Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது டிவிட்டர் இணைப்பு என்பதால் ஒரு சில வீரகேசரி ஜாம்பவான்கள் நம்ப மாட்டார்கள்.
இருந்தாலும் உண்மையான நிதர்சனமான நண்பர்களுக்காகவே இதை இணைக்கின்றேன்.

இப்படிக்கு மீம்ஸ் மன்னன்
குமாரசாமி

“It was I who suggested bombing Belgrade. It was I who suggested sending American pilots and blowing up all the bridges on the Danube. Joe Biden. crime call. 1999

  • Replies 477
  • Views 30.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேட் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ குண்டுத்தாக்குதல் நடத்தியதற்கும் நான் மேலே இணைத்த கீச்சகப் பதிவிற்கும் இடையே முக்கியமான தொடர்பொன்று இருக்கிறது. முடிந்தவர்கள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் ஏதும் கூறலாம். அவலம் அவரவரை அண்மிக்கும்போது அதன் வலி புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

யாரும் ஏதும் கூறலாம். அவலம் அவரவரை அண்மிக்கும்போது அதன் வலி புரியும். 

அதைத்தான் நம்ம  மொழியில்  சொன்னால்

சிலருக்கு  அந்தந்த  பாசையால்  தான் புரிதல்  வரும்???

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களை தடை செய்யும் நாடுகள் ஜனநாயக நாடுகள் என தங்களை அழைக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேட் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ குண்டுத்தாக்குதல் நடத்தியதற்கும் நான் மேலே இணைத்த கீச்சகப் பதிவிற்கும் இடையே முக்கியமான தொடர்பொன்று இருக்கிறது. முடிந்தவர்கள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

இதை மட்டுமே பார்ப்பீர்களா அல்லது இதற்கு முற்பட்ட காலத்தையும் பார்ப்பீர்களா ? 

சேர்பியா செய்தது முற்றிலும் தவறு.அந்த இன அழிப்பை யாரும் நியாயப்படுத்தவில்லை.
அந்த இன அழிப்பு நடந்தது பொஸ்னியாவில்......பொஸ்னிய முஸ்லீம்களுக்காக சவூதி படைகள் உதவி செய்தன. பொஸ்னியர்களும் சேர்பியர்களை  பாவ புண்ணியம் பாராமல் அறுத்தெறிந்தார்கள்.

நிற்க.....

சண்டைகள் நடந்தது பொஸ்னியாவில். தார்மீக சனநாயகவாதி குண்டுகளை வீசச்சொன்னது எங்கோ இருக்கும் பெல்கிரேட்டில்.......

அமெரிக்கா    ஈராக்,ஆப்கானிஸ்தான் நாடுகளில் குண்டு வீசி மக்களை அழித்ததற்காக லாஸ் ஏஞ்சல் பாலத்தின் மீது குண்டு வீசலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

இந்த NATO குண்டுவீச்சில் சீனத் தூதரகமும் இலக்கு வைக்கப்பட்டது. பல சீன தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டார்கள்.

சீனத் தூதரகம் தாக்கப்பட்டது ஏன்? 

tactical error / mistake ஆக இருக்குமோ..

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேட் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ குண்டுத்தாக்குதல் நடத்தியதற்கும் நான் மேலே இணைத்த கீச்சகப் பதிவிற்கும் இடையே முக்கியமான தொடர்பொன்று இருக்கிறது. முடிந்தவர்கள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

2009 ஐ மறக்க முடியுமா.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

ஊடகங்களை தடை செய்யும் நாடுகள் ஜனநாயக நாடுகள் என தங்களை அழைக்கலாமா?

ரஸ்யாவில் இருந்து சிஎன் என் செய்தியாளர் செய்திகளை திரட்டி அனுப்புகிறார். மேற்கு நாடுகள் ரஸ்ய ஊடகங்களை தடை செய்துள்ளன. யார் ஜனநாயக நாடு என்பதில் குழப்பம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

ரஸ்யாவில் இருந்து சிஎன் என் செய்தியாளர் செய்திகளை திரட்டி அனுப்புகிறார். மேற்கு நாடுகள் ரஸ்ய ஊடகங்களை தடை செய்துள்ளன. யார் ஜனநாயக நாடு என்பதில் குழப்பம் உண்டு.

இதில் குழப்பம் எதுவும் இல்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அடுத்தது ரஸ்யா. இதில் சைனாவுக்கு இடமில்லை 👀

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாலி said:

இதில் குழப்பம் எதுவும் இல்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அடுத்தது ரஸ்யா. இதில் சைனாவுக்கு இடமில்லை 👀

அமெரிக்கா எது செய்தாலும் ஒகேயாக்கும்.+*****

நாட்டின் இடப்பரப்பை அல்ல மக்கள் தொகையை வைத்து தான் சனநாயக ஏறுவரிசை கணிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

அமெரிக்கா எது செய்தாலும் ஒகேயாக்கும்.+*****

இல்லை அமெரிக்கா ஒரு பயங்கரவாத நாடு. அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ இருந்து நீங்கள் அந்த நாடுகளுக்கு எதிராக இப்படி எழுத முடியாது உடனே விசாரணை தான்.🤪

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாலி said:

இல்லை அமெரிக்கா ஒரு பயங்கரவாத நாடு. அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ இருந்து நீங்கள் அந்த நாடுகளுக்கு எதிராக இப்படி எழுத முடியாது உடனே விசாரணை தான்.🤪

ஜோவுக்கு தமிழ் தெரியாது என்ற துணிவு தான்.
 
😄

ரூடோவுக்கு பயந்து தான் உண்மையை எழுத பயப்படுகிறீர்களோ என்ற சந்தேகம் இருக்கு.🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாலி said:

இல்லை அமெரிக்கா ஒரு பயங்கரவாத நாடு. அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ இருந்து நீங்கள் அந்த நாடுகளுக்கு எதிராக இப்படி எழுத முடியாது உடனே விசாரணை தான்.🤪

இல்லை. எழுதலாம். ஆனால் எல்லாம் ஒரு அளவுக்கு மேல் அல்ல. இல்லாவிட்டால் உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும். வேறுவிதமாக. 

ஒரு தொலைபேசி அழைப்பு இன்ன இடத்திலிருந்து கதைக்கிறேன் என்றும் வேறு நபரைத் தேடுவதாகவும் தவறான அழைப்பிற்கு வருந்துகிறேன் என்றும் கூறுவார்கள். 

அம்புட்டுதே.

எனது நண்பர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும். அதில் எனது தொலைபேசியும் மாட்டுப்பட்டது. அவ்வாறான நண்பன் ஒருவனை போதைப்பொருளுக்கு அடிமையாக்க முயற்சித்ததும் எனக்குத் தெரியும். தற்போது அது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. 

மேற்குலகை 100% சனநாயக நாடுகள் என்று நம்பினால் அதைப் போன்றதொரு முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை. 

நேற்று (RT) Russia Today ஐ தைடை செய்துவிட்டனர். நாளை Sputniknews ஐயும் தடை செய்வார்கள். 

எதைக் கண்டு பயப்படுகிறார்கள் ?  

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சேர்பியா செய்தது முற்றிலும் தவறு.அந்த இன அழிப்பை யாரும் நியாயப்படுத்தவில்லை.
அந்த இன அழிப்பு நடந்தது பொஸ்னியாவில்......பொஸ்னிய முஸ்லீம்களுக்காக சவூதி படைகள் உதவி செய்தன. பொஸ்னியர்களும் சேர்பியர்களை  பாவ புண்ணியம் பாராமல் அறுத்தெறிந்தார்கள்.

நிற்க.....

சண்டைகள் நடந்தது பொஸ்னியாவில். தார்மீக சனநாயகவாதி குண்டுகளை வீசச்சொன்னது எங்கோ இருக்கும் பெல்கிரேட்டில்.......

அமெரிக்கா    ஈராக்,ஆப்கானிஸ்தான் நாடுகளில் குண்டு வீசி மக்களை அழித்ததற்காக லாஸ் ஏஞ்சல் பாலத்தின் மீது குண்டு வீசலாமா?

எமக்கெதிரான யுத்தம் நடந்தது வடக்குக் கிழக்கில். ஆனால், தெகிவளை, மத்தியவங்கி, கொலன்னாவை, கட்டுநாயக்கா என்று எதிரியின் இலக்குகள் இருந்ததோ அவனது தலைநகரில். 

இத்தாக்குதல்களை நாம் நியாயப்படுத்தியிருந்தோம், பல காரணங்களுக்காக. 

பதில்த் தாக்குகள் எதிரியின் இதயத்தில் நடத்தப்படுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. பொஸ்னியா மீதான சேர்பியர்களின் இனவழிப்பைத் தடுக்க சேர்பியாவின் தலைநகர் தாக்கப்பட்டதில் தவறில்லை, எமது நியாயப்படுத்தல்களின் படி. ஏனென்றால், பெல்கிரேட் மீதான தாக்குதல்களின் பின்னரே சேர்பியா வழிக்கு வந்தது.

3 hours ago, ஈழப்பிரியன் said:

2009 ஐ மறக்க முடியுமா.

அதனை மறக்கமுடியாததினால்த்தான் அப்படியொன்று உக்ரேனில் நடந்துவிடக் கூடாதென்று யாசிக்கிறோம். ஏனென்றால் இனவழிப்பென்பது எவ்வளவு கொடூரமானதென்பதை எம்மைத்தவிர வேறு எவராலும் அதிகமாகப் புரிந்துகொள்ள இயலாது.

4 hours ago, Kapithan said:

இதை மட்டுமே பார்ப்பீர்களா அல்லது இதற்கு முற்பட்ட காலத்தையும் பார்ப்பீர்களா ? 

ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து பார்க்கிறோம், போதுமா?

7 hours ago, விசுகு said:

அதைத்தான் நம்ம  மொழியில்  சொன்னால்

சிலருக்கு  அந்தந்த  பாசையால்  தான் புரிதல்  வரும்???

அப்படி எமக்குப் புரியும் பாசையால்த்தான் 2009 இல் எமக்குப் பாடம் கற்பிக்கப்பட்டதென்றால் ஏற்றுக்கொள்வீர்களா?

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, ரஞ்சித் said:

எமக்கெதிரான யுத்தம் நடந்தது வடக்குக் கிழக்கில். ஆனால், தெகிவளை, மத்தியவங்கி, கொலன்னாவை, கட்டுநாயக்கா என்று எதிரியின் இலக்குகள் இருந்ததோ அவனது தலைநகரில். 

இன்று பொஸ்னியா ஒரு தனி நாடு. ஏதாவது விவரம் தெரியுதா?
தெரியாட்டி இருக்கும் விவரங்களில் இன்னுமொரு மொக்கை அமெரிக்கன் நியாயத்தையும் சொல்லுறன்.

ரைம் இருக்கா சார்? :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, ரஞ்சித் said:

இனவழிப்பைத் தடுக்க சேர்பியாவின் தலைநகர் தாக்கப்பட்டதில் தவறில்லை, எமது நியாயப்படுத்தல்களின் படி. ஏனென்றால், பெல்கிரேட் மீதான தாக்குதல்களின் பின்னரே சேர்பியா வழிக்கு வந்தது.

இதைத்தான் ரஷ்யாவும் காத்திருந்து தருணம் வரும் போது செய்கின்றது.
ரஷ்யாவின் சகோதரம் செர்பியா. இன மதத்தால் ஒருங்கிணைந்தவர்கள். வெறிக்குட்டி ஜெல்சின் இருந்த போது எல்லாவற்றையும் சாதித்தவர்களுக்கு புட்டின் கொஞ்சம் கஷ்டகாலம் தான்.....

Boris Yeltsin Drunk Dance GIF - Boris Yeltsin Drunk Dance - Discover &  Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி ஒரு முடிவுக்கும் வரப்போவதில்லை. உக்ரைன் மக்கள் அடி வாங்குவதில் எங்களுக்கு அப்பிடி என்ன இன்பமோ தெரியவில்லை. வெறும் பழிவாங்கும் உணர்வு. மேற்கு நாடுகள் மறவர்களுக்கு அடித்தது போல் ரஷ்யாவுக்கு ஒரு சான்ஸ் கொடுங்கள் என்று கேட்பது மாதிரி இருக்கு. இவர்கள் ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா, அல்லது சீனா போன்ற முக்கியமான நாடுகளாயிருந்து, அடிவாங்கினாலாவது, சார்பு, எதிர் நிலையை பொறுத்து  எங்களை போன்றவர்களுக்கு ஏதாவது கிடைக்கலாம், பிற நாட்டு விடயங்களில் தலையிடாமலாவது  இருப்பார்கள்.  உக்கிரைன் முக்கியமான நாடு கிடையாது , அங்கிருப்பவர்களுக்கு எங்களுக்கு அடித்ததுகூட தெரிந்திராது. அப்பிடி தெரியப்படுத்தியும் இவர்கள் என்ன செய்வது? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, நீர்வேலியான் said:

வணக்கம் நீர்வேலியான்! சண்டையும் பஞ்சமும் அழிவும் வேண்டாம் என்றால் ஏன்  உக்ரேனுக்கு ஆயுதம் கொடுக்கின்றீர்கள்??
எதிர் தாக்குதல் செய்தால் எதிரியும் அழிப்பான் அல்லவா?

இரண்டாம் உலக யுத்தத்தில் பிரான்ஸ் நாடு செய்த தந்திரம் உங்களுக்கு தெரியுமென நினைக்கின்றேன். அழிவுகள் இல்லாமல் போரில் வென்று நின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து பார்க்கிறோம், போதுமா?

அப்பிடித் தெரியவில்லையே..🧐

உங்கள் எழுத்தைப் பார்த்தால் intervalக்குப் பின்ன படம் பார்க்க வந்த  ஆள் மாதிரியெல்லோ இருக்கிறது. 

அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல்..☹️

16 minutes ago, நீர்வேலியான் said:

இந்த திரி ஒரு முடிவுக்கும் வரப்போவதில்லை. உக்ரைன் மக்கள் அடி வாங்குவதில் எங்களுக்கு அப்பிடி என்ன இன்பமோ தெரியவில்லை. வெறும் பழிவாங்கும் உணர்வு. மேற்கு நாடுகள் மறவர்களுக்கு அடித்தது போல் ரஷ்யாவுக்கு ஒரு சான்ஸ் கொடுங்கள் என்று கேட்பது மாதிரி இருக்கு. இவர்கள் ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா, அல்லது சீனா போன்ற முக்கியமான நாடுகளாயிருந்து, அடிவாங்கினாலாவது, சார்பு, எதிர் நிலையை பொறுத்து  எங்களை போன்றவர்களுக்கு ஏதாவது கிடைக்கலாம், பிற நாட்டு விடயங்களில் தலையிடாமலாவது  இருப்பார்கள்.  உக்கிரைன் முக்கியமான நாடு கிடையாது , அங்கிருப்பவர்களுக்கு எங்களுக்கு அடித்ததுகூட தெரிந்திராது. அப்பிடி தெரியப்படுத்தியும் இவர்கள் என்ன செய்வது? 

அட திரும்பவும்  முதலில் இருந்தா...😆

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

அப்படி எமக்குப் புரியும் பாசையால்த்தான் 2009 இல் எமக்குப் பாடம் கற்பிக்கப்பட்டதென்றால் ஏற்றுக்கொள்வீர்களா?

ஆட்டுக்குள் மாட்டைக்கொண்டு வராதீர்கள் சகோ.

நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை எதிர்பார்த்து பதிவிடாதீர்கள்?

அதேபோல் எல்லாவற்றையும் ஈழப்போராட்டத்துடன் முடிச்சு போடாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாலி said:

இல்லை அமெரிக்கா ஒரு பயங்கரவாத நாடு. அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ இருந்து நீங்கள் அந்த நாடுகளுக்கு எதிராக இப்படி எழுத முடியாது உடனே விசாரணை தான்.🤪

ஒத்துக்கொண்டதற்கு நன்றி.😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

இந்த திரி ஒரு முடிவுக்கும் வரப்போவதில்லை. உக்ரைன் மக்கள் அடி வாங்குவதில் எங்களுக்கு அப்பிடி என்ன இன்பமோ தெரியவில்லை. வெறும் பழிவாங்கும் உணர்வு. மேற்கு நாடுகள் மறவர்களுக்கு அடித்தது போல் ரஷ்யாவுக்கு ஒரு சான்ஸ் கொடுங்கள் என்று கேட்பது மாதிரி இருக்கு. இவர்கள் ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா, அல்லது சீனா போன்ற முக்கியமான நாடுகளாயிருந்து, அடிவாங்கினாலாவது, சார்பு, எதிர் நிலையை பொறுத்து  எங்களை போன்றவர்களுக்கு ஏதாவது கிடைக்கலாம், பிற நாட்டு விடயங்களில் தலையிடாமலாவது  இருப்பார்கள்.  உக்கிரைன் முக்கியமான நாடு கிடையாது , அங்கிருப்பவர்களுக்கு எங்களுக்கு அடித்ததுகூட தெரிந்திராது. அப்பிடி தெரியப்படுத்தியும் இவர்கள் என்ன செய்வது? 

உண்மையை சொல்லுங்கள்

உக்ரைன் மக்கள் பங்கருக்குள் இருந்து அழும் காட்சியை பார்த்தபோது உங்கள் கண்ணுக்குள் வந்த முதலாவது காட்சி என்ன???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.