Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன்’ – அசேல சம்பத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கற்பகதரு said:

இந்தியா தங்களின் அடிவருடிகளான ஈழத்தமிழர்களை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மூலம் ஏமாற்றி 2009ல் சிங்களவர் வெற்றிகொள்ள வைத்ததை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் நன்றி தெரிவித்தார்கள்.

அண்ணை, இந்தியா எதிர்பாராத விதமாக மகிந்தவுக்கு உதவவில்லை. கருணா பிரிப்பின் பின்னர் இந்தியாவே அவருக்கு அடைக்கலம் கொடுத்து பரந்தன் ராஜன் ஊடாக கருணாவையும் இணைத்து கிழக்கில் துணைராணுவக்குழுவொன்றினை வழிநடத்தியதென்பது உங்களுக்குத் தெரியாதது அல்லவே. இது நடந்தது 2004 இல். 

அதேபோல மகிந்தவின் இனவாதிகள் விரும்பியதுபோல சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான முட்டுக்கடைகளைப் போட்டுக்கொண்டு இருந்தது கூட இந்தியா தானே? 

2006 இல் யுத்தம் ஆரம்பித்தவுடன் இலங்கைக்குத் தேவையான அனைத்தையும் செய்துகொடுத்து, வேவு விமானங்கள் மூலமான கண்காணிப்பு, முப்பரிமாண ராடர், கடற்படையின் ஒத்துழைப்பு, செய்மதிக் கண்காணிப்பு, படைத்துறை உதவி, சர்வதேசக் கண்டனங்களை புறங்கையினால் தட்டிவிட்டு இலங்கையுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டது, போர்க்குற்றங்களை மறைக்க உதவியது, மனிதவுரிமைச் சபையில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டது என்று அனைத்துமே இலங்கையுடன் சேர்ந்துதானே இந்தியா செய்தது? அப்படியிருக்க இலங்கை எதிர்பாராத விதமாக இந்தியா தமிழனை அழிக்க உதவியது என்பது சரியானதா? 

அண்ணா, இந்தியா ஒருபோதுமே ஈழத்தமிழனுக்குச் சார்பாக நடந்து, அவனுக்குத் தனியான நாடொன்றினை பெற்றுக்கொடுக்க மாட்டாது என்பதனை சிங்களவன் இன்னும் அறிந்துகொள்ளவில்லையென்றா நினைக்கிறீர்கள்? 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

சிங்களவர்கள் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராகவே இந்த போரை கருதுகிறார்கள். தமிழர்கள் இந்திய ஆக்கிரமிப்புக்கு துணைபோகும் துரோகிகள் என்பதே சிங்களவரின் அவதானிப்பு.

இந்திய படையை ஈழத்தமிழர் அடித்து விரட்டிய காலத்தில் சிங்களவரும் தமிழரும் நண்பர்கள். பிரேமதாசா ஆயுதங்களும் பல்வேறு உதவிகளும் தாராளமாக செய்து வடக்கு கிழக்கை சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் விடுதலைப்புலிகளிடம் விட்டிருந்தார். ஜே.வி.பி. யின் பெயரால் சிங்களவர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட அந்த நாட்களில் தமிழர்கள் சிங்கள பகுதிகளில் தைரியமாக நடமாட முடிந்தது. 

மீண்டும் தமிழர்கள் இந்தியரை அணுக ஆரம்பித்தவுடன் சிங்களவர் எதிரிகளானார்கள்.

நீங்கள் முதலாவது கூட்டமா அல்லது இரெண்டாவதா? 😄

ஜோக்கர்...😎😎 on Twitter: "~ வாங்க பேசிக்கிட்டே போகலாம். Template  missing.… "

இது எல்லாம்... "ரூம்"  போட்டு யோசிப்பீங்களோ.... 😂
சரி... வாங்க, பேசிக்கிட்டே  போகலாம்.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

கூட்டமைப்பு இந்தியாவிடம் போய் நிற்பதால் முழு ஈழத்தமிழினமுமே இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்குத்  துணைபோகும் என்று அவர்கள் கருதுகிறார்களா? 

கூட்டமைப்பை ஈழத்தமிழினம் வாக்களித்து மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளர்கள், ஆகவே கூட்டமைப்பின் நிலைப்பாடே ஈழத்தமிழினத்தின் நிலைப்பாடு என்றே சிங்களவர் கருதுகிறார்கள். மேலும் எல்லா ஈழத்தமிழரின் ஆயுத அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இந்திய அரசியல்வாதிகளுடனும் இராஐதந்திரிகளுடனும் இந்திய நலன்களை பாதுகாப்பதற்கான உறவுகளை பேணி வந்துள்ளார்கள். இதை சிங்களவர்கள் நன்கு அறிவார்கள்.

3 hours ago, ரஞ்சித் said:

அடுத்தது, ஈழத்தமிழன் செய்வதாக நீங்கள் கூறும் துரோகம் என்ன? அதை யாருக்கு எதிராகச் செய்கிறான் என்று நினைக்கிறீர்கள்? ஈழத்தமிழன் தனக்கே உரிய தாயகத்தையும் தனக்கே உரிய உரிமைகளையும் கேட்பது யாருக்கெதிரான துரோகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 

சிங்கள மக்கள் இந்த தாயகம் தமக்கும் ஈழத்தமிழருக்கும் பொதுவானதென்றும் அதை இந்தியர்கள் ஆக்கிரமிக்க ஈழத்தமிழர்கள் உதவி துரோகம் செய்வதாகவும் நினைக்கிறார்கள். 

3 hours ago, ரஞ்சித் said:

ஈழத்தமிழனின் ஒரே பலமான விடுதலைப் புலிகளையும் அவர்களின் ஆயுதப் பலத்தையும் தானே முன்னின்று அழித்த இந்தியா மீண்டும் இன்னொரு ஆயுதப் போராட்டத்தை ஈழத்தமிழனூடாக ஈழத்தில் அரங்கேற்றும் என்றும் அதனாலேயே இலங்கை ராணுவம் தமிழர் தாயகத்தில் இன்னும் ஆக்கிரமித்து நிற்கிறதென்பதையும் நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களோ அண்ணை? 

இலங்கையில் இந்தியா ஈழத்தமிழரூடாக பயங்கரமான தாக்குதல்களை மீண்டும் நடத்தும் என்று நிச்சயமாக சிங்களவர் நம்புகிறார்கள்.

3 hours ago, ரஞ்சித் said:

இலங்கையில் தனது ஆக்கிரமிப்பினைச் செய்வதையே இந்தியா விரும்புகிறதென்றால், புலிகளை அழிக்கவேண்டிய தேவையென்ன? புலிகளுடன் சமரசம் செய்து தனது ஆதிக்கத்தினை அது நிலைநாட்டியிருக்கலாமே?

புலிகளுடன் சமரசம் செய்ய இந்தியா முயற்சித்து தோற்றுப்போனது. அதனாலேயே அழிப்பது என்று முடிவெடுத்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

 அண்ணா, இந்தியா ஒருபோதுமே ஈழத்தமிழனுக்குச் சார்பாக நடந்து, அவனுக்குத் தனியான நாடொன்றினை பெற்றுக்கொடுக்க மாட்டாது என்பதனை சிங்களவன் இன்னும் அறிந்துகொள்ளவில்லையென்றா நினைக்கிறீர்கள்? 

இந்தியா ஒருபோதுமே ஈழத்தமிழனுக்குச் சார்பாக நடந்து, அவனுக்குத் தனியான நாடொன்றினை பெற்றுக்கொடுக்க மாட்டாது என்பதனை சிங்களவர்கள் நன்கு அறிவார்கள். 30 வருடங்களுக்கு முதல் அன்றைய ஐனாதிபதி பிரேமதாசாவின் ஆலோசகராக இருந்த விஞ்ஞானி ஒருவர் இதை என்னிடம் நேரடியாகவே சொன்னார். அவர்களின் பயம் இந்தியா இலங்கையை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஒரு பொம்மை அரசை நிறுவும் என்பதுதான். ஈழத்தமிழர் அதற்கு துணை போகிறார்கள் என்பதே சிங்களவர்களின் தமிழர் மீதான வெறுப்புக்கு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கற்பகதரு said:

அண்ணை,

தமிழருக்கும் தமக்கும் சொந்தமான நாட்டை,  தமிழர்கள் தமக்கெதிராகத் துரோகம் செய்து இந்தியா ஆக்கிரமிக்கத் துணைபோவதாக சிங்களவர்கள் நினைக்கிறார்கள் என்றால், பின்வரும் கேள்விகள் எழுகின்றனவே?

1. ஈழத்தமிழனின் அவலங்களைக் காரணமாகக் காட்டியே இந்தியா தனது ஆக்கிரமிப்பை நடத்துமென்றால், அந்த அவலங்களை சிங்களவர்களே இல்லாமலாக்கி தமிழருடன் சமமாக வாழ்ந்து, இந்திய ஆக்கிரமிப்பைத் தடுக்கலாமே? ஆனால், அப்படிச் செய்யாது ஈழத்தமிழனை மீண்டும் மீண்டும் இந்தியாவை நோக்கித் தள்ளிக்கொண்டிருப்பது சிங்களமல்லவா? 

2. இந்தியா ஆக்கிரமிக்கப்போகிறது என்று பயப்படும் சிங்களவர்கள் தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமிப்பது ஏன்? 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரஞ்சித் said:

நான் அப்பிடீக்கா சுத்தினால் நீங்க இப்பிடீக்கா சுத்தனும் , நான் இப்பிடீக்கா சுத்தினால் நீங்க அப்பிடீக்கா சுத்தனும் , மொத்தத்துல ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும் 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கற்பகதரு said:

இந்தியா ஒருபோதுமே ஈழத்தமிழனுக்குச் சார்பாக நடந்து, அவனுக்குத் தனியான நாடொன்றினை பெற்றுக்கொடுக்க மாட்டாது என்பதனை சிங்களவர்கள் நன்கு அறிவார்கள். 30 வருடங்களுக்கு முதல் அன்றைய ஐனாதிபதி பிரேமதாசாவின் ஆலோசகராக இருந்த விஞ்ஞானி ஒருவர் இதை என்னிடம் நேரடியாகவே சொன்னார். அவர்களின் பயம் இந்தியா இலங்கையை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஒரு பொம்மை அரசை நிறுவும் என்பதுதான். ஈழத்தமிழர் அதற்கு துணை போகிறார்கள் என்பதே சிங்களவர்களின் தமிழர் மீதான வெறுப்புக்கு காரணம்.

பொம்மை அரசை சிங்களவர்களே நிறுவுகின்றனர்....
சீனாவுடன் சுதந்திர கட்சி அப்போ.இப்ப மொட்டுகட்சி 
மேற்குலகு /இந்தியா வுடன் ஐ.தேசிய கட்சி 
1948 க்கு பிறகு பொம்மை அரசை இருகட்சிகளும் மாறி மாறி நிறுவின ....அதற்கு தமிழர்களை இந்த கட்சிகள் பாவித்தன...
சிறிலங்கா என்ற தேசியத்தை(பல்காலாச்சார நாடாக ஜனநாயக  மரபுகளை பேன வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்) உருவாக்கியதன் முக்கிய நோக்கமே மேற்குலகின்  பொம்மைகளாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால்...
 
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரஞ்சித் said:

1. ஈழத்தமிழனின் அவலங்களைக் காரணமாகக் காட்டியே இந்தியா தனது ஆக்கிரமிப்பை நடத்துமென்றால், அந்த அவலங்களை சிங்களவர்களே இல்லாமலாக்கி தமிழருடன் சமமாக வாழ்ந்து, இந்திய ஆக்கிரமிப்பைத் தடுக்கலாமே? ஆனால், அப்படிச் செய்யாது ஈழத்தமிழனை மீண்டும் மீண்டும் இந்தியாவை நோக்கித் தள்ளிக்கொண்டிருப்பது சிங்களமல்லவா? 

தமிழரின் அவலங்களை இல்லாமலாக்க தேவையான அறிவோ ஆற்றலோ சிங்களவர்களுக்கு இல்லை. மேலும் தனது தேவைக்காக இந்தியா தமிழருக்கு அவலங்களை ஏற்படுத்தியது. தமிழ் கூலிப்படைகளை பயன்படுத்தி பஸ்களில் குண்டு வைத்து சிங்களவரை கொல்வது, பிக்குகளை கொல்வது ஆகிய சதிகளின் மூலம் பல கலவரங்களை இந்தியாவே உருவாக்கியது. சிங்களவர்களால் இவற்றை தடுக்க முடியவில்லை.

24 minutes ago, ரஞ்சித் said:

இந்தியா ஆக்கிரமிக்கப்போகிறது என்று பயப்படும் சிங்களவர்கள் தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமிப்பது ஏன்? 

சிங்கள இராணுவம் தமிழ் பகுதிகளை கண்காணிக்காமல் விட்டால், தமிழ் கூலிப்படைகளின் உதவியுடன் இந்தியா பயங்கரவாத்தத்தை தூண்டிவிடும் என்ற பயம்தான் காரணம்.

5 minutes ago, putthan said:

பொம்மை அரசை சிங்களவர்களே நிறுவுகின்றனர்....
சீனாவுடன் சுதந்திர கட்சி அப்போ.இப்ப மொட்டுகட்சி 
மேற்குலகு /இந்தியா வுடன் ஐ.தேசிய கட்சி 
1948 க்கு பிறகு பொம்மை அரசை இருகட்சிகளும் மாறி மாறி நிறுவின ....அதற்கு தமிழர்களை இந்த கட்சிகள் பாவித்தன...
சிறிலங்கா என்ற தேசியத்தை(பல்காலாச்சார நாடாக ஜனநாயக  மரபுகளை பேன வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்) உருவாக்கியதன் முக்கிய நோக்கமே மேற்குலகின்  பொம்மைகளாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால்...
 
 இந்தியாவை சிங்களவர்கள் தோற்கடித்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

 இந்தியாவை சிங்களவர்கள் தோற்கடித்துவிட்டார்கள்.

உண்மை ஆனால் அதற்கு சிங்களம் கொடுத்த விலை அதிகம் .....இனியும் கொடுக்க போகும் விலையும் அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே @கற்பகதரு எழுதுவதெல்லாம்  வெறும் கற்பனையும்  புனைவும்  மட்டுமே...

இந்தியா தம்மை  ஆக்கிரமிக்க  பார்க்கிறது என்று  பயப்படும் சிங்களம்  ராயீவ்  காந்திக்கு  அடிக்குமா???

சிங்களம்  இந்தி  இந்த  இரண்டின் பயமே

ஈழத்தமிழரும் தமிழக தமிழரும்  ஒன்றாகி  விடக்கூடாது  என்பது  மட்டும்  தான்.

இந்த  பயம்  தான் அவர்கள்  எந்த  நிலையிலும் இணைந்திருக்கவும்

எல்லாவற்றையும் மறந்து  மன்னித்து 

தமிழருக்கு  எதிராக  ஒன்றிணைந்து  தொடரவும்  உந்து  சக்தி.

வரலாற்றை பாருங்கள்

இந்திய ராணுவம்  வந்தது

தமிழரைக்காக்கவா??

சிறீலங்கா  பிரியாமல்  பாதுகாக்கவா?????

Edited by விசுகு
ஒரு வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

உண்மை ஆனால் அதற்கு சிங்களம் கொடுத்த விலை அதிகம் .....இனியும் கொடுக்க போகும் விலையும் அதிகம்

உண்மைதான். அது அவர்களுக்கு புரிந்தாலும் சீனா, மேற்குலகிலும் பார்க்க இந்தியா ஆபத்தானது என்றே சிங்களவர்கள் கருதுகிறார்கள். ஈழத்தமிழரின் இந்திய ஒத்துழைப்பால் தாம் இந்தளவு விலை கொடுக்க வேண்டியிருப்பதும் சிங்களவர்களை ஈழத்தமிழர் மேல் சினம்கொள்ள வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

உண்மைதான். அது அவர்களுக்கு புரிந்தாலும் சீனா, மேற்குலகிலும் பார்க்க இந்தியா ஆபத்தானது என்றே சிங்களவர்கள் கருதுகிறார்கள். ஈழத்தமிழரின் இந்திய ஒத்துழைப்பால் தாம் இந்தளவு விலை கொடுக்க வேண்டியிருப்பதும் சிங்களவர்களை ஈழத்தமிழர் மேல் சினம்கொள்ள வைக்கிறது.

சிங்களவர்களின் மோட்டுதனமான அந்த அரசியல் சிந்தனை இவ்வளவு விலை கொடுக்க வேண்டி வந்தது...
பிரித்தானியா திட்டமிட்டு சில நாடுகளில் குடியேற்றங்களை செய்து பல்கலாச்சார நாடுகளாக மாற்றி தங்களது செல்வாக்கை தொடர்ந்து நிலைநாட்ட முயற்சி செய்துள்ளனர்.

சிறிலங்கா
சிங்கப்பூர்.
பிஜி
மடகஸ்கர் 
கொங்ஹோங்
தாய்வான்

வடக்கு கிழக்கு தமிழர்கள் இந்தியாவுடன் சேராமல் இருந்தால் மலையக தமிழர்களை இந்தியாவுடன் சேரப் பண்ணாலாம் என்ற கொள்கையுடன் மலையகத்தில் லட்ச்சகணக்கான
இந்திய வம்சாவளியினரை குடியேற்றம் செய்தார்கள் ....எந்த இனமும் தனித்து ஒர் பிரதேசத்தை உரிமை கோராமல் இருப்பதற்கு அவர்கள் செய்த உக்தி ....அன்று பிரித்தானியா சிங்கள பகுதியில் செய்ததை இன்று சிங்கள இனவாதிகள் தமிழ் பகுதியில் செய்கின்றனர்...

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கற்பகதரு said:

 சிங்களவர்களை ஈழத்தமிழர் மேல் சினம்கொள்ள வைக்கிறது.

இந்த சினம் தான் அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டி வந்தது..
 கடந்த தேர்தலில் மற்றுமோர் சிறுபான்மை சமுகமான இஸ்லாமியர் மீது சினம் கொண்டனர் ..இஸ்லாமியர்கள் தமிழர்களை போல் அன்றி சிங்களவர்களுடன் மிகவும் நற்பாக வாழ்ந்தவர்கள் நாட்டின் ஐக்கியத்துக்கு தங்களது உயிரை கொடுத்தவர்கள் ஆனால் சிங்களவர்களின் சினம் கொண்ட குணத்தினால் மீண்டும் அதிக விலையை சர்வதேச்த்திற்கு கொடுக்க வேண்டியுள்ளது...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

தமிழ் கூலிப்படைகளின்

என்னண்ணை இப்படிப் பேசுறியள்?

ஆக புலிகள் உட்பட அனைத்துப் போராளிகளும் இந்தியாவுக்கு மாறடித்த கூலிப்படைகள் என்றுதான் சொல்ல வாறியள்.

ஆக, தமிழனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, இந்தியாவின் நலன் காக்கவே ஆயுதம் தூக்கினார்கள் என்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரஞ்சித் said:

ஆக புலிகள் உட்பட அனைத்துப் போராளிகளும் இந்தியாவுக்கு மாறடித்த கூலிப்படைகள் என்றுதான் சொல்ல வாறியள்.

ஆக, தமிழனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, இந்தியாவின் நலன் காக்கவே ஆயுதம் தூக்கினார்கள் என்கிறீர்கள்.

க க க போ , கற்ப்பூரம் போல கப்பென்று பிடிச்சிட்டீங்கோ 
இதற்குத்தான் அவ்வளவு சுற்றிவளைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இங்கே @கற்பகதரு எழுதுவதெல்லாம்  வெறும் கற்பனையும்  புனைவும்  மட்டுமே...

உங்கள்  கருத்துடன் ஒத்துப்போகிறேன். சிங்களவரின் பயம் என்பதைவிட கற்பகம் தான் அதிக கவலையும், பயமும் கொள்கிறார்.   கடந்த காலத்தில் இனப்பிரச்சனைக்கு தீர்வு வரைவிலக்கணம் என்று ஒரு திட்டம் கொண்டு வந்து அதற்கு திஷ்ஷ விதாரணவை தலைவராக நியமித்தார் அப்போதைய ஜனாதிபதி. அதற்கான செயற்பாடுகளில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தவரை இந்தியா அழைத்து அந்த செயற்பாடுகளை கைவிடும்படி அறிவுறுத்தியது. இதை திஷ்ஷ விதாரண பகிரங்கமாக தெரிவித்திருந்தார். கிளிநொச்சியோடு நிறுத்த இருந்த போரை இந்தியாவே மேற்கொண்டு செல்லும்படி அறிவித்ததாக சரத் பொன்சேகா வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இந்தையாவின் போரையே நாம் முன்னெடுத்தோம், நாங்கள் கேளாமலேயே இந்தியா போருக்கான சகல உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் நமக்கு வழங்கியது என்று பலதடவை செய்தியாளரை கூட்டி மஹிந்தா தெரிவித்திருந்தார். அதைவிட எரிக் சொல்கெய்ம் தன் பங்குக்கு இந்தியா தன்னிடம் என்ன பணித்தது என்றும் கூறியிருந்தார். நிலைமை இப்படியிருக்க சிங்களவருக்கு பயம் எப்படி வரும்? சரத் பொன்சேகா, கோத்தா, (அ)சமரசேகர ஆகியோர் வெளிப்படையாகவே கூறியிருந்தனர் "தமிழர் வந்தேறு குடிகள் நாங்கள் செய்வதை ஏற்று இங்கு வாழ முடிந்தால் வாழுங்கள், உரிமை எல்லாம் கோர முடியாது." இந்தியா தமிழருக்கு உதவும், தமிழர் இந்தியாவை இலங்கைக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்கிற பயம் இருந்திருந்தால் இப்படி வீறாப்பு பேசுவார்களா? அதாவது சிங்களம் செய்வதை நிஞாயப்படுத்த இப்படி ஒரு கற்பனை அவ்வளவே. ஆனால் சந்திரிகா தொடங்கி சகல அரசியல் வாதிகளும் கூறுவது "இது சிங்கள பவுத்தநாடு." அதையே நம்ம தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் சிங்கள அடிவருடிகளும் நிறுவ முயற்சிக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

தமது கட்டுப்பாட்டை மீறிய விடுதலை புலிகளை இந்தியா அழித்ததை உலகம் அறியும். 

இந்தியாவின் ஆக்கிரமிப்பு கொள்கைக்காக இந்தியா ஈழத்தமிழரை பயன்படுத்துவதை சிங்களவர் அறிவார்கள்.

ஈழத்தமிழர் இந்தியாவுடன் ஒத்துளைக்கும்வரை தமிழர் பகுதிகள் இராணுவகட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

ஈழத்தமிழர் அதற்கு எப்படியான விளக்கம் கொடுத்தாலும் ஈழத்தமிழர் - இந்திய உறவில் சிங்களவருக்கு சாதகமான மாற்றம் வரும்வரை (பிரேமதாசா காலம் போல) நிலமை மாறப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கற்பகதரு said:

.

ஈழத்தமிழர் அதற்கு எப்படியான விளக்கம் கொடுத்தாலும் ஈழத்தமிழர் - இந்திய உறவில் சிங்களவருக்கு சாதகமான மாற்றம் வரும்வரை (பிரேமதாசா காலம் போல) நிலமை மாறப்போவதில்லை.

ஈழத்து இந்துக்கள் ,சிறிலங்கா முஸ்லீம்கள் ,சிறிலங்கா கிறிஸ்தவர்கள் என்று சிறிலங்கா ஆட்சியாளர்களை ஆட்டிபடைக்க இந்த நாடுகளுக்கு தெரியும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.