Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பிமலையைப் பிடித்துப்போட்டினமாம்

Featured Replies

குடும்பிமலையை சில மணித்தியாலங்களிற்கு முன்னர் சிறிலங்கா படைகள் கைப்பற்றி விட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி போடப்பட்டுள்ளது.

நகரக்க முல்லை, தரவைக்குளம் குடும்பிமலைப் பகுதியையும் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்செய்தி உண்மையோ பொய்யோ இது குறித்து எம்மவர்கள் வருத்தப்பட எதுவுமில்லை. ஏற்கனவே திட்டமிட்ட படி குடும்பிமலையில் இருந்த கணிசமான புலிச்சேனைகள் வெளியேறிவிட்டன.

எதிரிக்குத் தலையிடி கொடுக்கக் கூடிய தாக்குதல்கள் இனி மட்டக்களப்பில் தொடரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Military: troops capture last Tamil Tiger rebel base in Sri Lanka's volatile east

http://www.iht.com/articles/ap/2007/07/11/...N-Sri-Lanka.php

Soldiers Capture Last Tamil Tiger Base In Sri Lanka's East

http://www.nasdaq.com/aspxcontent/NewsStor...nternational.na

Sri Lankan troops capture last rebel stronghold in east

http://news.xinhuanet.com/english/2007-07/...ent_6359133.htm

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி மகிந்தா கேக்கை வெட்டுவாராக்கும். உப்பிடித்தான் 99ம் ஆண்டுவரை ஜெயசுக்குரு படை பல இடங்களைப் பிடிக்க,தமிழர்களின் படை அடிச்ச அடியில ஒரே ஒட்டமாக ஒடி கடைசியில் அனையிறவையும் இழந்தவை தெரியும் தானே.

என்ன நடக்குதென்டு புரியவே இல்லை

குடும்பிமலை பிரதேசத்தை ஆக்கிரமித்து விட்டதாக மகிந்த அரசாங்கம் அறிவிப்பு.

குடும்பிமலை பிரதேசத்தை சிறிலங்கா இராணுவத்தினர் இன்று காலை தமது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக மகிந்த ராஜபக்சவின் செயலகம் அறிவித்துள்ளது.

அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குடும்பிமலை பிரதேசத்தின் முக்கிய முகாம் இன்று புதன்கிழமை காலை படையினரிடம் வீழ்ச்சியடைந்தது. இது மூன்று மாத கால இராணுவ நடவடிக்கையின் அடைவாகும். இந்த வெற்றியுடன் இராணுவத்தினர் கிழக்கு மாகாணம் முழுவதையும் தமது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இன்று காலை இராணுவத்தினர் மேற்கொண்ட தீவிர தாக்குதலையடுத்து தமது கிழக்கின் இறுதி முகாமைக் கைவிட்டு கிழக்குப் பிரதேசக் காட்டுக்குள் புலிகள் தப்பியோடினர்.

அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது புலிகளால் கைவிடப்பட்ட வாகனங்கள், மற்றும் ஆயுதங்களையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

120 மி.மீ. மோட்டார் இரண்டு, டௌஸர் வாகனம் ஒன்று, டபிள் கப் வாகனம் இரண்டு, உலர் உணவு நிரப்பப்பட்ட டிரக்டர்கள் ஐந்து, உந்துருளிகள் ஐந்து மற்றும் கெண்டர் ரக வாகனம் ஐந்து ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக மகிந்தவின் செயலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடங்களை பிடிப்பதல்ல...தக்கவைப்பதே கடினம்...பொறுப்போம்..காலம் பதில் சொல்லும்

Edited by கறுப்பன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா

ரெம்ப நிம்மதியாகக் கிடக்கு. ஒரு வருசமாகப் போட்டு, கிழக்கைப் பிடிச்சிட்டம், பிடிச்சிட்டம் எண்டு ரம்புக்கலவும், பிரசாத் சமரசிங்கவும் அறிக்கை விடக்க, பேசாமல் புலிகள் கிழக்கைக் கொடுத்திட்டுப் போனால் நல்லா இருக்கும் எண்டு தோனிச்சுது.

எனிமேல் வந்து அறுக்க மாட்டினம் எண்டு நம்புறம்.... தயவு செய்து... கெஞ்சிக் கேட்கின்றம்...

நிலப்பரப்பை கைப்பற்றுவதன் மூலம் இனப்பிரச்சினை தீர்ந்துவிடாது - ரொய்டர்ஸ்

நிலப்பரப்பை கைப்பற்றுவதன் மூலமாக இலங்கையின் இனப்பிரச்சினை தீர்ந்து விடாது என ரொய்டர்ஸ் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா அரசாங்கம் தமது படைகள் தொப்பிக்கலை பிரதேசத்தை கைப்பற்றியுள்தாக அறிவித்துள்ள நிலையில் அது குறித்து ரொய்டஸ் நிறுவனம் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு தசாப்பதங்களாக தொடரும் இலங்கையின் மோதல் நிலையில் பலவேறு சந்தர்ப்பங்களில் ஆளுகை பிரதேசங்கள் மாற்றமடைந்து வந்துள்ளதாகவும் கிழக்கையோ அல்லது வடக்கையோ கைப்பறுவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

70000 அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இலட்சக் கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ள நிலையில் பிரதேசங்களை கைபப்றுவதும் அதனை தக்க வைப்பதும் நிலையாக சமாதானத்தை ஏற்படுத்த உதாவது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பிலும் ஏற்பட்டள்ள இழப்புகள் குறித்து சுயாதீனமான தகவல்களை பெறமுடியாதிருப்பதாகவும் ரொய்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா படைகள் தொப்பிக்கலவை கைப்பற்றும் படை நடவடிக்கையில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் ஆயுதங்கள் பலவற்றை தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அறிவித்து வருகின்ற போதிலும் அதற்குரிய ஆதாரங்களை இதுவரை ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளியிடவில்லை என்றும் இது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரசார நடவடிக்கைகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தென்னிலங்கையின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க குடும்பி மலையையும் பிடியுங்கோ, குடும்பியையும் பிடியுங்கோ எங்க பிரச்சினை அதில்லை...அதாவது உதெல்லாம் திருப்பி பிடிக்க எங்களுக்கு மூன்று மாதமல்ல மூன்று மணித்தியாலமே போதும்...

நீ புலிகளின் காலில் விழ ஆரம்பித்து விட்டாய், உது இங்கு பலருக்கு தெரியாத விடயம்.நீ பலமான நிலையில் இருந்துகொண்டு தான் புலிகளுடன் பேரம்பேசுவதாக சிங்கள மக்களுக்கு பூச்சாண்டி காட்டுவதிற்காக..ஒரு முக்கியத்துவம் இல்லாத, அவசியமே இல்லாத ஒரு இடத்தை பிடித்து விட்டதாக கொக்கரிக்கிறாய்...

நாளை பேச்சுவார்த்தைக்கு கதவு இன்னும் திறந்துதான் இருக்கின்றன என்ற மகிந்த ஜயாவின் அறிக்கையை நாம் எதிர்பார்க்கலாம்..

உதுக்கெல்லாம் தலைவரின் பதில் வித்தியாசமாகத்தான் இருக்கும், அதை தாங்கும் சக்த்தி உன்னிடம் இல்லையடா கண்ணா...

Edited by Valvai Mainthan

பிடிப்பீனம் பிடிப்பீனம்....அவயள் என்னத்ததான் பிடிக்கமாட்டீனம்

இதுக்கெல்லாம் ஒரு பதில் விரைவில மகிந்தவிற்கும் அவரது படைகளுக்கும் இருக்கிது,ஆனால் அது எப்ப என்று தான் கேள்வி.

பொறுத்திருந்து பார்ப்பம்......

  • கருத்துக்கள உறவுகள்

120 எம் எம் மோட்டார்களைக் கைப்பற்றியதாக படைத்தரப்புச் சொன்னது. அவர்களே இப்படி ஒரு நிலையில் பிடித்த மோட்டாரின் படத்தைப் பிரசுரிப்பினம் என்று நினைக்கேல்ல..!

மோட்டார்கள் கைக்குண்டு வீசி அழிக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் காணலாம்..!

uvs-007_copy.jpg

16large.jpg

தொப்பிக்கலையில் இராணுவம்.

Thoppigala_2_1.jpg

ஈராக் சென்ற அமெரிக்கப்படைகள் அமெரிக்கக் கொடியைப் பிடித்தன.. அதில கொஞ்சம் என்றாலும் நியாயமிருக்கு என்று சொல்லலாம்..!

ஐக்கிய இலங்கைக்க படை நடத்தும் சிறீலங்கா இராணுவம் சிறீலங்காக் கொடியைப் பிடிக்குது என்றால் இதற்கு முதல் அது சிறீலங்கா இல்லை என்பதுதானே அர்த்தம்.

தென் தமிழீழ ஆக்கிரமிப்பை ஒத்துக்கொள்ளும் சிறீலங்காப் படையினர்..!

(படங்கள் சிறீலங்கா இராணுவ இணையத்தளம்)

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பிமலை பிடித்தாயிற்று.. தற்போது வன்னிப் பகுதியையும் பிடிப்பதற்குத் திட்டம் தயார். விஷேட படையணிகள், தரை, கடல், வான் படைகள் எல்லாவற்றையும் ஒன்றிணைத்து வன்னியை இரண்டு வருடங்களில் பிடித்துவிடலாம். அதன்பின்னர் மகிந்த தனது ஆட்சிக்காலத்தில் மிகுதியான இரு வருடங்களையும் நாட்டை வளப்படுத்தப் பயன்படுத்தி 2011 இல் வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று தனது சகோதரர்களுடன் சேர்ந்து சிங்களவர்களுக்கு ஒரு பொற்காலத்தை உருவாக்குவார். ;)

குடும்பிமலை பிடித்தாயிற்று.. தற்போது வன்னிப் பகுதியையும் பிடிப்பதற்குத் திட்டம் தயார். விஷேட படையணிகள், தரை, கடல், வான் படைகள் எல்லாவற்றையும் ஒன்றிணைத்து வன்னியை இரண்டு வருடங்களில் பிடித்துவிடலாம். அதன்பின்னர் மகிந்த தனது ஆட்சிக்காலத்தில் மிகுதியான இரு வருடங்களையும் நாட்டை வளப்படுத்தப் பயன்படுத்தி 2011 இல் வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று தனது சகோதரர்களுடன் சேர்ந்து சிங்களவர்களுக்கு ஒரு பொற்காலத்தை உருவாக்குவார். ;)

உப்பிடித்தான் கனபேர் வெளிக்கிட்டவையுங்கோ ஆனால் அவையெல்லாம் காணாமல் போயிட்டீனம்

Thop_02.jpg

இந்த மோட்டரை புலிகள் விட்டு விட்டு போட்டினமாம்.... ஆனால் மோட்டார் குழாயை விட பாரம் கூடின பேஸ் போடை ( அடித்தளபகுதியை)கொண்டு போட்டார்களாம்.....! பிடிச்சிருக்கிற துருவை பாத்தால் மூண்டு மாசமாய் எண்னையை காட்டவே இல்லை போல கிடக்கு.. புலிகளாவது துடைக்காமல் விடுவதாவது....!

Thop_01.jpg

புலிகள் 120 மிமி செல்கள் ஒண்டையும் விட்டு போகாமல் மோட்டரை வெடி வச்சிட்டு போட்டினமா..??? செல் எல்லாத்தையும் அடிச்சு முடிச்சினம் எண்டாலும் சரி எண்டு சொல்லாம்.... செல்லை அடிச்சு முடிச்சு போட்டு மோட்டரை ஏன் வச்சிருந்தவை... கிடங்கு கிண்டி தாட்டாவது இருப்பார்களே... அதைத்தானே அண்டு ஆண்டான காலமாக செய்யினம் கிடங்கை பிடிச்சனாங்கள் எண்டு அறிக்கை விடுகிறவர்கள்....!!

முக்கியமாய் எனக்கு ஒண்டு விளங்கேல்லை இரண்டு மோட்டார்களுக்கு ஆறு சில்லுக்கள் எதுக்கு...??

  • கருத்துக்கள உறவுகள்

இழப்புகள் எமக்கு புதியவை அல்ல

சோதனைகளை எமது தலைவன் சந்திப்பது

இதுதான் முதல் தடவையும் அல்ல

ஆகவே பாதிவழியில் எமது பயணம் நிற்காது!

(தமிழ+ழ விடுதலைப் புலிகள் புரட்டாதி 1987)

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 12-07-2007 01:55 மணி தமிழீழம் [மோகன்]

குடும்பிமலையை இராணுவம் கைப்பற்றியதை போரியல் வெற்றியாக கருதப்பட முடியாது

குடும்பிமலையில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறிய நிலையில் அதனை ஸ்ரீலங்கா இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளமை போரியல் வெற்றியாக கருதப்பட முடியாது என் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது

காலியில் நடைபெற்ற பொதக்க கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க இராணுவ முக்கியத்துவமற்ற குடும்பி மலையை கைப்பற்றியதன் மூலம் அரசாங்கம் வேறு நோக்கங்களை அடைய முயல்வதாகவும் கூறியுள்ளார்

குடும்பிமலைய முழுமையான காட்டு பகுதி என்றும் அங்கு சிறிய குளங்கள் ஒன்று இரண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ள ரனில் விக்கிரமசிங்க அவ்வாறான காட்டு பகுதி எந்தவத முக்கியத்துவமுமற்றது என்பதாலேயே மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அந்த பகுதி உள்ளடக்கப்படவில்லை என்றம் தெரிவித்துள்ளா

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பிமலை மரங்களை வெட்டிச் சம்பாதிக்க "குடும்பிமலை மர நிறுவனம்" தொடங்குவார் மகிந்த: ரணில் கடும் சாடல்

ஜபுதன்கிழமைஇ 11 யூலை 2007இ 19:53 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ

குடும்பிமலை எனும் காட்டுப்பகுதியைக் கைப்பற்றிவிட்டு அதற்காக ஒரு வெற்றி விழா நடத்துவதா? குடும்பிமலை மரங்களை இனி வெட்டி விற்று இலாபம் சம்பாதிக்க குடும்பிமலை மர நிறுவனம் தொடங்குவார் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சாடியுள்ளார்.

காலியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:

மகிந்தவின் சட்டத்தரணி எனக்கு அனுப்பிய கடிதத்தில் 200 கோடி ரூபாய் நட்டஈடு கோரியுள்ளார். என்மீது மகிந்த பொய்க்குற்றச்சாட்டை சுமத்துகிறார். ஆனால் புலிகளுக்கு அவர் நிதி வழங்கியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கொடுக்கல் வாங்கல்களில் பி.பி.ஐயசுந்தர மற்றும் பசில் ராஐபக்ச ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர். மொத்தமாக 150 கோடி ருபா பணம் புலிகளுக்கு வழங்கப்பட்டதாக மங்கள தெரிவித்துள்ளார். இது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களிடம் இருந்து பெருமளவான பணத்தை அரசாங்கம் கடத்தல் சம்பவங்கள் மூலம் அறவிட்டு வருகிறது. ஊழல் தரகு மூலமாகவும் மக்கள் பணத்தை அரசு சுரண்டுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த நிலையில் குடும்பிமலை வெற்றியை கொண்டாடி அங்குள்ள மரங்களை வெட்டிப் பணம் சம்பாதிக்க மகிந்த சகோதர நிறுவனம் முயல்கிறது. கோத்தபாய ஆயுதங்களைக் கொள்வனவு செய்கிறார். இதன்மூலம் இலாபமடையும் மகிந்த சகோதர நிறுவனம் இனிமேல் குடும்பிமலை மரங்களை விற்றும் இலாபமடையும். எதிர்காலத்தில் குடும்பிமலை மர நிறுவனம் என்று ஒன்று உருவாக்கப்பட்டால் கூட ஆச்சரியப்பட முடியாது.

நாட்டை சுடுகாடாக்கியுள்ள அரசாங்கத்தின் வெற்றிகளைக் கொண்டாட ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் தயாரில்லை. ஒரு காட்டுப்பிரதேசத்தை கைப்பற்றிவிட்டு அதனை ஒரு மிகப்பெரிய வெற்றியாகக் காட்ட அரசாங்கம் முனைகிறது என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=32548

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பிலையை பாதுகாப்பது கடினமானது: ஹரி குணதிலக்க

சிறிலங்கா அரசாங்கப் படையினர் குடும்பிமலையை கைப்பற்றியது முக்கியமாக இருக்கின்ற போதும் அதனை தொடர்ந்து தக்க வைப்பது மிகவும் செலவானது என முன்னாள் வான் படைத் தளபதி ஹரி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

சமரை வெல்வதற்கு 1,000 அல்லது 2,000 படையினர் தேவை, ஆனால் அந்த பகுதியை தக்க வைப்பது மிகவும் செலவானது. அதற்கு 10,000 தொடக்கம் 20,000 படையினர் தேவை.

அரசு 50,000 படையினரை சேர்ப்பதால் அவர்களின் சம்பளமாக மட்டும் 7.2 பில்லியன் ரூபாய்களை ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதனால் தான் நான் இது செலவான நடவடிக்கை என்றார் அவர்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

'தொப்பிக்கல’ வெற்றியை அடுத்து அரசியல் தீர்வு முன்வைக்கப்படுமாம்

சிறீலங்கா அரசாங்கம் சார்பாக ஜெனிவாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நிமால் சிறிபால டி சில்வா கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாகவிர

கண்ணுகளா பிடிகிறது.........கொடி ஏற்றுறது முக்கியமில்லை பிடித்ததை எப்படி தக்க வைக்கிறது என்பது தான் முக்கியம்..................

அப்ப நான் வரட்டா.............. :P

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள சபேசன் வெப்பீளம் இணையத்தளத்தில் எழுதிய கருத்துக்கள்.

குடும்பிமலை கைப்பற்றப்பட்டது - சிறிலங்கா அரசு அறிவிப்பு!

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள குடும்பிமலையை (தொப்பிக்கல) சிறிலங்காப் படையினர் கைப்பற்றி விட்டதாக சிறிலங்காவின் படைத் தரப்பு அறிவித்துள்ளது.

ஏறக்குறைய மூன்று மாதங்கள் நடந்த சண்டைகளின் பின்னர் குடும்பிமலையின் மையப்பகுதியை சிறிலங்காப் படையினர் அடைந்துள்ளதாக அறிய முடிகின்றது. சில நாட்களுக்கு முன்பு குடும்பிமலைக்கு அண்மையில் உள்ள தரவைக்குளப் பகுதியை அடைந்த சிறிலங்காப் படைகள் இன்று குடும்பிமலைப் பகுதியை அடைந்தன.

சிறிலங்காப் படைகளின் இன்றைய முன்னேற்றத்தின் போது விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லை. விடுதலைப் புலிகள் தேவையற்ற இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு தமது முகாம்களை வேறு பகுதிக்கு மாற்றிக் கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் படையணிகள் தற்பொழுது குடும்பிமலையின் மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் குடும்பிமலைப் பகுதி உட்பட ஏறக்குறைய 60 கிலோமீற்றர் வரை நீளமான பெரும் காட்டுப் பகுதி உள்ளது. இந்தக் காட்டுப் பகுதியின் அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது சிறிலங்காப் படைகளுக்கு ஆகாத ஒரு விடயமாகும்.

தற்பொழுது சிறிலங்காப் படையினர் நிலைகொண்டுள்ள குடும்பிமலைப் பகுதியில் இருந்து சில நூறு மீற்றர்கள் தூரத்தில் விடுதலைப் புலிகள் நின்றாலும், அதை அறிய முடியாத அளவிற்கு அடர்ந்த காடுகளையும், சிறு குன்றுகளையும், நீரோடைகளையும் கொண்ட பகுதியாக அப் பகுதி திகழ்கிறது.

விடுதலைப் புலிகளின் படையணிகள் பாரிய இழப்புக்கள் எதையும் சந்திக்காத நிலையில் சிறிலங்காப் படைகள் குடும்பிமலையை அடைந்துள்ள நிகழ்வு கிழக்கு நிலவரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியது அல்ல என்றும், கிழக்கில் விடுதலைப் புலிகளின் செயற்படும் திறனில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் "குடும்பிமலையைப் பிடித்து மரம் வெட்டி விற்கலாமே தவிர, வேறு எந்த நலனும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குடும்பிமலையை சிறிலங்காப் படையினர் சென்றடைந்த நிகழ்வை பெரும் வெற்றியாக சித்தரித்து, அதற்கு வெற்றி விழா கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றார். இதன் மூலம் விடுதலைப் புலிகளின் மிக முக்கிய ஒரு பலமான தளத்தை கைப்பற்றி விட்டதாக ஒரு மாயை உருவாக்க முடியும் என்றும் மகிந்த நம்புகின்றார்.

ஆனால் மக்கள் எவரும் வாழாத காட்டுப் பகுதியான குடும்பிமலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் தொடர்ந்தும் நிற்காது, வெற்றிவிழா முடிந்த ஓரிரு மாதங்களின் பின்னர் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விடுவார்கள் என்றே நம்பப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு கிழக்கில் கைப்பற்றிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இருந்து சிறிலங்காப் படையினர் வெளியேறி விட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

உதயனில் வந்த செய்திகள்

தொப்பிகல முற்றாக மீட்பு படையினர் நேற்று அறிவிப்பு கிழக்கில் புலிகளின் கடைசித் தளமும் வீழ்ந்துவிட்டதாகத் தெரிவிப்பு

தொப்பிகல (குடுமிமலை) பிரதேசத்தை முற்றாக மீட்டு விட்ட தாக படையினர் நேற்று அறிவித்தனர்.

நாங்கள் தொப்பிகலவை அடைந்துவிட்டோம். அதனைக் கைப் பற்றிவிட்டோம். இப்போது அங்கு புலிகளின் நிலைகள் எதுவும் இல்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமர சிங்க நேற்று மாலை ரொய்ட்டருக்கு தெரிவித்தார்.

தொப்பிகலவைச் சூழவும் தொப்பிகலயிலும் புலிகளின் சிறு சிறு இருப்பிடங்கள் உள்ளன. அவற்றை நாம் அழித்து வருகிறோம்.

தொப்பிகலவின் மேற்குப் பக்கத்தை சுத்திகரிக்க வேண்டியுள்ளது. எனினும் தொப்பிகல கைப்பற்றப்பட்டுவிட்டது என்றும் இராணு வப் பேச்சாளர் சொன்னார்.

கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து தாம் 450 விடுதலைப் புலிகளை கொன்றுவிட்ட தாகவும் 20 படையினர் பலியானதாகவும் படைத்தரப்புத் தெரிவித்தது.

ஆனால், விடுதலைப் புலிகள், தமது தரப்பில் 60 போராளிகளே மரணமான தாகவும் அதனைவிட 3 அல்லது நான்கு மடங்கு படையினரை அழித்துவிட்டதாக வும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டது.

இப்போது கிழக்கின் பெரும்பகுதியை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டார்கள் தான். எனி னும் நாம் அங்கு இன்னமும் செயற்படுகின் றோம்.

நாம் இயன்ற எல்லா வகை வழிமுறைகளையும், உத்திகளையும் தந்திரோபாயங் களையும் ஆயுதங்களையும் கையாள்வோம்

அவர்கள் விரும்பினால் வடக்கே வரட்டும். எங்கே வரட்டும் பார்ப்போம். வந்து என்ன நடக்கும் என்பதைப் பார்க்கட்டும் என்று விடுதலைப் புலிகளின் இராணு வப் பேச்சாளர் இராசையா இளந்திரை யன் நேற்று கிளிநொச்சியில் வைத்து ரொய்ட் டருக்குத் தெரிவித்தார்.

ஊடகத் தகவல் நிலைய அறிவிப்பு

நேற்றுக்காலை பொழுது புலரும் வேளை அரசுப்படைகள் தொப்பிகல பகுதிக்குள் நுழைந்து அதன் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டன என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடகத் தகவல் நிலையம் அறிவித்தது. புலிகளின் தளங்களில் அவர்கள் கைவிட்டுச் சென்றவை என்று கூறப்படும் கனரக ஆயுதங்கள் சிலவற்றின் படங்களையும் ஊடக நிலையம் வெளியிட்டது.

எனினும் அந்தப் பகுதிகளில் ஒளிந்திருக்கும் புலிகளைத் தேடி அழிக்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டிருப்பதால் சிறுசிறு மோதல்கள் இன்னமும் இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சிலமாதகால மோதல்களுக்குப் பின்னர் விடுதலைப்புலிகளைச் சந்திப்பதன் மூலம் முடங்கிவிட்ட சமாதான முயற்சிகளுக்குப் புத்துயிரளிக்க நோர்வே முயன்று கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் தொப்பிகல மீட்பு கைகூடியுள்ளது. என்று வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டன.

தொப்பிகல வனாந்தரத்தில் உள்ள இந்தத் தளம் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும் பொழுது புலர்வதற்கு முன்னர் இது இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது நேற்று நண்பகல் விடுக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிந்திய நடவடிக்கைகள் தொடர்பாக இதர தகவல்கள் அதில் வெளியாகவில்லை.

""கொமாண்டோக்களும் இராணுவ வீரர்களும் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தொப்பிகல வனாந்தரத் தளத்தை அடைந்தார்கள்.'' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

""இந்த வெற்றியோடு கிழக்கு மாகாணத்தில், தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமிக்க இறுதிப் பகுதியில் அவர்களின் கேந்திர மத்திய நிலையமான தளத்தையும் துருப்புகள் கைப்பற்றியுள்ளன'' என்றும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

""வெற்றியடைந்துள்ள இராணுவத்தினர் அடர்ந்த காட்டுக்குள் சிதறிக் கிடக்கும் எதிரிகளின் சிறுசிறு பகுதிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். அதேவேளை தேடுதல் வேட்டையையும் மேற்கொண்டுள்ளார்கள்.''

எனினும் இரு தரப்பு சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை.

நாளுக்கு ஓர் அறிவிப்பு

தொப்பிகல வனாந்தரப்பகுதிகளில் இராணுவப் பிரவேசம் விடுதலைப்புலிகளின் பலத்த எதிர்ப்பால் பின்னடைவைத் தழுவியுள்ளது என, முதல்நாள் அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தார்கள். மறுதினமான நேற்று, இப் புதிய மீட்புத் தகவல் வெளியாகியுள்ளது.

அரச பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த இராணுவ நடவடிக்கை குறித்துக் குறிப்பிடுகையில்,""எல்லையில் 98 சத வீதத்தைக் கைப்பற்றி விட்டோம். எஞ்சியது இரண்டு வீதந்தான். சில நாட்களுக்குள் இதனை மீட்டுவிடலாம் என்பதற்கில்லை'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

""தொப்பிகல வெகு விரைவில் வீழ்ச்சி கண்டுவிடும்'' என்ற தகவல்களையும் அவர் நிராகரித்திருந்தார்.

இராணுவப்பேச்சாளர் பிரசாத் சமரசிங்க, செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர் மத்தியில் பேசுகையில், ""தொப்பிகலவிலிருந்து ஐந்து முதல் ஆறு கிலோமீற்றர் தொலைவிலேயே துருப்புகள் நிலை கொண்டுள்ளன. தொப்பிகலவின் துண்டாடப்பட்ட பகுதிகளிலிருந்து தீவிரவாதிகள் இன்னும் எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகிறார்கள்'' எனத் தெரிவித்திருந்தார்.

பிரிகேடியர் பகலில் சொன்னது

இதேவேளை

தொப்பிகல பிரதேசத்தை கைப்பற்றியிருப்பது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க நேற்றுப் பகல் தகவல் வெளியிட்டபோது கூறியவை வருமாறு:

கடந்த பெப்ரவரிமாதம் 24 ஆம் திகதி தொப்பிகலவை கைப்பற்றும் நடவடிக்கையை எமது அரச படைகள் ஆரம்பித்தன. அன்றிலிருந்து படிப்படியாக அப்பகுதி இராணுவக்காட்டுப்பாட்டிற்கு

கிழக்கு மாகாணத்தை மீட்ட படையினருக்கு பாராட்டுகள்: ஜே.வி.பி.

தமிழீழத்தில் இருந்து கிழக்கு மாகாணத்தை மீட்ட படையினரை தாங்கள் பாராட்டுவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தமது மேற்கொண்ட முயற்ச்சியின் பயனாக கிழக்கு மாகாணம் சட்டப்படி விடுவிக்கப்பட்டதாகவும் எனினும் தற்போது படையினரை அதனை முழுமையாக ஈழத்தில் இருந்து மீட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இத்துடன் படை நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாமல் இறுதி இலக்கை அடையும் வரை தொடாந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் சோமவன்ச அரசிங் வலியுறுத்தியுள்ளார்.

-Pathivu-

''தொப்பிகல'' வெற்றியை அடுத்து அரசியல் தீர்வு முன் வைக்கப்படும்: நிமால் சிறிபால டி சில்வா.

சிறீலங்கா அரசாங்கம் சார்பாக ஜெனிவாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நிமால் சிறிபால டி சில்வா கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாகவிருந்த தொப்பிக்கல பகுதியை விடுவித்ததையடுத்து அரசியல் தீர்வுத்திட்டத்தை நோக்கிய முன்னெடுப்புக்களை அரசாங்கம் மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.

பதுளையில் அரம்பிட்டிய நகரில் பேருந்து தரிப்பிடம் ஒன்றை திறந்து வைக்கும்போது மக்கள் மத்தியில் உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறீலங்கா படையினர் தொப்பிக்கல குன்றில் சிங்கக்கொடியை ஏற்றியுள்ளதாகவும் யூலை மாதம் 19 ம் திகதி இவ் வெற்றியை சாற்றும் வைபவத்தில் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் இதற்கான ஆவணம் கையளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

-Pathivu-

இலங்கை அமைச்சர் மாரின் கதையை கேக்கும் போது யாழ்ப்பாணம் பிடிச்ச ரத்தவத்த சொன்னது போல கிடக்கு... புலிகள் அழிஞ்சார்கள் அவர்களால் இனி எதுவுமே முடியாது எண்டார்... ஆனால் கிழக்கிலை இருந்து படைகளை விலக்கி கொண்டார்...! அப்படி ரத்தவத்த சொல்லி ஆறு மாதத்துக்குள் புலிகள் முல்லைத்தீவை முற்றாக கைப்பற்ற்றினார்கள்... அளம்பில் பகுதியில் கடல் மூலம் தரயிறக்கிய இராணுவத்துக்கு போட்ட போடிலை இனிமேல் கடலால் தரை இறங்குவதில்லை எனும் முடிவுக்கே அரசபடைகளை தள்ள வைத்தார்கள்...!! இராணுவம் பூநகரியில் இருந்து வெளியேறி கிளிநொச்சியை பிடித்தார்கள் பின்னர் அங்கிருந்தும் துரத்தப்பட்டார்கள்... ! இப்போ வன்னியின் பெரும்பகுதிகள் இராணுவத்தின் எறிகனை வீச்சு எல்லைக்குள் இல்லை...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.