Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருச்சி டு டோக்கியோ: ``கனவு மாறி இருக்கு!" - ஒலிம்பிக் செல்லும் திருச்சி தனலெட்சுமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி டு டோக்கியோ: ``கனவு மாறி இருக்கு!" - ஒலிம்பிக் செல்லும் திருச்சி தனலெட்சுமி

Dhanalakshmi

Dhanalakshmi ( Photo: Vikatan / Dixith )

``திருச்சி மைதானத்தில் சிறுமி தனலெட்சுமி ஓடத் தொடங்கியபோது, ஒலிம்பிக்தான் அவளின் உச்ச இலக்கு. இன்று அதை வசப்படுத்தியுள்ளது பெரும் நம்பிக்கை தந்திருக்கிறது".

newsletter_image.png?format=webp&w=576&dpr=1.0

விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...!

எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…!

Get Our Newsletter

திருச்சியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் தனலெட்சுமி, ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் இம்மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ளத் தேர்வாகியுள்ளார்.

திருச்சி மாவட்டம், குண்டூரைச் சேர்ந்த தனலெட்சுமி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் போட்டியில், 100 மீ ஓட்டத்தில் இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான டூட்டி சந்தை பின்னுக்குத் முதலிடம் பெற்றார். இருந்தும், அப்போது ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற நிர்ணயிக்கபட்டிருந்த இலக்கை அவரால் எட்டமுடியவில்லை. இதனால் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.

Dhanalakshmi with her mother
 
Dhanalakshmi with her mother Photo: Vikatan / Dixith

இந்நிலையில், வருகிற 23-ந் தேதி தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக விளையாட்டு வீரர்களுக்கான தேர்வுப் போட்டிகள், கடந்த ஒரு மாதமாக பாட்டியாலாவில் நடைபெற்று வருகின்றன. இதில் தனலெட்சுமியும் பங்கேற்றிருந்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற 400 மீட்டர் தொடர் (ரிலே) ஓட்டத்தில் பங்கேற்று தனலெட்சுமி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் வருகிற 23-ந் தேதி டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிக்கு அவர் தேர்வாகி உள்ளார்.

தனலெட்சுமியின் அப்பா சேகர் இறந்துவிட்டார். அம்மா உஷாதான் இவரின் பலம். தந்தையின் கனவு மற்றும் தன்னுடைய ஆசையாக இருந்த ஓட்டப்பந்தயத்தில் சாதிக்க வேண்டும் என்று 9-ம் வகுப்பில் இருந்து பயிற்சி எடுத்து வருகிறார். இவருடைய சூழலைப் பார்த்தும், திறமையைப் பார்த்தும் சர்வதேச தடகள வீரரான மணிகண்ட ஆறுமுகம் இவருக்குப் பயிற்சி வழங்கி வருகிறார்.

ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது குறித்து தனலெட்சுமியிடம் வாழ்த்துகளைக் கூறி பேசினோம்.

``மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. நான் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வானது கனவுத் தருணம் போல உள்ளது. மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வுப் போட்டியில் சாதனை படைத்தும் இலக்கை எட்டமுடியாததால் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தேன், அதனால் பெரிதாக நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஆனால் என் முயற்சியும், என்னுடைய கோச் அளித்த பயிற்சியும் என்னை ஒலிம்பிக் வரை முன்னேற்றியுள்ளது. கண்டிப்பாக ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. திருச்சி மைதானத்தில் சிறுமி தனலெட்சுமி ஓடத் தொடங்கியபோது, ஒலிம்பிக்தான் அவளின் உச்ச இலக்கு. இன்று அதை வசப்படுத்தியுள்ளது பெரும் நம்பிக்கை தந்திருக்கிறது '' என்றார்.

கோச் ஆறுமுகத்துடன் தனலட்சுமி
 
கோச் ஆறுமுகத்துடன் தனலட்சுமி

தனலெட்சுமியின் கோச் மணிகண்ட ஆறுமுகத்திடம் பேசினோம். ``தனலெட்சுமி மேல் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவர் நிச்சயமாக ஒலிம்பிக் தேர்வுப் போட்டியில் வெற்றி பெறுவார் என்று நம்பினேன். தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியிலும் அவர் வெற்றி பெறுவார். அவரது கடின முயற்சி அவரை கண்டிப்பாக வெற்றியாளராக்கும்'' என்றார்.

டோக்கியோ வெற்றியை பறித்து வரட்டும் திருச்சி புயல்!

 

https://www.vikatan.com/news/sports-news/trichy-athlete-dhanalakshmi-speaks-about-her-tokyo-olympics-qualification

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் கனவு: 3 தமிழ்நாட்டுப் பெண்கள் தடைகளை உடைத்தது எப்படி? -ஊக்கம் தரும் கதை

33 நிமிடங்களுக்கு முன்னர்
ஒலிம்பிக்

பட மூலாதாரம்,SUBHA VENKATESAN

 
படக்குறிப்பு,

ஒலிம்பிக் செல்லும் தமிழக தடகளக் குழு

தமிழ்நாட்டின் கிராமங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர்.

சவால்களைக் கடந்து சாதனையை நோக்கிய அவர்களது பயணம் மற்றவர்களை ஊக்குவிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் தடகள அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம்பிடித்திருக்கிறார்கள். அவர்களில் மூன்று பேர் பெண்கள். இதுவரை இல்லாத சாதனை இது.

ஒலிம்பிக்கில் முதல்முறையாக நடைபெற இருக்கும் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்பதற்காக மூன்று பெண்களும் டோக்கியோ செல்ல இருக்கிறார்கள்.

 

திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி, திருவெறும்பூரைச் சேர்ந்த சுபா, மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த ரேவதி ஆகிய மூன்று பெண்களும் ஒலிம்பிக்கில் பதக்க வேட்டை நடத்தப் போகிறார்கள்.

பொருளாதார நெருக்கடியில் வளர்ந்தவர்கள்

இந்த மூன்று பேருமே மிகவும் பின்தங்கிய சூழலில் வளர்ந்தவர்கள். பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே கனவுகளைத் துரத்திக் கொண்டிருப்பவர்கள்.

ரேவதி

பட மூலாதாரம்,REVATHY

 
படக்குறிப்பு,

ரேவதி

இளம் வயதில் பெற்றோரை இழந்த ரேவதிக்கு அவரது பாட்டிதான் அரவணைப்பாகவும் தூண்டுகோலாகவும் இருந்திருக்கிறார். பல நேரங்களில் கால்களுக்கு ஷூ கூட இல்லாமல் அவர் பயிற்சி எடுக்க நேர்ந்திருக்கிறது.

"எனக்கு அம்மா, அப்பா இல்லை. இளம் வயதிலேயே இறந்துவிட்டார்கள். பாட்டிதான் வளர்த்தார்கள். ஹாஸ்டலில் தங்கித்தான் படித்தேன்" என்று பிபிசி தமிழிடம் கூறினார் ரேவதி.

பொருளாதார நெருக்கடிகள் இந்த மூன்று பெண்களின் ஓட்டத்துக்கு தடையாக இருந்தாலும், அதை அவர்கள் உடைத்திருக்கிறார்கள்.

"ஷூ வாங்குவதற்கு அம்மா தனது நகையை அடமானம் வைத்து பணம் தருவார்" என்று தனது நெகிழ்ச்சியான தருணத்தை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார் தனலட்சுமி.

தனலட்சுமியின் தந்தை இறந்துவிட்டார். வேலைக்குச் செல்லும் அக்காவின் வருமானம், வீட்டில் இருக்கும் மாடுகள் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவை தனலட்சுமியின் ஓட்டப் பயிற்சிக்குப் பயன்பட்டிருக்கிறது.

தனலட்சுமி

பட மூலாதாரம்,DHANALAKSHMI

 
படக்குறிப்பு,

தனலட்சுமி

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் தடகளப் போட்டியில், 100 மீ ஓட்டத்தில் இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான டூட்டி சந்தை விட வேகமாக ஓடி கவனத்தை ஈர்த்தவர் தனலட்சுமி.

"பள்ளியில் படிக்கும் வரை எனக்கு ஷூ கிடையாது. கல்லூரிக்குச் சென்ற பிறகுதான் ஷூ போட்டு பயிற்சி மேற்கொண்டேன்" என்றார் ரேவதி.

ஊக்கமளித்த தாத்தாவும் பாட்டியும்

ரேவதிக்குப் பாட்டி என்றால், தொடர் ஓட்டப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கும் மற்றொரு தமிழ்நாட்டு வீராங்கனையான சுபா வெங்கடேசனுக்கு தாத்தா.

"என்னுடைய தாத்தா காவல்துறையில் இருந்தார். அவர்தான் எனக்கு ஊக்கமளித்தவர். அவர் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பள்ளி விளையாட்டுகளில் நான் ஓடியதைப் பார்த்த அவர் என்னை சாதிக்கவைக்க வேண்டும் என்று விரும்பினார். பல போட்டிகளில் பங்கேற்க வைத்தார். அவரால்தான் நான் இந்த நிலைக்கு வர முடிந்தது" என்று நினைவுகூர்கிறார் சுபா.

தேசிய அளவில் 20 பதங்கங்களைப் பெற்றுள்ள சுபா 8 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவற்றில் 3 பதங்கங்களைப் பெற்றுள்ளார்.

சுபா

பட மூலாதாரம்,SUBHA VENKATESAN

 
படக்குறிப்பு,

சுபா வெங்கடேசன்

தனலட்சுமியைப் பொறுத்தவரை பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும் அவருக்கு வீட்டிலும் கல்லூரியிலும் நிறைய ஊக்கம் கிடைத்திருக்கிறது.

"வீட்டிலும், படித்த பள்ளி கல்லூரிகளிலும் ஓட்டப் பயிற்சிக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. பயிற்சிக்கும் போட்டிகளுக்கும் சென்றுவிட்டு மீதி நேரங்களில்தான் வகுப்பறைக்கு வருவேன். ஆயினும் எனது நிலைமையைப் புரிந்து கொண்டு ஆசிரியர்கள் எனக்கு உதவினார்கள்" என்கிறார் தனலட்சுமி.

"பள்ளியில் படிக்கும்போது மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்று பயிற்சியாளர் எனக்கு உதவி செய்தார். பஸ்ஸில் சென்று வர பணமில்லை என்று கூறியதால், மதுரையிலேயே கல்லூரியில் இலவசமாகப் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார்."

ஆதரவு அவசியம்

ஒப்பீட்டளவில் விளையாட்டுகளிலேயே மிகக் குறைந்த செலவில் பயிற்சி மேற்கொள்ளக்கூடியவை ஓட்டப் போட்டிகள்தான். தரமான காலணிகள், சத்தான உணவுகள் ஆகியவற்றுடன் ஓரு மைதானமும் கிடைத்துவிட்டால் போதுமானது.

ஆனால் அவைகூட தமிழ்நாட்டில் இருந்து டோக்கியோவுக்குச் செல்ல இருக்கும் பெண்களுக்கு இயல்பாகக் கிடைத்துவிடவில்லை என்பதை அவர்களின் பேட்டிகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது..

"ஒரு போட்டிக்குச் செல்ல வேண்டுமானால் குறைந்தது இருபதாயிரம் ரூபாய் செலவாகும். ஷூ கிழிந்துவிட்டால் மாற்ற வேண்டும். எனக்கு இப்போது எந்த வேலையும் இல்லை. ஸ்பான்சரும் கிடையாது" என்கிறார் தனலட்சுமி.

தனலட்சுமி

பட மூலாதாரம்,DHANALAKSHMI

 
படக்குறிப்பு,

தனலட்சுமி

நாள்தோறும் காலை 6.30 மணி முதல் 9 மணி வரையும் மாலையில் 5 மணி முதல் 7 மணி வரை கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகிறார் தனலட்சுமி.

சுபாவுக்கும் ஸ்பான்ஸர் யாருமில்லை. அரசு உதவியும் இல்லை. முழுக்க முழுக்க குடும்பத்தின் வருமானத்தை நம்பியே பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். போட்டிகளுக்குச் செல்ல வேண்டும். பல முறை முயற்சி செய்தும் அரசு வேலை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படும் சுபா, அரசு வேலை கிடைத்தால் பயிற்சிகளை மேற்கொள்ளப் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்.

சவால்கள்

பல தருணங்களில் காயங்கள் தமக்கு கடுமையான சவாலாக அமைந்ததாகவும், அதில் இருந்து மீண்டு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் கூறும்போது சுபாவின் நா தழுதழுத்தது. பயிற்சி மையங்களுக்கு வெளியே இருந்து தமக்கு தொந்தரவுகள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிராமப் புறங்களில் இருந்து வரும் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு பல்வேறு தடைகள் இருப்பதாகவுவும் சுபா கூறினார்.

சுபா

பட மூலாதாரம்,SUBHA VENKATESAN

 
படக்குறிப்பு,

சுபா வெங்கடேசன்

"ஓட்டப் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும் என்ற முயற்சி செய்து கொண்டிருந்தபோது, பெண்களை ஏன் ஓட விடுகிறீர்கள். பதக்கங்களை வாங்கி என்ன சாதிக்கப் போகிறார்கள். கல்யாணம் முடித்து விடுங்கள் என்று உறவினர்கள் பலரும் பேசினார்கள். ஆனால் பாட்டி அவற்றைப் பொருட்படுத்தவில்லை" என தனது தொடக்க காலச் சவால்களை ரேவதி நினைவு கூர்ந்தார்.

"பெரும்பாலும் குடும்பத்தில் இருந்து தடங்கல் வரும். பிறகு பொருளாதாரத் தடை. அதன் காரணமாகவே பலர் பயிற்சி பெறுவதில்லை. போட்டிகளில் பங்கேற்பதில்லை. ஒரு கட்டத்தில் வெளியேறி விடுகின்றனர்" என்கிறார் சுபா.

"உங்கள் வீட்டில் ஒரு குழந்தை விளையாட்டில் பங்கேற்பதற்கு ஆர்வம் காட்டினால் அதற்கு ஆதரவளிக்க வேண்டும். நிச்சயமாக அவர்களைச் சாதனையாளராக்க முடியும்" என்கிறார்.

சர்வதேச அரங்கத்தில் என்ன சவால்?

தடகளப் போட்டிகளுக்கான சர்வதேச தரத்திலான ஓடுபாதைகள் இந்தியாவில் இல்லை. இதுவரை இந்தியாவில் மட்டுமே பயிற்சி எடுத்துக் கொண்ட சில தடகள வீரர்கள் ஒலிம்பிக்கில்தான் முதல்முறையாக சர்வதேச ஓடுபாதைகளில் ஓட இருக்கிறார்கள்.

ரேவதி

பட மூலாதாரம்,REVATHY

 
படக்குறிப்பு,

பாட்டியுடன் ரேவதி

"ஓடுபாதையைப் பார்த்து மாத்திரமல்ல, வெளிநாட்டு வீரர்களைக் கண்டும் அஞ்சாமல் ஓட வேண்டும். அவர்களை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்" என்கிறார் தனலட்சுமி.

"வெளிநாட்டு வீரர்களுடன் இதுவரை நேரடியாக போட்டியிட்டுப் பயிற்சி மேற்கொள்ளவில்லை. அதனால் மற்றவர்களின் திறமையை நேரடியாக மதிப்பிட முடியவில்லை. ஆனாலும் அவர்கள் ஓடும் நேரத்தைக் கணித்து வைத்திருக்கிறோம்" என்கிறார் ரேவதி

சவால்கள் இருந்தாலும் நிச்சயமாக பதக்கத்துடன் திரும்புவோம் என்று உறுதியளிக்கிறார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள்.

"எனக்குப் பிடித்த வீரர் உசேன் போல்ட்" என்கிறார் தனலட்சுமி.

https://www.bbc.com/tamil/india-57738340

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..👍..💐

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சிகளான...   தனலட்சுமி, சுபா, ரேவதி ஆகியோர்..
ஒலிம்பிக்கில்  தங்கப் பதக்கங்கங்களை, வென்று வர வாழ்த்துகின்றோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு புதிய தலைமுறை உண்மை உடனுக்குடன் தமிழ்நாட்டில் இருந்து தடகளத்தில் தடம் பதிக்கும் ஐவர்... சுபா வெங்கடேசன் (கலப்பு 4x400 தொடர் ரேவதி வீரமணி (கலப்பு 4x400 தொடர் ஓட்டம்) ஆரோக்கிய ராஜீவ் (ஆண்கள் 4x400 தொ தனலட்சுமி (கலப்பு 4x400 தொடர் ஓட்டம்) நாகநாதன் பாண்டி (ஆண்கள் 4x400 தெ Foos。107221 06/07/2021 www. இன்று பெரிதாக பேசபட்டிருக்க வேண்டிய மிக முக்கிய செய்தி இது. ஆனால் பலராலும் பார்க்க படவே இல்ல.. இப்ப தெரியுதா நாம ஏன் நிறைய தங்க பதக்கம் வாங்க முடியலனு..'

இவ்ளோ பெரிய சாதனையே பாக்க படல.. இதுல அவங்க கஷ்டம் எங்க தெரிய போகுது.

பார்ப்பான் முன்னாடி இருந்தால் செய்தி தீவிரமாக இருக்கும்.

 

Tamil Pandia

  • கருத்துக்கள உறவுகள்

பங்கு பற்றியவர்கள் வெற்றிக்கனி பறிக்கட்டும்.......பகிர்ந்தவர்களுக்கு நன்றி......!   🌹

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2021 at 08:21, உடையார் said:

திருச்சி மைதானத்தில் சிறுமி தனலெட்சுமி ஓடத் தொடங்கியபோது, ஒலிம்பிக்தான் அவளின் உச்ச இலக்கு. இன்று அதை வசப்படுத்தியுள்ளது பெரும் நம்பிக்கை தந்திருக்கிறது".

தனலட்சுமி ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பெற வேண்டுகிறேன்.

வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஏராளன் said:

தடகளப் போட்டிகளுக்கான சர்வதேச தரத்திலான ஓடுபாதைகள் இந்தியாவில் இல்லை. இதுவரை இந்தியாவில் மட்டுமே பயிற்சி எடுத்துக் கொண்ட சில தடகள வீரர்கள் ஒலிம்பிக்கில்தான் முதல்முறையாக சர்வதேச ஓடுபாதைகளில் ஓட இருக்கிறார்கள்.

ஆஆஆஆஆஆஆஆ
வல்லரசில் இப்படியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆஆஆஆஆஆ
வல்லரசில் இப்படியுமா?

கொஞ்சம் சும்மா இருக்க மாட்டியள்? 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கொஞ்சம் சும்மா இருக்க மாட்டியள்? 😁

தெரியாட்டில் கேட்கக் கூடாதா ஐயா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.