Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னய கைது பண்ணாதீங்க.. குத்திட்டு செத்திடுவன்..😆- கதறிய மீரா மிதுன்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…🤣

 

 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • பாலபத்ர ஓணாண்டி changed the title to என்னய கைது பண்ணாதீங்க.. குத்திட்டு செத்திடுவன்..😆- கதறிய மீரா மிதுன்..
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுகள் எல்லாம் சமூகநலன் விரோதிகள். வாழ்நாள் முழுவதும் சிறையில் வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னையே… கொலை பண்ணிக்கிட்டு, செத்துடுவேன்… 😂 🤣 👍🏼 

அதை, முதல்ல செய்…. மூ*வி. 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…🤣

உதாரிது புலவரே?

உதுகள் அலம்பறைகளை, மோடியும், ஸ்டாலினும் கேட்க வேணுமாமே.... பெரிய இடமோ?   🥴

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு மீராமிதுன் வெளியால வந்து சிறைசேட்டைகள் வெளியிடத்தான் போறார்🤣.

ஊடகவியளாலர் மீரா மிதுன் கைதை வன்மையாக கண்டிகிறோம்🤣.

பிகு

யூடியூப்பில் கொச்சை வீடியோ போடும் துரை முருகன் ஊடகவியலாளர் என்றால்,

பேஸ்புக்கில், டிவிட்டிரில் பச்சை பச்சையாக வீடியோ போடும் மீரா மிதுனும் ஊடகவியலாளர்தான்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, goshan_che said:

நாளைக்கு மீராமிதுன் வெளியால வந்து சிறைசேட்டைகள் வெளியிடத்தான் போறார்🤣.

ஊடகவியளாலர் மீரா மிதுன் கைதை வன்மையாக கண்டிகிறோம்🤣.

பிகு

யூடியூப்பில் கொச்சை வீடியோ போடும் துரை முருகன் ஊடகவியலாளர் என்றால்,

பேஸ்புக்கில், டிவிட்டிரில் பச்சை பச்சையாக வீடியோ போடும் மீரா மிதுனும் ஊடகவியலாளர்தான்🤣

சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோடு போட்டு அசத்திட வேண்டியதுதான்😎

மீராவையும் முருகனையும் ஒப்பிடும் அளவு அழகோ அழகு...🤣

  • கருத்துக்கள உறவுகள்

மீரா மிதுன் கைது: பட்டியலினத்தவர் பற்றி அவதூறு பேசியதாக வழக்கு

3 மணி நேரங்களுக்கு முன்னர்
மீரான மிதுன்

பட மூலாதாரம்,MEERA MITHUN

 
படக்குறிப்பு,

நடிகை மீரா மிதுன்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மீரா மிதுன் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பட்டியலினத்தவர் பற்றி அவதூறான வார்த்தைகளில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. அவர்களைத் திரையுலகில் இருந்து அகற்ற வேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார்.

அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு காவல்துறையில் புகார் அளித்தார்.

7 பிரிவுகளில் வழக்கு

இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் காவல்துறையினர் மீரா மிதுன் மீது இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தைத் தூண்டுதல்) 153 (A)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலைத் தூண்டுதல்) 505(1) (B) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2) (மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராகப் பேசுவது, நடப்பது),வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படிகூறி காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதற்குப் பிறகு அவர் வெளியிட்ட வீடியோவில் தன்னைக் கைது செய்தால் பரவாயில்லை எனக் கூறியிருந்தார்.

அவர் எங்கே இருக்கிறார் எனத் தேடிவந்த காவல்துறையினர் அவரது செல்போனை வைத்து, அவர் இருக்குமிடத்தை அறிய முயன்றனர். அவர் கேரளாவில் தங்கியிருப்பது தெரியவந்த நிலையில், அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்தனர். விரைவில் அவர் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

பிக்பாஸ்

எட்டுத் தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். பிறகு 2019ஆம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள், கலைஞர்கள் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.

பெண் திரைக்கலைஞர்கள் தன்னுடைய முகத் தோற்றத்தை பிரதிசெய்ய முயலுவதாகவும் குற்றம்சாட்டி வந்தார்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-58213706

இவர் தன்னை தானே பிரபலபடுத்தும் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இதுதானா அந்த சொப்பன சுந்தரி போடுங்க சார் புடிச்சு ஜெயிலில் போடுங்க

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோடு போட்டு அசத்திட வேண்டியதுதான்😎

மீராவையும் முருகனையும் ஒப்பிடும் அளவு அழகோ அழகு...🤣

கோடு ரெண்டும் ஒரே ரகம்தான். பார்வைதான் ஒரு கண்ணில் சுண்ணாம்பு மறுகண்ணில் வெல்லம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஓ இதுதானா அந்த சொப்பன சுந்தரி போடுங்க சார் புடிச்சு ஜெயிலில் போடுங்க

முன்ன பின்ன பாத்ததில்ல 😮

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சப்பான் சனாதிபதி அவர்களே.. அமெரிக்க அதிபர் அவர்களே.. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோடு போட்டு அசத்திட வேண்டியதுதான்😎

மீராவையும் முருகனையும் ஒப்பிடும் அளவு அழகோ அழகு...🤣

நமக்கு வீடியோலட்சுமி பத்தியும் ஒரு பெரிய கோடு போடும் பார்வையும் இருக்குதெல்லோ....😁

போலீஸ்க்காரர் வந்தோன்ன, இந்தம்மா, இங்கிலிஷ் கெட்ட வார்த்தையிலை திட்டுது. 😳

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கு போட்டியா நடிக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

நமக்கு வீடியோலட்சுமி பத்தியும் ஒரு பெரிய கோடு போடும் பார்வையும் இருக்குதெல்லோ....😁

 

நமக்கு இருந்து என்ன பிரயோசனம். ஸ்டாலின் காலில் நெடுண்சாண்டையா வீழ்ந்துவிட்ட பிறகு வீடியோ லக்சுமி, வீடியோ என்ன படமே ரிலிஸ் பண்ணாலும் ஸ்டாலின் பாதுகாப்பார்.

என்னது….ஆ….இனத்தின் எதிரிகள்…கருவறுத்தே தீருவோம்….🤣

#மண்டியிடாத மானம்🤦‍♂️
large.38A6166A-8178-45C2-8357-0912F9007F09.jpeg.20de5956a40defa671c68f6810815e77.jpeglarge.8F54313B-FC70-4414-8CE5-45FDE524CA3B.jpeg.34021422fb383b82f390fb32a79dd062.jpeg

15 minutes ago, நந்தன் said:

கருணாநிதிக்கு போட்டியா நடிக்குது. 

வசன கர்தா எழுதிகொடுத்ததை நடிகை சொல்லுவது வழமைதானே🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

நமக்கு இருந்து என்ன பிரயோசனம். ஸ்டாலின் காலில் நெடுண்சாண்டையா வீழ்ந்துவிட்ட பிறகு வீடியோ லக்சுமி, வீடியோ என்ன படமே ரிலிஸ் பண்ணாலும் ஸ்டாலின் பாதுகாப்பார்.

என்னது….ஆ….இனத்தின் எதிரிகள்…கருவறுத்தே தீருவோம்….🤣

#மண்டியிடாத மானம்🤦‍♂️

சீமான் எதை சொன்னாலும் எதிர்க்கருத்து வைப்பதுதானே உங்கள் வழமை.🤣

மாற்றுக்கருத்துக்கள் அவசியம். ஆனால் அது எங்கே எப்படி ஏன் என்பதில் தான் ஒவ்வொருவரின் நிலைப்பாடு புலப்படும்😂

அது சரி சீமானின் ஏ டீம் பி டீம் சி டீம் நிலமை இப்போது எப்படி போகின்றது?🤣😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சாப்பாடு கொடுக்கல என் கைய போலீஸ் உடைச்சிடாங்க” சென்னைக்கு அழைத்து வந்த மீரா மீதுன் கதறல்...

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தற்பொழுது சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார்.  

”எனக்கு சாப்பாடு கொடுக்கல என் கைய போலீஸ் உடைச்சிடாங்க” சென்னைக்கு அழைத்து வந்த மீரா மீதுன் கதறல்...

 

நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல புகார்கள்   அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி மீராமிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இருந்தபோதிலும் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேவேளையில் என்னை கைது செய்ய முடியாது என்று மீராமிதுன் போலீசாருக்கு சவால் விட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் ஆலப்புழாவில் தெரிந்தவர் ஒருவருடைய நட்சத்திர விடுதியில் மீரா மிதுன் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நேரடியாக அங்கு சென்று அவரை கைது செய்தனர். கைது செய்யப்படும்போது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனக்கு எதிராக காவல்துறையினர் அராஜகமாக செயல்படுவதாக வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார். 

அதன் தொடர்ச்சியாக கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுன், போலீஸ் வாகனம் மூலமாக தற்பொழுது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார். சென்னை அழைத்து வரப்பட்ட மீரா மிதுனிடம் காவல்துறையினர் தற்பொழுது விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். அவர் பட்டியலினத்தவர்களை இழிவாக பேசியது தொடர்பான வீடியோக்களை ஆதாரமாக வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணைக்கு பிறகு மீரா மிதுனை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன்பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image_750x_6118b4f18bb1e.jpg

காவல்துறையினர் அழைத்து வந்தபோது ஊடகங்களை பார்த்து எனக்கு சாப்பாடு கொடுக்கவில்லை, போலீசார் தன் கையை உடைத்து விட்டதாகவும், கடந்த மூன்று வருடங்களாக நான் கொடுத்த புகார்களை காவல்துறையினர் எடுக்கவில்லை என்றும், என் படம் ரிலீஸ் ஆகா கூடாதுனு போலீசார் எனக்கு அரஜாகம் பன்னிட்டு இருப்பதாக ஊடகங்களை பார்த்து கதறிக்கொண்டே சென்றார்.

குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக மீரா மீதுனின் காதலன் அபிஷேக் ஷியாமையும் கைது செய்த காவல்துறை... 

webteamAug 15, 20210133

மீரா மீதுன் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவரது ஆண் நண்பரையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்

  • குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக மீரா மீதுனின் காதலன் அபிஷேக் ஷியாமையும் கைது செய்த காவல்துறை...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை  பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரின் பேரில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துகள் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் கடந்த 7-ம்தேதி வழக்குப்பதிவு செய்தனர். 

இதையடுத்து கடந்த 11 ஆம் தேதி அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் சென்னை மத்திய குற்றப்பிரிவு  போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நடிகை மீரா மிதுன் சம்மனை ஏற்று ஆஜராகாமலும், தான் ஆஜராகாமல் இருந்ததற்கு உரிய விளக்கத்தை அளிக்காமலும் தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் அன்றைய தினமே தன்னை யாராலும் கைது செய்ய முடியாது எனவும், அப்படியே கைது செய்தாலும் பெருந்தலைவர்கள் சிறையில் இருந்ததைப் போல் நானும் இருப்பேன் எனப் பேசினார். முடிந்தால் கைது செய்யுங்கள் என சவால் விட்டு நடிகை மீரா மிதுன் பரபரப்பு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. 

இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில்  மீரா மிதுன் அவருடைய ஆண் நண்பருடன் பதுங்கி இருப்பது தெரிந்ததையடுத்து போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அப்போது கைது செய்ய வந்த போலீசாருடன் நடிகை மீரா மிதுன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

செல்போனை போலீசார் பறிமுதல் செய்ய முயன்ற போது ,தன்னை கொடுமைபடுத்துவதாக கூறி மீரா மிதுனே வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலை தளத்தில் பரப்பினார். அதன்பிறகு போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனாலும் மீரா மிதுன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகு தான் சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீரா மிதுனை கைது செய்தபோது அவரது ஆண் நண்பர் அபிஷேக்கையும் போலீசார் அதே வாகனத்தில் அழைத்து வந்தனர். 

ஆனாலும் போலீஸ் வாகத்திலேயே மீரா மிதுன் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் தமிழ்நாடு எல்லைக்கு வந்தபோது உதவிக்கு கோவை மாவட்ட பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பெண் போலீசாரின் உதவியோடு கைதான மீரா மிதுனை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு கொண்டு வரப்பட்டார். 24 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்டதால் டிராண்சிட் வாரண்டு பெறவில்லை என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு 4 வது நுழைவுவாயில் வழியாக உள்ளே கொண்டு வந்தபோது ஊடகங்கள் காட்சிகளை பதிவு செய்தனர். 

image_750x_6118cc3a83603.jpg 

அப்போது மீரா மிதுன், தன்னுடைய கையை போலீசார் உடைக்க முயன்றதாகவும் போலீசார் கொடுமை படுத்துவதாகவும், சாப்பாடு கொடுக்கவில்லை என்றும்" சத்தமிட்டபடியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு முதல் தளத்தில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் மீரா மிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தொடர்ந்து போலீசாருடன்  வாக்குவாதம் செய்து வந்தார். வாக்குமூலம் கொடுக்க மாட்டேன் என வாக்குவாதத்தால் முதல் தளம் முழுவதும் மீரா மிதுனின் சத்தமாக இருந்தது. தனது வழகறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனனர். விசாரணைக்கு பிறகு மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவருடைய நண்பர் அபிஷேக் ஷியாமையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மீராமீதுன் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக வந்த புகாரை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

https://www.malaimurasu.com/posts/crime/Officials-accused-of-soliciting-bribes

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Meera Mitun- ஐ Police Station-ல தர தரவென இழுத்து செல்லப்பட்ட Video..

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

Meera Mitun- ஐ Police Station-ல தர தரவென இழுத்து செல்லப்பட்ட Video..

 

 

 

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

Meera Mitun- ஐ Police Station-ல தர தரவென இழுத்து செல்லப்பட்ட Video..

இது உங்களின் கருத்தா?

தரதரவென்று தரையிலேயே இழுக்கலாம்.

அனால் ,வீடியோ இல் அவரை, காவல்துறையின் வழமையான கைதின் குறியீடான காவல்துறையின் கைத்தாங்கல் பிடிக்குள்,   அவராக நடந்து வரும்படி, அவரின் மீது எந்த குற்றசாட்டு இருந்தாலும், காவல்துறை கண்ணியமாகவே அவரை நடத்தி இருக்கிறது. 
   
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

 

 

 

 

 

இது உங்களின் கருத்தா?

தரதரவென்று தரையிலேயே இழுக்கலாம்.

அனால் ,வீடியோ இல் அவரை, காவல்துறையின் வழமையான கைதின் குறியீடான காவல்துறையின் கைத்தாங்கல் பிடிக்குள்,   அவராக நடந்து வரும்படி, அவரின் மீது எந்த குற்றசாட்டு இருந்தாலும், காவல்துறை கண்ணியமாகவே அவரை நடத்தி இருக்கிறது. 
   
 

அது உங்கள் கண்ணிற்கு தெரியாது கடஞ்சா….

  • கருத்துக்கள உறவுகள்

பட்டியலின மக்கள்மீது கொலை, தாக்குதல்கள்,ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக வலைதளங்களில்  பாட்டாளி மக்கள் கட்சிமீதும் அதன் தலைவர் ராமதாசின்மீதும் அவர் சார்ந்த வன்னிய சமூகத்தின் மீதும் மிக பரவலான கண்டனங்கள் கருத்துக்கள் , அவர்கள்மீது எந்தவகையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கபடுவதில்லை குற்றச்சாட்டுக்களும் எப்போதும் உலாவருகின்றன.

காயத்திரி ரகுராம் பட்டியலின மக்களை மறைமுகமாக மையபடுத்தி சேரியில இருக்கிறவனுக பழக்க வழக்கங்கள் என்ற வார்த்தை பேசி திட்டியபோது இதே வேகத்தில் சட்டம் செயல்பட்டதா தெரியவில்லை.

எஸ்வி சேகரும் சர்ச்சையான கருத்துக்கள் தெரிவித்து  காவல்துறையால் தேடபடும்போது மீரா மிதுன் போலவே என்னை யாரும்  கைது செய்ய முடியாது என்று திமிராக தலைமறைவாக  இருந்தபடி அறிக்கைவிட்டார், காவல்துறை தேடுது என்றார்கள்  பின்பு அவர் பொலிஸ்காரருடன் அவர்கள் வாகனத்தில் சுற்றி திரிந்த படம் எல்லாம் வந்தது அதுக்கும் ஒரு நடவடிக்கை இல்லை.

மீராமிதுன் ஒண்டுக்கும் பிரயோசனம் இல்லாத ஒரு ஒண்டரையணா கேசு என்பதால் உடனடி நடவடிக்கை பாய்ந்திருக்கிறது, இந்தியாவில் குற்றங்களை யார் புரிகிறார்கள் என்பதை வைத்தே நீதி தன் கடமையை உடனடியாக செய்யும்.

மீராமிதுன் பேசுற பேச்சுக்கும் விடுற வீடியோ அறிக்கைகளுக்கும் ஐஞ்சுரூபா எலிபாசணம்தான் வாங்கி வைக்கோணும் அவ்வளவு அநியாயம்.

தமிழக சில செய்திகள்  தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பற்றி யாழில் செய்திபகிர அனுமதி மறுப்பு உண்டு, அப்படியிருந்தும் மீரா யாழில் முக்கியத்துவம் பெறுகிறார் என்றால், தலைவி மீராமிதுன் சும்மா இல்ல வேற லெவல்.

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நந்தன் said:

முன்ன பின்ன பாத்ததில்ல 😮

இல்லை பெரிதாக தெரியாது செய்தி கேள்விப்படுவேன் ஆனால் விரிவாக பார்த்ததில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லை பெரிதாக தெரியாது செய்தி கேள்விப்படுவேன் ஆனால் விரிவாக பார்த்ததில்லை

மாமா ராசசசசசன்! நீங்க எங்க இருக்கீங்க???????

மீரா மிதுன் கேரளாவில் கைது: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய  வழக்கில் அதிரடி! | Meera Mithun arrested for comments against sc/st  community

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

மாமா ராசசசசசன்! நீங்க எங்க இருக்கீங்க???????

மீரா மிதுன் கேரளாவில் கைது: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய  வழக்கில் அதிரடி! | Meera Mithun arrested for comments against sc/st  community

இங்கதான் சாமியார் பெரிசா ஒன்றும் இல்லையே நால்ல அடக்க  ஒடுக்கமான பிள்ளை போலதானே இருக்கு 😁

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லை பெரிதாக தெரியாது செய்தி கேள்விப்படுவேன் ஆனால் விரிவாக பார்த்ததில்லை

பாவம் பெடியன் ,காட்டினத பாக்கேல்ல போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கதான் சாமியார் பெரிசா ஒன்றும் இல்லையே நால்ல அடக்க  ஒடுக்கமான பிள்ளை போலதானே இருக்கு 😁

 

என் சாவுக்கு காரணமாவோரை தூக்கிலிட வேண்டும் : பிக்பாஸ் மீரா மிதுன் மோடிக்கு  டுவிட் - Ceylonmirror.net

அலையுறாங்கள் 😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.