Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம்

 

image_3f0539b08a.jpg

வடமேல் மாகாண சபைக்கான புதிய ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த குமார ஜயதேவ கரன்னாகொட நியமிக்கப்பட்டார்.

அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (09) வழங்கி வைக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.   

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த வடமேல் மாகாண சபையின் ஆளுநர் ராஜா கொலுரே மரணமடைந்ததை அடுத்த ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tamilmirror Online || வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

266536055_10224256118183953_240019225907

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் 👏👏👏👏👌👌

  • கருத்துக்கள உறவுகள்

வழக்குக்கு செலவழிச்சு, கை கடிக்குது சார்....

ஒரு வெள்ளைவானையும் கொடுத்தா..... நம்ம பொழைப்பு ஓடும்.... சார்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வழக்குக்கு செலவழிச்சு, கை கடிக்குது சார்....

ஒரு வெள்ளைவானையும் கொடுத்தா..... நம்ம பொழைப்பு ஓடும்.... சார்....

அதைத்தான் நேரடியாக்கொடுத்தா உந்த மனித உரிமைவாதியள் எதிர்க்கொடி பிடிப்பார்கள். இந்தப் பதவியை வைத்து ஆடமுடியாத ஆட்டமா என்று கோத்தா கேட்டாராமே.

  • கருத்துக்கள உறவுகள்

இவரது நியமனம் திட்டமிட்டு நகர்த்தப்படுகிறதாகவே உள்ளது.  ஒருபுறம் சோனக அரசியல்வாதிகளால் (பதியுதீன்) போன்றவர்கள் ஆக்கிமித்ததுபோக இனி இந்தச் சிங்களப்படையைச் சேர்ந்த கொலைகாரன் என்ன ஆக்கிரமிப்பைச் செய்வனோ யாரறிவார்.ஏலவே வடமத்தியுள் வடக்கின் பெரும்பகுதி உள்ளீர்க்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதுபோல் மன்னாரின் மிச்சமுள்ள பகுதிகளையும் வடமேலோடு இணைத்தாலும் ஆச்சரியப்படமுடியாது.  எங்கட குழுக்கள் நாடளுமன்றுக்க எதிர்வாதமும், நாடாளுமன்ற உணவுச்சாலையிலை புரிதல்வாதமுமாக் காலத்தைக் கழிக்க வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த கரன்னாகொடவின் நியமனம் பாதிக்கப்பட்டோருக்கு மனித உரிமைகள் தினத்தில் அரசாங்கம் வழங்கிய பரிசு! - காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம்

(நா.தனுஜா)

11 கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் 14 ஆவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவை வடமேல் மாகாண ஆளுநராக நியமித்தமையே இம்முறை சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கம் வழங்கியிருக்கும் பரிசாகும் என்று தெரிவித்துள்ள காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ, தற்போதைய அரசாங்கம் குற்றவாளிகளுக்கு சிறந்த இடத்தை வழங்கும் என்பதை இதன்மூலம் விளங்கிக்கொள்ளமுடிவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.

May be an image of 2 people, people standing and indoor

 கடந்த 2008 ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு ட்ரயல் அட்பார் விசேட நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கில் 14 ஆவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத்தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு முந்தைய நாளான நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 இதுகுறித்து மேற்படி வழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் செயற்பட்டுவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் என்ற அடிப்படையில் பிரிட்டோ பெர்னாண்டோவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

வசந்த கரன்னாகொடவின் நியமனம் பாதிக்கப்பட்டோருக்கு மனித உரிமைகள் தினத்தில் அரசாங்கம் வழங்கிய பரிசு! - காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த.. கோத்தா கும்பலின் பேரினவாத பயங்கரவாதக் கருத்தியலின் படி... தமிழர்களைக் கொன்றால்.. பதவி பவிசு.. கிடைக்கும்.

இந்த உலகமே மனித உரிமைகள் குறித்து உச்சரிக்கும் தகுதியை இழந்து வருகிறது.. இப்படியான இனக்கொலைக்காரர்களை பதவிகளில் அமர்த்தி வைத்து ரசிப்பதன் ஊடாக. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

மகிந்த.. கோத்தா கும்பலின் பேரினவாத பயங்கரவாதக் கருத்தியலின் படி... தமிழர்களைக் கொன்றால்.. பதவி பவிசு.. கிடைக்கும்.

இந்த உலகமே மனித உரிமைகள் குறித்து உச்சரிக்கும் தகுதியை இழந்து வருகிறது.. இப்படியான இனக்கொலைக்காரர்களை பதவிகளில் அமர்த்தி வைத்து ரசிப்பதன் ஊடாக. 

உலகமா? அது அழிந்துவிட்டதாவே தோன்றுகிறது. தற்போது உள்ள உலகு அழிபடுவோர் உலகு. அழிப்போர் உலகு. என்று இந்த அழிப்போர் அழிகிறார்களோ அன்றுதான் மனித உரிமைகள் அதன் உண்மையான மதிப்பைப்பெறும். 
அழிபடுவோராக உய்குர், றொகிங்கியர், பலஸ்தீனியர், கிந்தியரல்லாத இந்தியர், தமிழர்......  எனத் தொடர்கிறது. 2ஆம் உலகயுத்தத்தில் யூதர்களை அழித்ததாக மடடுமே பேசப்படுகிறது. ஆனால் அவர்கள் நாடமைத்துப் பலஸ்தீனர்களை அழித்துவருவது வேறுகதையெக அழப்போர் உலகு பார்க்கிறது. அந்த உலக அழிவிலே அழிந்து மறைந்து இனமாக சிந்து றோமாகள். தமிழினம் ஆழாமாகவும் ஆரோக்கியமாகவும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளதை மறந்துவிடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இந்த உலகமே மனித உரிமைகள் குறித்து உச்சரிக்கும் தகுதியை இழந்து வருகிறது.. இப்படியான இனக்கொலைக்காரர்களை பதவிகளில் அமர்த்தி வைத்து ரசிப்பதன் ஊடாக.

 நமது  தலைவர் போன்றோர் உருவாக, உருவாக்க  காரணமும் அதுவே. ஆனால் இந்த பயங்கரவாதிகள் அவர்களை பயங்கரவாதிகளாக்கி, தங்கள் பயங்கரவாதத்தை இலகுவாக மறைத்து விடுகிறார்கள் எத்தனை பாதுகாப்பு இருந்தாலும் இவர்களது மரணத்தையும், அதன் பயங்கரத்தையும் யாராலும் தடுக்க முடியாது. இவர்கள் செய்த பயங்கரமே போதும் இவர்களை கொல்வதற்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.