Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படைகள் குவிப்பு… உக்ரைனை ஆக்கிரமிக்கும் ரஷ்யா? அமெரிக்காவால் என்ன செய்ய முடியும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படைகள் குவிப்பு… உக்ரைனை ஆக்கிரமிக்கும் ரஷ்யா? அமெரிக்காவால் என்ன செய்ய முடியும்?

உக்ரைன் எல்லையில் ரஷ்யா 1 லட்சம் படைவீரர்களை குவித்துள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இது, உக்ரைன் மீது போர் புரிவதற்கான சாத்தியக்கூறுகளை காட்டுவதாக தெரிகிறது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது நாடு போர்ப்பாதையில் இல்லை என்றும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒரு தவறான நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தடைகளை ஏற்படுத்தியுள்ளன.
கிழக்கு ஐரோப்பாவில் தனது ராணுவத்தை அதிகரிப்பதன் மூலம், அதன் பிராந்திய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமின்றி குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்காக அமெரிக்கா தலைமையிலான வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) மீது குற்றம் சாட்டுகிறார்.
அமெரிக்க, நேட்டோ மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையேயான தொடர் பேச்சுக்களில், பல பெரிய கோரிக்கைகளை பட்டியலிட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம்(ஜனவரி 21) ராஜதந்திரத்தை தக்கவைத்து கொள்ளும் முயற்சியிலும், உக்ரைனில் சாத்தியமான ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் முயற்சியிலும், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கனும், ரஷ்ய பிரதிநிதி செர்ஜி லாவ்ரோவும் ஜெனீவாவில் 90 நிமிட சந்திப்பை நடத்தினர். ஆனால், இச்சந்திப்பில் பெரியளவில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. ஆனால், இவ்விவகாரம் குறித்து மீண்டும் பேச திட்டமிட்டுள்ளதாகவும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், புதினுக்கும் இடையில் மற்றொரு உரையாடல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக, வியாழன் அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பைடன், “உக்ரைனை ஆக்கிரமிக்க விரும்பினால் ரஷ்யா அதிக விலை கொடுக்க நேரிடும்” என்று எச்சரித்திருந்தார்.
ரஷ்யா உக்ரைனை அச்சுறுத்தவது ஏன்?
ஐரோப்பிய நிறுவனங்களுடன், குறிப்பாக நேட்டோவுடன் உக்ரைன் வளர்ந்து வரும் நெருக்கத்தை ரஷ்யா நீண்டகாலமாக எதிர்த்து வருகிறது. ரஷ்யா தனது எல்லையை ஒருபுறம் முன்னாள் சோவியத் குடியரசுடனும், மறுபுறத்தை ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பகிர்ந்துகொள்கிறது.
ரஷ்யா-உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள தற்போதைய ராணுவம், 2014 ஆம் ஆண்டு, உக்ரைனின் தெற்கு கிரிமியன் தீபகற்பத்தை ரஷ்யா இணைத்து, கிழக்கு உக்ரைனின் பெரும்பகுதியைக் கைப்பற்ற முடிந்த பிரிவினைவாதிகளை ஆதரித்ததை நினைவூட்டுகிறது.
இது ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் நாடு முழுவதும் சாலையில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியதையடுத்து ஏற்பட்டது. மேலும், அப்போதைய பிரபலமற்ற ரஷ்ய சார்பு அதிபர் விக்டர் யானுகோவிச் பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது. அவர் புதினால் ஆதரிக்கப்பட்டார்.
இன்றும் மோதல் தொடரும் வேளையில், 2014 மற்றும் 2015ல் மின்ஸ்க் ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு, கடுமையான காலம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. ஆனால் கிழக்கு உக்ரைனில், குறிப்பாக தொழில்துறை மையமான டான்பாஸில், கிளர்ச்சியாளர்கள் உக்ரைனின் ராணுவப் படைகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.கடந்த ஏழு ஆண்டுகளில், சுமார் 14,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் சுதந்திரத்தை ஏற்க ரஷ்யா முன்வரவில்லை. கடந்தண்டு புதின் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யர்களும் உக்ரேனியர்களும் “ஒரு தேசத்தின்” ஒரு பகுதி என்று குறிப்பிட்டிருந்தார். அதே சமயம், உக்ரைனின் தலைமை “ரஷ்ய எதிர்ப்பு திட்டத்தை” நடத்துவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இம்முறை உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ரஷ்யா கூறினாலும், கிழக்கு ஐரோப்பாவில் மேற்கு நாடுகளை அதன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய புதின் போர் அச்சுறுத்தலை ஒரு பேரம் பேசும் பொருளாக பயன்படுத்துகிறார். உக்ரைன் முழுவதும் ஆயுதங்களை நிரப்பி பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக மாஸ்கோ குற்றச்சாட்டியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பரில், உக்ரைன் போன்ற எந்த முன்னாள் சோவியத் நாடுகளையும் நேட்டோவில் சேர்க்க வேண்டாம் என்றும், கிழக்கு ஐரோப்பாவில் ராணுவ கூட்டணி தனது இருப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் புதின் தெரிவித்திருந்தார்.
அதாவது, போலந்து, லாட்வியா, எஸ்டோனியா மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளில் இருந்து நேட்டோ நாடுகள் தனது அனைத்து போர் பிரிவுகளையும் வெளியேற்ற வேண்டும் என்பதே பொருள் ஆகும்.
ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு அமெரிக்காவின் பதில் என்ன?
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் புதினின் கோரிக்கைகளை முழுமையாக நிராகரித்தன. அத்தகைய கோரிக்கையை அங்கீகரிப்பது நேட்டோவின் ஸ்தாபக உடன்படிக்கைக்கு எதிரானது ஆகும். வடக்கு அட்லாண்டிக் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உறுப்பினர் கடமைகளை நிறைவேற்றவும் உதவும் எந்தவொரு விருப்பமுள்ள ஐரோப்பிய நாட்டையும் அமைப்பு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால்,இவ்விவகாரத்தில் ரஷ்யா சமாதான போக்கை தொடரவில்லை.அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் எழுத்துப்பூர்வ பதிலை விரைவில் வழங்குமாறு கேட்டுக்கொண்டது. அதன் பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது.
russia-ukra-300x203.jpg
இதற்கிடையில், ரஷ்யா விரைவில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று பைடன் நம்புகிறார்.அப்படி நடந்தால், மாஸ்கோ அதன் நடவடிக்கைகளுக்கு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா புதிய ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அச்சுறுத்தியுள்ளன.
எல்லையில் குவித்துள்ள படைகள் மூலம் செய்யக்கூடியதை ரஷ்யா செய்துவிட்டால், அது பேரழிவாக இருக்கும் என பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பது இது முதல் முறையல்ல. கிரிமியாவை இணைத்ததைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு முதல் அவ்வாறு செய்து வருகிறது.
அட்லாண்டிக் கவுன்சிலின் ஆய்வின்படி, அமெரிக்க நடவடிக்கையால் ரஷ்ய பொருளாதாரத்தில் ஆண்டுதோறும் சுமார் 50 பில்லியன் டாலர்கள் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால், உக்ரைனில் புதின் ஏற்படுத்தும் பிரச்சனைகளை தடுத்திட முடியவில்லை. சில ஆய்வாளர்கள் ரஷ்யாவின் பல பில்லியன் டாலர் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் திட்டத்தை குறிவைப்பதே சிறந்தது என கூறுகின்றனர்.
உக்ரைன் மற்றும் போலந்து போன்ற நாடுகளை எதிர்த்து குரல் கொடுக்கும் நாடுகளை கடந்து செல்லும் இந்த குழாய் பாரிய புவிசார் அரசியல் விவாதத்தின் மையமாக உள்ளது. ஜெர்மனியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டால் ரஷ்யாவுக்கு பில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தி நியூயார்க் டைம்ஸ் படி, கடந்த நிதியாண்டில் $450 மில்லியனுடன் கூடுதலாக இந்த வாரம் உக்ரைனுக்கு தற்காப்பு ராணுவ உதவியாக $200 மில்லியனுக்கு பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சமீபத்திய வாரங்களில், ரஷ்யாவின் முன்னேற்றங்களை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகள் கிழக்கு ஐரோப்பாவில் ராணுவத்தை பலப்படுத்திடம் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
உதாரணமாக, மத்தியதரைக் கடல் மற்றும் கருங்கடலில் உள்ள நேட்டோவின் கடற்படைப் படைகளில் சேர ஸ்பெயின் தனது போர்க்கப்பல்களை அனுப்புவதாகவும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் ருமேனியாவுக்கு படைகளை அனுப்ப முன்வந்துள்ளதாகவும், இங்கிலாந்து தரப்பிலும் படைகள் மற்றும் ஆயுதங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
வெள்ளியன்று பிளிங்கன் மற்றும் லாவ்ரோவ் பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. பிரச்சனையை தீர்க மீண்டும் சந்தித்து பேச முடிவெடுத்துள்ளனர்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்கத் தயாராக இல்லை என்பதை மீண்டும் உறுதிபடுத்திய பிளிங்கன், ரஷ்யாவின் முன்மொழிவுகளுக்கு அமெரிக்கா எழுத்துப்பூர்வ பதிலை அடுத்த வாரம் அளிக்கும் என்றும், அதன் பிறகு மற்றொரு சந்திப்பு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
tamil.indianexpress.

Thinakkural.lk

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் பதற்றம்: ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்க்க அணி திரளும் மேற்கு நாடுகள்

7 மணி நேரங்களுக்கு முன்னர்
 

रूस-यूक्रेन संकट

பட மூலாதாரம்,GETTY IMAGES

யுக்ரேனுடனான எல்லையில் ரஷ்யா அதன் துருப்புகளை நிலைநிறுத்தும் செயல்பாடுகளுக்கு எதிராக ஐரோப்பிய தலைவர்கள் "முழு ஒருமித்த கருத்துடன்" இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கு சக்திகள் ஒரு பொதுவான மூலோபாயத்தை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதையடுத்து அந்த நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் ஜோ பைடன் திங்கட்கிழமை காணொளி காட்சி வாயிலாக கூட்டம் நடத்தினார். யுக்ரேனுக்குள் ரஷ்யா ஊடுருவல் செய்தால் அந்த நாட்டுக்கு எதிராக "விரைவான" மற்றும் "முன்னெப்போதும் இல்லாத" வகையிலான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளது.யுக்ரேன் எல்லையில் சுமார் ஒரு லட்சம் வீரர்களை குவித்த போதிலும், அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் திட்டத்தை ரஷ்யா மறுத்து வருகிறது.இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடுகளுக்கு பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் ஓரணியில் உள்ளனர்.

இதையடுத்து அந்த நாடுகளின் தலைவர்களுடனான காணொளி காட்சி கலந்துரையாடலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைவர்கள் இணைந்தனர். நேட்டோ தலைவர் யென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் விடுத்த அழைப்பின் பேரில் இந்த கலந்துரையாடல் நடந்தது. "இது எனக்கு மிக, மிக நல்ல சந்திப்பு இருந்தது - அனைத்து ஐரோப்பிய தலைவர்களுடனும் முழு ஒருமித்த கருத்து உள்ளது" என்று பைடன் இந்த சந்திப்பு குறித்து தெரிவித்தார்.

முன்னதாக, கிழக்கு ஐரோப்பாவில் கூடுதல் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை நிலைநிறுத்துவதாக நேட்டோ திங்கள்கிழமை (ஜனவரி 24) அறிவித்தது. அப்போது முதல் ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.

மறுபுறம் அயர்லாந்து, யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சமும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், யுக்ரேன் எல்லையில் போர் போன்ற சூழ்நிலை உருவாக அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு நாடுகள் எச்சரித்துள்ளன.

இந்த நிலையில், யுக்ரேனில் உள்ள தமது தூதரக ஊழியர்களை பிரிட்டன் திரும்ப அழைத்துக் கொண்டிருக்கிறது.

 

யுக்ரேன் ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் அதிகரிக்கும் சூழல்கள் தென்படுகின்றன.

இந்த பதற்றத்தின் தொடர்ச்சியாக பிரிட்டிஷ் தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால் தலைநகர் கீஃபில் உள்ள தூதரகத்தில் பணியாற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்புகின்றனர்.

மறுபுறம் யுக்ரேனில் உள்ள தனது தூதரகத்தில் உள்ளவர்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள அமெரிக்கா, அங்குள்ள தமது நாட்டவர்களை நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது.

இப்போதைக்கு ஆபத்து இல்லை

ரஷ்யாவின் தாக்குதல் அச்சத்திற்கு மத்தியில், யுக்ரேன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் இருவரும் தங்களுடைய தூதரக அதிகாரிகளை பரஸ்பரம் திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என்று கூறியுள்ளனர்.

ஒருவேளை ரஷ்யா அதன் படைகளை யுக்ரேனுக்குள் அனுப்பினால் அந்நாடு மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து தயாராகி வருகிறது.

இந்த விஷயத்தில் ரஷ்யா உரிய பதிலைக் கொடுக்க நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் கூறியுள்ளது.

இத்தகைய சூழலில்தான், தமது உறுப்பு நாடுகள், கிழக்கு ஐரோப்பா நோக்கி அவற்றின் போர்க்கப்பல்கள் மற்றும் வான்படை தளவாடங்களை அனுப்பியுள்ளதாக நேட்டோ கூறியுள்ளது.

டென்மார்க், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் தங்களின் ராணுவத்தினரை தயார் நிலையில் வைத்துள்ளன.

நேட்டோ மற்றும் ரஷ்யா மீதான குற்றச்சாட்டுகள்

 

யுக்ரேன்

பட மூலாதாரம்,EPA

நேட்டோ தலைவர் யென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், "நேட்டோ தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக உள்ளது" என்றார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஆனால், இந்த விவகாரத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்வது நேட்டோ தான் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. யுக்ரேனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிரான அந்நாட்டின் நடவடிக்கையை ஆபத்தை நேட்டோ அதிகரிக்கச் செய்து விட்டதாக ரஷ்யா கூறுகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் போரல், கீஃபில் இருந்து தூதர்களை திரும்ப அழைக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும் ரஷ்யாவுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருவதால் எவ்வித களேபரத்துக்கும் இடம் கொடுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

டென்மார்க் நிலைப்பாடு

 

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்

பட மூலாதாரம்,RUSSIA DEFENCE MINISTRY

இதேவேளை "மிகப்பெரிய பொருளாதார தடைகள் வந்தாலும் அதற்கு நாங்கள் பதிலளிக்கத் தயாராக உள்ளோம் என்பதில் சந்தேகமில்லை. அந்த எதிர்வினை இதுவரை கண்டிராததாக இருக்கும்" என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சர் ஜெப் கோஃபோட் கூறினார்.

அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே அதன் உறுப்பு நாடுகள் சில சொந்த பிரச்னைகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் ரஷ்யாவுடன் வெவ்வேறு வகையில் உறவுகளைக் கொண்டுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான கூட்டு நடவடிக்கையில் ஒருமித்த கருத்தை எட்டுவது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சவாலானதாக இருக்கும்.

ஐரோப்பாவின் பொருளாதார மையமான ஜெர்மனி, ஏற்கனவே யுக்ரேன் விவகாரத்தில் அதன் நிலைப்பாட்டுக்காக விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. அந்த நாடு தமது படைகளை யுக்ரேனுக்கு அனுப்ப மறுத்துள்ளது. அதே சமயம், ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் ஐரோப்பா கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலினா எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

இதற்கிடையே, யுக்ரேனுக்கு இரண்டரை பில்லியன் டாலர்கள் அவசர நிதி உதவி வழங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் வூர்சூலா ஃபொன்டேலயன் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறியது. இந்த நிலையில், அதன் பிரதமர் போரிஸ் ஜான்சன், யுக்ரேனில் தமது ஆதரவு தலைமையை கொண்டு வருவதற்காக ரஷ்யா திட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

யுக்ரேனை ரஷ்யா தாக்கினால் புதிய செச்சன்யா போன்ற நிலை உருவாக நேரிடும் என அவர் எச்சரித்தார்.

இதற்கிடையே, அட்லான்டிக் பெருங்கடலின் சர்வதேச கடற்பகுதியில் ரஷ்யாவின் ராணுவ பயிற்சிகளுக்கு அயர்லாந்து எச்சரிக்கையுடன் பதிலளித்துள்ளது.

அயர்லாந்து நேட்டோவில் உறுப்பினராக இல்லை. அதே சமயம், ரஷ்ய கடற்படை பயிற்சி மேற்கொள்ளும் இடம் அயர்லாந்தின் தென்மேற்கு கடல் பகுதி அருகில் உள்ளது.2014இல் கிரிமியாவை யுக்ரேனுடன் ரஷ்யா இணைத்தது முதல் அங்கு பதற்றம் அதிகமானது. அந்த நாடு ஏற்கெனவே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக் குழுவுடன் கிழக்குப் பகுதியில் சண்டையிட்டு வருகிறது. இந்தப் போரில் கடந்த 8 ஆண்டுகளில் 13,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/global-60123066

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் புதிதுபுதிதாக செய்கிற ஆயுதங்களை பரிசோதித்து பார்க்க களம் வேணும் தானே.

தொடங்குங்கோ.

ஆனாலும் அமெரிக்காவை நம்பி ஆப்கானில் மோசம் போனதையும் மனதில் வைத்திருந்தால் நல்லது.

இங்கு போர் மூண்டால் 

தாய்வானை தோய்த்து காயபோட சீனாவுக்கு நல்ல சந்தர்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

அவரவர் புதிது புதிதாக செய்கிற ஆயுதங்களை பரிசோதித்து பார்க்க களம் வேணும் தானே.

தொடங்குங்கோ.

ஆனாலும் அமெரிக்காவை நம்பி ஆப்கானில் மோசம் போனதையும் மனதில் வைத்திருந்தால் நல்லது.

இங்கு போர் மூண்டால் 

தாய்வானை தோய்த்து காயபோட சீனாவுக்கு நல்ல சந்தர்ப்பம்.

ஏனண்ணை கொஞ்சம்  பெரிசாக  சொல்லுவமே?

இந்தியாவையும்  தோய்த்து  காயப்போட சீனாவுக்கு  நல்ல  சந்தர்ப்பம் என்றும்??🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அவரவர் புதிதுபுதிதாக செய்கிற ஆயுதங்களை பரிசோதித்து பார்க்க களம் வேணும் தானே.

தொடங்குங்கோ.

ஆனாலும் அமெரிக்காவை நம்பி ஆப்கானில் மோசம் போனதையும் மனதில் வைத்திருந்தால் நல்லது.

இங்கு போர் மூண்டால் 

தாய்வானை தோய்த்து காயபோட சீனாவுக்கு நல்ல சந்தர்ப்பம்.

 

34 minutes ago, விசுகு said:

ஏனண்ணை கொஞ்சம்  பெரிசாக  சொல்லுவமே?

இந்தியாவையும்  தோய்த்து  காயப்போட சீனாவுக்கு  நல்ல  சந்தர்ப்பம் என்றும்??🤣

இதெல்லாம் நம்ம லிஸ்டில் இல்லையே .....!  😂

நான் நினைக்கவில்லை போர் மூளும் என்று. ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தாலும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை போடும். ஐரோப்பிய நாடுகளும் அதைப் பின்பற்றும். நேரிடைச் சண்டை இருக்காது. ரஷ்ய படைகளுடன் ஒரு போதும் மோதும் நிலைக்கு எவரும் வரமாட்டார்கள்.

ஒரு போரைத் தாங்கக் கூடிய பொருளாதாரச் சூழல் இன்று உலகில் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

ரஷ்யாவுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

பொறிஸ்  தண்ணியடிச்சு தள்ளாடின பிரச்சனையை மறைக்க நல்ல சந்தர்ப்பம்.🤪

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவுக்கு விளையாட்டு, 
சுவீடனுக்கு சீவன் போகுது!

பால்டிக் கடலில் வெடிக்கக் கூடிய எந்தப் போரிலும் சுவீடனின் அமைவிடம் முக்கி
யத்துவம்மிக்கது. கடலின் நடுவே அமை
ந்திருக்கின்ற கொட்லான்ட் (Gotland) என்
னும் சுவீடிஷ் தீவு பூகோள ரீதியில் பாது
காப்புக் கேந்திரம் ஆகும்.பால்டிக் கடலின்
ஆதிக்கத்தைக் கையில் வைத்திருக்க
விரும்பும் சக்திகள்-அது ரஷ்யாவாக இருந்தாலும் சரி நேட்டோவாக இருப்பி
னும் சரி - முதலில் அந்தத் தீவைக் கைப்
பற்றியாக வேண்டும்.

ரஷ்யாவின் கலினின்கிராட் கடற்படைத்
தளத்துக்கு (Kaliningrad naval base) வடக்கே
சுமார் முந்நூறு கிலே மீற்றர்கள் தொலை
விலும் - ரஷ்யாவின் பரம எதிராளிகளும் 
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளு
மாகிய லித்துவேனியா ( Lithuania) லத்
வியா(Latvia),எஸ்தோனியா(Estonia)ஆகிய
மூன்று முக்கிய கிழக்கு ஐரோப்பிய நாடு
களுக்கு எதிர்த்திசையில் மேற்குப் பக்கத்
திலும் - அமைந்திருப்பதால் கொட்லான்ட்
தீவு குறித்து ரஷ்யா,  சுவீடன் இருநாடுக
ளுக்குமே அச்சம் உள்ளது. எனினும் அமைதியை விரும்புகின்ற சுவீடனோ
கொட்லான்ட் தீவில் தனது படைபலத்தை நிறுவிப் பாதுகாப்பையும் அதன் கேந்திர முக்கியத்தையும் பேணும் விடயத்தில்
அசிரத்தையாக இருந்து வருகிறது.
ஆனால் கொட்லான்ட் தீவை "மூழ்கடிக்க
முடியாத ஒரு விமானந்தாங்கிக் கப்பல்"
("an unsinkable aircraft carrier) என்று வர்ணிக்கின்ற அமெரிக்கத் தளபதிகள் எப்போதும் அந்தத் தீவின் மீது தங்களது தீவிர கவனத்தைக் கொண்டுள்ளனர்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக ரஷ்யா அதன் பாரிய கடற்படைக் கப்பல்
கள் சிலவற்றை பால்டிக் கடலில் சுவீடனு
க்கு நெருக்கமாக நகர்த்தியது.அதனால் அங்கு பதற்றம் உருவானது.அச்சுறுத்த
லைக் கருத்திற்கொண்டு சுவீடன் உடன
டியாகவே தனது அறுபதாயிரம் துருப்புக்
களையும் போர் டாங்கிகளையும் கொட்
லான்டில் தரையிறக்கித் தயார் நிலை
யில் வைத்தது. கடந்த பல பத்தாண்டு
களில் முதல் முறையாகத் துப்பாக்கியு
டன் சீருடையினரையும் இராணுவ வாக
னங்களையும் தெருக்களில் கண்ட தீவு
வாசிகள் ஆச்சரியமடைந்தனர்."ரஷ்யர்
கள் வருகிறார்கள்" என்ற பீதியும் வதந்தி
களும் கிளம்பின.

அதேசமயம், சுவிடனின் தலைநகரம்
மற்றும் மூன்று அணு நிலையங்கள்,
விமான நிலையம்,அரசகுடும்ப மாளிகை
போன்ற பகுதிகளுக்கு மேல் ஆட்கள் இன்றிப் பறக்கும் பெரிய மர்ம ட்ரோன்
கள் சில தென்பட்டன என்ற தகவல்
நாடெங்கும் பரவியது. ட்ரோன்களின் பின்னணி என்ன என்பது தெரியவர
வில்லை. எனினும் அது ரஷ்யாவின்
வேலை என்று சிலர் நம்புகின்றனர்.
ரஷ்யா சுவீடனின் நிலைகளைத் தாக்கு
வதானால் அவற்றை நோட்டமிட்டு அறிய
வேண்டும் என்று அவசியம் இல்லை. இது சும்மா சுவீடனைச் சீண்டும் நோக்
கம் கொண்ட செயலாக இருக்கலாம்
என நம்பும் சுவீடன் புலனாய்வுச் சேவை
யினர் உண்மையை அறிவதற்காக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

நேட்டோ பாதுகாப்புக் கூட்டணியில் 
இணையாமல் தானும் தன்பாடுமாக
இராணுவ "அணிசேராக்" கொள்கை
யுடன் தனித்து விலகி இருக்கின்ற
அமைதியான நாடு சுவீடன். ஆயினும் வரலாற்று ரீதியாக அது ரஷ்யாவின்
அச்சுறுத்தல்களைச் சந்தித்து வந்திருக்
கிறது. தற்போது ரஷ்யா உக்ரைனை
ஆக்கிரமிக்கும் முஸ்தீபுகளில் இறங்கி
யிருப்பதால் அமெரிக்கா தலைமையி
லான நேட்டோ நேச நாடுகளுக்கு சுவீ
டனின் தயவும் ஒத்துழைப்பும் மிகமிக அவசியமாகியுள்ளது.

பால்டிக் கடலோர நேட்டோ நாடுகளான
லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா
ஆகிய மூன்றில் ஒன்றை ரஷ்யா தாக்கு
வதற்கு முயன்றால் நேட்டோ ஒப்பந்த விதிகளின் படி அமெரிக்கா அந்த நாடு
களுக்கு உதவ நேரிடும். அமெரிக்கப் போர் விமானங்கள் பால்டிக் கடல் மீது
பறப்பதைத் தடுப்பதற்காக கொட்லான்ட்
தீவை ரஷ்யா ஆக்கிரமித்து அங்கு அதன்
ஏவுகணைகளை நிறுத்த முயற்சிக்கலாம்
எனவே அமெரிக்கா அந்தத் தீவில் தனது
ஆதிக்கத்தை வைத்திருப்பதற்கே விரும்
புகிறது.

இந்தப் பின்னணியில் சுவீடன் நேட்டோ
வில் முழுமையாக இணைய வேண்டும்
என்பதற்கான நகர்வுகள் மேலும் முக்கி
யத்துவம் பெற்றுவருகின்றன.கிழக்கில்
இருந்து வருகின்ற அச்சுறுத்தலை எதிர்
கொள்வதற்காக சுவீடனும் பின்லாந்தும்
தாமதிக்காமல் மேற்கோடு (நேட்டோவில்) இணைந்திடவேண்டும் என்ற கோரிக்கை
கள் வலுத்து வருகின்றன.


------------------------------------------------------------------
            நன்றி -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                       28-01-2022

https://www.facebook.com/kumarathasan.karthigesu

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புறம் நேட்டோ மறுபுறம் ரஷ்யா
இரண்டுக்கும் நடுவே  அழகிய.... 

ஒரு நாட்டைப் பற்றி அறிவதற்கு அந்த நாட்டின் இலக்கியங்கள் எவ்வளவுக்குப் பிற மொழி மாற்றம் செய்யப்படுகின்
றன என்பதும் முக்கியமானது.பள்ளி நாட்களில் படித்த உக்ரைன் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவின் நாவல்கள் அந்த தேசத்தில் பிறந்து வாழ்ந்தது போன்ற உணர்வனுபவங்களைத் தந்திருக்கின்
றன.(அச்சமயம் அது சோவியத் ஒன்றி
யம் ) 

எந்த "இஸங்"களாலும் ஈர்க்கப்படாவிடி
னும் டிசெம்பர் 1991 இல் சோவியத் ஒன்
றியம் உடைந்து பல நாடுகளாகச் சிதறு
ண்ட நாளின் இரவில் எனது நாட்குறிப்
பில் அதனை மிக வருத்தத்துடன் பதிவு செய்தது இப்போதும் நினைவிருக்கிறது. 
அதற்கு அந்த நாளைய மொஸ்கோ அயல் மொழிப் பதிப்பகத்தின் நாவல் களைப் படித்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.ஒரு தேசத்தின் ஆன்
மாவை இலக்கியங்களூடாக உணர்ந்து
கொண்ட அனுபவம் தந்த வருத்தமாகக் கூட அது இருந்திருக்கலாம்.தற்சமயம் உக்ரைன் மீது சூழ்ந்துள்ள போர் மேகங்
கள்  அந்தப் பழைய நாட்களை மீட்டுப் பார்க்கச் செய்கின்றன.அவ்வளவுதான். 

உக்ரைன் 1991 இல் சோவியத் ஒன்றி
யத்தில் இருந்து பிரிந்து தனி நாடானது.
வரலாற்றில் சோவியத் சாம்ராஜ்ஜியங்
களை எடுத்துப் பார்த்தாலும் சோவியத் யூனியனை நோக்கினாலும் அவற்றின் பிரிக்க முடியாத பகுதியாகத் - தூணாக- (pillar of the Soviet Union) உக்ரைன் இருந்து வந்திருக்கிறது. மொழி, பண்பாடு, அரசி
யல்,பொருளாதார ரீதியாகச் சோவியத்
துடன் பின்னிப் பிணைந்திருந்த தேசம் அது.புரட்சிகளின் போது உக்ரைன் மக்கள் புரிந்த தியாகங்கள் சோவியத் ஒன்றியத்தை நிமிர வைத்தன. சோவியத் ஒன்றியத்திலே ரஷ்யாவுக்கு அடுத்து உக்ரைன் தான் மிகப் பெரிய நிலப்பரப்பு.
உலகத்துக்கு மிகச் சிறந்த படைப்பு இலக்கியங்களை வழங்கிய மண் என்பதை விட உலகம் முழுவதுக்குமான "தானியக் களஞ்சியம்" என்று  அதனைக் கூறுவதே பொருத்தம்.ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் தானியக்
களஞ்சியமாகத் திகழ்ந்த உக்ரைன் இன்று ஐரோப்பாவின் களஞ்சியமாக மாறிவிட்டது. அடுத்து அது நேட்டோவின்
உறுப்பினராகப் போகிறது என்பதே அங்கு போர் மேகங்கள் சூழந்திருப்பதற்
கான காரணமாகும்.

சோவியத் ஒன்றியம் உடைந்த போது
ஒரு டக்ஸி ட்ரைவராக இருந்தவர் விளா
டிமீர் புடின். கேஜிபி உளவு அமைப்பின்
உறுப்பினராக மாறிய அவர் படிப்படியாக
அதிகாரங்களைத் தக்கவைத்து-எதிரா
ளிகளைப் "போட்டுத் தள்ளி" - ரஷ்யா
வைத் தனது இரும்புப் பிடியின் கீழ் கொண்டு வருவதில் வெற்றிகண்டார். 
அதிபராக நீண்டகாலம் பதவியில் நீடிக்
கிறார். 

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்
அனைத்தும் ரஷ்ய நாகரீகத்துக்கு உட்பட்
டவை. அவை தனித்தனி நாடுகளாக இருப்பதற்குத் தகுதியற்றவை என்ற
ஒரு கோட்பாட்டை புடின் திரும்பத் திரும்ப
வலியுறுத்தி வருகிறார். அவர் மீண்டும்
ஒரு சோவியத் சாம்ராஜ்ஜியத்தைக்
கட்டியெழுப்புவதற்கு கற்பனைபண்ணு
கிறார். தனது கட்டுரை ஒன்றில் அவர்
ரஷ்யாவையும் உக்ரைனையும் "ஒரே மக்
கள்" என்கிறார். உக்ரைனையும் அயல்
நாடாகிய பெலாரஸையும் சேர்த்து ரஷ்ய நாகரீகம்"(“Russian civilisation”) என்று கூறி
ஒரே நாடாகக் கருதுகிறார். மீண்டும் ஒரு
சோவியத் ஒன்றியத்தைக் கட்டியெழுப்பு
வதற்கு உக்ரைனைத் தன்னோடு வைத்தி
ருப்பதே அவரது எண்ணம். உக்ரைன்
மக்கள் இதனை எதிர்க்கிறார்கள்.அங்கு
ள்ள புதிய தலைமுறை ஐரோப்பாவுடன் இணைவதையே விரும்புகின்றது.அங்கு
ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபரைத் தூக்கி
எறிந்த மக்கள் கிளர்ச்சிக்குப் பிறகு அரசுத் தலைமையை வகிப்பவர் ஒரு
யூத இனப் பூர்வீகம் கொண்டவர். ஐரோ
ப்பாவின் சுதந்திரச் சந்தைகளுடன் உக்
ரைனை இணைப்பதற்கு  விரும்புகிறார். 
உக்ரைனில் 2004 மற்றும் 2014 ஆம் ஆண்
டுகளில் இரண்டு தடவைகள்  ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சிகளுமே ரஷ்ய மேலாதிக்
கத்தை நிராகரித்தன.ஐரோப்பா(நேட்டோ)
நோக்கிய பாதையைத் திறந்து விட்டன.
இதுவே அங்கு இருநாட்டு எல்லைகளி
லும் தற்போது உருவாகியுள்ள போர்ப் பதற்றத்தின் மூலக் கதை ஆகும். 

உக்ரைனின் இறைமை அது ரஷ்யாவுடன்
சேர்ந்திருப்பதிலேயே தங்கியிருக்கிறது
என்று சொல்பவர் புடின்.2015 இல் உக்ரை
னின் ஒரு பகுதியாகிய கிரிமீயா குடாப்
பகுதியை ஆக்கிரமித்து ரஷ்யாவுடன்
இணைத்துக் கொண்டார்.அதன் பிறகு
அங்கிருந்து உக்ரைனுக்கு இராணுவ வழிகளில் நெருக்குதல் கொடுத்து வரு
கிறார். 

தனது எல்லையில் உள்ள உக்ரைனில்
நேட்டோ கால் பதிப்பது தனது சோவியத்
கனவைத் தகர்த்துவிடும் என்பதை புடின்
நன்கறிவார். அதற்காக உக்ரைனை ஆக்
கிரமிக்க முனைகிறார். எல்லையில் அவர் படைகளைக் குவிப்பது நிஜமான போர் ஒன்றுக்கான முஸ்தீபாகத் தெரிய
வில்லை. உக்ரைன் நேட்டோவில் சேர்க்
கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை
மேற்குலகிடம் இருந்து பெற்றுக் கொள்
வதற்கான ஓர் அழுத்தமாக மட்டுமே அதைக் கருதவேண்டியுள்ளது. எனினும் எதிர்பாராத விதமாகப் போர் மூண்டால் ரஷ்யாவின் படைபலத்தை எதிர்கொள்
வதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட நேட்டோ நாடுகள் உக்ரைனைப் பலப்படுத்துவதற்காகப் பேரழிவு ஆயுதங்
களை அந்நாட்டில் குவித்துவருகின்றன. உக்ரைன் அதன் முன்னரங்குகளைப் பாதுகாப்பதற்குரிய வெடிமருந்துகள், போர்த் தளவாடங்கள்(front-line defenders) அடங்கிய 90 தொன் ஆயுதப் பொருள்
களை அமெரிக்கா அங்கு இறக்கியுள்ளது
நேட்டோவோடு இணைந்த கிழக்கு ஐரோ
ப்பிய நாடுகளில் மட்டுமன்றி டென்மார்க், சுவீடன்,நோர்வே போன்ற நாடுகளிலும் கூட எல்லைப் பகுதிகளில் கவச வண்டி
களது நகர்வுகளைக் கண்டு மக்கள் அதி
சயிக்கின்றனர். 

ஐரோப்பா இதுபோன்ற போர் ஆயத்தக்
காட்சிகளைக் காண்பது கடந்த பல தசாப்
தங்களில் இதுவே முதல் முறை. ரஷ்யா
உக்ரைனை ஆக்கிரமித்தாலும் நேட்டோ
நாடுகள் போரில் நேரடியாகத் தலையி
டுமா? போரைத் தவிர்க்க ரஷ்யாவின் நிபந்தனைகள் என்ன?ரஷ்யாவை அடி
பணிய வைப்பதற்கு மேற்கு நாடுகள் வைத்திருக்கின்ற பொருளாதார ஆயுதம் எது? என்பன போன்ற பல விவரங்களை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

 
----------------------------------------------------------------------
                -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                        23-01-2022

https://www.facebook.com/kumarathasan.karthigesu

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யா யுக்ரேன் மீது ஆக்கிரமிக்கிறது போல போக்குகாட்டுகின்றது. அது ரஸ்யாவில் உண்மையான நிகழ்ச்சி நிரல் இல்லை. ரஸ்யாவின் உண்மை இலக்கு யெருசலேம் நகரை ஆக்கிரமிப்பதுதான். இரான் சிரியா போன்ற பயங்கரவாத நாடுகளுடன் இணைந்து ரஸ்யப்படைகள் யெருசலேம் வரை முன்னேறுவார்கள். அங்கதான் ரஸ்ய கூட்டு படைகளுக்கு இஸ்ரேலியர்கள் சமாதி கட்டுவார்கள்! 

நானும் ஏதோ என் பங்குக்கு எழுதியிருக்கிறன்!😂  இது நடக்கேக்க நான் இருக்கமாட்டன்!😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.