Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சனை முடிந்துவிட்டது -பிரித்தானியாவில் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ரொய்லெட் ஊடகத்தையா @கிருபன்  இங்கு இணைக்கிறார் ? ஒரு ஊடகம் ரொய்லெட் ஊடகம் ஆக இருக்கா இல்லையா என்பதை நிர்வாகம் முடிவெடுத்து  அனுமதித்து இருக்கு  எனக்கும் வேலைவெட்டி உள்ளது தனிப்பட்ட தாக்குதல் வேண்டாமே உங்களுக்கு விருப்பம் என்றால் பதில் கருத்து இடவும் இல்லையென்றால் ஆறுதலாகத்தன்னும் வந்து பதில் போடலாமே ? விருப்பம் இல்லையென்றால் போடாமலும் விடலாம் நான் சொல்வது எப்பவும் கூல் பிரிட்ஜ் ஆக இருங்க உடம்புக்கு நல்லது .

சுமத்திரனால் தமிழரை ஏய்க்க  முடியுதே  வலிந்து காணமால் ஆக்கப்பட்டோரை அலரிமளிகைக்கு கதைக்க  கூப்பிடுகினம் ஆனால் அங்கு அழையா  விருந்தாளியாக சுமத்திரன்  போய்  காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுடன் கதைக்க வேண்டாம் தன்னுடன் மட்டுமே கதைக்கணும் என்று அடம்பிடிக்கிறார் ஏன் ? 

பதில் சிந்தாமல் சிதறாமல் பதில் இருந்தால் தரவும் இல்லையென்றாலும் பரவாயில்லை 😀

ஏன் முன்னுக்கு நிற்கிறார்? பெட்டி வாங்கத் தான், இது தான் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமே😂? பிறகு என்னை ஏன் கேட்பான்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பொது வெளியில் தனது முகத்தை காட்டியே கருத்துக்களை வைப்பவர் மீது இவ்வளவு வன்மம் கூடாது அவரின் சுதந்திரமான கருத்துக்களை முனை மங்க செய்யலாகாது என்ன அவரின் நேர்மையான அரசியல் பார்வையில்  சுமத்திரனின் நடவடிக்கைகள் விமரிசனம் செய்வது தற்போது சுமத்திரனின் பக்கம் நிற்பவர்களால் (நாளை சுமத்திரனின் உண்மையான முகம் தெரிந்து விட்டு வந்துவிடுவார்கள் எனும் நம்பிக்கை உண்டு ) ஜீரணிக்க முடியாமல் கடுமையாக தாக்கப்படுகின்றார். மேலும் சாதராண தமிழ் மக்களுக்கு விளங்கும்வகையில் அரசியல் விளக்கம்கள் இருப்பதினால் தங்களுக்கு மட்டுமே அரசியல் அறிவென்பது இருக்கனும் என்று நினைக்கும் மாந்தர்களினாலும் வெறுக்கப்படும் ஆபத்தும் உண்டு அதே நேரம் விளக்கத்தை இலகுவாக்குகின்றேன் என்று சில எழுத்து  வித்தியாசம்களில் பிழைகள் ஏற்படவும் சாத்தியம் உண்டு .

மேலும் அவரின் subscribers வளர்ச்சி   மேலும் பார்வையாளர்களின் views எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இதைவிட மோசமான விமரிசனம்கள் காணவேண்டி ஏற்படும் .

வன்மம்? எங்கே இத்திரியில் குணா மீது விமர்சனம் வைத்தோர் வன்மம் காட்டினர்? நீங்கள் ஒத்த அரசியல் கருத்து இல்லாதோர் மீது அரசியல் சாரா திரிகளிலும் சொறிவதை விடவா இங்கே குணாவை கண்டித்து விட்டனர்?

அவர் சுமந்திரன் பற்றி சொன்ன தகவல்களில் ஒன்று பொய் என மேலே சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது - அதைக் காணாத மாதிரி நீங்கள் பெட்டி, காணி என்று நிற்கிறீர்கள். உங்களையும், உடையாரையும் போல யாழில் "எதைச் சொன்னாலும் கைதட்டுவோம்" என்று நிற்கும் உறவுகள் மிக அரிது (எனவே நீங்கள் அரிதான கவரிமான்கள் என்றும் சொல்லலாம்!).

மேலும், ஆங்கிலத்தை மொழிமாற்றம் செய்து அதில் கருத்து திரிப்பைச் செய்ததும் சுட்டிக் காட்டப் பட்டிருக்குது. இதெல்லாம் வன்மம் என்றால் நிர்வாகத்திடம் முறையிட்டுப் பாருங்கள்!
 
  • கருத்துக்கள உறவுகள்

உங்களை எல்லோருக்கும் ஒரு தகவல்,

இலங்கையின் கொழும்பில் இருந்து பிரசுரமாகின்றது பிரதான தமிழ் நாளிதழ்கள் எங்களுடைய அயல்நாடு அதாவது இந்தியாவின்  ஆளுகைக்கு உட்பட்டு இருக்கின்றது.

அதுவும் குறிப்பாக வீரகேசரி தனது விசுவாசத்தை அளவுக்கு அதிகமாக காட்டுகின்றது.

அது அதன் பிரதான எழுத்தாளர் அல்லது முகாமையாளர் (நான் பெயரை குறிப்பிடவில்லை) அவர் தொண்ணூறுகளின் கடைசிப் பகுதியில் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைபட்டுக்கிடந்தவர்/ அடைக்கப்பட்டிருந்தனர் காலப்போக்கில் அவர்களது விசுவாசம் அயல்நாட்டு மேலாதிக்கம்/அடிபணிதல் உட்பட்டவர்களாக மாறிப்போனார்கள். இலங்கை அரசுக்கும் செல்லப் பிள்ளைகள்.

ஒரே நேரத்தில் அயல்நாட்டவர் எங்களுடைய ஐயா சம்பந்தன், ஐயா சுமந்திரன் வலுவான நட்புக்கு உரியவர்கள், அரசியல் அடியாட்கள்.

ஒருசேர, இந்திய எஜமானர்களிடம் இருந்து வருகின்ற கட்டளைகளை சுமந்திரன் குழு வீரகேசரியின் ஊடாக விரைவில் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் வெளியிடுவார்கள். அதேபோல் கொழும்பிலிருந்து வருகின்ற சில சிங்கள நாளிதழ்களும் ஆங்கில நாளிதழ்கள் இதனை ஒத்த கருத்துக்களை ஊதி பெரிதாக்கும்.

அண்மைக்காலமாக மெதுவாக இந்தியாவின் கரிசனைகளை இலங்கை புரிந்து கொள்வதற்காக அதீத பிரயத்தனம் செய்வது போல் பாசாங்கு செய்வது இதன் ஒரு அங்கமே.

மேலைத்தேய நாடுகள் தங்களது கரிசனையை தமிழர் பக்கம் மெதுவாக திருப்புகின்ற நிலையில், சீன நாட்டின் சமீபத்திய குழப்பங்கள் இயல்பாகவே தமிழர்கள் மீதான ஒரு கரிசனையை கொண்டுவந்துள்ளது. ஆனால் சீனாவின் இயந்திரம் வேகமாக தொழிற்படுகின்றது என்பது புலனாகின்றது. அவர்கள் தமிழ்நாட்டுக்கு அரசுமுறை பயணத்தை மேல்கொண்டு தமிழர் சார்பாக தான் கரிசனையை கொண்டிருப்பதாக ஒரு நிலையை தோற்றுவித்தது/ ஊக்குவிக்க பார்த்தார்கள்.

**********************

Edited by நிழலி
இறுதிப் பந்தி மட்டுறுத்தப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தை தனது விளம்பர  இடமாக  மட்டுமே பாவிக்க குணா  முயலக்கூடாது

யாழ்  பரந்துபட்ட பெரும் விவாத களம்  மட்டுமல்ல

  ஆராய்ச்சி  மற்றும்  ஆலோசனை  தரக்கூடிய பெரும்  வல்லுநர்களை  கொண்ட தளம்

எனவே தவறுகள்  மற்றும் சொற்பிழைகள் சுட்டிக்காட்டுப்படும்போதாவது

அதற்கான  விளக்கத்தை அல்லது  தனது  பக்க  நியாயத்தை  அவர்  எழுதணும்

அதுவே நியாயமும் தர்மமும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஏன் முன்னுக்கு நிற்கிறார்? பெட்டி வாங்கத் தான், இது தான் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமே😂? பிறகு என்னை ஏன் கேட்பான்?

நன்றி உண்மையை ஒத்துக்கொண்டதுக்கு 😀 அப்படி வாங்கிய ஊழல் பண பெட்டிகள் எங்கு வைத்துள்ளார் என்றாவது தெரியுமா ?

😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அரசியல் கருத்து இல்லாதோர் மீது அரசியல் சாரா திரிகளிலும் சொறிவதை விடவா இங்கே குணாவை கண்டித்து விட்டனர்?

நோ ரென்சன் சொறி சொறிவது  போன்ற சொல்லாடகள் வைத்து மற்றவரை தனிப்பட்ட முறையில் தாக்க கூடாது யாழ்கள விதிமுறையில்  உள்ளது .

என்னை குற்றம் சாட்டும் அளவுக்கு நான் அப்படி நடந்துகொண்ட ஒரு சொல்லாடலை இங்கு கட் அண்ட் பேஸ்ட் பண்ணமுடியுமா ?

அப்படி உங்களால் முடிந்தால் யாழுக்கு எனக்கு நானே தடை  போட்டு கொள்கிறேன் .

இல்லாத பொல்லாத பொய்களை என்மீது எழுதி குற்றவாளி ஆக்க வேண்டாம் அப்படி உங்களால் முடியாவிட்டால் நீங்கள் ****************************************************************************???????????????????

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

யாழ் களத்தை தனது விளம்பர  இடமாக  மட்டுமே பாவிக்க குணா  முயலக்கூடாது

யாழ்  பரந்துபட்ட பெரும் விவாத களம்  மட்டுமல்ல

  ஆராய்ச்சி  மற்றும்  ஆலோசனை  தரக்கூடிய பெரும்  வல்லுநர்களை  கொண்ட தளம்

எனவே தவறுகள்  மற்றும் சொற்பிழைகள் சுட்டிக்காட்டுப்படும்போதாவது

அதற்கான  விளக்கத்தை அல்லது  தனது  பக்க  நியாயத்தை  அவர்  எழுதணும்

அதுவே நியாயமும் தர்மமும் கூட.

நன்றி அண்ணா,

மிக தெளிவான கருத்து.

பெயர் விபரம் சொல்ல விரும்பவில்லை. நோர்வேயில் இருந்து புலி ஆதரவு போல காட்டிகொண்டு 2009 க்கு முன்  செயல்பட்ட ஒரு இணையதளம் அதன் உண்மைமுகம் 2009 க்கு பின் தெரிய வந்தது பற்றி முன்பே எழுதியுள்ளேன்.

இங்கே சிலர் மீளவும் அப்படி ஒரு அணுகுமுறையை எடுக்கிறார்கள்.

சுமந்திரனை எமக்கு பிடிக்காது என்பதனால் சுமந்திரனை கரிச்சு கொட்டும் எல்லாரையும் தலையில் தூக்கி வைத்து ஆடும் அதே 2009 க்கு முன் விட்ட பிழை.

குணா இப்படி என நான் சொல்லவில்லை.

ஆனால் அவரின் வெளிநாடு வந்த பின்னான சுருதிமாற்றம் பற்றியும், இவரின் செயல்களுக்கான funding எங்கிருந்து வருகிறது என்பது பற்றியும் கேள்விகள் கேட்கபடுவது நியாயமானது. மக்களுக்கு விழிப்பூட்டும் அறிவியக்கமா அல்லது மக்களை குழப்ப நிலையில் வைத்திருக்கும் முயற்சியா என கேள்வி கேட்க யாழ் கள உறவுகள் எல்லாரும் உரித்துடையோரே.

தன்பக்க நியாயத்தை அவர் சொல்லும் போது அது ஏற்கப்படும் அல்லது மறுக்கப்படும்.

தனியே வியாபாரம் செய்யும் அல்லது பொது பணி செய்யும் (பெண்களுக்கு மட்டும்) அரசியல் கருத்தே சொல்ல கூடாது என வகுப்பெடுக்கும் பேர்வழிகள், குணா முகம் காட்டுறார் ஆகவே அவரை கேள்வி கேட்க வேண்டாம் என்கிறார்கள்.

குணா முகம் காட்டி பேசுவது அரசியல்.

அது மட்டும் அல்ல இதை ஒரு விழிப்பூட்டும் நோக்கமாக செய்வதாயும் சொல்கிறார் - இதை கேள்வி கேட்காமல் வேறு எதை கேட்பது?

குணாவை மட்டும் அல்ல. முல்லை நிலவனை, அண்மையில் சேரமானின் ஆவியை என எல்லாரையும் யாழில் கேள்வி கேட்டே வந்துள்ளோம்.

கேள்விக்கு பயந்தால் அரசியல் பேசக்கூடாது (சுமந்திரனுக்கு சொன்னே அதே வார்த்தை 🤣). வெறும் முகம் மூடி கருத்தாளராய் மட்டும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

அண்ணை நெத்தியடி கருத்து அண்ணை…இவர் ஒவ்வொரு வீடியோவையும் இணைக்கும்போது நான் இதையே நினைப்பேன்.. அதன்பிறகு இவரது நோக்கம் வாசகர்களைஅற்பபுழுக்களாக எண்ணும் போக்கு பிடிபட்டதும் இவரது வீடியோக்களை பார்ப்பதை விட்டுவிடேன்.. வேறு ஒருவர் அவரது வீடியோக்களை கொண்டுவந்து ஒட்டினாலும் பறுவாயில்லை அவரு இங்க களத்தில உறுப்பினரா இருந்தும் வருவாரு வந்து வீடியோவை ஒட்டுவாரு ஓடிப்போய்டுவாரு.. கருத்திட்டவர்களுக்கு ஒரு நன்றிகூட சொல்லமாட்டாரு.. அவ்வளவு திமிர்.. தடிப்பு.. தான் எழுத்தாளன் அல்லது யூடியூப்பர் என்பதால் தான் வானத்தில் இருந்து வந்திருப்பவர், இங்குஎழுதுபவர்களை விட மேம்பட்டவர், இங்கு எழுதும் நாங்கள் எல்லாம் அவரிலும் கீழ்ப்பட்ட அற்பர்கள், இவர்களுடன் எல்லாம் நான் எதுக்கு கருத்தாடவேணும் எண்டு நினைக்கிறாரோ தெரியல.. இதில அவரை ஆக ஓகோ அற்புதமானவர் என்று இதிலையே புகழ்ந்து தள்ளி இருக்கும் யாழ்கள உறுப்பினர்களை சொல்லோனும்.. சோத்தில உப்புபோட்டு தின்டா எங்களுக்கும் கொஞ்சமாவது ரோசம் மானம் வரோனும்.. மதியாதார் வாசல் மிதியாதே என்று எங்களுக்கு எங்கடமொழியே சிறுவயதில் சொல்லி தந்திருக்கு..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

நோ ரென்சன் சொறி சொறிவது  போன்ற சொல்லாடகள் வைத்து மற்றவரை தனிப்பட்ட முறையில் தாக்க கூடாது யாழ்கள விதிமுறையில்  உள்ளது .

என்னை குற்றம் சாட்டும் அளவுக்கு நான் அப்படி நடந்துகொண்ட ஒரு சொல்லாடலை இங்கு கட் அண்ட் பேஸ்ட் பண்ணமுடியுமா ?

அப்படி உங்களால் முடிந்தால் யாழுக்கு எனக்கு நானே தடை  போட்டு கொள்கிறேன் .

இல்லாத பொல்லாத பொய்களை என்மீது எழுதி குற்றவாளி ஆக்க வேண்டாம் அப்படி உங்களால் முடியாவிட்டால் நீங்கள் ****************************************************************************???????????????????

ஓம், சொன்னவுடன் உங்களுக்கு ஞானம்பிறந்து விடுமாக்கும். வேலையைப் பாருங்கப்பு வீண் வம்பு பேசாமல்!😎

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

குணாவை மட்டும் அல்ல. முல்லை நிலவனை, அண்மையில் சேரமானின் ஆவியை என எல்லாரையும் யாழில் கேள்வி கேட்டே வந்துள்ளோம்.

இதனை நான் வரவேற்கிறேன். முன்பொரு தடவை யாழ் தளத்தில் பதிவிட்டது போலவே, "ஏன்" வினா எழுப்பி "ஓம்" என சங்கமிப்போம். சரியானதை புரிதலோடு  ஒப்பித்து விடுவோம்.👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணை நெத்தியடி கருத்து அண்ணை…இவர் ஒவ்வொரு வீடியோவையும் இணைக்கும்போது நான் இதையே நினைப்பேன்.. அதன்பிறகு இவரது நோக்கம் வாசகர்களைஅற்பபுழுக்களாக எண்ணும் போக்கு பிடிபட்டதும் இவரது வீடியோக்களை பார்ப்பதை விட்டுவிடேன்.. வேறு ஒருவர் அவரது வீடியோக்களை கொண்டுவந்து ஒட்டினாலும் பறுவாயில்லை அவரு இங்க களத்தில உறுப்பினரா இருந்தும் வருவாரு வந்து வீடியோவை ஒட்டுவாரு ஓடிப்போய்டுவாரு.. கருத்திட்டவர்களுக்கு ஒரு நன்றிகூட சொல்லமாட்டாரு.. அவ்வளவு திமிர்.. தடிப்பு.. தான் எழுத்தாளன் அல்லது யூடியூப்பர் என்பதால் தான் வானத்தில் இருந்து வந்திருப்பவர், இங்குஎழுதுபவர்களை விட மேம்பட்டவர், இங்கு எழுதும் நாங்கள் எல்லாம் அவரிலும் கீழ்ப்பட்ட அற்பர்கள், இவர்களுடன் எல்லாம் நான் எதுக்கு கருத்தாடவேணும் எண்டு நினைக்கிறாரோ தெரியல.. இதில அவரை ஆக ஓகோ அற்புதமானவர் என்று இதிலையே புகழ்ந்து தள்ளி இருக்கும் யாழ்கள உறுப்பினர்களை சொல்லோனும்.. சோத்தில உப்புபோட்டு தின்டா எங்களுக்கும் கொஞ்சமாவது ரோசம் மானம் வரோனும்.. மதியாதார் வாசல் மிதியாதே என்று எங்களுக்கு எங்கடமொழியே சிறுவயதில் சொல்லி தந்திருக்கு..

பால பத்ரரே, இது கொஞ்சம் தவறான புரிதலில் எழுந்த விமர்சனமாகப் படுகிறது எனக்கு. குணா கருத்தாடியிருக்கிறார் - கேள்விகளுக்கு பதில்கள் சொல்லியிருக்கிறார். ஆனால் முக்கியமாக இந்தக் காணொளிகளை அவர் தனது யூ ரியூப் சனலுக்காகத் தயாரிப்பதால், பார்ப்போர் கேள்விகள் இருந்தால் தரும்படி சொல்லியிருப்பார். இங்கே நாம் கேட்கும் சந்தேகங்களுக்கும் அடுத்த காணொளிகளில் பதில் தரலாம் என அவர் நினைப்பதால் மௌனமாக இருக்கக் கூடும்! இது என் கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணை நெத்தியடி கருத்து அண்ணை…இவர் ஒவ்வொரு வீடியோவையும் இணைக்கும்போது நான் இதையே நினைப்பேன்.. அதன்பிறகு இவரது நோக்கம் வாசகர்களைஅற்பபுழுக்களாக எண்ணும் போக்கு பிடிபட்டதும் இவரது வீடியோக்களை பார்ப்பதை விட்டுவிடேன்.. வேறு ஒருவர் அவரது வீடியோக்களை கொண்டுவந்து ஒட்டினாலும் பறுவாயில்லை அவரு இங்க களத்தில உறுப்பினரா இருந்தும் வருவாரு வந்து வீடியோவை ஒட்டுவாரு ஓடிப்போய்டுவாரு.. கருத்திட்டவர்களுக்கு ஒரு நன்றிகூட சொல்லமாட்டாரு.. அவ்வளவு திமிர்.. தடிப்பு.. தான் எழுத்தாளன் அல்லது யூடியூப்பர் என்பதால் தான் வானத்தில் இருந்து வந்திருப்பவர், இங்குஎழுதுபவர்களை விட மேம்பட்டவர், இங்கு எழுதும் நாங்கள் எல்லாம் அவரிலும் கீழ்ப்பட்ட அற்பர்கள், இவர்களுடன் எல்லாம் நான் எதுக்கு கருத்தாடவேணும் எண்டு நினைக்கிறாரோ தெரியல.. இதில அவரை ஆக ஓகோ அற்புதமானவர் என்று இதிலையே புகழ்ந்து தள்ளி இருக்கும் யாழ்கள உறுப்பினர்களை சொல்லோனும்.. சோத்தில உப்புபோட்டு தின்டா எங்களுக்கும் கொஞ்சமாவது ரோசம் மானம் வரோனும்.. மதியாதார் வாசல் மிதியாதே என்று எங்களுக்கு எங்கடமொழியே சிறுவயதில் சொல்லி தந்திருக்கு..

உங்கள் ஆதங்கத்தை அப்படியே கொட்டி உள்ளீர்கள். இதில் எந்த வடிவமைப்புகளும் வடிகட்டுதல்களும் தேவையில்லை.

உங்கள் கேள்விகளும் ஆதங்கமும் இங்கே பல காலமாக பலரது தொண்டைக்குள் இருந்து தான் இருக்கிறது?

நீங்கள் உங்கள் பாணியில் தொடர்பு எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரத்திற்கு முன்னர் குணாவின் ஆய்வு தொடர்பாக கூறும்போது "உண்மையக் கூற வேண்டும். பக்கச்சார்பு இல்லாமல் கூறவேண்டும்" எனக் கூறினேன். 

அப்போது எனக்கு கல்லால் எறிந்தார்கள். (காய்க்கிற மரம் என இருந்துவிட்டேன் 🤪) இப்போது பலருக்கு மல்ரி பரலால் அடி விழுகிறது..😂😀😂😀

பலர் தமக்கு உவப்பானதை மட்டுமே கேட்க விரும்புகின்றனர். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நன்றி அண்ணா,

மிக தெளிவான கருத்து.

பெயர் விபரம் சொல்ல விரும்பவில்லை. நோர்வேயில் இருந்து புலி ஆதரவு போல காட்டிகொண்டு 2009 க்கு முன்  செயல்பட்ட ஒரு இணையதளம் அதன் உண்மைமுகம் 2009 க்கு பின் தெரிய வந்தது பற்றி முன்பே எழுதியுள்ளேன்.

இங்கே சிலர் மீளவும் அப்படி ஒரு அணுகுமுறையை எடுக்கிறார்கள்.

சுமந்திரனை எமக்கு பிடிக்காது என்பதனால் சுமந்திரனை கரிச்சு கொட்டும் எல்லாரையும் தலையில் தூக்கி வைத்து ஆடும் அதே 2009 க்கு முன் விட்ட பிழை.

குணா இப்படி என நான் சொல்லவில்லை.

ஆனால் அவரின் வெளிநாடு வந்த பின்னான சுருதிமாற்றம் பற்றியும், இவரின் செயல்களுக்கான funding எங்கிருந்து வருகிறது என்பது பற்றியும் கேள்விகள் கேட்கபடுவது நியாயமானது. மக்களுக்கு விழிப்பூட்டும் அறிவியக்கமா அல்லது மக்களை குழப்ப நிலையில் வைத்திருக்கும் முயற்சியா என கேள்வி கேட்க யாழ் கள உறவுகள் எல்லாரும் உரித்துடையோரே.

தன்பக்க நியாயத்தை அவர் சொல்லும் போது அது ஏற்கப்படும் அல்லது மறுக்கப்படும்.

தனியே வியாபாரம் செய்யும் அல்லது பொது பணி செய்யும் (பெண்களுக்கு மட்டும்) அரசியல் கருத்தே சொல்ல கூடாது என வகுப்பெடுக்கும் பேர்வழிகள், குணா முகம் காட்டுறார் ஆகவே அவரை கேள்வி கேட்க வேண்டாம் என்கிறார்கள்.

குணா முகம் காட்டி பேசுவது அரசியல்.

அது மட்டும் அல்ல இதை ஒரு விழிப்பூட்டும் நோக்கமாக செய்வதாயும் சொல்கிறார் - இதை கேள்வி கேட்காமல் வேறு எதை கேட்பது?

குணாவை மட்டும் அல்ல. முல்லை நிலவனை, அண்மையில் சேரமானின் ஆவியை என எல்லாரையும் யாழில் கேள்வி கேட்டே வந்துள்ளோம்.

கேள்விக்கு பயந்தால் அரசியல் பேசக்கூடாது (சுமந்திரனுக்கு சொன்னே அதே வார்த்தை 🤣). வெறும் முகம் மூடி கருத்தாளராய் மட்டும் இருக்கலாம்.

குணா மீதான எனது கருத்து அல்லது பார்வை என்பது வேறு. அவருடனான முதல் சந்திப்பில் இருந்து அது சம்பந்தமாக எமக்குள் பேசிக்கொண்டவை அல்லது தனது வழி சார்ந்து அவர் எனக்கு தந்த விளக்கம் சார்ந்து  நான் இதுவரை இங்கே எழுதியதில்லை. 

அதற்கான காலம் இன்னும் இருக்கிறது போலும்?

போராளிகளை நோக்கி சுட்டு விரல் நீட்டுவதில்லை என்பதில் எவ்வளவு தூரம் கவனமாக இருக்கிறேனோ அதேயளவு பாதைகள் மற்றும் வரலாறு திரிபுபடுத்தப்பட்டு விடக்கூடாது தவறுகள் உடனுக்குடன் திருத்தப்படணும் என்பதிலும்  கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

குணா மீதான எனது கருத்து அல்லது பார்வை என்பது வேறு. அவருடனான முதல் சந்திப்பில் இருந்து அது சம்பந்தமாக எமக்குள் பேசிக்கொண்டவை அல்லது தனது வழி சார்ந்து அவர் எனக்கு தந்த விளக்கம் சார்ந்து  நான் இதுவரை இங்கே எழுதியதில்லை. 

அதற்கான காலம் இன்னும் இருக்கிறது போலும்?

போராளிகளை நோக்கி சுட்டு விரல் நீட்டுவதில்லை என்பதில் எவ்வளவு தூரம் கவனமாக இருக்கிறேனோ அதேயளவு பாதைகள் மற்றும் வரலாறு திரிபுபடுத்தப்பட்டு விடக்கூடாது என்பதிலும்  கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

நிச்சயமாக அண்ணா - உங்கள் மத்தியில் நடந்த உரையாடல்கள் பற்றி சொல்லும் உரிமை முழுக்க முழுக்க உங்களுக்கு மட்டுமே உள்ளது.

ஆனால் அப்படி ஒரு சம்பாசணையை செய்யாத நம் போன்றோருக்கு அவரின் இந்த சுருதி மாற்றம் கேள்விகளை கொடுப்பது இயல்புதானே?

குணாவின் வீடியோக்கள் பற்றி முன்பே எழுத நினைத்தேன் - எனக்கு மட்டும்தான் இப்படி தோன்றுகிறதா என தெரியவில்லை ஆகவேதான் பொறுமை காத்தேன். இந்த திரியில் எதிரும் புதிராக சிந்திக்கும் பலரும் இதே மன நிலையில் இருப்பதை காண்கிறேன்.

மகிழ்ச்சி.

தாம் விரும்பிய பஜனையை கண்ணை மூடி ரசிக்க மட்டுமே விரும்புபவர்களையும் காண்கிறேன். அவர்கள் வழமைபோல் அசெளகரியமான கேள்வி கேட்பவர்கள் மீது எரிந்து விழுந்ததையும் கண்டேன். வெள்ளந்தி மனங்கள். கோவம் இல்லை. அன்பு மட்டுமே அவர்கள் மீது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

குணாவின் வீடியோக்கள் பற்றி முன்பே எழுத நினைத்தேன் - எனக்கு மட்டும்தான் இப்படி தோன்றுகிறதா என தெரியவில்லை ஆகவேதான் பொறுமை காத்தேன். இந்த திரியில் எதிரும் புதிராக சிந்திக்கும் பலரும் இதே மன நிலையில் இருப்பதை காண்கிறேன்.

மகிழ்ச்சி.

அந்த உண்மையை உணர்ந்ததால் தான் பாலபத்ரரின் எழுத்தை ஊக்குவித்தேன்👏

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லண்டன் காரர் ஆகிலும் மோசம் வந்த மனுஷனை வெளியிலும் போகவிடாமல் வீட்டுக்குள் அதுவும் லண்டன் வீடுகளின் விசிறிங் ஹோல் புறாக்கூடு போல் இருக்கும் இதுக்குள்ள மனிசன் வெறி பிடித்த ஆள் போல் மைக்கும் கையுமா நிக்கிறார்  படம் கீழே .

May be an image of 8 people and people sitting

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.