Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி , இளம் பெண் வைத்தியரை மிரட்டியமைக்கு பின்னால் என்ன நடக்குது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கிளிநொச்சி வைத்தியர் பிரியாந்தினியின் அதிரடி நடவடிக்கையால் கதி கலங்கிய மாபியாக்கள் கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கண் வைத்தியநிபுணரின் மருத்துவ அறிக்கை , கிளிநொச்சி தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன், அதில் சந்தேமடைந்து அந்த மாணவர்களின் கணிசமான பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர்களின் கருத்து எனது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இதனை தொடர்ந்து கண்டாவளை வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டேன் அவர் அப்போது தனது பணியின் பயிற்சி ஒன்றுக்காக விடுமுறையில் இருந்தார்.

இருப்பினும் அவருக்கு இது தொடர்பில் தெரியவில்லை என்பதோடு அவரது அலுவலகத்தில் இது தொடர்பில் அனுமதி பெறவோ அல்லது அறிவிக்கவோ இல்லை என்பதும் அறிந்து கொண்டு மேலும் சிலஅதிகாரிகளை தொடர்பு கொண்டு விடயத்தை ஆராய்ந்த போது இதற்கு பின்னால் வியாபார நோக்கம் இருந்ததை அறிந்து கொண்டு அதனை அம்பலப்படுத்தினேன்.

 

இதற்கு பின்னர் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினார்கள் அதன் விளைவுமருத்துவ மாபியாக்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனைமேற்கொண்ட தனியார் கண் மருத்துவ நிறுவனம் ஒன்று 71 மாணவர்களுக்கு கண்பாதிப்பு உண்டு எனத் தெரிவித்து அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களதுமருத்துவ நிலையத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன் போது மேலதிக பரிசோதனை மேற்கொண்டதில் 10 மாணவர்களை தவிர ஏனைய 61 மாணவர்களுக்கும் கண்ணில் பாதிப்பு உண்டு எனவும் இவர்கள் மூக்கு கண்ணாடி பயன்படுத்த வேண்டும் என்றும் குறித்த நிறுவனத்தினரால் தெரிவிக்கப்பட்டு கண்ணாடிகளின் விலைகளும் பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டு அனுப்பபட்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களில் சந்தேகம் எழுப்பட்ட நிலையில் நடவடிக்கையில் இறங்கிய சுகாதார பிரிவினர் அம்மாணவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கண் வைத்திய நிபுணரிடம் பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். அதன்படி படிப்படியாக மாணவர்கள் அழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு 71 மாணவர்களில் வருகை தந்த 55 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 38 மாணவர்களுக்கு கண்ணில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் ஏனைய 17 மாணவர்களுக்கு கண்ணில் சிறு குறைபாடுகள் இருப்பதாகவும் மாவட்ட கண் வைத்தியர் அறிக்கையிட்டிருந்தார் என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.

எனவே இதன் மூலம் தங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு ஏழை மாணவர்களை குறித்த நிறுவனம் பயன்படுத்தியமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பில் கல்வி மற்றும் சுகாதார துறையினர் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க வழிசமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

P.Gopalakrishnan-1.jpgமருத்துவத்துறையின் சுயாதீனத்தினுள் ஊடுருவும் அரசியல் அல்லக்கைகள்சமீபத்தில் தருமபுரத்தில் இடம்பெற்ற மாபெரும் கண்மருத்துவ கொள்ளையினை ஊடகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியமைக்காக புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகாத வார்த்தைகளால் பேசும் இன்னொரு வைத்தியரின் தம்பியும் சம்பந்தப்பட்ட நபர் மைத்திரிபால சிரிசேனவின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளராக வட்டுக் கோட்டை தொகுதி பிரதேச சபை தேர்லில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்.

அரசியல்வாதிகள் பெண் அதிகாரிகளை மோசமாக நடத்த முனையும் செயல்கள் நாட்டில் நடந்தே வருகிறது. அதேபோல வடக்கில் நடந்த செயலும் மிக முக்கியமான ஒன்று. அந்த குரல் பதிவு வீடியோ இது:

 

மேலே உள்ள  காணொளியை செவிமடுக்கும் போது வடக்கின் மருத்துவ கட்டமைப்புக்குள் எவ்வளவு தூரம் அரசியல் உள்நுழைந்து விளையாடுகிறதென்பதை அறிய முடியும். வைத்திய அதிகாரியை மிரட்டும் குறித்த நபர் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தேர்தலில் சுதந்திர கட்சி சார்பாக போட்டியிட்ட ஒரு சாதாரண நபர்.

அவருக்கு அப்பகுதி மக்களே வாக்களிக்கவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நபர் மக்களுக்கு சேவையாற்றும் ஒரு மருத்துவ அதிகாரியைப்பார்த்து அடிப்பன், உடைப்பன், மூஞ்சையை கிழிப்பன் என்றெல்லாம் பேசுவதும் தன்னுடைய அரசியல் அதிகாரத்தை வைத்து வேலையை விட்டு கலைப்பன் என்றெல்லாம் சவால் விடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

அதற்கு  குறித்த பெண் மருத்துவர் துணிச்சலாக நீ யார் என்னை கேள்வி கேட்க என்று அந்நபரிடம் கேட்கிறார் . ஆனால் அவருக்கு மேல் அதிகாரியான கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி( RDHS)குறித்த அந்த அரசியல் இடைத்தரகரான நபரிடம் தனக்கு கீழ் பணியாற்றும் MOH பற்றி முறைப்பாடு செய்ததாக அந்த நபரே கூறுகிறார்.

படித்து பட்டம் பெற்ற ஒரு RDHS அவரின் பதவியின் மதிப்புக்கூட தெரியாமல் ஒரு பிரதேச சபை மெம்பராக கூட இல்லாத ஒரு நபரிடம் MOH ஐ மாற்ற அரசியல் பலத்தை காட்டச்சொல்லி சொல்லியிருக்கிறார் என்கிறபோது அவரின் பதவிக்கு என்ன மதிப்பிருக்கிறது?

SurenRagavan.jpg

இப்படி தற்துணிவற்ற அவர் கீழ்த்தர அரசியலூடாக சாதிக்க நினைக்கும் அவர் வைத்திய அதிகாரியாக இருந்து மக்களுக்கு சேவை செய்வார் என்று எப்படி நம்ப முடியும்?
குறித்த கண்டாவளை M.O.H அதிகாரிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆளுநருமான சுரேன் ராகவனின் செக்கரட்டி செவ்வேள் கோல் எடுத்ததாகவும்,  M.O.H ஆன்சர் பண்ணவில்லையென்றும் , நீ என்ன அவ்வளோ பெரிய ஆளா என்று குறித்த அரசியல் அல்லக்கை கேட்கிறார்.

சுரேன் ராகவன் மக்கள் வாக்குகளால் தெரிவுசெய்யப்படாது ஒரு எடுபிடி எம்.பி அவருக்கே இங்கு மரியாதை கொடுக்கத் தேவை இல்லை. இவர் முன்னாள் வடக்கு ஆளுனராக பதவி வகித்தவர் என்பது குறிப்பித்தக்கது.

இந்த மாவட்டத்திற்கு தொடர்பே இல்லாத யாரோ ஒருவர் நியமித்த பாராளுமன்ற உறுப்பினரின் செக்கரட்டியின் கதைக்கெல்லாம் எங்கள் மாவட்டத்தின் வைத்திய அதிகாரி பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா?

கண்டாவளை M.O.H பிரிவு இப்போதுதான் புத்துணர்வு பெற்று எழுந்துகொண்டிருக்கிறது அதற்கு காரணம் இப்போது அங்கு MOH ஆக பணிக்கு வந்துள்ளDr. Priyaanthini Kamalasingam அவர் துணிச்சலாக மருத்துவத்துறைக்குள் நடக்கும் ஊழல்களை ஒத்துழைப்பின்மையை பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்.

ஒரே நாளில் ஒரு கிராமத்தை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கண்ணில் குறைபாடு உள்ளது அவர்கள் கண்ணாடி பாவிக்க வேண்டும் என ஒரு பாடசாலை அதிபர் ஊடாக மாபெரும் மருத்துவ கொள்ளையில் ஈடுபட இருந்த நபர்களை இனம்காட்டி அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியும் இருந்தார். இதுதான் இப்போது இங்கிருக்கும் அரசியல் வால்பிடி அதிகாரிகளுக்கு பிரச்சனையாக உள்ளது.

நேர்மையான அதிகாரிகளை கலைத்து விட்டு ஊழல் வாதிகளை வைத்து எங்கள் பிரதேசத்தை நாசப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எங்கள் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

கிளிநொச்சி வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர்கள்!

கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
001-entry-1.jpgமேலும், கிளிநொச்சி கண்டாவளை பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதுடன் அவரது விடுதிக்குச் சென்ற சிலரும் அவரை அச்சுறுத்தியமை தொடர்பில் தரும்புரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் இதற்கான விசாரணைகள் தருமபுரம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்யும் பொருட்டு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது கடமையிலிருந்த ஏனையவர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டியதுடன் சி.சி.ரி.வி கமரா ஒளிப்பதிகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரை எழுதிய பின் , தொலைபேசியில் மிரட்டிய குறிப்பிட்ட நபர் கைதாகியுள்ளார்.

கண்டாவளை MOH Dr.Priyaanthini க்கு தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை 03.02.2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதான தர்மபுரம் பொலீஸ் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
https://www.ceylonmirror.net/70102.html

 

May be an image of 1 person, sitting and indoor

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

அரசியல்வாதிகள் பெண் அதிகாரிகளை மோசமாக நடத்த முனையும் செயல்கள் நாட்டில் நடந்தே வருகிறது. அதேபோல வடக்கில் நடந்த செயலும் மிக முக்கியமான ஒன்று. அந்த குரல் பதிவு வீடியோ இது:

 

நீதி ஞாயம் பற்றி அழுபவர்கள் இதை கேட்டு விட்டு அழலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

சுரேன் ராகவன் இப்ப சும்மாதான் இருக்கிறார்...அடிபொடிகள் அவருக்கு வேலை குடுக்கத்தானே வேணும்..

  • கருத்துக்கள உறவுகள்

சுரேன் ராகவன்  காரணமில்லாமல் வன்னி மக்களுக்காக அழேக்கையே நினைச்சேன் வன்னியை விழுங்கப்போகுது என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

சுரேன் ராகவன்  காரணமில்லாமல் வன்னி மக்களுக்காக அழேக்கையே நினைச்சேன் வன்னியை விழுங்கப்போகுது என்று.

தெலுங்கு பட வில்லனுகளை விட மோசமாய் இருக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன எல்லா வில்லன்களும் எங்கட இனத்துக்குள்ள விழுந்து விளையாடுதுகள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அது என்ன எல்லா வில்லன்களும் எங்கட இனத்துக்குள்ள விழுந்து விளையாடுதுகள்?

நாங்கள் தமிழர். தமிழ் என்றால் தேன் என்று பெரும்பெரும் புலவர்களும் போற்றிப் பாடியுள்ளார்கள். தேனைக் கண்டாலே பூச்சி புழுக்களும் அதனிடம் ஓடிவரவும் அதற்குள் விழவும்தான் செய்யும். நாங்கள்தான் அவற்றிடமிருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

தருமபுரத்தில் இடம்பெற்ற மாபெரும் கண்மருத்துவ கொள்ளையினை ஊடகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியமைக்காக புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகாத வார்த்தைகளால் பேசும் இன்னொரு வைத்தியரின் தம்பியும் சம்பந்தப்பட்ட நபர் மைத்திரிபால சிரிசேனவின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளராக வட்டுக் கோட்டை தொகுதி பிரதேச சபை தேர்லில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்.

விட்டால் சிறுவர்களின் கண்ணையும் நோண்டு வார்கள் போல் உள்ளது தங்களது பண ஆசைக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி , இளம் பெண் வைத்தியரை மிரட்டியமைக்கு பின்னால் என்ன நடக்குது?

அந்த வைத்திய அதிகாரிக்கு இடமாற்றல் என்கிற செய்தி பின்னாளில் வரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, பெருமாள் said:

தெலுங்கு பட வில்லனுகளை விட மோசமாய் இருக்கினம் .

இந்த வில்லன்கள் தான் விடுதலைப்போராட்டத்தை முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியவர்கள்.

இப்பொழுதாவது தெரிகின்றதா ஏன் இவர்கள் விடுதலைப்புலிகளை  எதிர்த்தார்கள் என்று.......??????

  • கருத்துக்கள உறவுகள்

டொக்டர் பிரியா கமலசிங்கம் முன்னர் வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் வதிவிட வைத்தியராக கடமையாற்றியவர் என்பதும் அதன் அடிப்படையில் அவருடன் பல கடற்படை அதிகாரிகள் நட்பாக இருப்பதும் தேசியத்தை தம் முதுகில் சுமக்கும் எதிர்கால நாட்டுப்பற்றாளர்களுக்குத் தெரியாது போலும். தெரிந்திருந்தால் அவர் அச்சுறுத்தப்பட்டது சரிதான் என்று நிறுவப்பட்டிருக்கும். அவரின் பின்புலம் கிளறப்பட்டிருக்கும். 

பிற்குறிப்பு: டொக்டர் பிரியாவை தனிப்பட தெரிந்து இருப்பதால் சொல்கின்றேன். ஒரு வைத்தியருக்கு இனம் மதம் மொழி எல்லாம் முகியமல்ல. அர்ப்பணிப்புடன் கூடிய சேவை மனப்பான்மைதான் முக்கியம். அதனூடாக சில நட்புகள் ஏற்படுவது வழமைதான். இதன் அடிப்படையில் பிரியா மிகச் சிறந்த நல்லுள்ளம் கொண்ட வைத்தியர். இந்தச் சில்லறைகளின் சில்லறைத்தனமான செயல்களெல்லாம் பிரியா முன் எடுபடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வாலி said:

டொக்டர் பிரியா கமலசிங்கம் முன்னர் வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் வதிவிட வைத்தியராக கடமையாற்றியவர் என்பதும் அதன் அடிப்படையில் அவருடன் பல கடற்படை அதிகாரிகள் நட்பாக இருப்பதும் தேசியத்தை தம் முதுகில் சுமக்கும் எதிர்கால நாட்டுப்பற்றாளர்களுக்குத் தெரியாது போலும். தெரிந்திருந்தால் அவர் அச்சுறுத்தப்பட்டது சரிதான் என்று நிறுவப்பட்டிருக்கும். அவரின் பின்புலம் கிளறப்பட்டிருக்கும். 

பிற்குறிப்பு: டொக்டர் பிரியாவை தனிப்பட தெரிந்து இருப்பதால் சொல்கின்றேன். ஒரு வைத்தியருக்கு இனம் மதம் மொழி எல்லாம் முகியமல்ல. அர்ப்பணிப்புடன் கூடிய சேவை மனப்பான்மைதான் முக்கியம். அதனூடாக சில நட்புகள் ஏற்படுவது வழமைதான். இதன் அடிப்படையில் பிரியா மிகச் சிறந்த நல்லுள்ளம் கொண்ட வைத்தியர். இந்தச் சில்லறைகளின் சில்லறைத்தனமான செயல்களெல்லாம் பிரியா முன் எடுபடாது. 

வாலி நீங்கள் இங்கே கூற விளைவது என்ன?

அந்த வைத்தியரின் பின்புலம் இங்கு அலசப்பட வேண்டியதில்லை. அவர் என்ன செய்தார் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

வாலி நீங்கள் இங்கே கூற விளைவது என்ன?

அந்த வைத்தியரின் பின்புலம் இங்கு அலசப்பட வேண்டியதில்லை. அவர் என்ன செய்தார் என்பதே.

நான் இங்கு கூற விழைவது யாதெனில், இங்கு அதாவது யாழ் இனணையதில் காத்திருக்கும் தமிழ்த்  தேசியவாதிகளுக்குத் பிரியாவின் பின்புலம் தெரியாமல் போய்விட்டது. ஏதொ கிளிநெச்சி வைத்தியர் என எண்ணி விட்டார்கள். தெரிந்திருந்தால் இங்கு வைத்தே நாறடித்து இருப்பார்கள். அதனால் பிரியாவுக்கு ஆதரவான வேடம் போடவேண்டியதாயிற்று. ஒருவரின் பின் புலத்தை வைத்து சேறடிப்பது யாழ் இணையத்தில் உள்ள தேசியவாதிகளுக்குத் தெரியாது என்பது போல் உங்கள் கேள்வி உள்ளது. நிர்வாகத்தில் இருப்பவர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெறும் நிகழ்வு அது.  இது வேறு யாருக்குமல்ல எனக்கே நிகழ்ந்திருக்கின்றது,

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாலி said:

நான் இங்கு கூற விழைவது யாதெனில், இங்கு அதாவது யாழ் இனணையதில் காத்திருக்கும் தமிழ்த்  தேசியவாதிகளுக்குத் பிரியாவின் பின்புலம் தெரியாமல் போய்விட்டது. ஏதொ கிளிநெச்சி வைத்தியர் என எண்ணி விட்டார்கள். தெரிந்திருந்தால் இங்கு வைத்தே நாறடித்து இருப்பார்கள். அதனால் பிரியாவுக்கு ஆதரவான வேடம் போடவேண்டியதாயிற்று. ஒருவரின் பின் புலத்தை வைத்து சேறடிப்பது யாழ் இணையத்தில் உள்ள தேசியவாதிகளுக்குத் தெரியாது என்பது போல் உங்கள் கேள்வி உள்ளது. நிர்வாகத்தில் இருப்பவர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெறும் நிகழ்வு அது.  இது வேறு யாருக்குமல்ல எனக்கே நிகழ்ந்திருக்கின்றது,

உங்களுக்கு நடந்தது இவருக்கும் நடக்க வேண்டும் என்பதா?

இங்கு பாதிக்கப்பட்டது பாலகர்களும் அப்பாவிப் பெற்றோர்களும். அதை நினைவில் வையுங்கள். மேலும் அரச ஆதரவு அரசியல்வாதிகளின் மோசடி வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாலி said:

நான் இங்கு கூற விழைவது யாதெனில், இங்கு அதாவது யாழ் இனணையதில் காத்திருக்கும் தமிழ்த்  தேசியவாதிகளுக்குத் பிரியாவின் பின்புலம் தெரியாமல் போய்விட்டது. ஏதொ கிளிநெச்சி வைத்தியர் என எண்ணி விட்டார்கள். தெரிந்திருந்தால் இங்கு வைத்தே நாறடித்து இருப்பார்கள். அதனால் பிரியாவுக்கு ஆதரவான வேடம் போடவேண்டியதாயிற்று. ஒருவரின் பின் புலத்தை வைத்து சேறடிப்பது யாழ் இணையத்தில் உள்ள தேசியவாதிகளுக்குத் தெரியாது என்பது போல் உங்கள் கேள்வி உள்ளது. நிர்வாகத்தில் இருப்பவர்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெறும் நிகழ்வு அது.  இது வேறு யாருக்குமல்ல எனக்கே நிகழ்ந்திருக்கின்றது,

இந்த பெண் வைத்தியர் துணிச்சலாக அந்த ஏழை மாணவர்களின் கண்களை பாதுகாத்து உள்ளார் அது போதும் இப்போதைக்கு .

13 hours ago, வாலி said:

தெரிந்திருந்தால் அவர் அச்சுறுத்தப்பட்டது சரிதான் என்று நிறுவப்பட்டிருக்கும்.

நடக்காத விடயத்தை ஏன் கற்பனையில் கண்டு கணக்க  யோசிக்கிறியள் ரிலாக்ஸ் .

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2022 at 02:19, பெருமாள் said:

அரசியல் அல்லக்கைகள்சமீபத்தில் தருமபுரத்தில்

ஐயா பாலகிருஷ்ணன் MSc- Software Engineering,

புகையை அடிச்சு பழம் பழுக்க வைக்கிறது  தெரியுமோ?😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

ஐயா பாலகிருஷ்ணன் MSc- Software Engineering,

புகையை அடிச்சு பழம் பழுக்க வைக்கிறது  தெரியுமோ?😀

விளங்கவில்லை ?

  • கருத்துக்கள உறவுகள்

 

6 hours ago, பெருமாள் said:

விளங்கவில்லை ?

ஐயா பாலகிருஷ்ணன், பிஞ்சிலேயே பழுக்க வைக்கிற உத்தியைக் கையாளுகிறார். அரசியலில் தான் ஒரு சாணக்கியன் என்பதை நிரூபிக்க துடிக்கிற ஒரு கொழுகொம்பு.

சுய தம்பட்டம் அடித்து, ஆழம் தெரியாமல் கால் விட்டு  பின் பக்கத்தில்(xxx) கால் அடிபட அடிபட ஓடினது மாதிரி ஒரு உணர்வு.

 

  • கருத்துக்கள உறவுகள்

@வாலி

பிரியா சேம் சைட் கோல் அடித்து விட்டாவோ….?🤔🤔🤔

 

பி.கு: இப்போது உங்களுக்கு சந்தோசமாக இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் மருத்துவத்துறையும் அரசியலும் 
================================

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் Whatsapp இலும் பகிரப்படும் ஒரு விடயமாக இருப்பது கிளிநொச்சி, கண்டாவளையில் சுகாதார வைத்திய அதிகாரியாக (MOH) இருக்கும் பெண் வைத்தியருக்கு பல்வேறு நபர்கள் எடுத்த தொலைபேசி அழைப்புகள், அவருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள், அதன் பின்னரான பொதுவெளியில் அது தொடர்பில் பகிரப்படும்  எதிர்வினைகள்தான்.

இதன் ஆரம்பப் புள்ளியாக கடந்த டிசம்பர் மாதம் கண்டாவளைப் பிரதேசத்தில்  தர்மபுரம் இல.1 அ.த.க. பாடசாலையில் 320 மாணவர்களைப் பரிசோதித்து அவர்களுள் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு யாழில் இருந்து வந்து பரிசோதனை செய்த தனியார் கண் மருத்துவ நிறுவனத்தின் செயற்பாடே என்று சொல்லப்படுகிறது. குறித்த நிறுவனம் அதன் பின்னர் தெரிவு செய்த 71 மாணவர்களை மேலதிக பரிசோதனைக்கு யாழ்ப்பாணத்திற்கு வரவைத்து அங்கும் பரிசோதனை மேற்கொண்டு அவர்களில் 61 பேருக்கு கண்குறைபாடு இருப்பதால் அவர்கள் மூக்குக்கண்ணாடி அணியவேண்டும் என்றதுடன் அவற்றுக்கான விலைகளையும் அந்தப் பிள்ளைகளின் பெற்றோருக்கு வழங்கியிருக்கிறது.  

இதன் பின்னர், இது தொடர்பில் சந்தேகம் எழுப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட கண் வைத்தியர் மீள அந்தப் பாடசாலையில் குறித்த 71 மாணவர்களில் 55 மாணவர்களை பரிசோதித்ததில் அதில் 38 பேருக்கு எந்தவிதக் குறைபாடும் இல்லையென உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் குறித்த தனியார் நிறுவனம் வியாபார நோக்கிலேயே இந்த முனைப்பை மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுபெற்று இருக்கிறது.

இந்த நிலையில் அண்மையில் குறித்த கண்டாவளை வைத்திய அதிகாரிக்கு MOH) கோபால் என்ற கோபாலகிருஷ்ணன்  அழைப்பெடுத்துள்ளார். இந்த நபர் 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் வலிமேற்கில் சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிட்ட ஒருவர் என்று சொல்லப்படுகிறது. இதன்போது அந்த கோபால் தனது பலம், செல்வாக்கைக் காட்ட, சிலரின் பெயரைக் குறிப்பிடுகிறார். தான், யாழ் மருத்துவபீடத்தில் பணிபுரியும் Dr. சுரேந்திரகுமரனின் தம்பி என்கிறார், பா.உ. சுரேன் ராகவனின் செயலாளர் செவ்வேள் தன்னுடன் பேசியதாகச் சொல்கிறார். தான் சனாதிபதி கோத்தபாயவுடன் நெருக்கமாக வேலை செய்வதாகவும் சொல்கிறார். 

அந்த உரையாடலின்போது ஆரம்பத்தில் குறித்த வைத்திய அதிகாரியை ஆழம் பார்ப்பதுபோல கதைக்க முற்படுகிறார். “உங்களைப் பற்றி எழுத்துமூல முறைப்பாட்டைத் தரும்படி RDHS என்னிடம் கேட்டார். ஆனால் நான் கொடுக்கவில்லை. உங்களுக்கிடையில என்ன பிரச்சனை” என்று கேட்கிறார். அடுத்து, “உங்களுக்கு அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தக்கூடாது என்ற கொள்கை இருக்கிறதா?” என்றும் கேட்கிறார். அதன்போது வைத்திய அதிகாரி பிடிகொடாமல் பேசிய நிலையில் தன்னிலை இழந்து தன் சுயரூபத்தை வெளிப்படுத்துகிறார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த வைத்திய அதிகாரியின் உத்தியோகபூர்வ வதிவிடத்துக்குச் சென்ற சிலர் தாக்கவும் முயற்சி செய்துள்ளார்கள். குறித்த வைத்திய அதிகாரி அளித்த புகார் அடிப்படையில் கொலைமிரட்டல் விடுத்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர் செய்தி வெளிவந்துள்ளது.

அதன் பின்னர் வெளிவந்த ஒரு உரையாடல் ஒலிப்பதிவில் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் குறித்த வைத்திய அதிகாரியிடம் தொலைபேசியில் அவரது சமூக வலைத்தள இடுகைகள் தொடர்பாக கண்டனம் தெரிவிக்கிறார். அவற்றை மீளப் பெறும்படி சொல்கிறார். அதேநேரம் அந்த பெண் வைத்திய அதிகாரியைப் பாதுகாப்பது தனது பொறுப்பில்லை அது போலீஸின் வேலை என்கிறார். சமூகவலைத்தளங்களில் வந்ததுபோல எதுவுமே நடைபெறவில்லை என்று ஒரு அறிக்கை வெளியிடும்படி வற்புறுத்துகிறார்.

குறித்த பெண் வைத்திய அதிகாரி அண்மையிலேயே விருப்பு மாற்றம் பெற்று கண்டாவளைக்கு வந்தவர் என்பதுடன், குறுகிய காலத்திலேயே சில நல்ல வேலைகளைச் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டாவளை MOH அலுவலகத்தை சீரமைத்ததுடன் World Vision உதவியில் மாஸ்க் பக்கெட்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இராணுவத்தின் உதவியுடன் டெங்குப் பரவலைத் தடுக்க பிரதேசத்தை சுத்தமாக்கியுள்ளார். கர்ப்பிணித் தாய்மாருக்கான கிளினிக்கிற்கு தேவைப்பட்ட தானியங்கி பிறசர் மெஷின்கள், குளுக்கோ மீட்டர் மற்றும் நிறுக்கும் தராசு என்பவற்றை வாங்க நிதியில்லாத நிலையில் சமூக வலைத்தளமூடாக பொதுமக்களின் அனுசரணையில் அவற்றைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் எமது சில அவதானிப்புகளும் கேள்விகளும்!.

1. கண்டாவளையில் நடைபெற்ற விடயத்திற்கு வலி மேற்கில் தொழிற்படும் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதி எந்தவகையிலும் வலிமேற்குக்கும் கண்டாவளைக்கும் அரசியல் ரீதியாகவோ, பூகோள ரீதியாகவோ தொடர்பற்ற நிலையில் ஏன் இவ்வளவு அக்கறை செலுத்துகிறார்? இதன் பின்னணி என்ன?

2. ஆரம்பத்தில் சில பொதுமக்கள், குறித்த அரசியல்வாதி பொய்யாக RDHSஐத் தொடர்புபடுத்தி கதைத்துள்ளார், RDHSற்கு களங்கம் ஏற்படுத்தப் பார்க்கிறார் என்று சிலர் முட்டுக் கொடுத்தாலும் அண்மையில் வெளிவந்த இன்னொரு ஒலிப்பதிவு குறித்த RDHS நடந்த முழு சம்பவத்திலும் இதற்கு முன்னர் நடந்த கண் பரிசோதனை விடயத்திலும் சம்பந்தப்பட்டிருப்பாரோ என்று சந்தேகப்பட வைக்கிறது. 

3. ஆரம்பத்தில் அரசியல்வாதியின் மிரட்டல் என்று இருந்த நிலையில் குறித்த வைத்திய அதிகாரிக்கு ஆதரவாக வைத்தியர்களுக்கான தொழிற்சங்கமான GMOA நிற்பதாக ஒரு வைத்தியரின் பதிவில் இருந்து அறிய முடிந்தது. அத்துடன் GMOA யின் கிளிநொச்சி பிராந்தியக் கிளை இது தொடர்பில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. ஆனால் ஒரு ஒலிப்பதிவின்படி இந்த விவகாரத்தில் RDHSற்கு முக்கிய பங்கு இருப்பதான செய்தி வெளிவந்த நிலையில் அது தொடர்பில் GMOA வின் நிலைப்பாடு என்ன? GMOA, குறித்த RDHS மீது சுயாதீன விசாரணை நடாத்த அழுத்தம் கொடுக்குமா?

4. அந்த பெண் வைத்திய அதிகாரி தொலைபேசியிலும் நேரிலும் மிரட்டப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டிய RDHS எதற்காக, யாரைக் காப்பாற்ற அந்த வைத்திய அதிகாரியிடம் எதுவுமே நடக்கவில்லை என்று அறிக்கை வெளியிடும்படி வற்புறுத்துகிறார்?

5. குறித்த வைத்திய அதிகாரியின் வதிவிடத்திற்கு சென்று மிரட்டியவர்களுக்கும் கோபால் என்ற நபருக்கும் தொடர்புள்ளதா? அல்லது மிரட்டச் சென்றவர்கள் சொன்னதுபோல அந்த ரவுடிகளுக்கும் RDHSக்கும் தொடர்புள்ளதா? 

6. இந்த விடயத்தில் சமூகத்தில் உள்ளவர்கள் இந்த வைத்திய அதிகாரிக்கு ஆதரவு கொடுப்பது நல்ல விடயம்தான், ஆனால் சைக்கிள் செல்லக்கூடிய இடைவெளியில் ஆட்டோ ஒட்டுவதுபோல இந்த விடயத்தைப் பற்றி பேசும்போது சம்பந்தமே இல்லாமல் சுமந்திரன் மற்றும் சிறீதரன் புகழ் பாடும் சில்லறை அரசியலை அவர்களின் சீடர்கள் தவிர்த்திருக்கலாம்.

இறுதியாக இலங்கையில் இயங்கும் தமிழ் ஊடகங்களை நோக்கி சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம். கிளிநொச்சியில் உண்மையில் குறைபாடு இல்லாத மாணவர்களை வைத்து ஒரு தனியார் நிறுவனம் காசு பார்க்க முயன்றமை, அதன் பின்னர் கிளிநொச்சியில் பணிபுரியும் சில வைத்திய அதிகாரிகள் அதில் தலையிட்டு உண்மையை வெளிக் கொணர்ந்தமை போன்ற சம்பவங்களும் அதன்பின்னர் அண்மையில் நடந்த சம்பவங்களும் நடைபெற்ற நிலையில் இது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து மக்களுக்கு உண்மைகளை எழுத வேண்டியது உங்கள் கடமையில்லையா? இவ்வாறான சம்பவங்களை எழுதி அதிகாரிகளின் பகையை ஏன் சம்பாதிக்க வேண்டும் என்று தவிர்த்து விட்டீர்களா? அல்லது இது ஒன்றும் பரபரப்புத் தரும் செய்தியில்லை என்று முடிவெடுத்து விட்டீர்களா?

https://m.facebook.com/photo.php?fbid=493806378793786&id=101881847986243&set=a.102039331303828&source=48&refid=13&ref=page_internal&__tn__=%2B%3D

https://www.facebook.com/101881847986243/posts/493806545460436/?d=n

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீதரனின் அரசியல் .

 

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் லண்டன் ஆபீஸ் செவ்வேள் தற்போது அந்தப் பெண் டாக்டரை தொலைபேசியில் மிரட்டியதாக செய்தி வந்துள்ளது. செவ்வேள் தற்போது முன்னாள் யாழ் கவர்னருக்கும் தற்போதைய எம்பியுமான ஒருவருக்கு செயலாளராக இருக்கிறார். FB

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

புளொட் லண்டன் ஆபீஸ் செவ்வேள் தற்போது அந்தப் பெண் டாக்டரை தொலைபேசியில் மிரட்டியதாக செய்தி வந்துள்ளது. செவ்வேள் தற்போது முன்னாள் யாழ் கவர்னருக்கும் தற்போதைய எம்பியுமான ஒருவருக்கு செயலாளராக இருக்கிறார். FB

அவ பயப்பிடுற இடத்தில இருந்து வந்தவ இல்லை  பார்ப்பம் எது மட்டும் பாயினம் என்று .

இரண்டாவது தலைமுறை எப்படி போகுதெண்டு தெரியலை பொறுத்து பார்ப்பம் .

  • கருத்துக்கள உறவுகள்

பெண் வைத்தியரை மிரட்டும் அதிகாரி - அதிர்ச்சி காணொளி

வட தமிழீழம் 

கண்டாவளை M.O.H பிரிவு இப்போதுதான் புத்துணர்வு பெற்று எழுந்துகொண்டிருக்கிறது அதற்கு காரணம் இப்போது அங்கு MOH ஆக பணிக்கு வந்துள்ள மருத்துவர் பிரியந்தினி அவர்கள் துணிச்சலாக மருத்துவத்துறைக்குள் நடக்கும் ஊழல்களை பொது வெளியில் பகிர்ந்து வருகிறார்.

ஒரே நாளில் ஒரு கிராமத்தை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கண்ணில் குறைபாடு உள்ளது அவர்கள் கண்ணாடி பாவிக்க வேண்டும் என ஒரு பாடசாலை அதிபர் ஊடாக மாபெரும் மருத்துவ கொள்ளையில் ஈடுபட இருந்த நபர்களை இனம்காட்டி அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியும் இருந்தார்.

இதுதான் இப்போது இங்கிருக்கும் அரசியல் வால்பிடி அதிகாரிகளுக்கு பிரச்சனையாக உள்ளது.

நேர்மையான அதிகாரிகளை கலைத்து விட்டு ஊழல் வாதிகளை வைத்து எங்கள் பிரதேசத்தை நாசப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எங்கள் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மக்கள் ஆதரவாக உள்ள நிலையில்  வைத்தியர் எனப்படும் ஒருவர் மிரட்டும் மற்றும் ஒரு ஓடியோ வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஓடியோ வெளியானதைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகிமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.thaarakam.com/news/2f525a81-de56-4fe4-a9e4-c390f6acf4c8

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த RDHS பேர் விபரங்கள் படத்தையும் போட்டாத்தான நாங்களும் நாலு கேள்வி கேட்கலாம்.. கற்புகலைஞ்சிடும் எண்டு ஒளிச்சு வச்சிருக்கோ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.