்று இல. கணேசன் அம்ஷன் குமாரிடம் வருந்தினார். ஆனால் நான் அதில் ஒரு தவறும் இல்லை எனத் தெரிவித்தேன். பாரதியார் போன்ற ஒரு வரைப் பற்றிய தகவல்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படுவது சரிதான்; அபின் அருந்தும் பழக்கம் இருந்ததாலேயே அவரது ஆளுமையோ அவரது பங்களிப்போ பங்கம் அடைந்துவிடாது என்று சொன்னேன். பொதுவாக நம் மக்களுக்கு எதிர்மறையான விஷயங்கள்தாம் உடனடியாக மனதில் பதிந்துவிடுகின்றன. இப்போதுகூடப் பார்த்தோம் அல்லவா, கலந்துரையாடலில் உத்சாகத்துடன் பேசப்பட்டது எதிர்மறையானவைதாமே, என்றார், இல. கணேசன்.

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.tamilnation.org/literature/pmunicode/mp049.htm

பாரதியார் பற்றிய பாடல்கள் இங்கிருக்கின்றன.

கண்ணனைக் கூடத் தந்தை, சீடன், கரு, குழந்தை, என்று பல விதங்களில் பாடியுள்ளார். வெறுமனே பாடல்களைமட்டும் வைத்து அவரில் குறை கண்டுபிடிப்பது அசிங்கம். அது அழகானதுமல்ல.

உண்மையாக இருந்தால் அது பற்றிய ஆதாரங்களைத் திரட்டுங்கள். ஏற்றுக் கொள்ளலாம். வெறுமனே பாடல்களில் இருக்கின்றது என்பது பொருத்தமான விவாதமாக அமையாது.

1. கண்ணன் - என் தோழன்

2. கண்ணன் - என் தாய்

3. கண்ணன் - என் தந்தை

4. கண்ணன் என் - சேவகன்

5. கண்ணன் என் அரசன்

6. கண்ணன் என் சீடன்

7. கண்ணன் - எனது சற்குரு

8. கண்ணம்மா - என் குழந்தை

9. கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

10. கண்ணன் - என் காதலன்

11. கண்ணன் - என் காதலன் - 2

12. கண்ணன் - என் - காதலன் -3

13. கண்ணன் - என் காதலன் -4

14. கண்ணன் - என் காதலன் - 5

15. கண்ணன் - என் காந்தன்

16. கண்ணம்மா - என் காதலி - 1

17. கண்ணம்மா - என் காதலி - 2

18. கண்ணம்மா - என் காதலி - 3

19. கண்ணம்மா - என் காதலி - 4

20. கண்ணம்மா - என் காதலி - 5

21. கண்ணம்மா - என் காதலி - 6

22. கண்ணன் - என் ஆண்டான்

23. கண்ணம்மா - எனது குலதெய்வம்

என்ற தொகுப்புக்களில் அவரது பாடல்கள் உள்ளன. ஒரு கவிஞன் கட்டாயம் தன்னிலையை வைத்துத் தான் பாடல் இயற்றுவான் என்றில்லை. என்ன வேண்டுமானாலும் எடுகோளாக்க கொள்ளலாம். ஆண்பிள்ளை என்றால் பாண்டியா என்றும், பெண் பிள்ளை என்றால் கண்ணம்மா என்றுத் தானாம் அழைப்பாராம். அது அவருடைய கருதுகோளாக இருக்கலாம்.

கண்ணனைக் கூடக் காதலன், என்பதில் இருந்து பல நிலைகளிலும் கண்ணம்மாவைக் காதலி, தெய்வம், குழந்தை என்றும் பலநிலைகளில் பார்த்துள்ளார். எனவே அது போல அமையச் சாத்தியமல்ல. ஒரு ஊகத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு கவிஞனை எடைபோட்டிட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈவே ராமசாமி.. strip dance club போய் டான்ஸ் ஆடினார்.. அதைப் பற்றிப் பேசிறமா..??! ஈவே ராமசாமி.. மதுபோதைக்கு அடிமையாகி வாழ்ந்தார்.. அதற்காக அதை விவாத மேடைக்கு இழுக்கிறமா..??!

நமக்கு புத்திகெட்டு இப்படியான பழக்கங்களுக்கு ஆளாகிவிட்டோமே என்ற வருத்தம் இருந்தது.. பெரியாரும் நம்மளைப்போலத்தான் இருந்தார் என்று நினைக்க நம்மைப் பற்றி நமக்கே பெருமையாக இருக்கின்றது :):lol: :P B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணம்மா - என் காதலி - 1

(காட்சி வியப்பு)

செஞ்சுருட்டி - ஏகதாளம்

ரசங்கள் : சிருங்காரம், அற்புதம்

சுட்டும் விழிச்சுடர் தான், - கண்ணம்மா!

சூரிய சந்திர ரோ?

வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!

வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் - புடவை

பதித்த நல் வயிரம்

நட்ட நடு நிசியில் - தெரியும்

நக்ஷத் திரங்க ளடீ! ... 1

சோலை மல ரொளியோ - உனது

சுந்தரப் புன்னகை தான்

நீலக் கடலலையே - உனது

நெஞ்சி லலைக ளடீ!

கோலக் குயி லோசை - உனது

குரலி னிமை யடீ!

வாலைக் குமரி யடீ, - கண்ணம்மா!

மருவக் காதல் கொண்டேன். ... 2

சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா!

சாத்திர மேதுக் கடீ!

ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா!

சாத்திர முண்டோ டீ!

மூத்தவர் சம்மதியில் - வதுவை

முறைகள் பின்பு செய்வோம்;

காத்திருப் பேனோ டீ? - இதுபார்,

கன்னத்து முத்த மொன்று! ... 3

----

17. கண்ணம்மா - என் காதலி - 2

(பின் வந்து நின்று கண் மறைத்தல்)

நாதநாமக்கிரியை - ஆதிதாளம்

சிருங்கார ரசம்

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே

வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;

மூலைக் கடலினையவ் வான வளையம்

முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;

நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,

நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே

சாலப் பலபல நற் பகற்கனவில்

தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். ... 1

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,

ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,

பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்.

பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்,

ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்;

ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;

''வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!

மாய மெவரிடத்தில்?'' என்று மொழிந்தேன். . ... 2

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே

திருமித் தழுவி ''என்ன செய்தி சொல்'' என்றேன்;

''நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?

நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?

திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?

சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?

பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே

பெற்ற நலங்கள் என்ன? பேசுதி'' என்றாள். ... 3

''நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;

நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;

திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;

சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;

பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே

பெற்றுதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;

சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,

திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்''. ... 4

-----

18. கண்ணம்மா - என் காதலி - 3

(முகத்திரை களைத்தல்)

நாதநாமக்கிரியை - ஆதிதாளம்

சிருங்கார ரசம்

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;

வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;

வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் - துணி

மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;

சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்

சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ? ... 1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் - பண்டை

ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ?

ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்

ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?

யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் - வலு

வாக முகத்திரையை அகற்றி விட்டால்?

காரிய மில்லையடி வீண்ட சப்பிலே - கனி

கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? ... 2

------

19. கண்ணம்மா - என் காதலி - 4

(நாணிக் கண் புதைத்தல்)

நாதநாமக்கிரியை - ஆதிதாளம்

சிருங்கார ரசம்

மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை - இவன்

மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?

சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ? - இங்கு

செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ ?

வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன் - நின்றன்

மதங்கண்டு துகிலினை வரிதுரிந்தேன்.

என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? - எனக்

கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா! ... 1

கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? - கன்னங்

கன்றிச் சிவக்கமுத்த மிட்ட தில்லையோ!

அன்னிய மகாநம்முள் எண்ணுவதில்லை - இரண்

டாவிவயுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?

பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? - துகில்

பறித்தவள் கைப்பறிக்கப் பயங்கொள்வனோ?

என்னைப் புறமெனவுங் கருதுவதோ? - கண்கள்

இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ? ... 2

நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் - சுவை

நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?

பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் - தம்முள்

பன்னி உபசரணை பேசுவ துண்டோ ?

நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே - விண்ணை

நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?

மூட்டும் விறகிளையச் சோதி கவ்வுங்கால் - அவை

முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? ... 3

சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திடேன்; - அவர்

சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;

நேற்று முன்னாளில் வந்து உறவன்றடீ! - மிக

நெடும்பண்டைக் காலமுதற் சேர்ந்து வந்ததாம்.

போற்றுமி ராமனென முன்புதித்தனை, - அங்கு

பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;

ஊற்றுமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோ ன்- கண்ணன்

உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்கு நான். ... 4

முன்னை மிகப்பழமை இரணியனாம் - எந்தை

மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;

பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன் - ஒளிப்

பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.

சொன்னவர் சாத்திரத்தில் மிக வல்லர்காண்; - அவர்

சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;

இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; - இதில்

ஏதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே? ... 5

----

20. கண்ணம்மா - என் காதலி - 5

(குறிப்பிடம் தவறியது)

செஞ்சுருட்டி - ஆதி தாளம்

சிருங்கார ரசம்

தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்

செண்பகத் தோட்டத்திலே,

பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே

பாங்கியோ டென்று சொன்னாய்.

வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!

மார்பு துடிக்கு தடீ!

பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே

பாவை தெரியு தடீ! ... 1

மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே

வேதனை செய்கு தடீ!

வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா

வந்து தழுவுது பார்!

மோனத் திருக்கு தடீ! இந்த வையகம்

மூழ்கித் துயிலினிலே,

நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்

நகரத் துழலுவதோ? ... 2

கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும்

காவலுன் மாளிகையில்;

அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான்

அங்கு வருவதற் கில்லை;

கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும்

கூடிக் கிடக்கு தங்கே;

நடுமை யரசி யவள் - எதற்காகவோ

நாணிக் குலைந்திடுவாள். ... 3

கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம்

கொஞ்சிக் குலவி யங்கே,

ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை

ஆயிரங்கோடி முறை

நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்

நல்ல களி யெய்தியே,

பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்

பண்ணிய தில்லை யடி! ... 4

----

21. கண்ணம்மா - என் காதலி - 6

யோகம்

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;

தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;

வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;

தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! ... 1

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;

பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;

காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!

மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! ... 2

வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;

பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;

ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;

ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே கண்ணம்மா! ... 3

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;

பண்ணுசுதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;

கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! ... 4

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;

பேசுபொருள் நீ யெனக்குப் பேணு மொழி நானுனக்கு;

நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?

ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! . ... 5

காதலடி நீ யெனக்குக் காந்தமடி நானுனக்கு;

வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!

நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா! . ... 6

நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;

செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;

எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!

முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! ... 7

தரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;

வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;

தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்

ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! ... 8

-----

http://bharani.dli.ernet.in/pmadurai/mp049.html

Link to comment
Share on other sites

கண்ணம்மா விடயத்தை நான் எதிர்மறையான விடயமாகப் பார்க்கவில்லை.

கண்ணம்மா யார் என்பதற்கு அவள் ஒரு சிறுமி என்று விளக்கம் சொல்பவர்கள் வெகு குறைவு.

பெரும்பாலானவர்கள் சொல்வது அது கண்ணனைக் குறிக்கின்றது என்றுதான்.

பாரதி ஒரு சைவர் அல்ல. அவர் ஒரு வைணவர்.

வைணவத்தில் கண்ணனை பலவிதமாகக் கற்பனை செய்து பாடி இருப்பார்கள்.

பெரியாழ்வார் கண்ணனை தன்னுடைய ஒரு குழந்தையாக கற்பனை செய்து பாடினார்.

ஆண்டாள் கண்ணனை காதலனாக காதல் மற்றும் காமரசத்தோடு பாடினார்.

இதைப் பார்த்து பாரதி கண்ணனை எல்லாவிதமாகவும் (தோழன், தாய், தந்தை, சீடன், காதலன்....) கற்பனை செய்து பாடினார்.

ஆனால்,..... கண்ணன் என் காதலன் என்று பாரதி பாடிவிட்டார், பின்பு அதே கண்ணனை மீண்டும் கண்ணம்மாவாக மாற்றி "கண்ணம்மா என் காதலி" என்று பாடினாரா என்ற கேள்வி எழுகிறது.

இந்த இடத்தில் பாரதியின் வேறு சில பாடல்கள் சில சேதிகளை சொல்லாமல் சொல்கின்றன.

நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ - இந்த

மானிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்

வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்

நசையறு மணம் கேட்டேன் - நித்தம்

நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்

தசையினைத் தீச்சுடினும் - சிவ

சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்

அசைவுறு மதி கேட்டேன் - இவை

அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ

ஒரு படைப்பாளி தனக்கு நேர்ந்த நிலையை நொந்து பாடுகின்றான். சுடர்மிகும் அறிவுடன் படைத்த தன்னை மாநிலம் பயனுற வாழ்வதற்கான வல்லமையை தரும்படி கேட்கிறான்.

ஒரு படைப்பாளி படைப்பை செய்கின்ற போதுதான் மாநிலம் பயனுற வாழ்கின்றான்.

படைப்பதற்கான சுடர்மிகும் அறிவு இருந்தும் படைப்பதற்கான வல்லமை இன்றி பாரதி தவிக்கிறார். இதற்கு அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல்தான் காரணமாக இருக்கும்.

பாரதி போன்ற ஒரு கவிஞனை ஆள்பவர்களின் அடக்குமுறை மன உளைச்சலுக்கு ஆழ்த்தாது. வறுமையும் அவரை ஒன்றும் செய்ய முடியாது. இவைகள் படைப்பதற்கான உத்வேகத்தைத்தான் கொடுக்கும்.

ஒரு படைப்பாளியால் வீட்டில் பிரச்சனை வருகின்ற போதுதான் மன உளைச்சல் ஏற்பட்டு படைக்க முடியாது போகும். அதைத்தான் பாரதி நொந்து வீணையை புழுதியில் எறிய வேண்டாம் என்று பாடுகிறார்.

மறு புறம் பாரதியின் "குயில் பாடல்களை" பார்த்தால் அதில் காதல் ரசம் சொட்டுகிறது. அதில் வர்ணிக்கப்படும் காதலி செல்லம்மா அல்ல.

பாரதி மிகப் பெரிய ஏக்கங்களுடன் வாழ்ந்து மறைந்திருக்கிறான் என்பது தெரிகிறது.

கண்ணம்மா யார் என்பது மட்டும் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

கண்ணம்மா என்பது கற்பனைப்பாத்திரம்.... அது எப்படி கஞ்சா பயன்படுத்தும்???

கண்ணம்மா என்பது பாரதியின் கற்பனை கிடையது... அவரது இளம்பிராயத்து காதலி... சிறப்பான குரல்வளம் கொண்ட பாடகி... தாள்த்தப்பட்ட பெண் ஒருத்தியோடு சுற்றுகிறார் என்பதுக்காகவே சுப்பிரமணி ஐயர் பாரதிக்கு சிறு பிரயத்திலேயே செல்லம்மாவுக்கு மணம் முடித்து வைத்தார்...!

ஆனால் பாரதி சங்கரன்கோயிலில் எனக்கு அவள் திலகமிட்டாள், நான் மூர்ச்சை உற்றேன் என்றார்... அதன் பின்னர் அவளை பார்க்க வில்லை என்கிறார் பாடல்களில்.... அனால் அதுக்கு பிறகு அவருக்கு திருமணம் ஆகி விட்டது என்கிறார்கள் அறிஞர்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு புத்திகெட்டு இப்படியான பழக்கங்களுக்கு ஆளாகிவிட்டோமே என்ற வருத்தம் இருந்தது.. பெரியாரும் நம்மளைப்போலத்தான் இருந்தார் என்று நினைக்க நம்மைப் பற்றி நமக்கே பெருமையாக இருக்கின்றது :):lol: :P B)

செய்யிறது எல்லாம் செய்து போட்டு 50 வயசுக்கு பிறகு .",நான் செய்த பிழையை நீங்கள் செய்யாதயுங்கோ" என்று இளசுகளுக்கு புத்திமதி புகட்டனும் அப்பதான் பெரியமனிசன் ஆகலாம்

:D:D

Link to comment
Share on other sites

இயற்கையின் காதலனாய்....! பாரதியின் பாடல் திரைப்படதில்...!

நிற்பதுவே... நடப்பதுவே.. பறப்பதுவே...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணம்மா என்பது பாரதியின் கற்பனை கிடையது... அவரது இளம்பிராயத்து காதலி... சிறப்பான குரல்வளம் கொண்ட பாடகி... தாழ்த்தப்பட்ட பெண் ஒருத்தியோடு சுற்றுகிறார் என்பதுக்காகவே சுப்பிரமணி ஐயர் பாரதிக்கு சிறு பிரயத்திலேயே செல்லம்மாவுக்கு மணம் முடித்து வைத்தார்...!

ஆனால் பாரதி சங்கரன்கோயிலில் எனக்கு அவள் திலகமிட்டாள், நான் மூர்ச்சை உற்றேன் என்றார்... அதன் பின்னர் அவளை பார்க்க வில்லை என்கிறார் பாடல்களில்.... அனால் அதுக்கு பிறகு அவருக்கு திருமணம் ஆகி விட்டது என்கிறார்கள் அறிஞர்கள்....!

தகவலுக்கு நன்றி தயா

இக்காலத்தில் காதலித்த பின்னர் வேறு ஒருவனைக், ஒருத்தியைக் கட்டினாலும், குழந்தைக்கு காதலர் பெயர் வைப்பதை ஆரம்பித்து வைத்தவர், அல்லது அப்படியான செய்கைக்கு அடித்தளமிட்டவர் பாரதி எனக் கருதலாமா? B) :)

Link to comment
Share on other sites

பாரதியாரின் பாடல்களை இணைத்த வலைஞனிற்கு நன்றிகள்

பாரதியின் வரிகள் இதயச்சுவரெங்கும் சொல்லமுடியாத உணர்வலைகளை உருவாக்கி நிற்கின்றது.

காக்கைச் சிறகினிலே நந்தலாலா

என்ற பாடல் பாடியவரின் குரலும் மிக மிக அருமை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகின்றுது

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைணவத்தில் கண்ணனை பலவிதமாகக் கற்பனை செய்து பாடி இருப்பார்கள்.

பெரியாழ்வார் கண்ணனை தன்னுடைய ஒரு குழந்தையாக கற்பனை செய்து பாடினார்.

ஆண்டாள் கண்ணனை காதலனாக காதல் மற்றும் காமரசத்தோடு பாடினார்.

சைவத்திலும் அவ்வாறு உண்டு. மாணிக்கவாசகர் தன்னை சக்தியாகவும், சிவனைக் காதலனாக வைத்தும் பாடல்கள் பாடியுள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

என்ன இது? நீங்கள் முதலில் பாரதி கஞ்சா அடிக்கவில்லை, முடிந்தால் ஆதாரம் காட்டுங்கள் என்பது போன்று எழுதினீர்கள்.

இப்பொழுது புதுவைக்கு பாரதி போனதால் இந்தப் பழக்கம் வந்தது என்று நீங்களே சொல்கிறீர்கள்.

பாரதி கஞ்சா அடித்ததை வைத்து அவரை யாரும் இங்கே தரக்குறைவாக எழுதவில்லை. அப்படி எழுதுகின்ற அளவிற்கு இங்குள்ளவர்கள் முட்டாள்கள் அல்ல.

பாரதியை தரக்குறைவாக எழுதுவதற்கும் பேசுவதற்கும் பெரியார் பற்றாளர்களாகிய நாம் இடம் கொடுக்க மாட்டோம்.

நாம் பாரதி கஞ்சா அடிச்சார் என்பதை அதுவும் போதை ஏற்றுவதற்காக கஞ்சா பாவித்தார் என்பதை ஆதாரங்கள் இன்றி.. ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை..!

எவரும் பாரதி கஞ்சா அடித்தார் என்பதனை சான்றுகள் ரீதியில் நிறுவவில்லை. அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதை அடிப்படையாக கொண்டுதான் சில கருத்துக்கள் உள்ளன.

நாம் அதை ஏற்கவில்லை. ஆனால் ஏற்றுக் கொள்பவர்களுக்கு அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளவற்றின்.. வேறுபட்ட வடிவங்களைக் காட்ட வேண்டி இருக்கிறது..!

அந்த வகையில் தான்.. பாரதி புதுவை சென்ற சமயம் கஞ்சா எடுத்தார்.. என்று.. ஒரு ஆக்கத்தில் உள்ளதை தந்ததோம்..! அதற்காக நாம் அதை ஏற்றுக் கொண்டதென்ற அர்த்தமல்ல..! இப்படி பல வடிவங்களில் பாரதி.. கஞ்சா விவாகாரம்..திரிபுகளூடு பேசப்படுகிறது. என்பதை உணர வைப்பதே நோக்கம்..!

அதை உங்கள் கேள்வி மூலம் நாம் செய்துள்ளோம்..!

பண்டைய காலத்தில் மருத்துவத் தேவைகளுக்காக சில மூலிகைகள் பாவிக்கப்பட்டன. அதில் தற்போது போதை ஏறப் பாவிக்கப்படும் சில செடிகளும்.. சிறிய அளவில் பாவிக்கப்பட்டன.

கஞ்சா மற்றும் போதை தரும் செடிகள் புகை மூலமே போதை ஏற்றும் நோக்கில் அதிகம் குருதிக்குள் கொண்டு செல்லப்பட்டச் செய்யப்படுகின்றன. அவை அற்ககோல் போன்று அல்ல..! அற்ககோல் இலகுவாக உணவுக்கால்வாய் மூலம் குருதிக்குள் எடுப்பட்டு விடும்..!

பண்டைய காலத்தில் மூலிகைகள்..உணவுக்கால்வாய் மூலம் உள்ளெடுக்கப்படுவது அதிகம் மருத்துவத் தேவைகள் கருதியே செய்யப்பட்டன..! கஞ்சாச் செடியும் சில மருத்துவத் தேவைகளுக்காகப் கட்டுப்பாட்டளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது சிறிய அளவில்..!

பாரதி கஞ்சா உண்டார் என்பதாக வெளி வரும் கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளை.. பார்ப்பது.. அவற்றின்... மெய்மையைப் பரிசீலிக்க உதவும்.. என்ற வகையில்..

பாரதி "எலுமிச்சை அளவு கஞ்சா" உண்டார்.. என்பது பாரதி உணவுக்கால்வாய் மூலம் கஞ்சா எடுத்துள்ளார் என்று வாதத்தை வைத்துக் கொண்டு பாரதி மருத்துவ ரீதியில் அதை உண்டிருக்கக் கூடும்..! மருத்துவம் ரீதியில் உண்பதை.. தவறான வழிநடத்தலின் பெயரில் அதை அளவுக்கு அதிகமாகவும் உண்டிருக்கலாம்..!

பாரதி கஞ்சா உண்டது என்ற கருத்துக்களில் அவர் நோயால் வாடிய சமயங்களில் என்ற இன்னோர் விடயமும் உள்ளதை நோக்கும் போது பாரதி மருத்துவ நோக்கம் கருதி உண்டதைத்தான் தவறான புரிதல் மூலம்.. அல்லது வேண்டும் என்றே அவரை கஞ்சா அடிமை என்று கூட அவரின் செல்வாக்கை விரும்பாத சக்திகள்.. அவர் மீது கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டிருக்கலாம்..! அதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளது..!

எனவே வரலாற்று ரீதியா எந்த அடிப்படை ஆதாரங்களும் இன்றி எழுந்துள்ள இந்தக் கருத்தியலை.. நாம் ஏற்கத் தயார் இல்லை. நாம் ஏற்கவில்லை என்பதற்காக உலவி வரும் கருத்தியலுக்கு சாவு மணி அடிக்கப்பட்டதாக எண்ணி வாழாதிருந்திட முடியாது.

அதனால் தான்.. உலவும் கருத்துக்களின் பலவீனங்களை அதன் போக்கில் சென்று எடுத்துச் சொல்ல முற்படுகின்றோம்..! அதற்காக நாம் "பாரதி கஞ்சாவுக்கு அடிமை" என்ற பதப்பிரயோகத்தை தவறியும் செய்யத் தயார் இல்லை..! பாரதி மதுவை வெறுத்தவன்.. போதையை வெறுத்தவன்.. சமூக விழிப்புணர்வில்.. மதுவை வெறுத்தவன்.. மாறாக தென்னையை வெட்டிக்கொண்டு கள்ளுக் கொட்டில் திறக்க முழக்கமிட்டவனல்ல.. அவன்..! :lol:

------------

எமது வாதத்திற்கான ஆதாரங்கள்..

கஞ்சா என்று தமிழில் அழைக்கப்படுவது..பொபின் (Papaver somniferum) என்ற செடியில் இருந்து பெறப்படுகிறது..

அதில் அதிகம் கெரோயின் என்ற வேதியல் உள்ளது.. ஆரம்பத்தில் மருத்துவத் தேவைகளுக்காகப் பாவிக்கப்பட்டது.. பின்னர் போதையேற்றலுக்கு என்று பாரிய அளவில் உள்ளெடுக்கப்பட்டு பாவிக்கப்படுகிறது..!

பொபின் உலகின் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. இந்தியாவிலும் அது பயிரிடப்பட்டே வந்தது..!

The opium poppy was cultivated in lower Mesopotamia as long ago as 3400 BC.[4] The chemical analysis of opium in the 19th century revealed that most of its activity could be ascribed to two ingredients, codeine and morphine.

Heroin was first synthesized in 1874 by C.R. Alder Wright, an English chemist working at St. Mary's Hospital Medical School in London, England. He had been experimenting with combining morphine with various acids. He boiled anhydrous morphine alkaloid with acetic anhydride over a stove for several hours and produced a more potent, acetylated form of morphine, now called diacetylmorphine. The compound was sent to F.M. Pierce of Owens College in Manchester for analysis, who reported the following to Wright:.

From 1898 through to 1910 heroin was marketed as a non-addictive morphine substitute and cough medicine for children. Bayer marketed heroin as a cure for morphine addiction before it was discovered that heroin is converted to morphine when metabolized in the liver. The company was somewhat embarrassed by this new finding and it became a historical blunder for Bayer.[7]

As with aspirin, Bayer lost some of its trademark rights to heroin following the German defeat in World War I. [8]

In the United States the Harrison Narcotics Tax Act was passed in 1914 to control the sale and distribution of heroin. The law did allow heroin to be prescribed and sold for medical purposes. In particular, recreational users could often still be legally supplied with heroin. In 1924, the United States Congress passed additional legislation banning the sale, importation or manufacture of heroin in the United States. It is now a Schedule I substance, and is thus illegal there.

--------------

http://en.wikipedia.org/wiki/Heroin

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதனால் தான்.. உலவும் கருத்துக்களின் பலவீனங்களை அதன் போக்கில் சென்று எடுத்துச் சொல்ல முற்படுகின்றோம்..! அதற்காக நாம் "பாரதி கஞ்சாவுக்கு அடிமை" என்ற பதப்பிரயோகத்தை தவறியும் செய்யத் தயார் இல்லை..! பாரதி மதுவை வெறுத்தவன்.. போதையை வெறுத்தவன்.. சமூக விழிப்புணர்வில்.. மதுவை வெறுத்தவன்.. மாறாக தென்னையை வெட்டிக்கொண்டு கள்ளுக் கொட்டில் திறக்க முழக்கமிட்டவனல்ல.. அவன்..!

அதுசரிங்கோ........................ சாதிகள் இல்லயடி பாப்பா எண்டு பாடிப்போட்டு............... சமூகத்த சீர்திருத்தணும் எண்டு சொல்லிப்போட்டு................... தன்ர குடும்பத்தையே சீர்திருத்த முடியல................ பிறகு என்னத்த சமூக விழிப்புணர்வெண்டு சொல்லி............................ தன்ர மகளுக்கு எண்டு வரேக்க வாயை மூடிக்கொண்டு அடங்கிப்போன கோழைதானே பாரதி.................. வெறும் பாட்டில வீரம் சொன்னா போதுமா??????????????? பாட்டில விழிப்புணர்வு சொன்னாப் போதுமா???????????????? செயலில செய்தெல்லோ காட்டியிருக்கணும்.............................

. மகாகவிஞன் எண்டுறியள்.................. அதின்ர அர்த்தம் மகாபொய்யன் எண்டதா இருக்குமோ?????????????? :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் உண்மை தான். அந்தளவுக்குக் கிடையாது. :lol:

ஒருவருடைய மது அருந்ததோ, போதையருந்தல் பழக்கமோ அவரின் திறமைகளைக் குறைத்து எடைபோட்டது கிடையாது. நெடுங்காலபோவான் ஏன் இதற்குக் குழம்ப வேண்டும்?

எம் விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியும், தத்துவசிரியருமான தேசத்தின்குரல் பாலா அண்ணைா கூட மதுப்பழக்கம் உள்ளவர் தான்.( தலைவரால் அனுமதிக்கப்பட்ட ஒரே ஒருவர்) ஆனால் அவரின் திறமைக்கும், கொள்கை வகுப்பு, மற்றும் ஏனைய திறமைகளுக்கும் உள்ள மதிப்பு எள்ளவும் குறைந்ததில்லை.

ஆனால் அவரின் அந்தப் பழக்கம் கூட எம்மில் இருந்து அவரைப் பிரிந்து சென்றதற்கு ஒரு காரணமாக அமைந்தது என்பதையும் துன்பத்தோடு நினைவுபடுத்தத் தான் வேண்டும். எதிர்வரும் 14ம் திகதி அவரின் பிரிவு ஏற்பட்டு 8 மாதங்கள் ஆகின்றது.

நெடுக்காலபோவன் குழம்பல்ல.. மக்களை நோக்கி.. சொல்லப்படும் விடயத்திற்கான ஆதார அடிப்படைகள் குறித்து ஆய்வது சிறப்பு..!

அதுமட்டுமன்றி.. பாரதியை.. எதிர்க்கும் சக்திகளும் உள்ளனர். அவர்களும் வேண்டும் என்றே இப்படியான பிரச்சாரங்களை.. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தங்களின் சந்தர்ப்பவாத நோக்கில் பயன்படுத்தலாம்..! எனவே நாம் ஒரு ஆய்வுமின்றி இவ்வகையான கருத்துக்களைக் கேட்க முடியாது..!

உதாரணத்துக்கு உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த திலீபன் அண்ணாவுக்கு குருதிப் புற்றுநோய்.. ஆட்டுக்குடல் வைச்சது.. அவர் அதிகம் உயிர் வாழமாட்டார் அதுதான் உண்ணா நோன்பிருந்தவர் என்று தமிழீழ விரோத இந்திய வல்லாதிக்க ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்தனர்.

அவை பொய்யென ஆனது.. திலீபன் அண்ணாவின் உடல் யாழ் மருத்துவ பீடத்துக்கு வந்த போது..!

யாழ் மருத்துவ பீடத்தில் திலீபன் அண்ணாவின் உடலை நேரடியாக கண்டு மனித தசைத் தொகுதிகள் தொடர்பான விளக்கங்களைப் பெற்றவன் என்ற வகையில்.. எங்கள் தியாக தீபத்தின் தியாகத்தையே எள்ளி நகையாடி கூட்டம்.. பாரதியை விட்டு வைக்குமா..??! எனவே நாம் தான்.. ஆராய வேண்டும்.. கருத்துக்கள் எத்துணை பழமையானதாக இருக்கலாம்.. இல்ல எத்துணை திறமையானவர் என்று காட்டிக் கொள்பவர் சொல்வதாக இருக்கலாம்..! அந்த வகையில்... எமது நிலைப்பாட்டில் தவறை நாம் காணேல்ல..!

ஈவெ முன்னிலைப்படுத்த சில சக்திகள் பாரதியையும் வைச்சுப் பிரச்சாரம் செய்யும் இன்றைய நிலையில்.. விழிப்புடன் விடயங்களை ஆராய்ந்து அணுக வேண்டியது எமது கடமை..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சு பொறுக்குதில்லையே ............................. பாரதி கஞ்சா அடிக்காமல் தான் செத்தார் எண்டது நிரூபிக்கிறது.................... அதுக்கு என்னங்கோ ஆதாரம்??????????????????????????? பாரதின்ர உடம்ப மருத்துவ பீடத்துக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டுவரேக்கு நீங்களும் நீண்டு ஆராய்ஞ்சனிங்களோ???????????????????????? :P

Link to comment
Share on other sites

தூயவன்!

"கண்ணனையே பாரதி ஒரு பெண்ணாக நினைத்து "கண்ணம்மா" என்று பாடினார்கள் என்று சொல்பவர்களும் உண்டு. மாணிக்கவாசகர் சிவனை பாடியது போன்று பாரதியும் கண்ணனை நினைத்து பாடியிருக்கக் கூடும்."

இப்படி நான் முதலில் எழுதியதை (post79) கவனிக்கவில்லையா?

நெடுக்காலபோவான்!

நீங்கள் எழுதியதை ஒரு முறை மீண்டும் படித்துப்பர்ருங்கள்வேறு ஒருவர் எழுதியதை மேற்கோள்காட்டி எழுதியதாக அதில் தெரியவில்லை. உங்களுடைய கருத்தாகவே அதை எழுதி இருக்கிறீர்கள். பாரதி புதுவைக்கு போனதால் வந்த பழக்கம் என்று சமாதானம் சொல்லி பாரதியை சிறுமைப்படுத்த வேண்டாம் என்று கேட்டிருக்கிறீர்கள்.

உங்களுக்குள் ஏன் இத்தனை குழப்பம்?

ஆனால்.. ஏன் பாரதி கஞ்சா அடித்ததை.. அதுவும் புதுவைக்குச் சென்றபோது அறியாமல் கிடைத்த பழக்கம் ஒன்றினால் ஏற்பட்ட விளைவை வைத்து அவரை "கஞ்சா அடிமை" என்று தலைப்பிட்டு விவாதிக்க வேண்டும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்!

"கண்ணனையே பாரதி ஒரு பெண்ணாக நினைத்து "கண்ணம்மா" என்று பாடினார்கள் என்று சொல்பவர்களும் உண்டு. மாணிக்கவாசகர் சிவனை பாடியது போன்று பாரதியும் கண்ணனை நினைத்து பாடியிருக்கக் கூடும்."

இப்படி நான் முதலில் எழுதியதை (post79) கவனிக்கவில்லையா?

நெடுக்காலபோவான்!

நீங்கள் எழுதியதை ஒரு முறை மீண்டும் படித்துப்பர்ருங்கள்

வேறு ஒருவர் எழுதியதை மேற்கோள்காட்டி எழுதியதாக அதில் தெரியவில்லை. உங்களுடைய கருத்தாகவே அதை எழுதி இருக்கிறீர்கள். பாரதி புதுவைக்கு போனதால் வந்த பழக்கம் என்று சமாதானம் சொல்லி பாரதியை சிறுமைப்படுத்த வேண்டாம் என்று கேட்டிருக்கிறீர்கள்.

உங்களுக்குள் ஏன் இத்தனை குழப்பம்?

அது எமது கருத்தல்ல.. வலைப்பூ ஒன்றி வாசித்த ஆக்கம் ஒன்றில் இருந்ததை சுட்டிக்காட்டினம். ஏலவே இங்கு பாரதி எதையோ எலும்மிச்சை அளவில் உருட்டி உண்டதை யாரோ கண்டது என்பது போல வந்த கதைக்கு இன்னொரு கதை அது..!

அவை கதைகள்.. மட்டுமே..! நிஜங்களின் பிரதிபலிப்பல்ல..! எமது நிலைப்பாட்டில் அவை எந்த மாற்றங்களையும் தராது என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது மேலே..!

நீங்கள் ஏதோ நாங்கள் பாரதி பற்றிய கட்டுக்கதைகளை நம்பி திரிவம் என்று எதிர்பார்க்கிறீர்களா.. அது சான்றுகள் இல்லாதவரை சாத்தியமில்லை..!

பாரதியை சிறுமைப்படுத்தும் பணிகளில்.. அதுவும் ஒரு கதை.. எனபதால்..அதுவும் இணைக்கப்பட்டுள்ளது..! :lol:

Link to comment
Share on other sites

பூனைக்குட்டி!

பாரதியை அவருடைய குடும்பம் மதிக்கவில்லை. அத்துடன் கடும் வறுமை வேறு.

பாரதிக்கு பின் அவருடைய படைப்புக்களை ஒரு வடநாட்டு மார்வாடிக்கு விற்கின்ற அளவிற்கு அவர்களுடைய வறுமை இருந்தது.

அவர்கள் பாரதியை மதித்து நடக்காததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

பாரதியார் மகா உண்மைகளை சொல்லி இருக்கிறார். நாம்தான் அவைகளை உணரவில்லை. கேட்கவும் இல்லை.

Link to comment
Share on other sites

poonai_kuddy

பாரதியின் பூனைக்குட்டி

வெள்ளை நிறத்தொரு பூனை

எங்கள் வீட்டில் வளருது கண்டீர்

பிள்ளைகள் பெற்றதப் பூனை

அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,

கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி

பாம்பின் நிறமொரு குட்டி

வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்

அவை யாவும் ஓரே தரம் அன்றோ

இந்த நிறம் சிறிதென்றும்

இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்

அதில் மானுடர் வேற்றுமை இல்லை

எண்ணங்கள் செய்கைகள் யாவும்

இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்

Link to comment
Share on other sites

என்ன பாரதிக்கு சிறு பிராயத்தில் காதலியா??? இது என்னங்க அய்யா புதுக்கதை???

அவருக்கு தான் மிகச்சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டதே அதற்கு முன்பே காதலி இருந்தாள் என்பதெல்லாம் ............... என்னால் நம்பமுடியவில்லை..

கண்ணம்மா கற்பனை பாத்திரமாகத்தான் இருக்க வேண்டும்...

பாரதியார் பரம்பரை வைணவ பரம்பரை அல்ல ..... பார்ப்பனர்களில் வைணவத்தை தழுவியவர்கள் அய்யங்கார் என அழைக்கப்படுவர்..... சைவர்கள் அய்யர்கள் என அழைக்கப்படுவர்... பாரதியார் அய்யரே என நினைக்கிறேன்.

அய்யங்கார்கள் சுப்பிரமணி என பெயரிட மாட்டர்....... சிவன் கோவிலுக்கும் போகமாட்டர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பாரதிக்கு சிறு பிராயத்தில் காதலியா??? இது என்னங்க அய்யா புதுக்கதை???

அவருக்கு தான் மிகச்சிறு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டதே அதற்கு முன்பே காதலி இருந்தாள் என்பதெல்லாம் ............... என்னால் நம்பமுடியவில்லை..

கண்ணம்மா கற்பனை பாத்திரமாகத்தான் இருக்க வேண்டும்...

<<<

அடேங்கப்பா!!

நல்ல காலம் பாரதி இன்று இல்லை!! 'இருந்தாலும் அன்றே 'நெஞ்சு பொறுக்குதில்லையே" என்று தீர்க்கதரிசனமாய் பாடி வைத்து விட்டான்.

கண்ணம்மா என்பது 'சரஸ்வதி"..! பாரதியின் கற்பனைப்பாத்திரமே அது! பாரதிக்கு காதலி என்று சின்னப்பிராயத்தில் யாருமில்லை ஆதாரமின்றி கதைகளை திரிக்காதீர்கள்!

எங்கள் தமிழின் பெருமைதனைச்சொன்னவன் மீது சேற்றை வாரியிறைப்பது போல் இருக்கின்றது!.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
    • இதுதான் நடக்கும் என நினைக்கிறேன். மின்ஸ்க் II உடன்படிக்கைக்கு திரும்புவதாக ஒரு நாடகம் ஆடப்படும். ரஸ்யா ஒப்புக்கு கிரைமியா தவிர் ஏனைய பகுதிகளை கொடுப்பது போல் ஒரு நாடகம் அரங்கேறும். ஆனால் அங்கே மறைமுக ரஸ்ய அரசு நடக்கும். உக்ரேன் மிகுதி பகுதிகளை தக்க வைக்கும். ஆனால் இனிமேல் எதிர்க்க முடியாதளவுக்கு உக்ரேனின் ஆயுத பலம் முதுகெலும்பு உடைக்கப்படும். மறைமுக ரஸ்ய ஆட்சி நடக்காத பகுதிகளில் - ஒவ்வொரு நாளும் அரசியலில் ரஸ்யா தலையிடும்.  முடிவில் செலன்ஸ்கி மட்டும் அல்ல, நேட்டோ, மேற்கு, ஈயு நோக்கி நகர ஆசைபட்ட அத்தனை பேரும் ஒன்றில் கொல்ல அல்லது நாட்டை விட்டு வெளியேற அல்லது அபிலாசைகளை கைவிட வேண்டி ஏற்படும். டிரம்ப் ஆட்சி முடிய, நாலு வருடத்தில் உக்ரேன் பெலரூஸ் போல காயடிக்கப்பட்ட ரஸ்ய காலனி ஆகி விடும். யூகே, ஜேர்மனி, பிரான்ஸ் கையை பிசைந்தபடி நடப்பதை பார்ப்பார்கள்.  இல்லை என்றால் அமெரிக்கா நேட்டோவில் இருந்தே வெளியேறும் என இவர்கள் மிரட்டப்படுவார்கள். வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இப்படி ஒரு சொந்த செலவில் தன் நாட்டு நலனுக்கு சூனியம் வைக்கும் நடவடிக்கையை நினைத்துக்கூட பார்க்க மாட்டார். ஆனால் டிரம்ப் செய்வார். அவருக்கு நாட்டு நலன் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தான் (புட்டின் வைத்துள்ள பாரதூரமான ஆதாரங்களில் இருந்து) தப்ப வேண்டும்.  அவ்வளவுதான்.     நிச்சயம் அமைதி வரும். உக்ரேனுக்கு, அது 2009 இல் மகிந்த எமது தேசத்துக்கு தந்த அவமானகரமான அமைதியை ஒத்து இருக்கும். அங்கு போலவே இங்கும் புறா பறக்கும், அது புறா இல்லை ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய அபிலாசைகளை தின்று கொழுத்த பருந்து என்பதை அந்த இன மக்கள் மட்டும் மெளன சாட்சிகளா குறிப்பில் வைப்பார்கள்.
    • நன்றி சென்று வாருங்கள். உங்களுக்கு துணையாக இவர்களும்.....🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.