Jump to content

பெரியார்தாசன் உரை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்ப/நண்பியர்களே,

நீங்கள் இந்த உரையை ஏற்கனவே கேட்டிரிந்தால் மன்னிக்கவும்!

நான் இந்த உரையை ஒரு 5 தடவைகள்கேட்டிருப்பேன், ஆயினும் ஒவ்வொருமுறையும் ஏதாவது புதிதாக அறியமுடிகிறது!

பெரியார்தாசன் உரை

நன்றி

வன்னி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் வித்தியாசமாக இருக்கும் இந்த உரையை இணைத்த கள உறுப்பினருக்கு பாராட்டுகள்.

பெரியார்தாசன் சாதாரணர்களும் விபரமாகப் புரியும்படி உரையாற்றுபவர்களில் வல்லவர். பொறுமையாகக் கேட்கும் போது மனம்விட்டுச் சிரித்தவாறு அவரது உரையை உள்வாங்கக் கூடியதாகவுள்ளது.

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உரையில் பெரும் சவாலை அறைகூவலிட்டுள்ளார் பெரியார்தாசன். ஆனால் யாழில் சலசலப்பைக் காணாதது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

மனம்விட்டு சிரித்து சிந்திக்க வைக்கிறார். தர்க்கிக்கும் விவாத முறை நன்றாக அமைந்துள்ளது.

:rolleyes:

Link to comment
Share on other sites

இது நகைசுவை அல்ல நல்ல ஒரு பேச்சு ஆனால் சில தவறான சொற்பிரயோகங்கள் அந்த பேச்சின் மகிமையை குறைத்து இருகின்றது

Link to comment
Share on other sites

பெரியார்தாசன் சில இடங்களில் கொச்சையாக (அபாசமாக அல்ல) பேசுவதால் ஈழவன் கூறுவது போல் ... உள்ளது இருக்கின்ற சல சலப்பு போதாதென்று புதிய சலசலப்புகள் வேறு வேண்டுமா..........

Link to comment
Share on other sites

பெரியார்தாசன் சில இடங்களில் கொச்சையாக (அபாசமாக அல்ல) பேசுவதால் ஈழவன் கூறுவது போல் ... உள்ளது இருக்கின்ற சல சலப்பு போதாதென்று புதிய சலசலப்புகள் வேறு வேண்டுமா..........

உண்மை ஒரு நல்ல பேச்சாளர் திறமை இருந்து ஏன் இப்படி கொச்சையாக பேசுகின்றார் இதை ஒழுங்காக பேசினால் இன்னும் ரசிக்க கூடியதாக இருந்திருக்கும்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை ஒரு நல்ல பேச்சாளர் திறமை இருந்து ஏன் இப்படி கொச்சையாக பேசுகின்றார் இதை ஒழுங்காக பேசினால் இன்னும் ரசிக்க கூடியதாக இருந்திருக்கும்

மேடையறிந்து பேசு என்பதுபோல், அவர் பேசும் கரு சபையின் கவனத்தை முழு அளவில் ஈர்க்கவேண்டும் என்பதற்க்காக அவர் சில கொச்சை வார்த்தைகளை பாவித்திருக்கிறார். ஆண்டாண்டாக நடக்கும் அட்க்குமுறையால் உண்டான ஆத்திரமும் ஒரு காரணம்.

Link to comment
Share on other sites

மேடையறிந்து பேசு என்பதுபோல், அவர் பேசும் கரு சபையின் கவனத்தை முழு அளவில் ஈர்க்கவேண்டும் என்பதற்க்காக அவர் சில கொச்சை வார்த்தைகளை பாவித்திருக்கிறார். ஆண்டாண்டாக நடக்கும் அட்க்குமுறையால் உண்டான ஆத்திரமும் ஒரு காரணம்.

ஆமாம். அவரின் ஆத்திரமான கருத்துக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டியன..

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மேடையறிந்து பேசு என்பதுபோல், அவர் பேசும் கரு சபையின் கவனத்தை முழு அளவில் ஈர்க்கவேண்டும் என்பதற்க்காக அவர் சில கொச்சை வார்த்தைகளை பாவித்திருக்கிறார். ஆண்டாண்டாக நடக்கும் அட்க்குமுறையால் உண்டான ஆத்திரமும் ஒரு காரணம்.

கொள்கைகளில் வரட்சியும், உண்மையும் இல்லாவிட்டால் இப்படியான அசிங்கவார்த்தைப் பிரயோகங்கள் வரத்தானே செய்யும்.

Link to comment
Share on other sites

அதில் உண்மைகள் உண்டு இல்லாத ராமர் பாலத்தை தூக்கி வைத்துகொண்டு ஆடும் மற்றய பேச்சாளர் அல்ல அவர்

Link to comment
Share on other sites

பெரியார்தாசன் உரையாற்றுவது அடிமட்ட மக்களுக்கு முன்னால். அவர் முனுசாமியையும் சின்னசாமியையும் உதாரணம் எடுத்து தான் ராமாயணத்தை அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். படிப்பில் பின்தங்கியும் சாதியத்தில் அடிமட்டத்திலும் பொருளாதாரத்தில் மிக பின்தங்கிய நிலையில் உள்ள ஒரு மக்கள் கூட்டத்துக்கு விசயங்களை விளங்கப்படுத்த அவர்எடுக்கும் முயற்சிகளை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அந்த சமூக சுழலை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பேச்சுக்களில் ரசனை என்பதற்கு எதுவும் இல்லை. தீண்டத்தகாதவனின் வேதனை பற்றியும் மட்டை கொன்று தோலை உரிப்பது போல் மனிதரை உயிருடன் உரித்து கொன்றதன் வேதனைகளையும், கீழ் சாதி என்று அவர்களின் வாய்களில் மலங்கழித்து சிறுநீர் கழித்த சம்பவங்களின் காரணபின்புலங்களை விளங்கப்படுத்தி பேசும் போது அவ்வாறான பாதிப்புக்களில் சம்மந்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை உணரத்தான் முடியும்.

கண்தெரியாத ஒரு வரின் உணர்வுகளை கண்ணை துணியால் கட்டி ஒரு நாள் வாழ்ந்தாலும் புரிந்து கொள்ள முடியாது. ஓரளவு உணர்ந்து கொள்ள முடியும். அவ்வாறு ஓரளவு உணர்ந்து கொள்ளும்தன்மையை கூட இங்கு எதிர்பார்க முடியாதுள்ளது. அவர் பேசுவதும் அதைக்கேட்பவர்களும் வாழும் உலகம் வேறு. அந்த உலகத்தில் உள்ள பெரியார் தாசனின் உரையை இங்கு இழுத்துப்போட்டு அவரின் பேச்சு ரசிக்கும் படியாக இல்லை. கொள்கை இல்லை உண்மை இல்லை என்பதில் வியப்பதுக்கு ஒன்றும் இல்லை எனெனில் இது வேற உலகம்.

-------------------------------------------------------------

கொள்கைகளில் வரட்சியும்இ உண்மையும் இல்லாவிட்டால் இப்படியான அசிங்கவார்த்தைப் பிரயோகங்கள் வரத்தானே செய்யும்.- தூயவன்

------------------------------------------------------------------------

உங்கள் கருத்து ஒடுக்கு முறையை செய்யும் தரப்பை விட மோசமானதாக உள்ளது.

மலத்தை தொட்டால் கைகழுவவேண்டும். அது சுகாதாரத்துக்கு நல்லது. மனிதனை தொட்டாலும் கைகழுவும் ஒரு உலகம் உண்டு. அங்கே மனிதன் மலமாகின்றான். அந்த மலத்தோடு உங்களால் உறவாட முடியாது. உணரவும் விரும்ப மாட்டீர்கள். என்னால் வார்த்தையின் அசிங்கம் என்று நீங்கள் சொல்வதற்கு அப்பால் ஒரு சமூகத்தின் வேதனைகளை புரிந்து கொள்ள முடிகின்றது. முடிந்தால் அவர் ஏன் அப்படி பேசுகின்றார் என்பதையும் நீங்கள் ஏன் அதை ஏன் மறுதலிக்கின்றீர்கள் என்பதையும் ஆராய்ந்து பாருங்கள். வரும் பெறு பெறுகளை நியாய தராசில் ஏடைபோட்டு பாருங்கள். மிக மோசமாக ஒடுக்கப்படும் ஒரு சமூகத்தின் வேதனைகளையும் கண்ணீரையுளும் மறுதலிப்பதற்கு ஒரு எல்லை இருக்கின்றது. புரிந்து கொள்ளுங்கள்.

முப்பது வருடங்களுக்கு மேலாக வேத இதிகாச புராண ஆராய்சிகள் செய்து அவைகளை பல சபைகளில் விவாதம் செய்து உண்மைகள் பொய்களை ஆராய்ந்து தான் அவர் பேசுகின்றார். அவர் ஒன்றை மறுதலிக்கின்றார் என்றால் அதை அவர் நியாயமான முறையில் செய்கின்றார். யாருக்கு கருத்து சென்றடைய வேண்டுமோ அவர்களுக்கு அவர்கள் பாணியில் புரிய வைக்கின்றார். இதை எல்லாம் ஒரு வரியில் நீங்கள் நிராகரிக்க என்ன நியாயம் உள்ளது? அல்லது அதன் அவசியம் தான் என்ன?

Link to comment
Share on other sites

சிலருக்கு சாதியம் சம்பந்தமான அடிப்படை கொள்கையில் மாற்றம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை சாதீயமும் இந்துசமயமும் என்ற குறுகிய வட்டத்துகுள் நிற்பதால்தான் உண்மைகள் விளங்குவதும் கிடையாது பெரியார்தாசனின் உரை சரியான உரை அவரின் மொழிநடை கொஞ்சம் கவனிக்க வேண்டியதே ஆனால் அவர் உரையாற்றிய மக்களை கருத்தில் கொண்டால் அந்த முறை சரியானது.கடவுள் மறுப்பு கொள்கை உடையவன் எல்லாம் கொள்கை வறட்சி கொண்டவனல்ல உண்மைகளை மறைப்பவனுமல்ல என்பதை உணரவேண்டும்

Link to comment
Share on other sites

பெரியார்தாசன் அப்படிக் கொச்சையாக ஒன்றும் பேசவில்லை. உண்மையில் மிக மிக அருவருப்பாக எழுதப்பட்டுள்ளவையை முடிந்தளவு கண்ணியமாக பேசியுள்ளார். இந்து மத நூல்களில் எழுதப்பட்டுள்ளவைகளை இதை விட கண்ணியமாக பேச முடியாது.

இந்து மத நூல்களில் உள்ளவைகளை புனிதம் என்று சொல்பவர்களுக்கு விளங்குகின்ற மொழியில் பெரியார்தாசன் பேசியுள்ளார்.

பெரியார்தாசன் பார்ப்பனர்களுக்கு சவால் விட்டுள்ளார். ஆனால் எந்தப் பார்ப்பானும் அவருடைய சவாலை ஏற்கமாட்டான். *** தணிக்கை

Link to comment
Share on other sites

பெரியார்தாசன் அப்படிக் கொச்சையாக ஒன்றும் பேசவில்லை. உண்மையில் மிக மிக அருவருப்பாக எழுதப்பட்டுள்ளவையை முடிந்தளவு கண்ணியமாக பேசியுள்ளார். இந்து மத நூல்களில் எழுதப்பட்டுள்ளவைகளை இதை விட கண்ணியமாக பேச முடியாது.

கண்ணியமாக எழுதப்பட்ட சர்ச்சையானவற்றை கண்ணியம் இல்லாது பேசினார் எண்று சொல்லுங்கள்....!

இந்து மத நூல்களில் உள்ளவைகளை புனிதம் என்று சொல்பவர்களுக்கு விளங்குகின்ற மொழியில் பெரியார்தாசன் பேசியுள்ளார்.

பெரியார்தாசன் பார்ப்பனர்களுக்கு சவால் விட்டுள்ளார். ஆனால் எந்தப் பார்ப்பானும் அவருடைய சவாலை ஏற்கமாட்டான். *** தணிக்கை

சாம வேதம் காமம் பற்றி சொல்ல வில்லை எண்று சொல்ல வில்லை... ஆனால் காதல், காமம் பற்றி மட்டும்தான் சொல்கிறது கலைகள், இசை , பாடல்கள் பற்றி எல்லாம் சொல்ல வில்லை என்பதை உங்களால் அடித்து சொல்லா முடியுமா...??

உபநிடதங்கள் தவறானவை அவை மக்களுக்கு தேவை இல்லாதவை என்னும் பெரியார் தாசன்... அதே கருத்தை புதைக்கும் வேதாந்தம் உண்மையாம்... என்னபா இது..

Link to comment
Share on other sites

பெரியார்தாசன் அரசியல்வாதியல்ல அடுத்தவரைக் கவருவதற்காக அடுக்கு மொழியில் விழாசுபவரல்ல. ஒரு பாதிக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்து அந்த சமுதாய விடிவிற்காக அந்த சமுதாயம் புரியும்வண்ணம் பேசிப் போராடி வருபவர். அவரது பேச்சிலுள்ளவை சில தரக்குறைவான சொற்பிரயோகங்களாக இருந்தாலும் அவர் அனுபவித்த வேதனைகளின் வலி தாங்கிய வெளிப்பாடுகளாகவே புரிந்து கொள்ள முடிகின்றது. சில சொற்பிரயோகங்களை வைத்து விடயத்தை திசைதிருப்பாது மிகுதியிலுள்ள நியாயங்களை உள்வாங்கிப் பாருங்கள் உருக்குலைந்திருக்கும் மனித அவலங்கள் தலைகுனிய வைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார்தாசன் அரசியல்வாதியல்ல அடுத்தவரைக் கவருவதற்காக அடுக்கு மொழியில் விழாசுபவரல்ல. ஒரு பாதிக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்து அந்த சமுதாய விடிவிற்காக அந்த சமுதாயம் புரியும்வண்ணம் பேசிப் போராடி வருபவர். அவரது பேச்சிலுள்ளவை சில தரக்குறைவான சொற்பிரயோகங்களாக இருந்தாலும் அவர் அனுபவித்த வேதனைகளின் வலி தாங்கிய வெளிப்பாடுகளாகவே புரிந்து கொள்ள முடிகின்றது. சில சொற்பிரயோகங்களை வைத்து விடயத்தை திசைதிருப்பாது மிகுதியிலுள்ள நியாயங்களை உள்வாங்கிப் பாருங்கள் உருக்குலைந்திருக்கும் மனித அவலங்கள் தலைகுனிய வைக்கும்.

நான் சமூகத்தில் அவதானித்த ஒரு விடயத்தைச் சொல்கிறேன். அதற்காக சாதியத்தை நிறுவிறன் என்பதல்ல அர்த்தம். பொதுவாக (எல்லோரும் அல்ல) தாழ்த்தப்பட்ட மக்கள் குழு என்று வரையறுக்கப்பட்டோரைப் பிரதிநிதித்துவப் படுத்துவோர் சார்பில் பேசுபவர்கள் பொதுவாகவே தரக் குறைவான வார்த்தைகளை இயல்பாகவே பாவிக்கின்றனர். ஒருவேளை அவர்களின் கல்வி அறிவற்ற.. சமூக பண்பறியாத தன்மைகளின் வெளிப்பாடாகக் கூட அது இருக்கலாம். இலங்கையில் கூட படித்தவர்களை விட... படியாத கிராமத்தவர்கள் அவர்களின் பிள்ளைகள்.. இப்படி நடந்து கொள்வதை புகலிடத்தில் கூட அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

தரக்குறைவான வார்த்தைகளோடு ஒரு கருத்து வெளிவரும் போது அதன் மீதான சமூகப்பார்வை என்பதும் தரக்குறைவாகவே அமையும். ஈ வெ ரா போன்றவர்கள்.. பேசிய தரக்குறைவான வார்த்தைகள் தான் அவர்களை சமூகங்களில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளது. ஒரு சில நல்ல சிந்தனைகளை கூட அவர்கள் வெளியிட்ட வடிவம் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டது. அது அவர்களின் அறிவுபூர்வமற்ற உணர்ச்சிமிக்க அணுகுமுறையைக் காட்டுகிறது. :) :P

Link to comment
Share on other sites

பெரியார்தாசன் ஒரு பேராசிரியர் என்பது உங்களுக்குத் தெரியுமோ தெரியாது?? அவரது கருத்துக்கள் அடுத்தவரை விட அவரது சமூகத்தைச் சென்றடைந்தால்த் தான் அந்த சமுகம் விழிப்படைய முடியும். அதற்கு அவர்கள் பாணியிலேயே பேசினால்த்தான் அச்சமூகத்தால் புரிந்து கொள்ள முடியும். அடுக்குமொழியும் அழகு தமிழும் பசித்திருப்பவனுக்கும் படுக்கப் பாயில்லாதவனுக்கும் புரியாது. சரி அறிவுபூர்வமற்ற உணர்ச்சிமிக்க அணுகுமுறை என்கின்றீர்களே நீங்கள் குறிப்பிடும் மகா அறிவுபெற்ற சமூகம் அந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு அறிவுபூர்வமாக எதைச் செய்தது. மேலும்மேலும் அவர்களை மிதித்ததைத் தவிர. தாம் செய்யும் அநியாயங்களை நியாயப்படுத்தவே தரக்குறைவான பேச்சுக்கள் என்ற கண்துடைப்புக்கள். மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரியாதவர்கள் சொல்லும் கண்துடைப்புக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார்தாசன் ஒரு பேராசிரியர் என்பது உங்களுக்குத் தெரியுமோ தெரியாது?? அவரது கருத்துக்கள் அடுத்தவரை விட அவரது சமூகத்தைச் சென்றடைந்தால்த் தான் அந்த சமுகம் விழிப்படைய முடியும். அதற்கு அவர்கள் பாணியிலேயே பேசினால்த்தான் அச்சமூகத்தால் புரிந்து கொள்ள முடியும். அடுக்குமொழியும் அழகு தமிழும் பசித்திருப்பவனுக்கும் படுக்கப் பாயில்லாதவனுக்கும் புரியாது. சரி அறிவுபூர்வமற்ற உணர்ச்சிமிக்க அணுகுமுறை என்கின்றீர்களே நீங்கள் குறிப்பிடும் மகா அறிவுபெற்ற சமூகம் அந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு அறிவுபூர்வமாக எதைச் செய்தது. மேலும்மேலும் அவர்களை மிதித்ததைத் தவிர. தாம் செய்யும் அநியாயங்களை நியாயப்படுத்தவே தரக்குறைவான பேச்சுக்கள் என்ற கண்துடைப்புக்கள். மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரியாதவர்கள் சொல்லும் கண்துடைப்புக்கள்.

பெரியார் தாசன் பேராசிரியர் என்பது இரண்டாம் பட்சமனாது. சமூகத்துக்கு அந்த அடையாளம் தேவையில்லை. அது அவர் கல்வி கற்பிக்கும் இடத்துக்கு மட்டும் உரித்தானது. சமூகத்தை அவர் அணுகும் போது... பொதுவான மதிப்பளிப்பை வழங்கத்தவறின் சமூகமும் அவரின் கருத்துக்களை மதிக்காது. அவர் எத்துணை பெரிய படிப்புப் படிச்சிருந்தாலும்... பண்பாக ஒரு கருத்தைச் சொல்லவிளையவில்லை என்றால்.. அக்கருத்தின் தாக்கம் சமூகத்தில் பலவீனமாகத்தான் அமையும். அதைத்தான் நான் இங்கு குறிப்பிடுகிறேனே தவிர.. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்று வரையறுக்கப்பட்டவர்களுக்கு பிரச்சனைகள் இல்லை என்ற நியாயப்படுத்தலையல்ல. எவர் எச் சமூகத்தில் வைத்தும் வரையறுக்கப்படட்டும். ஆனால் மனிதர்களை நோக்கி மனிதர்கள் கருத்துச் சொல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய கருத்தியல் நாகரிகம் இருக்கத் தவறின் எந்த மனிதனும் அதற்கு செவிசாய்க்க தயக்கம் காட்டத்தான் செய்வான். அறிவிருந்தும் அறிவிழப்பவர்கள்.. உணர்வுபூர்வமாக கருத்தை வைப்பவர்களே. அந்த வகையில்.. பெரியார் தாசனும்... ??! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார்தாசன் ஒரு பேராசிரியர் என்பது உங்களுக்குத் தெரியுமோ தெரியாது?? அவரது கருத்துக்கள் அடுத்தவரை விட அவரது சமூகத்தைச் சென்றடைந்தால்த் தான் அந்த சமுகம் விழிப்படைய முடியும். அதற்கு அவர்கள் பாணியிலேயே பேசினால்த்தான் அச்சமூகத்தால் புரிந்து கொள்ள முடியும். அடுக்குமொழியும் அழகு தமிழும் பசித்திருப்பவனுக்கும் படுக்கப் பாயில்லாதவனுக்கும் புரியாது. சரி அறிவுபூர்வமற்ற உணர்ச்சிமிக்க அணுகுமுறை என்கின்றீர்களே நீங்கள் குறிப்பிடும் மகா அறிவுபெற்ற சமூகம் அந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு அறிவுபூர்வமாக எதைச் செய்தது. மேலும்மேலும் அவர்களை மிதித்ததைத் தவிர. தாம் செய்யும் அநியாயங்களை நியாயப்படுத்தவே தரக்குறைவான பேச்சுக்கள் என்ற கண்துடைப்புக்கள். மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரியாதவர்கள் சொல்லும் கண்துடைப்புக்கள்.

இதைத் தானே மதங்களும் செய்தன.

கடுமையான கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியாது என்பதால், அவற்றை இலகுபடுத்திக் கதை வடிவில் கொண்டு சென்றன. கதை கொண்டு சென்றவர்கள், ஒவ்வொரும் கடைப்பிடித்த பாணியும், வேறுபட்டு இருந்தாலும் அவர்களின் மையக்கரு பக்தி பற்றிய கொள்கையை கொண்டு செல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது.

சொன்ன விதங்கள் செவி வழியாகத் திரிவுபட்டோ, அல்லது மக்களுக்கு புரிகின்ற வகையில் இவர் பாணியிலோ சொல்லப்பட்டிருக்கலாம். அதை மக்களாகப் பேணி அதற்கான விழாவாக மக்கள் எடுத்தும் இருக்கலாம். காலம் காலமாக சொல்லப்படுகின்ற கருத்துக்கள் திரிவுபடுவதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் இந்து மதம் இப்படி உருவம் கொடுத்து வழிபடுவது தான் பக்தி என்று என்றைக்குமே சொன்னதில்லை.

அதைப் பகுத்தறிகின்ற சக்தி இந்தப் பேராசிரியர் எனக் காட்டிக கொள்பவருக்கு, அவர் சார்ந்த கும்பலுக்கோ தெரியவில்லை என்றால் தங்களைப் பகுத்தறிவாளர் என்று பெருமையடிப்பதில் என்ன பயன்?

இவர்கள் தரம் தாழ்ந்து சொன்னால் தப்பில்லை. ஆனால் மதபோதர்கள் மக்களுக்குப் புரிகின்ற விதத்தில் கதையாக்கினால் தான் தப்பு.

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்குப் படக்கு என்று அடிக்குமாம்.

Link to comment
Share on other sites

இந்து மதத்தில் இருப்பவைகள் திரிவுபடுவதற்கு சாத்தியம் இல்லை. இந்து மதத்தின் வேதங்கள், உபநிடதங்கள், சாத்திரங்கள் ஆகியன இந்து மதக் கருத்துக்களை எழுதி வைத்திருக்கின்றன. ஆகவே அவைகள் திரிவுபட மாட்டாது.

சமஸ்கிருதத்தில் எழுதி வைத்துவிட்டு, அறியாத மக்களை ஏமாற்றினார்கள். ஆனால் நாளை சமஸ்கிருதம் படித்து இந்து மதத்தின் முகத்திரையை கிழிப்பதற்கு பெரியார்தாசன் போன்று ஆயிரம் ஆயிரம் பேர் வருவார்கள்.

சில மாதங்களிற்கு முன்பு வரை இந்து மதத்தின் அற்புதங்களை ஆங்காங்கே பேசிய சாருநிவேதிதா இந்து மத வேதங்களை படித்து விட்டு, காறி உமிழ்ந்து எழுதியிருக்கிறார்.

நீங்கள் இங்கே இந்து மதத்தின் உண்மையான முகத்தை அறியாமல் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் சமஸ்கிருதம் படித்து, இந்து மதம் சொல்வதை அறிந்தால், பெரியார்தாசனை விட மோசமாக பேசுவீர்கள் என்பதுதான் உண்மை.

இந்து மதம் யாராலும் திரிக்கப்படவில்லை. அசிங்கம் அசிங்கமாகவே இருக்கிறது. அந்த அசிங்கத்தை யாரும் கண்டுவிடக் கூடாது என்பதற்காக பார்ப்பனர்கள் பொத்திப் பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் அது நீண்ட காலத்திற்கு நடக்காது.

உண்மையில் மண்ணின் மக்களின் சிந்தனைகள்தான் திரிவுபடுத்தப்பட்டு இந்து மதத்தின் சிந்தனைகள் ஆக்கப்பட்டுள்ளன. அதை பெரியார்தாசன் தெளிவாக விளக்கி உள்ளார்.

இந்து மதத்தின் தத்துவம் என்ன சொல்கிறது, இந்திய மண்ணில் உருவான தத்துவங்கள் என்ன சொல்கின்றன என்று சரியான முறையில் பகுத்து பெரியார்தாசன் தெளிவு படுத்தியிருக்கிறார்.

அத்துடன் பார்ப்பனர்களை நோக்கி சவால் விட்டுள்ளார். ஆனால் யாரும் அதை ஏற்கமாட்டார்கள். அதற்கான காரணத்தையும் பெரியார்தாசன் அவர்கள் சொல்லி உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்கிருதம் படித்து விளக்கம் சொல்வது என்று எதைச் சொல்கின்றீர்கள் என்று புரியவில்லை நண்படீர!தாங்கள் மந்திரவிளக்கம் என்று, அரைகுறையாக மந்திரங்களை எழுதியும், இடைச் செருகலாக இணைத்தும், அர்த்தப் பிழையாக விளக்கம் சொன்னதையுமா? அதைப் பற்றிய விளக்கங்களை நண்பர் வெற்றிவேல் அழகாகக் கொடுத்திருந்தாரே!

பெரியார்தாசனுக்கோ, சாருநிவேதிகாவோ தாங்கள் கொடுத்த விளக்கம் போலத் தான் கொடுத்திருப்பார்களோ என்னவோ? எனக்கு மந்திரங்களைப் பற்றிய விளக்கங்கள் தெரியாது. சமஸ்கிருதம் படிக்காமல் அது தெரிந்தது போலவும் காட்டிக் கொள்ளமாட்டேன்.

வெற்றிவேல் நேரமிருந்தால் அதற்கான விளக்கங்களைத் தருவார் என நினைக்கின்றேன். யானை தொட்ட குருடர்கள் போல, இவர்கள் இருந்தால் அதற்கு நாம் ஒன்றும் பொறுப்பாளிகள் இல்லவே! விளக்கமில்லாத குருடர்கள் தான், இந்த சாருநிவேதிகா போன்ற குருடர்களின் கதையை நம்பக் கூடும்.

Link to comment
Share on other sites

பெரியார்தாசன், சாருநிவேதிதா போன்றவர்கள் சமஸ்கிருதம் கற்றவர்கள். சமஸ்கிருதம் கற்று இந்து மத வேதங்களை படித்த எவருமே (பார்ப்பனர் அல்லாதவர்கள்) அதன் பிறகு இந்து மதத்தை கொண்டாடியதாக வரலாறு இல்லை.

(குறிப்பு: வெற்றிவேல் அந்த மந்திரங்களில் நான் சில பார்ப்பனர்கள் தருவதாக சொன்ன அதே விளக்கத்தைத்தான் தந்துள்ளார். அவர் சொல்வதற்கு முன்பே நான் அது பற்றி எழுதியிருக்கிறேன்)

Link to comment
Share on other sites

இந்தத் தலைப்பில் கருத்து இடலாமா கூடாதா என்று உண்மையில் எனக்குள் ஒரு பெரிய குழப்பம். நேற்று ஒரு கருத்தினைப் பதிந்து விட்டுப் பின் இக்குழப்பத்தால் நீக்கி விட்டேன். குழப்பத்திற்குக் காரணம் என்னவென்றால், பெரியாhர் தாசன் எங்கு பேசுகிறார் ஏன் பேசுகிறார் என்பன எனக்கு நன்கு புரிகின்ற அதேநேரம் அதனோடு சேர்ந்து அவரது பேச்சில் கோர்வையாக விரிந்து செல்லும முரண்பாடுகளும் தெரிகின்றன. இந்த முரண்பாடுகள் வெறும் விவாத முரண்பாடுகள் மட்டுமாக அன்றி அவர் நன்மை செய்ய நினைக்கின்ற சமூகத்தின் நலனிற்கே முரணானது என்ற எண்ணம் எனக்குள் உறுத்துகின்றது. எனினும், மேற்படி முரண்பாடுகளை இங்கு அடையாளப்படுத்துவதால் ஏதேனும் பலனுண்டா? அல்லது அப்படி அடையாளப்படுத்துவது வெறும் விதண்டாவாதம் தானா என்பது தொடர்பில் தான் எனக்குள் குழப்பம். இருப்பினும், கருத்தைப் பதிவதால் தான் எனது குழப்பமும் தீர வழி பிறக்கும் என்பதனால் பதிகிறேன்.

முதலில் ஒரு விடயம். கடவுள் நம்பிக்கையைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் துளியும் இல்லை. ஏனெனில் என்னைப் பொறுத்தவரை, எனது கடவுள் நம்பிக்கை எத்தகையது அதற்கும் எனக்குமான உறவு எத்தகையது என்பது தொடர்பில் எனக்குப் போதிய தெளிவு உள்ளது. அத்தோடு நான் கடவுள் பற்றி உணரும் அதே உணர்வினை என்னால் இன்னொருவரிற்குள் திணிக்கவும் முடியாது அது எனது வேலையும் இல்லை என்பதிலும் எனக்கு இறுக்கமான நம்பிக்கை உள்ளது. மற்றையோரும் கடவுள் நம்பிக்கையுடையோராக தக்கவைக்கப்படல் வேண்டும் என்ற எண்ணமோ அல்லது நாத்திகரை ஆத்திகர் ஆக்கவேண்டும் அதுகும் எனது சமயத்தவன் ஆக்கவேண்டும் என்ற வெறியோ எனக்குள் என்றும் இருந்ததில்லை இனிமேலும் இருக்கப்போவதில்லை. ஆரேனும் எனது நம்பிக்கை பற்றி உண்மையில் அறிய விரும்புகையில் அவர்களுடன் இது பற்றிக் கதைத்துள்ளேன் இனியும் கதைப்பேன், அதற்கு அப்பால் இங்கு கடவுளின் காவலனாக என்னை நான் ஒருபோதும் பார்க்கவிரும்பவில்லை. எனவே பெரியார் தாசன் உரைமீதான எனது விமர்சனம் காழ்ப்புணர்ச்சியினால் வரவில்லை என்பதை இதயசுத்தியோடு முதலில் கூறிக்கொள்கின்றேன்.

பெரியார்தாசன் எந்த மக்கள் முன்னே பேசுகிறார் என்பதைப் பொறுத்து அவரது வார்த்தைப் பிரயோகங்கள் மாறுபடும் என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால். வார்த்தைகளிற்குள் பொதிந்து கிடக்கும் கருத்துக்களைப் பொறுத்தவரை, 32 வருடம் பச்சையப்பன் கல்லூரியில் தத்துவம் பயின்ற மற்றும் பயிற்றிய ஒரு பேராசரியரின் கருத்துக்களாவே அவற்றை நான் பார்க்கின்றேன். எனது விமர்சனம் பேராசிரியரை நோக்கியது மட்டுமே.

இனி விடயத்திற்கு வருவோம். பெரியார் தாசன் உரைமீதான எனது விமர்சனம் பல கோணங்களில் உள்ளது. முதலாவது விமர்சனத் திசை, பெரியார்தாசனின் நக்கல்களிற்குள் புதைந்து கிடக்கும் சமூகவிரோத முரண்பாடுகள் பற்றியது.

எமது சமூகத்தில் உளவியல் நோய்கள் பற்றி எத்தனை தூரம் அறியாமை நிலவுகின்றது என்பதும் இந்த அறியாமையால், உரிய வைத்திய உதவிகள் பெறாது எத்தனை குடும்பங்கள் எத்தனை விதத்தில் பாதிக்கப்படுகின்ற என்பதும் சற்றேனும் உலக நடப்புக்களைப் புரிந்துகொண்ட எவரும் அறிவது. இந்நிலையில், சிந்திக்கத் தெரியாததால் பார்ப்பனரின் ஒடுக்குமறைக்கு ஆளாகி அழிந்து போகின்ற மக்களைச் சிந்திக்க வைப்பதற்காக முயல்கிறேன் என்ற அடிப்டையில் பேசுகின்ற பெரியார் தாசன், பொறுப்பற்ற ஒரு சினிமாவில் விவேக் என்ற வேடதாரி பேசக்கூடியது போன்றதான ||பைத்தியக்கார ஆசுப்பத்திரி|| நக்கல்களை குறைந்தது இரண்டு இடங்களில் முன்வைக்கின்றார்.

நான் அவதானித்த வரை, ஒரு இடத்தில் பைத்தியக்கார ஆசுப்பத்திரியில் கட்டிப்போடல் என்ற அடிப்படையில் முன்வைக்கின்றார், மற்றொரு இடத்தில் பைத்தியக்கார ஆசுப்பத்திரியை அழைத்து வந்து இவர்களை அமுக்கவேண்டும் என்ற அடிப்படையில் முன்வைக்கின்றார். இத்தகைய நக்கல்களின் உளவியல் மற்றும் தாக்கங்கள் பற்றி அதிகம் பேசலாம் என்றபோதும் யாழ் கள வாசகர்களிற்கு அவை தாமாகவே புரியும் என்பதனால் ஒரு கேள்வியை மட்டும் கேட்கின்றேன். சில முனைகளில் அறியாமை நீக்குதல் என்ற போராட்டம் வேறு சில முனைகளில் கோரமான அறியாமைகளை வளர்த்துத் தான் அடையப்படக்கூடியதா?

இரண்டாவதாக, நரிக்குறவர்கள் என்ற சமூகம் இன்று தமிழகத்தில் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி சில வலைப்பூக்கள் பேசுகின்றன. பெரியார் தாசன் அவர்கள், ரிக்கு வேதத்தை இகழ்வதற்கும் வலுவிழக்கச் செய்வதற்குமான உதாரணமாக நரிக்குறவரின் உணவினை ஏழனமான உதாரணமாக்குகின்றார். ஒரு விடயத்தை ஏழனம் செய்வதற்கான உதாரணமாக அமைகின்ற ஒன்று ஏழனத்திற்குரியதாக மட்டுமே பேச்சாளரின் மனதில் இருக்கக் கூடியது என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமிருக்கமுடியாது. மத்திய கிழக்கில் எண்ணெய் எடுக்கும் இசுலாமியர்கள் மீது இரக்கங்கொள்ளும் அளவிற்கு நரிக்குறவர் மீது பேச்சாளர் இரக்கமற்று இருப்பது சில கேள்விகளை எழுப்புகின்றது. அதாவது, இசுலாமியர் மீதான இரக்கம் இந்து சயமத்தையும் பார்ப்பனரையும் சவாலிற்குள்ளாக்கும் ஒரு விடயத்தின் மீதான இரக்கமாக இங்கு உள்ளதா? அல்லது அது உண்மையிலேயே மனிதாபிமானம் தானா? என்பதே.

அடுத்து காதல் என்று வரும் போது கத்திப் பேசும் பெண் எமது பண்பாட்டிற்குப் புறம்பானவள் என்கிறார் பேராசிரியர். எவ்வாறு கிராமத்தில், தனது உள்ளக்கிடக்கையை ஆடவனினடம் கூறமுடியாதவாறு வெக்கப்பட்டு, வெலவெலத்து, வேர்த்து விறுவிறுத்து, ஒரு பெண் சங்கடப்படுவாளோ அது தான் நம் காதல் மரபு என்று கூறுகின்ற பேச்சாளர் அதே மேடையில் கூறுகிறார், இன்று நம் கிராமங்களில் நடக்கும் பொதுவான வழக்கு என்னவெனில் முனுசாமி பொண்டாட்டியை கந்த்சாமி இளுத்துண்டு போயிட்டான் என்பது தான் என்கிறார்.

ஓரு பேராசிரியர் ஒரு மேடையில் ஒரு சந்தர்ப்பத்தில் சில மணித்தியாலங்களிற்குள் பேசுகின்ற ஒரு பேச்சிற்குள் ஒன்றோடு ஒன்று சம்பந்தமின்றி இருக்கமுடியாது. மேலும், ஓரு பேச்சில் வரும் நகைச்சுவைக்குள் பொதிந்து கிடக்கும் பொருள் தேடவேண்டியது பேராசிரியர்களின் உரைகளைப் பொறுத்தவரை அவசியம் என்பதால் எனக்கு இங்கு எழுகின்ற கேள்வி என்னவெனில் எமது காதல் மரபு இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற திணிப்பிற்கும் இந்த இழுத்துக் கொண்டோடல்களிற்கும் இடையே ஏதேனும் தொடர்பிருக்குமா என்று எவ்வாறு பேராசிரியர் சிந்திக்காது விட்டார்? இவ்விடயம், அவர் பேசுகின்ற மக்கள் கூட்டத்தோடு நேரடித்தொடர்புடைய ஒன்றல்லவா? எவ்வாறு இந்த இழுத்துக் கோடல்கள் என்ற விடயத்திற்குள் கிடக்கும் குடும்பச் சிதைவுகள் பற்றி பேராசிரயரால் நகைச்சுவையாகப் பார்க்க முடிகின்றது?

இனி மேடைப்பேச்சிற்கான வெறும் வார்த்தைஜாலம் என்ற வகையறைக்குள் அடங்கக் கூடிய ஒரு வெற்றுப் பேச்சு முரண்பாடாக (இது முரண்பாடு ஏனென்றால் மாற்றம் நிகழ்த்த விரும்பும் உரையில் வினையற்ற பேச்சு முரண்பாடு) ஒன்றைப் பார்ப்பின்:

நெசவாளியை பட்டினி போடும் தேசம் நிருவாணத்தை இரசிக்கத்தொடங்கிவிட்டது என்ற கூற்றினை எடுத்துக் கொள்ளலாம். பேராசிரியர் கூறுகின்ற இந்தக் கூற்றுச் சரியானதா? இக்கூற்றினைச் சுட்டிக் காட்டுவது குற்றங்கண்டுபிடிப்பதற்காகவ

Link to comment
Share on other sites

இன்னுமொருவன்! நீங்கள் கூறிய சில விடயங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கன

குறிப்பாக பெரியார்தாசன் நரிக்குறவர் உணவை உதாரணத்திற்கு எடுத்தது எனக்கும் உறுத்தலாகத்தான் இருந்தது. ஆயினும் அவருடைய மனதில் நரிக்குறவர் பற்றி ஒரு இழிவான சிந்தனை இருக்காது என்பது அவரை அறிந்தவர்கள் அறிந்த ஒன்று. ஆயினும் அவர் பேசுகின்ற போது இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

முனுசாமியின் மனைவியை கந்தசாமி இழுத்துக் கொண்டு ஓடுவது உலகம் முழுக்க நடைபெறுகிறது. இதற்கும் காதல் மரபிற்கும் தொடர்பிருக்க சந்தர்ப்பம் இல்லை.

மற்றையபடி பெரியார்தாசனுடைய உரை இந்திய மரபிற்கும், இந்து மரபிற்குள் உள்ள வேறுபாட்டை சொல்வதுதான். அதற்குள் நீங்கள் கேட்கின்ற நெசவின் விஞ்ஞான வளர்ச்சி, விவசாயம் என்று அனைத்துக் கேள்விகளுக்கும் விடை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

Link to comment
Share on other sites

சபேசன்,

நீங்கள் சொல்வதுபோன்று, ஓரிரு மணிநேர பேச்சிற்குள் அனைத்தையும் அடக்கிவிடமுடியாது தான். ஆனால் நான் இங்கு முன்வைக்கும் கேள்விகள் அனைத்தும், பேச்சாளர் முன்வைத்த விடயங்கள் தொடர்பானவை மட்டுமன்றி வேறில்லை.

உதாரணமாக, நெசவாளி பற்றிய கவர்ச்சிப் பேச்சினால் எது இங்கு சாதிக்கப்பட்டுள்ளது? மேடைப்பேச்சுக்கள் வெறும் கவர்ச்சி வார்த்தை யாலங்களாக அமைவதனால் தான் நிலமை மாறாது கிடக்கின்றது என்று இங்கு யாழ் களத்திலேயே பலர் கூறுகின்றார்கள். அப்படி இருக்கும் போது இப்படிப் பொறுப்பான ஒரு பேச்சாளரும் வெட்டிப் பேச்சு, அதுவும் தவறாக, பேசினால், எனது கேள்வியும் நியாயமானது தானே?

இனி முனுசாமி பொண்டாட்டியை கந்த்சாமி கொண்டோடுவது உலகெங்கும் நடக்கின்றது என்பது உண்மை தான் என்ற போதும், எவ்வாறு எமது சமூகத்தில் சில சிந்தனைகள் இது தமிழர் மரபு என்று ணிக்பட்டுவருவதனால், சில பொதுவான பிரச்சினைகளும் பூதாகரமாகின்றன என்பதைத் தான் இதன் மூலம் நான் சுட்டிக்காட்டினேன். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எமது குடும்பம் ஒன்று எதிர்நோக்கும் தாக்கமானது வேறு சில சமூகங்களில் இதே பிரச்சினை உருவாக்கும் தாக்கத்தை விடப் பெரிதும் பாரதூரமானது என்பதனை

நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கின்றேன். அதுவும் பெரியார் தாசன் விளிக்கின்ற மக்கள் கூட்டத்தைப் பொறுத்தவரை இது மிக்ப்பெரிய ஒரு பிரச்சினை.

இந்நிலையில், பிரச்சினை பொதுவானது என்று ஏற்றுக் கொள்ள எம்மால் முடியுமாயின், அதை முழு வடிவில் பார்ப்பது அவசியம். ஒரு முனையில் பிரச்சினையின் தோற்றுவாய்களை கண்மூடித்தனமாக ஆதரித்துக் கொண்டு மறு முனையில் அது ஏற்படுத்தும் பாரதூரமான விளைவுகளை நக்கல் பண்ணுவதை

ஒரு பேராசரியரின் உரையில் என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

அதுபோன்று தான் பிள்ளையாரிற்குப் பாடப்படும் தேவாரத்தை அடியிளக்கச் செய்தல் என்ற விடயம் முன்நிலை பெறும் அளவிற்கு மக்களின் உண்மையான பிரச்சினைகளை அணுகுதல் முக்கியப்படுத்தப்படவில்லை என்ற எனது ஆதங்கமும். இது போன்றதே சாணக்கியத் தனத்தின் மறுப்பும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம். சட்ட இடையூறுகள் இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்பில் எழுத தீர்மானித்துள்ளோம். இந்தநிலையில் நாடுகடத்தல் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என்ற தர்க்கத்தை இந்த தரப்பிலிருந்து அனுப்பியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  எனவே, நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயல்கின்றோம் அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்து. அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுள்ளன, மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தடவை அனுமதியை பெற்றுகொள்ள வேண்டும். இதனடிப்படையில், அடுத்த வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தில் அதற்கு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/action-to-bring-arjuna-mahendran-to-the-country-1731023300#google_vignette
    • 3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் மொஹமட் மஹிஷ் தெரிவித்துள்ளார். எனவே, வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியமானது. நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1407734
    • டொனால்ட் ட்ரம்பின்  (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)  தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia)  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை. டொனால்ட் ட்ரம்பின் தைரியம் எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன்.   ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்தது. அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார். மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல். புடினின் வாழ்த்து ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார். ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள்.தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை ” என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஸ்ய ஜனாதிபதி புடினின் வாழ்த்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேர்காணலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/putin-praises-trump-says-russia-ready-for-dialogue-1731016171#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.