Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய மக்கள் சக்தியினரின்... யாழ் போராட்டத்தில், குழப்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய மக்கள் சக்தியினரின் யாழ் போராட்டத்தில் குழப்பம்!

ஐக்கிய மக்கள் சக்தியினரின்... யாழ் போராட்டத்தில், குழப்பம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில்  இன்று (வெள்ளிக்கிழமை) பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு  அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒரு ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை உருவானது.

முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கைகலப்பும் உருவானது.  பதற்றத்தை  தணிப்பதற்காக  பொலிஸார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் கைகலப்பில் சிலர் காயமடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் கட்சியினர் தொடர்ந்தும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்ததுடன் குழப்பவாதிகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

குழப்பத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் அங்கிருந்து பாதுகாப்பாக முச்சக்கர வண்டியில் அனுப்புவதற்கு முயற்சித்த வேளை போராட்டக்காரர்கள் முச்சக்கர வண்டியையும் கடுமையாகத் தாக்கினர். பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் பொலிஸாரே முச்சக்கர வண்டியை செலுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உமாச் சந்திர பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

VideoCapture_20220401-123324-600x338.jpg

VideoCapture_20220401-125053-600x338.jpg

https://athavannews.com/2022/1274282

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வாக்குகள் எமக்கு தேவையில்லை. தனிச் சிங்கள மக்களால் தெரிந்து கொள்ளப்பட்ட தலைவன் நான் என்று சவால் விட்டவர். சிங்கள மக்களால் கைவிடப்பட்ட பின்; தமிழரும் சிங்களவரும் சேர்ந்து சாத்தப்போகிறார்களே ஒன்று சேர விடக்கூடாது என்று மஹிந்த மாத்தையா ஓடோடி வந்து மூக்கினால் சிந்தி ஒத்தடம் கொடுத்து விட்டுப்போனார். ஆனால் அடுத்த சிங்கள கூட்டம் தமிழனிடமே வந்து நிக்குது. எல்லோருமே எங்களை போட்டி போட்டு அழித்து மகிழ்ந்தவர்களே. ஆனால் தாங்கள் விழுந்தவுடன் தம்மை கைதூக்கி விட ஓடோடி வருவதும் நம்மிடமே. தமிழரின் வாக்குகள் இல்லாமலே ஆட்சி செய்துவிடலாம் என்கிற கனவுடன் துட்ட கைமுனுவின் நினைவிடத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டவர் பாதியில் தனது அரசியல் பயணம் இப்படி  அகாலமாய் மரிக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். இனி சிங்களம் நிமிர்வது பகற்கனவே. புலிகளை அழைத்ததன் விளைவை இவர்களும் எண்ணி வருந்தும் காலம் வந்துவிட்டது. ஆமா ... ஹிருணிக்கா இப்படி மாய்கிறாரே மருதருக்கு இது தெரியுமோ?                                                                                                            

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்தம்மா  எப்பிடி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருச்சு...நடந்தா வந்தவ...இதுக்கு எரிபொருள் எப்பிடி கிடைச்சது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

   

1 hour ago, alvayan said:

அட இந்தம்மா  எப்பிடி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருச்சு...நடந்தா வந்தவ...இதுக்கு எரிபொருள் எப்பிடி கிடைச்சது..

  MS should have cracked down on pro-MR rallies: Hirunika - Breaking News |  Daily Mirror Hirunika Premachandra Abduction Case: Seven suspects handed suspended  sentences | Daily News

ஐக்கிய மக்கள் சக்தியினரின் யாழ் போராட்டத்தில் குழப்பம்!

அந்தம்மா, இவ்வளவு குண்டாக வந்திட்டார்.. என்பதை நம்ப முடிகின்றதா. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

   

  MS should have cracked down on pro-MR rallies: Hirunika - Breaking News |  Daily Mirror Hirunika Premachandra Abduction Case: Seven suspects handed suspended  sentences | Daily News

ஐக்கிய மக்கள் சக்தியினரின் யாழ் போராட்டத்தில் குழப்பம்!

அந்தம்மா, இவ்வளவு குண்டாக வந்திட்டார்.. என்பதை நம்ப முடிகின்றதா. 

இதுக்குத்தான் அவ தன்னை தயார் பண்ணினவ....😃

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும்...தமிழனுக்கு யாழ்ப்பாணத்திலை கை நீட்டினது பிழைதானே?...சும்மிடம் சொல்லி ஒரு வழக்குப் போடவேணும்..

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, உந்தக் “குடு” சித்தச்த்துக்குப் பக்கத்தில கறுப்பு டி சேர்ட்டோட நிண்டு விளக்குப் பிடிக்கிறது ஆர்? அடி பலமாய் விழூது!!!  

குடு சித்தாத்தின்ர கையில இருந்த சிங்கக் கொடியப் பறிச்சு, உடைச்சு, கொடியை பஸ்ஸுக்குக் கீழே எறிஞ்சு, அந்தப் பொல்லாலையே சித்தாத்தை அடிச்ச அந்தத் தங்கையெங்கே, சில வருஷத்துக்கு முன்னால, உதே யாழ்ப்பாணத்தில, ரணிலோட ஒரே மேடையில நிண்டு, சிங்கக் கொடியை ஆட்டோ ஆட்டெண்டு ஆட்டி, சிங்களத்துக்கு தன்ர விசிவாசத்தை காட்டின சம்பந்தன் ஐய்யா எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரஞ்சித் said:

 

அதிலிருக்கும் முஸ்லிம் பெண் தாங்கள் கொத்தபாயாவுக்குதான் vote பொட்டதென்று சொல்லுகிறா. எ்னைக் பொறுத்தவரை தமிழர்கள் சிங்களவர்கள் அடிபடுவதை ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கவேண்டும். 

Edited by ragaa

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ragaa said:

அதிலிருக்கும் முஸ்லிம் பெண் தாங்கள் கொத்தபாயாவுக்குதான் vote பொட்டதென்று சொல்லுகிறா. எ்னைக் பொறுத்தவரை தமிழர்கள் சிங்களவர்கள் அடிபடுவதை ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கவேண்டும். 

உண்மை. இதிலிருந்தாவது சிங்களச் சனம் தமிழனை எதிரியாப் பார்ப்பதை நிறுத்தி, என்னையும் நிம்மதியாக வாழவிட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களத்துக்குள் நடக்கும் பிரச்சனை ஏன் யாழ்ப்பாணத்துக்குள்ளை வருது? 

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரி மடம், அங்கஜன் மகதா அடி விழும் என்று தான் வரவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிங்களத்துக்குள் நடக்கும் பிரச்சனை ஏன் யாழ்ப்பாணத்துக்குள்ளை வருது? 

யூ டியூப் சனலில் பார்த்தால் தெரியுது எல்லாம் இறக்குமதி என்று...நம்மட ஆக்கள்  புதினம் பார்க்கினம்..நம்மட ஆக்களுக்கு பெரிசா அலட்டத்தேவயில்லை..என்ற எ ண்ணம்.இந்த கிருணிகா நம்மையும் கோத்துவிடத்தன் யாழ்ப்பாணம் ..வந்தவ போல் தெரியுது...ஊர்வலத்தில் பஸ்ஸில் வந்தளவு சனம்தான்..அவர்களின் உடையும் கதையும்..சொல்லுது யாரென்று..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, alvayan said:

யூ டியூப் சனலில் பார்த்தால் தெரியுது எல்லாம் இறக்குமதி என்று...நம்மட ஆக்கள்  புதினம் பார்க்கினம்..நம்மட ஆக்களுக்கு பெரிசா அலட்டத்தேவயில்லை..என்ற எ ண்ணம்.இந்த கிருணிகா நம்மையும் கோத்துவிடத்தன் யாழ்ப்பாணம் ..வந்தவ போல் தெரியுது...ஊர்வலத்தில் பஸ்ஸில் வந்தளவு சனம்தான்..அவர்களின் உடையும் கதையும்..சொல்லுது யாரென்று..

 

அதே! வெட்கக்கேடு, தமிழனை அழித்த இனம் இரண்டு பட்டு நிக்குது, அதுக்குள்ள எது நல்லது? கெட்டது? என்று எங்கடையள் சான்றிதழ் கொடுத்து, சண்டைபோட்டு அதுவும் தமிழன் செருப்பை கழட்டி அடிக்குமளவுக்கு எஜமான் விசுவாசம். கேடுகெட்ட தமிழன்! வேறெங்கேயும் காண முடியாது இந்த அசிங்கத்தை. 

தொடக்கம் அங்கு முடிவு இங்கு. மாத்தையா வந்துவிட்டு போனவரெல்லோ தேர்தல் வந்தாலும் சேர்ந்து தேர் இழுக்க கூப்பிட வந்தவை.

  • கருத்துக்கள உறவுகள்

வெழுவை  வாங்குவது  யாரென்று தெரியுமே 
நல்லூரானை இடித்து மலசலகூடம் கட்டுவேன்  என்று கூவிய அதே குடு குப்பாடியன் 
சரியான ஆளுக்கு தான் வெளுத்திருக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்தக்காணொளியிலும் இவன் இதுபற்றி இந்த வார்த்தைகளை கூறுகிறானே?  ஆரம்பத்திலிருந்து பாருங்கள். அவன் இதை ஏன் இந்த இடத்தில சொல்லுகிறான் என்று விளங்கவில்லை? அல்லது நான்தான் குழப்பியடிக்கிறேனோ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் . போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களின் விபரம் !

யாழ் . போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களின் விபரம் !

யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது .

நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை)  ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் ஒன்று இடம்பெற்றது . இதன் போது தேசிய கொடியுடன் வந்த மூவர் போராட்டக்காரர்களுடன் முரண்பட்டனர்.

அதில் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவினை மேற்கொண்டவாறே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டார்.

மேலும் குறித்த மூவரில் ஒருவர் தற்போது யாழில் வசித்து வரும் நிலையில் மற்றைய இருவரும் பிலியந்தல பகுதியை சேர்ந்தவர்கள் .

இதேவேளை இலங்கையின் சுதந்திர தினத்தினை வடக்கில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தினை முன்னெடுத்த போது , நேற்றைய தினம் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய மூவரும் யாழ்.நகர் பகுதியில் தேசிய கொடிகளுடன் பேரணி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1274379

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.