Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவாகரத்தின் போது சுயநலமிகளாக, வெறுப்பாளர்களாக மாறும் பெண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

 

AVvXsEjG7h4OJmoAsc8VRVzSvLEHtViPBoaEntHmb_m-FRLPXgY6mIjLqSSskbFO0ctvMNunzMpK2P9-2LADOT__WGtw8A3KHL1z8xW14erVCPYWzW-p1bIbUNtfiJqnDjFL1CVTmdANjy2jaTiITYajwpGXHXDmvZ5zN6uG4rTS5JUqo2VYkWtvSGMJ1UvrnQ=w400-h225
 

 

என் நண்பரின் அண்ணனுக்கு நடந்தது இது. அவர் மத்தியஅரசுத்துறை ஒன்றில் உயரதிகாரி. அவருக்கு ஒரே பெண்குழந்தை. மனைவி அவரை விட்டுப் பிரிவதாக முடிவெடுத்தார். முதல் வேலையாக தன் மகளை அவளது அப்பாவிடம் இருந்துபிரித்து விட்டார். அடுத்து மனைவி 'குடும்பநல' நீதிமன்றத்துக்குவிவாகரத்தைக் கோரி சென்றார். அங்கே கொடுக்கப்பட்டசித்திரவதை, அலைகழிப்பு, அவமானங்கள், நெருக்கடிகள்பொறுக்காமல் மனிதர் குடிகாரர் ஆகி விட்டார். அதுமட்டுமில்லை - ஒரு சமரசத்தின் விளைவாக ஒரு விடுமுறையின்போது குழந்தையை கணவரிடம் அனுப்பினார் மனைவி. அங்குகணவரின் குடும்பத்தார் அக்குழந்தையை நன்றாகவே பார்த்துக்கொண்டார்கள். ஆனால் ஒருநாள் குழந்தையை திரும்பஅழைத்த மனைவியின் தரப்பினர் அவள் பாலியல்தாக்குதலுக்கு உள்ளானதாக மொத்த குடும்பத்தின் மீதுபொய்க்குற்றச்சாட்டு ஒன்றை காவல் நிலையத்தில் பதிவுசெய்தார். அடுத்து மனைவி தரப்பு வக்கீல் "சுமூகமாக பேசிமுடித்துக் கொள்ளலாம். நாங்கள் வழக்கை பின்வாங்குகிறோம். ஆனால் ஒரு நிபந்தனை" என்றார். நிபந்தனை இது தான் - குழந்தையை இனி அவர் தன் வாழ்க்கையில் ஒருதடவை கூடப்பார்க்க முயலக் கூடாது. அவர் வேறுவழியின்றி ஒத்துக்கொண்டார். குழந்தையை தன்னிடம் அனுப்பியதே சதித்திட்டம்ஒன்றின் பகுதி என அவருக்கு தாமதமாகவே புரிந்தது. இப்போதுமுன்னாள் மனைவி குழந்தையை அழைத்துக் கொண்டுஅமெரிக்காவுக்கு சென்று விட்டார். இனி அவர் தன் வாழ்நாளில்தன் குழந்தையை பார்க்க முடியாது.

 

ஒரு நண்பருக்கு ஊனமுற்ற குழந்தை பிறந்தது. அதில் இருந்தேஅவரது மனைவிக்கு ஒரு குற்றவுணர்வு. இது போன்றசந்தர்பங்களில் சில பெண்கள் தமது குற்றவுணர்வை அதீதமானபாசமாக, அக்கறையாக மாற்றிக் கொள்வார்கள். வேறு சிலபெண்களோ பழியை கணவன் மீதுப் போட்டு அவரைவெறுப்பார்கள். பிரிவை நாடுவார்கள். (வேறு மரபணுக்குட்டையை சேர்ந்த ஆணொருவரிடம் இருந்து புதியகுழந்தையைப் பெறுவதற்காக இயற்கை அளிக்கும் விழைவுஅவர்களை அப்படி நடந்து கொள்ள வைக்கிறது. ) என் நண்பர்விசயத்திலும் அவ்வாறே நடந்தது. அவர் ஒருமுறை குழந்தைக்குசிகிச்சை அளிக்க தன் மனைவியின் சம்மதத்துடன் ஒரு ஊருக்குஅழைத்து சென்றார். கூடவே இருந்து பார்த்துக் கொண்டார். நடுவே மனைவிக்கு கோபம் ஏற்பட்டது - "எப்படி அவர் என்குழந்தையை வைத்துப் பார்த்துக்கலாம்?" உடனே குழந்தையைபார்க்க வேண்டும், அதை சிகிச்சை என்ற பெயரில்துன்புறுத்துகிறார்கள் என்றெல்லாம் பிரச்சனை எழுப்பிஅழைத்து தன்னுடன் வைத்துக் கொண்டார். அதன் பிறகுவிவாரகத்து தொடுத்தார் அந்த மனைவி. அப்பெண் அப்போதுஒரு புதிய திருமணம் செய்து கொள்ள நினைத்திருந்ததால் எந்தநிபந்தனையும் இன்றி விவாகரத்துக்கு உடனடியாக ஒப்புக்கொண்டார். நண்பரும் விவாகரத்துப் பின்னர் மற்றொருதிருமணத்தை செய்து கொண்டார். ஆனால் கதையில் ஒருதிருப்பம் - முன்னாள் மனைவிக்கு நடக்க இருந்த திருமணம்ரத்தாகி விட்டது. இப்போது அவர் "குழந்தையை உனக்குக்காட்ட மாட்டேன்" என்று மீண்டும் ஆரம்பித்து விட்டார். பாவம்நண்பர் அவர் விவாகரத்தின் போது ஒப்பமிட்டுக் கொடுத்தஒப்பந்தத்தில் குழந்தையை பார்க்க வேண்டாம் என ஏதோஇருந்தததை கவனிக்காமல் விட்டு விட்டார். அதைக் காட்டிஇப்போது குழந்தையை காட்டாமல் பழிவாங்குகிறார் முன்னாள்மனைவி. அப்பெண் அத்துடன் நிறுத்தவில்லை - தினமும்நண்பரையும் அவரது மனைவியும் போனில் அழைத்துமிரட்டுகிறார், அவதூறு செய்கிறார். இது எப்படி இருக்கிறது? டிராகுலாக்கள் கற்பனைகள் அல்ல, அவர்கள் இத்தகையபெண்களின் வடிவில் வாழ்கிறாரக்ள் என்று எனக்குஇதையெல்லாம் கேட்கும் போது, அனுபவிக்கும் போதுதோன்றுகிறது.

 

இன்னொரு நண்பர் வெளிநாட்டில் வசிக்கிறவர். அவருக்கும்இதே கதி தான். மனைவி இல்லாமல், குழந்தையைப் பார்க்கமுடியாமல் தனியாக வாழ்ந்து தவிக்கிறார். அடிக்கடி தற்கொலைஎண்ணம் வருகிறது, அதை வெளியே சொன்னால் என்வேலைக்குப் பிரச்சனையாகுமோ என பயமாக இருக்கிறதுஎன்கிறார். இதில் இன்னொரு பிரச்சனை உள்ளது - "இன்னாருக்கு தற்கொலை விழைவு உள்ளது; அதனால்குழந்தையை இவர் பார்க்க அனுமதிக்கக் கூடாது" எனமனைவியின் தரப்பில் விவாகரத்தின் போது நீதிமன்றத்தில்கோருவார்கள். ஒருவேளை அவர் நிஜமாகவே தற்கொலைபண்ணினாலோ "நாங்க அப்பவே சொன்னாமில்ல" என்றுஈவிரக்கமில்லாமல் சொல்லுவார்கள். பிணத்தை வைத்தும்வியாபாரம் பார்க்கும்  கொலைபாதகர்களாக இத்தகையபெண்கள் அப்போது நடந்து கொள்வார்கள்.

 

திருமணமானவர்களுக்கு மட்டுமல்ல சேர்ந்து வாழும்ஆண்களுக்கும் இதுவே நடக்கிறது - பிரிய முடிவெடுத்ததும்பெண்கள் குழந்தைகளை தம்முடன் அழைத்து செல்வதுடன்சேர்ந்து வாழ்ந்த காதலனுக்குக் காட்டவும் மறுத்துவிடுகிறார்கள். சட்டரீதியாக இதை முன்னெடுப்பதுவெகுசிக்கலானது என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

 

இது போல ஏராளமான கதைகள். நான் என்னுடையமனவருத்தங்களை ("சின்னச் சின்ன வருத்தங்கள்") ஒருகட்டுரையாக எழுதி வெளியிட்ட பின்னர் எத்தனையோ ஆண்கள்என்னிடம் வந்து தமது அவலமான நிலைகளை கொட்டினார்கள். அவற்றை எல்லாம் நான் எழுதினால் ஐநூறு பக்கங்களுக்குமேலாக வரும். வெகுஜன ஊடகங்கள் இவற்றைப்பொருட்படுத்தி ஆண்களின் துயரங்களைப் பற்றியும் பேசவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். (எனக்குத் தெரிந்துகமல் மட்டும் தான் வெகுஜன ஊடகத்தில் பெண்கள்விவாகரத்தின் போது குழந்தையைப் பிரிப்பதற்காக ஆடும்நாடகங்களை, இழைக்கும் கொடுமைகளைப் பதிவுபண்ணியிருக்கிறார் - "அவ்வை சண்முகி". ஏனென்றால் கமல்உண்மையிலேயே இதை அனுபவித்திருக்கிறார். சிறுவயதானதன் பிள்ளைகளைப் பிரிந்து வாழ்ந்திருக்கிறார்.)

 

இத்தகைய பெண்களுக்கு என்றொரு பாணி உள்ளது: முதலில்பிரியலாம் என்கிறார்கள். அடுத்து பொறுமையாக வழக்குத்தொடுப்பார்கள். இடைப்பட்ட காலத்தில் குழந்தையை பார்க்கவிட மாட்டேன் என்று முரண்டு பிடிப்பார்கள். அப்போதுநீதிமன்றம் மூலம் குழந்தையை பார்க்க ஒரு மனுவைசமர்ப்பிக்கலாம். அதற்கான வாய்ப்புள்ளதை நிறைய ஆண்கள்அறிய மாட்டார்கள். (ஆனால் விவாகரத்து வழக்கில் உள்ளஅத்தனை நுணுக்கங்களையும் இத்தகையை பெண்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள்.) நானும் தாமதமாகத் தான் தெரிந்துகொண்டேன். இல்லாவிட்டால் என் மகனை சில வருடங்களுக்குமுன்னரே பார்த்திருப்பேன். அதனால் நண்பருக்கு சிலஅறிவுரைகளைக் கொடுத்தேன்:

 1) குழந்தையை காட்ட மாட்டேன் என்றால் ஏற்றுக்கொள்ளாதீர்கள். வழக்காடுமன்றம், காவல் நிலையம் போங்கள்.

 2) பொதுவில் பிரச்சனையை வையுங்கள். ஆண்கள் தமதுதுன்பங்களை, வேதனைகளை வெளியே சொல்லாமல்மனதுக்குள் அமுக்கிக் கொள்வார்கள். வெளியே புன்னகைத்தபடிஉள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பார்கள். விவாகரத்தின்போதான மன அழுத்தம், சீரழிவுகள் பெண்களை விடஆண்களுக்கே அதிகம் என ஒரு ஆய்வு சொல்லுகிறது. இதைமாற்ற வேண்டும். தொடர்ந்து உங்களைச் சுற்றி இருப்போரிடம்எல்லாம் உங்கள் அனுபவங்களைப் பகிருங்கள். அது உங்கள்வலியைக் குறைக்கும், எதிர்பாரா இடங்களில் இருந்தெல்லாம்ஆதரவும், உதவிகளும் வரும். பொதுவாக, பெண்கள் தாம்இத்தகைய தருணங்களில் ஆண்களுக்கு ஆதரவாகஇருக்கிறார்கள் என்பது ஆச்சரியம். ஆண்களோஉம்மணாமூஞ்சிகளாக இருப்பார்கள், அவர்களுக்குஉணர்வுரீதியாக ஆதரவுக் கரம் நீட்டத் தெரியாது. வள்ளுவர்மற்றொரு சந்தர்பத்தில் சொன்னதைப் போல பெண்களால் வரும்துன்பத்துக்கு பெண்களே ஆறுதல் அளிப்பார்கள்.

 

3) குடி உள்ளிட்ட போதைகளை அறவே தவிர்த்து விட வேண்டும். நன்றாக வாழும் போது குடிக்கலாம். குடும்பம் நசிக்கும் போதுகுடிக்கவே கூடாது. அது நம்மை இன்னும் வேகமாகபடுபாதாளத்தில் தள்ளி விடும்.

 

4) உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். விவாகரத்தின் போதான நரக வேதனைகளுக்கு உடல் வலுமிகவும் அவசியம்.

 

5) "நம் வாழ்க்கையில் காதல் குறைந்து கொண்டே வருகிறது" போன்ற வசனங்களை திருமணம் சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கும் போது மனைவிமார் சொல்லும் போதுசுதாரித்துக் கொள்ள வேண்டும். அடுத்தடுத்து வரப் போகும்பிரிவுக்கான பல சமிக்ஞைகளை அளிப்பார்கள். அதைகவனித்து உள்வாங்க வேண்டும். அடுத்து அவர்கள் சண்டைபோடுவது, இழிவாக பேசுவது நடந்தால் அவற்றை ரகசியமாகபதிவு பண்ண வேண்டும். நிச்சயமாக அவர்களின் பக்கமிருந்தேபிரியலாம் எனக் கூறுவார்கள். அப்போது அதை மிக முக்கியமாகபோனில் பதிவு பண்ணிக் கொள்ள வேண்டும். அதே போலநீங்கள் குழந்தையை வெளியே அழைத்து செல்வது, கவனித்துக்கொள்வது ஆகியவற்றுக்கும் ஆதாரங்களை - குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், கடிதங்கள், காணொளிகள் எனஎல்லாவற்றையும் - திரட்ட வேண்டும். இவையெல்லாம் பின்னால்வழக்கு நடக்கும் போது வெகுவாக உதவும். ஏனென்றால்இப்பெண்கள் முதலில் "நமக்கு ஒத்துப் போகவில்லை, நாம்பிரியலாம்" என்று சொல்லி விட்டு வழக்கு நடக்கும் போது "என்கணவன் கொடுமைக்காரன். எனக்கு துரோகம் பண்ணிவிட்டான். என்னை விட்டு இன்னொரு பெண்ணுடன் சென்றுவிட்டான்" என்று கதை கட்டுவார்கள். "நீயாடி இப்படி மாத்திபேசுறே?" என்று அப்போது தலையில் கையை வைத்துஉட்காருவதில் அர்த்தமில்லை

 

6) நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல "சுமூகமாமுடிச்சிக்கலாம், பணம்  கூடத் தர வேண்டாம், குழந்தையைபார்க்க வேண்டியதில்லை என்று ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட்டுக் கொடுத்தால் போதும்" என மனைவியின் தரப்பில்இருந்து கேட்பார்கள். "அப்போது செருப்பு பிஞ்சிரும்" எனதவறாமல் பதிலளித்து விட வேண்டும். ஏனென்றால் தன் தந்தைதன்னை நிராகரித்து விட்டார் எனும் காயம் அக்குழந்தையின்மனத்தில் ஆறாமலே இருக்கும். ஒருநாளும் அது தன் தகப்பனைபின்னர் மன்னிக்காது. அதையும் மீறி குழந்தை அப்பா மீதுபாசத்துடன் இருந்தால், பார்க்க வேண்டும் எனத் துடித்தால்ஒப்பந்தத்தை படித்துக் காட்டுவார்கள். "உன் அப்பா உன்னைபணத்துக்காக விட்டுக் கொடுத்து விட்டார்" என்று அழுத்திக்கூறுவார்கள். அப்போது அக்குழந்தையின் மனம் எப்படித்தவிக்கும்! இந்த வேதனைகள் சுத்தமாகப் புரிந்து கொள்ளாமல்மனைவியும் அவரது தரப்பினரும் தெலுங்குப் பட வில்லன்களைவிட, மன்னார் குடி மாபியாவை விட கொடூரர்களாகஇருப்பார்கள்

 

 

சரி இப்பெண்கள் விவாகரத்தின் போது மட்டும் ஏன் இப்படிஇருக்கிறார்கள்?

 

1) பெண்களின் பழிவாங்கும் உணர்வு பிரசித்தமானது. ஷேக்ஸ்பியரே அதைப் பற்றி எழுதியிருக்கிறார். பழிவாங்குவதற்காக எந்த எல்லைக்கும் அவர்கள் போவார்கள்

 

2) பெண்கள் ஒரு உறவை முறித்துக் கொள்வது ஒரு கட்டத்தைக்கடப்பதைப் போன்றது. ஆண்களுக்கு ஒன்று அது ஒரு வீரவிளையாட்டை முடித்துக் கொள்வதைப் போல அல்லது தோல்விஅடைந்து மனம் உடைவதைப் போன்றது. ஆண்கள் தம்தோல்வியில் திளைக்க விரும்புவார்கள். பெண்கள் அதைசுலபத்தில் தாண்டி வர விரும்புவார்கள். இயற்கை அவர்களைஅவ்வாறே படைத்திருக்கிறது. பழைய குடும்பம் சம்மந்தமானஎல்லா நினைவுகள், தடயங்களையும் அவர்கள் அழித்தாகவேண்டும். அதனாலே அவர்கள் விவாகரத்துக்கானமுன்னெடுப்பை ஆண்களை விட சீக்கிரமாகவே எடுக்கிறார்கள். சட்டரீதியாக தம் வாழ்வை கழுவி சுத்தமாக்க வேண்டும் எனநினைக்கிறார்கள். குழந்தை ஒரு தவிர்க்க முடியாத பிணைப்பு - பழைய வாழ்க்கையை அனுதினமும் நினைவுபடுத்தும் சின்னம். அதனால் குழந்தையை தன்னுடையது மட்டுமே, இதற்கு தன்கணவனுக்கும் சம்மந்தமே இல்லை என தமக்கு சொல்லிக்கொள்கிறார்கள். அதனாலே பிரிவுக்குப் பின்னர் குழந்தையைகணவன் பார்ப்பதைக் கூட அவர்கள் விரும்புவதில்லை.

3) அடுத்து, பிரிவுக்குப் பின்னர் குழந்தை மூலம் கணவனின்நிழல் தமது 'புதிய' வாழ்வில் விழுவதை அவர்கள் சுத்தமாகவிரும்புவதில்லை

 

ஆனால் இது அப்பட்டமான சுயநலம். இதனால் குழந்தையின்மனம் ஆழமாகக் காயப்படுவதை, முன்னாள் கணவனின்வாழ்க்கை நாசமாவதைப் பற்றி அவர்கள் எந்த விதத்திலும்கவலைப்படுவதில்லை. ஏனென்றால் பெண்கள் தம்இயல்பிலேயே மிகவும் சுயநலமிகள். நம் சமுகமே அவர்களைதியாகிகளாக்க தொடர்ந்து முயல்கிறது. அவர்கள் தொடர்ந்துதமது இயற்கையான சுயநலத்துக்கும் தியாக மனநிலைக்கும்இடையே தத்தளித்தபடி இருக்கிறார்கள்.

 

நமது சமூகமும் சரி, சட்டமும் சரி பெண்களையே primary caregivers என்று கூறுகிறது. (பெண்ணியமும் இதைமறைமுகமாக / தந்திரமாக அங்கீகரிக்கிறது) அதாவது ஆண்கள்குழந்தை பெற உதவ வேண்டும், ஆண்கள் அக்குழந்தையைவளர்க்க பொருளாதார ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும்பங்களிக்க வேண்டும். போகுமிடமெல்லாம் தன் குழந்தை எனஅங்கீகரிக்க வேண்டும். இரண்டாம் பெயராக தன் பெயரைஅளிக்க வேண்டும். ஆனால் அக்குழந்தையுடன் அவன்இருக்கலாமா வேண்டாமா என்பதை மனைவியேதீர்மானிக்கிறாள். விவாகரத்து என்று வந்தவுடன் மனைவிசொல்வதைத் தான் சட்டமும் கேட்கிறது. எனில் இது ஒருதத்துவார்த்தமான கேள்வியை எழுப்புகிறது - அப்பா என்பவர்யார்? பெற்றோர் என்று சொல்லுகிறோமே அது பன்மை தானே? ஏன் பெற்றவள் என்று மட்டும் நாம் சொல்லுவதில்லை

 

முதலில் நீங்கள் ஒரு அப்பாவாக குழந்தையுடன் தினமும் நேரம்செலவிடுகிறீர்கள். நான் என் குழந்தைக்கு தினமும்உணவூட்டியிருக்கிறேன், தினமும் காலையில் அவன் கக்காபோனதும் கழுவி விட்டு குளிப்பாட்டி ஆடைஅணிவித்திருக்கிறேன். இதையெல்லாம் செய்து, மதியஉனவையும் சமைத்த பின்னரே நான் அலுவலகம் கிளம்புவேன். நான் பெங்களூருக்கு வரும் வரை இரண்டு வருடங்கள்இதையெல்லாம் செய்தேன். நான் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது இலக்கியக் கூட்டங்களுக்கு சென்றால் என் மகனையும்கூட அழைத்துச் செல்வேன். என் வாழ்வின் எல்லாதருணங்களையும் அவன் கூடவே இருந்து அறிய வேண்டும்என்று நான் விரும்பினேன். ஆனால் என் மனைவி என்னைதன்னில் இருந்து ஒரு அழுக்கைப் போல கழுவி விட வேண்டும், தன் வாழ்வில் இருந்து என்னை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்என முடிவெடுத்ததும் நான் இந்த உரிமைகளை இழக்கிறேன். இனி வழக்காடு மன்றம் குறிப்பிடும் நாட்களில் மட்டுமே நான் என்மகனுடன் சில மணிநேரங்களை செலவிட முடியும். (இதைஎழுதும் போதே என் கண்கள் தளும்புகின்றன!) இது எந்தவிதத்திலும் நியாயமாகும்? என் மகனை சரியாக பார்த்துக்கொள்ளாத ஒருவர் அவனைப் பெற்ற காரணத்தினால் மட்டுமேஎப்படி அவனுடன் அதிக நேரம் செலவிட அதிகாரம்பெற்றவராகிறார்? இது எனக்கு மட்டுமல்ல எத்தனையோஅப்பாக்களுக்கு நமது நாட்டின் சட்டம் செய்கிற அநீதிஎன்பேன். அதெப்படி ஒருவர் சில நாட்கள் மட்டுமே முழுமையானஅப்பாவாக இருந்து அடுத்து விவாகரத்தானதும் உடனேபெயரளவிலான அப்பாவாக மட்டும் மாறுகிறார்? பெயர் சொல்லமட்டும் ஒரு அப்பா, ஆனால் அவர் தன் மகனை நினைத்த போதுபார்க்கவோ அவனுடன் நேரம் செலவிட, வெளியே அழைத்துப்போக, அவனுடன் சாப்பிட, உறங்க முடியாது என்றால் அதுஎன்ன விதமான அப்பா? ஒருவர் குடியுரிமை இல்லாமல் நாட்டில்வாழும் போது எப்படி அடையாளமற்றவராக மாறுவாரோஅவ்வாறே நமது நீதித்துறை அப்பாக்களை அடையாளமற்றவாகஆக்குகிறது அல்லவா! இது என்ன நீதி? இது மாற்றப்படவேண்டாமா?

 

இதற்கு என்ன தான் தீர்வு?

 

  1. வரதட்சணை தடுப்புச் சட்டத்தைப் போன்றே விவாகரத்துச்சட்டமும் பெண்களால் அதிகமாக துஷ்பிரயோகம்செய்யப்படுகிறது. இதை ஈடுகட்டுவதற்காக அப்பாவிடம்இருந்து குழந்தையை மனைவி பிரித்து வைத்தால் அதற்குகுறைந்தது ஐந்தாண்டுகளாவது சிறைத்தண்டனைஅளிக்கும் ஒரு புதுச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
  2. பிரிவுக்குப் பின்னர் குழந்தையை அப்பாவும் அம்மாவும்சேர்ந்து வளர்க்கும் (co-parenting) முறைமையைஅமுல்படுத்த வேண்டும். அதற்கு இருவரும் ஒரே ஊரில்வசிக்க வேண்டும் என்பதே நிபந்தனையாக இருக்கவேண்டும்.
  3. பாதிக்கப்படும் ஆண்கள் ஒன்று திரண்டு வெளிப்படையாகப்போராட வேண்டும். பெண்களிடமும் தம் நிலைமையைஎடுத்துரைத்து அவர்களுடைய ஆதரவையும் பெற வேண்டும். ஊடகங்களில் தமது அவலங்கள் பேசப்பட வழிவகை செய்யவேண்டும். இதைப் பற்றி பிரச்சாரம் செய்ய எந்த வாய்ப்புகிடைத்தாலும் அதைத் தவற விடக் கூடாது. குழந்தைவளர்ப்பில் பெண்களுக்கு இணையான பங்குஆண்களுக்கும் இருக்கிறது என்பதை சினிமா, இலக்கியம், சமூக வலைதளங்கள் மூலம் வலியுறுத்த வேண்டும். பெண்களே primary caregivers எனும் பிம்பத்தை மாற்றவேண்டும். குழந்தைகளை தம் அப்பாவுக்காகப் பேச வைக்கவேண்டும். நீதிமன்றத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பவேண்டும்.
  4. திருமணத்துக்குப் பிறகு ஒருவேளை நாம் பிரியநேர்ந்தாலும் குழந்தையை பிரித்துக் கொண்டு சென்றுவிடக் கூடாது என மனைவியிடம் ஒப்பந்தம் ஒன்றைப் பெறவேண்டும். முடிந்தால் அவரது கையெழுத்தையும் பெறவேண்டும். இன்னும் சொல்லப் போனால் இதைத்திருமணத்துக்கு முன்பே பேசி விட வேண்டும். இந்தஒப்பந்தத்தை பொதுவெளியில் பகிர வேண்டும். ஒருவேளைஇந்த ஒப்பந்தம் பெண்கள் பிரிவின் போது டிராகுலாவாகமாறுவதைத் தடுக்க உதவலாம்
  5. பொதுவாக சாதி சமூகங்கள் திருமணத்துக்குப் பிறகு எந்தவிசயங்களிலும் தலையிடாமல் இருப்பதே இன்றைய நவீனசமூக நிலையாக இருக்கிறது. இது மாற வேண்டும். பிரிவின்போது அவர்கள் குறுக்கிட வேண்டும். குழந்தையைஅப்பாவிடம் இருந்து விடாப்பிடியாக பிரித்து வளர்க்கிற, குழந்தையை அப்பா பார்க்க அனுமதிக்காதகொடுமைக்காரப் பெண்களையும் அவர்களுடையகுடும்பத்தையும் அவர்களுடைய சமுதாயம் ஒதுக்கி வைக்கவேண்டும்! நகரத்தில் வசிப்பவர்கள் என்றால் அப்பாவிடம்இருந்து வலுக்கட்டாயமாக பிள்ளையை பிரித்து வைத்தகுற்றத்துக்காக சுற்றுப்புறத்தோரும் பொதுசமூகமும்இவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். அப்பாவிடம்குழந்தையைக் காட்டும்படி தொடர்ந்து வற்புறுத்த வேண்டும்- எனக்கென்னவோ நம் ஊரில் இது நன்றாக வேலைசெய்யும் என்று தோன்றுகிறது.
  6. இப்பெண்களுக்கு உளவியல் கவுன்சலிங் அளிக்க வேண்டும்.
  7. பெண்களாகப் பார்த்து திருந்த வேண்டும்! - இது நடக்கும்என்று தோன்றவில்லை.

 

http://thiruttusavi.blogspot.com/2022/03/blog-post_18.html

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.. 

பகிர்ந்தமைக்கு நன்றி.. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.. 

அதை கொண்டு வந்து இணைத்த திருவாளர????🤣😎

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, உடையார் said:

அதை கொண்டு வந்து இணைத்த திருவாளர????🤣😎

இல்லை, கட்டுரையை எழுதியவர்.. மூன்று கிழமையாக யாழிற்கு வரவில்லை தானியங்கி எனது edit செய்யும் வசதியை எடுத்துவிட்டது😔, அதனால் முன்பு எழுதியதை மாற்ற முடியவில்லை. 

இணைத்தவருக்கு நன்றிகள், ஏனெனில் ஆண்கள் பல காரணங்களை கூறிக்கொண்டு வெளிப்படையாக இவற்றை கதைப்பதில்லை இதனால் பாதிக்கப்படுவது மற்றவர்களுமே. 

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த மாதிரி குணவியல்புகளால் வரும் பாதிப்பு மிகவும் வேதனையானது.. 

 

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா அளந்து கட்டக்கூடாது. 😡

கணவர்களின் கொடுமையை அவர்களின் ஆணாதிக்க திமிரை எழுத வெளிக்கிட்டால், இந்த களம் போதாது. பல வருடங்கள் எழுதிக்கொண்டு போகலாம்.

இன்னமும் குடும்பங்கள் சிதையாமலும், நம் பாரம்பரிய கலாச்சாரமும் சிதையாமலிருப்பதும் பெண்களின் பொறுமையினாலும், அவர்களின் சகிப்புத்தன்மையினாலும்தான். 🌹

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் மனைவி இருவரிலுமே பிழை இருக்கும் போது ஒருவரை மட்டும்  குற்றம் சாட்டுதல் தர்மம் ஆகாது .  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது தான் வாழ்கை. இல்லையேல் அது பிரிவுக்கு வழி வகுக்கும்.  ஆரம்பத்திலேயே பேசி முடிவு செய்து கொண்டு அப்புறம் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். பின் முடிவு எடுக்கலாம் . ஆனால் பாதிக்க படப்போவது பிள்ளை (கள்) 

விவாகரத்தின் பின் எம் (ஈழ) அனேகமான தமிழ் பெண்களின் செயல்களும் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கும் விடையங்களுக்கு சற்றும் குறைவில்லை. 

என் மூன்று நண்பர்கள் விவாகரத்தானவர்கள். மூன்று பேரினதும் மனைவிமார் அவர்களின் குழந்தைகளை / பிள்ளைகளை துருப்புச் சீட்டாக வைத்து செய்யும் அட்டூளியங்கள் ஆணாதிக்க மனப்பான்மையுள்ள எம் ஆண்கள் செய்யும் அனியாயங்களுக்கு சற்றும் குறைவில்லை. முக்கியமாக நீதிமன்றம் தலையிட்டு பிள்ளைகளை தந்தை பார்க்க முடியும் என்று தீர்ப்பு கொடுத்தாலும், அதை மதிக்காமல் நடப்பதில் வல்லவர்கள். அதுவும் பெண் பிள்ளைகள் என்றால், பாலியல் வதை செய்வதாக எந்த மனசாட்சியும் இன்றி குற்றம் சாட்டி அந்த ஆண்களை தற்கொலை வரைக்கும் தள்ளுவதை கண்டுள்ளேன்.

இங்கும் சட்டம் குழந்தைகள் விடயத்தில் பெண்களின் பக்கமே சார்பாக நடந்து கொள்கின்றது. அதே போன்று வளங்களை பகிர்வதிலும் பெண்களின் பக்கமே பக்கச் சார்பாக நடக்கின்றது. இதனால் தந்தையால் பிள்ளைகள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டு தாமும் தற்கொலை செய்து கொள்வதும் நிகழ்கின்றது.
 

10 minutes ago, நிலாமதி said:

கணவன் மனைவி இருவரிலுமே பிழை இருக்கும் போது ஒருவரை மட்டும்  குற்றம் சாட்டுதல் தர்மம் ஆகாது .  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது தான் வாழ்கை. இல்லையேல் அது பிரிவுக்கு வழி வகுக்கும்.  ஆரம்பத்திலேயே பேசி முடிவு செய்து கொண்டு அப்புறம் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். பின் முடிவு எடுக்கலாம் . ஆனால் பாதிக்க படப்போவது பிள்ளை (கள்) 

நிலாமதி அக்கா,

இங்கு இந்தக் கட்டுரை எவர் மீது தவறு இருக்கு/ இல்லை என்று விவாதிக்கவில்லை. விவாகரத்தின் பின் பெண்கள் நடந்து கொள்ளும் முறையை பற்றி விளக்குகின்றது. நீங்கள் இங்கு கன காலம் வசிக்கின்றீர்கள். நீங்களே எம் பெண்கள் உட்பட பல பெண்கள் விவாகரத்தின் பின் பிள்ளைகள் விடையத்தில் அப்பாமாருக்கு செய்யும் அநியாயங்களை கண்டு இருப்பீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்ப்புகள் எல்லை மீறும்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான பிணைப்பு உடைய ஆரம்பிக்கிறது.

குடும்பம் என்கின்ற சமூகக் கட்டமைப்பை புரிந்துகொண்ட கணவன் மனைவி இருவருக்கும் விவாகரத்திற்கான தேவை எழாது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

எதிர்பார்ப்புகள் எல்லை மீறும்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான பிணைப்பு உடைய ஆரம்பிக்கிறது.

குடும்பம் என்கின்ற சமூகக் கட்டமைப்பை புரிந்துகொண்ட கணவன் மனைவி இருவருக்கும் விவாகரத்திற்கான தேவை எழாது. 

கணவன்-மனைவி இணக்கமாகி போனாலும், அண்டிவாழும் கிழடுகளே பெரும்பாலும் இம்மாதிரியான பிணக்குகள், விவாகரத்துகளுக்கு தூபம் போடுகின்றனர். 🤭🤗

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

கணவன்-மனைவி இணக்கமாகி போனாலும், அண்டிவாழும் கிழடுகளே பெரும்பாலும் இம்மாதிரியான பிணக்குகள், விவாகரத்துகளுக்கு தூபம் போடுகின்றனர். 🤭,

குடும்பங்களில் பிரச்சனை ஏற்படுவதற்கு முதன்மையான காரணம் குடும்ப உறவுகளே. யாரை(கணவனை மனைவி வீட்டாரும், மனைவியை கணவன் வீட்டாரும்) யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதில் பெரும்பாலான பிரச்சனைகள் ஆரம்பமாகிறது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

விவாகரத்து ஆனபின் பொதுவாக பிள்ளைகள் தாய்மாருடன்தான் வாழ வைக்கப்படுகின்றனர்.முக்கியமாக பெண் பிள்ளைகள்.அதன்பின் பெரும்பாலும் பெண்களுக்கு தனி ஆணவம் ஏற்பட்டு விடுகின்றது.....அவர்கள் பிள்ளைகளை தந்தைக்கு காட்டாமல் அலைக்கழிப்பார்கள்......எண்ணத்தை சொல்ல.....அந்த ஆண்களைப் பார்க்க பாவமாக இருக்கும்......!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யேர்மனியில் விவாகரத்து அங்கீகரிக்கப்பட்டால் ஆண் பெண்ணுக்கு தனது ஊதியத்தின் ஒருபகுதியைப் பெண்ணுக்குச் செலுத்தவேண்டியது சட்டமாக உள்ளது. இதில் அதிகமாக மாட்டுப்பட்ட ஆண்கள் துருக்கி மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்களாக உள்ளனர். விவாகரத்துப் பெற்ற பெண்கள் புது நண்பருடன் ஆனந்தமாக தங்கள் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். நான் முன்பு வேலைசெய்த நிறுவனத்தில் இருந்த துருக்கியர் ஒருவர் விவாகரத்தின் பின்பு சொல்லாம் கொள்ளாமல் நாட்டைவிட்டே ஓடிவிட்டார்.🤫  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.. 

பகிர்ந்தமைக்கு நன்றி.. 

சீந்துவாரில்லாமல் கிடந்த திரியை முடுக்கிவிட்டதற்கு நன்றி @பிரபா சிதம்பரநாதன்😁

6 hours ago, உடையார் said:

அதை கொண்டு வந்து இணைத்த திருவாளர????🤣😎

இப்படியாவது சின்னச் சின்ன சந்தோஷங்கள் @உடையார் க்கு கிட்டவேணும். 😜

 

கட்டுரையாளர் அபிலாஷ் சொன்னதுபோல புலம்பெயர் நாடுகளில் பல கதைகள் உள்ளன. எனது முன்னாள் மேலாளர், பின்லாந்துக்காரர், அவரின் பிள்ளைகளைப் பல வருடங்கள் பார்க்கமுடியாதவாறு அவரின் மனைவி தடுத்திருந்தார். அது மட்டுமில்லாமல் குழந்தைகளாக இருந்தவர்களுக்கு தகப்பன் மீது வெறுப்பு வரும் அளவிற்கு கதைகளைச் சொல்லியும் இருந்தார்.  எனது மேலாளர் தானாகவே தென்கொரியா, பிரித்தானியா என்று தூர இடங்களில் வேலை செய்துகொண்டிருந்தார். பிள்ளைகள் பதின்ம வயதை அடைந்த பின்னர்தான் அவருடன் பழகி அவரின் நல்ல குணங்களை அறிந்துகொண்டனர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, suvy said:

விவாகரத்து ஆனபின் பொதுவாக பிள்ளைகள் தாய்மாருடன்தான் வாழ வைக்கப்படுகின்றனர்.முக்கியமாக பெண் பிள்ளைகள்.அதன்பின் பெரும்பாலும் பெண்களுக்கு தனி ஆணவம் ஏற்பட்டு விடுகின்றது.....அவர்கள் பிள்ளைகளை தந்தைக்கு காட்டாமல் அலைக்கழிப்பார்கள்......எண்ணத்தை சொல்ல.....அந்த ஆண்களைப் பார்க்க பாவமாக இருக்கும்......!

 இங்கே ஜேர்மனியில் எனக்குத்தெரிந்து பல தமிழ் குடும்பங்களில் தாய்மார்கள் தந்தையரை ஒரு வில்லன் மாதிரியே பிள்ளைகளுக்கு சித்தரித்து விடுவார்கள்.பிள்ளைகளும் தாய்வழியே தகப்பனை மதிக்க மாட்டார்கள். இதனால் பல தந்தையர்கள் மனமுடைந்து நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கின்றார்கள்.சிலர் தற்கொலையிலும் தம் வாழ்வை முடித்துள்ளனர்.
 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

 

இப்படியாவது சின்னச் சின்ன சந்தோஷங்கள் @உடையார் க்கு கிட்டவேணும். 😜

 

இப்படி சொல்வதால் உங்களிற்கு மகிழ்ச்சி என்றால் சந்தோஷமே 😜

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

சீந்துவாரில்லாமல் கிடந்த திரியை முடுக்கிவிட்டதற்கு நன்றி @பிரபா சிதம்பரநாதன்😁

இப்படி நிறைய திரிகள் இங்கே சீந்துவாரில்லாமல் இருக்கிறது..ஏதோ என்னாலான உதவி😁😁

 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2022 at 01:01, ராசவன்னியன் said:

சும்மா அளந்து கட்டக்கூடாது. 😡

கணவர்களின் கொடுமையை அவர்களின் ஆணாதிக்க திமிரை எழுத வெளிக்கிட்டால், இந்த களம் போதாது. பல வருடங்கள் எழுதிக்கொண்டு போகலாம்.

இன்னமும் குடும்பங்கள் சிதையாமலும், நம் பாரம்பரிய கலாச்சாரமும் சிதையாமலிருப்பதும் பெண்களின் பொறுமையினாலும், அவர்களின் சகிப்புத்தன்மையினாலும்தான். 🌹

பெண்களின் பொறுமை, சகிப்புதன்மை என்பதனால் குடும்பம் ஒழுங்காக இருந்தாலும், ஒப்பீட்டளவில் பெண்கள் அதிகம் பாதிப்படைந்தாலும், இப்பொழுது சில பெண்கள்/ மனைவிகளின் கொடுமையான செயல்களை மாற்றமுடியாமல் ஆண்கள்/கணவர் தேடும் மாற்றுவழிகளால் இன்னமும் பலர் பாதிக்கப்படுவதை விட இந்த மாதிரியான ஆண்களின் சம்பவங்கள் ஒரு விழிப்புணர்வே என நம்புகிறேன் 

 

23 hours ago, நிழலி said:

இங்கும் சட்டம் குழந்தைகள் விடயத்தில் பெண்களின் பக்கமே சார்பாக நடந்து கொள்கின்றது. அதே போன்று வளங்களை பகிர்வதிலும் பெண்களின் பக்கமே பக்கச் சார்பாக நடக்கின்றது. இதனால் தந்தையால் பிள்ளைகள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டு தாமும் தற்கொலை செய்து கொள்வதும் நிகழ்கின்றது.

குழந்தைகள் சார்பாக அப்படி நடப்பதற்கு காரணம் தாய்தான் பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்ற பழைய எண்ணமோ என நினைக்கிறேன். ஆனால் வளங்களைப் பிரிப்பதில் பெண்களுக்கு எப்படி சார்பாக நடக்கும் என தெரியவில்லை. நான் அறிந்தவற்றில் இருந்து 50:50 போகும் அல்லது சில விதிமுறைகளு்க்கு அமைவாக பிரிப்பார்கள் என நினைக்கிறேன்..

Coercive control மனநிலை உடையவர்கள் கூட விவாகரத்து ஆனபின்பு கணவனை/மனைவியை பிள்ளைகளோடு சேர்த்து கொன்றிருக்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.