Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/11/2024 at 09:15, குமாரசாமி said:

468214965-590816710009465-7679531821780153347-n.jpg

ஒரு ஷாட் அடிச்சா தெரியும் உறுதியோ ?  தடுமாறுதோ?  என்று 

சும்மா பகிடிக்கு 😄😄

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Gdu-RDsx-Wg-AARHz-T.jpg

பஞ்சதந்திரக்காரன்....😂

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

468321943-8783827068343955-5163340364675108472-n.jpg

இப்பிடி நல்ல சீவன்கள் இருக்கிறதால தான் நாட்டிலை மழை பெய்யுது. வெய்யில் எறிக்குது...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னங்க நான் ஜிம்முக்கு ஒர்க் அவுட் பண்ண போறேன்!

கணவன் - ஹலோ! யாருங்க ஜிம் கோச்சா!

கோச் - சொல்லுங்க ! என்ன வேண்டும் !

கணவன் - சார்! என் மனைவி ஹேமா! உங்க ஜிம்முக்கு தான் ஆறு மாதமா ஒர்க் அவுட் பண்ணராங்க! ஆனா ஒரு இம்புரூவ்மெண்ட்டும் தெரியலையே!

கோச் - ஓ நீங்க ஹேமாவின் கணவரா! கொஞ்சம் இருங்க அவங்க எவ்வளவு சின்சியரா ஒர்க் அவுட் பண்றாங்க என்று நீங்களே பாருங்க!

main-qimg-599083cdc6c7dc9a27c4eb7d0342fb17

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/12/2024 at 17:40, குமாரசாமி said:

Gdu-RDsx-Wg-AARHz-T.jpg

பஞ்சதந்திரக்காரன்....😂

யாருக்கு க‌ட‌ன் கிடையாது ஹா ஹா

அப்ப‌ இவ‌ரின் க‌டை வில‌ங்கிடும் லொள்......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

kumarasami.jpg

குடும்ப தலைவன் ..

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

468862451_883232910589370_26936121688662

😢  😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டு சிறுவர்கள் தோட்டத்தில் இருந்து மாம்பழங்களை திருடி ஒரு சாக்கில் கட்டி கொண்டு அருகில் இருந்த சுடுகாட்டில் வைத்து பங்கு பிரிக்கலாம் என்று அங்கு இருந்த கேட்டை தாண்டி குதித்தனர்!

அப்பொழுது சாக்கில் இருந்து இரண்டு மாம்பழம் கீழே விழுந்தது. ஒருவன் சொன்னான் விடு வரும்போது எடுத்து கொள்ளலாம் என்று!

உள்ளே போய் அமர்ந்து பங்கு போட ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது அங்கே ஒரு குடிகாரன் குடித்து கொண்டு இருந்தான் !

 

இவர்கள் மறைவான இடத்தில் அமர்ந்து பங்கு போட ஆரம்பித்து இருந்தனர்!

உனக்கு ஒன்று எனக்கு ஒன்று ! என்று.

முழு போதையில் இருந்தவன் பேய் தான் பேசுது என்று அடித்து பிடித்து பக்கத்தில் இருந்த சர்ச்சுக்கு போய் அங்கு இருந்த பாதிரியாரிடம் , ஃபாதர் சீக்கிரம் வாங்க அங்கே இரண்டு பேய் பங்கு போட்டு கொண்டு இருக்கு என்று!

ஃபாதரும் சரி என்ன தான் நடக்கிறது என்று பார்க்க அவனுடன் போனார்.

கேட்டை திறந்து உள்ளே போனவர்!

சட்டென்று நின்றார்.

 

பங்கு போட்டு முடித்து இருந்தார்கள்.

ஒருவன் கேட்டான் அப்ப கேட்டில் இருக்கும் இரண்டு!

உடனே அடுத்த பையன் சொன்னான்! உனக்கு ஒன்னு எனக்கு ஒன்னு! என்று அவ்வளவுதான் இப்ப ஃபாதர் தலை தெறிக்க ஓட ஆரம்பித்து இருந்தார்!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

469278458_1113387316818752_7885130604129

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இலவசம் எனும் திருட்டு !
திருடன் ஒருவன் இரவில் சுவர் ஏறி குதித்தான்!

பெரிய நாய் ஒன்று நின்று கொண்டிருந்தது.

நாய் அவனை பார்த்தது அவன் நாயை பார்த்தான்!

நாய் குலைக்க வில்லை!

தைரியமாக இரண்டு அடி எடுத்து வைத்தான்! குலைக்க வில்லை!

வீட்டில் கதவருகே வந்தான் ! கள்ள சாவி கொண்டு கதவை திறக்க முற்பட்டான்!

நாய் அப்பொழுதும் குலைக்க வில்லை!

திடீர் என்று அவனுக்கு ஒரு சந்தேகம்! கதவை திறக்கும் போது நாய் குலைத்தால் என்ன செய்ய !

தயாராக வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து இரண்டு பிஸ்கட்டை

எடுத்து நாய்க்கு போட்டான்!

நாய் உடனே குலைக்க ஆரம்பித்து விட்டது!

திருடன் நாயை பார்த்து கேட்டான்!

ஏன் நாயே! நான் சுவர் ஏறி குதித்த போது குலைக்க வில்லை!

கதவு வரை நடந்த போது குலைக்க வில்லை!

வீட்டின் கதவை திறக்கும் போது குலைக்க வில்லை மாறாக உனக்கு பிஸ்கெட் போடும்போது குலைக்க ஆரம்பித்து விட்டயே என்று கேட்க அதற்கு நாய் இவ்வளவு நேரம் நீ உன் வேலையை செய்கிறாய் என்று நினைத்து கொண்டு

இருந்தேன்!

ஆனால் தேவை இல்லாமல் எனக்கு பிஸ்கெட் இலவசமாக நீ போடும்போது தான் நீ தவுறு செய்கிறாய் என்று அறிந்து கொண்டேன்.

இன்று எப்பொழுதெல்லாம் நமக்கு இலவசம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அரசு இயந்திரம் தவறு செய்கிறது என்று பொருள்!

புரிந்து கொள்ளுங்கள்!

Edited by பெருமாள்
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன சார் யோசனை சொல்றேன் என்று ஆளை காலி பண்ண ஐடியா கொடுக்குறீங்க!

ஒரு பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். பஸ் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் "யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா... இந்த ஜன்னலக் கொஞ்சம் திறந்து வைத்து விட்டுப் போ" என்றாள்.

கண்டக்டர் வந்து ஜன்னலை திறந்து வைத்து விட்டுப் போனார். அந்தப் பெண்ணுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த பெண் "யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா... வந்து இந்த ஜன்னலை சாத்தி விட்டுப் போய்யா" என்றாள்.

கண்டக்டர் வந்து "என்னம்மா அந்தம்மா ஜன்னலை திறந்து வைக்கச் சொல்லுது நீங்க ஜன்னலை சாத்தி வைக்கச் சொல்றீங்க கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணி பிரயாணம் பண்ணக் கூடாதா?" என்று கேட்டார்.

அதற்கு முதல் பெண் சொன்னாள் "இங்கே பாரு நீ ஜன்னல அடைச்சன்னா நான் மூச்சு முட்டி செத்துப் போவேன்" என்றாள்.

இரண்டாவது பெண் "இங்கே பாரு நீ ஜன்னல திறந்து வச்சின்னா நான் குளிர்ல விறைச்சி செத்துப் போவேன்"னாள்.

கண்டக்டர் என்ன செய்றதுன்னு திகைச்சி நின்னுகிட்டிருந்தப்ப, கடைசி சீட்டில் பீடி குடிச்சிகிட்டிருந்த ஒரு மனுசன் கண்டக்டரை கூப்பிட்டு "அங்கே என்ன பிரச்னை" என்று கேட்டான். கண்டக்டர் சொன்னார் "அதை ஏன் கேட்கிற ஒரு அம்மா ஜன்னல அடைச்சா மூச்சு முட்டி செத்துப் போவேன்ங்குது. இன்னொரு அம்மா ஜன்னல திறந்து வச்சா குளிர்ல விறைச்சி செத்து போவேங்குது. ஒருத்தருக்கு ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப் போகக் கூடாதா கொஞ்ச நேரத்தில் இறங்கப் போறாங்க அதுக்குள்ள இப்படி சண்டை போட்டுகிட்டா என்ன செய்றது".

அந்த மனுசன் "நான் ஒரு யோசனை சொல்லவா?" என்று கேட்டான்.

கண்டக்டர் "சரி சொல்லுய்யா நீ என்ன சொல்லப் போறேன்னு பார்ப்போம்" என்றார்.

அவன் சொன்னான் "கொஞ்ச நேரம் ஜன்னலை அடைச்சி வை, அந்த அம்மா செத்துப் போகும், அப்புறம் கொஞ்ச நேரம் ஜன்னலை திறந்து வை இந்தம்மா செத்துப் போகும் நாம நிம்மதியா போகலாம்" என்றான்.

கண்டக்டர் சொன்னார் "நல்ல ஆளுய்யா நீ அப்படி அவங்க ரெண்டு பேரும் செத்துப் போனா அந்தப் பொம்பளைகளோட புருசங்க வந்து கேட்டா நான் என்னய்யா பதில் சொல்றது"ன்னு கேட்டார்.

அதற்கு அவன் சொன்னான் "அதைப் பத்தி நீ கவலைப் படாதே அந்த ரெண்டு பொம்பளைகளோட புருசன் நான் தான்.. அதனால தான் அந்த யோசனையை சொன்னேன்" என்றான்.

கண்டக்டர்: 😳😳😳

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild

அனைத்தும் கிடைத்தால் அலட்சியம்
வந்து விடும் என்பதால்தான் 
சிலவற்றை கிடைக்காத வரிசையிலே
வைத்திருக்கிறது காலம்....!!! 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

தமிழை ஒழுங்கா" படிடா படிடா "என்று சொன்னேன் கேட்டியா? இப்ப டீ கடை வைக்க தன்னும் லாயக்கில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அறிவாளிகள் என்று சொல்லி திரியும் முட்டாள்களுக்கு சமர்ப்பணம்

 

நம்ம ஆளு லண்டனில் படித்து கொண்டிருந்த சமயம் அது. அவருக்கு பீட்டர் என்று ஒரு பேராசிரியர் இருந்தார். அவருக்கு நம்ம ஆளை கண்டால் பிடிக்கவே பிடிக்காது.

ஒரு சமயம் மதியம் அவர் உணவு அருந்தி கொண்டிருந்த மேசையில் நம்ம ஆள் அமர்ந்தார். நம்ம ஆளை வெருப்பேற்ற

" பறவையும் ! பன்றியும் ஒன்றாக உட்கார்ந்து உணவு அருந்த முடியாது ! " என்று எல்லோரும் கேட்கும் மாறு சத்தமாக சொல்ல!

அதற்கு அவர் ! நம்ம ஆளை பார்த்து!

" சரி அப்படி என்றால் நான் பறந்து போகிறேன்! " என்று சொல்லி விட்டு வேறு மேசைக்கு சென்று விட்டார். பேராசிரியருக்கு அவமானம் ஆகி விட்டது.

எப்படியாவது நம்ம ஆளை பழி வாங்க நினைத்த அவர் அப்பொழுது வந்த தேர்வில் கடினமான கேள்விகளை கேட்டு இருந்தார்.

ஆனால் நம்ம ஆள் நன்றாக படித்து இருந்ததால் சரியாக விடை அளித்து இருந்தார்.

திருத்திய விடை தாளை கொடுக்கும் முன் நம்ம ஆளை நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு உன்னால் பதில் சொல்ல முடியுமா என்று கேட்க!

நம்ம ஆள் சரி என்று சொல்ல!

பேராசிரியர் " நீ நடந்து போகும் போது வழியில் உனக்கு பை கிடைக்கிறது அதில் நிறைய பணமும், அறிவும் இருக்கு! அதில் நீ எதை எடுப்பாய் என்று கேட்க!

நம்ம ஆள் யோசிக்காமல் நான் பணத்தை தான் எடுப்பேன் என்று சொல்ல!

பேராசிரியர் சிரித்து கொண்டே என்ன ! நானாக இருந்தால் அறிவை தான் தேர்ந்து எடுப்பேன் என்று சிரித்து கொண்டே சொல்ல !

அதற்கு நம்ம ஆள் அது சரி சார் பொதுவாக ஒருவர் தன்னிடம் இல்லாத ஒன்றை தானே தேர்ந்து எடுப்பார் என்று சொல்ல!

வகுப்பில் எல்லோரும் சிரிக்க பேராசிரியருக்கு அவமானமாக போய் விட்டது.

கோபத்தில் விடை தாளில் Idiot ( முட்டாள் ) என்று எழுதி விடை தாளை நம்ம ஆள் கிட்ட நீட்ட.

நம்ம ஆள் வாங்கி பார்த்து விட்டு ஐயா உங்க கையொப்பம் போட்டு இருக்கீங்க ஆனா என் கிரேட் ( Grade) எவ்வளவு என்று போட மறந்து விட்டீர்கள்! என்று சொல்ல பேராசிரியர் திகைத்து போய் நின்றார்!

  • Like 3
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

kumar-samy.jpg

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

a woman with a red dot on her forehead is looking at the camera .

வடிவுக்கரசி மாதிரி மனைவி கிடைத்தும் ராதா மாதிரி  பெண்ணை தேடி போகாமல் வாழும் ஆண்கள் உத்தமர்கள்..!  :cool:

a woman in a pink dress is standing in a field of tall grass .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 7 people and text

அமைச்சர் நேருவின் மகனை... "சின்னவர்" என பேனர் வைத்ததால்,
உதயநிதி ரசிகர்கள், அந்த பேனரை கிழித்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

👨🦗ஆண் கொசு : டார்லிங் உனக்காக ஒரு சிங்கத்தையே வேட்டையாடி கொண்டு வருவேன் ....

👩🦗பெண் கொசு : ஓகே ஓகே போய் தூங்கு ...

👨🦗ஆண் கொசு : கண்ணே !!! உனக்காக ஒரு யானையவே அடிச்சு கொண்டு வந்து கொடுப்பேன் ....

👩🦗பெண் கொசு : சரி .. சரி ... மொதல்ல தூங்க போ டார்லிங்...

👨🦗ஆண் கொசு : உன்ன நா மெர்சிடஸ் கார்ல உட்கார வெச்சு பாரீஸ் ரோட்ல சுத்தி காண்பிப்பேன் ....

👩🦗பெண் கொசு : என் மேல உனக்கு எவ்வளவு லவ் னு புரியுது டியர்.... காலையில பேசலாம் போய் தூங்கு ...

👨🦗ஆண் கொசு : நீ என்ன நம்ப மாட்டியா ..??? நாளைக்கு உனக்கு 100 கிராம்ல தங்க செயின், வைரத்துல நகை போடுவேன் பாரு ...

👩🦗பெண் கொசு : நா நம்புறே டியர் ... நீ இப்போ தூங்க போ ....

👨🦗ஆண் கொசு : உலகமே திரும்பி பாக்கற மாதிரி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1,00,00,000 கொடுப்பேன் பாரு ....

இப்போது 👨🦗ஆண் கொசுவை ஓங்கி அறைந்த 👩🦗பெண் கொசு ...

"ஸ்ரீதரனின் கள்ள லைசன்ஸ் பாரில்  சரக்கை அடிச்சவனை கடிச்சுட்டு இங்க வந்து ஒளறாதேனு எத்தன தடவ சொல்லி இருக்கேன்...!!! ???" 😡😡😡

🙀🙀🙀😹😹 படித்ததில் வயிறு வலிக்க சிரித்த பதிவு..!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிலரின்
அமைதி
திமிர் அல்ல
அது
அவர்களுக்குள்
இருக்கும்
வலி..

Bild

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

470224947_8652104514917858_1192022213461

விவசாயியின் வாழ்க்கை . ...........!  🙏

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

நேற்று சண்டே சாயந்திரம் சாப்பிடலாம் என்று ஒரு ரெஸ்டாரண்ட் போனேன் !!!!!!

பார்த்தா ஒரே கூட்டம் !!!!!!! எல்லா டேபிளும் ஆள் உட்கார்ந்து இருக்காங்க !!!!

அதுவும் சோடி !!!! !சோடியா !!!!!!!

எனக்கு பசி !!!!!!!!!!! மற்றும் கொஞ்சம் லைட்டா வயித்தெரிச்சல் !

உடனே போனை எடுத்தேன் !!!!!!!! நண்பனை அழைத்தேன் !!!!!!

 

" மச்சான் உன் ஆளு இங்கதான் யாருடனோ !!!!!!!!!

கடலை போட்டு கொண்டு !!!!!!! மன்னிக்கவும் சாப்பிட்டு கொண்டு இருக்கு !!!!! சீக்கிரம் வா மச்சான் !!!!!! " என்று சொன்ன மாத்திரம் தான் ! ரெண்டே நிமிசத்தில்

!! ஆறு டேபிள் காலி !!!!!!

நான் பொறுமையா அமர்ந்து சாப்பிட்டு வந்தேன் !

வயிறும் நிறைந்தது !

வயித்தெரிச்சல் குறைந்தது !

 
  • Haha 2



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.