Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரைக்கலைஞர் சித்ரா மாரடைப்பால் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரைக்கலைஞர் சித்ரா மாரடைப்பால் காலமானார்

820d2653-ac9a-472f-b13e-d7514e9813af.jpg

தமிழ், மலையாளத் திரையுலகில் 80களின் பிற்பகுதியிலும் 90களிலும் பிரபலமாக விளங்கிய சித்ரா மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 56. தமிழ்த் திரைப்பட

உலகில் 1980களின் பிற்பகுதியிலும் 90களிலும் பிரபல நடிகையாக விளங்கியவர் சித்ரா. அவள் அப்படித்தான் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சின்னப்பூவே மெல்லப்பேசு, மனதில் உறுதி வேண்டும், ஊர்க்காவலன், என் தங்கச்சி படிச்சவ திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபலாக அறியப்பட்டவர் சித்ரா.

1991ல் வெளியான சேரன் பாண்டியன் திரைப்படமும் அதற்கு அடுத்த ஆண்டே வெளியான பொண்டாட்டி ராஜ்ஜியம் திரைப்படமும் அவருக்கு பெரும் புகழைத் தேடித்தந்தன. 1996வரை தொடர்ந்து தமிழில் நடித்த சித்ரா, அதற்குப் பிறகு 2001ல் கோபாலா கோபாலா படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றினார்.

சித்ரா நடித்த நல்லெண்ணெய் விளம்பரம் ஒன்று மிகப் பிரபலமானதால், இவர் நல்லெண்ணெய் சித்ரா என்றே அழைக்கப்பட்டார். தமிழைப் போலவே மலையாளத் திரைப்படங்களிலும் 1970களின் மத்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2000ங்களின் துவக்கம்வரை 100க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருந்தார்.

கேரளாவின் கொச்சியை சொந்த ஊராகக் கொண்டிருந்த சித்ரா, விஜயராகவன் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு மகாலக்ஷ்மி என்ற மகள் இருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் வசித்துவந்த சித்ராவுக்கு வெள்ளிக்கிழமை இரவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வரவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.

நல்லெண்ணை விளம்பரத்துக்கு நடித்தவர் 56 வயதில் மாரடைப்பில் மரணமா? எந்த பிராண்ட் என்று சொன்னால் அந்த பிராண்ட் நல்லெண்னைய் வாங்குவதை நிப்பாட்டலாம்.

இவர் நடித்த காட்சிகள், வீடியோ இணையுங்கள் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

ஏன் அவ இறந்ததெற்கும், அந்த பிராண்ட் நல்லெண்ணைக்கும் என்ன சம்மந்தம் 
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்லெண்ணைய் விளம்பரத்துக்கு நடித்த ஒருவருக்கு 56வயதில் மாரடைப்பால் இறப்பு ஏற்படுகின்றது என்றால் அது எந்த பிராண்ட் என்று அறியத்தானே வேணும். இதயத்துக்கு நல்லது என்று சொல்லித்தானே நல்லெண்ணை விற்கின்றார்கள். இது ஒரு முரண்நகையாக தென்படவில்லையா? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நல்லெண்ணைய் விளம்பரத்துக்கு நடித்த ஒருவருக்கு 56வயதில் மாரடைப்பால் இறப்பு ஏற்படுகின்றது என்றால் அது எந்த பிராண்ட் என்று அறியத்தானே வேணும். இதயத்துக்கு நல்லது என்று சொல்லித்தானே நல்லெண்ணை விற்கின்றார்கள். இது ஒரு முரண்நகையாக தென்படவில்லையா? 🤔

இல்லை முதலில் அவ அந்த நல்லெண்ணெய் சாப்பிட்டு தான் மாரடைப்பு வந்து இறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை 

23 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நல்லெண்ணைய் விளம்பரத்துக்கு நடித்த ஒருவருக்கு 56வயதில் மாரடைப்பால் இறப்பு ஏற்படுகின்றது என்றால் அது எந்த பிராண்ட் என்று அறியத்தானே வேணும். இதயத்துக்கு நல்லது என்று சொல்லித்தானே நல்லெண்ணை விற்கின்றார்கள். இது ஒரு முரண்நகையாக தென்படவில்லையா? 🤔

பலரும் நினைப்பதுபோல் நல்லெண்ணை நல்ல எண்ணை அல்ல. எண்ணைகளைத் தரப்படுத்தினால் நல்லெண்ணைய விட சூரியகாந்தி எண்ணை எவ்வளவோ மேல். 

பொதுவாக இரசாயனம் கலக்கப்படாமல் வெப்பமாக்கப்படாமல் பச்சையாக வடிக்கப்படும் எண்ணைகள் நல்லவை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

நல்லெண்ணைய் விளம்பரத்துக்கு நடித்த ஒருவருக்கு 56வயதில் மாரடைப்பால் இறப்பு ஏற்படுகின்றது என்றால் அது எந்த பிராண்ட் என்று அறியத்தானே வேணும். இதயத்துக்கு நல்லது என்று சொல்லித்தானே நல்லெண்ணை விற்கின்றார்கள். இது ஒரு முரண்நகையாக தென்படவில்லையா? 🤔

சாவார்க்கு ஒரு பெயர் ஆழ்ந்த அனுதாபங்கள் 

சேரன் பாண்டியன் திரைப்படத்தில் பார்த்தது நியாபகம் வருகிறது 

விளம்பர வியாபாரத்துக்கும் நோய்க்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கமுடியாமல் உள்ளதே உங்களால் மாரடைப்பு திடீர் என வருவது தானே சொல்லிக்கொண்டா வரும் சிலர் தப்புவார்கள் சிலர் போய்விடுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎-‎08‎-‎2021 at 16:49, இணையவன் said:

பலரும் நினைப்பதுபோல் நல்லெண்ணை நல்ல எண்ணை அல்ல. எண்ணைகளைத் தரப்படுத்தினால் நல்லெண்ணைய விட சூரியகாந்தி எண்ணை எவ்வளவோ மேல். 

பொதுவாக இரசாயனம் கலக்கப்படாமல் வெப்பமாக்கப்படாமல் பச்சையாக வடிக்கப்படும் எண்ணைகள் நல்லவை. 

சூரிய காந்தி எண்ணெய் கலப்படம் இல்லாதது என்று எப்படி சொல்வீர்கள்?
 
1 hour ago, ரதி said:

சூரிய காந்தி எண்ணெய் கலப்படம் இல்லாதது என்று எப்படி சொல்வீர்கள்?
 
தரப்படுத்தல் பற்றிச் சொன்னது கலப்படம் தொடர்பானதல்ல.

எண்ணைகளிலுள்ள கூடாத நல்ல (saturated - monounsaturated - polyunsaturated) கொழுப்புகளின் அளவு. 
சூரியகாந்தியை விட நல்லெண்ணையில் அதிகம் கூடாத கொழுப்பு உள்ளதால் நல்லெண்ணை பாவிப்பதால் கொலஸ்ரரோல் அதிகம் வர வாய்ப்புள்ளது. அதற்காக சூரியகாந்தி எண்ணையை அளவுக்கு அதிகம் பாவிக்க வேண்டாம். 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கருத்து என்னவெனில் சமையலுக்கு எண்ணை அவசியமில்லாத ஒன்று. மனிதன் தனது உடலுக்கு எண்ணை தேவையெனில்  அதை வேறு வழிகளில் பயன்படுத்தலாம். நாக்குக்கு ருசியாக எரியல் பொரியல் தேவையெனில் மாதத்தில் ஒருமுறையோ அல்லது நான்கு முறையோ எரித்து பொரித்து சாப்பிடலாம்.

மனித நாக்கின் நீளம் 7 செ.மீ தொடக்கம் 9 செ.மீ வரைக்கும் இருக்கும் என்கிறார்கள்.. அந்த சிறிய நாக்கிற்கு சுவை எனும் பெயரில் எவ்வளவு கொழுப்பு/ஒவ்வாத உணவுகளை விழுங்கி மலை போன்ற உடலை வருத்துகின்றோம்.

எல்லா எண்ணைகளையும் அது சார்ந்த பெயரை குறிப்பிட்டு சொல்லும் போது எள் எண்ணையை மட்டும் நல்லெண்ணை என சொல்வார்கள். ஏனெனில் அது  உடலுக்கு அதிகம் விக்கனம் இல்லாதது. எமது முன்னோர்கள்  காலையில் உழுத்தம் உணவுகளை முக்கியமான உணவுகளாக உண்டார்கள். அதில் நல்லெண்ணை முக்கிய இடத்தை பெற்றது.திடகாத்திரமாக இருந்தார்கள். அதை விட தமிழர்கள் வாழ்வியலில்  நல்லெண்ணை மிக முக்கியமானது.

நல்லெண்ணையையும் தேங்காயெண்ணையும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி நூறுவருடம் ஆரோக்கியமாக வாழ்ந்த சமுதாயத்திற்கு சுழல் கதிரையில் வாழும் சமுதாயம் சூரியகாந்தி எண்ணையை பரிந்துரை செய்கின்றார்கள். நல்லெண்ணை தேங்காயெண்ணை போன்றவைகள் பல வகைகளில் பிரயோசமானது.

சூரியகாந்தி எண்ணையை இப்போது உலக வியாபார பொருளாக்கி விட்டது இந்த வியாபார உலகம்.  அந்த எண்ணையில் தான் இப்போது விஞ்ஞான தொழில் நுட்பம் புகுந்து விளையாடுகின்றது. சோரம் போபவர்கள், போனவர்கள் வியாபர விஞ்ஞான அறிக்கைகளை பக்கம் பக்கமாக எடுத்து விடுவார்கள். ஆனால் அன்று இல்லாத நோய்கள் ஏன் இன்று என கேட்டால் குச்சொழுங்கைக்குள் ஒதுங்கி விடுவார்கள்.

1 hour ago, குமாரசாமி said:

எனது கருத்து என்னவெனில் சமையலுக்கு எண்ணை அவசியமில்லாத ஒன்று. மனிதன் தனது உடலுக்கு எண்ணை தேவையெனில்  அதை வேறு வழிகளில் பயன்படுத்தலாம். நாக்குக்கு ருசியாக எரியல் பொரியல் தேவையெனில் மாதத்தில் ஒருமுறையோ அல்லது நான்கு முறையோ எரித்து பொரித்து சாப்பிடலாம்.

உடல் செயற்பாட்டிற்கு கொலஸ்ரரோல் (கொழுப்பு அமிலங்கள்) மிக அவசியமானது. எல்லாவிதமான கொழுப்பையும் உடலால் உற்பத்தி செய்ய முடியாது. அத்தியாவசியமானவற்றை உணவின் மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ளலாம்.

1 hour ago, குமாரசாமி said:

நல்லெண்ணையையும் தேங்காயெண்ணையும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி நூறுவருடம் ஆரோக்கியமாக வாழ்ந்த சமுதாயத்திற்கு சுழல் கதிரையில் வாழும் சமுதாயம் சூரியகாந்தி எண்ணையை பரிந்துரை செய்கின்றார்கள். நல்லெண்ணை தேங்காயெண்ணை போன்றவைகள் பல வகைகளில் பிரயோசமானது.

மிகத் தவறான உதாரணம். இது உங்கள் கற்பனை. சரித்திரத்தில் அப்படி இல்லை, புள்ளி விபரங்களிலும் அவ்வாறு இல்லை இதற்கு எதிர்மாறாகவே உள்ளது (புள்ளி விபரங்களைச் சுழல் கதிரையிலிருந்து நானாக எழுதவில்லை😀 ). 

1 hour ago, குமாரசாமி said:

ஆனால் அன்று இல்லாத நோய்கள் ஏன் இன்று என கேட்டால் குச்சொழுங்கைக்குள் ஒதுங்கி விடுவார்கள்.

அன்றும் கொடிய நோய்கள் தோன்றின. சில நோய்கள் இன்று முற்றாக மறைந்துவிட்டன.

தவறான தகவல்களைப் பரப்பாமல் மனித சரித்திரத்தைக் கொஞ்சம் தெரிந்து கொண்டு இவை பற்றி எழுதலாமே. 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, இணையவன் said:

உடல் செயற்பாட்டிற்கு கொலஸ்ரரோல் (கொழுப்பு அமிலங்கள்) மிக அவசியமானது. எல்லாவிதமான கொழுப்பையும் உடலால் உற்பத்தி செய்ய முடியாது. அத்தியாவசியமானவற்றை உணவின் மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ளலாம்.

அதற்குத்தான் உண்ணும் உணவே மருந்து என எம் முன்னோர்கள் அன்றே கூறினார்கள். அவர்கள் இன்று போல் மருந்து மாத்திரைகளை உணவுக்கு சரிசமமாக எடுத்துக்கொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, இணையவன் said:

மிகத் தவறான உதாரணம். இது உங்கள் கற்பனை. சரித்திரத்தில் அப்படி இல்லை, புள்ளி விபரங்களிலும் அவ்வாறு இல்லை இதற்கு எதிர்மாறாகவே உள்ளது (புள்ளி விபரங்களைச் சுழல் கதிரையிலிருந்து நானாக எழுதவில்லை😀 ). 

எது தவறான உதாரணம்????
எது கற்பனை? எது சரித்திரம்?
புள்ளிவிபரங்களை தயாரித்தது எந்த வியாபாரிகள் என்று உங்களுக்கு தெரியுமா?
மனித வாழ்க்கையே வியாபாரமாகி விட்ட உலகில் இன்னும் புள்ளிவிபரம் அது இது என இங்கே பூச்சாண்டி காட்டாதீர்கள். இன்று உணவும் மருத்துவவும் முக்கிய வியாபார பொருள்.

இன்றைய உலகில் மண்ணாங்கட்டி புள்ளிவிபரங்கள். அவனவன்  என்னன்னெமோ தனக்கு தெரிஞ்சதை எழுதிப்போட்டு புள்ளி விபரம் என கதை விடுவான்கள். அதை தூக்கிக்கொண்டு இங்கு வருவீர்கள்.

இவ்வளவு அறிவுபூர்வமாக புள்ளிவிபரத்தோடு சிந்திப்பவர்களே உலகில் உள்ள நோய்களை அழிக்க முடியவில்லை.தடுப்பு மட்டுமே.....இயற்கை அழிவுகளையும் நிறுத்த முடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, இணையவன் said:

அன்றும் கொடிய நோய்கள் தோன்றின. சில நோய்கள் இன்று முற்றாக மறைந்துவிட்டன.

தவறான தகவல்களைப் பரப்பாமல் மனித சரித்திரத்தைக் கொஞ்சம் தெரிந்து கொண்டு இவை பற்றி எழுதலாமே. 

இங்கே தவறான தகவல்களை நான் பகிரவில்லை.
நான்/நாம் எம் மூதாதையர் வாழ்ந்த வாழ்க்கையை மட்டுமே கூறுகின்றோம்.
என் மூதாதையர் இறுக்கமான கட்டைக்களிசான் போட்டுக்கொண்டு ஓடவுமில்லை. கொழுப்பு கூடி விட்டதென கவலைப்படவுமிலை. வேலியில் படர்ந்த கொடி இலையினையும் போகத்திற்கு ஒதுக்குப்புற நிலத்தில் விளைந்த கீரையினையும் பல்வேறு வகையாக சமைத்து ரசித்து உருசித்து உண்டு மகிழ்ந்து நலமோடு வாழ்ந்ததை இங்கு பகிர்கின்றேன் அவ்வளவுதான்.உண்ணும் உணவிற்கேற்ப வேலை செய்தார்கள்.

 மண்ணாங்கட்டி புள்ளி விபரம் எடுப்பதற்கு முன் தேங்காய் எண்ணையும் நல்லெண்ணையும் யார் யார் உபயோகப்படுத்தினார்கள் என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். அதற்கு பின் புள்ளி விபரங்களை தயாரியுங்கள்.

சுழல் கதிரையில் சுழண்டு கொண்டு  தேங்காய்ப்புட்டுக்கு ஆசைப்படக்கூடாது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
On 22/8/2021 at 01:18, நியாயத்தை கதைப்போம் said:

நல்லெண்ணைய் விளம்பரத்துக்கு நடித்த ஒருவருக்கு 56வயதில் மாரடைப்பால் இறப்பு ஏற்படுகின்றது என்றால் அது எந்த பிராண்ட் என்று அறியத்தானே வேணும். இதயத்துக்கு நல்லது என்று சொல்லித்தானே நல்லெண்ணை விற்கின்றார்கள். இது ஒரு முரண்நகையாக தென்படவில்லையா? 🤔

அப்படி என்றால் இனி நல்லெண்ணெய் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுப்பவரை மருத்துவ பரிசோசனைக்கு உட்படுத்தி அவருக்கு மாரடைப்பு வரக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறதா? ஆரோக்கியமானவரா? வேறு வியாதிகள் இருக்க என ஆராய்ந்த பின்பு மருத்துவசான்றிதழ் கொடுத்த பின்புதான் விளம்பரத்தில் நடிக்கவேண்டும் இல்லையா? 

கஷ்டம்தான்

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, இணையவன் said:

தரப்படுத்தல் பற்றிச் சொன்னது கலப்படம் தொடர்பானதல்ல.

எண்ணைகளிலுள்ள கூடாத நல்ல (saturated - monounsaturated - polyunsaturated) கொழுப்புகளின் அளவு. 
சூரியகாந்தியை விட நல்லெண்ணையில் அதிகம் கூடாத கொழுப்பு உள்ளதால் நல்லெண்ணை பாவிப்பதால் கொலஸ்ரரோல் அதிகம் வர வாய்ப்புள்ளது. அதற்காக சூரியகாந்தி எண்ணையை அளவுக்கு அதிகம் பாவிக்க வேண்டாம். 🙂

இதோடா நீங்கள் சொல்லிட்டிங்கள் என்று நான் ஓடிப் போய் சூரியகாந்தி எண்ணெய் பாவிக்க போறேனாக்கும் 
கொஞ்ச காலத்திற்கு முன் வரை தே.எண்ணெய் , தே .பால் கொலஸ்ரோல் ,விஷம் என்று சொன்ன வெள்ளைக்காரன் இப்ப தங்கள் சூப்பர் மார்க்கெட்டில் அதை புரமோட் பன்றான் ...  தே.பாலில் கோப்பி போட்டு குடிக்கிறான்...இன்னம் கொஞ்ச நாளில் நல்லெண்ணெயையும் இப்படி புரமோட் பண்ணுவான் 

அது எல்லாம் இருக்கட்டும் கடலை எண்ணெய் பற்றி உங்கள் எல்லோரது அபிப்பிராயம் என்ன?
தலைப்பும் ,திரியும் திசை மாறுது 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

கொஞ்ச காலத்திற்கு முன் வரை தே.எண்ணெய் , தே .பால் கொலஸ்ரோல் ,விஷம் என்று சொன்ன வெள்ளைக்காரன் இப்ப தங்கள் சூப்பர் மார்க்கெட்டில் அதை புரமோட் பன்றான் ...  தே.பாலில் கோப்பி போட்டு குடிக்கிறான்...இன்னம் கொஞ்ச நாளில் நல்லெண்ணெயையும் இப்படி புரமோட் பண்ணுவான் 

வெள்ளைக்காரனிட்டை ஆயுர்வேதம், மசாஜ் எண்டு போனால் நல்லெண்ணை போத்திலோடை எல்லே நிக்கிறான்.😂

இப்பவெல்லாம் புள்ளி ராஜா விபரங்களோடை திரியிறவைக்கு தமிழர் வரலாறு உணவு பழக்கவழக்கங்கள் தெரியுமோ எண்டது சந்தேகமாயிருக்கு.....😎

21 hours ago, குமாரசாமி said:

இங்கே தவறான தகவல்களை நான் பகிரவில்லை.
நான்/நாம் எம் மூதாதையர் வாழ்ந்த வாழ்க்கையை மட்டுமே கூறுகின்றோம்.
என் மூதாதையர் இறுக்கமான கட்டைக்களிசான் போட்டுக்கொண்டு ஓடவுமில்லை.

முன்னோர் முன்னோர் என்று அடிக்கடி சொல்லுறியள் யார் அவையள் ? எப்ப வழ்ந்த ஆக்கள் ? 50=60 வருடங்கள், ஆயிரம் வருடங்கள், கீழடிக் காலம் அல்லது மில்லியன் வருடத்துக்கு முன் குமரிக் கண்டம் ? 

https://countryeconomy.com/demography/life-expectancy/sri-lanka

காலம் செல்லச் செல்ல மனித முன்னேற்றத்தில் பெற்றுக்கொண்ட அனுபவத்தினூடாக கருத்துக்களில் மாற்றங்களைக் கொண்டுதான் எல்லாமே வளர்ச்சியைக் கண்டிருக்கு. மாற்றங்கள் கணாத எல்லாமே வரலாற்றில் அழிவை நோக்கியே போகும். பழமை சீர்செய்யப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டியது. ஆனால் அதையே பிடிவாதமாகக்  கண்மூடித்தனமாகப் புகுத்துபவர்கள் தமது இனத்தின் இருப்புக்கு இடையூறாக இருப்பார்கள். 

21 hours ago, குமாரசாமி said:

மண்ணாங்கட்டி புள்ளி விபரம் எடுப்பதற்கு முன் தேங்காய் எண்ணையும் நல்லெண்ணையும் யார் யார் உபயோகப்படுத்தினார்கள் என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். அதற்கு பின் புள்ளி விபரங்களை தயாரியுங்கள்.

தேங்காய் எண்ணை பற்றி எனக்குத் தெரியாததை உங்கள் முன்னோர்கள் தெரிந்து கொண்டதைப் பகிர்ந்தால் பலருக்கும் பயனுடையதாக இருக்கும்.
மேலே கேட்ட உங்கள் முன்னோர்களின் காலம் பற்றி எழுதமுன் தென்னை உங்கள் ஊருக்கு வந்தது 6ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 😄

3 hours ago, ரதி said:

இதோடா நீங்கள் சொல்லிட்டிங்கள் என்று நான் ஓடிப் போய் சூரியகாந்தி எண்ணெய் பாவிக்க போறேனாக்கும் 
கொஞ்ச காலத்திற்கு முன் வரை தே.எண்ணெய் , தே .பால் கொலஸ்ரோல் ,விஷம் என்று சொன்ன வெள்ளைக்காரன் இப்ப தங்கள் சூப்பர் மார்க்கெட்டில் அதை புரமோட் பன்றான் ...  தே.பாலில் கோப்பி போட்டு குடிக்கிறான்...இன்னம் கொஞ்ச நாளில் நல்லெண்ணெயையும் இப்படி புரமோட் பண்ணுவான் 

அது எல்லாம் இருக்கட்டும் கடலை எண்ணெய் பற்றி உங்கள் எல்லோரது அபிப்பிராயம் என்ன?
தலைப்பும் ,திரியும் திசை மாறுது 
 
ரதி,
எதையுமே நீங்களாகவே ஆராய்ந்து தெளிவதுதான் நல்லது. உங்களிடம் இந்த எண்ணைதான் நல்லது என்ற கருத்தை நான் திணிக்கவில்லை. linolenic acid, stearic acid, oleic acid (சுருக்கமாகச் சொன்னால் கூடாத, நல்ல கொழுப்பு - omega 3, 6, 9) ஆகியவை எந்த எண்னையில் எந்த அளவு உள்ளது என்ன பயன் உள்ளது என்று கூகிளில் நீங்களே தேடி அறிந்து கொள்ளுங்கள். இது பற்றி நான் எழுதினால் உங்கள் அண்ணர் எனக்கெதிராகக் காவடி எடுக்கிறார். 🤣 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் செண்டிமெண்டலாக கொஞ்சம் கருத்துக்கள் எழுதி உள்ளார்கள்.

நல்லெண்ணைய் விளம்பரத்துக்கு நடித்தது பற்றி மேலே செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எனது புனைவு இல்லை.

விளம்பர நிறுவனங்கள் இப்படியான அனுசரணை செய்யும் தங்கள் மொடலுக்கு ஆயுள் பூராகவும், அல்லது சில பத்து வருடங்களுக்கு தமது தயாரிப்புக்களை நிறுவனங்கள் இனாமாக வழங்குவது வழமை.

ஒரு நிறுவனத்துக்கு மொடலாக வரும் விசயம் பின்னால் நிறைய உளவியல் உள்ளன. அந்த மொடல்கள் குறிப்பிட்ட பொருட்களை நிரந்தரமாக பயன்படுத்தவும், அதன் அமோக விசிறிகளாகவும் அமையவும் அதிக வாய்ப்புக்கள் உள்ளன. தாங்கள் விளம்பரப்படுத்திய தயாரிப்புக்களை அவர்கள் தமது ஆயுள் பூராகவும் அதிக அளவில் பயன்படுத்த வாய்ப்புக்கள் அதிகமே உள்ளன. இது அவர்களுக்கு ஒருவித பெருமையை, மனத்திருப்தியை தரக்கூடும். இதனால், குறிப்பிட்ட தாயாரிப்புக்கு அடிமையாகக்கூட முடியும்.

சரி இனி மாரடைப்புக்கு வருவோம். ஐம்பத்து ஆறு வயதில் மாரடைப்பு வந்தததற்கு  நீண்ட காலமாக முப்பது வயதில் இருந்து பயன்படுத்திய ஒரு எண்ணை பொருள் காரணமாக அமையாது என்று சொல்வதற்கு எதுவித முகாந்திரமும் இல்லை. 

சும்மா எழுத வேண்டும் என்பதற்காக எதையும் எழுதக்கூடாது. 

முடியுமானால் மறைந்த நடிகையின் குறிப்பிட்ட வர்த்த விளம்பரத்தை இங்கு இணையுங்கள், பார்ப்போம்.

வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

விளம்பர நிறுவனங்கள் இப்படியான அனுசரணை செய்யும் தங்கள் மொடலுக்கு ஆயுள் பூராகவும், அல்லது சில பத்து வருடங்களுக்கு தமது தயாரிப்புக்களை நிறுவனங்கள் இனாமாக வழங்குவது வழமை.

அந்த நிறுவனம் இனாமாக… வழங்கும் பொருட்களை, அவர் தனது நண்பர்கள் உறவினர்களுக்கு கொடுக்காமல் அவர்தான் தனிய… சமைக்க   பாவிக்கிறார் என்பதற்கு, ஒரு உத்தரவாதமும் இல்லையே.   😎

இல்லாவிடில் அந்த நிறுவனம் அவரது சமையலறையில்… என்ன எண்ணை பாவிக்கிறார் என்று கண்காணித்துக் கொண்டிருக்குமா. 😁

மாரடைப்பு… இப்போது, பொதுவான அறிகுறி. அதற்கு இந்த எண்ணைதான் காரணம் என்று… பொத்தாம் பொதுவாக நீங்கள் சொல்வது அபத்தம். 

இந்த எண்ணையை… பாவிக்கும் ஒரு அப்புவும், ஆச்சியும்… 100 வயது தாண்டியும் சுக ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பதுவும்,  சகிப்புத் தன்மை என்றால் மில்லி கிராம் என்ன விலை என்று கேட்பதுவும்,  மற்றையோருக்கு படிப்பித்தே தீருவேன் என்று கடும் போக்கில் இருப்பதுவும் யாழ் களத்தில் மட்டுமன்றி ஏனைய "ஏனப்பு" தொடக்கம் அனைத்து குழுக்களிலுமே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

 மூன்றாம் நான்காம் ஐந்தாம் அலைகளுக்கும் இதுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று அறிந்தவர்கள் சொல்லக் கூடும் .. 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/8/2021 at 18:28, தனிக்காட்டு ராஜா said:

மாரடைப்பு திடீர் என வருவது தானே சொல்லிக்கொண்டா வரும் சிலர் தப்புவார்கள் சிலர் போய்விடுவார்கள் 

வெளிநாட்டில் எம்மவர்கள் நல்லெண்ணை தான் இதயத்திற்கு நல்லது பாதுகாப்பானது என்று சொல்கிறார்கள். அதற்கு இந்த நடிகையின் விளம்பரம் தான் காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎23‎-‎08‎-‎2021 at 21:10, இணையவன் said:

ரதி,
எதையுமே நீங்களாகவே ஆராய்ந்து தெளிவதுதான் நல்லது. உங்களிடம் இந்த எண்ணைதான் நல்லது என்ற கருத்தை நான் திணிக்கவில்லை. linolenic acid, stearic acid, oleic acid (சுருக்கமாகச் சொன்னால் கூடாத, நல்ல கொழுப்பு - omega 3, 6, 9) ஆகியவை எந்த எண்னையில் எந்த அளவு உள்ளது என்ன பயன் உள்ளது என்று கூகிளில் நீங்களே தேடி அறிந்து கொள்ளுங்கள். இது பற்றி நான் எழுதினால் உங்கள் அண்ணர் எனக்கெதிராகக் காவடி எடுக்கிறார். 🤣 

உங்கள் கருத்திற்கு நன்றி ...நான் கடையில் வெஜிடபிள் எண்ணையையும், சூரிய காந்தி எண்ணையையும்  ஒப்பிட்டு பார்த்தேன் ...பெரிதாய் வித்தியாசம் இல்லை[ .அல்லது வடியாய் பார்க்கவில்லையோ தெரியாது  :unsure:]
நல்லெண்ணையில் மீன்,இறைச்சி வகைகள் பொறிக்க முடியாது ....அவற்றை  இதில் ஏதாவது எண்ணையில் தான் பொறிக்க வேண்டும் .
எந்த எண்ணையாயிருந்தாலும் ஒருக்கால் பொரித்தவுடன் தூக்கி போட்டு விடோணும் .திரும்ப ,திரும்ப பாவிப்பதால் தான் வருத்தங்கள் வருகின்றன. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.