Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

அதனால் தான் அந்த தெளிவை பெற்றோர்கள் கொடுக்க வேண்டு என்று எழுதியிருக்கின்றேன் பிரபா.

சாதியத்தால் தமிழகம் பாதிப்படைவதை விட குஜாராத், பீகார் போன்ற பல மானிலங்கள் பல மடங்கு பாதிக்கப்படுகின்றன. இங்கு வர்க்க பிரச்சனையும், படிப்பறிவின்மையும் மிக அதிகம். அதனால் தான் இந்த நீட் பிரச்சனையை மற்ற மானிலங்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றன என அறிய ஆவல். அத்துடன்  கேரள, ஆந்திர, கர்னாடக மானிலங்கள் ஆகிய தமிழகத்துக்கு அருகில் இருக்கும் மானிலங்கள் எவ்வாறு எதிர் கொள்கின்றன என்பதையும் அறிய முடிந்தால் நல்லது.

ஏராளன் குறிப்பிட்டுள்ளது போன்று, இதை ஒரு அரசியல் பிரச்சனையாக தமிழக கட்சிகள் (திராவிட, பார்ப்பனிய, தமிழ் தேசிய என்று பாரபட்சம் இன்றி) மாற்றிவிட்டுள்ளன.

நீங்கள் கூறியது போல இதை அரசியலாக்கிவிட்டார்கள்தான்.. இந்திய பிரதமர் குஜாராத்தில் முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எதிர்த்துள்ளார் என வாசித்த நினைவு.. இப்பொழுது நிலைமை வேறு.. 

ஆனால் நான் நினைப்பது இந்த தேர்வினால் அடையும் நன்மைகள் என்ன? நன்மை அடைபவர்கள் யார்? பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த எத்தனை மாணவர்கள் தெரிவாகி உள்ளார்கள்? என்பதில்தான் இந்த நீட் தேவையா சரியா என்பது தங்கியுள்ளது.. 

மற்றைய மாநிலத்தவர்கள் இதனை வரவேற்கிறார்கள் என்றால் அங்கே யார் அதிகம் நன்மையடைகிறார்கள் என்பதில்தான் உண்மை தெரியவரும்..உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள், வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நன்மை பெறுகிறார்களா தெரியவில்லை.. ஏனெனில்  ஏற்கனவே வறிய நிலையில் உள்ளவர்களால் இந்த தேர்வை எழுவதற்கான பயிற்சியையோ, கட்டணத்தையோ அவர்களாலும் கட்ட முடியாது தானே! 

ஆக மொத்தம் இந்த நீட் தேர்வு இந்தியா மாணவரகளுக்கு அவசியமா? 

மேலும் சாதி, வர்க்கவேறுபாடு மற்றைய மாநிலங்களில் அதிகம் உள்ளது என்பது சரியாக இருந்தாலும், இந்த நீட் தேர்வால் எப்படி அது குறையும் என்றோ வர்க்க வேறுபாடு குறையும் என்றோ எதிர்வு கூற முடியும்.. 

சாதி, வர்க்க வேறுபாட்டை இல்லாதெழிக்க சக மனிதனை மனிதனாக பார்க்கும் அறிவு இருக்கவேண்டும்.. மதத்தாலும், சாதியத்தாலும் ஆட்சி செய்யும் அரசிடமிருந்து இதை எப்படி எதிர்பார்க்கலாம்? 

 

 

 

நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஹிந்தி மொழியில் மட்டும் நடத்தப்படுவதாக அறிந்தேன். இது உண்மையா?

உண்மை என்றால் வட மாநில மக்கள் தமது தாய்மொழியில் பரீட்சை எழுதும் போது தென்னாட்டு  பரீட்சாத்திகள் அந்நிய மொழியில் பரீட்சை எழுதுவது பாரபட்சமான நடைமுறைதானே. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஹிந்தி மொழியில் மட்டும் நடத்தப்படுவதாக அறிந்தேன். இது உண்மையா?

தெலுங்கு மானிலத்தை சேர்ந்த தெரிந்தவர் அங்கே தெலுங்கில் எழுத முடியும் என்று சொன்னவர். ஆனபடியால்  பெரிய மொழியான தமிழிலும்  கூடியதாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் இலங்கையர் மாதிரி இல்லை ஆங்கிலத்தில் தான் எழுத விரும்புவார்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2021 at 15:05, நிழலி said:

தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மானிலங்கள் நீட் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்கின்றன?

[இதனால் அதிகம் பயனடையப்போவது தனியார் கோச்சிங் சென்டர்களும், பணவசதி படைத்தவர்களின் பிள்ளைகளுமே..

வர்க்க ஆதிக்கம் + சாதியம் = நீட்.]

இந்தியாவின் பிற மானிலங்களில்  நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் ஏன் வரவேற்கிறார்கள் இந்த கேள்விக்கான விடை இப்போ தான் கிடைத்தது.தமிழ்நாட்டை தவிர இந்திய இதர மானிலங்களில் உள்ளோர் வசதி படைத்தவர்கள். தமிழ்நாட்டில் தான் ஏழைகள்,ஏழைகளின் பிள்ளைகள் வர்க்கம் சாதி வெறியுள்ளது.
நான் முன்பு எதிர்மாறாக நம்பி இருந்தேன் தமிழ்நாடு தான் ஓரளவு வசதியானது  இந்திய மற்ற மானிலங்கள் மோசமானவை .

 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

இதில் உண்மையில்லாமல்  இல்லை

திடீர்  பாய்ச்சலும் ஒரு  காரணம்

எப்படித்தான்  இருந்தாலும் தலைமுறை தலைமுறையாகவும்

பூர்வீகமாகவும் வாழும்  இந்த மண்ணின் மைந்தர்களுடனான பரீட்சைகளில்

ஒரு சில வருடங்களுக்கு  முன்னர் வந்த  எம்மவர் எதிர்  நீச்சல்  போட்டு மேலே வருவதென்பது கடினம்  தான்.

அதேநேரம் அரசியலும்  பணமும்  அதனூடன ஒடுக்குமுறைகளையும் 

எமது  அடுத்த  தலைமுறை தாண்ட வேண்டித்தான் உள்ளது

சட்டத்தால்  பாதுகாக்கப்படுவதாலும்

உலக அளவில் ஒப்பிடும்போது இத் தாக்கங்கள் சிறிது குறைவாக  இருந்தாலும் கூட.

அதனால் தான்  எமது அடுத்த  தலைமுறை இது  போன்ற துறைகளை  தமது பிள்ளைகளுக்கு முன்  மொழிவது மிக  மிக அரிதாகிவிடும்???

மருத்துவம் மட்டும் இல்லை அண்ணை. Investment banking போன்ற துறைகளிலும் அதிக எதிர்பார்ப்புகளோடு போய், அதை ஈடு செய்ய உழைத்து முடியாமல் தற்கொலையில் முடியும் கதைகள் உலகம் எங்கும் உண்டு.

வாழ்க்கையில் மிக பெரும் கொடை என்ன என்றால் எமக்கு பிடித்த துறை எமக்கு இயலுமான துறையாகவும் அமைவது.

சிலருக்கு இது தானாக அமைந்து விடும். சிலர் trial and error மூலம் கண்டு பிடிக்க வேண்டும். 

இரண்டாம் வகையினர் தமக்கான துறையை கண்டு பிடிக்கும் வரை தோல்விகளை தாங்கும் பக்குவம் உள்ளவர்களாக அவர்களை பெற்றாரும், கல்வியும், அமைபுக்களும் வளர்தெடுக்க தவறுகிறன.

கல்வியை, தொழிலை status symbol ஆக கருதி பெருமை பேசும் பெற்றார் பிள்ளைகளையும் அதே மனநிலையில் வைத்திருக்கும் போது - அந்த status இழக்கபடுவதோடு வாழ்கையே முடிகிறது என்ற கருத்துருவாக்கம் ஏற்படுகிறது.

ஒரு சோதனையை/படிப்பை இறுக்கி படி, பாஸ் பண்ணு - பண்ணினால் உன் வாழ்க்கை சிறக்கும், இது உன் வாழ்வில் ஒரு முக்கிய தருணம் என்று உசுப்பேத்தி விடும் அதே நேரம்,

இந்த செய்திக்கு நேர் எதிராக,  இது வெறும் சோதனைதான் - வாழ்க்கை இவை எல்லாவற்றையும் விட எவ்வளவோ பெரியது எத்தனையோ வாய்ப்புக்கள் நிறைந்தது என்பதையும் ஒரு சேர சொல்ல வேண்டும்.

இப்படி செய்ய கூடிய பாதுகாவலர் அமையும் பிள்ளைகள் இப்படியாவது குறைவு என நான் நம்புகிறேன்.

ஆனால் நீட் தற்கொலைகள் இதில் இருந்தும் வேறுபடுகிறன. இந்த தற்கொலைகள் “என்னால் முடியவில்லை” என நிகழவில்லை. இந்த பிள்ளைகள் எல்லாம் மாநில பரீட்சையில் நல்ல புள்ளிகள் எடுத்தோர்.

”காசு இல்லை என்ற ஒரே காரணத்தால், திறமை இருந்தும் என்னால் மருத்துவம் படிக்க முடியவில்லையே” என்ற விரக்தியில் நடக்கிறன.

இந்த மரணங்களை நீட்டை நிறுத்துவதன் மூலம் இலகுவாக நிறுத்த முடியும். நிறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

சாதியத்தால் தமிழகம் பாதிப்படைவதை விட குஜாராத், பீகார் போன்ற பல மானிலங்கள் பல மடங்கு பாதிக்கப்படுகின்றன. இங்கு வர்க்க பிரச்சனையும்

உண்மை ஆனால் உங்கள் கேள்விக்கான பதிலையும் நீங்களே கொடுத்து விட்டீர்கள் 👇

8 hours ago, நிழலி said:

படிப்பறிவின்மையும் மிக அதிகம்

எனது அனுபவத்தில் தமிழ் நாட்டை போல் வறியவர்கள், தாழ்தப்பட்டோர் கல்வியில் முன்னேறிய இன்னொரு மாநிலத்தை நான் காணவில்லை. 

உங்களுக்கு தெரிந்த வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியன் புரொபெசனல்சை அவதானித்து பாருங்கள் - வேற்று மாநிலத்தவர் சாதியால், அதிகாரத்தால் அல்லது பணத்தால் ஏலெவே உயர்ந்த குடும்பங்களில் இருந்தே அநேகம் வருவர் - மலையாளிகள் கூட. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வரும் பலர் - அந்த குடும்பத்தின் முதலாவது தலைமுறை பட்டதாரியாக இருப்பார்கள்.

ஏனைய மாநிலங்களை விட தமிழ்நாட்டில் social mobility அதிகம். ஆகவே நீட்டினால் பாதிக்கபடுபவர்களும் அதிகம்.  

18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

[இதனால் அதிகம் பயனடையப்போவது தனியார் கோச்சிங் சென்டர்களும், பணவசதி படைத்தவர்களின் பிள்ளைகளுமே..

வர்க்க ஆதிக்கம் + சாதியம் = நீட்.]

இந்தியாவின் பிற மானிலங்களில்  நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் ஏன் வரவேற்கிறார்கள் இந்த கேள்விக்கான விடை இப்போ தான் கிடைத்தது.தமிழ்நாட்டை தவிர இந்திய இதர மானிலங்களில் உள்ளோர் வசதி படைத்தவர்கள். தமிழ்நாட்டில் தான் ஏழைகள்,ஏழைகளின் பிள்ளைகள் வர்க்கம் சாதி வெறியுள்ளது.
நான் முன்பு எதிர்மாறாக நம்பி இருந்தேன் தமிழ்நாடு தான் ஓரளவு வசதியானது  இந்திய மற்ற மானிலங்கள் மோசமானவை .

 

 

தமிழ் நாட்டில்தான் நீட்டால் பாதிக்கப்படும் அளவுக்கு வறியவர்களும், தாழ்த்தபட்டோரும் முன்னேறியுள்ளார்கள்.

ஏனைய மாநிலங்களில் நீட் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் நிலை படுமோசம்.

4 hours ago, tulpen said:

நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஹிந்தி மொழியில் மட்டும் நடத்தப்படுவதாக அறிந்தேன். இது உண்மையா?

உண்மை என்றால் வட மாநில மக்கள் தமது தாய்மொழியில் பரீட்சை எழுதும் போது தென்னாட்டு  பரீட்சாத்திகள் அந்நிய மொழியில் பரீட்சை எழுதுவது பாரபட்சமான நடைமுறைதானே. 

13 பிராந்திய மொழிகளில் எழுதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

ஆனால் நீட் தற்கொலைகள் இதில் இருந்தும் வேறுபடுகிறன. இந்த தற்கொலைகள் “என்னால் முடியவில்லை” என நிகழவில்லை. இந்த பிள்ளைகள் எல்லாம் மாநில பரீட்சையில் நல்ல புள்ளிகள் எடுத்தோர்.

”காசு இல்லை என்ற ஒரே காரணத்தால், திறமை இருந்தும் என்னால் மருத்துவம் படிக்க முடியவில்லையே” என்ற விரக்தியில் நடக்கிறன.

இந்த மரணங்களை நீட்டை நிறுத்துவதன் மூலம் இலகுவாக நிறுத்த முடியும். நிறுத்த வேண்டும்.

நீட் தேர்வில் எந்த பாடமாக  இருந்தாலும் பிரச்சனையில்லை  
50  வீதம்  புள்ளிகள் மொத்தமாக எடுத்தாலே காணும். பல மாணவர்கள் தேவையில்லாமல் பதட்டமடைவது தான் பிரச்னை ,
ஏழைகளுக்கு மருத்துவம் படிக்கும் ஆசை இருக்கக் கூடாது என்று வந்த இந்த நீட்டை
அவர்களே முறியடிக்கலாம் .
மனதில் துணிவு வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

நீட் தேர்வில் எந்த பாடமாக  இருந்தாலும் பிரச்சனையில்லை  
50  வீதம்  புள்ளிகள் மொத்தமாக எடுத்தாலே காணும். பல மாணவர்கள் தேவையில்லாமல் பதட்டமடைவது தான் பிரச்னை ,
ஏழைகளுக்கு மருத்துவம் படிக்கும் ஆசை இருக்கக் கூடாது என்று வந்த இந்த நீட்டை
அவர்களே முறியடிக்கலாம் .
மனதில் துணிவு வேண்டும் .

இங்கே தான் நீட் பரீட்சையின் தவறான விடைக்கு மறைப்புள்ளி வழங்கும் முறையின் சூட்சுமம் புரியப் பட வேண்டும். இந்த மறைப்புள்ளி வழங்கும் முறை சில மருத்துவக் கல்லூரிப் பாடப் பரீட்சைகளிலும் உள்ள நடைமுறை! 

இது உண்மையில், பதற்றமில்லாமல், ஒரு வரையறுக்கப் பட்ட நேரத்தினுள் விவேகமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பரீட்சிக்கும் ஒரு நடைமுறை தான். எனக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற perfectionist மனப் பான்மையிலிருந்து கொண்டு மறைப்புள்ளிப் பரீட்சைகளில் வெல்வது கடினம். நன்றாகத் தெரிந்தவற்றுக்கு விடையளித்து, தெரியாததை rule out மூலம் இரு விடைகள் அளித்து அல்லது முற்றாக விடையளிக்காமலே கடந்து செல்லும் போது மறைப்புள்ளிகள் "0" ஆக மாறும்! 

என்னைப் பொறுத்த வரையில் பாரிய கோச்சிங் இல்லாமலே மாணவர்கள் இதை வெல்ல வழியிருக்கிறது என்று நினைக்கிறேன்!  பரீட்சைக் கட்டணம் பற்றித் தெரியாது!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

நீட் தேர்வில் எந்த பாடமாக  இருந்தாலும் பிரச்சனையில்லை  
50  வீதம்  புள்ளிகள் மொத்தமாக எடுத்தாலே காணும். பல மாணவர்கள் தேவையில்லாமல் பதட்டமடைவது தான் பிரச்னை ,

சரியாகச் சொன்னீர்கள்.
தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வை அரசியலாக்கி பேசும் பேச்சுகளை கேட்டு கேட்டு தான் இவர்கள் பரிட்சையில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம் தோன்றி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் பிற மாகாணங்களின் ஏழை மாணவர்கள் நீட் தேர்வை வெற்றிகரமாக கையாளுவது போன்று இவர்களும் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வின் முதல் பிரச்சனையே CBSE பாடத்திட்டம்தான். இதுவும் தமிழ்நாட்டு பிளஸ் one, பிளஸ் two விற்கான பாடத்திட்டங்களும்  வித்தியாசமானவை. அதனால்தான் அரசுப்பள்ளிகளில் படிக்கும் சாதாரண ஏழைமாணவர்கள் இந்த தேர்வை எழுத அச்சப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.. கெஞ்சி கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் உருக்கம்.!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/9/2021 at 12:58, tulpen said:

நீட் தேர்வு இந்தியா முழுவதும் ஹிந்தி மொழியில் மட்டும் நடத்தப்படுவதாக அறிந்தேன். இது உண்மையா?

உண்மை என்றால் வட மாநில மக்கள் தமது தாய்மொழியில் பரீட்சை எழுதும் போது தென்னாட்டு  பரீட்சாத்திகள் அந்நிய மொழியில் பரீட்சை எழுதுவது பாரபட்சமான நடைமுறைதானே. 

நீட் (யுஜி) 2021 முதன்முறையாக 13 மொழிகளில் பஞ்சாபி மற்றும் மலையாளத்தைச் சேர்க்கிறது. இப்போது வழங்கப்படும் மொழிகள் இந்தி, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், உருது மற்றும் ஆங்கிலம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

நீட் (யுஜி) 2021 முதன்முறையாக 13 மொழிகளில் பஞ்சாபி மற்றும் மலையாளத்தைச் சேர்க்கிறது. இப்போது வழங்கப்படும் மொழிகள் இந்தி, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, ஒடியா, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், உருது மற்றும் ஆங்கிலம்.

ஆகவே நீட் தேர்வில் பாரபட்சமில்லாமல் தமிழகத்தில் தமிழ் மாணவர்களும் தமிழில் எழுதலாம்.
மற்றய மாணவர்கள் மாதிரி சொந்த மொழியை பாவிக்க தமிழில் எழுத மனம் தான் வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீட் தற்கொலை: வேலூர் செளந்தர்யாவின் கலைந்து போன கனவு - இதுவரை 16 மாணவர்கள் பலி

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
நீட் மரணங்கள்

நான்கு பெண் பிள்ளைகளில் முதல் மூவரும் படிக்கவில்லை, கடைசி பிள்ளையின் மருத்துவ கனவை நிஜமாக்கும் முயற்சியில் பெற்றோர் இருவரும் தினக்கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.

ஆனால் யாருக்காக அவர்கள் கஷ்டப்பட்டார்களோ அந்த மகள் உயிரை மாய்த்துக்கொண்டார். வேலூரில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட சௌந்தர்யாவின் குடும்பம், அவர்கள் கண்ட கனவு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடைபெறும்போதும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் தோல்வி பயம் மற்றும் குறைந்த மதிப்பெண்கள் காரணமாக மாணவர்கள் தற்கொலைகள் நிகழ்கின்றன. கடந்த ஞாயிறு (செப்டம்பர் 12) அன்று நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பிருந்து, தேர்வு நடைபெற்ற அடுத்தடுத்த நாட்களில் மூன்று மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தீவிரமான எதிர்ப்பலை நிலவி வரும் சூழலில் மாணவர்களின் தொடர் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கு இடைப்பட்ட இரவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் மற்றும் திங்களன்று அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், வியாழனன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொன்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு - ருக்மணி தம்பதியரின் நான்காவது மகள் செளந்தர்யா. 17 வயதாகும் இவர் வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். சௌந்தர்யா பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 510 மதிப்பெண்கள் பெற்றவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12) அன்று காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வெழுதி மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் நீட் தேர்வில் மதிப்பெண்‌ குறைவாக பெற்று விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். சௌந்தர்யாவின் தந்தை மற்றும் தாய் இருவருமே தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். அன்றைய தினம் தந்தை வேலைக்கு சென்ற பிறகு, தனது தாயாரை அவர் வேலை செய்யும் பகுதிக்கு விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் சௌந்தர்யா. இதையடுத்து நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்று விடுவோம் என்ற அச்சத்தினால் மிகுந்த மன வேதனையில் இருந்த மாணவி சௌந்தர்யா அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தந்தை தினக்கூலி, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய தாய்

நீட் மரணங்கள்
 
படக்குறிப்பு,

செளந்தர்யாவின் தாய் ருக்மணி

இந்த சூழலில், குறைந்த மதிப்பெண் பெற்று விடுவோம் என்ற அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்தை பிபிசி தமிழ் சந்தித்தது.

"எங்கள் அப்பா உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறார். அம்மா 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்கிறார். இப்படி தினக்கூலி சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கடுமையான சூழலில்தான் தங்கையை பெற்றோர் படிக்க வைத்தனர்" என்று சௌந்தர்யாவின் இரண்டாவது அக்கா கோடீஸ்வரி பகிர்ந்து கொண்டார்.

"பெற்றோருக்கு நங்கள் மொத்தம் நான்கு பெண் பிள்ளைகள். மற்றவர்களைக் காட்டிலும் கடைசி தங்கையான சௌந்தர்யாவை செல்லமாக வளர்த்தனர். எங்கள் அக்கா பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படித்தாள். நான் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். எனக்கு அடுத்து மூன்றாவது சகோதரி பள்ளிக்கு செல்லவில்லை. பெற்றோர் இருவருமே தினக்கூலி தொழிலாளர்கள். எங்கள் மூவரையும் படிக்க வைக்க முடியாத காரணத்தினால் கடைசி பிள்ளையை எப்படிவது நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகதான் கடுமையான சூழ்நிலைக்கு இடையே படிக்க வைத்தனர்," என்றார் அவர்.

நீட் மரணங்கள்
 
படக்குறிப்பு,

செளந்தர்யாவின் இரண்டாவது அக்கா கோடீஸ்வரி

"நான் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமில்லாமல், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு இருப்பதால் படிப்பேன். உறுதியாக மருத்துவர் ஆவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள் எனது மகள். நானும் எப்படியாவது கூலி வேலைக்கு சென்றாவது நீ விரும்பியபடி மருத்துவ படிப்பு படிக்க வைக்கிறேன் என்று கூறினேன்," என்றபடி கண்ணீர் மல்க சௌந்தர்யாவின் தயார் ருக்மணி கூறினார்.

தாய் உடல் நிலை கருதியே மருத்துவம் படிக்க நினைத்தார்

"அம்மாவுக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ளது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை அளித்து வந்தோம். குடும்ப வறுமை சூழல் காரணமாக அவ்வப்போது பணம் கொடுத்து சிகிச்சை பெறுவது கஷ்டமாக இருந்தது. இதனால் நாம் மருத்துவ படித்தால் அம்மாவுக்கு நாமே மருத்துவம் பார்க்கலாமே என்ற நோக்கத்தில்தான் சௌந்தர்யா மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவை வளர்த்தாள். ஆனால் அந்த கனவு நிறைவேறுவதற்கு முன்பே நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள் எனது தங்கை," என்று வேதனையுடன் பேசினார் சௌந்தர்யாவின் மூத்த அக்கா கீதா.

நீட் மரணங்கள்
 
படக்குறிப்பு,

செளந்தர்யாவின் மூத்த அக்கா கீதா

நீட் தேர்வு நடைபெற்ற அன்று மாலை வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கூறிய சௌந்தர்யா. ஒருவேளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரடியாக எழுதயிருந்தால் நீட் தேர்வு சுலபமாக இருந்திருக்குமென சகோதரிகளிடம் பகிர்ந்துள்ளார்.

"சௌந்தர்யா எந்த தேர்வு எழுதினாலும் தேர்வு முடிவடைந்த பிறகு, தான் எழுதிய விடைகள் சரியானதா என்று பார்ப்பது வழக்கம். அதேபோன்று கடந்த 14ஆம் தேதியன்று நீட் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுப்போம் என்று வினா, விடைகளை ஆராய்ந்துள்ளார். அப்படி விடைகளை பார்த்தபோது நாம் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியுற்று விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தாள். நம்முடைய மருத்துவர் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் மற்றும் தோல்வி பயத்தால் இவ்வாறு செய்து கொண்டாள்," என்கிறார் கீதா.

பள்ளியில் சிறந்த மாணவி

நீட் மரணங்கள்

இவர்களை தொடர்ந்து வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சௌந்தர்யாவின் வகுப்பு ஆசிரியர்களை பிபிசி தமிழ் சந்தித்தது.

"சௌந்தர்யா படிப்பின் மீது கொண்ட ஆர்வம், ஈடுபாடு மிகப் பெரியது. எங்கள் பள்ளியில் இருந்து ஒரு மருத்துவர் உருவாகிறார் என்ற எதிர்பார்ப்பு எங்கள் அனைவருக்குமே இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்துவிட்டார். அவசரப்பட்டு இப்படியொரு முடிவு எடுத்துவிட்டார். குறிப்பாக மாணவர்கள் அனைவருமே நல்ல முறையில் தேர்வுக்கு தயாராகிறார்கள். ஆனால் நம்பிக்கையோடு ஒரு முறை தவறிவிட்டால், அடுத்தமுறை முயற்சி செய்யலாம். அரசு பள்ளி மாணவர்கள் என்பதால் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது," என்று சௌந்தர்யாவின் இயற்பியல் ஆசிரியர் குமரவேல் தெரிவித்தார்.

5ஆண்டுகளில் 16 மாணவர்கள் பலி

பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தீவிரமான எதிர்ப்பு நிலவுகிறது. மாணவர்கள் தற்கொலைகளும் அதிகமாக நடக்கின்றன. மேலும் தமிழ்நாட்டுக்கு நீட் வந்தபின் 2017ல் நடந்த அனிதா தற்கொலை உள்பட கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

உளவியலாளர் கூறுவது என்ன?

நீட் மரணங்கள்

மாணவர்கள் தற்கொலை குறித்து உளவியலாளர் வி.சுனில் குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. தற்கொலையை நம்மால் 100 சதவீதம் தடுக்க முடியும். பொதுவாக தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் ஒரு எச்சரிக்கை அறிகுறியை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருப்பார்கள். அப்படி அவர்கள் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் கவனமாக இருக்க வேண்டும். மற்றும் சிலர் தற்கொலையை பற்றி பேசினால் தற்கொலை செய்து கொள்வர்களோ என்றும் நினைப்பதுண்டு. இந்த அச்சம் காரணமாக அதைப்பற்றி உரிய நபரிடம் பேசாமலே இருப்பார்கள். ஆனால் மிகவும் தவறான அணுகுமுறை.

சம்மந்தப்பட்ட நபர் மீது தற்கொலை எண்ணத்தில் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் உடனடியாக அவர்களிடம் அதைப் பற்றி பேசவேண்டும். அவர்கள் மறுகணம் பேசும்போது அதை செவிகொடுத்து கேட்க வேண்டும். அந்த நேரத்தில் அவர்களிடம் புத்திமதி கூறுவது, நீதிக்கதைகள் திணிப்பது போன்றவற்றால் தற்கொலையை தடுக்க முடியாது. அவர்கள் முழுவதுமாக கூறிய பிறகு பெற்றோர் சரியான முறையில் அணுகலாம். ஒருவேளை பெற்றோரால் கையாள முடியாத சூழலில் மனநல ஆலோசகரை அணுகவேண்டும்," என்று உளவியலாளர் வி.சுனில் குமார் கூறுகிறார்.

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

நீட் தேர்வு எதிரொலியாக மாணவர்கள் தொடர் தற்கொலை காரணமாக நீட் தேர்வில் மனநலம் சார்த்த ஆலோசனை பெறுவதற்கு 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

அப்போது பேசிய அவர், "இந்த எண்ணை தொடர்பு கொண்டால் மனநல மருத்துவர்களும், மருத்துவ ஆலோசகர்களும் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள். உடல் பலம், மன பலம் கொண்டவர்களாக மாணவர்களை வளர்க்க வேண்டும். பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுக்க வேண்டாம்," என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம், தற்கொலை எண்ணம் உடையோர் உளவியல் ஆலோசனைக்கு 24 மணி நேர அரசு உதவி எண் 104-ஐ தொடர்பு கொள்ளவும்.

https://www.bbc.com/tamil/india-58610106

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வு தமிழ்நாட்டில் உள்ள ஏழை மாணவர்களுக்கு எதிராக கொண்டுவரபட்டதாக ஒரு கருத்து உண்டு
தமிழ்நாட்டில் மிகவும் ஒடுக்கபட்டு ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் பழங்குடி இனத்தவர்களே.ஜெய்பீம் என்ற தமிழ்படம் பற்றிய யாழ்கள விமர்சனங்களிலும் காணலாம்.


தமிழ்நாட்டில் அப்படியான பழங்குடி இனத்தை சேர்ந்த அப்பா இல்லாத பாதிக்கபட்ட தாயுடன் வசித்து வரும் ஒரு  ஏழை மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று MBBS படிக்க போகின்றார் 👍
https://timesofindia.indiatimes.com/city/coimbatore/first-tribal-girl-to-pass-class-xii-clears-neet/articleshow/87494389.cms

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.