Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'திராவிட மாடல்' ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - மு.க.ஸ்டாலின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உள்ளன என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளிலும் பேரூராட்சிகள், நகராட்சிகளிலும் மாநிலத்தில் ஆளும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இறுதி முடிவுகளை மாநிலம் தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், இதுவரை வந்த முடிவுகளின்படி ஆளும் திமுக கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் திமுகவின் வெற்றி உறுதியாகியிருக்கிறது.

இந்த விலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், பெண்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த தேர்தலை திமுக எதிர்கொண்டது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுகவினர் எவ்வித புகாருக்கும் ஆளாகாமல் மக்கள் பணியாற்ர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கடந்த ஒன்பது மாத கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம் இந்த வெற்றி . திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். எத்தனையோ நல்ல திட்டங்களை வரலாற்று சாதனையாக பதிவாக வகையில் ஆட்சி செய்கிறோம்.

100 விழுக்காடு மக்களுக்கான சேவையை அளிக்க வேண்டுமென்றால் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். அதை நம்பி மக்கள் எங்களுக்கு வெற்றியை தந்துள்ளனர். இந்த வெற்றியைக் கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. மேலும் பொறுப்பு அதிகரித்துள்ளது.

மக்களை சந்தித்துப் பேச நான் என்றுமே தயங்கியதில்லை. கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்துள்ளனர். அதை நிச்சயமாக காப்பாற்றுவோம் என்றார் மு.க. ஸ்டாலின்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: 'திராவிட மாடல்' ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - மு.க. ஸ்டாலின் - தமிழில் செய்திகள் (bbc.com)

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளாட்சித் தேர்தல்களில் ஆட்சியில் இருப்போர் வெல்வது வழக்கம் தானே!

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த 20 ஆண்டுகள் ஸ்டாலின் தான் நிரந்தர முதல்வர் என்று தோன்றுகின்றது. எம்ஜிஆர் தீயசக்தி கருணாநிதிக்கு எதிராக தொடங்கிய கட்சி ஜெயா/ சசி கூட்டணியால் சிதைந்து போய்விட்டிருக்கின்றது. தீயசக்தி கருநாதியியின் மறைவு, எடப்பாடி, பன்னீர் போன்றோரின் ஆளுமையற்ற நிலை அதிமுக வாக்காளர்களைத் திமுக பக்கம் திருப்பி விட்டிருக்கிறது. மக்கள் ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். ஸ்டாலினும் நம்பிக்கையளிக்கின்றார். வாரிசு அரசியலைத் தொடராமல் தமக்குப் பிறகு உதய்ணாவை தவிர்த்து வேறொருவரை ஸ்டாலின் வளர்த்தெடுப்பாரானால் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says "ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் 2 வார்டுகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெர்னாட் வது வார்டில் ஒரு வாக்கு கூட பதிவாகாத நிலையில், 4வது வார்டில் வாக்குகள் மட்டுமே பெற்றார் BBC NEWS தமிழ்"

  • கருத்துக்கள உறவுகள்

image.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த 20 வருடத்தில் தமிழ்நாட்டு தமிழர்கள் குடும்பமாக கூடி குடிப்பவர்கள் ஆக மாறி போயிருப்பார்கள் கேரளா போல்  உதய நிதி உலகின் பத்து பணக்காரர்களில் ஒருத்தராய் இருப்பார் தமிழ்நாட்டு கல்லூரிகளில் தெலுங்கு கட்டாயமாக இருக்கும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி; 21 மாநகராட்சிகளும் வசமானது!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது திமுக கூட்டணி. 21 மாநகராட்சிகளையும் திமுக வசப்படுத்தியிருப்பது கவனத்துக்குரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்றதால் தேர்தல் அறிவிக்கை நாள் முதலே தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. கடந்த 19-ம் தேதி தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டன. காலை 10 மணிக்கே திமுகவின் வெற்றி முகம் தெரியத் தொடங்கியது. பின்னர், இது மகத்தான வெற்றியாக மாறியுள்ளது.

திமுகவின் அமோக வெற்றி: திமுகவுக்கு 65% வரை நகர்ப்புற உள்ளாட்சிகளில் வெற்றி கிட்டும் என்றுதான் அரசியல் விமர்சகர்கள் கூட கணித்தனர். ஆனால், இறுதி நிலவரப்படி நிலவரப்படி கிட்டத்தட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 75%-க்கும் மேலான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளில் அனைத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது.

கடந்த 19 ஆம் தேதி சென்னையில் வாக்களித்துவிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், 21 மாநகராட்சிகளையும் நிச்சயம் திமுக கைப்பற்றும் என்று கூறினார். அதன்படியே வெற்றி கனிந்துள்ளது. வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலம் என அனைத்திலும் அதிமுகவை மாநகராட்சிகளிலும் அப்புறப்படுத்தியுள்ளது திமுக.

16455268262027.jpg

பேரூராட்சிகளும் நகராட்சிகளும் கூட திமுக மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதிமுகவுக்கு அடுத்தாக பாஜக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெற்றியைப் பதிவு செய்திருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

மாநகராட்சியில் கட்சி வாரியாக வெற்றி சதவீதம்:

மொத்தம் 1,374 மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 4 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். ஒரு இடத்தில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இடங்களில், இரவு 7.30 மணி வரை 1355 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், 938 திமுக வேட்பாளர்களும், 164 அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 71 பேரும், பாஜகவைச் சேர்ந்த 22 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 13 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 24 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

16455400823057.jpg

இந்த முடிவுகளின்படி, கட்சி வாரியாக மாநகராட்சி வார்டுகளின் வெற்றி விகிதம்: திமுக - 68.27% சதவீதம், அதிமுக - 11.94 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரஸ் - 5.24%, பாஜக 1.60 சதவீதம், சிபிஐ (எம்) - 1.75%, சிபிஐ - 0.95%.

நகராட்சியில் கட்சி வாரியாக வெற்றி சதவீதம்:

மொத்தம் 3,843 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 18 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். ஒரு இடத்தில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3,842 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், 2,360 திமுக வேட்பாளர்களும், 638 அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 151 பேரும், பாஜகவைச் சேர்ந்த 56 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 19 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 41 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர தேமுதிகவைச் சேர்ந்த 12 வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 3 வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

16455401033057.jpg

இந்த முடிவுகளின்படி, கட்சி வாரியாக நகராட்சி வார்டுகளின் வெற்றி விகிதம்: திமுக - 61.41 சதவீதம், அதிமுக - 16.60 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரஸ் - 3.93%, பாஜக 1.46 சதவீதம், சிபிஐ (எம்) - 1.07%, சிபிஐ - 0.49% மற்றும் தேமுதிக - 0.31%.

பேரூராட்சியில் கட்சி வாரியாக வெற்றி சதவீதம்:

மொத்தம் 7,621 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 196 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். ஒரு இடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் 12 இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, 4 இடங்களில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு 7 மணி வரை 7603 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், 4388 திமுக வேட்பாளர்களும், 1206 அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 368 பேரும், பாஜகவைச் சேர்ந்த 230 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 26 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 101 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர தேமுதிகவைச் சேர்ந்த 23 வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

16455401253057.jpg

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, திமுக வென்ற பேரூராட்சி வார்டுகளின் 57.58 சதவீதமும், அதிமுக 15.82 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரஸ் - 4.83%, பாஜக 3.02 சதவீதமும் ஆக உள்ளன. சிபிஐ (எம்) - 1.33%, சிபிஐ - 0.34% மற்றும் தேமுதிக - 0.30% ஆக உள்ளது.

65% வெற்றி கணிக்கப்பட்ட இடத்தில் 75%-யும் கடந்து க்ளீன் ஸ்வீப் நோக்கி திமுக கூட்டணி செல்வதற்கு என்ன காரணம் என்று அரசியல் நோக்கர்களிடம் கேட்டபோது, 10 ஆண்டுகால இடைவெளியை முதல் காரணமாகப் பட்டியலிடுகின்றனர். 10 ஆண்டுகளாக நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் பொதுமக்கள் எதற்கெடுத்தாலும் அதிகாரிகளையும் எம்எல்ஏ, எம்பிக்களையும் நமபி இருக்கும் சூழல் உருவானது. சில நேரங்களில் சிறிய பிரச்சினையை பெரிய இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல் குழம்பி தவித்துள்ளனர். 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதலேயே இந்த நிலை என்று கூறுகின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகளோ ஆட்சி அதிகாரம், பண பலம், பல இடங்களில் கள்ள ஓட்டு, மிரட்டல் என அச்சுறுத்தி திமுக கல்லா கட்டியிருக்கிறது எனக் கூறுகின்றன.

16455275693057.jpg

பாஜகவின் வெற்றிக் கணக்கு; அதிமுகவின் தப்புக் கணக்கு! - இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெற்றுள்ள கணிசமான வெற்றி கவனம் பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்ததாகக் கருதி இந்தமுறை பாஜகவை கூட்டணியில் சேர்க்காத அதிமுக தப்புக் கணக்குப் போட்டுவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். வேலூரில் இஸ்லாமியர்கள் நிறைந்த மாநகராட்சி வார்டில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதை பாஜக தன் மீதான அடையாளத்தை மாற்றும் வெற்றியாகக் கருதுகிறது.

16455285802027.jpg வேலூர் மாநகராட்சி 17வது வார்டில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் சுமதி

தமிழக பாஜக தலைவர், ஒவ்வொரு வீட்டிற்கும் பாஜகவை கொண்டு சேர்ப்போம் என்று அறிவித்து மேற்கொண்ட பிரச்சாரம் பலனளித்துள்ளது. அதனாலேயே 21 மாநகராட்சிகளில் மதுரை, கரூர், திருப்பூர், சிவகாசி, நாகர்கோவில், திருச்சி, தூத்துக்குடி என பல மாநகராட்சிகளிலும் கணிசமான வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது எனக் கூறுகின்றனர். அதிமுக அதிருப்தி வாக்குகள் பாஜகவுக்கு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பாமக பதிவு செய்த வெற்றி 120+

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிகளில் 4 வார்டுகளிலும், நகராட்சிகளில் 48 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 73 வார்டுகளிலும் பாமக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆக, 125 வார்டுகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரையில் காஞ்சிபுரத்தில் 2 வார்டுகளிலும், கடலூர், கிருஷ்ணகிரி மற்றும் வேலூரில் தலா ஒரு வார்டிலும் வென்றுள்ளது.

நகராட்சிகளைப் பொறுத்தவரையில், சேலத்தில் 12 வார்டுகளிலும், ராணிப்பேட்டையில் 8 வார்டுகளிலும், கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தலா 5 வார்டுகளிலும், அரியலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறையில் தலா 4 வார்டுகளிலும், ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர், திருவள்ளூர், தேனியில் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

பேரூராட்சிகளை எடுத்துக்கொண்டால், சேலத்தில் 15 வார்டுகளிலும், தர்மபுரி 11 வார்டுகளிலும், தஞ்சை, திருவண்ணாமலையில் தலா 6 இடங்களிலும், செங்கல்பட்டு, வேலூரில் தலா 5 இடங்களிலும், ஈரோடு, ராணிப்பேட்டையில் தலா 4 இடங்களிலும், கடலூரில் 3 இடங்களிலும், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், மயிலாடுதுறையில் தலா 2 இடங்களிலும், அரியலூர், விழுப்புரம், நாமக்கல்லில் தலா ஒரு வார்டையும் பாமக கைப்பற்றியது.

மங்கிய டார்ச் லைட்: மக்கள் நீதி மய்யம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சற்றும் சோபிக்கவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் வானதி சீனிவாசனுக்கு டஃப் ஃபைட் கொடுத்தார் கமல்ஹாசன். நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் எடுபடும் என்பதே இதுவரை அதன் மீதான பார்வையாக இருந்தது. ஆனால் இந்த முறை மநீம அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. இதற்கு ஆளும் கட்சி காட்டிய பிரம்மாண்டம் மிக முக்கியக் காரணம் எனக் கூறுகின்றனர் அக்கட்சியினர். தங்களால் வாக்குறுதிகளுடன் மட்டுமே மக்களை அணுக முடிந்த நிலையில் ஆளும், ஆண்ட கட்சிகள் அதிகாரம், பணபலத்துடன் அணுகின என்று அங்கலாய்த்துக் கொள்கின்றனர் அக்கட்சியினர்.

16455275823057.jpg

அரங்கேறக் காத்திருக்கும் அரசியல்: வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களைக் கொண்டு மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகர்மன்றங்களுக்கான தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்கள். இதில் தான் அத்தனை அரசியல் கூத்துகளும் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, மாநகராட்சி தேர்தலில் மேயர், துணை மேயர் மறைமுகத் தேர்தலில் அமைச்சர்களுக்குள் போட்டாபோட்டி உருவாகும் எனக் கணிக்கப்படுகிறது. குறிப்பிட்டு உதாரணம் சொல்ல வேண்டுமானால், திருச்சி மாநகராட்சியை எடுத்துக் கொள்ளலாம். திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள். இதில் 46 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜகவும் கணிசமான வாக்குகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கை காட்டுபவரா அல்லது அமைச்சர் கே.என்.நேரு கைகாட்டுபவரா யார் மேயர் ஆவார்கள் என்ற போட்டாபோட்டி இப்போதே நிலவுகிறது.

இதையெல்லாம் மனதில் வைத்தே வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே திமுக தலைவர் ஸ்டாலின் "தேர்தல் முறை, மறைமுகமாக இருந்தாலும், நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க. தலைமையால் அறிவிக்கப்படுகிறவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, முழுமையான அளவில் வெற்றி பெறச் செய்ய வேண்டியதும் தி.மு.க. நிர்வாகிகளின் கடமை. தோழமைக் கட்சிகளுக்கு கண்ணியமான அளவில் ஒதுக்கப்படும் பதவிகளுக்கும் கட்டுப்பாடான முறையில் ஆதரவளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டியதும் தி.மு.க.வினரின் பொறுப்பு. அதில் எள்முனையளவுகூட பாதிப்பு இருக்கக்கூடாது " என்று வலியுறுத்தி தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார் என்று கூறப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி; 21 மாநகராட்சிகளும் வசமானது! | Urban Local Bodies Election: DMK bags a mega victory - hindutamil.in

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, zuma said:

May be an image of 1 person and text that says "ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் 2 வார்டுகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெர்னாட் வது வார்டில் ஒரு வாக்கு கூட பதிவாகாத நிலையில், 4வது வார்டில் வாக்குகள் மட்டுமே பெற்றார் BBC NEWS தமிழ்"

வணக்கம் ஐயா!
உங்களிடம் ஒரு கேள்வி?

சீமானை விடுவோம். சீமானின் ஒரு சில அரசியல் பேச்சுக்கள் எனக்கு சரியாக தெரிவதில்லை.இது  போல் என்னைப் போன்ற ஈழ ஆதரவாளர்களுக்கும் உண்டு.

 நீதியாக நேர்மையாக ஈழத்தில் நடந்த விடுதலைபோராட்டத்தையே அழித்த இந்த உலகில் இருக்கும் நீங்கள் சீமானிடம் எதிர்பார்ப்பது என்ன?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, பிழம்பு said:

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உள்ளன என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

காசு கொடுத்து வாங்கின அங்கீகராம் என்றால் மிகையாகாது.😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'நாங்கள் திராவிடக் கூட்டம் We Belong to Dravidian Stock'

தமிழர்களிடம் பிச்சை எடுக்கும்... திராவிட ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்..!

 

-----------------------------
நாங்கள் திராவிடக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் !
We belongs to Dravidian Stock !
இது திராவிட மாடலுக்குக் கிடைத்த வெற்றி !
- இப்படி தேர்தல்களில் வெற்றி பெற்றபின்பு திமுக தலைவர்கள் கூறிக் கொள்வதை கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு கேட்க முடிகிறது.
ஆனால் தேர்தலுக்கு முன்பு, பரப்புரைகளின் போது இதே வசனங்களைத் தப்பித் தவறிக்கூட பயன்படுத்துவதில்லை.
தமிழ், தமிழர்களே என்றுதான் உச்சரிக்கின்றனர்.
"திராவிடர்களே உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் இட்டுப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் " என்று வாக்கு சேகரிப்பதில்லை.
அதாவது வாக்கு வாங்கும்வரை தமிழ், தமிழர்கள்.... வெற்றி பெற்றவுடன் திராவிட மாடலாகிவிடும்.
இது திமுகவின் வழக்கம் மட்டுமல்ல மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் போன்றவர்களின் வழக்கமாகவும் இருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மதுரையில் தமிழ்த்தாய் சிலைக்கு மாலை அணிவித்த சு.வெ, வெற்றி பெற்று எம்.பி ஆனவுடனே "திராவிடம் வெல்க" என்றார். நாடாளுமன்றத்தினுள் திராவிடம் வெல்க என்று பதிய வைத்தார். தப்பித் தவறிக்கூட தமிழர்கள் வெல்க என்று கூறவில்லை.
திராவிடம் என்பது மொழி, இனம், உணர்வு என்று மாற்றி மாற்றி விளக்கம் கொடுக்கும் இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றபின்பு தங்களைத் திராவிடர்கள் என்று உறுதியாகக் கூறிக் கொள்வதேன்?
எந்த Lab ல் வைத்து சான்றிதழ் பெற்றார்கள் என்று தமிழ்த் தேசியர்கள் கேட்கும் கேள்வி உண்மையில் நியாயமானது.
யார் தமிழர் என்று எந்த Lab ல் வைத்துக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்பவர்கள்தான் தங்களை திராவிடக் கூட்டத்தினர் என்று கூறிக் கொள்கின்றனர்.
சரி... இது சனாதன - ஆரிய - பாஜகவுக்கு எதிரான திராவிடக் கூட்டமா? என்பதுதான் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
எச்.ராஜா முதன் முதலாக எம் எல் ஏ ஆனது இதே திராவிடக் கூட்டம், திராவிட மாடல் ஆட்சியில்தான்.
கோட்சே ஆதரவாளர் உமா ஆனந்த் வெற்றி பெறுவது இதே திராவிடக் கூட்டம், திராவிட மாடல் ஆட்சியில்தான்.
வானதி ஸ்ரீனிவாசனுக்கு எதிராக திமுக களம் காணாமல் காங்கிரஸ் வேட்பாளரை இறக்கிவிட்டு வானதி வெல்வதற்குக் காரணமும் இதே திராவிடக் கூட்டமும், திராவிட மாடலும்தான்.
இன்று உள்ளாட்சித் தேர்தலில் தனிப்பட்ட செல்வாக்குகள் தவிர பாஜக பெற்ற வெற்றிகள் திராவிடக் கூட்டத்தின், திராவிட மாடலின் ஆட்சியில்தான் நடந்தேறியிருக்கிறது.
பாஜக அடிமை ஆட்சி என்று வர்ணிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்கூட பாஜகவுக்கு இத்தனை வெற்றி கிடைக்கவில்லை.
சனாதன - பாஜகவின் வீடு தேடி கல்வித் திட்டத்தை ஒரே நாளில் தொடங்கியதும் இதே திராவிடக் கூட்டம் - திராவிட மாடல் ஆட்சியில்தான்.
39 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தனிப்பெரும்பான்மை சட்டமன்றம் இருந்தும் நீட் தேர்வை வாக்குறுதி கொடுத்ததுபோல ரத்து செய்யாமல் நீட் தேர்வை வழக்கமாக்கியதும் இதே திராவிடக் கூட்டம் - திராவிட மாடல் ஆட்சியில்தான்.
தேர்தலுக்கு முன்பு கோ பேக் மோடி.
வெற்றி பெற்றபின்பு வெல்கம் மோடி என்றதும் இதே திராவிடக் கூட்டத்தின் - திராவிட மாடலின் ஆட்சியில்தான்.
ஆக இது ஆரியத்துக்கு எதிரான திராவிட மா? எனும் கேள்விக்கு இதை வாசிக்கும் அறிவார்ந்தவர்கள் பதில் கூறிக் கொள்ளுங்கள்.
இந்த எமது விமர்சனம் கருத்தியல் ரீதியான, கொள்கை மற்றும் நடைமுறை முரண்பாடுகளை சுட்டிக்காட்டும் விமர்சனம் மட்டுமே.
அதேவேளை, நீண்ட நெடுங்காலமாக திமுக எனும் பெரிய அரசியல் கட்சியில் செயலாற்றித் தான் தலைவராகப் பொறுப்பேற்ற பின்பு நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் பெருவெற்றி பெற்றுள்ள மதிப்பிற்குரிய மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கருத்து முரண்களைக் கடந்தும் வாழ்த்துகள்
.
தமிழர்கள் நன்றியுணர்வுடையவர்கள் என்பதற்கு இந்த வெற்றிகள் உண்மையில் சான்றுகள்.
தமிழர்கள் வாக்குகளின்றி தனித்து திராவிடர் வாக்குகளை மட்டுமே பெற்ற வெற்றி அல்ல இது என்பதையே திராவிடக் கூட்டம், திராவிட மாடல் என்று தேர்தல் முடிந்தபின்பு கூறிக் கொள்வது உணர்த்துகிறது.
இவ்வாறு கூறிக்கொள்வதன் பின்னணியில் தமிழ்த் தேசிய எழுச்சி தரும் அழுத்தம் மிக முக்கியக் காரணமாக உள்ளதை அறிவார்ந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.
தமிழ்த் தேசிய எழுச்சி என்பது நாம் தமிழர் கட்சி, ஒவ்வொரு தேர்தல்களிலும் அவர்கள் பெறும் வெற்றி தோல்வியில் இல்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
எழுதியவர்-
வளர்மெய்யறிவான்
(எ) விஷ்வா விஸ்வநாத்.
பத்திரிகையாளர்
23/2/22

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.