Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகத் தமிழர்களின் பேரவாவுடன் விரைவில் "மேதகு-2 "

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர்களின் பேரவாவுடன் விரைவில் "மேதகு-2 "

தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது போராட்ட வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மேதகு திரைக்களத்தின் இரண்டாம் படைப்பான, மேதகு-2 தமிழ்த்திரைப்படத்தின் முதல் பார்வை படவடித்தை இயக்குனர் சசிகுமார் மற்றும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜீவி பிரகாஷ் இணைந்து வெளியிட்டனர். மேதகு-2 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி, நவம்பர்-26 அன்று வெளியிடப்படவிருப்பதாக மேதகு திரைக்களம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Gj3P168tih2xB2Fp3lPN.jpg
1K6OSDbCZxpu9TaoTKHe.jpg
zz0iRCPcndGWIymt1HaH.jpg
eJsYhVChs8SHhKQu4cA7.jpg

https://www.thaarakam.com/news/91e70aa2-60b7-4f5e-88ac-03ec399de5fc

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing, bicycle and text

Edited by nedukkalapoovan

  • nedukkalapoovan changed the title to மேதகு - 2 முன்னோட்டம், கார்த்திகை-26
  • கருத்துக்கள உறவுகள்

40 பாகமாக வெளிவர உள்ளதாம். பாகம் 1 போல சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, goshan_che said:

40 பாகமாக வெளிவர உள்ளதாம். பாகம் 1 போல சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

40உம் வந்தால் சும்மா அந்தமாதிரி இருக்கும்! 

என்ன, 70 ஆண்டுகள் ஆகியும் எங்கட தமிழ இவங்களால கதைக்க முடியவில்லை என்பதுதான் வெறுப்பாக உள்ளது. பாகம் ஒன்றிலும் தமிழ் மோசமாக இருந்தது!😣 அதைக் கொஞ்சம் செம்மையாக்கினால் நன்றாக இருக்கும்.

பாகம் ஒண்டே ஏதோ ஒரு தென்கிழக்கு ஆசிய நாட்டில் வெளியாகி (மொழிபெயர்க்கப்பட்டு) அந்நாட்டில் பெரும் பேசுப்பொருளாகியதாம். பின்னர் சிங்களம் ஓடிச்சென்று தடுத்து நிறுத்தியதாம். இதை ஏதோ ஒரு ஆங்கில ஊடகத்தில் வாசித்தனான். நாட்டின் பெயர் ஞாபகமில்லை.

Edited by நன்னிச் சோழன்
added a sentence

On 14/11/2021 at 13:24, goshan_che said:

40 பாகமாக வெளிவர உள்ளதாம். பாகம் 1 போல சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அந்த 40 பாகங்களில்,  கடைசி சில பாகங்களிலாவது  மக்கள் மீது அக்கறையற்ற யுத்த முஸ்தீபுகளால் மக்கள் அடைந்த சொல்லணா துயரங்களும் யுத்தத்தின் கொடுமையால் வட கிழக்கில் உருவான 90000 ம் மேலான கணவனை இழந்த பெண்கள், அவர்களை நம்பியிருக்கும் குழந்தைகள் படும் அவஸ்ததைகள்,   யுத்தத்தில் அங்கவீனம்  அடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளின் அவல வாழ்ககை, நீண்ட கால யுத்தத்தால் கல்வியை இழந்தவர்கள், யுத்த முடிவில் காணாமல் போன உறவுகளை தேடும் மக்களின் கண்ணீர், யுத்த முடிவின் பின்னர் முன்னரை விட மோசமான ஶ்ரீலங்கா அரசின் அடக்குமுறை ஆட்சி ஆகியவையும் காட்சிப்படுத்தினால் அது சிறந்த ஆவணப்படமாக இருக்கும். 

அனால் இவற்றை காட்சிப்படுத்திய “ஆறாம் நிலம்” திரைப்படத்தை புலம் பெயர் தேசியவாதிகள் எவரும் எட்டியும் பார்ககவில்லை.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2021 at 16:55, நன்னிச் சோழன் said:

என்ன, 70 ஆண்டுகள் ஆகியும் எங்கட தமிழ இவங்களால கதைக்க முடியவில்லை என்பதுதான் வெறுப்பாக உள்ளது. பாகம் ஒன்றிலும் தமிழ் மோசமாக இருந்தது!😣 அதைக் கொஞ்சம் செம்மையாக்கினால் நன்றாக இருக்கும்.

இல்லை நன்னி இதுவரைக்கும் வந்ததில இந்த படம்தாம் ஓரளவு நல்லா எம்மை போல் வசன நடை இருந்தது.

கூட வேலை செய்த திருகுமரன், மற்றும் டப்பிங் பேசியோர் எல்லாம் புலம்பெயர் ஈழ தமிழர்களே.

இந்த முறை இன்னும் மெருகூட்டுவார்கள் என நம்புவோம்.

2 hours ago, tulpen said:

யுத்தத்தின் கொடுமையால் வட கிழக்கில் உருவான 90000 ம் மேலான கணவனை இழந்த பெண்கள், அவர்களை நம்பியிருக்கும் குழந்தைகள் படும் அவஸ்ததைகள்,   யுத்தத்தில் அங்கவீனம்  அடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளின் அவல வாழ்ககை, நீண்ட கால யுத்தத்தால் கல்வியை இழந்தவர்கள், யுத்த முடிவில் காணாமல் போன உறவுகளை தேடும் மக்களின் கண்ணீர், யுத்த முடிவின் பின்னர் முன்னரை விட மோசமான ஶ்ரீலங்கா அரசின் அடக்குமுறை ஆட்சி

முதலாம் பாகத்தில் அந்த காலத்துக்குரிய அடக்குமுறையை முடிந்தளவு காட்டி இருந்தார்கள். இனி வரும் பாகங்களில் காலத்துக்கு ஏற்ப காட்டுவார்கள் என நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்+
Just now, goshan_che said:

இல்லை நன்னி இதுவரைக்கும் வந்ததில இந்த படம்தாம் ஓரளவு நல்லா எம்மை போல் வசன நடை இருந்தது.

கூட வேலை செய்த திருகுமரன், மற்றும் டப்பிங் பேசியோர் எல்லாம் புலம்பெயர் ஈழ தமிழர்களே.

இந்த முறை இன்னும் மெருகூட்டுவார்கள் என நம்புவோம்.

👍

ஓம்மண்ணை.. மோசம் என்பதைக் காட்டிலும் ஓரளவு என்பது பொருத்தமான சொல். 
ஆனால் எங்கட அந்த மட்டத்திற்குள் பேச்சு இல்லை. அதைவிடக் கீழாகவே உள்ளது. அதை இன்னும் மேம்படுத்தினால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

மக்கள் மீது அக்கறையற்ற யுத்த முஸ்தீபுகளால்

இதை அவர்கள் எடுக்கமாட்டார்கள்.

நானே lessons learnt அடிப்படையில் ஒரு விவாத பொருளாக எடுப்பேனே ஒழிய, படமாக எடுக்க மாட்டேன்.

33 minutes ago, goshan_che said:

இதை அவர்கள் எடுக்கமாட்டார்கள்.

நானே lessons learnt அடிப்படையில் ஒரு விவாத பொருளாக எடுப்பேனே ஒழிய, படமாக எடுக்க மாட்டேன்.

உண்மை தான் அது ரசிகர்களுகு சுவார்சியமாகவும் இருக்காது. பணமும் வராது. சும்மா நட்டப்பட முடியாது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2021 at 16:55, நன்னிச் சோழன் said:

பாகம் ஒண்டே ஏதோ ஒரு தென்கிழக்கு ஆசிய நாட்டில் வெளியாகி (மொழிபெயர்க்கப்பட்டு) அந்நாட்டில் பெரும் பேசுப்பொருளாகியதாம். பின்னர் சிங்களம் ஓடிச்சென்று தடுத்து நிறுத்தியதாம். இதை ஏதோ ஒரு ஆங்கில ஊடகத்தில் வாசித்தனான். நாட்டின் பெயர் ஞாபகமில்லை.

Vietnam 

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, Nathamuni said:

Vietnam 

இல்லை அது கம்போடியா.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

உண்மை தான் அது ரசிகர்களுகு சுவார்சியமாகவும் இருக்காது. பணமும் வராது. சும்மா நட்டப்பட முடியாது தான்.

நீங்கள் சொல்வதில் ஒரு பேருண்மை மறைந்துள்ளது துல்பென்.

ஏன் ரசிகர்களை கவராது?

ஏன் பணம் வராது?

ஏனென்றால் இதன் target audience இலங்கை தமிழர்கள்.

அந்த இலங்கை தமிழருக்கு உயிரை கொடுத்து, நேர்மையாக போரடியவர்கள் அவர்கள்.

அவர்களில் பிழைகள் இருந்தாலும், இலங்கை தமிழர்களில் பெரும்பாலோனோர் அந்த பிழைகளை திரையில் காண விரும்பபோவதில்லை.

அது தேவையும் இல்லை. 

உங்களுக்கு ஒரு பிள்ளை உள்ளது 90% சரியாகவும் 10% பிழையாகவும் நடக்கிறது.

அந்த பிள்ளையின் 10% பிழையை வீட்டில் சாப்பாடு மேசையில் கதைப்பீர்கள், ஆனால் திருவிழா மேடையில் நாடகமாக போட மாட்டீர்கள்தானே.

இந்த தாயுள்ளம்தான் இப்படி எடுத்தால் இந்த படம் வரவேற்கப்பட்டாது என்பதற்கு காரணம்.

4 minutes ago, goshan_che said:

உங்களுக்கு ஒரு பிள்ளை உள்ளது 90% சரியாகவும் 10% பிழையாகவும் நடக்கிறது.

பிழை 10 வீதம் என்று  எத்தனையோ மடங்கால்  சுருக்கிய பின்னர் இனி என்ன சொல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, tulpen said:

பிழை 10 வீதம் என்று  எத்தனையோ மடங்கால்  சுருக்கிய பின்னர் இனி என்ன சொல்ல. 

நாங்கள் ஜனநாயகவாதிகள் தானே.

நமது % கணிப்புகள் எத்தனையாக இருந்தாலும் - மக்கள் முடிவல்லவா மகேசன் முடிவு?

ஜனநாயகத்தில் dissenting voices மிக முக்கியம். 

ஆனால் ஒட்டுமொத்த மக்களின் பெரும்பான்மை முடிவு/கணிப்பு என்பதும் அதே அளவு முக்கியமானது.

அவர்கள் பற்றிய தமிழ் மக்களில் பெரும்பாலானிரின் பார்வை என்ன என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதொன்றல்ல.

மக்கள் முட்டாள்கள் இல்லை.

நீங்களும், நானும், அவர்கள் 0.1% கூட பிழையே விடவில்லை என்பவர்களும் தாண்டி வந்த அதே அனுபவத்தைதான் ஒட்டு மொத்த மக்களும் தாண்டி வந்துள்ளார்கள்.

அப்படி இருக்கையில் பெரும்பாலான தமிழ் மக்களின் புலிகள் பற்றிய கூட்டு மதிப்பீட்டை புறம்தள்ளி நாம் நடந்தால் நாம் ஜனநாயகவாதிகளாக இருக்க முடியாது.

மீண்டும் சொல்கிறேன் dissenting voices க்கான வெளி மிக அவசியம், ஆனால் அவர்கள் பற்றிய மதிப்பீட்டை, let’s leave it to the Tamil people, let’s leave it to history.

இதுதான் எப்போதும் என் நிலைப்பாடு.  

Edited by goshan_che

@goshan_che எனது முதல் கருத்து யுத்தத்தின் விளைவு  மக்களுக்கு ஏற்படுத்திய  சொல்லொணா துயரங்களை திரையில் காட்ட கூடாது என்ற மனநிலை சரியானதா என்பதே. அதை மறைப்பது இலாபகரமானதா? உங்கள் அடுத்தடுத்து கருத்துடன் அது அடிபட்டு போய்விட்டது.  

யுத்ததின் வலிகளை காட்டிய ஆறாம் நிலம்  தீவிர தேசியவாதிகளுக்கு பிடிக்காமல் விட்டதேன்?

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

யுத்ததின் வலிகளை காட்டிய ஆறாம் நிலம்  தீவிர தேசியவாதிகளுக்கு பிடிக்காமல் விட்டதேன்?

நான் அறிய வரவேற்பு நன்றாகத்தான் இருந்தது?

2 minutes ago, goshan_che said:

நான் அறிய வரவேற்பு நன்றாகத்தான் இருந்தது?

சுப்பர் கோஷான். உங்கள் வாதத்திறமை அபாரம். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

சுப்பர் கோஷான். உங்கள் வாதத்திறமை அபாரம். 

🤣 வாதத்துக்காக சொல்லவில்லை. இங்கே கூட ஒரு திரி ஓடியதே.

மேதகு படத்துக்கு இருக்கும் hero worship அதில் இருக்காதுதானே?

ஆனால் அதை யாரும் விமர்சிக்கவில்லை?

நான் உண்மையில் படத்தை பார்க்கவில்லை - உண்மையை ஒப்புவித்த சரியான மனதை பிழியும் படம் என்றார்கள்.

நம்ம மனசில் இனி பிழிய ஏதும் இல்லை என்பதால் தவிர்த்து விட்டேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

@goshan_che எனது முதல் கருத்து யுத்தத்தின் விளைவு  மக்களுக்கு ஏற்படுத்திய  சொல்லொணா துயரங்களை திரையில் காட்ட கூடாது என்ற மனநிலை சரியானதா என்பதே. அதை மறைப்பது இலாபகரமானதா? உங்கள் அடுத்தடுத்து கருத்துடன் அது அடிபட்டு போய்விட்டது.  

யுத்ததின் வலிகளை காட்டிய ஆறாம் நிலம்  தீவிர தேசியவாதிகளுக்கு பிடிக்காமல் விட்டதேன்?

யுத்தம் என்றால் விளைவுகள் இருக்கத்தான் செய்யும்.
தேனும் பாலும் கலந்த போராட்டங்கள் எங்குமில்லை.

உங்களைப் போன்ற மதில் மேல் பூனைகள் வெற்றியென்றால் பொன்னாடை போர்த்துவீர்கள்.
தோல்வியென்றால் கோவணத்தையும் உருவுவீர்கள்.

5 hours ago, குமாரசாமி said:

யுத்தம் என்றால் விளைவுகள் இருக்கத்தான் செய்யும்.
தேனும் பாலும் கலந்த போராட்டங்கள் எங்குமில்லை.

உங்களைப் போன்ற மதில் மேல் பூனைகள் வெற்றியென்றால் பொன்னாடை போர்த்துவீர்கள்.
தோல்வியென்றால் கோவணத்தையும் உருவுவீர்கள்.

யுத்தம் என்றல் விளைவுகள் இருக்கும் தான் அதைப் பெரிசுபடுத்த தேவையில்லை என்று முன்பு ஒரு முறை கோத்தபாய சொன்னதை இப்போது குமாரசாமி. ஆமோதித்திருப்பதல் அதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்போல உள்ளது. 😂

8 hours ago, goshan_che said:

மேதகு படத்துக்கு இருக்கும் hero worship அதில் இருக்காதுதானே?

எனது அனுபவத்தில்,  Hero worship ஐ உருவாக்கவும் ஆள்சேர்பபுக்கும் உதவும்வரை மக்களின் அவலங்களும் காட்சிப்படுத்தப்படும். (நான் நேரில் கண்டது) 

அதே வேளை மக்களின் அவலங்கள் சிலரது Hero பிம்பங்களை உடைக்கும் என்றால் அது கள்ள மெளனத்துடன் கடந்து செல்ல வைக்கும் அல்லது புறக்கணிக்க வைக்கும். உண்மையில் போராட்டத்தை உண்மையில் நேசித்த மக்களும் போரளிகளும் தமிழ் தேசியவாதிகளைப் பொறுத்தவரை இப்போது கறிவேப்பிலைகள் தான். 

கோஷான்,

 நான் இதை இங்க அடிக்கடி எழுதுவது வாசகர்களுக்கான பல நோக்கு  பாரவைக்காக தான். இதுவும் நீங்கள் கூறிய ஜனநாயகம் தான். இல்லை யெனில் நரம்பு முறுக்கேற எழுதி இங்குள்ள சிலரின் உப்பு சப்பற்ற பாராட்டை பெற்று சென்றுவிடலாம்.  

மேலே நீங்கள் சொல்வதில் அதிகம் முரண்பட ஏதும் இல்லை துல்பென்.

தனிபட்டு hero worship ஐ நான் வெறுக்கிறேன். ஒரு அளவுக்கு மேல் அது நல்ல தலைமைகளை கூட யதார்தத்தை பார்க்க முடியாமல் தடுக்கும் ஆபத்தான போக்கு என்பதை எமது போராட்டமே காட்டி சென்றுள்ளது. 

ஆனால் ஒரு விடயத்தை ஒப்பேற்ற சில விம்பங்கள் கட்டி எழுப்பபடுவதும், அவற்றை பாதுகாக்க முயல்வதும் உலகெங்கும் நடப்பதுதான்.

ஆனால் முழுக்க, முழுக்க விம்பமாக கட்டி எழுப்பபடுபவை அந்த மக்களாலேயே நிராகரிக்கபடும் (சதாம், மிலோசவிச்). ஆனால் கொஞ்சம் விம்பமும், அதிகம் உண்மையுமாக இருப்பவை, உலகமே எதிர்த்து நின்றாலும் அந்த மக்களால் மதிக்கப்படும்.

அவர்களை முற்றாக அழித்தே விட்டர்கள். அவர்கள் பெயரில் காளான்கள் கொள்ளை அடிக்கிறன. இப்போ அவர்கள் இல்லவே இல்லை. இப்படி இருந்தும், அவர்கள் இருக்கும் போது நடந்த தவறுகளையும் தாண்டி, மிக பெரும்பாலான தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் அவர்கள் ஒரு உன்னதமான இடத்தில் உள்ளார்கள் அல்லவா?

இதுதான் மக்கள் தீர்ப்பு. வரலாற்றின் தீர்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நான் இதை இங்க அடிக்கடி எழுதுவது வாசகர்களுக்கான பல நோக்கு  பாரவைக்காக தான். இதுவும் நீங்கள் கூறிய ஜனநாயகம் தான். இல்லை யெனில் நரம்பு முறுக்கேற எழுதி இங்குள்ள சிலரின் உப்பு சப்பற்ற பாராட்டை பெற்று சென்றுவிடலாம்.  

நிச்சயமாக. இந்த யாழ் களத்தில் பலர் பக்கம் பக்கமாக எழுதலாம், பச்சைகளையும் அள்ளலாம், ஆனால் சிந்தனையை தூண்டும் value உள்ள பதிவாளர் என்றால் உங்களை போல ஒரு சிலர்தான் 👏🏾.

ஆனா எனக்கு 2013 காலத்தில் எழுதிய துல்பெனின் எழுத்துகள் அதிகம் பிடிக்கும்.

இங்கே எழுதுபவர்களின் போலித்தனங்களையும், தனிப்பட்ட பிராண்டல்களையும் கண்டு, அதற்கு எதிர்வினையாற்ற போய் - உங்கள் பார்வையையும், தொனியையும் கடுமையாக்கி கொண்டீர்களோ எனவும் யோசிப்பதுண்டு.

ஆனால் இப்படி எழுதுவதற்கு நீங்கள் கொடுக்கும் விலை அதிகம். It’s not easy being the odd man out. 

அதற்க்காக உங்கள் மீது எப்போதும் பெரு மதிப்பு உண்டு.

1 hour ago, goshan_che said:

நன்றி கோஷான். எனது தற்போதை எழுத்துக்கள் கடுமையானவை என்று நீங்கள் கருதினால்,  அதற்கு காரணம் எமக்கு உண்மை என்று நம்ப வைக்கப்பட்ட பல விடயங்கள் படு மோசமான பொய்கள் என்பதை  சுயாதீனமான தகவல்கள், எழுத்துக்கள் மூலம் காலங்கடந்து அறிந்து கொண்டதால் இருக்கலாம்.

அத்தோடு இங்கு புலம் பெயர்ந்து தமது சொந்த உழைப்பில் வளமுடன் வாழ்ந்த பலர் போரட்டத்தில் அதீத பற்று கொண்ட ஒரே காரணத்துக்காக அந்த பலவீனத்தை சாதகமாக வைத்து உள்ளூர் புலித்தலைவர்களால் அவர்கள் மீது மேற்கொண்ட மினி முள்ளிவாய்க்கால் தாக்குதலால் நிலை குலைந்து தமது பிள்ளைகளுக்கு winterschuhe கூட வாங்க முடியாமல்  அவதிப்பட்டவர்களின் கண்ணீர் கதைகளை கேடதாலும் இருக்கலாம்.

இவற்றை பார்தத பின் எனது வெளிப்படையான கருத்து,  எமக்காக தமது இளைய உயிர்கள் அர்பணித்த மாவீர செல்வங்களும்,  உயிர் தப்பி கண்ணீருடன் வாழும் முன்னாள் போராளிகளும் ஒருவகையில்  victims தான்.  

கோஷான் உங்களுக்கு அபாரமாக இருக்கும் socially competent எனக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்ளுகிறேன். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் படமெடுத்து எமது போராடடத்தின் உண்மை நிலையை உலகிற்கு எடுத்து சொல்வதை விட்டு, எங்களுக்குள் நாங்கள் பெருமை பேசுவதில் என்ன இருக்குது என்று தெரியவில்லை.
புலம் பேர் தமிழர்களது பணத்தில் தான் படம் எடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன் ...அந்த பணத்தை உள்ளூர் திரை பட வளர்ச்சிக்கு கொடுக்கலாம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.