Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

எததைனையோ மாவீரர்களும் மக்களும் உயிரையே கொடுத்த போது மூக்கை அறுத்தால் என்ன.

அவர்களும் இறந்து நாமும் மூக்கறுந்து நிற்பதா?

அல்லது மூக்கையாவது தக்க வைத்து அவர்களின் குடும்பங்களாவது அந்த மண்ணில் கெளரவமாக வாழ ஒரு தீர்வை பெறு முயல்வதா?

எது நல்ல அணுகுமுறை?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நம்பி பிரயோசனம் இல்லை என்பவர்கள் வேறு யாரை நம்பலாம் எனவும் அதன் மூலம் 13 ஐ விட மேலதிகமான அதிகாரங்களை பெறுவது எப்படி எனவும் விளக்க வேண்டும்.

சும்மா சீனாவோடு பேசலாம், செவ்வாயோடு பேசலாம், வியாழனோடு பேசலாம் எண்டு கதை அளக்காமல் - அதை எப்படி செய்வது என சொல்லுங்கள்.

அமெரிக்கன் டக்லஸ்சோடு கூட கதைக்கிறான் - சீனா? மிக தெளிவாக இலங்கை அரசு கைகாட்டிய நபர்களுடன் மட்டும் பேசி விட்டு, தமிழர்களுக்கு அபிவிருத்தி என்ற வலையை நேரடியாக வீசி விட்டு போயுள்ளான்.

இங்கே ஆப்பு இறுக்கபடுவது இந்தியாவுக்கு மட்டும் அல்ல தமிழ் தேசிய, தமிழர் சுயாதிக்க கோரிக்கைக்கும்தான்.

மிக தெளிவாக சொல்லி உள்ளேன்.

இது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனை என்பதுதான் சீனாவின் நிலைப்பாடு.

ஒற்றை ஆட்சி.

அதாவது இங்கே சிலர் எழுதுவது போல் சிங்களவனின் காலில் விழுங்கள் என்பதே சீனாவின் நிலைப்பாடு(இதுவரை). 

ஆகவே எமக்கு தீர்வு தருவதில்

சீனா = இலங்கை.

இதை மறுக்க முடிந்தால் - ஆதாரத்துடன் வாருங்கள். 

எங்கள் சந்ததியை எல்லாம் வெளிநாட்டில் அமர்தி விட்டு, இந்திய படம், இந்தியன் உடுப்பு, இந்தியன் சஞ்சீகை என இந்தியாவுக்கு மறைமுகமாக வரி செலுத்தும் நாம் - எமக்கு இந்திய எதிர்ப்புக்கு மூக்கை அறுப்பது இலகு.

ஏனென்றால் அறுக்கப்படுவது எமது மூக்கல்ல, அங்கே வாழும் மக்களின் மூக்கு.

1 hour ago, Nathamuni said:

மிக, நீண்டகாலமாக, இந்தியாவை நம்பி, இழந்தது மிக அதிகம்..... மேலும் காத்திருக்க எவ்வித காரணமும் இல்லை...

மூண்டு நாளைக்கு முதல் திராவிடத்தை நம்பி பயனில்லை - மோடி ஜி கிழிப்பார் அவரை நம்புவோம் என எழுதினீர்களே?

பொய்யா கோபால்?

எப்படியோ தமிழர்கள் எதையும் முயலாமல் சிங்களவன் காலில் விழுந்தால் போதும் அப்படித்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

மூண்டு நாளைக்கு முதல் திராவிடத்தை நம்பி பயனில்லை - மோடி ஜி கிழிப்பார் அவரை நம்புவோம் என எழுதினீர்களே?

பொய்யா கோபால்?

எப்படியோ தமிழர்கள் எதையும் முயலாமல் சிங்களவன் காலில் விழுந்தால் போதும் அப்படித்தானே?

திராவிடம்.... எப்படி நம்புவீர்கள்?

ஆகவே.... காங்கிரஸ், திராவிட கோஸ்டிகள் எதிர் மோடிஜி என்றால், மோடிஜி இன்னும் ஒரு தீங்கும் செய்யவில்லை.

ஆகவே நம்பலாம். இன்றும் கூட அவர், வாக்குறுதி தந்தால் நம்ப ஈழத்தில் இடமுண்டு.

ஆனாலும் தனிப்பட்ட ரீதியில் இந்தியாவை நம்பப் போவதில்லை, கோவாலு நம்பப்போவதில்லை.

நீங்கள் அதிகமாக நம்பிக்கை வைக்கிறீர்கள் போலுள்ளது.

மீண்டும் சொல்கிறேன், இலங்கை தீவு முழுவதும், இந்தியா மேல், அவநம்பிக்கையும், வெறுப்பும் உள்ளது.

நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், பந்து டெல்லியில் இல்லை.

பிகீங்கை சமாளிக்க முடியாமல், வாசிங்டன் போனது, ஜெயசங்கர்.... இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்.

ஆக.... இந்தியா தீர்வுக்கு முக்கியம், அதனுடன் பேசவேண்டும் என்பதும் வலுவற்றது.

யுத்தம் முடிந்த பின்,கடந்த பதினோரு வருடமாக எந்த அக்கறையும் காட்டாத இந்தியா, இனி காட்டும் என்று நிணைக்கவில்லை.

காட்டினாலும், அது சீன அழுத்தம் காரணமாகவே அன்றி, உண்மையான அக்கறையுடன் இராது.

ஆகவே, வராமை.... நன்று.

****

இன்னும் ஒரு விடயம், சிங்களவன் காலில் இனிமேல் தான் விழ வேண்டும் என்று யார் சொன்னது?

2009 மே 19ல் இருந்து விழ வைத்ததும் இந்தியா தானே....என்ன ஆதாரம் வேண்டும்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை சீனா,பாகிஸ்தான்,பங்காளதேஸ்,அண்மையில் சீனாவோட சேர்ந்து நேபாளமும் எண்டு சுத்திவளைச்சு எல்லாரும் அடிக்கும் போது சிங்களவனும் சீனாக்காரன வச்சு தன்பங்குக்கு ரெண்டு ஊம  குத்தா குத்தறான்...  சோத்துல உப்பு போட்டு துன்னாதான இந்தியாவுக்கு வலிக்குரதுக்கு…

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

திராவிடம்.... எப்படி நம்புவீர்கள்?

ஆகவே.... காங்கிரஸ், திராவிட கோஸ்டிகள் எதிர் மோடிஜி என்றால், மோடிஜி இன்னும் ஒரு தீங்கும் செய்யவில்லை.

ஆகவே நம்பலாம். இன்றும் கூட அவர், வாக்குறுதி தந்தால் நம்ப ஈழத்தில் இடமுண்டு.

ஆனாலும் தனிப்பட்ட ரீதியில் இந்தியாவை நம்பப் போவதில்லை, கோவாலு நம்பப்போவதில்லை.

நீங்கள் அதிகமாக நம்பிக்கை வைக்கிறீர்கள் போலுள்ளது.

மீண்டும் சொல்கிறேன், இலங்கை தீவு முழுவதும், இந்தியா மேல், அவநம்பிக்கையும், வெறுப்பும் உள்ளது.

நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், பந்து டெல்லியில் இல்லை.

பிகீங்கை சமாளிக்க முடியாமல், வாசிங்டன் போனது, ஜெயசங்கர்.... இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்.

ஆக.... இந்தியா தீர்வுக்கு முக்கியம், அதனுடன் பேசவேண்டும் என்பதும் வலுவற்றது.

யுத்தம் முடிந்த பின்,கடந்த பதினோரு வருடமாக எந்த அக்கறையும் காட்டாத இந்தியா, இனி காட்டும் என்று நிணைக்கவில்லை.

காட்டினாலும், அது சீன அழுத்தம் காரணமாகவே அன்றி, உண்மையான அக்கறையுடன் இராது.

ஆகவே, வராமை.... நன்று.

****

இந்த உலகில் யாரையும் யாரும் நம்பி இல்லை நாதம்.

இது நாடுகளிடையான இராஜதந்திர உறவுகளுக்கும் பொருந்தும். எம்மை போல நாடற்ற தேசிய இனங்களுக்கு மேலும் ஒரு படி அதிகமாக பொருந்தும்.

திராவிடத்தை நான் ஒரு போதும் நம்பவில்லை. நம்புங்கள் என சொன்னதும் இல்லை.

ஏ எல் பயோ படித்தீர்களோ தெரியாது. அதில் ஒட்டுண்ணி (parasite), ஒன்றியவாழி (symbiotic relationship) என்பவற்றை பற்றி படிப்பிபார்கள்.

எந்த நாடும் எம்மீதான உண்மையான அக்கறையுடன் இல்லை. எம்மீது நாம் மட்டுமே அக்கறை காட்ட முடியும். ஏனையோர் எல்லாரும் வந்தால் அல்லது வராமல்விட்டால் அது சுயநலத்தில் மட்டுமே.

ஆனால் அவர்களின் சுயநலத்துடன் எமது நலத்தை align பண்ணுவதில்தான் எமது வெற்றி தங்கியுள்ளது.

உள்ளதில் இந்தியாவும் மேற்குலலுமே நாங்கள் ஒட்டுண்ணியாகவோ, ஒன்றியவழியாகவோ நம்ப நடந்து ஆனால் நம்பி நடக்காமல் எமது அலுவலை முன் நகர்த்த வாய்ப்பான நாடுகள்.

சீனாவின் மீது எமக்கு ஒரு பிடியும் இல்லை.

ஆனால் மேற்கில் புலம்பெயர் சமூகம், எமது அடுத்த சந்ததி எம்பிகள், மனித உரிமை பொறுப்புகூறல் என நாம் பயன்படுத்த கூடிய விடயங்கள் பல உள்ளன.

அதேபோல் திமுக+காங்கிரஸ் கூட்டணியை நம்ப சொல்லவில்லை. ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல, இலங்கையில் சீனா என்பதை மோடிக்கு எதிரான கோஷமாக வட இந்தியாவில் எழுப்பி அதை கொண்டு மோடியை இலங்கை விடயத்தில் கடும் போக்குக்கு தள்ள கூடிய அரசியலையும் தமிழகம் ஊடாக முன்னெடுக்கலாம்.

இலங்கைக்கு தெரியும் என்றைகாவது எமக்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு தரகூடிய நாடுகள் என்றால் மேற்கும், (அழுத்தம் காரணமாக) இந்தியாவும் என்பது - ஆகவேதான் சீனா என்ற மாய மானை காட்டி எம்மை இவர்களிடம் இருந்து பிரிக்கும் திட்டம் அரங்கேறுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இன்னும் ஒரு விடயம், சிங்களவன் காலில் இனிமேல் தான் விழ வேண்டும் என்று யார் சொன்னது?

2009 மே 19ல் இருந்து விழ வைத்ததும் இந்தியா தானே....என்ன ஆதாரம் வேண்டும்?

மே 19 2009 இல் யார் விழுந்தார்கள்?

தலைவரும் போராளிகளும் போரடிமடிந்தார்கள். சிலர் சரணடைந்தார்கள்.

தனிப்பட்ட மனிதர்களோ அரசியல்வந்திகளோ காலில் விழுந்திருக்கலாம்.

ஆனால் எமக்கு ஒரு கெளரவமான தீர்வு தேவை என்ற கோரிக்கை இன்னும் வலுவாகவே இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறன.

அது மட்டும் இல்லை ஒவ்வொரு இடத்திலும் காணி பறிப்பை எதிர்க்கும் போராட்டங்களும் காட்டுவதும் இதைதான்.

அரசில் அமைச்சர்களாக இருப்பவர்கள் கூட ஒற்றையாட்சி போதும், தீர்வு தேவையில்லை என சொல்லும் நிலையில் இல்லை.

நிச்சயமாக புலம்பெயர் மக்களும் இதே நிலைப்பாட்டில்தான்.

ஆகவே ஒரு சில மனிதர்கள் அப்படி வீழ்ந்துள்ளார்கள் என்று ஏற்றுகொணடாலும் கூட,

நாட்டிலும் வெளிநாட்டிலும் எமது இனம் ஒரு கெளரவமான சுய அதிகாரம் மிக்க தீர்வை வேண்டியே நிக்கிறது. ஒற்றையாட்சி போதும், சும்மா இப்போ இருப்பது போல் விட்டாலே போதும் என்ற நிலையில் தமிழர்களின் கூட்டு பிரஞ்ஞை இல்லை.

ஆகவே ஏற்கனவே சிங்களவனின் காலில் விழுந்து விட்டீர்கள்தானே என்ற உங்கள் கேள்வியின் தார்பரியமே தவறானது (the premise of your question itself is wrong). 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

இலங்கைக்கு தெரியும் என்றைகாவது எமக்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு தரகூடிய நாடுகள் என்றால் மேற்கும், (அழுத்தம் காரணமாக) இந்தியாவும் என்பது - ஆகவேதான் சீனா என்ற மாய மானை காட்டி எம்மை இவர்களிடம் இருந்து பிரிக்கும் திட்டம் அரங்கேறுகிறது

சீனாவுக்கு இது புரிந்ததால் தான், வடக்கு நோக்கி கிளம்பி விட்டார்கள். அவர்கள் முட்டாள்கள் இல்லை.

பார்த்துக்கொண்டே இருங்கள்..... இலங்கையின் தரநிலை, சிசி கிரேட்டுக்கு இன்று போய்விட்டது.

குழம்பிய பொருளாதார குட்டையில் மீன் பிடிக்க, இந்தியா, மேற்கு முயலும்.

சரியான நேரத்தில் சீனா உதவத்தான் போகிறது.

அப்போது, சீன, இலங்கை உறவு இன்னும் உறுதி படும்.

இந்தியா, தமிழ் அரசியல்வாதிகளை மடக்கிப் போட்டு, தனக்கெதிராக பேசாமல் செய்துள்ளது. நக்கினார், நாப்புறட்டார் நிலை.

மேலை நாடுகளில் நாம், பொருளாதார ரீதியில் உறுதியாகும் போது..... நாமே பேசி நமது விடுதலையை பெறும் காலம் வரும்.

திராவிடத்தின், ஜெகதரட்சகன், குடும்பமாக இலங்கையில் பெரு முதலீடு செய்ய முணைந்த நிலையில்...... பணம்.... யாருடனும் திராவிடத்தை இணங்கிப் போக வைக்கும் என்பது தெளிவு.

ஆகவே..... நம் மக்களின் பொருளாதார வளம், களத்திலும், புலத்திலும் முன்னேறும் போது, பொருளாதாரம் பேசும்.

முன்பும் பகிர்ந்திருக்கிறேன்.... மீண்டும் சொல்கிறேன்.... சிங்கள ஆட்டோ டிரைவர் கொழும்பில், சொன்னார். கலவரத்தில், அடித்து துரத்தப்பட்ட தமிழர்கள், பணத்துடன் வந்து, கொள்பிட்டி முதல், கல்கிசை வரை, சிங்களவரை அடித்து விரட்டி விட்டார்கள்.

ஆகவே.... பொருளாதாரமே.... பலம்....

அணைத்துமே.... பின்னால் வரும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

மே 19 2009 இல் யார் விழுந்தார்கள்?

தலைவரும் போராளிகளும் போரடிமடிந்தார்கள். சிலர் சரணடைந்தார்கள்.

தனிப்பட்ட மனிதர்களோ அரசியல்வந்திகளோ காலில் விழுந்திருக்கலாம்.

ஆனால் எமக்கு ஒரு கெளரவமான தீர்வு தேவை என்ற கோரிக்கை இன்னும் வலுவாகவே இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறன.

அது மட்டும் இல்லை ஒவ்வொரு இடத்திலும் காணி பறிப்பை எதிர்க்கும் போராட்டங்களும் காட்டுவதும் இதைதான்.

அரசில் அமைச்சர்களாக இருப்பவர்கள் கூட ஒற்றையாட்சி போதும், தீர்வு தேவையில்லை என சொல்லும் நிலையில் இல்லை.

நிச்சயமாக புலம்பெயர் மக்களும் இதே நிலைப்பாட்டில்தான்.

ஆகவே ஒரு சில மனிதர்கள் அப்படி வீழ்ந்துள்ளார்கள் என்று ஏற்றுகொணடாலும் கூட,

நாட்டிலும் வெளிநாட்டிலும் எமது இனம் ஒரு கெளரவமான சுய அதிகாரம் மிக்க தீர்வை வேண்டியே நிக்கிறது. ஒற்றையாட்சி போதும், சும்மா இப்போ இருப்பது போல் விட்டாலே போதும் என்ற நிலையில் தமிழர்களின் கூட்டு பிரஞ்ஞை இல்லை.

ஆகவே ஏற்கனவே சிங்களவனின் காலில் விழுந்து விட்டீர்கள்தானே என்ற உங்கள் கேள்வியின் தார்பரியமே தவறானது (the premise of your question itself is wrong). 

கம்பி வேலிக்குள், விலங்குகளை போல் அடைத்து வைத்ததன் மறு பெயர் என்ன?

உயிருடன் இருக்க வேண்டுமானால்... உள்ள இரு.... தருவதை தின்று..... உசிரைப் பிடித்துக் கொள்....

அது விரும்பாத காரணத்தால் தானே..... களத்திலே மாண்டார்கள் மான மறவர்கள்.

திராவிடம் + காங்கிரஸ் மத்திய அரசில் இருக்கும் போது தானே நடந்தது.

சிங்களம் வைத்த தேர்தலானாலும், தமது விருப்பத்தை உலகுக்கு காட்ட வேண்டிய தேவை இருந்ததே.

இன்றும் கூட, மறைந்தவர் நிணைவு கூற அனுமதியில்லை. மாவீரன் கர்ணன் என்று எழுதினாலே... பிரச்சணை....

அதன் பெயர் துப்பாக்கி முணையில், அடிமைகளாக வைத்திருத்தல்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

சீனாவுக்கு இது புரிந்ததால் தான், வடக்கு நோக்கி கிளம்பி விட்டார்கள். அவர்கள் முட்டாள்கள் இல்லை.

பார்த்துக்கொண்டே இருங்கள்..... இலங்கையின் தரநிலை, சிசி கிரேட்டுக்கு இன்று போய்விட்டது.

குழம்பிய பொருளாதார குட்டையில் மீன் பிடிக்க, இந்தியா, மேற்கு முயலும்.

சரியான நேரத்தில் சீனா உதவத்தான் போகிறது.

அப்போது, சீன, இலங்கை உறவு இன்னும் உறுதி படும்.

இந்தியா, தமிழ் அரசியல்வாதிகளை மடக்கிப் போட்டு, தனக்கெதிராக பேசாமல் செய்துள்ளது. நக்கினார், நாப்புறட்டார் நிலை.

மேலை நாடுகளில் நாம், பொருளாதார ரீதியில் உறுதியாகும் போது..... நாமே பேசி நமது விடுதலையை பெறும் காலம் வரும்.

திராவிடத்தின், ஜெகதரட்சகன், குடும்பமாக இலங்கையில் பெரு முதலீடு செய்ய முணைந்த நிலையில்...... பணம்.... யாருடனும் திராவிடத்தை இணங்கிப் போக வைக்கும் என்பது தெளிவு.

ஆகவே..... நம் மக்களின் பொருளாதார வளம், களத்திலும், புலத்திலும் முன்னேறும் போது, பொருளாதாரம் பேசும்.

முன்பும் பகிர்ந்திருக்கிறேன்.... மீண்டும் சொல்கிறேன்.... சிங்கள ஆட்டோ டிரைவர் கொழும்பில், சொன்னார். கலவரத்தில், அடித்து துரத்தப்பட்ட தமிழர்கள், பணத்துடன் வந்து, கொள்பிட்டி முதல், கல்கிசை வரை, சிங்களவரை அடித்து விரட்டி விட்டார்கள்.

ஆகவே.... பொருளாதாரமே.... பலம்....

அணைத்துமே.... பின்னால் வரும்.

ஆகவே எமது தீர்வுக்குக்கான பெரிய சாவி மேற்கில் உள்ள நாமும் எமது பொருளாதாரமும்?

ஆனால் உலக ஒழுங்கு இப்போ மேற்கும், இந்தியாவும் ஒரே பக்கத்தில் வரும்படியாகவே உள்ளது.

2001-2021 இலங்கையில் என்ன நடந்தாலும் அதில் மேற்கு இந்தியாவை சேர்க்க தவறுவதில்லை.

ஆகவே மேற்கும், இந்தியாவும்( அழுத்தம் மூலம்) நாம் கொஞ்சமாவது influence பண்ண கூடிய நாடுகள்.

சீனா மூழுக்க முழுக்க இலங்கையின் நண்பன் - அவர்களை எந்த வகையிலும் நாம் அழுத்த வாய்பில்லை என்பதை நீங்களும் ஏற்கிறீகள்?

நான் அடுத்தபடிக்கு போய், இந்தியாவை மேலும் அழுத்த கஜன்ஸ் போன்றோர் சீனாவிடம் பேச முயல வேண்டும் என்கிறேன்.

நாம் இருவரும் ஒன்றைதான் சொல்கிறோம்.

20 minutes ago, Nathamuni said:

கம்பி வேலிக்குள், விலங்குகளை போல் அடைத்து வைத்ததன் மறு பெயர் என்ன?

உயிருடன் இருக்க வேண்டுமானால்... உள்ள இரு.... தருவதை தின்று..... உசிரைப் பிடித்துக் கொள்....

அது விரும்பாத காரணத்தால் தானே..... களத்திலே மாண்டார்கள் மான மறவர்கள்.

திராவிடம் + காங்கிரஸ் மத்திய அரசில் இருக்கும் போது தானே நடந்தது.

சிங்களம் வைத்த தேர்தலானாலும், தமது விருப்பத்தை உலகுக்கு காட்ட வேண்டிய தேவை இருந்ததே.

இன்றும் கூட, மறைந்தவர் நிணைவு கூற அனுமதியில்லை. மாவீரன் கர்ணன் என்று எழுதினாலே... பிரச்சணை....

அதன் பெயர் துப்பாக்கி முணையில், அடிமைகளாக வைத்திருத்தல்.

இவை மனிதகுல விரோதங்கள் நாதம்.

இவற்றை எம்மீது ஏவி விட்டதால் நாம் காலில் விழுந்த விடவில்லை. விழப்போவதும் இல்லை.

ஊரில் மே, நவம்பர் மாதம் நடக்கும் சம்பவங்களும், இன்றும் நாம் தீர்வை பற்றி எழுதிகொண்டிருப்பதும் நாம் காலில் வீழ்ந்து விடவில்லை என்பதை காட்டும் சாட்சிகள்.

நீங்கள் தோற்றுப் போனீர்கள், நீங்கள் காலில் விழுந்தீர்கள், ஏன் இன்னார் உயிர் பிச்சை கேட்டு மன்றாடினார் என ஆயிரம் உளவியல் யுத்தங்களை நாம் இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் தாண்டி வந்துள்ளோம்.

நோ சான்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

ஆகவே எமது தீர்வுக்குக்கான பெரிய சாவி மேற்கில் உள்ள நாமும் எமது பொருளாதாரமும்?

ஆனால் உலக ஒழுங்கு இப்போ மேற்கும், இந்தியாவும் ஒரே பக்கத்தில் வரும்படியாகவே உள்ளது.

2001-2021 இலங்கையில் என்ன நடந்தாலும் அதில் மேற்கு இந்தியாவை சேர்க்க தவறுவதில்லை.

ஆகவே மேற்கும், இந்தியாவும்( அழுத்தம் மூலம்) நாம் கொஞ்சமாவது influence பண்ண கூடிய நாடுகள்.

சீனா மூழுக்க முழுக்க இலங்கையின் நண்பன் - அவர்களை எந்த வகையிலும் நாம் அழுத்த வாய்பில்லை என்பதை நீங்களும் ஏற்கிறீகள்?

நான் அடுத்தபடிக்கு போய், இந்தியாவை மேலும் அழுத்த கஜன்ஸ் போன்றோர் சீனாவிடம் பேச முயல வேண்டும் என்கிறேன்.

நாம் இருவரும் ஒன்றைதான் சொல்கிறோம்.

இந்தியா பெரிய நாடு, சந்தேகமில்லை.

ஆனாலும், நாம் நம்பிக்கை வைக்கக் கூடிய வகையில் எதுவுமே செய்யவில்லை.... சரி அதுவாவது பரவாயில்லை.... சிங்களவரும் நம்பிக்கை வைக்கக் கூடிய வகையில் எதுவுமே செய்யவில்லை.

ஆக இரு பகுதி நம்பிக்கை இல்லா நிலையில், ஊர் நாட்டாமை வேலை சரிவராது. நாட்டாமை, நல்ல தீர்ப்பு சொல்வார் என்ற நம்பிக்கை, இரு பக்கமும் இல்லை.

ஆக... நம்பிக்கை பெறக்கூடிய, மூன்றாம் தரப்பே, இன்றைய தேவை.

சீனாவை சிங்களம் நம்பினால், அவர்கள் எம்மை நெருங்கம் போது, நாமும் அவர்கள் கையை பற்றிக் கொள்ளத் தான் வேண்டும்.

இந்தியா இனியும் வரும் என்று, கொட்டாவி விடாமல், வந்ததை பிடிக்க வேண்டியதே புத்திசாலித்தனம்.

நாம் இருவரும் ஒன்றைதான் சொன்னாலும், நீங்கள் இந்தியாவை, புறக்கணிக்கக் கூடாது என்கிறீர்கள்.

நான் அவர்கள் எம்மை கண்டு கொள்வதே இல்லை.... பிறகு ஏன், நாம் அவர்கள் குறித்து பொருட்படுத்த வேண்டும் என்கிறேன்.

சாதாரண, இளைஞர் பாசையில் சொன்னால், பெட்டை வடிவா இருக்குது என்று, சுழட்டி, சைற் அடிக்கிறோம்..... அது... கெப்பர் அடிச்சு, எடுப்புக் காட்டினால்.... தேப்பன், தமையனை அனுப்பி சண்டித்தனம் காட்ட வைத்தால், சரிதான் போ(டி) உன்னை நம்பியா பிறந்தேன்..... உன்னை நினைச்சே காலத்தை ஓட்ட.... உன்னிலும பார்க்க.... எடுப்பான ஆளை இறக்கிக் காட்டுறன் பார்....

அதுவே இங்கு கதை...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

இவை மனிதகுல விரோதங்கள் நாதம்.

இவற்றை எம்மீது ஏவி விட்டதால் நாம் காலில் விழுந்த விடவில்லை. விழப்போவதும் இல்லை.

ஊரில் மே, நவம்பர் மாதம் நடக்கும் சம்பவங்களும், இன்றும் நாம் தீர்வை பற்றி எழுதிகொண்டிருப்பதும் நாம் காலில் வீழ்ந்து விடவில்லை என்பதை காட்டும் சாட்சிகள்.

நீங்கள் தோற்றுப் போனீர்கள், நீங்கள் காலில் விழுந்தீர்கள், ஏன் இன்னார் உயிர் பிச்சை கேட்டு மன்றாடினார் என ஆயிரம் உளவியல் யுத்தங்களை நாம் இந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் தாண்டி வந்துள்ளோம்.

நோ சான்ஸ்.

காலில் விழுவது என்றால்..... அப்படியே அர்த்தம் இல்லை.... நிணைத்ததை செய்ய சுதந்திரம் இல்லாத, அடுத்தவன் ஆட்சியின் கீழான வாழ்வு.

உலகம் பார்கிறது என்பதால், கோத்தாவின் சிங்களம், செய்ய நிணைத்த சில விடயங்களை தவிர்கிறது என்பதன் அர்த்தம், தமிழர்கள், பரிபூரணமான சுதந்திர வாழ்வு வாழ்கிறார்கள் என்பதல்ல.

அப்படி தமிழர் வாழ, சிங்களவர் எந்த யுத்தத்திலும், தோற்கடித்து தமிழர் நிலத்தை வெல்லவில்லை. பிரிட்டிஸ்காரர், பிடித்து கொடுத்ததை வைத்தே நாட்டாமை செய்கிறார்கள்.

அடிமைத்தழை ஒழித்ததாக இருநூறு ஆண்டுகள் நிறைவை கொண்டாடிய பிரிட்டனின் கூட, நவீன அடிமைத்தனம் பற்றி பேசுகிறார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

ஆக இரு பகுதி நம்பிக்கை இல்லா நிலையில், ஊர் நாட்டாமை வேலை சரிவராது. நாட்டாமை, நல்ல தீர்ப்பு சொல்வார் என்ற நம்பிக்கை, இரு பக்கமும் இல்லை.

இல்லை நாட்டாமை இந்தியா அல்ல. அமெரிக்கா. இந்தியா சின்னப்பகவதி 🤣
சின்னபகவதி ஏற்கனவே நாட்டமையுடன் ஒன்றியவாழி ஆகி விட்டார். ஆகவே நாட்டாமை சின்ன பகவதியை பகைச்சு இலங்கையில் தீர்ப்பு சொல்ல தயங்குவார்.

ஆகவே நாட்டாமையையும், சின்ன பகவதியையும் நமக்கு ஏற்ற தீர்ப்பு சொல்லவைக்க வேண்டும். ஈசி இல்லை. ஆனால் இதுதான் ஒரே viable route.

21 minutes ago, Nathamuni said:

சீனாவை சிங்களம் நம்பினால், அவர்கள் எம்மை நெருங்கம் போது, நாமும் அவர்கள் கையை பற்றிக் கொள்ளத் தான் வேண்டும்.

ஆனால் அவர்கள் நெருங்கிவருவது “பேசாமல் சிங்களத்தின் காலில் விழுங்கள்” என சொல்லவே. 

இலங்கை உள் விடையத்யில் தலையீடு இல்லை. மனித உரிமை விடயத்தில் முழு ஆதரவு. விஜயத்யின் போது தமிழ் தேசிய கட்சிகள் முற்றாக புறக்கணிப்பு என்பன காட்டி நிக்கும் செய்தி இதுதான்.

ஆகவே மேற்கை/இந்தியாவை அழுத்த எம்மில் ஒரு வன் குழு இவர்களுடன் பேசுவது போல் போக்கு காட்டலாம். அதற்கு மேல் தமிழர் சுய உரிமைக்கு சீனா ஒரு சிறிய அளவும் உதவாது.

8 minutes ago, Nathamuni said:

காலில் விழுவது என்றால்..... அப்படியே அர்த்தம் இல்லை.... நிணைத்ததை செய்ய சுதந்திரம் இல்லாத, அடுத்தவன் ஆட்சியின் கீழான வாழ்வு.

உலகம் பார்கிறது என்பதால், கோத்தாவின் சிங்களம், செய்ய நிணைத்த சில விடயங்களை தவிர்கிறது என்பதன் அர்த்தம், தமிழர்கள், பரிபூரணமான சுதந்திர வாழ்வு வாழ்கிறார்கள் என்பதல்ல.

அப்படி தமிழர் வாழ, சிங்களவர் எந்த யுத்தத்திலும், தோற்கடித்து தமிழர் நிலத்தை வெல்லவில்லை. பிரிட்டிஸ்காரர், பிடித்து கொடுத்ததை வைத்தே நாட்டாமை செய்கிறார்கள்.

அடிமைத்தழை ஒழித்ததாக இருநூறு ஆண்டுகள் நிறைவை கொண்டாடிய பிரிட்டனின் கூட, நவீன அடிமைத்தனம் பற்றி பேசுகிறார்கள்.

அப்போ நீங்களே ஏற்கிறீகள் நாம் இன்னும் அவர்கள் காலில் விழவில்லை என்பதை. நன்றி.

நாம் அடக்கபடுகிறோம் ஆனால் அடங்கி போகவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

இல்லை நாட்டாமை இந்தியா அல்ல. அமெரிக்கா. இந்தியா சின்னப்பகவதி 🤣
சின்னபகவதி ஏற்கனவே நாட்டமையுடன் ஒன்றியவாழி ஆகி விட்டார். ஆகவே நாட்டாமை சின்ன பகவதியை பகைச்சு இலங்கையில் தீர்ப்பு சொல்ல தயங்குவார்.

ஆகவே நாட்டாமையையும், சின்ன பகவதியையும் நமக்கு ஏற்ற தீர்ப்பு சொல்லவைக்க வேண்டும். ஈசி இல்லை. ஆனால் இதுதான் ஒரே viable route.

ஆனால் அவர்கள் நெருங்கிவருவது “பேசாமல் சிங்களத்தின் காலில் விழுங்கள்” என சொல்லவே. 

இலங்கை உள் விடையத்யில் தலையீடு இல்லை. மனித உரிமை விடயத்தில் முழு ஆதரவு. விஜயத்யின் போது தமிழ் தேசிய கட்சிகள் முற்றாக புறக்கணிப்பு என்பன காட்டி நிக்கும் செய்தி இதுதான்.

ஆகவே மேற்கை/இந்தியாவை அழுத்த எம்மில் ஒரு வன் குழு இவர்களுடன் பேசுவது போல் போக்கு காட்டலாம். அதற்கு மேல் தமிழர் சுய உரிமைக்கு சீனா ஒரு சிறிய அளவும் உதவாது.

அப்போ நீங்களே ஏற்கிறீகள் நாம் இன்னும் அவர்கள் காலில் விழவில்லை என்பதை. நன்றி.

நாம் அடக்கபடுகிறோம் ஆனால் அடங்கி போகவில்லை.

நான் மிக தெளிவாக சொல்லி விட்டேன். பந்து டெல்லியில் இல்லை.

காரணம், இந்தியா, யுத்தம் முடிந்த பின் எதுவித அக்கறையும் எடுக்கவில்லை.

சீனா உள்ள வர முயன்ற போதோ, வந்த பின்னர் கூட எதுவித அக்கறையும் எடுக்கவில்லை.

அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுக நகர் சீனா வசம் போன பின்னர் கூட எதுவித அக்கறையும் எடுக்கவில்லை.

இப்ப, மேற்கு, அட தம்பி.... ஓடுறா... சொதி அடுப்பிலை.... பொங்கி ஊத்தப் போகுதடா எண்டு சொல்லும்போதும் பெரும் அக்கறையும் காண்பிக்கவில்லை.

ஆக, சுப்பிரமணிய சுவாமி முதல், இலங்கையில் இருக்கக் கூடிய இந்திய புலனாய்வாளர்கள் கூட, சீனாக்காரன் பணத்தை, மகிந்தா ஊடாக விழுங்கி இருக்க வாய்ப்புண்டு என்ற சந்தேகம் எனக்குண்டு.

அதுவும், இந்தியா மீதான அவநம்பிக்கைக்கு காரணம்.

அடுத்தது, அடக்கப்பட்டாலும், அடங்கி வாழந்தாலும்..... அடங்க மறு, அத்துமீறு, இல்லாவிடில்..... அடிமை வாழ்வு தானே.

புலிகள் காலத்தில் அப்படி இல்லையே...

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

ஆக, சுப்பிரமணிய சுவாமி முதல், இலங்கையில் இருக்கக் கூடிய இந்திய புலனாய்வாளர்கள் கூட, சீனாக்காரன் பணத்தை, மகிந்தா ஊடாக விழுங்கி இருக்க வாய்ப்புண்டு என்ற சந்தேகம் எனக்குண்டு.

இது நியாயமான சந்தேகமே.

இந்தியா அக்கறை எடுக்கவில்லை என்பதை விட, ஒரு அளவுக்கு மேல் சீனாவை/இலங்கையை ஏன் தேவையில்லாமல் முறுக்குவான்? இலங்கை மொத்தம் சீனாவிடம் போனால் தனியே எம்மால் வெட்டி ஆட முடியுமா என பயந்து இருந்தது என்பதே உண்மை.

ஆனால் இப்போ அமெரிக்கா நாட்டாமையும் வாறார் என தெரிந்தால் முண்டி அடித்து கொண்டு சின்ன பகவதிதான் முன்னுக்கு வருவார்.

ஆகவே நாம் விரும்பியோ விரும்பாமலோ சின்ன பகவதியை டீல் பண்ணித்தான் ஆக வேண்டும்.

5 minutes ago, Nathamuni said:

அடுத்தது, அடக்கப்பட்டாலும், அடங்கி வாழந்தாலும்..... அடங்க மறு, அத்துமீறு, இல்லாவிடில்..... அடிமை வாழ்வு தானே.

புலிகள் காலத்தில் அப்படி இல்லையே...

இல்லை. புலிகள் காலத்திலும், இப்போதும் எமது இனத்தின் கூட்டு பிரக்ஞையில் ஒரு மாற்றமும் இல்லை. நாம் எப்போதும் எமது நிலத்தில் சுய ஆட்சியை கோரும் இனம்தான். 

எம்மை நிலத்தின் மீதும், வாழ்க்கை மீதும் ஆளுகை செலுத்தலாம், ஆனால் எங்கள் மனங்கள் மீதோ, வேட்கை மீதோ ஆளுகை செலுத்த முடியாது (நாமாக அனுமதிக்கும் வரை). 

அதுவரை நாம் தோற்று போனவர்களும் இல்லை, காலில் வீழ்ந்தவர்களும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று ஊருக்கு டெலிபோன் எடுத்திருந்தேன்.......கதைத்த கதைகளிலிருந்து நான் புரிந்து கொண்டது......

சிறிலங்காவில்  தற்போதைக்கு  ஈழத்தமிழர்கள் இந்திய- சீன விடயத்தில் பொழிப்பு மட்டுமே பார்க்க முடியும்.

சந்திரன்லை கொடி நாட்டுற போட்டி மாதிரி சிறிலங்காவிலையும் நடக்குது  அவ்வளவுதான்...🤣

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

அதுவரை நாம் தோற்று போனவர்களும் இல்லை, காலில் வீழ்ந்தவர்களும் இல்லை.

தோற்கடிக்க பட்டவர்கள்... இந்தியாவால்...

அவர்கள் அதிலிருந்து எம்மை மீட்டுவிட, யுத்தம் முடிந்த இத்தனை ஆண்டு காலமும் கை கொடுக்க வில்லை, அக்கறைப்படவும் இல்லை.

அதனால் தான், அவர்கள் மீது நம்பிக்கையும் இல்லை.

அதனால் தான், வெறுப்புடன் சொன்னேன், உங்களிடம், மண்டியிட்டு, வந்து 13+ வாங்கி தாருங்கள் என்று கேட்பதுக்கு பதில், சிங்களவருடன் நடப்பது நடக்கட்டும் என்று, சிவனே என்று, இருப்போம்.

போர்த்துக்கேயர்,, ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வந்து ஆண்டு ஆட்டம் போட்டு, இறுதியில் கிளம்பி போக ஏதோ காரணம் இருந்தது போல, சிங்களவரும், கிளம்பி போக... ஒரு காரணம் வந்தே தீரும்.

அது எமது காலத்திலும் நடக்கலாம், அடுத்த தலைமுறை காலத்திலும் நடக்கலாம்.

1948 இலங்கை சுதந்திரம் அடைந்தது என்று நாம் வாசிப்பது போல ஒரு தலைமுறை சிங்கள ஆட்சி இல்லாது போனதையும் வாசித்தறியும். 🙏

***

நல்ல கருத்தாடல். நேரத்துக்கு நன்றி.

சந்திப்போம்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Nathamuni said:

ஈழத்தமிழர்கள் என்றுமே இந்தியாவை வெறுத்தவர்கள் கிடையாது. இயல் இசை நாடகம் என ஆரம்பித்து உணவு முதல் உடுத்தும் ஆடை ஆபரணங்கள் வரைக்கும் இந்தியா இந்தியா என வாழ்ந்தவர்கள். ஆனால் கிந்திய அரசியல் நரிப்புத்தியின் காரணமாக எல்லாமே தலைகீழாக மாறியுள்ளது. அதுவும் 2009க்கு பின்னரான கிந்தியாவின் போக்கு ஈழத்தமிழர்கள் அவர்களை வெறுக்கும் போக்கிலையே தள்ளுகுகின்றது. அதிலும் ஒரு நன்மையுண்டு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தோற்கடிக்க பட்டவர்கள்... இந்தியாவால்...

அவர்கள் அதிலிருந்து எம்மை மீட்டுவிட, யுத்தம் முடிந்த இத்தனை ஆண்டு காலமும் கை கொடுக்க வில்லை, அக்கறைப்படவும் இல்லை.

அதனால் தான், அவர்கள் மீது நம்பிக்கையும் இல்லை.

அதனால் தான், வெறுப்புடன் சொன்னேன், உங்களிடம், மண்டியிட்டு, வந்து 13+ வாங்கி தாருங்கள் என்று கேட்பதுக்கு பதில், சிங்களவருடன் நடப்பது நடக்கட்டும் என்று, சிவனே என்று, இருப்போம்.

போர்த்துக்கேயர்,, ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வந்து ஆண்டு ஆட்டம் போட்டு, இறுதியில் கிளம்பி போக ஏதோ காரணம் இருந்தது போல, சிங்களவரும், கிளம்பி போக... ஒரு காரணம் வந்தே தீரும்.

அது எமது காலத்திலும் நடக்கலாம், அடுத்த தலைமுறை காலத்திலும் நடக்கலாம்.

1948 இலங்கை சுதந்திரம் அடைந்தது என்று நாம் வாசிப்பது போல ஒரு தலைமுறை சிங்கள ஆட்சி இல்லாது போனதையும் வாசித்தறியும். 🙏

***

நல்ல கருத்தாடல். நேரத்துக்கு நன்றி.

சந்திப்போம்...

யாரிடமும் மண்டியத்தேவையில்லை.

நமக்கு இலக்கு எது என்ற தெளிவு இருந்தால் - அதை அடையும் வழியை சாம, பேத, தான, தண்டம் மூலம் அடையலாம்.

வாழ்வில் எப்போதும் positioning முக்கியம். சரியான நேரத்தில், சரியானதை செய்ய நாம் சரியான இடத்தில் இருக்க வேண்டும். 

இது அரசியல் தலைவர்களுக்கும் குழுக்களுக்கும் பொருந்தும்.

அதே போல் ஒருவரால எமக்கு விழைய கூடிய நன்மை தீமைகள் என்ன? யார் எமக்கு அதிக நன்மை பயப்பவர்கள் என நாம் பார்க்க வேண்டும். அவர்களை நம்பத்தேவையில்லை, மண்டியிடவும் தேவையில்லை. ஆனால் அவர்களை எம் பக்கம் வளைக்கும் வகையில் நாம் அழுத்தங்களை பாவிக்க, மீடியாவை பிளே பண்ண, alliance build பண்ண தெரிந்திருக்க வேண்டும். 

எல்லாவற்றிற்கும் மேலாக looking at the bigger long term picture வாய்க்க வேண்டும்.

ரஜீவ், புலிகள், இந்தியா, கருணாநிதி குடும்பம், தலைவர், இவை எல்லாம் ஒரு காலத்தில் வரலாறாக மாறி விடும். ஆனால் இனத்தின் இருப்பு அப்படி அல்ல. அது நூற்றாண்டுகள், ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் விடயம் - அதை ஒரு 30 வருட நிகழ்வுகளிற்கு பழி தீர்க்கும் விடயம் என்ற குறுகிய நோக்கில் மட்டும் அணுகக்கூடாது.

சந்திப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

எததைனையோ மாவீரர்களும் மக்களும் உயிரையே கொடுத்த போது மூக்கை அறுத்தால் என்ன.

ஏன்உயிரை கொடுத்தார்கள் ? தமிழ்ஈழம் பெற்றுக்கொள்ள...மூக்கை அறுக்கலாம் தமிழ்ஈழம். கிடைக்குமானால்.      எதிரிக்கு  சகுனப் பிழைக்கு. ஒரு துருப்பையும். போடமுடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தியா எப்போதும் துரோகியே.

எமக்கு இழப்பதற்கு எதுவுமே இல்லை. ஆனால் இந்தியா இழப்பதற்கு ஏராளம் உண்டு. 

இந்தியா உடைந்து அழிவது எனக்கு எப்போதும்  மகிழ்வைத் தரும்.

😡

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

யாரிடமும் மண்டியத்தேவையில்லை.

நமக்கு இலக்கு எது என்ற தெளிவு இருந்தால் - அதை அடையும் வழியை சாம, பேத, தான, தண்டம் மூலம் அடையலாம்.

வாழ்வில் எப்போதும் positioning முக்கியம். சரியான நேரத்தில், சரியானதை செய்ய நாம் சரியான இடத்தில் இருக்க வேண்டும். 

இது அரசியல் தலைவர்களுக்கும் குழுக்களுக்கும் பொருந்தும்.

அதே போல் ஒருவரால எமக்கு விழைய கூடிய நன்மை தீமைகள் என்ன? யார் எமக்கு அதிக நன்மை பயப்பவர்கள் என நாம் பார்க்க வேண்டும். அவர்களை நம்பத்தேவையில்லை, மண்டியிடவும் தேவையில்லை. ஆனால் அவர்களை எம் பக்கம் வளைக்கும் வகையில் நாம் அழுத்தங்களை பாவிக்க, மீடியாவை பிளே பண்ண, alliance build பண்ண தெரிந்திருக்க வேண்டும். 

எல்லாவற்றிற்கும் மேலாக looking at the bigger long term picture வாய்க்க வேண்டும்.

ரஜீவ், புலிகள், இந்தியா, கருணாநிதி குடும்பம், தலைவர், இவை எல்லாம் ஒரு காலத்தில் வரலாறாக மாறி விடும். ஆனால் இனத்தின் இருப்பு அப்படி அல்ல. அது நூற்றாண்டுகள், ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் விடயம் - அதை ஒரு 30 வருட நிகழ்வுகளிற்கு பழி தீர்க்கும் விடயம் என்ற குறுகிய நோக்கில் மட்டும் அணுகக்கூடாது.

சந்திப்பம்.

இன்னும் ஒரு விடய்தை கவனித்தீர்களா?

பூமிப்பந்தில், இந்தியா எனும் நாடு.....  உருவாகியது, 1947ல்... உருவாக்கியது, பிரிட்டிஸ் காரர். உருவாகும் போதே, பிரிந்தது, இரண்டு நாடுகள், பாகிஸ்தான்.... பின்னர் பங்களாதேஸ்.

சமஸ்டியால்..... தப்பிப் பிழைத்தாலும், இந்தி, வரிப் பங்கீடு சமச்சீர் இன்மை, இந்தி்த் திணிப்பு, சமஸ்டி அதிகாரங்களை பறித்தல், ஊழல் காரணமாக நீண்ட காலம், ஒரே நாடாக இருக்கும் சாத்தியம் இல்லை.

இலங்கை எனும் நாடும் உருவாகியது, 1948ல்... உருவாக்கியது, பிரிட்டிஸ் காரர்.

சமஸ்டி இல்லாமல் சீரழிந்து, பிரிந்து போகும் நிலையில்.

ஆக... பிரிட்டிஸ்காரர் உருவாக்கிய இரு நாடுகளும், நீண்ட காலம் அப்படி இருக்க வாய்ப்பில்லை. காரணம், நாம் உசத்தி, அடுத்தவன் தாழ்வு மனப்பான்மை.. இது சாதியத்தின் இன்னும் ஒரு வகை.

மறுபுறம், அதே பிரிட்டிஸ் மண்ணில், அவர்கள் உருவாக்கிய கனடாவில் மக்களே, பிரிவினையை நிராகரித்துள்ளனர். காரணம், முழுமையான அதிகார பகிர்வு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நிச்சயமாக.

உலகில் நிரந்தரமாக இருந்த நாடு என்று எதுவும் இல்லை. உலகில் ஒரு நாடு என அறியபட்ட சகல நிலபரப்புகளுமே பின்னாளில் உடைந்துள்ளன அல்லது உருமாறியுள்ளன.

ஆனால் இந்தியா என்ற நாட்டை ஒட்ட வைத்திருப்பது 3% பிராமணியம். அது கையில் எடுத்துள்ள ஆயுதங்கள் தேசபக்தி, இந்துதுவா. 

இதே போலத்தான் பாக்கிஸ்தானும். அதுவும் கூட, பஞ்சாபி, சிந்தி, பலூச்சி, பஷ்டோ, காஸ்மீரி என பல தேசிய இனக்களின் கூட்டுத்தான். அங்கே ஒட்ட வைத்திருக்கும் பசை இஸ்லாம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரும் புதிருமாக இருந்தாலும் ஒன்றின் ஒருமைபாடு மற்றதில் தங்கியுள்ளது.

இஸ்லாமிய பாகிஸ்தான் இருக்கும் வரை இந்து இந்தியா உடைவது கடினம். இந்து இந்தியா இருக்கும் வரை இஸ்லாமிய பாகிஸ்தான் உடையாது.

சோவியத் யூனியன் போலன்றி இந்தியா ஒரு ஜனநாயக நாடு. குறைந்தளவு அதிகார பகிர்வாவது உண்டு.

ஆகவே இப்போதைக்கு இந்தியா உடைவது சாத்தியமாக எனக்கு தெரியவில்லை. அப்படி உடைவதை அமெரிக்கா உட்பட எந்த மேற்குநாடும் விரும்பபோவதும் இல்லை.

8 hours ago, Kapithan said:

எனக்கு இந்தியா எப்போதும் துரோகியே.

எமக்கு இழப்பதற்கு எதுவுமே இல்லை. ஆனால் இந்தியா இழப்பதற்கு ஏராளம் உண்டு. 

இந்தியா உடைந்து அழிவது எனக்கு எப்போதும்  மகிழ்வைத் தரும்.

😡

தனிப்பட்டு இதுவே எனது ஆசையும்.

நாம் இதன் மூலம் அதிகம் பலனடைவோம். இந்திய உடைவில் அங்கே ஒரு தனி தமிழ் நாடு உருவானால் - இலங்கைக்கு அதன் பின் நித்திய கண்டம்தான்.

ஆனால் இப்படியான எதிர்வுகூறலை வைத்து எமது அரசியலை தீர்மானிக்க முடியாது.

லொட்டரி விழும் அதன் பின் வீடு வாங்குவேன் என சொல்லுவதை போன்றது இது.

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிகள் தனித் தனியே பிளவுண்டதால், தவறானவர்களை அடையாளங் காண்பது எளிதாகவுள்ளது- ம.செல்வின் மூத்த நிர்வாக அதிகாரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.