Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன?
முற்குறிப்பு:
அறிவு என்பது வேறு மதிநுட்பம் அல்லது புத்திக்கூர்மை அல்லது புத்திசாலித்தனம் என்பது வேறு என்பதே எனது புரிதல்.
இங்கு நான் அறிவு எனக் கருதுவது கல்வி மூலம் பெறப்பட்ட அறிவாகும்.
அறிவுஜீவிகள் எல்லோரும் மதிநுட்பம் உள்வர்களாக இருக்க வேண்டியதில்லை.
அதே போல் மதிநுட்பம் வாய்ந்தவர்கள் எல்லோரும் கல்வியறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை.
அறிவு மட்டம் அதிகரிக்க அதிகரிக்க மதிநுட்பம் குறைந்து செல்லும் என்றொரு விதி இல்லை. ஆனால் நடைமுறையில் அப்படித்தான் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
ஒரு 5 வயதுக் குழந்தையைவிட வளர்ந்த ஒரு அறிவுஜீவியின் மதிநுட்பம் குறைவாகவே உள்ளது என்பது யதார்த்தம்.
விதி விலக்ககளும் உண்டு!
நிற்க,
யாழ்ப்பாணத்துக் கல்விப் பாரம்பரியமும் அதன் மூலம் கிடைக்கப் பெறும் அறிவுஜீவித்தனமும் இரண்டு வேர்களுடன் பின்னிப் பிணைந்தது.
1. காலனித்துவக் கல்வி
2. நாவலர் வழிக் கல்வி
இது இரண்டையும் தவிர்த்து யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனத்தை வரவிலக்கணம் செய்ய முடியாது.
காலனித்துவ கல்வியானது, அந்நிய எஜமானர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எவ்வாறு சிறப்புற முதுகு சொறிவது அல்லது சேவகம் செய்வது என்பதைக் கற்றுத் தருகின்றது. பேராசையையும் போலித்தனத்தையும் வளர்க்கின்றது. எமது பண்பாட்டையும் விழுமியங்களையும் மெல்ல மெல்ல விற்றுப் பிழைக்க வைக்கின்றது. சுயநலத்துக்காக எமது மக்களின் கௌரவத்தையும் உரிமைகளையும் பேரம் பேசி விற்கும் வித்தையைக் கற்றுக் கொடுக்கின்றது. அறிவுபெற்ற அடிமைகளை உருவாக்குகின்றது அல்லது அடிவருடிகளுக்கு அறிவைக் கொடுக்கின்றது.
நாவலர் கல்விச் சிந்தனை, கல்வியை உடமையாக்கிக் கொண்டு அதன் மூலம் சொந்த மக்களை அதிகாரம் செய்வதற்கு வழிகாட்டுகின்றது. அறிவின் மூலம் எப்படி மற்றவர்களை அடக்கி ஆளுவது, மற்றவர்களைச் சுரண்டுவது, மற்றவர்களை அடிப்மைப்படுத்துவது, மற்றவர்களை இழிவூபடுத்துவது, மற்றவர்களை ஒடுக்குவது, மற்றவர்களின் வாய்ப்புகளையூம் உரிமைகளையூம் பிடுங்கி எடுப்பது போன்ற வித்தைகளைக் கற்றுத் தருகின்றது.
அறிவை தன் சொந்த உடமையாக்கிக் கொள்வது மட்டுமின்றி அது மற்றவர்க்கு கிடைக்காமலும் பார்க்கும் மனோபவத்தையூம் வளர்க்கிறது இந்த யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம். ஆசிரியர்கள் தமக்குத் தெரிந்த அனைத்தையம் மாணவர்க்குச் சொல்லிக் கொடுக்காமல் இருப்பதும், லைபறறியில் உள்ள அரிய புத்தகங்களை களவெடுத்துக் கொண்டு போய் தன் வீட்டு புத்தக அலுமாரியில் தானும் படியாமல் பிறரும் படிக்காமற் பேணுவதும், தன்னைவிட தன் நண்பன் அல்லது நண்பி அதிகம் அறிந்திடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் மாணவர் குழாமை உற்பத்தி செய்வதும்தான் இந்த யாழ்ப்பாண அறிவுஜீவித்தனம்.
அட, தான் பார்த்த நல்ல சினிமாக்களை மற்றவர்கள் பார்த்திடக் கூடாது என்று நினைக்க வைப்பது கூட இந்த நாவலர் வழி யாழ்ப்பாண அறிவுஜீவித்தனம்தான்.
இவற்றைத் தவிர வேறு எதையாவது யாழ்ப்பாண அறிவுஜீவித்தனம் எமது மக்கள் மத்தியில் விதைத்துள்ளதா? ஏதாவது ஒரு நல்ல குணம்..
அன்பு? கருணை? விடுதலை உணர்வு?
அறிவானது, படைப்பாக்கம் மிக்கதாக இருக்க வேண்டும். புதிய விடயங்களைப் படைப்பதாக இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்து அறிவு இந்த உலகுக்கு எதையவது புதிதாகப் படைத்துக் கொடுத்தள்ளதா. ஒரு குண்டூசியைத்தானும்…? தன் சொந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எந்த வகையிலாவது உதவியுள்ளதா? அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கும் செக்குமாட்டு அறிவுஜீவித்தனமே இது. எங்கேயோ யாரோ கண்டுபிடித்தவைகளை அப்பிடியே அப்ளை செய்து அதில் தம்மை கெட்டிக்காரா; என நிரூபிக்கும் அறிவவுஜீவித்தனம்.
புதிய கண்டுபிடிப்புகள், மக்களின் வாழ்க்கையோடு இணைந்த அறிவியல் நடைமுறை என்பன எல்லாம் போர்க் காலகட்டத்திலேயே இருந்தன. அறிவுஜீவிகள் அல்லாதோர் என்ப்படுபவர்களாலேயே அவை மேற்கொள்ளப்பட்டன.
அறிவானது அன்பையும் கருணையையூம் ஊட்டுவதாக இருக்க வேண்டும். எமது அறிவுஜீவிகளிடம் அது உள்ளதா? அவர்கள் கதைப்பதை சற்று உற்றுப் பாருங்கள். அதிகாரத்துவம் இருக்கும். வக்கிரம் இருக்கும். கர்வம் இருக்கும். மற்றவர்கள் பற்றிய இழக்காரம் இருக்கும். கொலைவெறி கூட இருக்கும். அன்பு இருக்காது. கருணை இருக்காது. குழைவு இருக்காது. குழந்தைத்தனம் இருக்காது. எப்பிடி மற்றவனை வீழ்த்தலாம், வெல்லலாம், ஆளலாம் என்ற ஆதங்கம் இருக்கும்.
கல்வியானது, சுய விடுதலைக்கும் தான் சார்ந்த மக்களின் விடுதலைக்கும் வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். பேராசையையும் கர்வத்தையும் ஊட்டி வளர்க்கும் அறிவுஜீவித்தனம் எப்படி சுய விடுதலைக்கும் சரி அல்லது மக்களின் விடுதலைக்கும் சரி வழிகாட்ட முடியும்?
எமது மக்களின் விடுதலைக்காகவும் விமோசனத்தக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்கள் யார்?
அவர்கள் அறிவுஜீவிகள் அல்ல! ஆனால் புத்திசாலிகள். மதிநட்பம் உள்ளவர் புத்திக்கூர்மையானவர்கள்.
எல்லாவற்றையும்விட ஆபத்தான விடயம் தமிழர்களுக்கு அறிவுஜீவித்தனத்தின் மேல் உள்ள கவர்ச்சி ஆகும். தமிழர்களின் இந்த பலவீனத்தை அறிந்துதான் தென்னிலங்கைச் சகோதரர்கள் எங்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்,
“ஆங்கிலமும் சட்டமும் அறிந்த அறிவுஜீவியை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கோ அவர் உங்கடை பிரச்சினை எல்லாம் தீர்த்து வைப்பார்” என்று.
யாழ்ப்பாணத்து அறிவூஜீவிகள் யார் கையில் செல்லப்பிள்ளைகளாக உள்ளனர் என்பதை அறிந்து கொள்வோமாக!
பி.கு:
"புலிக்காய்ச்சல்" (புலி ஒவ்வாமை) உம் யாழ்ப்பாண அறிவிஜீவித்தனத்தினத்தின் ஒரு பக்க விளைவுதான்
 
https://www.facebook.com/gnanadas.kasinathar

  • கருத்துக்கள உறவுகள்

😂😂

அது A/L இறுதி வருடம். மாணவர் விடுதியில் என்னுடைய  வகுப்பில் 8 மாணவர்கள். ஒரே பாடங்கள். எல்லா பாடங்களிலும் இவ்விரெண்டு Past question papers புத்தகங்கள். ஆனால் எங்களுக்கோ எப்போதுமே ஒவ்வொன்றிலும் ஒரு புத்தகம்தான் இருக்கும். அதனையும் ஒரு குறிப்பிட்ட மாணவன் மாத்திரமே வைத்திருப்பார். கேட்டாலும் தரமாட்டார். (அவர் இப்போது கத்தோலிக்க பாதிரியார் 😜). எங்கு தேடிப் பார்த்தாலும்  மற்றைய புத்தகங்கள் கிடைக்கா. 

பரீட்சைகள் முடிவடைந்துவிட்டன. 

குவித்து வைத்திருந்த பொச்சு மட்டைகள் கறையான் பிடித்துவிட்டது. 

அதனைப் பிரித்து வேறு இடத்தில் போடும்படி வேண்டுகோள். 

வெலை தொடங்கியாயிற்று. அரைப் பங்கு மட்டைகளை எடுத்திருப்போம், காணாமல் போன புத்தகங்கள், கறையான் அரித்த மிச்ச சொச்சங்களுடன்........

யாழ்ப்பாணத்தான்..... 

😜

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எமது மக்களின் விடுதலைக்காகவும் விமோசனத்தக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்கள் யார்?

அவர்கள் அறிவுஜீவிகள் அல்ல! ஆனால் புத்திசாலிகள். மதிநட்பம் உள்ளவர் புத்திக்கூர்மையானவர்கள்.
எல்லாவற்றையும்விட ஆபத்தான விடயம் தமிழர்களுக்கு அறிவுஜீவித்தனத்தின் மேல் உள்ள கவர்ச்சி ஆகும். தமிழர்களின் இந்த பலவீனத்தை அறிந்துதான் தென்னிலங்கைச் சகோதரர்கள் எங்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்,
“ஆங்கிலமும் சட்டமும் அறிந்த அறிவுஜீவியை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கோ அவர் உங்கடை பிரச்சினை எல்லாம் தீர்த்து வைப்பார்” என்று.
யாழ்ப்பாணத்து அறிவூஜீவிகள் யார் கையில் செல்லப்பிள்ளைகளாக உள்ளனர் என்பதை அறிந்து கொள்வோமாக!
பி.கு:
"புலிக்காய்ச்சல்" (புலி ஒவ்வாமை) உம் ......... அறிவிஜீவித்தனத்தினத்தின் ஒரு பக்க விளைவுதான்

இதை யாழ் களத்திலேயே  பார்க்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இதை யாழ் களத்திலேயே  பார்க்கலாம்?

படிப்புக்கும் மதிநுற்பத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் தாங்கள் தான் அறிவாளி என்று குதர்க்கம் பண்ணி கொண்டு திரிபவர்கள் . செக்கு மாடு நின்றுகொண்டு கழுத்தை மட்டும் ஆட்டி கொண்டு இருந்தால் எழும் விளைவை பற்றி சிந்திப்பவர்கள் சிங்கள மதனமுத்தா வை விட மோசமானவர்களிடம் எங்கள்  அரசியல் மாட்டுப்பட்டு இருக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

ஞானதாஸ் அண்ணை சகட்டு மேனிக்கு அடித்து விடுகிறார்🤣. அவரை படித்தவனோ-போபியா எனும் ஒரு வகை நோய் தாக்கியுள்ளது போல் தெரிகிறது. ஆனால் அவரும், வாழ்க்கை துணையும் படித்தவர்கள்தான். படிப்பிப்பவர்களும்.

அவர் மேலே குறிப்பிட்ட விடயங்கள் தனியே படித்த யாழ்பாணத்தவரிடம் மட்டும் அல்ல - பெரும்பாலான எல்லா மட்ட யாழ்பாணத்தவரிலும் இருக்கும் குறைபாடுகள்தான்.

உண்மையை சொன்னால் - தனியே படித்தவர்கள் மீது இந்த பழியை தூக்கி போடுவது ஏனையோரை வெள்ளையடிக்கும் போக்கும் கூட.

புலிகளுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய, அரசோடு இணைந்து கொலை முகாம் நடத்தியவர்கள் படித்தவர்களா? படிக்காதவர்களா? அதை விட என்ன பெரிய அநியாயத்தை படித்தவர்கள் செய்தார்கள்?

அன்ரன் பாலசிங்கம் படித்தவரா? படிக்காதவரா?

கேணல் சங்கர்? வானோடிகள்? பாலகுமார்? டாக்டர் சிவகுமார்? இன்னும் பலர்.

படிக்காதவர்கள் எல்லாம் வெளிநாட்டில் வாய்ப்பை தேடி நாட்டை விட்டு ஓடிவர, வெளிநாட்டில் இருந்த வாய்ப்பை விட்டு விட்டு, எமது மக்களோடு நிற்க என போன பல படித்தவர்கள் உள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நீங்கள் அவரை  இங்கே  (யாழுக்கு ) கொண்டு வாருங்கள்  என்றீர்கள்

அவரது  எழுத்துக்களை இங்கே  இணைப்பதோடு

இதன் லிங்க்கையும்  அவரது  முகநூலில் இணைத்து  வருகின்றேன்

வருவதற்கான பாதையை மட்டுமே  போட்டுள்ளேன்

நீங்கள்  கேட்டதை  செய்ததை  தவிர  யாமொன்றும்  அறியோம்  பராபரமே???🤣

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

இதை யாழ் களத்திலேயே  பார்க்கலாம்?

அண்ணை இதை நீங்கள் இங்கே இணைத்ததே இந்த கருத்தை போட ஒரு வாய்பு வரும் எண்டுதானே🤣.

கோவிக்க வேண்டாம் ஆனால் இதுதான் நான் சொன்ன யாழ் புத்தி. இதில் படித்த, படிக்காத வேறுபாடு பெரிதாக இல்லை.

Just now, விசுகு said:

நீங்கள் அவரை  இங்கே  (யாழுக்கு ) கொண்டு வாருங்கள்  என்றீர்கள்

அவரது  எழுத்துக்களை இங்க  இணைப்பதோடு

இதன் லிங்க்கையும்  அவரது  முகநூலில் இணைத்து  வருகின்றேன்

வருவதற்கான பாதையை மட்டமே  போட்டுள்ளேன்

நீங்கள்  கேட்டதை  செய்ததை  தவிர  யாமொன்றும்  அறியோம்  பராபரமே???🤣

🤣 அவரும் இதை பார்த்தால் - வருவார் என்ற கோணத்தில்தான் நானும் எழுதுகிறேன்🤣

மறுபடியும் அதே யாழ் புத்தி 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அண்ணை இதை நீங்கள் இங்கே இணைத்ததே இந்த கருத்தை போட ஒரு வாய்பு வரும் எண்டுதானே🤣.

கோவிக்க வேண்டாம் ஆனால் இதுதான் நான் சொன்ன யாழ் புத்தி. இதில் படித்த, படிக்காத வேறுபாடு பெரிதாக இல்லை.

பார்த்தாயா ராசா?

கேட்டது  நீங்க?

பழி என்  மீது??

இப்படித்தான்  ராசாக்கள்   தப்பு  தப்பாக  புரிந்து  கொள்கின்றோம்??😪

"புலிக்காய்ச்சல்" (புலி ஒவ்வாமை) உம் ......... அறிவிஜீவித்தனத்தினத்தின் ஒரு பக்க விளைவுதான்

(மேலே பாருங்கள்

யாழ்ப்பாணம்  என்பதை  நான் எடுத்து  விட்டுத்தான்  Quote செய்துள்ளேன்)

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

பார்த்தாயா ராசா?

கேட்டது  நீங்க?

பழி என்  மீது??

இப்படித்தான்  ராசாக்கள்   தப்பு  தப்பாக  புரிந்து  கொள்கின்றோம்??😪

(மேலே பாருங்கள்

யாழ்ப்பாணம்  என்பதை  நான் எடுத்து  விட்டுத்தான்  Quote செய்துள்ளேன்)

சும்மா பகிடிக்கு அண்ணை.

ஞானதாஸ் அண்ணையின் முகபுத்தகத்தில் இந்த லிங்கையும் போட்டு விடுங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் தீவகத்தில் பிறந்தவன்

அதனால் இது  போன்ற  பலவற்றை பாடசாலைகளிலும்  சரி  பொது  வாழ்விலும் சரி முகம்  கொடுத்தவன்

ஆனால்  திருப்பி அவர்களை நையாண்டி  செய்ததில்லை

காரணம்  அதன் வலி   எனக்குத்தெரியும்

அதனையே  நானும்  செய்தால்??

1 minute ago, goshan_che said:

சும்மா பகிடிக்கு அண்ணை.

ஞானதாஸ் அண்ணையின் முகபுத்தகத்தில் இந்த லிங்கையும் போட்டு விடுங்கள். 

இங்கே  நான் பதிந்த பதிவுகள் அனைத்தையும் போட்டுள்ளேன்

அவர் மட்டுமல்ல  அவரது துணைவியாரும் விருப்பு  போட்டுள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுமுற்றும் விகாரைகள், விமான நிலையத்திலிருந்து  பல்கலைகழகம் வீதி அபிவிருத்தி சபை முதற்கொண்டு விவசாயம் கடல் வளங்கள், வனம் ,காணிகள்  ஆக்கிரமிப்புவரை எல்லாமே சிங்கள ஆளுமைகளின் வசம்

இனியெல்லாம் யாழ்ப்பாணத்தின் அறிவுஜீவிதனம் யாழ்ப்பாணம் சிங்களவனின் நாடு என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்தால் மட்டுமே பயன்படும்,

காலம் காலமாக எம் அறிவுஜீவிகளின் புலமையெல்லாம் சொந்த வீட்டுக்குள் பீலா காட்டவே பெரும்பாலும் உதவியது அதனால் வீட்டை சுற்றி பாம்பு புற்றுகள் தோன்றுவதையிட்டு கவலை பட்டதேயில்லை.

இப்போ எல்லாமே போச்சு .

இப்போது கொஞ்சமாவது மிஞ்சியிருக்கும் தமிழர் பாரம்பரிய நிலமென்பதை வீடியோ எடுத்து வைப்பது நல்லது  ஒருகாலம் எமக்கென்று தனி மாவட்டம் மாகாணம் இருந்ததென எதிர்கால சந்ததிக்கு காட்டி பெருமூச்சுவிட அது உதவும்.

அப்போதும் அறிவுஜீவிகள் பிழைத்துக்கொள்வார்கள், சிங்களவனுக்கு கீழிருந்து சேவகம் செய்து மூன்றாம் நிலை அதிகாரத்திலிருந்தாவது தமது எகத்தாளத்தை சொந்த இனத்தின்மீது காண்பிக்கும் தொழிலுக்கு நகர்வார்கள், அவர்களுக்கு சிங்களவனுக்கு அடிமையாயிருப்பதைவிட சக தமிழனை அடிமையாக்குவதே பெருமையாய் பெரும் தகுதியாய்  கருதி வாழ்பவர்கள்.

ஆனால் ஒன்று இலங்கைக்குள் சுற்றி சுற்றி வண்டியோட்டும்வரை மட்டுமே அறிவுஜீவிகளின் ஆட்டமெல்லாம், இலங்கையின் எல்லையை கடந்துவிட்டால் பிறர்மேல் ஆதிக்கம் செலுத்த அவர்களின் மேதாவிதனம் கை கொடுப்பதில்லை,

இன்னும் சொல்லபோனால் அந்தகால அறிவுஜீவகள் பலர் புலம்பெயர் நாடுகளில் ஊரில் பத்தாம் வகுப்புகூட பாஸ் பண்ணாமல் வெளிநாடு வந்து சுய முயற்சியில் முன்னேறியவர்களின் கீழ் வாட்ச்மேன் ஆகவும் வாடா போடா என்று பிறர் அழைக்கும் நிலையிலும் தமது புலமைக்கேற்ற தொழில் கிடைக்காமல் அவதிபடுகிறார்கள்.

அது சரியென்று சொல்லவரவில்லை, ஆனால் பழைய நினைவுகளை வைத்து இங்குள்ளவர்களால் சில இடங்களில்  பழிவாங்கபடுகிறார்கள் என்றும் சொல்லலாம், அந்த பழைய கறையை உருவாக்கியது அவர்கள்தானே .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, valavan said:

இதை இங்கே  லாப்பலில் பல  கடைகளில்  முக்கியமாக உணவகங்களில்  காணலாம்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, valavan said:

ஆகவும் வாடா போடா என்று பிறர் அழைக்கும் நிலையிலும் தமது புலமைக்கேற்ற தொழில் கிடைக்காமல் அவதிபடுகிறார்கள்.

அது சரியென்று சொல்லவரவில்லை, ஆனால் பழைய நினைவுகளை வைத்து இங்குள்ளவர்களால் சில இடங்களில்  பழிவாங்கபடுகிறார்கள் என்றும் சொல்லலாம்,

நானும் இதை கண்டுள்ளேன்.

மேலே ஞானதாஸ் சொன்ன இந்த புத்தி தனியே படித்தவருக்கு மட்டும் உரியதல்ல என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

வாய்ப்பு கிடைக்கும் போது யாழ்பாணம் அதன் தலையை தூக்கவே செய்யும்.

இந்த புத்தியை காட்ட ஊரில் படித்தவருக்கு வாய்ப்பு கிடைத்தது. புலம் பெயர் நாட்டில் படிக்காதவருக்கு வாய்ப்பு கிடைத்தது அவ்வளவுதான் வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

படிப்புக்கும் மதிநுற்பத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் தாங்கள் தான் அறிவாளி என்று குதர்க்கம் பண்ணி கொண்டு திரிபவர்கள் . செக்கு மாடு நின்றுகொண்டு கழுத்தை மட்டும் ஆட்டி கொண்டு இருந்தால் எழும் விளைவை பற்றி சிந்திப்பவர்கள் சிங்கள மதனமுத்தா வை விட மோசமானவர்களிடம் எங்கள்  அரசியல் மாட்டுப்பட்டு இருக்குது .

நானும் கொஞ்சம் கொஞ்சமா புத்தகங்கள் வாசிக்கப் போறன்.

இன்னும் கொஞ்ச நாளில் நானும் அப்பிடி இப்பிடி கதைப்பேன்
கண்டு கொள்ளக் கூடாது.

1 hour ago, விசுகு said:

இதை யாழ் களத்திலேயே  பார்க்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாடசாலைப் பக்கமே போனது இல்லை.இனித்தான் எனக்கு அடிக்கப் போகுது யோகம்.என்னுடன் சேர விரும்புவர்கள் முன் பதிவு செய்து கொள்ளவும்.முறிய முன் தொடர்பு கொள்ளவும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் பாடசாலைப் பக்கமே போனது இல்லை.இனித்தான் எனக்கு அடிக்கப் போகுது யோகம்.என்னுடன் சேர விரும்புவர்கள் முன் பதிவு செய்து கொள்ளவும்.முறிய முன் தொடர்பு கொள்ளவும்.🤣

ஐயா உங்கள் கட்சியில் எனக்கும ஒரு இடம் கிடைக்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயா உங்கள் கட்சியில் எனக்கும ஒரு இடம் கிடைக்குமா?

10 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் பாடசாலைப் பக்கமே போனது இல்லை.இனித்தான் எனக்கு அடிக்கப் போகுது யோகம்.என்னுடன் சேர விரும்புவர்கள் முன் பதிவு செய்து கொள்ளவும்.முறிய முன் தொடர்பு கொள்ளவும்.🤣

விடிஞ்சா

அவருக்கே கட்சி  ஞாபகமிருக்காது  பரவாயில்லையா???🤣

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

விடிஞ்சா

அவருக்கே கட்சி  ஞாபகமிருக்காது  பரவாயில்லையா???🤣

சிலருக்கு அடித்தா தான் இயக்கமே இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

சிலருக்கு அடித்தா தான் இயக்கமே இருக்கும்.

அடி  வாங்கியதால தான்  இங்க  பலருக்கு புலிக்காய்ச்சல் என்பதை  தானே  சொல்கிறீர்கள் அண்ணை??🤣

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் பாடசாலைப் பக்கமே போனது இல்லை.இனித்தான் எனக்கு அடிக்கப் போகுது யோகம்.என்னுடன் சேர விரும்புவர்கள் முன் பதிவு செய்து கொள்ளவும்.முறிய முன் தொடர்பு கொள்ளவும்.🤣

நானும் வரலாமா உங்க சங்கத்திலை சேர ?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சமூகவலை ஊடகம், இணையம் எல்லாம் வந்த பின்னர் எல்லோரும் அறிவுஜீவிகள்தானே.😁 புத்தகப்படிப்பு, பல்கலைக்கழகம் எல்லாம் இல்லாமலேயே பிஹெச்டி லெவலில் கதைக்கலாம்😀

ஆனால் ஆசான் சொன்னதுமாதிரி பரோட்டா மாஸ்டர் மாதிரி ஒவ்வொரு துறைக்கும் ஒரு சிலர்தான் மாஸ்டர். எல்லாரும் அப்படி ஆக முடியாது மக்கா!

இப்ப பரோபகாரம் என்றால் @விசுகு ஐயா மாஸ்டர். ஆசாரவாதம் என்றால் @குமாரசாமி ஐயா மாஸ்டர். சட்டநுணுக்கம் என்றால் @goshan_che மாஸ்டர். ருசிகரமாக ரப்லொயிட் செய்தி எழுதுவது என்றால் @Nathamuni மாஸ்டர்! இப்படி பல மாஸ்டர்கள் யாழில் இருந்தார்கள், இருக்கின்றார்கள், இருப்பார்கள்😃

ஆசான் இப்படியும் சொல்லியிருக்கின்றார், மக்காள்!

ஒருவரை அவர் தன் துறையில் மாஸ்டர் என்று உணரும்போது உங்களுக்குள் தோன்றுவதென்ன என்று பாருங்கள். எரிச்சல், சிறுமைப்படுத்தவேண்டும் என்ற உந்துதல், உங்களை ஒப்பிட்டுக்கொள்ளுதல் என்றால் நீங்கள் சாமானியர். 

நீங்கள் உங்கள் சிலலறைகளுடன் புழங்கும் உலகில் அவர் இல்லை, அவர் உங்களை பார்க்கப்போவதே இல்லை. அது உங்கள் சொந்த நரகம். நீங்கள் செய்யக்கூடுவது ஒன்றே, முழுமையாக விலகிக்கொண்டு உங்கள் எறும்புலகுக்குள் சென்றுகொள்ளலாம். அங்கே நீங்கள் நிம்மதியாக வாழலாம்.

ஒருபோதும் ஒருபோதும் ஒரு மாஸ்டரை அவருடைய ஆணவத்தின்பொருட்டு அல்லது நாகரீகமின்மையின் பொருட்டு விமர்சனம் செய்யாதீர்கள். நாகரீக உலகில் எங்கும் அந்த வழக்கம் கிடையாது- அப்பட்டமான பண்பாட்டுப் பயிற்சியின்மை மட்டும்தான் அது. நாகரீகம் என்பது ஒத்திசைவிலிருந்து உருவாவது. ஒத்திசைவு சமூகமாகச் செயல்படுபவர்களுக்குரியது. எந்த மாஸ்டரும் தனிப்பறவைதான். பெரும்பாலானவர்கள் அத்துமீறுபவர்களும் எரிச்சலூட்டுபவர்களும்தான்.“

ஆகவே,  இந்தப் பாடலை ஒருக்கால் படித்தால் அறிவுஜீவிதம், மதி நுட்பம், நிபுணத்துவம், மாஸ்டர் எல்லாம் புரியும்😚

      கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி

      தானும் அதுவாகப் பாவித்துத் – தானும்தன்

      பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே

      கல்லாதவன் கற்ற கவி.

  • கருத்துக்கள உறவுகள்

🤣 இது என்னது தட்டச்சு முடிந்தபின் இதையும் தட்டி விட எழுத்துக்களை காணவில்லை எமோஜி மாத்திரம் நின்று சிரிக்குது ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

புத்தகப்படிப்பு, பல்கலைக்கழகம் எல்லாம் இல்லாமலேயே பிஹெச்டி லெவலில் கதைக்கலாம்😀

நீங்க வேறை இப்ப புத்தக படிப்பு, பல்கலை இல்லாமல் பி எச் டியே எடுக்கலாம்.  

5 minutes ago, கிருபன் said:

ஆகவே,  இந்தப் பாடலை ஒருக்கால் படித்தால் அறிவுஜீவிதம், மதி நுட்பம், நிபுணத்துவம், மாஸ்டர் எல்லாம் புரியும்😚

      கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி

      தானும் அதுவாகப் பாவித்துத் – தானும்தன்

      பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே

      கல்லாதவன் கற்ற கவி.

யாழ் களத்தில் படித்தவன், படிக்காதவன், பிராக்கு பார்த்தவன் எல்லாருக்கும் வாயில கவ்வ கொடுத்து அடிச்சு போட்டியள். எல்லாம் புத்தகம் வாசிக்கிற திமிர்.

தலிபான் போல் புத்தகங்களை எரித்தால்தான் உங்களை போல ஆட்களை திருத்த முடியும் 🤣.

அது சரி யாரிந்த ஆசான்?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

🤣 இது என்னது தட்டச்சு முடிந்தபின் இதையும் தட்டி விட எழுத்துக்களை காணவில்லை எமோஜி மாத்திரம் நின்று சிரிக்குது ?

மம்மல் நேரம் சில நடமாட்டங்கள் இருக்கும் என்பார்கள்👻

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நீங்க வேறை இப்ப புத்தக படிப்பு, பல்கலை இல்லாமல் பி எச் டியே எடுக்கலாம்.

நானும் ஒன்று எடுக்கவேணும் என்று பலநாளா முயற்சிக்கிறன். ஒருத்தரும் ஐடியாவை தருகிறார்கள் இல்லை. டாக்டர் கலைஞர், டாக்டர் ஜெயலலிதா மாதிரி இல்லாமல் என்னுடைய பெயரில் குறைஞ்சது 4 peer reviewed papers உடன் ஒரு thesis உம் வேணும். டீல் இருந்தால் சொல்லுங்கள். 😀

10 minutes ago, goshan_che said:

அது சரி யாரிந்த ஆசான்?

என்னது! என்னுடைய ஆசானைத் தெரியாதா கோஷான்? நுணுக்கமான விவரம் தெரிந்தவர் என்று பெயர் எடுத்தவராயிற்றே நீங்கள்! அதற்கு களங்கம் வராமல் இருக்கவேண்டும். எப்போதும் கிரீடம் முக்கியம்😇

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.