Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக. 27) சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொறியியல் படிப்பு படிக்கத் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர்களுக்கு அனைத்து விடுதிக் கட்டணம், கல்விக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும்.

மேலும், வேளாண், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பிலும், மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர்களுக்கு அனைத்து விடுதிக் கட்டணம், கல்விக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும்.

முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து முகாம் வாழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்கும். இதற்காக ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களில் ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக, 750 மாணவர்கள் அரசு மற்றும் பிற கல்லூரிகளில் கலை, அறிவியல், மற்றும் பட்டயம் உள்ளிட்ட தொழில் படிப்புகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்வி உதவித்தொகை போதுமானதாக இல்லை என அறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.2,500, இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ரூ.3,000, இளநிலை தொழில் சார்ந்த படிப்புகளுக்கு ரூ.5,000 என, கல்வி உதவித்தொகையாக ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது.

இனி, பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.10,000, இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ரூ.12,000, இளநிலை தொழில் சார்ந்த படிப்புகளுக்கு ரூ.20,000 என உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.1 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | MK Stalin on srilankan refugees - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்க வேண்டிய விஷயம்.நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள், கல்வி உதவி, பணக்கொடை அதிகரிப்பு - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உள்பட பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கைத் தமிழர்களுக்கென பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

முக்கியமான பத்து அறிவிப்புகள்:

1. முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். இதில் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் கட்டுவதற்கு, நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2. முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதைத் தவிர, ஆண்டுதோறும், இது போன்ற வசதிகளை செய்து தர ஏதுவாக, இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கல்வி உதவிகள் அதிகரிப்பு

3. பொறியியல் படிப்புக்குத் தேர்ச்சிபெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில், முதல் 50 மாணவர்களுக்கு, அனைத்துக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும். மேலும், வேளாண் / வேளாண் பொறியியல் பட்டப் படிப்பிலும் மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 மாணவர்களுக்கும், மேற்சொன்ன கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். அதுமட்டுமின்றி, முதுநிலைப் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து முகாம்வாழ் மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ளும்.

4. முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களில் ஆண்டொன்றுக்குத் தோராயமாக, 750 மாணவர்கள் அரசு மற்றும் பிற கல்லூரிகளில் கலை, அறிவியல் மற்றும் பட்டயம் உள்ளிட்ட தொழிற்படிப்புகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படக்கூடிய கல்வி உதவித்தொகை (Scholarship) போதுமானதாக இல்லை என அறியப்பட்டுள்ளது. இனி பாலிடெக்னிக் படிப்பிற்கு 10 ஆயிரம் ரூபாய்; இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பிற்கு 12 ஆயிரம் ரூபாய்; இளநிலை தொழில்சார்ந்த படிப்புகளுக்கு 20 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

பட மூலாதாரம்,FACEBOOK/MK STALIN

வாழ்வாதார உதவிகள் அதிகரிப்பு

5. முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு, மாதந்தோறும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காகப் பணக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது, குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாயும், இதர பெரியவர்களுக்கு 750 ரூபாயும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணக்கொடை, கடந்த பத்தாண்டு காலமாக உயர்த்தப்படாத நிலையில், இனி குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், இதர பெரியவர்களுக்கு 1,000 ரூபாய் மற்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 500 ரூபாய் என்று உயர்த்தி வழங்கப்படும்.

6. முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின்கீழ் இவர்களுக்கு எரிவாயு இணைப்புப் பெற இயலாத நிலை உள்ளது. எனவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும். இதற்காக அரசிற்கு ஒருமுறை 7 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். அதைத் தவிர, குடும்பத்திற்கு 5 எரிவாயு உருளைக்குத் தலா 400 ரூபாய் வீதம் மானியத் தொகை வழங்கப்படும். இதற்காக 3 கோடியே 80 இலட்சம் ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும்.

விலையில்லா அரிசி

7. முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது 20 கிலோவிற்கு மேல் வழங்கப்படும் அரிசிக்கு, கிலோ ஒன்றிற்கு 57 பைசா வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதனை இனி ரத்து செய்து, அவர்கள் பெறும் முழு அரிசி அளவும் விலையில்லாமல் வழங்கப்படும்.

8. முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ்மூலம் ஒவ்வோர் ஆண்டும் இலவச ஆடைகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவசப் போர்வைகளும் வழங்கக்கூடிய திட்டத்தில் ஒன்றிய அரசு நிர்ணயித்த விலையில் ஆடைகள் வாங்கி வழங்க இயலாத நிலையில், நடப்பு ஆண்டிற்கு பெறப்பட்ட விலைப்புள்ளிகளின் அடிப்படையில் குடும்பம் ஒன்றிற்கு 1,790/- ரூபாயிலிருந்து, குடும்பம் ஒன்றுக்கு, 3,473/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இலங்கை அகதிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கீழ்புதுப்பட்டு பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் வாழும் ஒரு குடும்பம் (கோப்புப்படம்)

9. முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு 1,296/- ரூபாய் மதிப்பில் சேலம் இந்திய உருக்காலை நிறுவனம் மூலம் உயர்த்தப்பட்ட வீதத்தில் பாத்திரங்கள் வழங்கப்படும்.

அகதிகளுக்கான ஆலோசனைக் குழு

10. முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளிப்பதிவில் உள்ள அகதிகளுக்கும் உரிய உதவிகளை வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், குடியுரிமை வழங்குதல் மற்றும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகாலத் தீர்வினைக் கண்டறிய ஏதுவாகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுத் துறை செயலாளர், மறுவாழ்வுத் துறை இயக்குநர் மற்றும் பிற அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுடைய பிரதிநிதி மற்றும் வெளிப்பதிவில் வசிக்கக்கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழு விரைவில் அமைக்கப்படும்.

1983 ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 இலட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்களில், 18 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சார்ந்த 58 ஆயிரத்து 822 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 108 முகாம்களில் (இரண்டு சிறப்பு முகாம்கள் உள்பட) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 13 ஆயிரத்து 540 குடும்பங்களைச் சார்ந்த 34 ஆயிரத்து 87 நபர்கள் காவல் நிலையங்களில் பதிவுசெய்து, வெளியில் வசித்து வருகிறார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள், கல்வி உதவி, பணக்கொடை அதிகரிப்பு - மு.க.ஸ்டாலின் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஐயா .....இவைகள் மட்டும் நடந்துவிட்டால் பல்லாயிரம் உள்ளங்கள் உங்களை வாழ்த்தும்........!  💐

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் அறிக்கையில் வேறு இப்ப ட்ரக்  மாறுது இதுவாவது செய்வார்களாமே ?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது. தமிழ்நாட்டில் அல்லாடும் மக்களுக்கு கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.

மிகவும் காத்திரமான திட்டங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் நெஞ்சை நக்கிட்டார்! நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிலுள்ள  நலிவடைந்த நிலையில் உள்ள இலங்கை தமிழர்கள்  நல்வாழ்வு பெற்றுகொள்வதில் கவனம் எடுத்த  மனிதாபிமான முதல்வர் ஸ்டாலின் 👍

  • கருத்துக்கள உறவுகள்

எளியார்க்கு வலியார் உதவின்

வலியார்க்கு தெய்வம் உதவும்.

மிக்க நன்றிகள் முதல்வரே.

  • கருத்துக்கள உறவுகள்

மு.க.ஸ்டாலினுக்கு, நாமல் ராஜபக்ஸ வாழ்த்து!

August 29, 2021

 

Namal-stalin.png?resize=1024%2C649

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழருக்கான சிறப்பு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை வரவேற்பதாகவும் நாடு திரும்பும் அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகனும் அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இலங்கைத் தமிழர் நலன் தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதில், முகாம்களில் உள்ள பழுதடைந்த வீடுகளைப் புதிதாகக் கட்டுதல், கழிப்பிட, குடிநீர், மின்சார வசதிகள் அளித்தல், குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை உயர்வு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புத்திறனை மேம்படுத்தும் பயிற்சி அளித்தல், 300 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி உதவி, அகதிகளின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர உதவித்தொகை உயர்வு, எரிவாயு இணைப்பு, அடுப்பு அளித்தல், மாதந்தோறும் 20கிலோ இலவச அரிசி, அனைவருக்கும் கைத்தறி ஆடைகள், போர்வைகள், இலவச சமையல் பாத்திரங்கள் வழங்குதல் ஆகியவை அடங்கும்.

மேலும் இலங்கை அகதிகள் முகாம் என்பது மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புகளுக்கு தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களான மனோ கணேசன், எம.ஏ. சுமந்திரன், உள்ளிட்ட இலங்கையின் தமிழ் அரசியல் பிரமுகர்கள் பலரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை அகதிகளுக்கு 300 கோடிக்கு மேற்பட்ட நிவாரணங்கள் மற்றும் அகதிகளது இந்திய, இலங்கை குடியுரிமை குறித்து ஆராய குழு நியமனம் ஆகிய இரண்டு அறிவிப்புகளை அவர் செய்துள்ளார்.

இவை இதற்கு முன்னால் இந்தளவு காத்திரமாக நிகழ்ந்திராத முன்னெடுப்புகள் ஆகும். முகாமிலும், முகாமிற்கு வெளியேயும் வாழும் தமிழர்களின் எதிர்கால நலன் கருதி, குடியுரிமை பிரச்சினை தொடர்பில், சிறுபான்மையினர் நலன் துறை, வெளிநாட்டு வாழ் நலன் துறை, சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், முகாம் தரப்பில் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்ற சிறப்பான யோசனையையும் முதல்வர் தெரிவித்துள்ளார் என பாராட்டியுள்ளார்.

https://globaltamilnews.net/2021/165192

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே அரசியல்

பாவம் தமிழ் மக்கள் 😭

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.