Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வை பட்டத்திருவிழாவிற்கு நாமல் ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை பட்டத்திருவிழாவிற்கு நாமல் ஆதரவு

December 28, 2021
spacer.png

 

யாழ். வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” நடைபெறவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

  அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,  யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் (Namal Rajapaksa) இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை  கொழும்பில் இடம்பெற்றது.

 இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” இனை கோலாகலமாக நடத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முழு ஆதரவை வழங்குவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தில் யாழ். வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டத் திருவிழா நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

https://globaltamilnews.net/2021/171136

 

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்தான் காப்பாற்ற வேண்டும். 🤐

  • கருத்துக்கள உறவுகள்

இதனைப் பற்றி பல தரப்பட்ட விவாதங்கள் நடக்கிறது ..நேற்று ஒரு முகநூல் பதிவொன்றில் காணக்கூடிய தாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வல்வை சகாறா said:

பெருமாள்தான் காப்பாற்ற வேண்டும். 🤐

பெருமாளின் ஒப்பற்ற சேவகரான அனுமாரே பறக்கிறார், பெருமாள் காப்பாற்றாது விடுவாரா? சந்தேகம் எதற்கு.??

th?id=OIP.QO4a0YCHVXisTFlh_4IqoAHaEc&pid=Api&P=0&w=267&h=161

2 hours ago, வல்வை சகாறா said:

பெருமாள்தான் காப்பாற்ற வேண்டும். 🤐

சுமந்திரன் பட்டத்திருவிழாவுக்கு வந்தால் பெருமாள் காப்பாற்ற வருவார் 😃

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, வல்வை சகாறா said:

பெருமாள்தான் காப்பாற்ற வேண்டும். 🤐

ஏனுங்க ஊர் கொள்ளுப்படுத்தலுக்கும் கடவுளை இழுக்கிறியள் அரைமைல் அகலமும் ஐந்துமைல் நீளமும் உள்ள ஊரில் 38 கோவில் கள் கழகங்கள் இருந்தால் ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரித்தான் இந்திரவிழா எல்லா கழகமும் சேர்ந்துதானே செய்வது உங்க ஊரில் அதேபோல் ஒருகழகம் அதன் பாரம்பரியத்தையும் ஊரின் கட்டுக்கோப்புகளையும் அங்கு தற்போது தலைவராக உள்ளவர்களால் தங்களின் தனிப்பட்ட அரசியல் அறுவடைக்கு ஊரின் தொன்மையை அடகு வைப்பதையோ அல்லது ஊர் கட்டுப்பாடுகளையோ  தொடர்ந்து மீறப்படுமானால் அடுத்த பட்ட  திருவிழா எல்லாக்கழகமும் செய்தால் போச்சு இவ்வளவு பிரச்சனைக்கும் அங்கஜன் எனும் பேத்தை வால் செய்யும் கூத்துதான் காரணம் .

உண்மையில் பருத்திதுறை முனைகடற்கரையில் யுத்தகாலத்துக்கு முன்பு பட்டப்போட்டிகள் நடைபெறுவது உண்டு அதன்பின் முனைப்பக்கம் ஆமிக்காம் பிரச்சனைகளால் நடைபெறுவதில்லை வல்வையில் சிறியளவில் ரேவடி தற்போது நீச்சல்குளம் என்று நுளம்பு உற்பத்தி பக்ரரியாக முழுமூச்சாக செயல்படுகின்றது அங்கு பட்டப்போட்டி நடைபெற்றது அதுவும் 1995க்கு பிறகு ஆமி வந்தபின் அந்தப்பகுதி தடைபண்ணப்பட மதவடியில் உதயசூரியன் கழகத்தால் தொடங்கப்பட்டது தொடங்கியவர்கள் காணமல்  போக தற்போது அரசியல்வாதிகளின் கைகளில் படாதபாடு படுகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

சுமந்திரன் பட்டத்திருவிழாவுக்கு வந்தால் பெருமாள் காப்பாற்ற வருவார் 😃

அதுக்கு கப்பித்தன் விட வேணுமே.😂😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

அதுக்கு கப்பித்தன் விட வேணுமே.😂😄

கப்பிதான்  அவரின் பாடிகார்ட் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வை நலன்புரிச் சங்கம், மற்றும் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தின் கண்டன அறிக்கை

December 31, 2021

new logo vns 768x709 1  வல்வை நலன்புரிச் சங்கம், மற்றும் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தின் கண்டன அறிக்கை

வல்வை விக்கினேஸ்வரா சனசமூக சேவா நிலையம் மற்றும் உதயசூரியன் கழக நிர்வாகத்தினரின், நாமலுடனான சந்திப்பின் தன்னிலை விளக்க அறிக்கையை பார்த்து வெட்கித் தலை குனிவதுடன், பெரும் அவமானத்தையும் சுமந்து நிற்கின்றோம்.

சரித்திரத்தில் வீரம் செறிந்த வல்வை மண், இன அழிப்பு செய்த அரசுடன் கை கோர்த்து அலரிமாளிகையில் தற்போது நாம், எமக்கு கிடைத்த கௌரவம் என, படங்களுடன் கூடிய அறிக்கைகளை விட்டு வீர மண்ணின் சரித்திரத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டீர்கள்.

WhatsApp Image 2021 12 31 at 2.35.49 PM  வல்வை நலன்புரிச் சங்கம், மற்றும் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தின் கண்டன அறிக்கை

அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் இப் பட்டப் போட்டி நடைபெறுமானால் தலைவர் வழியில் போராடி உயிர் நீர்த்த மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நாங்கள் காலத்தில் அழியாத துரோகத்தை எமது மண் செய்த வரலாறு பதியப்படும்.

எமது பாரம்பரிய, எங்களுக்கே உரித்தான கலாச்சார நிகழ்வான விசித்திரப்பட்டப் போட்டி இனப்படு கொலை செய்த அரசின் நல்லிணக்கம் என்ற போர்வையில் அவர்களின் நிகழ்வாக காட்சிப் படுத்தப்பட போகிறதென்பது மிகவும் கண்டிக்கத்தக்கதும், அவமானத்திற்குரியசெயலாகும்.

விடுதலை போராட்டம் தொடங்கிய மண்ணில் பிறந்த நீங்கள், இத்தனையாயிரம் மாவீரர்களை கொடையாக்கிய பெற்றோர்கள் வாழும் போதே அற்ப, சொற்ப சுயநலத்திற்காக கையேந்தி எமது மண்ணின் சரித்திரத்தையே அழித்துவிடும் செயலை செய்ய முற்பட்டுள்ளீர்கள். உங்கள் அறிக்கையானது புலம்பெயர்ந்து வாழும் மக்களின் மனதை மிகவும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

உலகளாவிய தமிழ் மக்களின் பார்வையில் இருந்த எம் மண்ணினூடான எதிர்பார்ப்புகளை தகர்த்துள்ளீர்கள்.

நீங்கள் எடுத்த முடிவானது எம் மண்ணிற்கு காலத்திற்கும் அழிக்க முடியாத அவமானம் என்பதனை புரிந்து கொண்டு, ஏற்பாட்டாளர்கள் இதை நிறுத்துவதே  எம் மண்ணின் மானத்தை காக்க முடியும். இது பிரித்தானியாவில் வாழும் பெரும்பாலான வல்வை மக்களின் காத்திரமான வேண்டுகோள்.

 

https://www.ilakku.org/valvai-welfare-association-and-valvai-blues-sports-club-condemnation-report/
 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை பட்டத் திருவிழா விவகாரம்: வரலாற்று தவறை இழைக்காதீர்! நாமல் உள்ளிட்டவர்களுக்கு ஜேர்மனியில் இருந்து வந்த எதிர்ப்பு (Photo)

விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையில் வல்வையில்  இடம்பெறவுள்ள பட்டத் திருவிழாவிற்கு பல்வேறு எதிர்ப்புக்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி,  ஜேர்மனியை தளமாகக் கொண்டு இயங்கும் வல்வை ஒன்றியம் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

தமிழின அழிப்பை நடாத்தியும் தமிழர்களது பூர்வாங்க நிலங்களை பறித்தெடுத்தும் எண்ணில் கணக்கற்ற தமிழர்களை பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் சிறையில் அடைத்தும் தனது அடக்குமுறை ஆட்சியை நடாத்தி வருகின்ற இலங்கை அரசின் அமைச்சரும், பிதமர்  மகிந்த ராஜபக்சவின் மகனுமாகிய நாமல் ராஜபக்சவையும் இன அழிப்பு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களையும் பட்டத்திருவிழாவிற்கு அழைப்பதானது எமது இனத்திற்கு இழைக்கும் வரலாற்று தவறாகும் என குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

No photo description available.

https://tamilwin.com/article/do-not-make-a-historic-mistake-request-to-the-1640930111?itm_source=parsely-top

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம்.

January 3, 2022

 

 

 

ஊடகப் பிரிவு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

03-01-2022
ஊடக அறிக்கை

வல்வெட்டித்துறை மண்ணில் இதுவரை காலமும் தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பட்டத்திருவிழா மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வந்திருந்தது. ஆனால், வழமைக்கு மாறாக, இவ்வாண்டு தமிழின விரோத சக்திகளின் வழிநடத்தலில், தமிழினத்தின் வாழ்வுரிமையைச் சிதைத்த, இனவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக்கி, அவர்களின் பங்குபற்றலுடன் இவ்விழாவை நடாத்த முற்பட்டுள்ள அரச முகவர்களின் சதிமுயற்சிக்குள், ஏற்பாட்டுக்குழுவினரை சிக்க வைத்துள்ள இந்த செயற்பாடானது தமிழின பண்பாட்டு அழிப்பின் தொடர்முயற்சியாகும்.

இவ்வாறு தமிழின பண்பாட்டு அழிப்பின் தொடர்முயற்சியின் அங்கமாக, இப் பட்டத்திருவிழா நிகழ்வு நடைபெறுமாயின், தமிழின வரலாற்றின் கறைபடிந்த நிகழ்வாகவே, எதிர்வரும் காலங்களில் இந்நிகழ்வு வரலாற்றில் பதியப்படும். தமிழர் வரலாற்றில் பின்னிப்பிணைந்த பாரம்பரிய நிகழ்வான பட்டத்திருவிழாவில், இவ்வாறான கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோக வேண்டாம் என விழாவின் ஏற்பாட்டாளர்களை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேண்டி நிற்கின்றது.

தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத ஒடுக்குமுறை, இனப்படுகொலையாக விஸ்வரூபம் எடுத்தபோது, சிங்கள – தமிழ்த் தேசிய இனங்கள் மத்தியில் முரண்பாடுகள் முற்றியது. ஒற்றையாட்சியின் கீழ் ஐக்கியமாக வாழமுடியாத நெருக்கடி நிலை தோன்றியபோது, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அரசியல் சுதந்திரப்போராட்டம் உதித்த மண்ணில் நடக்கக் கூடிய ஒரு நிகழ்வுக்கு, தமிழினவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக்க முற்படும் பேரினவாத முகவர்களின் திட்டமிட்ட சதிவலைக்குள் சிக்காது, ஏற்பாட்டாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும்.

சர்வதேச அரங்கிலுள்ள, தமிழ் மக்களுக்கான பொறுப்புக் கூறல் விடயங்களை, சிறிலங்கா அரசு முற்றுமுழுதாகப் புறக்கணித்தே வருகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் இன்றும் வீதிகளில் நின்று, நீதிவேண்டிப் போராடிவருகிறார்கள். தமிழர் தாயகம் மீது, திட்டமிட்டு சிங்கள மயமாக்கல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு, தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடரும் சூழ்நிலையில், தமிழினவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக அழைப்பதென்பதும், அதற்கு ஏற்பாட்டாளர்கள் தன்னிலை விளக்கம் கொடுப்பதென்பதும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாத மிக மோசமான செயற்பாடாகவே அமையும்.

வீரமும், தியாகமும், அளப்பரிய அர்ப்பணிப்புக்களும் நிறைந்த தமிழ் மண்ணில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக, ஒரு உன்னதமான தேசிய விடுதலைப் போராட்டம் உதித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மண்ணில், அற்ப நலன்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் தீர்மானங்கள் வரலாற்றில் என்றுமே மன்னிக்கப்படமுடியாதவையாகவே இருக்கும் என்பதைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்த விரும்புகின்றது. எனவே, குறித்த பட்டத்திருவிழாவுக்கு சிறிலங்கா இனப்படுகொலை அரசின் பங்காளிகளையும், அவர்களுக்குத் துணைநின்றவர்களையும், விருந்தினர்களாக அழைக்கும் முடிவை ஏற்பாட்டாளர்கள் உடன் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர்

செல்வராசா கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
பொதுச் செயலாளர்

https://globaltamilnews.net/2022/171321

  • கருத்துக்கள உறவுகள்

ஓமிகுரோனின் வருகைக்கு பயந்து தமிழ்நாட்டில் புத்தக கண்காட்சியையே  நிறுத்துகிறார்கள் இவர்கள் என்னடா என்றால் முன்பே சொல்லியது போல் மிகக்குறைந்த இடத்தில் சனத்தை கூடவைத்து   நோய் பரவலை அதிகரிப்பதில் வெகு ஆர்வமாக இருக்கிறார்கள்.எதை  பற்றியும்  கவலைப்படாமல் பட்டம் விட்டுத்தான் ஆகணும் என்று ஒத்தைக்காலில் அரசியல் செய்கினம் போட்டி நடந்து முடிந்தபின் தொற்று நோய் பரவி இழப்புகள் வரும்போது யாராலும் பதில் சொல்ல முடியாது என்று தெரிந்தும் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளி  போடுவதற்கு தயாராகினம் சொல்லப்போனால் ராஜபக்ச குடும்பத்தின் தமிழ் இன அழிப்பு தொடர்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் அங்கயன் ஓடி வா…..

என பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யணும்

  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை காலவரையறையின்றி ஒத்திவைக்க வேண்டும் - சிவாஜிலிங்கம் 

வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பிலே வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா ஏற்பாடுகளை கூட நான் தொடர்பு கொண்டு தற்போதைய சூழ்நிலை நடத்த வேண்டாம் என கூறியுள்ளேன்.

அதனையும் மீறி நிகழ்வை நடத்த முற்படுவார்களாக இருந்தால் வல்வெட்டித்துறை நகரசபை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளோம்.

அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்பதுடன் தேவைப்பட்டால் நீதிமன்றம் மூலமாக இதனை தடுக்க முற்படுவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/120161

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறை மண்ணுக்குரிய பெருமையுடன் பட்டத்திருவிழா நடத்தப்பட வேண்டும் - சார்ள்ஸ்

தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ள பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களினால் தமிழ் இனப்படுகொலை புரிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற உள்ளமையை நான் வன்மையாக கண்டிப்பதோடு, குறித்த பட்ட திருவிழாவானது வல்வெட்டித்துறை மண்ணுக்குள்ள பெருமையுடன் நடைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

download.jpg

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (4) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

நீண்ட இனவழிப்பையும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் முறையற்ற விதத்தில் பறிப்பதும் என கொடூர ஆட்சி நடத்தும் இந்த அரசாங்க அமைச்சர்களின் பிரசன்னத்துடன் அவர்களின் அனுசரணையுடன் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறையில் இடம் பெறவுள்ள பட்ட திருவிழாவானது   வல்வெட்டித்துறை மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் எழுத்து மூல அறிக்கையை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலையை நடத்திய ராஜபக்ஷ குடும்பத்தினரை பிரதம விருந்தினராக அழைத்து இந்த பட்டத் திருவிழா நடத்துவது 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலையை சர்வதேச அரங்கிலிருந்து இல்லாது செய்வதற்குரிய அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கையே இது.

நீண்ட காலமாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள்  எதிர்பார்த்திருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் முயற்சி வீண் போகும் வகையில் இந்த செயல்பாடு சர்வதேசத்தினுடைய பார்வை இனப்படுகொலை புரிந்தவர்களை அழைத்து இந்த பட்டத்திருவிழாவை நடாத்துவதானது சர்வதேச அரங்கிலிருந்து  இலங்கை அரசாங்கத்தை தப்பிப்பதற்கு உரிய சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்கும்.

ஆகவே  ஏற்பாட்டாளர்கள் இதை கவனத்தில் கொண்டு பட்டத்திருவிழா அரசியல் கலப்படமற்ற வகையில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

உடனடியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த புதிய நடைமுறையை கைவிட்டு இந்த மண்ணில் கால காலமாக நடைபெற்று வரும் பட்டத் திருவிழா போன்று இம்முறையும் நடைமுறைப்படுத்த முன்வருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.என அவரது அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/120184

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.