Jump to content

எனது பயண நினைவுகளின் தொகுப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

கிட்டதட்ட இரண்டு வருடங்களின் பின் கொழும்பிற்கு வைகறை பொழுது ஒன்றில் வந்திறங்கிய பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!!

spacer.png

முன்னைய பயணங்களைப்போல் இல்லாது, சஞ்சலத்துடனும் பயத்துடனும் தான் பயணம் இருந்தது.. ஆனாலும் ஊருக்கு போகும் ஆர்வம் இந்த பயங்களை கொஞ்சம் பின்னோக்கி தள்ளியதையும் மறுக்கவில்லை.. ஊரில் தங்கியிருந்த நாட்களில் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!

D87-A9-FDE-8858-46-AE-BA00-DE4-B26-C7874

கொழும்பு வெயிலின் தாக்கத்தை கூட்டியது  கல்யாண தரகரின் சில கேள்விகள்! கேள்விக்கொத்தை பிரசுரிக்க முடியுமோ தெரியாது என்பதால் அந்த படத்தைப்போடவில்லை.. ஆனால் கேள்விகளைப் பார்த்த பொழுது இந்த கேள்விகளை பெற்றோர் கேட்கிறார்களா இல்லை மணமக்கள் கேட்கிறார்களா தெரியவில்லை!! அதே போல ஓரிரு கேள்விகளுக்கு உண்மையான பதில்கள் எழுதப்படுமா என்பது சந்தேகமே!!

B0-E0-A3-E7-8061-4-AE8-99-FF-D9244823-FD

ஆனாலும் கொழும்பின் சூட்டை தணித்தது இந்த மண்ணின் குளிர்மை.. கிட்டதட்ட 27/28 வருடங்களாக மனிதர்களின் காலடி படாமல் காடு போல கிடந்த இடத்தை மாற்றிபயனுள்ள தோட்டமாக்கியதைப் பார்த்து ஒரு சந்தோஷம்!!

தொடரும்…

  • Like 17
  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

கிட்டதட்ட இரண்டு வருடங்களின் பின் கொழும்பிற்கு வைகறை பொழுது ஒன்றில் வந்திறங்கிய பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!! முன்னைய பயணங்களைப்போல் இல்லாது, சஞ்சலத்துடனும் பயத்துடனும்

P.S.பிரபா

அரிவிவெட்டுக்கு வன்னேரிக்கு போன பொழுது, அங்குள்ள வன்னேரிக்குளமும் அதன் அருகே ஆள் அரவமற்று இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விடுதி ஒன்றும்!   அங்கே பூவரசைப் பார்த்து ஒரு பரவசம்..சிறுவ

P.S.பிரபா

ஒரு இரவுப்பொழுதில் ஆரியகுளத்திற்கு ஒரு நடை!! யாருமற்ற அந்த இரவு நேரத்தில் மணிக்கூட்டு கோபுரத்தை காவல் செய்யும் இந்த மூன்றுமன்னர்களுடன் ஒரு பொழுது!!! உன்னதமான ஊடக சுதந்திரத்திற்கா

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தொடர்ந்து வருகின்றோம்.....!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்..

அதேவேளை, யம்மா.. எந்த ஊருக்கு போனீங்கள்..? என உத்தேசமாக கோடிட்டு காட்டினால், நாங்களும் அப்பகுதியின் புவி அமைப்பையும் மண்ணின் வளத்தையும் அறிந்துகொள்வோம். 🙂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்  வாசிக்க காத்திருக்கிறோம். சில நாட்கள் உங்கள் களத்துக்கான வரவு தடைப்பட்டிருந்தது.  வெளியூர்  போயிருக்க கூடும் என எண்ணினேன்

Edited by நிலாமதி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

கொழும்பு வெயிலின் தாக்கத்தை கூட்டியது  கல்யாண தரகரின் சில கேள்விகள்! கேள்விக்கொத்தை பிரசுரிக்க முடியுமோ தெரியாது என்பதால் அந்த படத்தைப்போடவில்லை.

என்ன சாதி என்று கேட்கப்பட்டிருக்குமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png
பஸ்தியன் சந்தியில் ஒரு காலைப்பொழுது!!

spacer.png

மாவிட்டபுரத்தில் ஒரு மாலைப்பொழுது!!

spacer.png

தலசிட்டி வைரவர் கோவில் - நந்தி இருக்கவேண்டிய இடத்தில் நாய் இருக்கும் ஒரு கோவில்!!. விலங்குகளை பலி கொடுப்படுதை தடுத்தாலும் பலிக்கொடுப்பதற்காக இருந்த சாதாரனமாக இருந்த கோவில் இன்று 4 பக்க கோபுரங்களுடன் கட்டப்படுகிறது!! 

spacer.png

மயிலிட்டி - மீன்களுடன் படகுகளும் தென்பகுதி மீன் வியாபாரிகளும்

spacer.png

ஊறனி- கடந்து போக முடியாமல் பல கதைகள் கூறும்!!!

தொடரும்…

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ராசவன்னியன் said:

தொடருங்கள்..

அதேவேளை, யம்மா.. எந்த ஊருக்கு போனீங்கள்..? என உத்தேசமாக கோடிட்டு காட்டினால், நாங்களும் அப்பகுதியின் புவி அமைப்பையும் மண்ணின் வளத்தையும் அறிந்துகொள்வோம். 🙂

இந்த ஊர்கள்( மாவிட்டபுரம், மயிலிட்டி, ஊறனி etc) இப்ப கொஞ்ச காலங்களிற்கு முன்புதான் இரானுவத்தால் மக்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டுக்கொண்டு வருகிறது.. இன்னமும் பல பகுதிகள் விடுவிக்கப்படவில்லை அங்கிள். எங்கள் தோட்டத்தை செய்பவரின் காணி கூட பலாலி முகாம் உள்ள பகுதிகளில்தான் உள்ளது..வேதனையான விடயம்!!

நான் இம்முறைதான் இந்தளவு உட்பகுதிகளுக்கு சென்றுள்ளேன்.. சிவந்த மண்.. இந்த மண்ணில் வெறுங்காலுடன் நடப்பது மிகவும் பிடித்த ஒன்று.. ஏனெனில் காலில் ஒட்டிய மண்ணின் நிறம் போக நீண்ட நாட்கள் எடுக்கும்.. 

spacer.png

17 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன சாதி என்று கேட்கப்பட்டிருக்குமே.

சாதி தொடங்கி சமயம், சமூகம், மாதாந்த வருமானம், சொத்து எவ்வளவு?, துணையாக வரவேண்டியவர் இருக்கவேண்டிய பிறந்த திகதி🙄, அசைவம் உண்பவருடன் கூடி வாழ முடியுமா இல்லையா!!!🤦🏽‍♀️கிட்டதட்ட 50ற்கு😵💫😵💫😵💫 மேற்பட்ட கேள்விகள் அங்கிள்!!

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

spacer.png
பஸ்தியன் சந்தியில் ஒரு காலைப்பொழுது!!

கள் கூறும்!!!

தொடரும்…

என்றென்றும் மறக்க முடியாத சந்திகளில் ஒன்று! இந்தச் சந்திக்கு வாய் பேச முடிந்தால், ஒரு பெரும் வரலாற்றையே சொல்லத் தொடங்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

spacer.png

ஒரு இரவுப்பொழுதில் ஆரியகுளத்திற்கு ஒரு நடை!!

spacer.png

யாருமற்ற அந்த இரவு நேரத்தில் மணிக்கூட்டு கோபுரத்தை காவல் செய்யும் இந்த மூன்றுமன்னர்களுடன் ஒரு பொழுது!!!

spacer.png

உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களின் நினைவுதூபியில் தன் கண்களை மூடிவிட்டால் உலகம் இருண்டு விட்டதாக நினைத்து  உறங்கும் பூணை.. 

spacer.png

புதிதாக கட்டப்படும் யாழ்ப்பாணத்திற்கான Town Hall. 

புதிதுபுதிதாக, வித்தியாசமான  வடிவமைப்புக்களுடன் கட்டடங்கள் இருந்தாலும் பழையகட்டடங்களின், வீடுகளின் அழகில் மனதை பறிகொடுத்து சில நிமிடங்கள்! 

spacer.png

spacer.png

தொடரும்…

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது/எழுத்துப்பிழை
  • Like 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2022 at 00:16, நிழலி said:

என்றென்றும் மறக்க முடியாத சந்திகளில் ஒன்று! இந்தச் சந்திக்கு வாய் பேச முடிந்தால், ஒரு பெரும் வரலாற்றையே சொல்லத் தொடங்கும்.

உண்மை!!! 

அதனால்தான் சில இடங்களுக்கு எப்பொழுது போனாலும் போவதுண்டு, கட்டடங்கள் மாறி இருக்கலாம், காலங்களும் போகலாம் ஆனாலும் நடந்தவற்றை மறக்கமுடியாது!!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2022 at 03:49, suvy said:

தொடருங்கள் தொடர்ந்து வருகின்றோம்.....!  👍

மிக்க நன்றி

On 31/1/2022 at 04:23, நிலாமதி said:

தொடருங்கள்  வாசிக்க காத்திருக்கிறோம். சில நாட்கள் உங்கள் களத்துக்கான வரவு தடைப்பட்டிருந்தது.  வெளியூர்  போயிருக்க கூடும் என எண்ணினேன்

மிக்க நன்றி.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.8CE9BCB5-C3AE-4AA1-9C56-1F54802392FE.jpeg.2b452cb04c00c046f049e7e9c515497e.jpeg

அரிவிவெட்டுக்கு வன்னேரிக்கு போன பொழுது, அங்குள்ள வன்னேரிக்குளமும் அதன் அருகே ஆள் அரவமற்று இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விடுதி ஒன்றும்!

large.F84964F5-CFED-4EE9-989B-4A4D1CBE8836.jpeg.84ae0383d6ccbe75a6baf1fc975b99a8.jpeg

8-C3-A4104-5-B9-B-4-C10-8746-084-EAB813-
 
அங்கே பூவரசைப் பார்த்து ஒரு பரவசம்..சிறுவயது ஞாபகங்கள்!!

9-D2-FB14-B-A047-4295-896-A-E9-AAB901014

திரும்பி வரும் வழியில் தனங்கிளப்பில்(?) உள்ள காற்றாலைகளை அருகில் சென்று பார்த்தபொழுது!! 

BE339-CDA-61-FA-4-A34-8-B48-D98181856-F2

5-F9078-CD-908-B-4392-A73-E-EE9-AEE09-F3

எனக்கு எப்பொழுதும் பிடித்த யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வயல்வெளி!! சிறுவயதில்/இளவயதில்  சைக்கிளில் இந்தவழியாக செல்வது வழமை.. 

2-A3-B0-DEB-19-F8-4051-B8-A1-56-B6279-DD

மழையை ரசித்தபடி சில நாட்கள்..

0-FA810-D7-BD6-F-433-D-ACA1-B8191-F08-A3

FE264-CEE-925-E-467-C-A0-BC-08949-BB0-A3

தொடரும்..

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Like 10
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுக்கள் இந்த பயணத்தை யாழ் அகவை 24 இல் சேர்த்துவிடலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களுடன், உங்கள் வர்ணனை மிகச் சிறப்பாக உள்ளது. 👍🏽
தொடருங்கள்… பிரபா சிதம்பரநாதன். 🙂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா நீங்கள் ஊரில் எடுத்த அனைத்து புகைப்படங்களும் பிரமாதம்.

அதிலும் உங்கள் "உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் தன் கண்களை மூடிவிட்டால் உலகம் இருண்டு விட்டதாக நினைத்து உறங்கும் பூனை.. " என்ற தலைப்பில் பதிந்த படமும் வர்ணனையும் எனது மனதுக்கு மிகவும் பிடித்தது.

உங்களின் பல படங்கள் நல்ல தரமிக்கவையாக இருப்பதால் குறித்த படத்தையும் அதன் வர்ணனையும் சர்வதேச புகைப்பட  போட்டிகளுக்கு அனுப்பிவைக்கலாம் என்பது எனது கருத்து.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ...தொடர்ந்தும் எழுதுங்கோ ....இலங்கை விமான நிலையத்தில் ஏதாவது கட்டுப்பாடுகள் உள்ளனவா?.. ஏதாவது புத்தக கடைக்கு போயிருந்தீர்களா?...ஏதாவது புது நூல்கள் வந்திருக்கா ?  
 
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

BC1-DC1-B4-AAFE-4-BAC-9744-BF7-B7573260-

யாழ்ப்பாண ஆஸ்பத்திரியை மேம்படுத்தும் நோக்கில் கட்டப்படும் கட்டடங்களையும் பார்த்துக்கொண்டு மண்டைதீவு வழியால் சென்ற பொழுது மண்டைதீவில் ஆஸ்பத்திரி கட்டும் யாழ் இணைய திரி ஒன்றும் நினைவில் வந்து போனது!!!

large.1CD2D6CF-CBA5-4547-B398-57CD6EDE2421.jpeg.a4bfe9d09bd0a245b6f4efa1ba966118.jpeg

large.31D04713-C8B2-4D75-BC93-EC2CAAA73783.jpeg.0d1a38afe4762db396c2c4aad4cab12d.jpeg

சிறுவயதில் எனது அப்பு அம்மம்மாவுடன் இந்த வெள்ளைக்கடற்கரைக்கும் அதன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கும் ஒரேயொரு தரம் போனது நினைவில் உள்ளது.. அதன்பிறகு இம்முறை தான் போனேன்.. அங்கே போக சந்தர்ப்பங்கள் இருந்தும் இத்தனை காலமும் போனதில்லை, ஆனால் இம்முறை பார்க்க வேண்டும் போல மனதிற்கு தோன்றியது!!!இந்த வெள்ளைகடற்கரை என நான் நினைத்து வைத்திருந்தது சாட்டி என பின்னாளில் அறிந்து கொண்டேன்.

9116-FE4-F-7-FB9-443-A-93-BA-C01-D6-DE90

large.85259DEE-2FD9-47FC-8EF1-701031FB23AB.jpeg.81d8611953a69d187015f6862cff2734.jpeg

எப்பொழுதும் போல நல்லூர் மனதில் தனியான ஒரு இடத்தை பிடித்தது!!

2-A5-FB17-E-5587-47-F3-8-C35-5-C69-A7-DB

அதிகாலையில் பொங்கல் பொங்கிய இடத்தில் மாலையில் மத்தாப்பும் சக்கர வானமும்(?) சிரித்தது!!!

large.EF716DAE-75EF-4676-89F3-DC0E1FB6FB16.jpeg.26005358ad07efb9de67955b322fe093.jpeg

C24-B5-B97-5384-4125-B5-BC-4-DD14580-BA5

பாரதியாரின் காணி நிலம் வேண்டும் கவிதையில் வரும்.. 
பத்து பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - அங்கு கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற்படவேணும்; - என்றன் சித்தம்  மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும்..
வரிகளை நினைக்க வைத்த தென்னங்காணி!!

13-F7-FF6-F-B806-47-D2-A41-D-BD484-C04-B

மீண்டும் கொழும்பில் மொட்டை மாடியில் சூரிய அஸ்தமனத்தை பார்த்த மகிழ்ச்சி..சற்றே திரும்பி தூரத்தே தெரியும் தாமரை மொட்டைப் பார்த்ததும் காணாமல் போய்விட்டது!!

large.531BEE68-BF0A-4A69-A779-A2D141808398.jpeg.a2b1905beaf47e484ecf0bffe4f31387.jpeg

1-BB6-A271-9892-4850-AC1-D-F0-ACA5588-B4

அவுஸ்ரேலியா திரும்பும் பொழுது மனமும் இந்த இரவின் கறுப்பு போல கவலை கொண்டது!!

large.0D094C9A-D634-442D-A74E-DBE8D3AD8105.jpeg.958b6f4f03d3ddb250574614ef7d62ac.jpeg

இங்கே காலை வேளை சுக்கு கோப்பியை குடிக்கும் பொழுது காலஞ்சென்ற என் அம்மா உருவாக்கி விட்டுப் போன கோப்பி மரங்களையும், அவர் போட்டு தந்த கோப்பியையும் என் இலங்கை பயணத்தையும் நினைத்தபடி நிகழ்வுலகிற்கு திரும்பினேன்..!!

முற்றும்..

நன்றி

- பிரபா

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Like 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2022 at 02:38, தமிழ் சிறி said:

அழகான படங்களுடன், உங்கள் வர்ணனை மிகச் சிறப்பாக உள்ளது. 👍🏽
தொடருங்கள்… பிரபா சிதம்பரநாதன். 🙂

நன்றி தமிழ் சிறி அண்ணா! நீங்கள் பூரண சுகமடைந்து வீடு திரும்பியிருப்பீர்கள் என நம்புகிறேன்?

On 4/2/2022 at 06:00, ரதி said:

வணக்கம் ...தொடர்ந்தும் எழுதுங்கோ ....இலங்கை விமான நிலையத்தில் ஏதாவது கட்டுப்பாடுகள் உள்ளனவா?.. ஏதாவது புத்தக கடைக்கு போயிருந்தீர்களா?...ஏதாவது புது நூல்கள் வந்திருக்கா ?  
 
வணக்கம், 

நன்றி. இங்கே வெளியூருக்கு போக தடைகள் எடுத்த ஆரம்பத்தில் போனதால் 48hrsகுள் எடுத்த negative PCR, இலங்கைக்கான health declaration form, onlineல் complete செய்து QR code எடுத்துக்கொண்டு போனேன். பின்பு அங்கிருந்து வரும் பொழுது 48hrsற்குள் எடுத்த negative PCR( யாழ்பாண ஆஸ்பத்திரியில்) எடுத்துக்கொண்டு வந்தேன். Hotel Quarantine அப்பொழுது இருக்கவில்லை. நேரே யாழ்ப்பாணம் போக முடிந்தது.. 

கட்டுநாயக்க விமான நிலையம் நான் போகும் பொழுது சன நடமாட்டம் அதிகளவு இல்லை.. checkingம் இல்லை. இப்பொழுது விதிமுறைகள் மாறிவிட்டதாக கூறினார்கள். முழு விபரம் தெரியவில்லை. 

இம்முறை அப்பாவுடன் சேர்ந்து சில வேலைகள் முடிப்பதே நோக்கமாக இருந்தமையால் அதிகளவு நேரத்தை அவருடனும் அலுவலகங்களிலுமே செலவழிக்கமுடிந்தது.. townற்கு போக கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தமையால் புத்தக கடைப் பக்கம் இம்முறை போகமுடியவில்லை.. அதே போல யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சிக்கும் தயக்கம் காரணமாக போகவில்லை. 

எனது தங்கை கூறினாள், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் ஒரு நல்ல புத்தகக் கடை(வெண்பா நூல்மனைக் கூடம்) உள்ளது என்று..அடுத்த முறை போக இருக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2022 at 04:56, vanangaamudi said:

பிரபா நீங்கள் ஊரில் எடுத்த அனைத்து புகைப்படங்களும் பிரமாதம்.

அதிலும் உங்கள் "உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் தன் கண்களை மூடிவிட்டால் உலகம் இருண்டு விட்டதாக நினைத்து உறங்கும் பூனை.. " என்ற தலைப்பில் பதிந்த படமும் வர்ணனையும் எனது மனதுக்கு மிகவும் பிடித்தது.

உங்களின் பல படங்கள் நல்ல தரமிக்கவையாக இருப்பதால் குறித்த படத்தையும் அதன் வர்ணனையும் சர்வதேச புகைப்பட  போட்டிகளுக்கு அனுப்பிவைக்கலாம் என்பது எனது கருத்து.

மிக்க நன்றி அண்ணா!!

உங்கள் அனைவரதும் ஊக்கமும் ஆதரவும் தான் என்னை இவை போன்ற காட்சிகளை படம் பிடிக்கும் ஆர்வத்தை வளர்க்கிறது. 

யாழ் இணையம் இல்லாவிட்டால் என்னால் இவற்றை செய்திருக்கமுடியாது.. யாழ் இணையத்திற்கும் என்னை ஊக்குவிக்கும் கள உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

On 4/2/2022 at 01:30, ஈழப்பிரியன் said:

மட்டுக்கள் இந்த பயணத்தை யாழ் அகவை 24 இல் சேர்த்துவிடலாமே?

மிக்க நன்றி அங்கிள்!

அதற்கு இன்னமும் நாட்கள் இருக்கிறது என நினைக்கிறேன்..

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி தமிழ் சிறி அண்ணா! நீங்கள் பூரண சுகமடைந்து வீடு திரும்பியிருப்பீர்கள் என நம்புகிறேன்?

இன்னும் இல்லை பிரபா சிதம்பரநாதன்.
அனேகமாக வருகின்ற கிழமை வீட்டிற்குப் போகலாம் என நினைக்கின்றேன்.
ஆனால் தினமும், வைத்தியசாலைக்குச் சென்று… தெரப்பி செய்ய வேண்டி வரும்.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

இன்னும் இல்லை பிரபா சிதம்பரநாதன்.
அனேகமாக வருகின்ற கிழமை வீட்டிற்குப் போகலாம் என நினைக்கின்றேன்.
ஆனால் தினமும், வைத்தியசாலைக்குச் சென்று… தெரப்பி செய்ய வேண்டி வரும்.

நல்லது அண்ணா..

வைத்தியர்களின் வழிகாட்டலில் நீங்கள் பூரண குணமடைவீர்கள் என்பதால் மனதை தளர விடவேண்டாம்.. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி தமிழ் சிறி அண்ணா! நீங்கள் பூரண சுகமடைந்து வீடு திரும்பியிருப்பீர்கள் என நம்புகிறேன்?

வணக்கம், 

நன்றி. இங்கே வெளியூருக்கு போக தடைகள் எடுத்த ஆரம்பத்தில் போனதால் 48hrsகுள் எடுத்த negative PCR, இலங்கைக்கான health declaration form, onlineல் complete செய்து QR code எடுத்துக்கொண்டு போனேன். பின்பு அங்கிருந்து வரும் பொழுது 48hrsற்குள் எடுத்த negative PCR( யாழ்பாண ஆஸ்பத்திரியில்) எடுத்துக்கொண்டு வந்தேன். Hotel Quarantine அப்பொழுது இருக்கவில்லை. நேரே யாழ்ப்பாணம் போக முடிந்தது.. 

கட்டுநாயக்க விமான நிலையம் நான் போகும் பொழுது சன நடமாட்டம் அதிகளவு இல்லை.. checkingம் இல்லை. இப்பொழுது விதிமுறைகள் மாறிவிட்டதாக கூறினார்கள். முழு விபரம் தெரியவில்லை. 

இம்முறை அப்பாவுடன் சேர்ந்து சில வேலைகள் முடிப்பதே நோக்கமாக இருந்தமையால் அதிகளவு நேரத்தை அவருடனும் அலுவலகங்களிலுமே செலவழிக்கமுடிந்தது.. townற்கு போக கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தமையால் புத்தக கடைப் பக்கம் இம்முறை போகமுடியவில்லை.. அதே போல யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சிக்கும் தயக்கம் காரணமாக போகவில்லை. 

எனது தங்கை கூறினாள், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் ஒரு நல்ல புத்தகக் கடை(வெண்பா நூல்மனைக் கூடம்) உள்ளது என்று..அடுத்த முறை போக இருக்கிறேன்!

நன்றி தகவலுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா பயணக் கட்டுரையை படங்களுடன் மிகவும் தெளிவாகவும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் சிறுசிறு விளக்கங்களுடனும் எழுதியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கோஷான் சே சொன்னதால் உங்களது பயண கட்டுரை கண்டேன் nice   கொரோனா கட்டுபாடுகள் எப்போது எடுப்பார்கள் என்று பார்த்திருந்து இலங்கைக்கு பறந்திருக்கிறீர்கள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.