Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கே.டி. ராகவன்

பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்

தாம் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் செயல்பாடு காணொளியொன்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தாம் வகித்து வந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் கே.டி. ராகவன். தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திக்கப்போதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள இடுகைகளில்,, "தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யார் என்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடங்களாக எந்த ஒரு பிரதிபலனுமின்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில் என்னை பற்றி ஒரு காணொளி வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த அந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜிநாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு பா.ஜ.கவின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றதன் மூலம் மாநிலம் அளவிலான அரசியல் உலகில் பரவலாக அறியப்பட்டவர். இந்த நிலையில் இன்று காலையில், மதன் டைரீஸ் என்ற யு டியூப் சேனலில், கே.டி. ராகவன் மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி காணொளி ஒன்று வெளியானது. இந்த யூட்யூப் பக்கத்தை நடத்தி வருபவர். கடந்த ஆண்டு அக்போடர் மாதம் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தவர். கே.டி. ராகவன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை சுமத்தும் அந்த நபர், இதுபோல மேலும் சில கட்சிப் பிரமுகர்கள் ஈடுபடுவதாகவும் அவற்றை ஒரு பத்திரிகையாளராக வெளியிடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

சட்டை அணியாத ஒரு நபர் பூஜை அறையில் அமர்ந்தபடி பெண்களை காணொளி அழைப்பில் தொடர்பு கொண்டு, ஆபாச செயல்களில் ஈடுபடுவதாக அந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அந்த காணொளி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் ஒப்புதலுடன்தான் வெளியிடப்படுவதாகவும் அந்த யு டியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்ட நிலையில், கே.டி. ராகவன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-58315089

  • Replies 161
  • Views 9.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

பாலியல் காணொளி சர்ச்சை

ராகவன் செய்தது குற்றமோ சிறித்தம்பி? 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை… கக்கூசுக்குள் இருந்து செய்யிறதை…. சாமி அறைக்குள் இருந்து செய்யததுதான் குற்றம். 😂

மற்றும் படி ஓகே. பாவம் அந்த மனுசன், ஒரு செம்பிலை… எத்தினை நாள்தான் பால் குடிக்கிறது? 🤣

காணொயில்…  அவருடைய வாய் நெளிப்பு, சொண்டு கடித்தல், கண் சொருகல்…. எல்லாத்தையும் பார்க்க, சில்க் ஸ்மிதா… மாதிரி இருந்திச்சு. 😍

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை… கக்கூசுக்குள் இருந்து செய்யிறதை…. சாமி அறைக்குள் இருந்து செய்யததுதான் குற்றம். 😂

மற்றும் படி ஓகே. பாவம் அந்த மனுசன், ஒரு செம்பிலை… எத்தினை நாள்தான் பால் குடிக்கிறது? 🤣

ஓம் சிறித்தம்பி நீங்கள் சொல்லுறதும் சரிதான்........எண்டாலும் சிறித்தம்பி சிலோன் ,தமிழ்நாட்டிலையெல்லாம் கூடுதலாய் சாமியளை வைச்சு கும்பிடுற அறையை தானே படுக்கை அறையாயும் வைச்சிருக்கினம். அங்கை நடக்காத கூத்துக்களை விடவே கேடி ராகவன் காட்டீட்டார்? 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஓம் சிறித்தம்பி நீங்கள் சொல்லுறதும் சரிதான்........எண்டாலும் சிறித்தம்பி சிலோன் ,தமிழ்நாட்டிலையெல்லாம் கூடுதலாய் சாமியளை வைச்சு கும்பிடுற அறையை தானே படுக்கை அறையாயும் வைச்சிருக்கினம். அங்கை நடக்காத கூத்துக்களை விடவே கேடி ராகவன் காட்டீட்டார்? 😁

குமாரசாமி அண்ணை…  சும்மா சொல்லாதேங்கோ. சிலோனிலை, நான் இப்பிடி கேள்விப் படவே இல்லை.

வீடியோ… ஆதாரம் காட்டினால் தான், நான் நம்புவன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இராகவன் எந்த அறையில் இருந்து என்ன செய்தாலும் அது அவர் இஸ்டம்.

ஆனால் கட்சியில் பதவி உயர்வு கேட்டு போன் பண்ணிய ஒரு பெண்ணுக்கு வீடியோ காலில் தன் செயல்களை காட்டியதுதான் - அநாகரிகம் மட்டும் அல்ல பாலியல் துன்புறுத்தலும் கூட.

ஆனால் அந்த பெண் இதை விரும்பினாரா, இல்லையா என்பது ஒலியை கட் பண்ணியதால் விளங்கவில்லை.

அவரும் சம்மதித்தே நடந்திருந்தால் - இது தனியார் விடயம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் பார்க்காமல் என்னால கருத்து சொல்ல முடியாது... இந்த வீடியோவை மொத்தமாகவும் சில்லறையாகவும் எங்கே பார்க்கலாம்??

4 minutes ago, Sasi_varnam said:

இதெல்லாம் பார்க்காமல் என்னால கருத்து சொல்ல முடியாது... இந்த வீடியோவை மொத்தமாகவும் சில்லறையாகவும் எங்கே பார்க்கலாம்??

ஒரு ஆண் சுய இன்பத்தில் திளைப்பதையெல்லாம் ஏன் மினக்கெட்டு பார்க்க போகின்றீர்கள் ?

5 minutes ago, Sasi_varnam said:

இதெல்லாம் பார்க்காமல் என்னால கருத்து சொல்ல முடியாது... இந்த வீடியோவை மொத்தமாகவும் சில்லறையாகவும் எங்கே பார்க்கலாம்??

பக்கத்து இலைக்குப் பாயாசமாம் 😜

2 hours ago, goshan_che said:

இராகவன் எந்த அறையில் இருந்து என்ன செய்தாலும் அது அவர் இஸ்டம்.

ஆனால் கட்சியில் பதவி உயர்வு கேட்டு போன் பண்ணிய ஒரு பெண்ணுக்கு வீடியோ காலில் தன் செயல்களை காட்டியதுதான் - அநாகரிகம் மட்டும் அல்ல பாலியல் துன்புறுத்தலும் கூட.

ஆனால் அந்த பெண் இதை விரும்பினாரா, இல்லையா என்பது ஒலியை கட் பண்ணியதால் விளங்கவில்லை.

அவரும் சம்மதித்தே நடந்திருந்தால் - இது தனியார் விடயம்தான்.

எனது கருத்தும் இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌ர் ஊட‌க‌ங்க‌ளில் தான் ஒழுக்க‌மான‌வ‌ன் பெண்க‌ளை பெரிதும் ம‌திப்ப‌வ‌ர் போல் வார்த்தையால் அள்ளி விடுவார்.............பல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் என்ற‌துக்கு இவ‌ர் ஒரு உதார‌ன‌ம்

இந்த‌ தேர்த‌லில் கிடைச்ச‌ 4சீட்டுக்கும் ஆப்பு வைச்சு விட்டியே ராக‌வ‌ன் ஹா ஹா 

  • கருத்துக்கள உறவுகள்

இதை இப்படியும் சொல்கிறார்கள்.

மதன் ஒரு திமுக ஸ்லீப்பர் செல்லாம்.

பிஜேபியில் சேர்ந்து உள்விவகாரங்களை அறிந்து, ஆப்படித்தாராம்.

அண்ணாமலைக்கு இதை முன் கூட்டியே சொன்னதும், அண்ணாமலையை trap பண்ணத்தானாம். அண்ணாமலை வெளியிடவேண்டாம் என மறுத்தால் அவரும் சேர்ந்து மூடி மறைத்தார் என்றாகும்.

வெளியிட சொன்னால் (இப்போ சொன்னது போல) ராகவனை காட்டி கொடுத்ததது ஆகும்.

இன்னொரு புறம் - இது அண்ணாமலையின் சதி - ராகவன் அவரை தலைவராக்குவதை எதிர்த்தார் - மதனையும் அந்த பெண்ணையும் விசாரிக்க வேண்டும் என்கிறனர் திமுகவினர்.

பிகு

ராகவனுக்கே இந்த நிலை என்றால்…..🤣

  • கருத்துக்கள உறவுகள்

 அண்ணாவிலிருந்து கருணாநிதி எம்ஜிஆர் ஸ்டாலின்வரை தமிழகத்தின் முதல்வர்களுட்பட்ட பல அரசியல்வாதிகளே  முறையற்ற எண்ணற்ற பெண்கள் சகவாசம் , பாலியல் சீண்டல் முறைகேடுகளில் திளைத்தவர்கள்தான்.

இவர் தமிழகத்தில் பலமற்ற கட்சி என்பதால் மாட்டிக்கொண்டார், கடந்த ஆட்சியில் அமைச்சர் ஜெயகுமார் என்பவர் தன்னை வேலை விசயமாக சந்திக்க வந்த மகள் வயசில் உள்ள பெண்ணை தாயாக்கி அவர் கையில் ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு , அந்த பெண் புகாரளிக்க அதுக்கும் தனக்கும் சம்பந்தமில்லையென்று சொல்லி அந்த பெண் இப்போது எங்கேயிருக்கிறார் என்று யாருக்குமே தெரியாத அளவிற்கு தலைமறைவாக வாழ வைத்துவிட்டார்கள்.

 ரஜனியுடன் நடிகை லதா நெருக்கமாக போவதை கடுமையாக எதிர்த்த அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் அந்த வயசிலும் டென்சனாகி ரஜனியை அடித்ததாகவும் சொல்கிறார்கள்,

அதேகாலகட்டபகுதியில், மனோரமாவின் மகன் ஒரு ஐயர் பெண்ணை காதலித்ததுக்காக அவரை வீட்டுக்கு கூப்பிட்டே மிரட்டியதாகவும் பின் பெண்ணை உடனடியாக வேறு இடத்தில் கட்டிவைக்க செய்ததாகவும் மனோரமாவின் மகன் பெரும்குடிகாரனாவதுக்கு அதுவும் ஒரு காரணம் என்று மூத்த சினிமாக்காரர் கலைஞானம் ஒரு பேட்டியில் சொல்கிறார். 

ஜெயலலிதாவின் மரணம் சம்பந்தமாக  திமுக சார்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பேசும் அளவிற்கு அதிமுகவின் கடந்தகால ஆட்சி தவறுகளை சுட்டிக்காட்டும் ஸ்டாலின் அமைச்சர் ஜெயகுமார் விசயத்தை தொடவேயில்லை, ஏனென்றால் அதுபற்றி பேசபோனால் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிவதுமாதிரி அவரோட கடந்த காலமும் சந்திக்கு வரும் என்பதாலோ என்னமோ.

Edited by valavan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, valavan said:

அண்ணாவிலிருந்து கருணாநிதி எம்ஜிஆர் ஸ்டாலின்வரை தமிழகத்தின் முதல்வர்களுட்பட்ட பல அரசியல்வாதிகளே  முறையற்ற எண்ணற்ற பெண்கள் சகவாசம் , பாலியல் சீண்டல் முறைகேடுகளில் திளைத்தவர்கள்தான்.

கொஞ்ச நாளாய் டிவிட்டர் குஞ்சுகள் சீமான் -விசயலச்சுமி விசயத்திலும் நீட்டி நிமித்தி விளாசிக்கொண்டிருந்தினம். நானும் நீங்கள் சொன்னதை எடுத்து விட்டன் ஆக்கள் இப்ப கப்சிப்.......😎

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழ்நாட்டில் பாலியல் ஒழுக்கமின்மை ஒன்றும் பெரிய உயிர் போற மேட்டர் இல்லை.

மக்களும் தலைவர்களிடம் அதை எதிர்பார்ப்பதுமில்லை.

நான் “ரொம்ப நல்லவன்”, என்று ஏனையோரை எல்லாம் வாங்கோ வாங்கெண்டு வாங்கி, புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டமைக்கிறோம் என கூவியவர்கள் அவர்களும் அப்படி ஒரு பாலியல் புகாரில் மாட்டும் போதுதான் - அது பேசு பொருளாகிறது.

அதனால்தான் ஸ்டாலின், கருணாநிதி, எம்ஜிஆரை, அண்ணாவை ஒரு தராசிலும், ராகவன், சீமான் போன்றோரை இன்னொரு தராசிலும் நிறுக்கிறார்கள்.

இங்கே பேசு பொருள் பாலியல் ஒழுக்கமின்மை என்பதை விட, ஹிப்போகிரசி எனப்படும் இரட்டை நிலைப்பாடு. 

26 minutes ago, valavan said:

ஆனாலும் நீங்க ஒரு தேசிய கட்சிய சின்ன கட்சி என்று சொல்லி இருக்கப்படாது 🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

உண்மையில் தமிழ்நாட்டில் பாலியல் ஒழுக்கமின்மை ஒன்றும் பெரிய உயிர் போற மேட்டர் இல்லை.

மக்களும் தலைவர்களிடம் அதை எதிர்பார்ப்பதுமில்லை.

நான் “ரொம்ப நல்லவன்”, என்று ஏனையோரை எல்லாம் வாங்கோ வாங்கெண்டு வாங்கி, புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டமைக்கிறோம் என கூவியவர்கள் அவர்களும் அப்படி ஒரு பாலியல் புகாரில் மாட்டும் போதுதான் - அது பேசு பொருளாகிறது.

அதனால்தான் ஸ்டாலின், கருணாநிதி, எம்ஜிஆரை, அண்ணாவை ஒரு தராசிலும், ராகவன், சீமான் போன்றோரை இன்னொரு தராசிலும் நிறுக்கிறார்கள்.

இங்கே பேசு பொருள் பாலியல் ஒழுக்கமின்மை என்பதை விட, ஹிப்போகிரசி எனப்படும் இரட்டை நிலைப்பாடு. 

பிகு

ஆனாலும் நீங்க ஒரு தேசிய கட்சிய சின்ன கட்சி என்று சொல்லி இருக்கப்படாது 🤣

பிரோ
விஜ‌ல‌ச்சுமி எத்த‌னை பேரை காத‌லித்தா அவாவை எத்த‌னை பேர் ஏமாத்தினார்க‌ள் அல்ல‌து அவவாள் ஏமாத்த‌ ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எத்த‌னை பேர் என்று தெரிந்து வைத்து விட்டு எழுதுங்கோ..........

ராக‌வ‌னை அண்ண‌ன் சீமானோடு ஒப்பிடாதீர்க‌ள்...............திரும‌ண‌ம் ஆகி 50வ‌ய‌தாகி ராக‌வ‌ன் காம‌வெறியாட்ட‌ட‌ம் செய்கிறார்

அண்ண‌ன் சீமான் திரும‌ண‌ம் செய்து அமைதியான‌ குடும்ப‌ வாழ்க்கை வாழுகிறார்............திரும‌ண‌த்தை கூட‌ ர‌க‌சிய‌மாய் செய்ய‌ வில்லை ப‌ல‌ ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ள் ம‌த்தியில் வெளிப்ப‌டையாய் செய்தார்

ஊட‌க‌ங்க‌ள் முன் அர‌ பையித்திய‌ம் போல் விஜ‌ல‌ச்சுமி பேட்டி குடுப்ப‌தை பார்க்க‌ , விஜ‌ல‌ச்சுமியை யாரோ பின்னுக்கு நின்று இய‌க்குவ‌து வெளிப்ப‌டையாய் தெரியுது............

இந்த‌ நூற்றாண்டில் நாம் காத‌லிச்ச‌ பிள்ளையோ அல்ல‌து ந‌ம்ம‌ல‌ காத‌லிச்ச‌ பிள்ளையா இருந்தாலும் ச‌ரி எங்க‌ளுக்குள்   ஒத்து வ‌ராம‌ல் பிரிந்து அவ‌ர்க‌ள் வேறு திரும‌ண‌ம் செய்து குடும்ப‌ வாழ்க்கைக்கு போனா பிற‌க்கு அவ‌ர்க‌ளை நாம் விம‌ர்சிப்ப‌து அழ‌க‌ல்ல‌ பிரோ 

அண்ண‌ன் சீமானின் வாழ்க்கை திரும‌ண‌த்துக்கு முன்பு பின்பு என்று பார்த்தா இந்த‌ பிக்காலி ராக‌வ‌னோடு அண்ண‌ன் சீமானை ஒப்பிட‌ மாட்டிர் பிரோ 😁😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கொஞ்ச நாளாய் டிவிட்டர் குஞ்சுகள் சீமான் -விசயலச்சுமி விசயத்திலும் நீட்டி நிமித்தி விளாசிக்கொண்டிருந்தினம். நானும் நீங்கள் சொன்னதை எடுத்து விட்டன் ஆக்கள் இப்ப கப்சிப்.......😎

யோ தாத்தா உங்களின் இந்த ப‌திவை பார்க்க‌ முந்தி உங்க‌ளுட‌ன் போனில் க‌தைச்ச‌து  தான் நினைவுக்கு வ‌ருது

ஆமைக் கறி ஏக்கே எடு ப‌டாட்டி , க‌ட‌சியில் அவ‌ர்க‌ள் பாவிக்கும் ஆயுத‌ம் ந‌டிகை விஜ‌ல‌ச்சுமி  ஹா ஹா 😁😀

அதுவும் ஊட‌க‌த்துக்கு முன்னால் உள‌றி போட்டு போகும் , பிற‌க்கு கொஞ்ச‌ இடைவெளி விட்டிட்டு மீண்டும் வ‌ந்து சீமான் சீமான் என்று உள‌றி போட்டு போவா அமோன்ட் தேவை எல்லோ 😁😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

பிகு

ராகவனுக்கே இந்த நிலை என்றால்…..🤣

அது தானே கூடப்பிறந்த ராகவனையே இந்த தூக்கு தூக்குகிறார்கள் என்றால் சீமானை சும்மாவா விடுவார்கள்.....? 😁

மொட்டையில் கூந்தல் தேட மாட்டார்களா என்ன? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

தாமரையை தமிழ் நாட்டில் மலர விட்ட அந்த நான்கு தொகுதி மக்களுக்கும் இந்த திட்டம் தொடரும் என அறிவிக்க படுகிறது.

Quote

உண்மையில் தமிழ்நாட்டில் பாலியல் ஒழுக்கமின்மை ஒன்றும் பெரிய உயிர் போற மேட்டர் இல்லை.

மக்களும் தலைவர்களிடம் அதை எதிர்பார்ப்பதுமில்லை.

நான் “ரொம்ப நல்லவன்”, என்று ஏனையோரை எல்லாம் வாங்கோ வாங்கெண்டு வாங்கி, புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டமைக்கிறோம் என கூவியவர்கள் அவர்களும் அப்படி ஒரு பாலியல் புகாரில் மாட்டும் போதுதான் - அது பேசு பொருளாகிறது.

அதனால்தான் ஸ்டாலின், கருணாநிதி, எம்ஜிஆரை, அண்ணாவை ஒரு தராசிலும், ராகவன், சீமான் போன்றோரை இன்னொரு தராசிலும் நிறுக்கிறார்கள்.

இங்கே பேசு பொருள் பாலியல் ஒழுக்கமின்மை என்பதை விட, ஹிப்போகிரசி எனப்படும் இரட்டை நிலைப்பாடு. 

உங்களின் ஹிப்போகிரசி எனப்படும் இரட்டை நிலைப்பாடு என வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அது தானே கூடப்பிறந்த ராகவனையே இந்த தூக்கு தூக்குகிறார்கள் என்றால் சீமானை சும்மாவா விடுவார்கள்.....? 😁

மொட்டையில் கூந்தல் தேட மாட்டார்களா என்ன? 🤣

ஐயோ அண்ணை. ராகவனுக்கே இந்த நிலமை என்றால், இல கணேசனின் ( பலே கில்லாடி) நிலைமை என்ன எண்டுதான் நான் சொல்ல வந்தேன்.

நீங்கள் ஏன் பாவம் சீமானை கோத்து விடுறியள் 🤣.

7 hours ago, பையன்26 said:

பிரோ
விஜ‌ல‌ச்சுமி எத்த‌னை பேரை காத‌லித்தா அவாவை எத்த‌னை பேர் ஏமாத்தினார்க‌ள் அல்ல‌து அவவாள் ஏமாத்த‌ ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எத்த‌னை பேர் என்று தெரிந்து வைத்து விட்டு எழுதுங்கோ..........

ராக‌வ‌னை அண்ண‌ன் சீமானோடு ஒப்பிடாதீர்க‌ள்...............திரும‌ண‌ம் ஆகி 50வ‌ய‌தாகி ராக‌வ‌ன் காம‌வெறியாட்ட‌ட‌ம் செய்கிறார்

அண்ண‌ன் சீமான் திரும‌ண‌ம் செய்து அமைதியான‌ குடும்ப‌ வாழ்க்கை வாழுகிறார்............திரும‌ண‌த்தை கூட‌ ர‌க‌சிய‌மாய் செய்ய‌ வில்லை ப‌ல‌ ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ள் ம‌த்தியில் வெளிப்ப‌டையாய் செய்தார்

ஊட‌க‌ங்க‌ள் முன் அர‌ பையித்திய‌ம் போல் விஜ‌ல‌ச்சுமி பேட்டி குடுப்ப‌தை பார்க்க‌ , விஜ‌ல‌ச்சுமியை யாரோ பின்னுக்கு நின்று இய‌க்குவ‌து வெளிப்ப‌டையாய் தெரியுது............

இந்த‌ நூற்றாண்டில் நாம் காத‌லிச்ச‌ பிள்ளையோ அல்ல‌து ந‌ம்ம‌ல‌ காத‌லிச்ச‌ பிள்ளையா இருந்தாலும் ச‌ரி எங்க‌ளுக்குள்   ஒத்து வ‌ராம‌ல் பிரிந்து அவ‌ர்க‌ள் வேறு திரும‌ண‌ம் செய்து குடும்ப‌ வாழ்க்கைக்கு போனா பிற‌க்கு அவ‌ர்க‌ளை நாம் விம‌ர்சிப்ப‌து அழ‌க‌ல்ல‌ பிரோ 

அண்ண‌ன் சீமானின் வாழ்க்கை திரும‌ண‌த்துக்கு முன்பு பின்பு என்று பார்த்தா இந்த‌ பிக்காலி ராக‌வ‌னோடு அண்ண‌ன் சீமானை ஒப்பிட‌ மாட்டிர் பிரோ 😁😀

நீங்கள் சொல்வதில் ஒரு நியாயம் உண்டு. சீமான் யாரையும் பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லைத்தான். ராகவனை போல் திருமணம் ஆன பின்பும் பாலியல் லஞ்சம் கோரியதாக தெரியவில்லை.

அதே போல் விஜய லக்சுமியுடன் அவர் லுவிங் டு கெதர் செய்து பின்னர் மன முறிவு ஏற்பட்டது (கந்தர்வ மணம் எளிய தமிழ் பிள்ளைகள் செய்ததுதானே, சங்க காலத்தில் கூட🤣).

அது ஒரு முன்னாள் காதலியின் புலம்பல், விஜய லச்சுமி முன்னுக்கு பின் முரணாக பேசுபவர் என்பதையும் நான் ஏற்கிறேன்.

இருவரையும் ஒப்பிட்டது - இருவரும் ஏதோ ஒரு வகையில் பாலியல் புகாரில் சிக்கினார்கள் - அப்படி சிக்கும் வரை உத்தமர் போல பேசினார்கள் என்பதை மட்டும் வைத்தே.

4 hours ago, nunavilan said:

உங்களின் ஹிப்போகிரசி எனப்படும் இரட்டை நிலைப்பாடு என வர வேண்டும்.

எனது நிலைப்பாட்டை மேலே விளக்கியுள்ளேன்.

இது எனது நிலைப்பாடு கூட இல்லை -

பெரியார்-அண்ணா-கருணாநிதி-எம்ஜிஆர்-ஜெயா வின் பாலியல் ஒழுக்கமின்மையை கண்டு கொள்ளாத தமிழ்நாட்டு பரப்பு, ஏன் சீமான், ராகவன் போன்றோரை மட்டும் நோண்டுகிறது என்பதற்கான எனது அறிவுக்கு எட்டிய வியாக்கியானமே அது. 

எனது வியாக்கியானம் பிழை என வாதிடலாம், ஆனால் இதில் எங்கே ஹிப்போகரசி வந்தது என்றுதான் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

எனது வியாக்கியானம் பிழை என வாதிடலாம், ஆனால் இதில் எங்கே ஹிப்போகரசி வந்தது என்றுதான் புரியவில்லை.

விரல் சூப்பியாக இருப்பதாக நடிக்கிறீர்கள்.
சீமான்,விஜயலக்சுமி எனும் தலைப்புக்கு கீழ் திரியை மூடும் அளவுக்கு தலையில் தேங்காயை அடிக்காத குறையாக நக்கல்கள். நளினங்கள், எள்ளல்கள் என சொல்லி வேலை இல்லை.
ராகவனுக்கு இன்னுமொரு முறையும் அவர் செய்யலாம் என்ற அளவில் எழுதுவது. இப்போ நீங்கள் யார்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

பெரியார்-அண்ணா-கருணாநிதி-எம்ஜிஆர்-ஜெயா வின் பாலியல் ஒழுக்கமின்மையை கண்டு கொள்ளாத தமிழ்நாட்டு பரப்பு, ஏன் சீமான், ராகவன் போன்றோரை மட்டும் நோண்டுகிறது என்பதற்கான எனது அறிவுக்கு எட்டிய வியாக்கியானமே அது. 

அன்று ஊடக கட்டுப்பாடு இருந்தது. எதை வெளியே சொல்ல வேண்டும் எதை வெளியே சொல்லக்கூடாது என்ற இங்கிதம் இருந்தது. இன்று வீட்டுக்கொரு ஊடகம். அவர்கள் தங்களை முன்னிலைப்படுத்த கேவல செய்திகளையும் முக்கிய செய்திகளாக பிரசுரிப்பார்கள்.

ஒரு விசயம் தெரியுமோ நானும் ஊடகவியாளன்.
இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்....

கோசானுக்கும் தமன்னாவுக்கும் ஒருகாலத்தில் கிசு சிசு இருந்தது யாவரும் அறிந்ததே.🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒரு விசயம் தெரியுமோ நானும் ஊடகவியாளன்.
இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்....

கோசானுக்கும் தமன்னாவுக்கும் ஒருகாலத்தில் கிசு சிசு இருந்தது யாவரும் அறிந்ததே.🤣

நானும்… இந்த விசயத்தை, வேறு ஒரு பத்திரிகை மூலம் கேள்விப் பட்டனான். 😂 🤣

அப்ப நம்பவில்லை. இப்ப நம்புகின்றேன். 😁😁😁😁😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒரு விசயம் தெரியுமோ நானும் ஊடகவியாளன்.
இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்....

யூடியூப்ல வீடியோ ஏத்துறவை எல்லாம் ஊடகவியலாளர் எண்டால்,

யாழில் ஆண்டுகணக்கில் எழுதும் நீங்கள் மூத்த ஊடகவியளாலர் அண்ணை.

இவ்வண்ணம்,

பயிலுனர் நிருபர் கோஷான்🤣

1 hour ago, குமாரசாமி said:

கோசானுக்கும் தமன்னாவுக்கும் ஒருகாலத்தில் கிசு சிசு இருந்தது யாவரும் அறிந்ததே.🤣

தமன்னாவை தவிர யாவரும் அறிந்த செய்தியாயிற்றே இது 🤣.

அது ஒரு காலம் -

தயிர் சட்டிக்குள் விழுந்த தேள் போல,

கரும்பலகையின் சாக் துகள்கள் போல,

எழுபதுகளின் டீவி திரை போல,

நானும் தம்மியும் ரம்மி ஆடிய ரம்யமான காலம்🤣.

20 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப நம்பவில்லை. இப்ப நம்புகின்றேன். 😁😁😁😁😁

நானே நம்புறன் உங்களுக்கு என்ன🤣.

  • கருத்துக்கள உறவுகள்

இது ராகவன் சாரின் தனிப்பட்ட ஒரு விடயம். குறை நிறை சொல்லுவதுக்கு எதுவும் இல்லை. ஆனாலும் டீவி விவாதங்கள் மூலம் தனக்கென நல்லதொரு இடத்தினை பெற்றிருந்தவர். எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டார். மேலும் அவரும் நானும் என்ற புதிய தலைமுறை நிகழ்ச்சியில் இவரின் மனைவி தன்னிடம் நடனம் பயிலவரும் மாணவிகளை இவர் ஏறெடுத்து பார்க்கவும் மட்டார் என்று சொல்லியிருக்கிறார். எல்லாமே போச்சு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.