Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் இடம்பெற்ற “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் கருத்தறியும் கூட்டமும் தேரர்களின் நடவடிக்கையும் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் வடக்கு மாகாணத்தில் மூன்றாவது  கூட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக  மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) இடம்பெற்றுள்ளது.

IMG_9748.jpg

இந்த கூட்டம் ஒரே  நாடு, ஒரே சட்டம் செயலணியின் எதிர்கால நடவடிக்கைகள்  தொடர்பான கருத்தறியும் கூட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது. 

இதன்போது  ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட சமூக மட்ட உறுப்பினர்களிடம் மட்டும் ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறியப்பட்டன.

இதன்போது நடைபெற்ற  செய்தி சேகரிப்பதற்கு சென்ற முல்லைத்தீவு பிரதேச  ஊடகவியலாளர்களுக்கு கருத்தறியும் கூட்டம் நடைபெற்றவேளை அனுமதி மறுக்கப்பட்டதோடு செயலணியின் கூட்டத்தின் இறுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்து செயலணியின் தலைவர் ஞானசார தேரர் கருத்து தெரிவித்தார்.

விசேட பொலிஸ் பாதுகாப்புடன் ஞானசார தேரர் தலைமையிலான செயலணி முல்லைத்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததோடு செயலணியின் கூட்டம் இடம்பெற்ற மண்டபத்துக்குள்  அனுமதிக்கப்படுபவர்கள் தொடர்பிலான முடிவுகளை சில பௌத்த தேரர்களே எடுப்பதை அவதானிக்க முடிந்ததது. 

IMG_9754.jpg

ஒவ்வொரு ஊடகவியலாளரின் பின்னாலும் ஒருவர் நிறுத்தப்பட்டிருந்ததோடு செயலணி தலைவரிடம் கேள்வி கேட்ட ஊடகவியலாளர்களையும் பௌத்த பிக்கு ஒருவர் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மண்டபத்துக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் செயலணியிடம்  கருத்து தெரிவித்தவர்களின் கருத்துக்களை காணொளியாக்கிய ஊடகவியலாளர் ஒருவரை செயலணியோடு வருகைதந்த பௌத்த பிக்கு உள்ளிட்டவர்கள் உடனடியாக ஒளிப்பதிவு செய்தவற்றை நீக்குமாறு கோரி கெமராவை வாங்கி அந்த காணொளியை நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றிருந்த பொதுபலசேனா அமைப்பின் தலைவரை வன்னி தமிழ் இளைஞர்கள் சங்கம் வரவேற்கிறோம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் பரந்தன் முல்லைத்தீவு வீதி எங்கும் ஒட்டபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது .

முல்லைத்தீவில் இடம்பெற்ற “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் கருத்தறியும் கூட்டமும் தேரர்களின் நடவடிக்கையும் !  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அங்கபாரு காவிக்கலர் சாரியோட ஒரு அம்மவும் இருக்கிறா...யோகேசுவரி எப்ப பிக்குணியா மாறினவ?

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு வேஷம் போட்டால்; கொப்புக்கு கொப்பு தாவித்தானே ஆகணும்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கனடாவில கூட்டம் குழப்பின "ஜனநாயகப் போராளிகளை" இங்கே கொண்டு வந்து விட்டிருக்க வேணும்! இங்கேயல்லவா இவர்களின் தேவை அதிகம் இருக்கிறது?😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Justin said:

இந்த கனடாவில கூட்டம் குழப்பின "ஜனநாயகப் போராளிகளை" இங்கே கொண்டு வந்து விட்டிருக்க வேணும்! இங்கேயல்லவா இவர்களின் தேவை அதிகம் இருக்கிறது?😎

அப்ப சிறிலங்கா முற்றுமுழுதான ஜனநாயக நாடு எண்டு சொல்ல வாறியள் அப்பிடித்தானே?

கெக்கட்டம் விட்டு சிரிச்சவரும் இதுக்கு பதில் சொல்லலாம்.

இப்பிடி போராட்டம் செய்யுமளவிற்கு அந்த நாட்டில் சுதந்திரம் இருக்கு????

சுமந்திரன் என்னத்துக்கு சிறிலங்காவிலை ஆமி,பொலிஸ் படை சூழ உலா போய்வாறார் எண்டதுக்காவது பதில் தெரியுமோ?

சிரிச்சவரும் பதில் சொல்லலாம்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

அப்ப சிறிலங்கா முற்றுமுழுதான ஜனநாயக நாடு எண்டு சொல்ல வாறியள் அப்பிடித்தானே?

கெக்கட்டம் விட்டு சிரிச்சவரும் இதுக்கு பதில் சொல்லலாம்.

இப்பிடி போராட்டம் செய்யுமளவிற்கு அந்த நாட்டில் சுதந்திரம் இருக்கு????

சுமந்திரன் என்னத்துக்கு சிறிலங்காவிலை ஆமி,பொலிஸ் படை சூழ உலா போய்வாறார் எண்டதுக்காவது பதில் தெரியுமோ?

சிரிச்சவரும் பதில் சொல்லலாம்.

இல்லாட்டி எப்பிடியாம் இவளவு கருத்துகளையும் நீங்கள் எழுத முடியுது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, nochchi said:

இல்லாட்டி எப்பிடியாம் இவளவு கருத்துகளையும் நீங்கள் எழுத முடியுது. 

50 வருடங்களுக்கு முன்னர் தமிழின உரிமைகள் கோரி ஆர்ப்பாட்டம் செய்த தமிழ் இளைஞர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்த  நாடு அது.
உரிமை கோரி உண்ணாவிரதம் இருந்து சாகும் தறுவாயில் இருந்த  இளைஞர்களுக்கு வாய் வழியே சயிக்கிள் ரியூப் ஓட்டி பால் ஊத்திய நாடு அது. ஜனநாயக ரீதியில் உரிமை கேட்டவர்களை சித்திரவதை செய்து கொன்ற நாடு அது.அன்று தமிழர்களிடம் துவக்கும் இல்லை.குண்டு வெடிப்புகளும் இல்லை. இருந்தும் அன்றே அவர்கள் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள். இதை அறியா மூடர்கள் இன்றும் ஆயுத போராட்டத்தை எள்ளி நகையாடுகின்றனர்.

சிறைச்சாலைகளில் கூட தமிழர்களுக்கு பாதுகாப்பில்லாத நாட்டைப்பற்றி எமக்கு இங்கு சிலர் பாடம் எடுக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

அது முந்தி நீங்கள் அங்கை இருக்கேக்கை ஐயா. இப்ப அப்பிடி இல்லை. உங்களை யாரோ புலம்பெயர் புலிவாலுகள் மூளைச்சலவை செய்துவிட்டினம் போலகிடக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, nochchi said:

அது முந்தி நீங்கள் அங்கை இருக்கேக்கை ஐயா. இப்ப அப்பிடி இல்லை. உங்களை யாரோ புலம்பெயர் புலிவாலுகள் மூளைச்சலவை செய்துவிட்டினம் போலகிடக்குது.

மெய்யே தம்பி.......அப்ப சிறிலங்காவிலை "வீ வோன்ட் தமிழீழம்" எண்டால் ஆமிக்காரன் சிரிச்சுக்கொண்டு போவான் என்ன?

அது சரி சிறிலங்காவிலை தமிழருக்கு என்ன பிரச்சனை எண்டு கேக்கிறன்? மழை வெள்ளம் எண்டு கேள்விப்பட்டன்....மற்றும் படி....?????????? ஒண்டுமில்லை....ஒண்டுமேயில்லை

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி தமிழ் இளைஞர்கள் எப்ப சிங்களத்தை முதன்மை மொழியாக்கினர். அதுசரி.. வன்னியில் இருக்கும் இளைஞர்கள் என்றால் சிங்கள இராணுவம் தான் அதிகம். அதன் தூதுவர் ஞானசார தேரர்.. (அதென்ன பொதுபலசேனா..அதை தான் அவரே கலைச்சிட்டாரே.. அதையும் மறந்திட்டாங்கள் போல)

என்ன.. மாவிலாறில் வைச்சு ஒழுங்கா கொடுத்ததை தொடர்ந்திருந்தால்.. இந்த நிலைமை தமிழுக்கு.. வன்னிக்கு வந்திருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

மெய்யே தம்பி.......அப்ப சிறிலங்காவிலை "வீ வோன்ட் தமிழீழம்" எண்டால் ஆமிக்காரன் சிரிச்சுக்கொண்டு போவான் என்ன?

அது சரி சிறிலங்காவிலை தமிழருக்கு என்ன பிரச்சனை எண்டு கேக்கிறன்? மழை வெள்ளம் எண்டு கேள்விப்பட்டன்....மற்றும் படி....?????????? ஒண்டுமில்லை....ஒண்டுமேயில்லை

ஓமண்ணை போய் சொல்லிப்பாருங்கோ, ஒருகையிலை துவக்கை மடக்கி வைச்சிட்டு மறுகைய உயர்த்தி  தானும் சேர்ந்து சொல்லுவானாமே எண்டு கேள்விப்பட்டனான். மழையெல்லாம் சின்னப்பிரச்சினையாம். மரக்கறி படு மலிவாம். கரட்280, பொன்னாங்கானி 70, பீற்றூட் 120, கீரை150,பச்சைமிளகாய்120, பயித்தங்காய் 600......இப்பிடிப்போகுதாமெண்டு எங்கள்மண் பகுதியிலை உள்ள காணொளி சொல்லுது...  அப்ப நாடு நல்லாத்தானே இருக்குது. பேசாமை பெட்டியை கட்டலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டு கேட்டியளே! நாட்டில நான் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கேல்லை எண்டவர், கனடாவில நிண்டு சொல்லுறார்; மட்டக்களப்பில மேய்ச்சல் தரையை தென்னமரவாடி நிலத்தை  தொல்பொருளாரச்சி அணி தடுத்ததாம், தாங்களும் நிக்க ஆராய்ச்சி செய்யச் சொல்லி இவை கேட்டு அங்கே ஒன்றுமில்லை என்று மூடிக்கொண்டு போனவையாம், பிறகு அது  அரசுக்கு வேண்டும் என்று அந்த நிலத்தை தடுத்தவையாம், இவை நீதிமன்றம் போய் அந்த முயற்சியை நிறுத்திச்சினையாம். இப்ப என்னடா வென்றால்! அந்த நிலத்தில் சிங்களவரை அடாத்தாக குடியேற்றப்படுகிறதாம். ஆயுத காலமென்றால் பரவாயில்லையாம் (அது வேறு கதை) என்று அங்கு நின்று கதைவிடுகிறார். இப்போ புரிஞ்சிருக்கும் ஆயுதத்தின் தேவையும், வலிமையையும். அது இருக்க, காணி அபகரிப்பை தடுக்க வேண்டுமென்றால் எங்களுக்கு வாக்கு போடுங்கோ எண்டு  கேட்டவரும் பக்கத்தில இருந்தவர் பாருங்கோ. மக்கள் தான் பாவம்! அங்கேயும் இங்கேயும் அலைகிறார்கள், இழந்தவர்களும் அவர்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, nochchi said:

ஓமண்ணை போய் சொல்லிப்பாருங்கோ, ஒருகையிலை துவக்கை மடக்கி வைச்சிட்டு மறுகைய உயர்த்தி  தானும் சேர்ந்து சொல்லுவானாமே எண்டு கேள்விப்பட்டனான். மழையெல்லாம் சின்னப்பிரச்சினையாம். மரக்கறி படு மலிவாம். கரட்280, பொன்னாங்கானி 70, பீற்றூட் 120, கீரை150,பச்சைமிளகாய்120, பயித்தங்காய் 600......இப்பிடிப்போகுதாமெண்டு எங்கள்மண் பகுதியிலை உள்ள காணொளி சொல்லுது...  அப்ப நாடு நல்லாத்தானே இருக்குது. பேசாமை பெட்டியை கட்டலாம். 

அடி ஆத்தி.. உதென்ன புதுக்கதையாய் கிடக்கு........
இப்ப ஆமிக்காரன் வீட்டுக்கு வீடு சாமன் சக்கட்டையள் எல்லாம் வாங்கி குடுக்கிறானாமெல்லே...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கெக்கட்டம் விட்டு சிரிச்சவரும் இதுக்கு பதில் சொல்லலாம்.

2 hours ago, குமாரசாமி said:

சிரிச்சவரும் பதில் சொல்லலாம்.

எசமான்…சிரிச்சது ஒரு குற்றமா எசமான்🤣

ஆனா நான் சிரிச்சது நீங்கள் நினைச்சதுக்கு இல்லை.

நான் ஊரில இருக்கும் போது உங்க இப்ப கனடாவில விட்டதுண்ட 10% அளவில் சவுண்டு விட வெளிகிட்டு முறையா வாங்கி கட்டின ஆள் 🤣.

மேல செய்திய பாருங்கோ… ஊடகவியளாலரின் வீடியோவ உருவி போட்டு விட்டிருக்கிறார் தேரர்.

கனடாவில ஒருவர் why is the f*^%ing police here. Don’t touch me” எண்டெல்லாம் வேலைக்கு வந்த பொலிஸோடு முறுகியதை பார்த்தேன்.

கனடாவில் செய்வதுபோல் அங்க செய்தால் என்ன நிலைமை எண்டு நினைச்சுப்பார்த்தன்.

எங்கட ஆட்களும் வலு சூரர்தானே.

இடம் கொடுக்கும் இடத்தில் மடம் கட்டுவினம். 

அதைதான் எசமான் நினைசேன்…சிரிச்சேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் போன இடம் அப்பிடி. ஊரில இது நடந்திருக்கணும்; முதல் எச்சரிக்கை! இங்கு இருப்பதென்றால் வாயை மூடிக்கொண்டு இருக்கவேணும், இல்லாவிடில் வெளியேற்றப்படுவீர்கள்! அதை மீறினால் இராணுவம். சிறைக்குள் போனவர்கள் இன்னும் வெளியில் வரலை...  ஐயோ! இது தெரிஞ்சிருந்தால் ஐயா இராணுவத்தோட வந்திருப்பார், தங்கவேலரும் மகிழ்ந்திருப்பார். சாணக்கியனின் பேச்சை  தன் அறையிலிருந்து கேட்ட கோத்தா, சாணக்கியனை தன் அறைக்கு அழைத்து பாராட்டினாராம் என்று சொல்லி  எப்பிடி மகிழ்ந்தார் தங்கவேல். ராணுவமும் வந்திருந்தால்... இன்னும் இரண்டு மடங்கு  மகிழ்ந்திருப்பார்! 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

அப்ப சிறிலங்கா முற்றுமுழுதான ஜனநாயக நாடு எண்டு சொல்ல வாறியள் அப்பிடித்தானே?

கெக்கட்டம் விட்டு சிரிச்சவரும் இதுக்கு பதில் சொல்லலாம்.

இப்பிடி போராட்டம் செய்யுமளவிற்கு அந்த நாட்டில் சுதந்திரம் இருக்கு????

சுமந்திரன் என்னத்துக்கு சிறிலங்காவிலை ஆமி,பொலிஸ் படை சூழ உலா போய்வாறார் எண்டதுக்காவது பதில் தெரியுமோ?

சிரிச்சவரும் பதில் சொல்லலாம்.

ஓ..உங்களுக்குத் தெரியாதோ ஏனெண்டு?😎 கல்லின் கீழ் இருந்து முகனூலை மட்டும் மேய்வதால் வரும் ஊர் நிலவரம் தெரியா நிலை உங்களுடையது!

அவுசில், கனடாவில், பிரான்சில் என்று சுதந்திரமான நாடுகளிலேயே இலங்கை தமிழ் அரசியல் வாதிகளுக்கு கொடிபிடிக்கும் தமிழ் றௌடிகளிடமிருந்து பாதுகாப்பில்லை, இலங்கையில் இருக்குமா? எனவே பாதுகாப்புத் தேவை தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Justin said:

ஓ..உங்களுக்குத் தெரியாதோ ஏனெண்டு?😎 கல்லின் கீழ் இருந்து முகனூலை மட்டும் மேய்வதால் வரும் ஊர் நிலவரம் தெரியா நிலை உங்களுடையது!

அவுசில், கனடாவில், பிரான்சில் என்று சுதந்திரமான நாடுகளிலேயே இலங்கை தமிழ் அரசியல் வாதிகளுக்கு கொடிபிடிக்கும் தமிழ் றௌடிகளிடமிருந்து பாதுகாப்பில்லை, இலங்கையில் இருக்குமா? எனவே பாதுகாப்புத் தேவை தான்!

எனக்கு உந்த தமிழே விளங்கேல்லை 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனக்கு உந்த தமிழே விளங்கேல்லை 😎

புலம் பெயர்ந்தவர்களை சந்தித்து தற்கால அரசியல் விளக்கம் கொடுக்க சென்றவர்கள், அவர்களின் கேள்விகளுக்கு  சரியான பதில் தராதவிடத்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்பது,  சரியாக பதில் தெரியாதவிடத்து எதுக்கு சந்திப்பு அது தேவையற்றது என இளைஞர் குழப்பம் செய்தால் பயங்கரவாதம். கேள்வி கேட்டவர்களை பிடித்து பயங்கரவாத சட்டத்தின் படி சிறையில் அடைப்பது, சித்திரவதை செய்வது  ஜனநாயகம். தெரிஞ்சு கொள்ளுங்கோ. வெளிநாட்டை சுற்றிப்பார்க்க சென்ற சுற்றுலாப்பயணிகளிடம் யாரும் கேள்வி கேட்டு கலகம் செய்யவில்லையே?                             

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.