Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேரத்தையும், உழைப்பையும் சுரண்டும் "கிச்சன்" என்னும் வீட்டுச் சிறை.! பெண்களை மீட்பது எப்படி.?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிழலி said:

எங்கள் சமூகத்தில் இப்படி ஒரு நிலை வந்து அவர்கள் சந்தோசமாக வாழ்ந்ததை நான் காணவில்லை. ஒன்று ஆண் தன்னை விட மனைவி நல்லா உழைக்கின்றார் எனும் பொறாமையில் மற்றும் இயலாமையில் பிரச்சனை கொடுப்பார். அல்லது மனைவி கணவனை "கையாலாகதவன்" என்ற ரீதியில் அணுகி (தன் சுற்றங்களுக்கும் ஓயாமல் சொல்லிக் காட்டி) பிரச்சனை ஏற்படுத்துவார்.
 
அண்மையிலும் இப்படி காரணத்தினால் என் நண்பரின் குடும்பம் பிரிந்து போனது.

வோடபோன் நிறுவனத்தின் ஒரு பெண் உயரதிகாரி. கணவர் வீட்டில் இருந்து அனைத்தையுமே பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் தற்செயலாக குளிக்கப் போன மனைவியின் போனை எட்டிப் பார்த்து விட்டார். மனைவிக்கு அலுவலகத்தில் ஒருவருடன் காதல் தொடர்பில் இருக்கிறார் என்று புரிந்து கொண்டார்.

நம்பிக்கை துரோகத்தை தாங்க முடியவில்லை.

விளைவு, மனைவியை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

ஆணோ, பெண்ணோ, வீட்டில் இருந்தால், துரோகம் தாங்க முடியாது.

56 minutes ago, Nathamuni said:

 

ஆணோ, பெண்ணோ, வீட்டில் இருந்தால், துரோகம் தாங்க முடியாது.

இவ்வாறு ஒரு போதும் பொதுமைப்படுத்த முடியாது. ஏராளமான பெண்கள் வீட்டில் தான் உள்ளார்கள். அத்துடன் வெவ்வேறு ஷிப்ட் களில் கணவன் மனைவி வேலை பார்க்கும் முறையும் பல ஆயிரக்கணக்கான எம் குடும்பங்களிலும் உள்ளன.

துரோகம் செய்ய நினைத்து விட்டால்,அது வீட்டில் இருந்தால் என்ன வெளியில் சென்றால் என்ன. அதே நேரத்தில் நேர்மையாக இருக்கின்றவர்களுக்கு இவை எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2021 at 06:46, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வளர்ந்த நாடுகளில் ரெஸ்டாரண்டில் அடிக்கடி சாப்பிடுவது வாடிக்கையாக இருக்கிறது. அவர்களுக்கு வயிற்று வலி வருவதில்லை. ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால் நம்ம ஊரில் ஒரு வருடம் சேர்ந்தாற்போல ஹோட்டல்களில் சாப்பிட்டால் அத்தனை உடல்நல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இங்கு தான் தரம் முக்கிய பங்காற்றுகிறது.

சமையலறை பெண்களுக்கு மட்டுமே ஆனது என்ற ஒரு பொது புத்தியை உடைத்து எறிய வேண்டிய தேவை அடுத்த சவாலாக இருக்கிறது. "இந்த சவாலில் கிட்டத்தட்ட பாதி கிணறை நாம் தாண்டி விட்டோம் என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவை கிடையாது" என்கிறார்கள் நாம், தொடர்பு கொண்டு பேசிய, பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர்.

"தி கிரேட் இந்தியன் கிச்சன்" போன்ற திரைப்படங்கள், அப்படியே, ஆண்கள் முகத்தில் அறைந்து உண்மைகளை பேச ஆரம்பித்துள்ளன. பொது வெளியில், இப்போதுதான் நாம் இதைப் பற்றி பேசவே ஆரம்பித்துள்ளோம். கட்டுடைப்புக்கான, மனத் தடையை நொறுக்குவதற்கான நல்ல அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.

இதுவரை இல்லாத வகையில், குடும்ப உறவுகளில் இந்த இந்திய தலைமுறை பல்வேறு மாற்றங்களை பார்த்து வருகிறது. தனிக்குடித்தனம் சாதாரணமாகிவிட்டது, பெண்களும் வேலைக்கு போவது அடிப்படை தேவையாகிவிட்டது, பெண் பிள்ளைகளுக்கு என்று தனி வேலை கொடுக்காமல் ஆண் குழந்தைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே, அடுத்த தலைமுறை, சமூக கிச்சன் நோக்கி செல்லும் சமுதாயமாக உருவாவதற்கான வாய்ப்புகள் மறுப்பதற்கு இல்லை என்று உறுதியாகச் சொல்கிறார்கள் அவர்கள்.

கட்டுரையாளர் என்னத்தை  புகுத்த படாத பாடு படுகிறார் புரியவில்லை 🙃குழம்பு கடை விளம்பரமோ தெரியலை நாகரீகங்களின்  உச்சத்தை தொட்ட மனித  கூட்டங்கள் சில தவறான முடிவுகளினால் அழிந்த  வரலாறு ஏராளம் .

இந்த திரி இன்னும் ஓடும் இங்கு சிலரின் கருத்துக்களை பார்க்கும்போது எது இப்படியான சூழ் நிலையை தோற்றுவித்தது  என்று தெரியவில்லை !.. உணவென்பது மனித உடல் இயங்க தேவையான அத்தியாவசிய பொருள் அதுவும் தமிழர் வாழ்வில் உணவே மருந்து ஊரில் சளி பிடித்தால் நாட்டுக்கோழி ரசம் கறி. கீல்வாதம் எனப்படும்  யூரிக் அமில படிவினால் தோன்றும் வயதானவர்களின் மூட்டு உழைவுக்கு  முடக்கத்தான் ரசம் இங்கு அதிகளவு மது பாவனையால் சிலருக்கு 45 வயதிலே கால் உளைவு நோ போன்றவை வேளைக்கே விலை கொடுத்து வாங்கினம் . வயித்து பூச்சிக்கு பாவைக்காய் காத்தோட்டிக்காய்  வடகம்.சின்ன வெங்காய வதக்கல்  குழம்பு ,வெந்தய குழம்பு இப்படி அறுசுவையும் உடலில் சேரனும் .

மாறாக உணவுக்கடைகளில் சுவை மட்டுமே குறிக்கோள்  அதுமட்டும் காணும் பசியை போக்கினால் சரி   உங்கள் உடல்நலம் இரண்டாம் பட்சம் என்றால்    அன்று தொடங்கியது விதம் விதமான வருத்தங்களும் வியாதிகளும் .

ஊரில் புனல் ஊதி  அடுப்பெரித்து உணவு சமைப்பது போலவா இங்கு சமைக்கிறம் ? இருமணி நேரம் அதிகம் வாரத்தில் ஒரு நாளாவது  உணவே மருந்து அதுவும்  வீட்டில் இருக்கும் நாட்களில் கடைபிடித்தால் இந்த தைரொயிட் போன்ற விதம் விதமான வருத்தங்களில் இருந்து தப்பிக்கலாம் மாறாக.நாக்குக்கு சுவைத்தான் முக்கியம் என்றால் அவர்களை அப்படியே  விட்டு வேண்டியதுதான்.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நிழலி said:

இவ்வாறு ஒரு போதும் பொதுமைப்படுத்த முடியாது. ஏராளமான பெண்கள் வீட்டில் தான் உள்ளார்கள். அத்துடன் வெவ்வேறு ஷிப்ட் களில் கணவன் மனைவி வேலை பார்க்கும் முறையும் பல ஆயிரக்கணக்கான எம் குடும்பங்களிலும் உள்ளன.

துரோகம் செய்ய நினைத்து விட்டால்,அது வீட்டில் இருந்தால் என்ன வெளியில் சென்றால் என்ன. அதே நேரத்தில் நேர்மையாக இருக்கின்றவர்களுக்கு இவை எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை.

 

1 hour ago, Nathamuni said:

ஆணோ, பெண்ணோ, வீட்டில் இருந்தால், துரோகம் தாங்க முடியாது.

 

ஆணோ, பெண்ணோ, வீட்டில் இருந்தால், துரோகம் நடப்பது தெரிந்தால் தாங்க முடியாது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் ஒரு  மாவட்டத்தில் ஒரு நாள் நாள் நான் தும்புத்தடியால் கூட்டிக் கொன்டிருந்த போது ஒரு 12 வயது சிறுமி அதைப்பார்த்து கெக்கம் விட்டு சித்ததது மட்டும் இல்லாமல் தனது நன்பிகளையும அழைத்து காட்டினார்.இது நடந்தது போன வருடம்.இந்த இலச்சனத்தில் ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பெருமாள் said:

ஊரில் புனல் ஊதி  அடுப்பெரித்து உணவு சமைப்பது போலவா இங்கு சமைக்கிறம் ? இருமணி நேரம் அதிகம் வாரத்தில் ஒரு நாளாவது  உணவே மருந்து அதுவும்  வீட்டில் இருக்கும் நாட்களில் கடைபிடித்தால் இந்த தைரொயிட் போன்ற விதம் விதமான வருத்தங்களில் இருந்து தப்பிக்கலாம் மாறாக.நாக்குக்கு சுவைத்தான் முக்கியம் என்றால் அவர்களை அப்படியே  விட்டு வேண்டியதுதான்.

 பெண்களுக்கு கிச்சன் எண்டது வீட்டு சிறையாம்?🤣
ஆனால் நேர காலமில்லாமல் பொம்புளையளும் ஆம்பிளையள் மாதிரி வேலைக்கு போய் வர வெளிக்கிட்டினம்.இது சிறை மாதிரி தெரியேல்லையாக்கும். வீட்டு வேலையள் செய்தால் சிறை.வெளியிலை போய் வேலை செய்தால் சுதந்தர பறவைகள். நாங்கள் ஆம்பிளையளும் வேலைக்கு போறம்.வீட்டுக்கு வந்து வேலையளும் செய்யிறம்.அதெல்லாம் கணக்கெடுக்க மாட்டினம்.
மெத்த படிப்பு படிச்சு என்ன பிரயோசனம்? அளவுக்கு மிஞ்சின ஆசைகள்.மூண்டு நாலு பேருக்கு அளவுக்கு மிஞ்சி பெரிய வீடு கடனிலை.....ஆளுக்கொரு கார் கடனிலை.......ஹொலிடே போறது கடனிலை......பிறந்தநாள் கொண்டாட்டம் அந்தக்கொண்டாட்டம் இந்தக்கொண்டாட்டம் எல்லாம் கடனிலை.....கதை இப்பிடி போனால் நேரகாலமில்லாமல் வேலை செய்யத்தானே வேணும்

அளவோடு உழைச்சு அழகாக வாழ்ந்தால் எதுவுமே யாருக்குமே சிறை வாழ்க்கை இல்லை.அளவுக்கு மிஞ்சி ஆசைப்பட்டு,மற்றவர்களை போல் தாங்களும் வாழ்ந்து காட்ட நினைப்பதாலேயே பலருக்கு வாழ்க்கையும் கிச்சினும் சிறையாக தெரிகின்றது.

ஊரில் எல்லாம் பெண்கள் தான் சமையல். வீட்டு வேலைகள். அதை அவர்கள் சிறையாக கருதியதில்லை.மாறாக வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே கருதினார்கள்.

அறப்படிச்சவன் கூழ் பானைக்குள் வீழ்ந்த மாதிரி வாழாமல், வசந்தமாளிகை வீடுகளை வாங்கி அல்லல்பட்டு கணவனும் மனைவியும் வேலை வேலை என்று அலைந்து சீரழிந்த வாழ்க்கை வாழாமல் விரலுக்கேற்ற வீக்கம் போல் வாழ்ந்தால் எதுவுமே சிறையாக தெரியாது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இந்தியாவின் மிக பெரிய IT கொம்பனியில் ஒன்று HCL. $5பில்லியன் கம்பெனி.

இதன் ceo (ஓனர் தமிழர்: சிவ நாடார்) ஒரு முறை சொன்னார்.

தனது stress குறைப்பு வேலை, சமையல் செய்வது என்று. 

கிச்சினுள் புகுந்து, விதம், விதமா சமைத்துக்கொண்டே, ஐடியா போடவும், பிரச்னைகளுக்கு தீர்வு குறித்து யோசிக்கவும், புதிய யுக்திகள் குறித்து சிந்திக்கவும் முடிகிறது என்றார்.     

சிவநாடாருக்கு சுவை சமையல்..

 சாமானியனுக்கு இதமான காலை வெந்நீர் குளியல்.

 புது புது ஐடியாக்களையும்..

பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் வெந்நீர் தூவல் தாங்கி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வியலின் ஒரு முக்கியமான அம்சத்தைப் பற்றி கருத்து பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.

 உணவு அடிப்படை தேவைகளில் ஒன்று.

 இனப்பெருக்கம் எனும் மிக அடிப்படையான செயலில் ஈடுபடும் போது இருக்கக் கூடிய மகிழ்ச்சிக்கு சற்றும் குறைந்ததல்ல உண்ணும் போது உண்டாகும் திருப்தி.

 இஞ்சி வாங்கித் தரவில்லை என்று பிடுங்குப்பட்டு தற்கொலை செய்து கொண்ட புதுமணப் பெண்ணை நான் அறிவேன்.

 புட்டு மாவை கொத்தி கொழித்து மனைவி வைக்கஇ  தனக்கு தேவையான நேரம் அவித்து சாப்பிடும் கணவரை நான் அறிவேன்.

 எவ்வகையான உணவாக இருந்தாலும் அருமையாக இருக்கிறது என்று சொல்லி மகிழ்வோடு சாப்பிடுபவர்களை தெரியும்.

 ஊசியம் செம்பில் தண்ணீருடனும் கணவர் உண்ணும் வரை அருகிலேயே இருந்த மனைவி மாரின் காலம் மாறி விட்டது .

தோசைக்கு இரண்டு சம்பலும் தோசைக் கறியும் வீட்டில் எப்போதும் இருந்த காலம் மாறி விட்டது.

 மாற்றம் என்பதே மாறாத ஒன்று என்பதனை உணர்ந்து இ சமையல் என்பதை இருவருக்கும் பொதுவாக வைப்போம் என்பதே இன்றய நிதர்சனம் இ வாழ்வு சுமுகமாக போவதற்கான தாரக மந்திரம்.

 பின்னொரு நாளில் கணவரும் கையில் ஊசியும் செம்பில் தண்ணீருமாக மனைவி உணவருந்தி முடியும் வரை இருக்கும் நேரங்கள் வராது என்பதில்லை.

 (கூர்ப்பின் விரிவில் இனப்பெருக்கத்திற்கு ஆண் இனத்தின் தேவைகள் ஒரு  பொழுதில் அவசியமில்லாமல் போகும் என ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்லி நிற்கின்றது என்று படித்த ஞாபகம் இருக்கிறது )

  • கருத்துக்கள உறவுகள்
On 8/7/2021 at 23:23, குமாரசாமி said:

அறப்படிச்சவன் கூழ் பானைக்குள் வீழ்ந்த மாதிரி வாழாமல், வசந்தமாளிகை வீடுகளை வாங்கி அல்லல்பட்டு கணவனும் மனைவியும் வேலை வேலை என்று அலைந்து சீரழிந்த வாழ்க்கை வாழாமல் விரலுக்கேற்ற வீக்கம் போல் வாழ்ந்தால்

இது நீங்கள் சொன்னது மாதிரி நடைபெறுவது உண்மை தான். வாழ்க்கையின் நோக்கமே வீடு வாங்குதல் என்பது போல் வீட்டை வாங்குவதும் பின்பு முடியாமல் விற்பதும் வீட்டுக்காக வேலை வேலை என்று நோய்வாய்படுதலும் நடைபெறுகிறது. அது அவர்களின் பேராசை, போட்டி மனப்பான்மை, மற்ற தமிழர்களைவிட தங்களை  மேன்மையானவராக காட்ட வேண்டும் என்பதற்காக நடைபெறுபவை. கிச்சன் சிறை வேறு  பிரச்சனை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/7/2021 at 23:25, விளங்க நினைப்பவன் said:

இது நீங்கள் சொன்னது மாதிரி நடைபெறுவது உண்மை தான். வாழ்க்கையின் நோக்கமே வீடு வாங்குதல் என்பது போல் வீட்டை வாங்குவதும் பின்பு முடியாமல் விற்பதும் வீட்டுக்காக வேலை வேலை என்று நோய்வாய்படுதலும் நடைபெறுகிறது. அது அவர்களின் பேராசை, போட்டி மனப்பான்மை, மற்ற தமிழர்களைவிட தங்களை  மேன்மையானவராக காட்ட வேண்டும் என்பதற்காக நடைபெறுபவை. கிச்சன் சிறை வேறு  பிரச்சனை என்று நினைக்கிறேன்.

முன்னரெல்லாம் கிச்சன்  சிறை என்ற கதைக்கே இடமில்லாமல் இருந்தது.
ஆனால் இன்று அது பேசு பொருளாக்கப்பட்டு விட்டது.
அதற்கான காரணங்களை மட்டுமே நான் சொல்ல வந்தேன்.

மற்றும் படி எனது வீட்டில் கிச்சன் தொடக்கம் ஏனைய அனைத்து துப்பரவு வேலைகளை நானேதான் செய்வேன். அது என் மனையாளுக்கு உதவியல்ல எனது வேலை.

உலக மனைவியல் சங்க தலைவிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
 முதலில் உங்கள் வீடுகளில் வேலை செய்யும் வீட்டு வேலைகாரர்களை நிறுத்தி விட்டு நீங்கள் உங்கள் வேலைகளை செய்ய பழகிக்கொள்ளுங்கள்

Edited by குமாரசாமி
சிச்சன் கிச்சன்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

மற்றும் படி எனது வீட்டில் கிச்சன் தொடக்கம் ஏனைய அனைத்து துப்பரவு வேலைகளை நானேதான் செய்வேன். அது என் மனையாளுக்கு உதவியல்ல எனது வேலை.

👍

அண்ணியார்  அதிஷ்டகாரர்.

  • கருத்துக்கள உறவுகள்

முந்தின காலங்களில் வேலைக்கு போற பெண்கள் ஆயினும் சமையலை விட்டுக்கொடுக்கமாட்டாய்ங்க. இப்ப எல்லாம்.. பெண்கள் தமக்கு சமைக்க வரல்லைன்னு சொல்வதை பெருமைன்னு நினைக்கிறாய்ங்க.

இருந்தாலும் எல்லாம் சமூகங்களிலும் இப்பவும் பெண்கள் தான் அதிகம் சமையலை பற்றி யோசிக்கிறாய்ங்க.. செய்யுறாங்க. 

உணவுக்கும் பெண்ணுக்கும் ஏதோ தொடர்பிருப்பதால் தான் தாய் தான் குழந்தைக்கு பாலூட்ட முடியுது. தந்தை அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2021 at 22:25, விளங்க நினைப்பவன் said:

இது நீங்கள் சொன்னது மாதிரி நடைபெறுவது உண்மை தான். வாழ்க்கையின் நோக்கமே வீடு வாங்குதல் என்பது போல் வீட்டை வாங்குவதும் பின்பு முடியாமல் விற்பதும் வீட்டுக்காக வேலை வேலை என்று நோய்வாய்படுதலும் நடைபெறுகிறது. அது அவர்களின் பேராசை, போட்டி மனப்பான்மை, மற்ற தமிழர்களைவிட தங்களை  மேன்மையானவராக காட்ட வேண்டும் என்பதற்காக நடைபெறுபவை. கிச்சன் சிறை வேறு  பிரச்சனை என்று நினைக்கிறேன்.

அப்படி வாங்கத்தான் வேணுமெண்டால் வீட்டு மோர்ட்கேஜ் புரோக்கரை தவிர்த்து நேரே வங்கியுடன் கதைத்து வீடு வாங்குவது புத்திசாலித்தனம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.