Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  செவ்வாய் (19 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

5)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

SCO  vs   PNG

எல்லோருமே  ஸ்கொட்லாந்து வெல்வதாகக் கணித்துள்ளனர்.

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா ✔️ அல்லது முட்டையா 🍳 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

👇

6)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட்     

OMA  vs  BAN

எல்லோருமே பங்களாதேஷ் வெல்வதாகக் கணித்துள்ளனர்.

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா 💯  அல்லது முட்டையா 🥚 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 🤠

  • Replies 1.2k
  • Views 89.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்துக்கு சப்போட் பண்ணியவர்கள் அது விளையாடிய எந்த மட்ச்சாவது பார்த்து உள்ளார்களா  .

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

நெதர்லாந்துக்கு சப்போட் பண்ணியவர்கள் அது விளையாடிய எந்த மட்ச்சாவது பார்த்து உள்ளார்களா  .

நெதர்லாந்தில் விளையாடும் சிலர் இங்கிலாந்தில் தொழில்முறை ஆட்டமும் ஆடுவதுண்டு.  2009 போட்டியில் இங்கிலாந்தை வீழ்தினார்கள். 

1 hour ago, கிருபன் said:

இன்றைய இரண்டாவது போட்டியில் நமீபியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய சிறிலங்கா அணி 3 விக்கெட் இழப்புடன்  100 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 மறுத்தான் 8
2 நந்தன் 8
3 முதல்வன் 6
4 சுவி 6
5 வாத்தியார் 6
6 ஏராளன் 6
7 ஈழப்பிரியன் 6
8 கோஷான் சே 6
9 வாதவூரான் 6
10 சுவைப்பிரியன் 6
11 எப்போதும் தமிழன் 6
12 கறுப்பி 6
13 ரதி 6
14 அஹஸ்தியன் 6
15 பிரபா சிதம்பரநாதன் 6
16 பையன்26 4
17 கிருபன் 4
18 நுணாவிலான் 4
19 நீர்வேலியான் 4
20 குமாரசாமி 4
21 தமிழ் சிறி 4
22 கல்யாணி 4

எல்லோரும் சிறிலங்கா வெல்லும் எனக் கணித்ததால் நிலைகளில் மாற்றம் இல்லை.

இன்றைய நமிபியா ஆட்டத்தை ஸ்கையில் காட்டவில்லை. இந்தியா இங்கிலாந்து வார்ம் அப் மேட்ச்சை காட்டினார்கள்.#கொழுப்பு

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நெதர்லாந்தில் விளையாடும் சிலர் இங்கிலாந்தில் தொழில்முறை ஆட்டமும் ஆடுவதுண்டு.  2009 போட்டியில் இங்கிலாந்தை வீழ்தினார்கள். 

இன்றைய நமிபியா ஆட்டத்தை ஸ்கையில் காட்டவில்லை. இந்தியா இங்கிலாந்து வார்ம் அப் மேட்ச்சை காட்டினார்கள்.#கொழுப்பு

நன்றி ...எனக்கு தெரிந்திருக்கவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

நன்றி ...எனக்கு தெரிந்திருக்கவில்லை 

நீங்கள் சொன்னதிலும் நியாயம் உண்டுதான். நான் நினைக்கிறேன் நெதர்லாந்து என போட்டவர்கள் அதிர்ச்சி முடிவு ஒன்றை எதிர் பாத்திருக்ககூடும். நேற்று ஸ்கொட்லண் செய்தமாரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரதி said:

நெதர்லாந்துக்கு சப்போட் பண்ணியவர்கள் அது விளையாடிய எந்த மட்ச்சாவது பார்த்து உள்ளார்களா  .

ஆமாம். இடையிடையே பார்ப்பதுண்டு. அவர்களில் சிலர் இங்கு கவுன்ரி ரீம்களில் விளையாடுகின்றார்கள்.

45 minutes ago, goshan_che said:

இன்றைய நமிபியா ஆட்டத்தை ஸ்கையில் காட்டவில்லை. இந்தியா இங்கிலாந்து வார்ம் அப் மேட்ச்சை காட்டினார்கள்.#கொழுப்பு

நீங்கள் 404 இல் மட்டும் நின்றுள்ளீர்கள்! மட்ச் நன்றாகத்தான் இருந்தது😁

Sky Sports Mix channel 416 இல் நமீபியா - சிறிலங்கா மட்ச் போனது! இடையிடையே பார்த்தேன்😁

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

நீங்கள் 404 இல் மட்டும் நின்றுள்ளீர்கள்! மட்ச் நன்றாகத்தான் இருந்தது😁

Sky Sports Mix channel 416 இல் நமீபியா - சிறிலங்கா மட்ச் போனது! இடையிடையே பார்த்தேன்😁

அட அப்படியா? நான் மெயிண் இவண்டையும், கிரிகெட் சனலையும் மாத்தி மாத்தி பார்த்து விட்டு விட்டுவிட்டேன்🤦‍♂️.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நெதர்லாந்துக்கு சப்போட் பண்ணியவர்கள் அது விளையாடிய எந்த மட்ச்சாவது பார்த்து உள்ளார்களா  .

நெத‌ர்லாந் அணியில் திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்

ஜ‌பிஎல்ல‌ விளையாடின‌ இர‌ண்டு வீர‌ர்க‌ள் ம‌ற்றும் இங்லாந் கிள‌ப்புக‌ளில் விளையாடின‌ வீர‌ர்க‌ளும் இருக்கின‌ம்

நெத‌ர்லாந் க‌ப்ட‌ன் செய்த‌ த‌வ‌று நாண‌ய‌த்தில் வென்ற‌தும் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்க‌னும்

அர‌பி மைதான‌த்தில் சுட்டெரிக்கும் வெய்யிலில் ஓட்ட‌ம் எடுப்ப‌து சிர‌ம‌ம்.............இர‌வு நேர‌ போட்டி என்றால் அதிக‌ ஓட்ட‌ம் எடுக்க‌லாம் அந்த‌ மைதான‌த்தில் ப‌க‌ல் பொழுதில் ஓட்ட‌ம் எடுப்ப‌து சிர‌ம‌ம்

அயர்லாந்தின் தொட‌க்க‌ வீர‌ர்க‌ளை அவுட் ஆக்கினா 
வெற்றிய‌ உறுதி செய்ய‌லாம்.................

நேற்று வ‌ங்காளாதேஸ் தோல்வி அடைவின‌ம் என்று பெரிசா ப‌ல‌ர் நினைத்து இருக்க‌ மாட்டின‌ம்

120ஓட்ட‌த்துக்குள்ள‌ ம‌ட‌க்கி இருக்க‌னும் கூடுத‌லா 20 ஓட்ட‌ம் விட்டு கொடுத்திட்டின‌ம்

141 எடுத்தால் வெற்றி ஆனால் ப‌ங்காளாதேஸ் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்க‌ வில்லை................

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய பபுவா நியூகினி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து  148 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: ஸ்கொட்லாந்து அணி 17 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

யாழ்களப் போட்டியாளர்கள் எல்லோரும் ஸ்கொட்லாந்து வெல்லும் என்று கணித்ததால் தலா இரண்டு புள்ளிகளை எடுத்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

👇

6)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட்     

OMA  vs  BAN

எல்லோருமே பங்களாதேஷ் வெல்வதாகக் கணித்துள்ளனர்.

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா 💯  அல்லது முட்டையா 🥚 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 🤠

எல்லோருக்கும் முட்டைதான் போலிருக்கு!!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

எல்லோருக்கும் முட்டைதான் 

முத‌ல் சொன்ன‌து போல‌ இன்று வ‌ங்காளாதேஸ் வெல்ல‌ இள‌ம் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் Mahedi Hasan தான் கார‌ண‌ம்
வேகப் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் ப‌வ‌ர் பிலேக்கே நிறைய‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்திட்டின‌ம்

பிற‌க்கு சுழ‌ல் ப‌ந்துக்கு ஓமான் அணியால் அடிச்சு ஆட‌ முடிய‌ வில்லை.................😁😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு களத்தில் இறங்கிய ஓமான் அணி 9 விக்கெட்களை இழந்து  127 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

முடிவு: பங்களாதேஷ் அணி 26 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 மறுத்தான் 12
2 நந்தன் 12
3 முதல்வன் 10
4 சுவி 10
5 வாத்தியார் 10
6 ஏராளன் 10
7 ஈழப்பிரியன் 10
8 கோஷான் சே 10
9 வாதவூரான் 10
10 சுவைப்பிரியன் 10
11 எப்போதும் தமிழன் 10
12 கறுப்பி 10
13 ரதி 10
14 அஹஸ்தியன் 10
15 பிரபா சிதம்பரநாதன் 10
16 பையன்26 8
17 கிருபன் 8
18 நுணாவிலான் 8
19 நீர்வேலியான் 8
20 குமாரசாமி 8
21 தமிழ் சிறி 8
22 கல்யாணி 8

எல்லோருக்கும் புள்ளிகள் கிடைத்ததால் நிலைகளில் மாற்றம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  புதன் (20 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

7)    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

NAM  vs  NED

3 பேர் நமீபியா அணி  வெல்வதாகவும்   19 பேர் நெதர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 நமீபியா

ஏராளன்
கறுப்பி
ரதி

நெதர்லாந்து

முதல்வன்
சுவி
வாத்தியார்
பையன்26
ஈழப்பிரியன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கல்யாணி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🙈 🌞

👇

8 )    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி    

SRI  vs  IRL

19 பேர் சிறிலங்கா அணி  வெல்வதாகவும்   3 பேர் அயர்லாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

சிறிலங்கா

முதல்வன்
சுவி
வாத்தியார்
ஏராளன்
பையன்26
ஈழப்பிரியன்
வாதவூரான்
சுவைப்பிரியன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
குமாரசாமி
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

அயர்லாந்து

கோஷான் சே
மறுத்தான்
நந்தன்

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?😸 💩

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2021 at 16:29, நீர்வேலியான் said:

ஆமைதான் கடைசியில் வெல்லும். 

வேணாம் சாமி, வேணாம்🤣

7 hours ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய பபுவா நியூகினி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து  148 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: ஸ்கொட்லாந்து அணி 17 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

யாழ்களப் போட்டியாளர்கள் எல்லோரும் ஸ்கொட்லாந்து வெல்லும் என்று கணித்ததால் தலா இரண்டு புள்ளிகளை எடுத்துள்ளனர்.

என்னை தவிர எத்தனை பேர் ஸ்கொட்லாந்து அடுத்த சுற்றுக்கு போகும் எண்டு போட்டவை ஜி?

1 hour ago, கிருபன் said:

அயர்லாந்து

கோஷான் சே
மறுத்தான்
நந்தன்

அந்தோணியாரே என்ர லக் அந்த ரெண்டு பாவங்களையும் இழுத்தி விழுத்தாம பாரும் தெய்வமே🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அந்தோணியாரே என்ர லக் அந்த ரெண்டு பாவங்களையும் இழுத்தி விழுத்தாம பாரும் தெய்வமே🤣

தம்பீ

ஏற்கனவே பிள்ளையார் உங்கள் மேல் கடுப்பாக இருக்கிறார்.

இப்ப உங்களால மற்ற இருவரும் பிள்ளையாரின் கோவத்துக்கு இலக்காகப் போகிறார்கள்.

5 hours ago, goshan_che said:

வேணாம் சாமி, வேணாம்🤣

என்னை தவிர எத்தனை பேர் ஸ்கொட்லாந்து அடுத்த சுற்றுக்கு போகும் எண்டு போட்டவை ஜி?

அந்தோணியாரே என்ர லக் அந்த ரெண்டு பாவங்களையும் இழுத்தி விழுத்தாம பாரும் தெய்வமே🤣.

உங்களுக்கு என்னுடைய லக்கை பற்றி தெரியாது. பொறுத்திருந்து பாருங்கள் என்னுடைய லக் என்னவென்று புரியும்🤣

லொத்தர் சீட்டிலுப்பில் ஒரு நம்பரில் 500,000 பவுண்சை இழந்தவனாக்கும், என்கிட்ட லக்க பத்தி பேசிறீங்க ம்ம்ம் 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

கோஷான் சே
மறுத்தான்
நந்தன்

என் கிரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன். ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

என்னை தவிர எத்தனை பேர் ஸ்கொட்லாந்து அடுத்த சுற்றுக்கு போகும் எண்டு போட்டவை ஜி?

பலர் போட்டிருக்கினம். ஆனால் முதலாவதாக வரும் என்று யாரும் கணித்ததாகத் தெரியவில்லை!! வெள்ளிக் கிழமை தெரியும்😂

8 hours ago, goshan_che said:

அந்தோணியாரே என்ர லக் அந்த ரெண்டு பாவங்களையும் இழுத்தி விழுத்தாம பாரும் தெய்வமே🤣.

நீங்கள் பெரிய நண்டெல்லோ 🦀.. கட்டாயம் கீழே வருவினம்🤣

3 hours ago, மறுத்தான் said:

உங்களுக்கு என்னுடைய லக்கை பற்றி தெரியாது. பொறுத்திருந்து பாருங்கள் என்னுடைய லக் என்னவென்று புரியும்🤣

லொத்தர் சீட்டிலுப்பில் ஒரு நம்பரில் 500,000 பவுண்சை இழந்தவனாக்கும், என்கிட்ட லக்க பத்தி பேசிறீங்க ம்ம்ம் 😂😂

ஒரு நம்பர் என்ன இரண்டு நம்பர் என்றாலும் கிடைக்காதவரை லக் கிடையாது😃

இந்தப் போட்டியில் சறுக்கு மரமாகத்தான் போகும் போலிருக்கு😜

2 hours ago, நந்தன் said:

என் கிரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன். ☹️

பின்னுக்கு காலில் கொழுவுப்பட்டுக்கொண்டு இழுபட இன்னும் சிலர் இருப்பார்கள் 🦀

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் நான் இந்த திரியில் உள்ள விடயங்களை பக்கம் 1லிருந்து skipசெய்யாமல் வாசித்தேன்.. 

@கிருபன், உங்களுடைய நேரம், தகவல்கள், கேள்விகளை தயாரித்த விதம், புள்ளிகள் அனைத்திற்கும் மிக்க நன்றி.. 

சுவாரசியமாக உள்ளது..super 12லிருந்துதான் ஜேர்மன் தாத்தா 22வது இடமா இல்லை நான் 22 இடமா எனத்தெரியும்..🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்றுதான் நான் இந்த திரியில் உள்ள விடயங்களை பக்கம் 1லிருந்து skipசெய்யாமல் வாசித்தேன்.. 

@கிருபன், உங்களுடைய நேரம், தகவல்கள், கேள்விகளை தயாரித்த விதம், புள்ளிகள் அனைத்திற்கும் மிக்க நன்றி.. 

சுவாரசியமாக உள்ளது..super 12லிருந்துதான் ஜேர்மன் தாத்தா 22வது இடமா இல்லை நான் 22 இடமா எனத்தெரியும்..🙂

இதையெல்லாம் நான் அதிக நேரம் செலவழித்துச் செய்யவில்லை. யாழ் களத்தில் முன்னர் போட்டிகள் நடத்திய கந்தப்பு (அவுஸ்), நவீனன் (ஜேர்மனி) போன்றோரின் மாதிரியைத் தொடர்ந்தேன். சில மாற்றங்கள் செய்ததும், கூகிள் ஷீற்றில் புள்ளிகளையும் நிலைகளையும் உடனடியாக கணிக்க formula க்களைப் பாவித்ததும் மட்டும்தான் நான் செய்தது. அதுவும் template ஆக ஐபில் போட்டிகளில் இருந்து இருக்கின்றது!

எல்லாம் கள உறுப்பினர்களின் சந்தோஷத்திற்குத்தான்😀

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பேரைத் தவிர எல்லாருக்கும் முட்டை

12 minutes ago, வாதவூரான் said:

மூன்று பேரைத் தவிர எல்லாருக்கும் முட்டை

நல்ல டேஸ்டா இருந்தது அதாங்க முட்டை போண்டா

இனிமே  முட்டை போண்டா, முட்டை கோபி,முட்டை ரீ,பச்சை முட்டை தான் குடிக்க வேணும் போல இருக்கிறது😀😀

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ம்பியா வெற்றி
முன்னாள் தென் ஆபிரிக்கா வீர‌ர்
ந‌ம்பியா அணிக்கு விளையாடி அமொக‌ வெற்றி

தென் ஆபிரிக்கா அணியில் புர‌க்க‌னிக்க‌ப் ப‌ட்ட‌ வீர‌ர்க‌ள் ம‌ற்ற‌ நாட்டு குடியுருமை பெற்று ந‌ல்லா விளையாடின‌ம் 

David Wiese அடி அகோர‌ம்
இவ‌ர் தென் ஆபிரிக்கா அணியால் புர‌க்க‌னிக்க‌ப் ப‌ட்ட‌ வீர‌ர்..................🤔

Screenshot-20211020-154446.png 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததும் மூன்றுபேருக்கு தான் போலை இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 4 விக்கெட் இழப்புடன்  166 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: நமீபியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 12
2 மறுத்தான் 12
3 நந்தன் 12
4 கறுப்பி 12
5 ரதி 12
6 முதல்வன் 10
7 சுவி 10
8 வாத்தியார் 10
9 ஈழப்பிரியன் 10
10 கோஷான் சே 10
11 வாதவூரான் 10
12 சுவைப்பிரியன் 10
13 எப்போதும் தமிழன் 10
14 அஹஸ்தியன் 10
15 பிரபா சிதம்பரநாதன் 10
16 பையன்26 8
17 கிருபன் 8
18 நுணாவிலான் 8
19 நீர்வேலியான் 8
20 குமாரசாமி 8
21 தமிழ் சிறி 8
22 கல்யாணி 8

ஜேர்மன் தாத்தாவும் 🌞அவரது சகபாடிகளும் இன்னும் ஒரு அங்குலமும் அரக்கவில்லை 🙈 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.