Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை முஸ்லிம் பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை முஸ்லிம் பெண்

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 
"அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், அதனால் போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை இஸ்லாமிய பெண்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நாளாந்தம் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

''கோட்டாபய கோ ஹோம்" என கோஷங்களை எழுப்பியவாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஒன்று கூடி போராடி வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில், கொழும்பு - காலி முகத்திடலுக்கு தன்னிச்சையாக கூடிய பெரும் எண்ணிக்கையிலானோர் நேற்றைய தினம் தன்னெழுச்சிப் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட போராட்டத்தில் பெருமளவில் இளைஞர், இளம் பெண்களே கலந்துக்கொண்டிருந்தனர்.

இதில் கலந்துக்கொண்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள், சாலை நடுவில் அமர்ந்து, நோன்பு திறந்து, தொழுகைகளில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில், ஏனைய மதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அவர்களுடன் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அத்துடன், நோன்பு திறந்து தொழுகைகளில் ஈடுபட்ட இஸ்லாமியர்களுக்கு, ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு உதவிகளையும் செய்திருந்தனர்.

சாலைகளில் நோன்பு திறந்த சந்தர்ப்பத்தில், ஏனைய மதத் தலைவர்களும் இஸ்லாமியர்களுடன் கைக்கோர்த்திருந்தனர்.

இதையடுத்து, போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த முஸ்லிம் பெண்கள், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தனர்.

''எங்களுக்கு வேறு நாடு இல்லை. இது தான் நாடு" என போராட்டத்தில் கலந்துக்கொண்ட சப்ரா தெரிவிக்கின்றார்.

"அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், அதனால் போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை இஸ்லாமிய பெண்

''இது எங்கட நாட்டுக்காக போராடுறோம் இன்றைக்கு. இது எங்கட நாடு. நாங்கள் எல்லாம், சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒன்றா சேர்ந்து வாழுகிற நாடு இது. எங்களுக்கு இந்த நாடு வேண்டும். நாங்க சந்தோசமாக இருக்க வேண்டும். எங்களுக்கு வேறு ஒன்றும் நாடு இல்ல. இது தான் நாடு. மனுசன்கள் போவாங்க. படிப்பாங்க வெளி ஊருக்கு. ஆனால் இது எங்கள் நாடு. இதைவிட்டுப் போகமாட்டோம். எங்களுக்கு சுதந்திரம் தேவை".

அவங்க முழு உலகத்துக்கும் நாட்டை வித்துட்டாங்க. எங்க சொத்து எங்களுக்கு வேணும். இது என் தாய் நாடு. நான் இங்கேதான் பிறந்தேன். இங்கேதான் இறப்பேன். எனக்கு ரொம்ப மன வருத்தம். ஆனால், கோட்டாபய இன்று எங்களை ஒன்று சேர்த்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த ஒன்றுக்காக மட்டும் நன்றி சொல்லவேண்டும்" என சப்ரா கூறுகிறார்.

''எங்கள் பிள்ளைகளோட பிள்ளைகளும், கடனை கட்டும் நிலைமை ஏற்பட்டிருக்கு, இந்த நாட்டை ஆட்சியாளர்கள் திருப்பித்தர வேண்டும்" என போராட்டத்தில் கலந்துக்கொண்ட அப்ஷா குறிப்பிடுகிறார்.

''இவரு போகத்தான் வேண்டும். இந்த நாட்டில் எங்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கு? எங்களுக்கு பெட்ரோல் இல்லை. டீசல் இல்லை. எங்களுக்கு வண்டி இல்லை. எங்கள் வாழ்க்கையில் எல்லாமே, கல்வி எல்லாமே எடுத்துட்டாங்க. எங்கள் நாட்டைத்தான் நாங்கள் திருப்பி கேட்கிறோம். வேறு ஒன்றும் இல்லை. அவர் திரும்பி போகலாம். எங்கள் நாட்டை எங்களுக்கு திருப்பி தந்துட்டு திருப்பி போகலாம். எங்களுக்கு பிறக்க இருக்குற பிள்ளைகளுக்கும் இந்த கடனை கட்ட வேண்டிய நிலைமை ஆகிவிட்டது.

"அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், அதனால் போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை இஸ்லாமிய பெண்

இந்த நாட்டுல இருந்து நாங்க போனா, இந்த நாட்டை யாரு காப்பாத்துறது? இந்த போராட்டம் பண்ணுறதே, எங்களுக்கு எங்க நாட்ட குடுங்க. எங்கள் பிள்ளைகளோட பிள்ளைகளுக்கு நிம்மதியாக வாழ்க்கைய கொண்டு போகிற மாதிரி நாட்டை கொடுங்கள் என்று கேட்பதற்குதான். இந்த போராட்டத்தை தொடர்வேன் என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்கள் போகாவிட்டால் போராடிக்கொண்டே இருப்போம்" என அப்ஷா தெரிவிக்கிறார்.

''தமிழ் பேசும் சிறுபான்மையாக அணியும் ஆடை முதல் ஒரு பெண்ணாக பல சவால்களை சந்தித்தேன். பொறுத்து கொண்டேன், இனி பொறுத்து கொள்ள முடியாது. போராட முதல் தடவையாக வீதிக்கு இறங்கி விட்டேன். முடிவு வரும் வரை நாட்டுக்காக போராடுவேன்" என ரஸானா குறிப்பிடுகிறார்.

''நாட்டை காப்பாற்றப் போராடுறோம். மக்களுக்காக போராடுறோம். வருங்காலத்தை நினைத்துப் போராடுறோம். இந்த போராட்டம் நிற்கப்போவது இல்லை. கோட்டா விலகும் வரை போராட்டம் நடக்கும். நாடு கடன் பட்டு, இவ்வளவு கஷ்டம் வருவதற்கு கோட்டாபய மட்டும் அல்ல. ராஜபக்ஷ குடும்பம் மொத்துமுமே காரணம். அது நிற்கும்வரை நாங்கள் போராடுவோம். எதிர்காலம் இன்னும் கேள்விக் குறியாகத்தான் இருக்கும். எனக்கு எந்தநாளும் சவால்தான்.

"அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், அதனால் போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை இஸ்லாமிய பெண்

இது வந்தது இன்று நேற்றல்ல. ராஜபக்ஷ அரசாங்கம் எப்போது வந்ததோ, அப்போது இருந்து, தமிழ் பேசும் மக்கள், இந்த இலங்கையில் உள்ள சிறுபான்மை மக்கள் பல சவால்களை சந்தித்தோம். வாழ்க்கையில முதல் தடவையாக போராட்டத்துக்கு வந்திருக்கேன்.

இதுக்கு முன்பு நடந்த அவ்வளவு சவாலையும் நான் பொறுத்துக் கொண்டேன். இப்போது முடியாது. சாலையில் இறங்கிவிட்டேன். கோட்டா வீட்டுக்கு போகும் வரைக்கும் நிறுத்தப் போவது இல்லை. கோட்டா எத்தனை பேரை இல்லாமம் ஆக்கமுடியும்? எத்தனை பேரை அழிக்க முடியும்? இதுக்கு முன்னாடி ராஜபக்ஷ குடும்பம் எத்தனை பேரை அழித்தது. இனி எத்தனை பேரை அழிக்க முடியும்? அதற்கு நாங்கள் தயார்" என ரஸானா தெரிவிக்கிறார்.

https://www.bbc.com/tamil/global-61058098

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா இரண்டு வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தனது அமைச்சரவையில் சேர்த்திருந்தால் இந்த உம்மா வேறு ஸ்டாண்ட் எடுத்திருப்பாங்க. ரிசாட், ஹக்கீம் போன்ற அமைச்சர்கள் கோட்டாவுக்கு ஆதரவாகத்தான் இருந்திருப்பார்கள். கோட்டாவின் விதி துருக்கித் தொப்பி அணியும் முஸ்லிம்களை அமைச்சரவையில் சேர்க்காமல் விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

இவை கேப்பில கடா வெட்டுகிற ஆட்கள்...கால்பேசிலை  கடைவிரித்து...சாப்பாடு வெட்டு வெட்டினதை  வைச்சே கண்டுபிடிக்கலாம்....நாங்கள்   தேங்காய்பூவில்லை....பால்ச்சோறும் ...சம்பலும்தானுமென்று...சாணக்கியன் தம்பிக்கு விளங்கினால் சரி..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை முஸ்லிம் பெண்

வடக்கு கிழக்கை இணைக்க விடமாட்டோம்…முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆர்ப்பரிப்பு….

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

வடக்கு கிழக்கை இணைக்க விடமாட்டோம்…முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆர்ப்பரிப்பு….

இதுதான் இவையின் தாரக மந்திரம்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஏராளன் said:

"அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால், அதனால் போராட வீதியில் இறங்கிவிட்டேன்" - இலங்கை இஸ்லாமிய பெண்

''இது எங்கட நாட்டுக்காக போராடுறோம் இன்றைக்கு. இது எங்கட நாடு. நாங்கள் எல்லாம், சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒன்றா சேர்ந்து வாழுகிற நாடு இது. எங்களுக்கு இந்த நாடு வேண்டும். நாங்க சந்தோசமாக இருக்க வேண்டும். எங்களுக்கு வேறு ஒன்றும் நாடு இல்ல. இது தான் நாடு. மனுசன்கள் போவாங்க. படிப்பாங்க வெளி ஊருக்கு. ஆனால் இது எங்கள் நாடு. இதைவிட்டுப் போகமாட்டோம். எங்களுக்கு சுதந்திரம் தேவை".

 சிரிலங்காவில ஒங்கலுக்கு என்ன சுதந்திரம் இல்ல? தமிழ் ஏரியாவோ இல்ல சிங்கல ஏரியாவோ எங்கையெண்டாலும் சௌக்கியமாய் தானே இருக்கீங்க...

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

அணியும் ஆடை முதல் அனைத்திலும் சவால்

பெண்கள் அணியும் ஆடைகளுக்கு இலங்கையில் சவால் வந்ததா? சவுதி அரேபியா, அப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் தானே பெண்கள் அணியும் ஆடைகளுக்கு தடை உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பெண்கள் அணியும் ஆடைகளுக்கு இலங்கையில் சவால் வந்ததா? சவுதி அரேபியா, அப்கானிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளில் தானே பெண்கள் அணியும் ஆடைகளுக்கு தடை உள்ளது.

ஒன்ஸ்மோர் பிளீஸ்....😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

 சிரிலங்காவில ஒங்கலுக்கு என்ன சுதந்திரம் இல்ல? தமிழ் ஏரியாவோ இல்ல சிங்கல ஏரியாவோ எங்கையெண்டாலும் சௌக்கியமாய் தானே இருக்கீங்க...

https://www.bbc.com/tamil/av-embeds/india-61063484

இந்த அழகான புள்ளையப் பாத்து எப்பிடி நானா ஒங்கலுக்கு இப்புடி கேக்க தோணிச்சு?!🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

https://www.bbc.com/tamil/av-embeds/india-61063484

இந்த அழகான புள்ளையப் பாத்து எப்பிடி நானா ஒங்கலுக்கு இப்புடி கேக்க தோணிச்சு?!🤣

அது.. புள்ள இல்ல, உம்மா. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

https://www.bbc.com/tamil/av-embeds/india-61063484

இந்த அழகான புள்ளையப் பாத்து எப்பிடி நானா ஒங்கலுக்கு இப்புடி கேக்க தோணிச்சு?!🤣

மன்னிக்கோணும் தம்பி. பக்கத்திலை கண் டாக்குத்தர் இருந்தால் உடனடியாக அணுகவும்.😁

 இதிலை கிட்டபார்வை  தூரப்பார்வை சரிபார்க்கவும் 😎

Ach wie gut dass niemand weiß - Optiker Sehtest' Tasse | Spreadshirt

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் சிறுபான்மையாக அணியும் ஆடை முதல் ஒரு பெண்ணாக பல சவால்களை சந்தித்தேன். பொறுத்து கொண்டேன், இனி பொறுத்து கொள்ள முடியாது. போராட முதல் தடவையாக வீதிக்கு இறங்கி விட்டேன். முடிவு வரும் வரை நாட்டுக்காக போராடுவேன்"

தன் மொழியின் ஒற்றுமையை காட்டிக்கொடுத்து வாழ துணியும் இனம் இவ்வாறு தான் சுயத்தை இழந்து தனியாக நிற்கும்.

இனியாவது உன் நியத்தை தேடு???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அது.. புள்ள இல்ல, உம்மா. 😂

1 hour ago, குமாரசாமி said:

மன்னிக்கோணும் தம்பி. பக்கத்திலை கண் டாக்குத்தர் இருந்தால் உடனடியாக அணுகவும்.😁

 இதிலை கிட்டபார்வை  தூரப்பார்வை சரிபார்க்கவும் 😎

Ach wie gut dass niemand weiß - Optiker Sehtest' Tasse | Spreadshirt

கடைசியா இங்கிலீசிலயும் கொச்சைத் தமிழிலும் பேசுறது புள்ளயா? உம்மாவா?!
40 தாண்டினா வெள்ளெழுத்து என்று சொல்லுவாங்க, எதுக்கும் சரி கண்டாக்டரை பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு போராட்டம் தமிழ் மக்களால் இனிஷியேட் பண்ணப்பட்டு இருந்தால் முஸ்லிம்கள் அதுக்கு ஆதரவு தந்திருப்பார்களா? எப்பவுமே வெல்ற பக்கத்திலதான் முஸ்லிம்கள் இருப்பார்கள். நோகாமல் நுங்கு சாப்பிடுவதில் வல்லவர்கள்.

புலிகள் காலத்தில் தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டபோது தென்கிழக்கு அலகு என்று முழங்கினர்கள். இப்ப அது எங்க போச்சுது எண்டு தெரியேல்லை. வடக்கு கிழக்கு இணைப்புக்கு தடையாக இருப்பவர்கள் இந்த முஸ்லிம்கள்.  இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது. கிழக்கு பிரிந்திருந்தால் சிங்களவருடன் சேர்ந்து அல்லது தமிழரை பேக்காட்டி ஆட்சி அமைக்கலாம். எதிரியைக் கூட நம்பலாம் ஆனால் துருக்கித் தொப்பி அணிந்த கணவான்களை நம்பக் கூடாது

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாலி said:

உண்மைதான்.. அதுவும் இலங்கை முஸ்லீம்கள் சேறுகண்ட இடத்தில் பூசி தண்ணிகண்ட இடத்தில் கழுவீட்டு போற சுயநலவாதிகள்.. ஆனால் இந்த விடயத்தில் தமிழ்நாட்டு முஸ்லீம்களை பாராட்டவேணும்.. அவர்கள் உன்னும் உணவிற்கும் பேசும் மொழிக்கும் வாழும் மண்ணுக்கும் விசுவாசமானவர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/mohamed.ajeem.9/videos/384500080341657/?

பசில் எனது நல்ல நண்பர்  அவரது நட்பு இன்று இல்லாததால் நான் வாடுகின்றேன் -ரிசாட்-

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, வாலி said:

https://www.facebook.com/mohamed.ajeem.9/videos/384500080341657/?

பசில் எனது நல்ல நண்பர்  அவரது நட்பு இன்று இல்லாததால் நான் வாடுகின்றேன் -ரிசாட்-

இந்த பசிலு இவருக்கு மட்டுமல்ல கிசிபுல்லாவுக்கும் மிக வேண்டப்பட்டவர்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.