Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன்... "பச்சை" குத்துகிறார்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Inked By Ktrew Tattoo GIFs - Get the best GIF on GIPHY

ஏன்... "பச்சை"  குத்துகிறார்கள்? 

இந்த, பச்சை குத்திக் கொண்டு திரியும் ஆட்களைப் பார்க்க, 🥸
எனக்கு, அருவருப்பாக இருக்கும். உங்களுக்கும் அப்படியா 

அழகிய, உடல் அமைப்பை கொண்டிருப்பவர்கள்...
இந்தப் பச்சையை குத்தி, தங்களை அசிங்கமாக காட்டிக் கொள்வதாக நான்  கருதுகின்றேன். 

ஆனால்.... இதனை குத்திய பலரிடம், இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால்,
அதனை, கண்கள் விரிய... அழகாக விபரித்து, மணித்தியாலம் தாண்டியும், 
எமக்கு, விளக்கம் தந்து கொண்டிருப்பார்கள். 😮
அதனை கேட்க... எனக்கு,  "சிதம்பர சக்கரத்தை... பேய் பார்த்த மாதிரி இருக்கும்".  :grin:

என்னுடன், வேலை செய்யும் அழகிய பெண்...
இப்போது.. 15,000 € ஐரோ, செலவழித்து தன்னுடைய...
முகத்தை தவிர.... நெஞ்சு, முதுகு, கால், கை என்று... 
எல்லா இடமும் குத்தி வைத்து, திறந்து... காட்டிக் கொண்டு நிற்பார்.  😋

அப்போ... நான், இந்த 15,000 € ஐரோவுக்கு,
நீ... ஒரு,  "புதுக் கார்" வேண்டி ஓடியிருக்கலாமே என்று சொன்னால்...
கோவம் வந்து... எனக்கு ஒண்டும் விளங்காது என்று சொல்லி,
அதுக்கு... வேறை விளக்கம் தருவார். 🥲

உண்மையில்... நான் தான், "பச்சை" குத்துவதை அருவருப்பாக பார்க்கிறேனா...
என்பதனை, யாழ்.கள உறவுகளின்.. கருத்துக்கள் மூலம் அறிய ஆவலாக உள்ளேன். ✍️

Pin op tattooed face 140 Face scarification tattoo ideas in 2021 | scarification tattoo,  scarification, girl tattoos Face tattoo keeps getting woman arrested - Metro Voice News

பிற் குறிப்பு: படத்தில் உள்ளவர்கள்... கூகிளில் எடுத்த படம்.  :grin:
என்னுடன், வேலை செய்பவர்கள் அல்ல.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சிவ‌ சிவா .இண்டைக்கு வெள்ளிக் கிழமை சிறியண்ண தொடங்கிட்டார்.😆✍️

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

பச்சை எங்கை, எங்கை குத்திரது எண்டு விவஸ்த்தையே இல்லாமல் போட்டுது.

அங்கே, இங்கே என்று காட்ட முடியாத இடங்களில் குத்தி இருக்கிறதை சொல்வதே அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு ஒண்டும் விளங்காது என்று சொல்லி,
அதுக்கு... வேறை விளக்கம் தருவார். 🥲

மிகச் சரியாகக்தான் சொல்லியுள்ளார். அவர் சொன்ன விளக்கத்தைப்  பதிய முடியுமாயின் பதியவும்.  படித்துப் பார்ப்போம். 😍😍😍பணம்  எவ்வகையிலாகிலும். செலவு செய்யப்படவேண்டும். அதுதான் பணத்துக்குமதிப்பு நாட்டிக்கும் வரி வருமானம் வரும்  தொடர்த்தும்  உழைக்க. ஆர்வமும் ஏற்ப்படும்  எனவே அப் பெண் செய்தது சரியாகும் (செலவு செய்தது) ...பச்சை குத்த முதலுள்ள. பெண்ணின் படத்தையும்...பச்சை குத்தியதின் பின் பெண்ணின் படத்தையும்  இணைத்தால் பச்சை குத்தியது சரியா...இல்லை. பிழையா. எனக் கருத்துக்கூற முடியும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, யாயினி said:

சிவ‌ சிவா .இண்டைக்கு வெள்ளிக் கிழமை சிறியண்ண தொடங்கிட்டார்.😆✍️

tattoo flashing sign GIF

tattoo piercing GIF

யாயினி... 
எனது.... அயல் வீட்டுக்கு, இந்த மாதம் தொடக்கம்... 
புதிய இளம் தம்பதியினர்  குடியிருக்க வந்திருக்கின்றார்கள்.

அவர்களுக்கு... ஒரு "ஹலோ"  சொல்லி,
நட்பை... ஆரம்பித்த போது,  அவர்களின் தொழில் பற்றி..
பேச்சு வாக்கில் கேட்டேன்... அவர்கள்,  பச்சை குத்தும்...
கடையை, நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள்.

ஓம்... நல்லது. எனக்கு... யாழ். களத்தில் எழுத ஒரு தலைப்பு கிடைத்து விட்டது... 
என்ற சந்தோசத்தில்... இந்தப் பதிவை... பதிந்தேன்.

அது... வெள்ளிக் கிழமையாக இருந்தது, 
 "காகம் இருக்க, பனம் பழம்  விழுந்த மாதிரி" 
தற்செயலாக... நடந்த, சம்பவம் மட்டுமே....

நீங்கள், நம்பினாலும்  நம்பாவிட்டாலும்... அதுதான்   உண்மை. ஹா... ஹா.. ஹா...  :grin: 🤣

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை பாத்துட்டு கருத்துக்களுக்கு ஏன் பச்சை குத்துகிறார்கள் என்பதை தமிழ்சிறி தட்டி கேக்குறாராக்கும் எண்டுதான் உள்ள வந்தன்.

கடைசியில பாரதி தாசனா பாரதி ராசாவானு கன்பியூசா போச்சு.

மதியின் திரை நட்சத்திரங்கள்: நடிகர் வடிவேலு பிறந்த நாள்: அக்டோபர் 10, 1960.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Nathamuni said:

பச்சை எங்கை, எங்கை குத்திரது எண்டு விவஸ்த்தையே இல்லாமல் போட்டுது.

அங்கே, இங்கே என்று காட்ட முடியாத இடங்களில் குத்தி இருக்கிறதை சொல்வதே அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. 

நாதம்ஸ்... இலங்கையிலும், பச்சை குத்தியுள்ளவர்களை,
மிக... அரிதாக, பார்த்திருக்கின்றேன்.

நல்லுர் திருவிழா நேரம்.... கோவிலுக்கு போகும், பெரும்பாலான வீதி ஓரங்களில்...
பச்சை  குத்தும், திடீர் கடைகளை பார்த்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். :)

அப்போதும்.. இந்த, ஆசை.... எம்மவர்களிடம் இருந்து உள்ளது.
ஏன்.. என்ற காரணம், மட்டும்... எனக்கு, இது வரை விளங்கவில்லை. 

டிஸ்கி:  வெள்ளைக்காரிகள்  காட்டும் போது, உற்றுப் பார்க்கா விட்டால், 
அவன் ஒறிஜினல் தமிழனே அல்ல.  நான்... ஒறிஜினல்  ஆள் ஐயா. 😜

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

டிஸ்கி:  வெள்ளைக்காரிகள்  காட்டும் போது, உற்றுப் பார்க்கா விட்டால், 
அவன் ஒறிஜினல் தமிழனே அல்ல.  நான்... ஒறிஜினல்  ஆள் ஐயா. 😜

நானும் உங்கடை ஆள்த் தான்.

எனக்கும் பச்சை குத்தியுள்ளவர்கள் மீது பெரிசா ஒரு அபிப்பிராயமும் இருந்ததில்லை. இயற்கையாக தந்த உடலை வெவ்வேறு உருவங்கள் வரைந்து கெடுக்கின்றனர் என்ற எண்ணமும் இருந்தது.

ஆனால் கடந்த வாரம் ஒருவரை சந்தித்தேன். ஒரு சிறுவனது படத்தை வரைந்து இருந்தார். ஏன் இதை பச்சை குத்தியுள்ளாய் எனக் கேட்கும் போது, அது 2 வருடங்களுக்கு முன்னர் விபத்தில் இறந்த தன் கடைசி மகனது முகம் என்று சொல்லும் போது அதிர்ந்து விட்டேன். 

ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும்.

இப்போது தமக்கு நெருக்கமாக இருந்து இறந்தவர்களது சாம்பலையும் சேர்த்து பச்சை குத்தும் வழக்கமும் பரவத் தொடங்கியிருக்கு.

2 hours ago, தமிழ் சிறி said:

என்னுடன், வேலை செய்யும் அழகிய பெண்...
இப்போது.. 15,000 € ஐரோ, செலவழித்து தன்னுடைய...
முகத்தை தவிர.... நெஞ்சு, முதுகு, கால், கை என்று... 
எல்லா இடமும் குத்தி வைத்து, திறந்து... காட்டிக் கொண்டு நிற்பார்.  😋

ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kandiah57 said:

மிகச் சரியாகக்தான் சொல்லியுள்ளார். அவர் சொன்ன விளக்கத்தைப்  பதிய முடியுமாயின் பதியவும்.  படித்துப் பார்ப்போம். 😍😍😍பணம்  எவ்வகையிலாகிலும். செலவு செய்யப்படவேண்டும். அதுதான் பணத்துக்குமதிப்பு நாட்டிக்கும் வரி வருமானம் வரும்  தொடர்த்தும்  உழைக்க. ஆர்வமும் ஏற்ப்படும்  எனவே அப் பெண் செய்தது சரியாகும் (செலவு செய்தது) ...பச்சை குத்த முதலுள்ள. பெண்ணின் படத்தையும்...பச்சை குத்தியதின் பின் பெண்ணின் படத்தையும்  இணைத்தால் பச்சை குத்தியது சரியா...இல்லை. பிழையா. எனக் கருத்துக்கூற முடியும் 

கந்தையா  அண்ணையை... மிக நீண்ட நாட்களின் பின், இங்கு கண்டது  மிக்க மகிழ்ச்சி. 🙏

சரி... விசயத்துக்கு,  வருவோம்.
அவ சொன்ன காரணங்கள்...
1)  கார் லைசன்ஸ் எடுத்ததுக்கு... (கையில்)
2)  நல்ல வேலை கிடைத்ததுக்கு....(நெஞ்சில்)
3)  முதலாவது காதலன்  விட்டுப் போனதற்கு.... (முதுகில்)
4)  இரண்டாவது காதலன் வந்த  விருப்பத்திற்காக... ( கால் துடையில்) 
........
இது, போதுமா... இன்னும் வேணுமா.... கந்தையா அண்ணை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சங்க இலங்கியங்களில் தொய்யில் என்று தலைவியின் மார்பில், தலைவன் அழகுற வரையும் ஒருவகை பண்பாடு பற்றி கூறப்பட்டுள்ளதாம்.  

இதுவும் ஒரு வகை பச்சை குத்துதலாக இருக்குமோ? ஊரில் எமது பழைய ஆட்களில் வேல்/சூலம் பச்சையாக குத்த பட்டிருக்கும். 

ஒரு காலத்தில் மேலாடை இல்லாமல் இருந்த போது, பச்சையே உடையாகவும் அமைந்திருக்கலாம்.
 
எனக்கும் பச்சை குத்துவோர் மீது (யாழிலும், உடம்பிலும்) ஒவ்வாமைதான்.

ஆனால் இப்போ கொஞ்சம் கொஞ்சமாக (இரு சாரரையும்) சகித்து வாழ முயல்கிறேன்.

http://www.timesofadventure.com/Life-Style/Art/Art-and-Archeology-of-Tamil-Literature

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, valavan said:

தலைப்பை பாத்துட்டு கருத்துக்களுக்கு ஏன் பச்சை குத்துகிறார்கள் என்பதை தமிழ்சிறி தட்டி கேக்குறாராக்கும் எண்டுதான் உள்ள வந்தன்.

கடைசியில பாரதி தாசனா பாரதி ராசாவானு கன்பியூசா போச்சு.

மதியின் திரை நட்சத்திரங்கள்: நடிகர் வடிவேலு பிறந்த நாள்: அக்டோபர் 10, 1960.

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Comedy - Discover & Share GIFs

வளவன்.... சத்தியமாக, அந்த  "கன்பியூசாகத்ததான்" அந்த தலைப்பை வைத்தேன். :)

அதிலும்... கடைசியில்,
 "தலைப்பை பார்த்து ஏமாந்து வந்தவர்களுக்கு, கம்பெனி பொறுப்பு  ஏற்காது". 
என்று... "முக முக்கிய குறிப்பு"  என்று  எழுதுவம், என்று யோசித்து விட்டு ...

அப்படி எழுதினால்...  நம்ம, பசங்க... உசாராகி  விடுவாங்கள் என்ற படியால்,
அதனை  எழுதவில்லை. இது... மனச்  சாட்சியின் படி... உண்மை ராசா. :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

டிஸ்கி:  வெள்ளைக்காரிகள்  காட்டும் போது, உற்றுப் பார்க்கா விட்டால், 
அவன் ஒறிஜினல் தமிழனே அல்ல.  நான்... ஒறிஜினல்  ஆள் ஐயா. 😜

1 hour ago, ஈழப்பிரியன் said:

நானும் உங்கடை ஆள்த் தான்.

ஈழப்பிரியன்ஸ்...  
இந்த வயதில்,  கிடைக்கும், சந்தர்ப்பங்களை தவற விடுபவன்,
வாழ்க்கையை.. அனுபவிக்கத் தெரியாத, 
மனிதன்... முழு மனிதன் அல்ல. என்ஜாய்...   🥰  😍 🤩

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னோடை வேலை செய்யிற ரஷ்யன் லேடியும் பச்சை குத்தியிருக்கிறா.....சரியாய் இந்த படத்திலை இருக்கிற மாதிரித்தான்...
ஏதோ ஒரு கதையிலை பச்சை குத்துற கதை வரேக்கை நானும் குத்தியிருக்கிறன் எண்டு காட்டினா..
தனிய ஒரு ரோசா மட்டுமோ இன்னும் இருக்கோ எண்டு கேட்டன்....இந்தா மிச்ச இரண்டு ரோசாவையும் காட்டுறன் எண்டு சொல்லி வாய் மூடக்கிடையிலை முதலாளி வந்துட்டான்.:cool:

Rosen-Tattoo: Ein zeitloser Klassiker | BRIGITTE.de

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நான் தான், "பச்சை" குத்துவதை அருவருப்பாக பார்க்கிறேனா...

நம்ம நயன்தார இடுப்பில பச்சை குத்தி வைத்திருக்கிறா பார்க்கவில்லையே அது அவருக்கு கொஞ்சம் வடிவா தான் இருக்கு ...

நரிக்குரவர்கள்,ஆதிவாசி மக்கள் இந்த பச்சை குத்துவதை காணலாம்....ஒருகாலத்தில் சினிமா ரசிகர்கள் ஊரில் எம்.ஜி.ஆர்....சிவாஜி ஆகியோரின் முகங்களை பச்சை குத்தியிருப்பார்கள் 50 வருடங்களுக்கு முன்பு பார்த்துள்ளேன்.நம்மவ்ர்களில் கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிகம் பச்சை குத்து வழ்க்கம் உடையவர்கள்.

வெளிநாடுகளில் வெள்ளைகள் பிரபலத்துக்கும் அதிகம் பச்சையை குத்துவினம்....அதிலும் போட்டி போட்டு குத்துகிற‌ சனமும் இருக்கு....

3 minutes ago, குமாரசாமி said:

என்னோடை வேலை செய்யிற ரஷ்யன் லேடியும் பச்சை குத்தியிருக்கிறா.....சரியாய் இந்த படத்திலை இருக்கிற மாதிரித்தான்...
ஏதோ ஒரு கதையிலை பச்சை குத்துற கதை வரேக்கை நானும் குத்தியிருக்கிறன் எண்டு காட்டினா..
தனிய ஒரு ரோசா மட்டுமோ இன்னும் இருக்கோ எண்டு கேட்டன்....இந்தா மிச்ச இரண்டு ரோசாவையும் காட்டுறன் எண்டு சொல்லி வாய் மூடக்கிடையிலை முதலாளி வந்துட்டான்.:cool:

Rosen-Tattoo: Ein zeitloser Klassiker | BRIGITTE.de

நீங்கள் எழுதிய செய்தியை வாசிக்கும் பொழுதே எவ்வளவு கிளுகிளுப்பா இருக்கு .....ச்சா ச்சா அந்த மனேஜர் வரவில்லையென்றால் நீங்கள் பார்த்ததை எங்களுடன் பகிர்ந்திருப்பியள் நாங்களும் ஹப்பியா சனிக்கிழமி இரவை கழித்திருக்கலாம்😘

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, putthan said:

நீங்கள் எழுதிய செய்தியை வாசிக்கும் பொழுதே எவ்வளவு கிளுகிளுப்பா இருக்கு .....ச்சா ச்சா அந்த மனேஜர் வரவில்லையென்றால் நீங்கள் பார்த்ததை எங்களுடன் பகிர்ந்திருப்பியள் நாங்களும் ஹப்பியா சனிக்கிழமி இரவை கழித்திருக்கலாம்😘

நான் கதை சொல்லி மிச்ச கதை தொடங்கக்கிடையிலை நீங்கள் வந்துட்டியள்....😁
மிச்சத்தையும் சொல்லுவன்.:406:

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நான் கதை சொல்லி மிச்ச கதை தொடங்கக்கிடையிலை நீங்கள் வந்துட்டியள்....😁
மிச்சத்தையும் சொல்லுவன்.:406:

எல்லாம் ஆர்வகோளாறுதான் ......மகா குருவாக வேண்டும் என்ற இலட்சிய பயணத்தை நோக்கி,.....🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

எனக்கும் பச்சை குத்தியுள்ளவர்கள் மீது பெரிசா ஒரு அபிப்பிராயமும் இருந்ததில்லை. இயற்கையாக தந்த உடலை வெவ்வேறு உருவங்கள் வரைந்து கெடுக்கின்றனர் என்ற எண்ணமும் இருந்தது.

ஆனால் கடந்த வாரம் ஒருவரை சந்தித்தேன். ஒரு சிறுவனது படத்தை வரைந்து இருந்தார். ஏன் இதை பச்சை குத்தியுள்ளாய் எனக் கேட்கும் போது, அது 2 வருடங்களுக்கு முன்னர் விபத்தில் இறந்த தன் கடைசி மகனது முகம் என்று சொல்லும் போது அதிர்ந்து விட்டேன். 

ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும்.

இப்போது தமக்கு நெருக்கமாக இருந்து இறந்தவர்களது சாம்பலையும் சேர்த்து பச்சை குத்தும் வழக்கமும் பரவத் தொடங்கியிருக்கு.

ம் ம் நடக்கட்டும் நடக்கட்டும்

GIF 1982 vhs nips - animated GIF on GIFER - by Dogra

நிழலி.... 
இறந்தவர்களின் சாம்பலை, பச்சையாக  குத்துவதைப்  பற்றி,  இப்போ தான் அறிந்தேன்.
அதனால் வரும், பின் விளைவுகளை.. அந்த நாட்டு அரசாங்கங்கள் தெரிவிக்க வேண்டும்.

முப்பது வருடத்துக்கு முன்பு.... என்னுடன் வேலை செய்த தமிழரின்...
தாய், தகப்பன் வைத்த  பெயர்.... சுத்தமான சைவ பெயர்.

உதாரணத்துக்கு.... கதிர்காமன், கோணேஸ்வரன், கந்தசாமி, விக்னேஸ்வரன் என்று...
இருந்த பெயரில்.... ஊரில் வாழ்ந்த போது,  
வலது கையில்,  "ஓம் முருகா"  என்று... பச்சை   குத்தியுள்ளதை நேரில் பார்த்தவன்.

சில காலத்தின் பின்... அவர்,  ஜெகோவா  மதத்துக்கு மாறிய பின்...
சைவ சமையத்தைப் பற்றி, கேவலமாக கதைக்க வெளிக்கிட்டது மட்டுமல்லாது...
ஒவ்வொரு தமிழர்களின் வீடுகளை, எப்படியோ அறிந்து..
ஜெகோவா மத பிரச்சாரத்துக்கு.... கால நேரம் பார்க்காமல்,
குடும்பம், பிள்ளை, குட்டிகளுடன்... ஒரு  கோட்டு , "ரை" கட்டின...
வெள்ளைக்காரனையும் கூட்டிக்  கொண்டு திரிய  வெளிக்கிட்டார்கள்.

எனக்கு... மனது பொறுக்கவில்லை,
உமது... கையில்,  "ஓம் முருகா"  குத்திக் கொண்டு,
வேறு மதத்துக்கு, பிரச்சாரம் செய்வது கேவலமாக தெரியவில்லையா?
இதை.. உங்கள், பாதிரியாரிடம் தெரிவித்து விடுவேன் என்று சொல்ல....

அந்தப் பாவி... அடுத்த நாள்.. சுடுகிற  "அயர்ன் பொக்ஸில்"  தனது,
வலது கையை வைத்து விட்டு...  பயங்கர, புண் காயங்களுடன் வந்து நின்றதை என்னால் மறக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, putthan said:

எல்லாம் ஆர்வகோளாறுதான் ......மகா குருவாக வேண்டும் என்ற இலட்சிய பயணத்தை நோக்கி,.....🤣

நீங்கள் மகா குருவாய் வரோணுமெண்டால் ஒரு மாதம் டெய்லி இஞ்சை வந்து வாறவை போறவை எல்லாருக்கும் அலுப்பு குடுக்கவேணும்.🤣

மகா குருவாய் மறுமலர்ச்சியடைய வாழ்த்துக்கள்:cool:

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் மகா குருவாய் வரோணுமெண்டால் ஒரு மாதம் டெய்லி இஞ்சை வந்து வாறவை போறவை எல்லாருக்கும் அலுப்பு குடுக்கவேணும்.🤣

மகா குருவாய் மறுமலர்ச்சியடைய வாழ்த்துக்கள்:cool:

முக்கியமா, எங்கண்ட தல இடம் ஆசிர்வாதம் வாங்கோணும்... 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சங்க இலங்கியங்களில் தொய்யில் என்று தலைவியின் மார்பில், தலைவன் அழகுற வரையும் ஒருவகை பண்பாடு பற்றி கூறப்பட்டுள்ளதாம்.  

இதுவும் ஒரு வகை பச்சை குத்துதலாக இருக்குமோ? ஊரில் எமது பழைய ஆட்களில் வேல்/சூலம் பச்சையாக குத்த பட்டிருக்கும். 

ஒரு காலத்தில் மேலாடை இல்லாமல் இருந்த போது, பச்சையே உடையாகவும் அமைந்திருக்கலாம்.
 
எனக்கும் பச்சை குத்துவோர் மீது (யாழிலும், உடம்பிலும்) ஒவ்வாமைதான்.

ஆனால் இப்போ கொஞ்சம் கொஞ்சமாக (இரு சாரரையும்) சகித்து வாழ முயல்கிறேன்.

http://www.timesofadventure.com/Life-Style/Art/Art-and-Archeology-of-Tamil-Literature

கோசான்.... அண்ணே,  :grin:
இதில  "டபிள்  மீனிங்கு" ஒன்றும் இல்லைத்  தானே....  🤣  😜

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

முக்கியமா, எங்கண்ட தல இடம் ஆசிர்வாதம் வாங்கோணும்... 😁

என்ன நாதம் கொம்பு சீவுறியள் போல🤣.

ஆனால் இப்ப ஒருத்தரும் உந்த டிரிக்ஸ்சுக்கு பலியாவது இல்லை.

உங்கள் உத்தியை மாற்ற வேண்டிய தருணம் இது 🤣.

1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் மகா குருவாய் வரோணுமெண்டால் ஒரு மாதம் டெய்லி இஞ்சை வந்து வாறவை போறவை எல்லாருக்கும் அலுப்பு குடுக்கவேணும்.🤣

அண்ணை இப்படி தொழில் ரகசியத்தை போட்டுடைக்க கூடாது. பிறகு எல்லாரும் மகா குரு ஆகினால் நம்ம கெப்பர் குறைஞ்சு போமெல்லே🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்னோடை வேலை செய்யிற ரஷ்யன் லேடியும் பச்சை குத்தியிருக்கிறா.....சரியாய் இந்த படத்திலை இருக்கிற மாதிரித்தான்...
ஏதோ ஒரு கதையிலை பச்சை குத்துற கதை வரேக்கை நானும் குத்தியிருக்கிறன் எண்டு காட்டினா..
தனிய ஒரு ரோசா மட்டுமோ இன்னும் இருக்கோ எண்டு கேட்டன்....இந்தா மிச்ச இரண்டு ரோசாவையும் காட்டுறன் எண்டு சொல்லி வாய் மூடக்கிடையிலை முதலாளி வந்துட்டான்.:cool:

Rosen-Tattoo: Ein zeitloser Klassiker | BRIGITTE.de

வாவ்.... குமாரசாமி அண்ணை...
இப்படியான இடத்தில், பச்சை  குத்தியிருப்பதை,
தூக்கி காட்டும் போது...

பார்க்காமல், எவன் இருக்கிறானோ....  
அவன்... பைத்தியக்காரன்.    🤣

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

என்ன நாதம் கொம்பு சீவுறியள் போல🤣.

அட.... ஆசீர்வாதத்தை அள்ளி, மனதார கொடுங்கோ.... என்ன குறையப்போகுது....🙏

சரி, 'தல' க்கும், 'தல கோசன்' எண்டதுக்கும் வித்தியாசம் இருக்குதெல்லா..... 😁

தொப்பியை தூக்கி டபெக்கெண்டு போட்டுடியல் போலை கிடக்குது.

நான், என்னை தான் தல எண்டு ஒரு பீலா விட்டேன்... இப்படி கவுத்துப்போடுவியல் என்று எதிர்பார்க்கவில்லை....🤗

சரி, சரி.... நீங்கள் தான் தல.... ஓகே...😜

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நீங்கள் மகா குருவாய் வரோணுமெண்டால் ஒரு மாதம் டெய்லி இஞ்சை வந்து வாறவை போறவை எல்லாருக்கும் அலுப்பு குடுக்கவேணும்.🤣

மகா குருவாய் மறுமலர்ச்சியடைய வாழ்த்துக்கள்:cool:

இன்று முதல் தொடர்ந்து ஒரு மாதம் அலுப்பு கொடுத்து மகாகுருவாக சத்தியபிரமாணம் எடுக்கிறேன் என உறுதிமொழி அளிக்கிறேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.