Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுநீரகக் கல் அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

அனுபவ பகிர்விற்கு மிக்க நன்றி கு.சா.🙏

எனக்கு ஒரு சம்சயம்..

கேட்டால், பரிமளம் அம்மணி கோவிக்குமே அஞ்சுகிறேன்..! 🤔

அந்த சிவலிங்கத்தாரின் சுகம் தானே?

  • Replies 84
  • Views 6.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

அந்த சிவலிங்கத்தாரின் சுகம் தானே?

அந்தாள் மண்டையை போட்டு ரொம்பகாலமாகிடிச்சே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

அந்த சிவலிங்கத்தாரின் சுகம் தானே?

9 minutes ago, ஈழப்பிரியன் said:

அந்தாள் மண்டையை போட்டு ரொம்பகாலமாகிடிச்சே.

poornam.png

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2021 at 21:26, goshan_che said:

உதுகளை கொஞ்சம் டிரை பண்ணி பார்க்கலாம்தான் - ஆனால் யாழில் எழுதிற நேரம் குறைஞ்சிடும் எண்டு யோசிக்கிறன்

தனது நலனை பற்றி பொருட்படுத்தாமல் தமிழர்களுடைய நலனுக்காக பாடுபடுவது என்பது தான் இது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23/12/2021 at 01:08, நந்தன் said:

அந்த சிவலிங்கத்தாரின் சுகம் தானே?

On 23/12/2021 at 02:20, ஈழப்பிரியன் said:

அந்தாள் மண்டையை போட்டு ரொம்பகாலமாகிடிச்சே.

 

On 23/12/2021 at 02:31, ராசவன்னியன் said:

poornam.png

சரி.....சரி.....விடுங்க ராசவன்னியர்!  அவிங்க தங்கட கவலையை இங்க கொட்டித் தீர்க்கிறாங்க...🤣

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறு நீரகக் கல் பற்றிய பல செய்திகள் பயனுள்ள தகவல்கள் பகிரப் பட்டிருக்கின்றன. இது பற்றிய மேலும் சில தகவல்களைப் பார்க்கலாம்:

1. சிறு நீரகக் கல்லின் அடிப்படை செறிவான சிறுநீர்: கீழேயுள்ள படத்தை முழுவதும் விளக்கும் எண்ணத்தோடு இணைக்கவில்லை. ஆனால், ஒரு முக்கியமான விடயத்தை இந்தச் சிறு நீரகத் தொழிற்பாட்டை விளக்கும் படம் சொல்கிறது: எங்கள் சிறு நீரின் செறிவைத் தீர்மானிக்கும் பிரதானமான காரணிகளாக நீரும் சோடியமும் இருக்கின்றன.

nephron.jpg

Credit: கல்வி/விழிப்புணர்வூட்டல் நோக்கிற்காக மட்டும் நன்றியுடன் பகிரப்பட்டது.

சோடியம் என்பதை நாம் "உப்பு" என்று பயன்பாட்டு நோக்கத்திற்காக அழைத்துக் கொள்ளலாம்! மேல் படத்திலிருப்பது போன்ற மில்லியனுக்கு மேற்பட்ட சிறு அலகுகளால் (nephrons) ஆக்கப் பட்டதே எங்கள் சிறுநீரகம். இந்த அலகு ஒவ்வொன்றும் ஒரு கோப்பை போன்ற வடிகட்டியையும், அதன் தொடர்ச்சியான குழாயையும் இந்த அமைப்புகளோடு பின்னிப் பிணைந்த இரத்தக் குழாய்களையும் கொண்டிருக்கும். சிறுநீர் என்று நாம் அழைப்பது உண்மையில் இந்த சிறுநீரக அலகில் நடக்கும் மூன்று முக்கிய நிகழ்வுகளின் நிகர விளைவு:

1. கிண்ணம் போன்ற அமைப்பினூடான வடிகட்டல் (filtration)- அனேகமாக வடிகட்டக் கூடிய பருமனுடைய எல்லாம்  வடிக்கப் படும்!

2. மீள அகத்துறிஞ்சல் (reabsorption): வடிகட்டியவற்றுள் முக்கியமானவற்றை கிண்ணத்தின் தொடர்ச்சியான குழாயினூடாக செல்லும் வழியில் மீள உடல் உறிஞ்சிக் கொள்ளும். உதாரணமாக, குளூக்கோஸ் முழுவதும் வடிக்கப் பட்டு, சாதாரண நிலையில் முழுவதும் மீள உறிஞ்சப் படும். ஒரு அளவுக்கு மேல் நீரிழிவு நோயில் குழூக்கோஸ் மிகுதியானால், மீள உறிஞ்ச இயலாத பகுதி சிறுநீரோடு வெளியேறும்.

3. சுரத்தல் (secretion): சில பொருட்கள், வடிக்கப் படுவதற்கு மேலதிகமாக, சிறுநீரக அலகுகளின் குழாய்களினுள் இரத்தத்தில் இருந்து வெளியே தள்ளப் படும்.

 எனவே, இறுதியில் உருவாகும் சிறுநீர், இந்த மூன்று செயல்பாடுகளின் விளைவால் உருவாகும் போது, அதில் இருக்கும் நீரின் அளவு சிறு நீரின் செறிவைத் தீர்மானிக்கும்.

எனவே, போதுமானளவு நீர் அருந்துவது சிறு நீரின் செறிவைக் குறைத்து, சிறு நீரகக் கல் உருவாகாமல் காக்கும் எளிய வழி!

ஆனால் அது மட்டும் செறிவு குறைந்த  சிறுநீரை உருவாக்கப் போதுமா என்றால் பதில் "இல்லை" என்பது தான்!

2. "சோடியம் அல்லது உப்பு" சிறுநீரக வடிகட்டலில் முக்கியமானது!

உப்பை நாம் சுவைக்காகச் சேர்த்துக் கொள்கிறோம் உணவில். உப்பில் இருக்கும் சோடியம், குளோரைட் ஆகிய அயனிகளுக்கு எங்கள் உடலில் முக்கியமான தொழில்கள் இருக்கின்றன. ஆனால், உடலின் தேவைக்கதிகமான உப்பை நாம் வாய்வழி எடுத்துக் கொள்ளும் போது, அதனை உடலில் இருந்து அகற்றும் பாரிய பணி சிறுநீரகத்தின் மேல் விழுகிறது.

👆திரும்பவும் மேலே இருக்கும் படத்தை அவதானித்தால், சோடியமும், தண்ணீரும் இராமரும் சீதையும் போல இணைபிரியாமல் இருப்பதைக் காண்பீர்கள்: இதன் விளைவு, சோடியம் அதிகமாக இருக்குமிடத்தில் நீரும் அதிகமாகத் தேவை! எனவே, சிறுநீரக வடிகட்டலில் அதிக சோடியம், குறைந்த நீர் இருக்கும் நிலையில், உடலைக் காப்பதா அல்லது சிறுநீரைச் செறிவாக்குவதா என்ற தெரிவு வரும் போது, உடலுக்கு முன்னுரிமை கிடைக்கும் - சிறு நீர் செறிவாக வெளியே அனுப்பப் படும்!

 எனவே, போதிய நீர் அருந்தும் அதே வேளை, வாய்வழி நாம் எடுத்தும் கொள்ளும் உப்பையும் அளவாகவே எடுத்துக் கொண்டால் மட்டுமே, சிறு நீர் செறிவாதலைத் தடுக்கலாம்! 

அளவாக என்றால் எவ்வளவு உப்பு? மனித உடலுக்கு அன்றாடம் தேவையான உப்பின் அளவு வெறும் 1.5 கிராம்கள் என்று கணித்திருக்கிறார்கள். ஒரு தேக்கரண்டி உப்பில் 5 கிராம் உப்பு இருக்கும் என்று பார்த்தால், இது கிட்டத்தட்ட 1/3 தேக்கரண்டி என்று கொள்ளலாம்! "ஏற்கனவே நான் ஒரு தேக்கரண்டியில் ஒரு நுனி உப்பைத் தான் சமையலில் சேர்த்துக் கொள்கிறேன்" என்று நீங்கள் திருப்திப் பட்டுக் கொள்ளும் முன் கொஞ்சம் பொறுங்கள்:

உப்பு, நீங்கள் தனியாகச் சேர்க்கும் வழியில் மட்டுமன்றி, எங்கள் ஏனைய உணவுகளின் வழியேயும் உடலுக்குக் கிடைக்கிறது என்பதைக் கவனியுங்கள்:

1. காய்கறிகள்

2. மாமிச உணவுகள்

3. குடிக்கும் தண்ணீர்

 இவை மூலமே, எங்கள் உடலின் அடிப்படைத் தேவையான 1.5 கிராம் உப்பு கிடைத்து விடுகிறது! இதை விட ஆசிய உணவுகளில் சேர்க்கப் படும் மசாலாக்களிலும் போதிய உப்பு இருக்கிறது. எனவே, நாம் தனியாகச் சேர்க்கும் உப்பு இவையெல்லாவற்றையும் விட மேலதிகமான உப்பு என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்!

3. சிறுநீரக் கல்லில் கல்சியம் எங்கே வருகிறது?

கல்சியம் எங்கள் எலும்புகளுக்கும், வேறு சில உடற்றொழில்களுக்கும் அவசியமான ஒரு கனிமம். மேலே பலராலும் (மருத்துவர்கள் உட்பட) குறிப்பிடப் பட்டிருப்பது போல, அதீத கல்சியம் மட்டுமே சிறுநீரகக் கல்லை உருவாக்கும் என்பது தவறான ஒரு புரிதல்! முன்னர் நாம் பார்த்தது போல, நீர் அருந்துவதும் குறைந்து, உப்பும் அதிகரித்தால் , நாம் எடுத்துக் கொள்ளும் கல்சியம் சிறுநீரில் செறிவாகி கல்லை ஏற்படுத்தும். எனவே, அதிகரித்த கல்சியம் மட்டுமே சிறுநீர்க்கல்லை ஏற்படுத்தாது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்!

எனவே, சிறுநீரகக் கற்களைத் தவிர்க்க, பாலுணவுகள் மூலம் கிடைக்கும் கல்சியத்தை நாம் குறைக்க வேண்டுமென்பது ஒரு தவறான ஆலோசனையாக இருக்கிறது. உண்மையில், அமெரிக்க சிறுநீரக ஆய்வு அமைப்பின் (Kidney Foundation) ஆலோசனையின் படி, பாலுணவுகள் மூலம் நாம் எடுத்துக் கொள்ளும் கல்சியம், சில வகையான சிறு நீரகக் கற்களைத் தடுக்கும் என்பதால், பாலுணவுகளை நாம் போதியளவு எடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறார்கள்! இது ஏன் எனப் புரிய நாம் ஒக்சலேற் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்!👇

4. பெரும்பான்மையானவை கல்சியம் ஒக்சலேற் கற்கள்:

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, பெரும்பாலான சிறு நீரகக் கற்கள் கல்சியம் ஒக்சலேற் கற்களாகும். இதன் காரணம், எங்கள் சாதாரண உடற்தொழிற்பாடுகளின் பக்க விளைவாகவும், நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் வழியாகவும் ஒக்சலேற்றுகள் எங்கள் உடலினுள் அதிகரிக்கின்றன. கல்சியம் அயனி அந்த ஒக்சலேற்றோடு சேர்ந்து கொள்ளும் போது, "கல்சியம் ஒக்சலேற்" என்ற நீரில் இலகுவில் கரையாத பளிங்கு உப்பு உருவாகிறது: இந்தப் பளிங்கு உப்பு சிறு நீரில் உருவானால் கல்சியம் ஒக்சலேற் சிறு நீரகக் கல் உருவாகும்!

நிற்க: நீரில் இலகுவில் கரையாத கல்சியம் ஒக்சலேற் எங்கள் குடலில் உருவானால், அது உடலினுள் உறிஞ்சப் படுவது குறையும். அதே போல நீரில் இலகுவில் கரையாத கல்சியம் ஒக்சலேற் எங்கள் உடலினுள் உருவானால், அது எலும்புகளினுள் உள்ளீர்க்கப் பட்டு, சிறு நீரகத்தினால் அகற்றப் படாமல் தங்கும்! இதனால் தான், நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் கல்சியத்தை எடுத்துக் கொள்ளும் போது, குடலிலும், எலும்பிலும் ஒக்சலேற்றினைச் சிறைப்பிடித்து, சிறு நீரகக் கல் உருவாவவதைத் தடுப்பதாக பெரும்பாலான மருத்துவர்கள் வாதிக்கின்றனர்.

5. எனவே, கல்சியம் ஒக்சலேற் கல் உருவாகாமல் தடுக்க, ஒக்சலேற்றைக் குறைக்க வேண்டும்!

ஒக்சலேற் உடலினுள் சாதாரணமாக உருவாகும் ஒரு பக்க விளைவுப் பொருள். அது கல்சியம் ஒக்சலேற் கற்களை அதிகரிக்காமல் இருக்க, தண்ணீர் போதியளவு அருந்துதல், உப்பைக் குறைத்தல், போதியளவு கல்சியம் உணவு மூலம் எடுத்துக் கொள்ளல் என்பன முக்கியமான செயல்பாடுகள்!

குடலில் இருந்து உணவு மூலம் உள்ளே வரும் ஒக்சலேற்றைக் குறைக்க வேறென்ன செய்யலாம்? இரண்டு வழிகள் இருக்கின்றன:

1. ஒக்சலேற் அதிகம் கொண்ட உணவுகளை மிதமாக உள்ளெடுத்தல் (தவிர்க்க வேண்டிய அவசியம் அனேகமானோரில் ஏற்படாது தக்காளி, எள்ளுணவுகள், "முந்தானை முடிச்சு" புகழ் முருங்கைக்காய்😉 , முருங்கைக் கீரை ஆகியன ஒக்சலேற் அதிகம் கொண்ட தாவர உணவுகள். இவற்றை தினசரி உட் கொள்வதைத் தவிர்க்கலாம்.

2. ஒரு புதிய ஒக்சலேற் தடுப்பு முறை: எங்கள் குடலில் இருக்கும் பற்றீரிய வகை நுண்ணங்கிகளால் எங்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய அனுகூலங்கள் பல. ஒக்சலோபக்ரர் fபோர்மிஜனேஸ் (Oxalobacter formigenesஎனப்படும் ஒரு  குடல் பற்றீரியா, உணவில் இருக்கும் ஒக்சலேற்றை உள்வாங்கி அதை அழித்து விடும் வல்லமை மிக்கது. சிறுவயதினரின் குடலில் அதிகம் காணப்படும் இந்த பற்றீரியா, வளர்ந்தோரில் அதிகம் இல்லாமல் ஒழிந்து போவதற்கு நவீன உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக இருக்கலாமென நம்புகிறார்கள். ஒரு ஆய்வின் முடிவின் படி, அமேசன் காடுகளை அண்டிய பகுதிகளில் தாவர உணவுகளை அதிகம் உண்டு வாழும் ஆதிவாசி மக்களின் குடலில், இந்த ஒக்சலோபக்ரர் பற்றீரியாக்கள் அமெரிக்க மக்களின் குடலில் இருப்பதை விட அதிகம் காணப்படுவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். இதனால் அமேசன் ஆதிவாசிகளில் சிறு நீரகக் கல் உருவாகும் ஆபத்தும் சிறிதளவு குறைந்ததாகத் தெரிகிறது.

ஒக்சலோபக்ரர் பற்றீரியாவின் அளவை எங்கள் குடலில் அதிகரிக்க இலகுவாக நாம் செய்யக் கூடியது, உணவில் நார்ச்சத்தை அதிகரிப்பதாகும்.

அதிக மரக்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்ளும் போது இரு நன்மைகள் சிறு நீரகக் கல் சார்ந்து எமக்கு ஏற்படலாம்:

1. ஒக்சலோபக்ரர் உட்பட்ட குடல் பற்றீரியாக்களின் அளவு அதிகரிப்பதால் உணவின் மூலம் வரும் ஒக்சலேற்றின் அளவு குறைக்கப் படும்.

2. தாவர உணவின் காரணமாக எங்கள் சிறுநீரின் காரத்தன்மை அதிகரிக்கும் போது, அதனாலும் கல்சியம் ஒக்சலேற் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் குறையும்.  

எனவே, சுருக்கமாக பிரதான வகை சிறுநீரகக் கல்லான கல்சியம் ஒக்சலேற் கற்கள் உருவாகாமல் குறைக்க எமக்குள்ள வழிகள் இவை:

1. போதியளவு தண்ணீர்.

2. உணவில் குறைந்த உப்பு

3. போதியளவு கல்சியம் - பாலுணவுகள் மூலம்.

4. குறைந்த ஒக்சலேற் கொண்ட உணவுகள்.

5. அதிக நார்த்தன்மை கொண்ட உணவுகள். 

தொகுப்பு: ஜஸ்ரின்

Edited by Justin
edits

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொரோனாக்  காலத்திலும் கு.சாவின் லொள்ளென்டா பேய் உச்சம் கண்டியளோ... . உடம்புக்குள்ள ஏகப்பட்ட கோதாரி இதுக்குள்ள விடுப்புக்கும் சிவலிங்கத்தாற்ர வீரப்பிரதாபங்களுக்கும் வக்கணையா கதைக்கிறதுக்கும் குறைவில்லை 🤣

வேதனையைக்கூட இதழ்கடையில் முறுவலிக்க எழுதுவதற்கு கு.சா, இலையான் கில்லர் போன்றோரிடம் கற்கவேண்டும்.  அநுபவபகிர்வுக்கு நன்றி கு.சா

  • கருத்துக்கள உறவுகள்

பலதரப்பட்ட விடயங்களை  படத்தினூடு விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு மிகவும்  நன்றி ஜஸ்டின் ..........!   🌹

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது அனுபவ பார்வையில் சிறுநீரக கல்  உருவாகியதற்கான காரணங்களை என்னால் நிறு திட்டமாக கூற முடியவில்லை. ஏனெனில் நான் தங்கியிருந்த வைத்தியசாலை வைத்தியர்களின் ஆலோசனையும் சரி ஜஸ்டின் சொன்ன காரணங்களும் சரி கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றது. இதில் எனக்குள்ளேயே பல முரண்பாடுகள் உள்ளது.

வைத்தியசாலையில் எனக்கு சிறுநீரக கல் மீண்டும் வரலாம் என எச்சரித்தே வெளியில் விட்டார்கள். என்ன பிழை விட்டேன் அல்லது விடுகின்றேன் என்பதை இனிவரும் காலங்கள் தான் தீர்மானிக்கும்.

 20,25 வருடங்களாக தினசரி இரண்டரை லீட்டருக்கு மேல் தண்ணீர் அருந்துகின்றேன்.அருந்த வேண்டும். இல்லையேல் சிறுநீர் கழிக்கும் போது பயங்கர எரிச்சல் இருக்கும். காரணம் நான் எடுக்கும் மாத்திரைகளின் விக்கனம்.
நார்ச்சத்து உணவுகள் என்று பார்த்தால் நான் ஒரு மரக்கறி பிரியன். அதிலும் கீரை வகைகள் அதிகம் உண்பவன். பாலுணவு வகைகள் அதிகம்.அதிலும் சீஸ் என்றால் அலாதி பிரியம்.ஆனால் பால் சம்பந்தப்பட்ட உணவுகளை குறைக்கும் படி வைத்தியசாலையில் அறிவுறுத்தினார்கள்.

நிற்க...

நான் செய்யும் தவறு உப்பு கூடிய உணவு வகைகளை உண்பதாகவாகவும் இருக்கலாம். நேரம் வரும்போது   நாக்குக்கு வக்கணையாய் உருட்டி பிரட்டி உண்ட உணவுகளை யோசித்து சொல்கின்றேன்..

நெத்தலி கருவாடு  கட்டாப்பாரை கருவாடு எல்லாம் வரிசையிலை வரும் போல கிடக்கு...😟


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.