Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிஷாலினிக்கு நடந்தது என்ன? சபைக்கு அறிவித்தார் ரிஷாட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

    பா.நிரோஸ்

 எனது வீட்டுக்கு வேலைக்கு வரும்போது 16 வயதை பூர்த்தியடைந்தவராக ஹிஷாலினி  இருந்தார்,  அவர், ஒரு  பண்பான சகோதரியாவார். அவரது இழப்பு மனவேதனையை தருகிறது. புற்றுநோயால் எனது தங்கை மரணமடைந்த போது, எவ்வாறு துன்பப்பட்டடோமே, அவ்வாறான துன்ப, வேதனையை நாம் அனுபவிக்கிறோம் என் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன்  தெரிவித்தார்.

ஹிஷாலியின் தாயாரும் அவரது குடும்பத்தாரும் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் எனத் தெரிவித்த ரிஷாட்,   தனது வீட்டில் ஹிஷாலியின் துன்புறுத்தப்பட்டதாகவும், நாய் கூடு போன்ற ஓர் அறையில்  அடைத்து வைக்கப்பட்டதாகவும், ஹிஷாலியின் தாயார் முன்வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் ரிஷாட் மறுத்துவிட்டார்.

பாராளுமன்றத்தின் இன்றைய  (05) அமர்வில் கலந்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

எனது வீட்டில் தீப்பற்றி எரிந்து உயிரிழந்த 'தங்கையின்' மரணம் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பெரும் மன வேதனையளித்திருக்கிறது.  எனது சகோதரி புற்றுநோயால் உயிரிழந்தபோது எனக்கும் எனது குடும்பத்துக்கும் ஏற்பட்ட அதே வேதனை தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

16 வயது பூர்த்தியடைந்த பின்னரே தரகர் ஊடாக எனது வீட்டுக்கு அந்த பிள்ளை வேலைக்கு வந்தார். பிள்ளையின் தங்குமிடம் தொடர்பிலோ அல்லது அவர் எங்கு வேலை செய்கிறார் என்பதுத் தொடர்பில் பிள்ளையின் பெற்றோர் வந்து பார்க்கவில்லை.

எனினும், அவர் தங்குவதற்கு 7x6 என்கிற அளவிலான சாதாரணமாக ஒருவர் தங்கக்கூடிய அறை ஒன்றையும், அதனுடன் இணைந்த மலசலகூடத்தையும் அவரின் பாவனைக்காக வழங்கியிருக்கிறோம் என்றார்.

கடந்த 10 வருடங்களாக எனது வீட்டில் வேலை செய்துவந்தவர்கள் அங்கே தங்கியிருந்தார்கள். காலை 6.45 மணியளவில் ஹிஷாலியின் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த எனது மாமியும் மாமனாரும் எழும்பி வந்து பார்த்துள்ளனர். வயதான அவர்கள் அங்கிருந்த காபட்டை போட்டு தீயைக்  அணைக்க பெரும் முயற்சி செய்தனர்.

அருகே இருந்த தண்ணீர் தடாகத்தில் பாயும்மாறும் கூறியுள்ளனர். அப்போது, ஹிஷாலி குடிப்பதற்கு கூல் தண்ணீரைக் கேட்டுள்ளார். அதனையும் அவ்விருவரும் வழங்கியுள்ளனர். அணைப்பதற்காக 10 - 15 நிமிடங்கள் சென்றுள்ளன. 7.33 மணிக்கே  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.

எனினும் பொலிஸார் 8.35 மணிக்கே அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்கள். எனது குடும்பத்தாருக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் எப்படி நடந்துக்கொள்வோமோ அதிலிருந்து ஓர் அணுவளவும் குறையாது, இந்த விடயத்திலும் எனது மாமனாரும் மாமியும் செயற்பட்டுள்ளனர்.

பின்னர் விடயம் அறிந்த மனைவி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். வைத்தியசாலைக்கு வைத்தியர்களும் பிள்ளையைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்தனர். எனது பிள்ளைகள், மனைவி உள்ளிட்ட அனைவரும் ஹிஷாலினி உயிர் பிழைக்க வேண்டுமென நோன்பு நோற்றார்கள் என்றார்.

அந்த சகோதரி இறக்கும் வரையில்,  உயிரைக் காப்பாற்ற எனது குடும்பத்தார் போராடினார்கள். ஒரு கட்டத்தில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை பண்ண வேண்டும் அதற்காக சுமார் 7 - 8 இலட்சம் ரூபாய் செலவிட வேண்டுமென வைத்தியர்கள் கூறியுள்ளனர். அதற்கும் எனது மனைவி சம்மதம் தெரிவித்து, அந்த பணத்தை வழங்குவதாகக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நடக்கும்போது நான் வீட்டில் இல்லை. ஹிஷாலினின் எனது வீட்டுக்கு வேலைக்கு வரும்போதும் நான் வீட்டில் இருக்கவில்லை. ஹிஷாலினி வீட்டுக்கு வரும்போது தரகரிடம் நாங்கள் அவரின் வயதை வினவினோம் அவர் 17 வயது என்றார். எனினும், பின்னர் பிறப்புச் சான்றிதழைப் பார்த்து அவருக்கு 16 வயது என தெரிந்துக்கொண்டோம் என்றார்.

 

ஹிஷாலினி நல்ல பண்பான பிள்ளையாக இருந்தார். நாங்கள் உண்ணும் உணவையே கொடுத்தோம். அரசியல் வாங்குரோத்துடையவர்களும், ஊடக விபச்சாரிகளும் ஹிஷாலியின் தாயாரையும், சகோதரனையும் தவறாக வழிநடத்துகிறார்கள் எனவும் குற்றம் சுமத்தினார்.

எனது மனைவியும் பண்பானவர். ஹிஷாலியின் வீட்டுக்கு வந்த இரு நாள்களியே அவருக்கு 40 ஆயிரம் ரூபாயை வழங்கியிருந்தார். இதுவரையிலான 7 மாதங்களில் மாத்திரம் இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் இருந்தபோது ஒன்றரை இலட்சம் ரூபாயை வழங்கியிருந்தார் என்றார்.

 

ஹிஷாலியின் தயாரின் வேதனையில் பங்குக் கொள்கிறோம். ஆனால், அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார். ஹிஷாலியின் மரணம் தொடர்பில் முழுமையான நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

அரசியல்வாதிகளிலேயே அதிகூடிய துன்பங்களை அனுபவிப்பவனான நான் இருக்கிறேன் என்றுக்கூறி தனதுரையை நிறைவுக்கு கொண்டுவந்தார். 

Tamilmirror Online || ஹிஷாலினிக்கு நடந்தது என்ன? சபைக்கு அறிவித்தார் ரிஷாட்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பயாச்சும் விளங்குதா? ரிசாட் அண்ணன் எம்புட்டு நல்லவர் எண்டு.

அண்ணர் மேல் எனக்கு அனுதாபம் லீட்டர், லீட்டரா வருது …😡

  • கருத்துக்கள உறவுகள்

202106110903465407_Tamil_News_Thumb-Suck

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

ஹிஷாலியின் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த எனது மாமியும் மாமனாரும் எழும்பி வந்து பார்த்துள்ளனர். வயதான அவர்கள் அங்கிருந்த காபட்டை போட்டு தீயைக்  அணைக்க பெரும் முயற்சி செய்தனர்.

 

2 hours ago, பிழம்பு said:

மனைவி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். வைத்தியசாலைக்கு வைத்தியர்களும் பிள்ளையைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்தனர். எனது பிள்ளைகள், மனைவி உள்ளிட்ட அனைவரும் ஹிஷாலினி உயிர் பிழைக்க வேண்டுமென நோன்பு நோற்றார்கள்

 

2 hours ago, பிழம்பு said:

யிரைக் காப்பாற்ற எனது குடும்பத்தார் போராடினார்கள். ஒரு கட்டத்தில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை பண்ண வேண்டும் அதற்காக சுமார் 7 - 8 இலட்சம் ரூபாய் செலவிட வேண்டுமென வைத்தியர்கள் கூறியுள்ளனர். அதற்கும் எனது மனைவி சம்மதம் தெரிவித்து, அந்த பணத்தை வழங்குவதாகக் கூறியுள்ளார்.

 

2 hours ago, பிழம்பு said:

இந்த சம்பவம் நடக்கும்போது நான் வீட்டில் இல்லை.

இந்த சம்பவம் நடந்தபோது வீட்டில் இருக்காத நீங்கள் பக்கத்தில் நின்று பார்த்ததுபோல் உங்கள் குடும்பத்தவர் மேற் சொன்ன முறையில் எல்லாம் விஷாலினியை காப்பாற்ற முயற்சி செய்தார்கள் என்று எதை வைத்து கூறுகிறீர்கள் நானா?

இதை படிப்பவர்களுக்கு கேட்பவர்களுக்கு, விஷாலினியை உங்கள் குடும்பத்தவர் காப்பாற்ற முயற்சி செய்ததாக தோன்றுமா, அல்லது உங்கள் குடும்பத்தை விஷாலி கொலையிலிருந்து காப்பாற்ற நீங்கள் முயற்சி செய்வதாக தோன்றுமா?

ஒரு நாட்டின் நாடாளுமன்ற பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதி நிதியாக நீங்கள் இருந்தால் காவல்துறை  நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவராக நடத்திய உங்கள் இந்த ’’பிள்ளை’’  ‘’சகோதரி’’ கொலை விஷயத்தில் பாரபட்சமின்றி உங்கள் குடும்பத்தினரிடம் விசாரணைகளை மேற்கொள்ள உங்கள் ஆதரவையல்லா அளித்திருக்கவேண்டும்.

அதுசரி ஆனானப்பட்ட இரட்டை கோபுரங்களை தகர்த்துவிட்டு அது அமெரிக்காவே தகர்த்தது என்று அடிச்சுவிடும் வம்சாவளியாச்சே நீங்கள், எத்தனையோ பண்றீங்க இது முடியாதா?

நல்லவேளை இதுக்கும் விஷாலினி கொலையின் பின்னால் அமெரிக்க யூதர்கள் சதி இருக்கிறது என்று உலகம் முழுவதும் பண்ணுவதெல்லாம் பண்ணிவிட்டு  உங்காளுகள் உச்சரிக்கும்  பொதுமந்திரத்தை சொல்லாமல் விட்டீர்களே அதுக்கு வேணும் என்றால் உங்கள் நேர்மையை பாராட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி ஆனானப்பட்ட இரட்டை கோபுரங்களை தகர்த்துவிட்டு அது அமெரிக்காவே தகர்த்தது என்று அடிச்சுவிடும் வம்சாவளியாச்சே நீங்கள், எத்தனையோ பண்றீங்க இது முடியாதா?

நல்லவேளை இதுக்கும் விஷாலினி கொலையின் பின்னால் அமெரிக்க யூதர்கள் சதி இருக்கிறது என்று உலகம் முழுவதும் பண்ணுவதெல்லாம் பண்ணிவிட்டு  உங்காளுகள் உச்சரிக்கும்  பொதுமந்திரத்தை சொல்லாமல் விட்டீர்களே அதுக்கு வேணும் என்றால் உங்கள் நேர்மையை பாராட்டலாம்.

ஒரு நாடாளுமன்றத்தில் வாய்  கூசாமல் வாயினிக்கப் பொய் கூறும் முன்னாள் அமைச்சர்...அதும் காகிதத்தை பார்த்து வடிவாக...இதனை அங்குள்ள மூடர் கூட்டம் நம்புது..

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஷாலினியின் மரணத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்; ரிஷாத் பதியுதீன்

August 6, 2021
 
பாராளுமன்றம் 1 ஹிஷாலினியின் மரணத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்; ரிஷாத் பதியுதீன்
 

ஹிஷாலினியின் மரணம் 31 வயதில் புற்றுநோயால் மரணமான எனது தங்கையின் மரணத்துக்கு நிகரானது. அவரை இழந்தபோது அடைந்த துன்பத்தையும் வேதனையையும் ஹிஷாலினியின் மரணத்திலும் அடைகின்றோம்.எனவே ஹிஷாலியின் மரணத்தில் எவராவது குற்றவாளியாக காணப்பட்டால் அவர்களை தராதரம் பாராது தண்டிக்க வேண்டுமென இந்த உயரிய சபையில் வேண்டுகின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட எம்.பி.யுமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஹிஷாலியின் உயிரைப்பாதுக்காக போராடிய எனது மாமனாரும் சிறையில். ஒவ்வொருநாளும் வைத்தியசாலை சென்று தனது மகளைப்போன்று ஹிஷாலியின் உயிரைப் பாதுகாக்க மருத்துவர்களிடம் மன்றாடிய எனது மனைவியும் சிறையில், கடந்த ஒன்றரை வருடங்களில் மிகப்பெரும் துன்பங்களை அனுபவிக்கும் அரசியல் வாதியாக நானும் எனதும் குடும்பமுமே உள்ளது என்றும் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் கீழான கட்டளைகளும், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 2021ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நான் 102 நாட்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கும் நிலையில் எனது தங்கை ஹிஷாலின் எனது வீட்டில் தீ மூட்டி மரணித்த சம்பவம் தாளாத துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது சகோதரி ஒருவர் அவரின் 31 ஆவது வயதில் புற்று நோயால் மரணமானபோது அடைந்த துன்பத்தையும் வேதனையையும் ஹிஷாலினியின் மரணத்திலும் நானும் எனது குடும்பமும் அடைகின்றோம்.

ஹிஷாலினி 16 வயது பூர்த்தியடைந்த நிலையிலேயே எனது வீட்டுக்கு ஒருவர் மூலமாக வந்தார். அப்போதும் நான் சிறையில் தான் இருந்தேன். அப்போது ஹிஷாலினியின் வயது எண்ணேவென தரகரிடம் கேட்டபோது 17 வயது என அவர் கூறியுள்ளார். அவருக்கு எனது வீட்டில் 7தர 6 ஆதி கொண்டஇணைந்த மலசலகூடட வசதியுடனான அறை வழங்கப்பட்டது. இந்த அறையிலேயே இதற்கு முன்னர் பணி புரிந்தவர்களும் இருந்தனர்.

சமபவம் நடந்த 3 ஆம் திகதி கால 6.45 மணியளவில் சகோதரி ஹிஷாலினியின் சத்தம் கேட்டு அப்போது அதிகாலை தொழுகை முடித்து விட்டு தூங்கிக்கொண்டிருந்த எனது மாமனாரும் மாமியும் ஓடி வந்து பார்த்தபோது அவர் தீயில் எரிந்து கொண்டிருந்துள்ளார். உடனடியாக அவரை காப்பாற்ற போராடிய எனது மாமனார். ஒரு காபட் மூலம் தீயை அணைத்ததுடன் உடனடியாக அருகில் இருந்த தண்ணீர் தொட்டியினுள் அவரை இருத்தியுள்ளார். அப்போது அவர் கூல் தண்ணீர் கேட்கவே உடனடியாக தனையும் வழங்கியதுடன் அவசர அம்புலன்சுக்கு காலை 7.05 மணிக்கு அறிவித்துள்ளார். அம்புலன்ஸ் மூலம் 7.33 மணிக்கு ஹிஷாலினி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கான பதிவுகள். தொலைபேசி அழைப்பு பதிவுகள் உள்ளன. ஆனால் பொலிஸார் காலை 8.35 மணிக்கு தான் நாம் ஹிஷாலினியை வைத்தியசாலையில் சேர்த்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக அறிகின்றேன்.

ஹிஷாலினி வைத்தியசாலையில் ணனுமதிக்கப்ட்ட நாள் முதல் எனது மனைவி தினமும் வைத்திய சாலை சென்று ஹிஷாலினியின் உயிரைப்பதுகாக்காக போராடினார், மன்றாடினார். ஹிஷாலினிக்கு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிங்கப்பூரிலிருந்து தோல் 7 ரூபா மருத்துவர்கள் செலவுகளையும் நான் ஏற்கின்றேன். ஹிஷாலினியை காப்பாற்றுங்கள் என என் மனைவி கூறியுள்ளார். ஹிஷாலினி தீமூட்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவுடன் உடனடியாக தாயாருக்கு அறிவித்தது அவரை வரும்படியும் தான் தருவதாகவும் எனது மனைவி கூறியுள்ளார்.

ஹிஷாலினி மிகவும் பண்பானவர். அவரின் தாயாரும் மிகவும் நல்லவர். ஆனால் தற்போது அரசியலில் வங்குரோத்தில் உள்ள சிலரும் ஒருசில ஊடக விபசாரிளும் அந்த தாயாரையும் உறவினர்களையும் தவறாக வழி டத்துகின்றனர். ஹிஷாலினி வேலைக்கு வந்த இரு தினங்களிலேயே அவரின் தாயார் கேட்டு 40000 ரூபா கொடுத்தோம். அதையடுத்து ஏழரை மாதங்களில் மட்டும் இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு மேல் வழங்கினோம். நாம் உண்ணும் உணவுகளையே ஹிஷாலினிக்கும் வழங்கினோம். எனது சகோதரி, தங்கை போலவே ஹிஷாலினியை நடத்தினேன். எனது வீட்டில் ஹிஷாலினிக்கு எந்த அசிங்கமும் இடம்பெறவில்லை என்பதனை உறுதியாக கூறுகின்றேன்.

ஹிஷாலியின் உயிரைப்பாதுக்காக போராடிய எனது மாமனாரும் சிறையில். ஒவ்வொருநாளும் வைத்தியசாலை சென்று தனது மகளைப்போன்று ஹிஷாலியின் உயிரைப் பாதுகாக்க மருத்துவர்களிடம் மன்றாடிய எனது மனைவியும் சிறையில். நீண்ட காலத்துக்கு பின்னர் தனது ஊரிலிருந்து வந்திருந்த எனது மைத்துனரும் சிறையில். இப்போது எனது இரு சிறிய மகள்கள் மட்டும்தான் வெளியே இருக்கின்றார்கள். அவர்களையும் சிறையில் போடப்போகின்றீர்களா?

தமது ஊடக் நிறுவனத்திற்கு தலைப்பு செய்தி வேண்டும் என்பதற்காக ஊடக நிறுவனமொன்று அந்த தாயாரை தவறாக வழி நடத்துவதுடன் ஆர்ப்பாட்டங்களையும் தூண்டி விடுகின்றது. எம்பி. ஒருவர் தனது தொலைபேசியில் ஒரு குறும் செய்தியை காட்டினார்.அதில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு ஒரு ஊடகவியலாளர் சிலருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

எனவே எனவே ஹிஷாலியின் மரணத்தில் எவராவது குற்றவாளியாக காணப்பட்டால் அவர்களை தராதரம் பாராது தண்டிக்க வேண்டுமென இந்த உயரிய சபையில் வேண்டுகின்றேன். விசாரணைகள் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்பட வேண்டுமென இங்குள்ள அமைச்சர் சரத் வீரசேகரவிடமும் அரசிடமும் கோருகின்றேன். ஹிஷாலினிக்கு நீதி கிடைக்க நானும் எனது குடும்பமும் எமது முழு ஒத்துழைப்புக்களை வழங்குவோம்” என்றார்.
 

https://www.ilakku.org/whoever-is-guilty-of-hishalinis-death-should-be-punished-rishad-bathiudeen/

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத் பதியுதீனின் உரையில் உள்ள சில விடயங்களை நீக்குமாறு அரசு தரப்பும், நீக்க வேண்டாமென எதிர்க்கட்சியினரும் சபாநாயகரிடம் வேண்டுகோள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்,.வசீம்)

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் கீழான கட்டளைகளும், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 2021ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய   ரிஷாத் பதியுதீன் தாணு வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த நிலையில் மரணமான சிறுமி ஹிஷாலினி தொடர்பில் உரையாற்றினார்.

இந்த உரைக்கு அரச தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸடன் பெர்னாண்டோ கடும் எதிர்ப்புத் தெரித்ததுடன் ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வருவதனால் ரிஷாத் பதியுதீனின் உரையில் உள்ள பல விடயங்களை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டுமென சபாநாயகரிடம்  வேண்டுகோள் விடுத்தார்.

இதன்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ,ரிஷாத் பதியுதீன் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுவரும் நிலையில் அவர் தன்னிலை விளக்கமொன்றை அளித்துள்ளார். 

எனவே அதனை தயவு செய்து ஹன்சாட்டிலிருந்து நீக்காதீர்கள் என சபாநாயகரிடம் வேண்டுகோள்  விடுத்தார். ஆனால் இருவரின் வேண்டுகோள் தொடர்பிலும் சபாநாயகர் எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை.

ரிஷாத் பதியுதீனின் உரையில் உள்ள சில விடயங்களை நீக்குமாறு அரசு தரப்பும், நீக்க வேண்டாமென எதிர்க்கட்சியினரும் சபாநாயகரிடம் வேண்டுகோள் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2021 at 09:15, பிழம்பு said:

 

ஹிஷாலினி நல்ல பண்பான பிள்ளையாக இருந்தார்.

 

On 5/8/2021 at 09:15, பிழம்பு said:

எனது மனைவியும் பண்பானவர். 

On 5/8/2021 at 09:15, பிழம்பு said:

 

இருவரும் பண்பானவர்கள் எனினும் உயிர் ஒன்று வதைக்கப்பட்டு அழிந்திருக்கிறதே எப்படி.ஆகவே பண்பில்லாதவர்கள் வேறு சிலர் உங்கள் வீட்டில் உள்ளனர் என்பது உங்கள் வாக்குமூலம் நிரூபணமாகின்றது.அவர்களும் குற்றவாளிகள்,அவர்களை வீட்டில் வைத்திருந்ததால் நீங்களும் குற்றவாளியே.

 

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு காதில்  பூ வைக்கிறார் ஒரு பிரச்சனையும்  இல்லையென்கிறார் கொடுமைப்படுத்தவில்லை என்கிறார் அப்ப  அந்த பிள்ளை பொழுது போகாமல் தனக்கு மேல் தீ வைத்து இறந்ததா ?

இலங்கையில் உள்ள எல்லாருக்கும் தங்கள் இரத்தத்தை கொடுத்து  வாழ்வு அளிப்பவர்கள் அவர்களின்  ஏழ்மையை வைத்து விளையாடுகிறார்கள் அவர்களின் அரசியல்வாதி மனோகணேசனில் கூட ஒரு மரியாதை இருந்தது ஆனால் இந்த சின்ன பிள்ளையின் விடயத்தில் ரிஷத்த்துக்கு ஆதரவாய் கதைக்க அவருக்கு எப்படி மனம் வந்தது என்பது புரியாமல் இருக்கிறது .

சொறிலங்காவை மேலும் பிச்சை எடுக்க வைக்க  கனக்க  யோசிக்க வேண்டாம்  மலையக தமிழருக்கு அரபு நாடுகளில் வேலைவாய்ப்பை பெற்று கொடுத்தாலே காணும் .

குறைந்த சம்பளத்துக்கு கொழுந்து பறிக்கவும் ரப்பர் பால் எடுக்கவும் சிங்களவன் வருவானா ?

  • கருத்துக்கள உறவுகள்

ஈரப்பலாக்காயையும் கட்டா சம்பலையும்  திண்டுவிட்டு பொழுது போகாமல் வடகிழக்கு பூர்வீக தமிழர் மேல் இனவாதம் கக்குவதே அவர்களின் பொழுது போக்கு முடிந்தால் கொழுந்து பறிக்க இப்ப கொடுக்கும் சம்பளத்தில் வேலை செய்ய முடியுமா சிங்களவனால் ?

இந்த றிசாத் கூட்டம் கூட அரசியல் காரணத்துக்காக மாட்டுப்பட்டுள்ளது அதுவே கோத்தா பக்கம் என்றால் கருணா போல் ராஜபோக உபசாரத்துடன் இருந்து இருப்பார் .

21 minutes ago, பெருமாள் said:

அவர்களின் அரசியல்வாதி மனோகணேசனில் கூட ஒரு மரியாதை இருந்தது ஆனால் இந்த சின்ன பிள்ளையின் விடயத்தில் ரிஷத்த்துக்கு ஆதரவாய் கதைக்க அவருக்கு எப்படி மனம் வந்தது என்பது புரியாமல் இருக்கிறது .

 

இந்த சிறுமி படுகொலை விடயத்தில் மனோ ரிஷாட்டை ஆதரித்து கதைக்கவில்லை. இச் சிறுமியின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் பல அரசியல் நடவடிக்கைகள் எடுத்தமையால் பல ஆயிரம் முஸ்லிம்களால் மிக மோசமாக, கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றார்.

மனோ கண்டித்தது ரிஷாட்டின் கைதுக்கு எதிராக. கோத்தா அரசின் அடாவடித்தனத்துக்கு எதிராக. ஈஸ்டர் தாக்குதலால் மிக பயனடைந்த மகிந்த சகோதரர்கள் ரிஷாட்டை இது தொடர்பாக கைது செய்தது தவறு என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நிழலி said:

மனோ கண்டித்தது ரிஷாட்டின் கைதுக்கு எதிராக. கோத்தா அரசின் அடாவடித்தனத்துக்கு எதிராக.

இதே சம்பவம் மனோவின் இரத்த உறவுக்கு நடந்து இருந்தால் அப்படி கதைத்து இருப்பாரா ?

இறந்த சிறுமியை உங்கள் எங்கள்  இரத்த உறவாக  பாருங்கள் மனோவை வெள்ளையடிக்க மனம் வராது .

50 minutes ago, பெருமாள் said:

இதே சம்பவம் மனோவின் இரத்த உறவுக்கு நடந்து இருந்தால் அப்படி கதைத்து இருப்பாரா ?

இறந்த சிறுமியை உங்கள் எங்கள்  இரத்த உறவாக  பாருங்கள் மனோவை வெள்ளையடிக்க மனம் வராது .

மனோவுக்கு வெள்ளையடிக்கவில்லை, நீங்கள் தவறாக எழுதியிருந்ததுக்கு விளக்கம் கொடுத்துள்ளேன். றிஷாட்டின் கைது நாளைக்கு எந்த ஒரு சிறுபான்மை இனத்து அரசியல்வாதிக்கும் நிகழலாம். அதை தடுப்பதற்கான வழிகளில் ஒன்று அதை கண்டிப்பதே. அதைத் தான் மனோ செய்கின்றார். அதே நேரத்தில் இச் சிறிமியின் கொலை தொடர்பாக அதிக அழுத்தம் அரசுக்கும் பொலிசுக்கும் கொடுத்தவர்களில் மனோ முக்கியமானவர்.

எந்த நிகழ்வையும், அவலத்தையும் எனக்கு என் குடும்பத்துக்கு நிகழ்ந்தால் என்று இரவல் உணர்ச்சி வழி நான் பார்ப்பது கிடையாது. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

ஹிஷாலினி வைத்தியசாலையில் ணனுமதிக்கப்ட்ட நாள் முதல் எனது மனைவி தினமும் வைத்திய சாலை சென்று ஹிஷாலினியின் உயிரைப்பதுகாக்காக போராடினார், மன்றாடினார். ஹிஷாலினிக்கு பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிங்கப்பூரிலிருந்து தோல் 7 ரூபா மருத்துவர்கள் செலவுகளையும் நான் ஏற்கின்றேன். ஹிஷாலினியை காப்பாற்றுங்கள் என என் மனைவி கூறியுள்ளார்

நானா பொய்சொல்லி ரொம்ப நல்லவராக காட்ட முயற்சிக்கிறார். ஆனால் பொருத்தமாக சொல்லத்தான் முடியவில்லை அவரால். உடலின் எழுபத்தைந்து வீதம் தீயினால் கருகிவிட்டதாம், வாக்குமூலம் பெறமுடியாத நிலையில் கதைக்க முடியாமல் ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். எங்கே பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை, யார் கேட்டு செய்ய இருந்தார்களாம்? ஒருவேளை பிளாஸ்ரிக் பொம்மை ஒன்று செய்ய யோசித்திருப்பார்களோ? அவ்வளவு பெருந்தன்மையுள்ள வீட்டில் இருந்த பெண் தற்கொலை பற்றி யோசித்திருப்பாளா? என்னா மனித நேயம். அவரை சொர்க்கத்துக்கு அனுப்பிவிட்டார்கள். இப்போ தாங்கள் போகப் பயப்படுகிறார்கள் அங்கே.

6 hours ago, பெருமாள் said:

குறைந்த சம்பளத்துக்கு கொழுந்து பறிக்கவும் ரப்பர் பால் எடுக்கவும் சிங்களவன் வருவானா ?


பெருமாள் பாத்து! காடுவெட்டி களனியாக்குகிற கூட்டம் அது. தமிழர் தான் சும்மா இருந்து காலாட்டுகிற ஆக்கள் என்று தடியோட வரப்போகினம்!

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, satan said:

பெருமாள் பாத்து! காடுவெட்டி களனியாக்குகிற கூட்டம் அது. தமிழர் தான் சும்மா இருந்து காலாட்டுகிற ஆக்கள் என்று தடியோட வரப்போகினம்!

நெருப்பை கொளுத்தி விட்டு எஸ்கேஎப் ஆகிடனும்🤣 இன்று வேறு வெள்ளிக்கிழமை  கத்தியுடன் வீரசூரையாவும் வந்து இறங்கி  உள்ளது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

நெருப்பை கொளுத்தி விட்டு எஸ்கேஎப் ஆகிடனும்🤣 இன்று வேறு வெள்ளிக்கிழமை  கத்தியுடன் வீரசூரையாவும் வந்து இறங்கி  உள்ளது 🤣

புரிஞ்சு நடந்தா சுபம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

விசாரணைகள் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்பட வேண்டுமென இங்குள்ள அமைச்சர் சரத் வீரசேகரவிடமும் அரசிடமும் கோருகின்றேன்.

ஆமா.....  நீதிமன்றத்தில் கூற வேண்டியதை ஏன் இங்கு வந்து புலம்புகிறார்? ஒருவேளை நீதிமன்றத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்துவிட்டார்களோ, கைதிகள் எல்லாம் இங்கு இருப்பதால்?  இவரை நீதிமன்றம் ஹிஷாலியின் வழக்கில் அழைக்கும்,  இப்போதைக்கு இல்லை. பிறகு ஏன் இப்பிடி அழுகிறார்? ஓஓ..... சரத் வீரசேகர நீதியமைச்சர் என்பதால் விண்ணப்பிக்கிறாரோ, ஒப்பிக்கிறாரோ? அவரே இன்னும் சில நாளில் காணாமற் போய்விடுவார் இந்த அமைச்சிலிருந்து. இவர் வேற.....

  • கருத்துக்கள உறவுகள்

மஹா நடிகன்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.