Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய அரசாங்கம் அமைக்கப் பட்டாலும்... அமைச்சுப் பதவியை, ஏற்க மாட்டோம். – சுமந்திரன்.-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் போராட்டத்தை பொறுக்கமுடியாமல் டக்ளஸ் பிதற்றுகிறார் – சுமந்திரன்

தேசிய அரசாங்கம் அமைக்கப் பட்டாலும்... அமைச்சுப் பதவியை, ஏற்க மாட்டோம். – சுமந்திரன்.-

தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சாத்தியங்கள் இல்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை அரசாங்கம் தானாகவே முன்வந்து இரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரதமர் மஹிந்தவிடம் நேரில் முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.

பொருளாதார நெருக்கடியால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் இருந்து மீள்வதற்கான மாற்றுவழிகள் மற்றும் யோசனைகளை அரசாங்கத்திற்கு வழங்குவோம் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணை, நிறைவேற்று அதிகார முறைமையை இல்லது ஒழிப்பது மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்ற பிரேரணை குறித்து தமித் தேசிய கூட்டமைப்பு கூடி கலந்துரையாடி முடிவு செய்யும் என தெரிவித்தார்.

மேலும் தன்னுடன் தனிப்பட்ட முறையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிக்கா அம்மையாரும் கலந்துரையாடியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2022/1276438

  • கருத்துக்கள உறவுகள்

“நாடு கிடக்கிற நிலையில நரிக்கு உழுந்து வடை கேட்டிச்சாம்” என்ற பழமொழிதான் நினைவில் வருது.

தேசிய அரசாங்கம், அமைச்சுப் பதவி , பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான யோசனைகள் மற்றும் மாற்றுவழிகள் என்பனவற்றையெல்லாம் விட்டுப்போட்டு  மக்களின் கோரிக்கையை ஏற்று கோட்டா, மகிந்த, பசில் போன்றோர் உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்ற ஆலோசனையை சுமந்திரன் வழங்கவேண்டும். 

தேசிய அரசாங்கம் என்பதே ராஜபக்‌ஷகளைக் காப்பாற்றும் அல்லது அவர்களைத் தொடர்ந்து பதவியில் இருக்கச்செய்யும் ஒரு முயற்சிதானே!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் விழும்போதெல்லாம் தூக்கிவிட கிந்தயமும், இப்படியான் ஒட்டு உண்ணி களும் இருக்கும் வரை சிறிலங்கா திருந்துமா?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சுப் பதவிகளை உங்களுக்கு தரப்போவதில்லையே ? 

பழம் புளிக்குது போல கிடக்குது அண்..😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

நீங்கள் ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சுப் பதவிகளை உங்களுக்கு தரப்போவதில்லையே ? 

பழம் புளிக்குது போல கிடக்குது அண்..😆

கபிதனா... மேலே உள்ளதை, எழுதியது என்று...
என்னை ஒரு முறை, நுள்ளிப் பார்த்துக் கொண்டேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2022 at 14:17, தமிழ் சிறி said:

தன்னுடன் தனிப்பட்ட முறையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிக்கா அம்மையாரும் கலந்துரையாடியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

உள்நாட்டுக்காரரும் தனியச் சந்திக்கினம் வெளிநாட்டுக்காரரும் தனியச் சந்திக்கினம் இவரை அப்படி என்ன வியாபாரம் செய்கிறார்? இவ்வளவு பேர் இருக்க ஒதுக்கு தேடி கதைப்பதென்னவோ? இதுக்கு பெயர் கலந்துரையாடலாம். சம்பந்தம் கலக்கினமோ?

எட்டப்பரைத்தான் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேரம் பேசுறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, satan said:

சுமந்திரன்.... நிதி அமைச்சராகிறார்  என்று, முகநூலில்... சனம் கதைக்குது.
நீங்கள் கேள்விப் பட்டனிங்களோ....  😂 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

இது.... சுமந்திரன், போன தேர்தல் நேரம் பேசியது.
எப்படியோ...... அமைச்சர் ஆக வர, நீண்ட நாள் திட்டத்துடன் தான் இருக்கிறார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கபிதனா... மேலே உள்ளதை, எழுதியது என்று...
என்னை ஒரு முறை, நுள்ளிப் பார்த்துக் கொண்டேன். 😂

😆

சுமந்திரனது அரசியல் நிலைப்பாட்டில் எனக்கு சிறிதும் நம்பிக்கையில்லை. குறிப்பாக விடுதலைப் போராட்டத்தை விமர்சிக்கும் முறை மிகவும் அருவருப்பானது.

ஆனால் அவரை அரசியல் தவிர்ந்த பிற காரங்களுக்காக(😉) பிறர் விமர்சிக்கும்போது அதனை எதிர்க்கிறேன். அம்புட்டுதே.

தன்னை ஒருவரும் விஞ்சக்கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருப்பதாக மிகவும் உறுதியான தகவல். விஞ்சினால் இழுத்து வீழ்த்தவும் தயங்காதவர்.  அது அவரது குடும்ப உறுப்பினர்களின் ஜீனில் இருப்பதாக அறிந்தேன். 

எந்த அரசியல்வாதிதான் நேர்மையாக உழைத்திருக்கிறார்கள் ? SJV யைத் தவிர. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

இது.... சுமந்திரன், போன தேர்தல் நேரம் பேசியது.
எப்படியோ...... அமைச்சர் ஆக வர, நீண்ட நாள் திட்டத்துடன் தான் இருக்கிறார். 🤣

இவருக்கு மீன்பிடி அமைச்சுக் கூட குடுக்க மாட்டாங்கள்,இல்லையெண்டால் ஏதாவது ஒண்டுக்கும் உதவாத புது அமைச்சொண்டு உருவாக்கி குடுப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்,  டக்கிளஸ், வி. முரளிதரன், சிவநேசதுரை சந்திரகாந்தன் இவர்ளை விட இவர் எதில் குறைந்தகவர்? சிங்கள மக்களோடு வாழ்வது மிகப்பெரிய அதிஷ்டம் என போற்றுபவர் ஆனால் அவர்களின் அரசில் அமைச்சுப்பதவி பெறுவதற்கு தமிழ் வாக்குப்பலம் வேண்டும் ஒவ்வொருவருக்கும். சுத்த ஓநாய்க்கூட்டம்.

7 hours ago, வாதவூரான் said:

இவருக்கு மீன்பிடி அமைச்சுக் கூட குடுக்க மாட்டாங்கள்,இல்லையெண்டால் ஏதாவது ஒண்டுக்கும் உதவாத புது அமைச்சொண்டு உருவாக்கி குடுப்பினம்

 அவனவன் செயற்பாடு, தந்திரம் என்பவற்றை கருத்திற்கொண்டு இவர்களை அணைப்பவர்கள், தங்களுக்கு தாங்களே பொறி வைப்பார்களா? இவருக்கு பதவி கொடுத்து தமிழரை காலி பண்ணும் கொண்டோடிப்பதவிதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

கபிதனா... மேலே உள்ளதை, எழுதியது என்று...
என்னை ஒரு முறை, நுள்ளிப் பார்த்துக் கொண்டேன். 😂

அட நீங்கள் நுள்ளி பாத்தது மட்டும் தான்...நான் பிளேட்டாலை கீறிப்பாத்தனான்(இரத்தபொட்டு வைச்ச பழக்கதோசமாக்கும்) ☺️

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

நீங்கள் ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சுப் பதவிகளை உங்களுக்கு தரப்போவதில்லையே ? 

பழம் புளிக்குது போல கிடக்குது அண்..😆

சுமந்திரன் கனடா வந்த சமயம் அவர் எதோ நகர்வுகள் செய்கிறார். அமெரிக்கா கூப்பிட்டுத்தான் வந்தவர். கனடா பாராளுமன்றத்துக்கு வெளியில் நிண்டு மட்டும் போட்டோ எடுக்கவில்லை, உள்ளேயும் போய் கதைச்சவர் என்று எழுதினீர்களே கற்பிதன்.

அந்த நிலைப்பாட்டில் இருந்து ஏன் மாறினீர்கள்?

நக்கலாக கேட்கவில்லை. உங்கள் நிலைப்பாடு ஏன் மாறியது என்பதை நீங்கள் சொன்னால் சும்மை பற்றிய கணிப்பு சரிதான் என்ற முடிவுக்கு வர ஏதுவாக இருக்கும்.

பிகு: 2015 வரை இப்படி சும்முக்கு benefit of the doubt கொடுத்தவந்தான் நானும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2022 at 14:17, தமிழ் சிறி said:

தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சாத்தியங்கள் இல்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இவர் அப்பப்ப மாறி மாறி கதைத்து விடுகதை, அகடவிகடம் பேசுவார். அதையெல்லாம் கணக்கிலெடுத்து விவாதிக்கக்கூடாது.  இது அவரின் தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்தல்ல என்று கூட்டணியிலுள்ள மற்றவர்கள் அறிக்கை விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

நீங்கள் ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சுப் பதவிகளை உங்களுக்கு தரப்போவதில்லையே ? 

பழம் புளிக்குது போல கிடக்குது அண்..😆

அவர் கூறுவது சரி ,அமைச்சு பதவியை விட பெரிய விடயத்தை அவர் செய்கின்றார் ..
அமேரிக்கா
இந்தியா
சீனா
மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் எதை எதிர் பார்க்கின்றனரோ அதை அவர் முன்னிலைப்படுத்துகிறார்..

சிறிலங்கா மக்கள் ஒற்றுமையாக இன,மத பேதம் இன்றி வாழ்கின்றனர் ,
இன குழுமங்களுக்கு என தனிப்பிரதேச  அடையாளங்கள் தேவையில்லை  
 
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

சிறிலங்கா மக்கள் ஒற்றுமையாக இன,மத பேதம் இன்றி வாழ்கின்றனர் ,
இன குழுமங்களுக்கு என தனிப்பிரதேச  அடையாளங்கள் தேவையில்லை

 இதற்காகவே மஹிந்தவால் தமிழரிடையே உள்நுழைக்கப்பட்டவர் இவர். அதை செவ்வனே செய்கிறார். தமிழ்க்கட்சிகளை, தேசியத்தை உடைப்பது பிரதான கடமை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பிகு: 2015 வரை இப்படி சும்முக்கு benefit of the doubt கொடுத்தவந்தான் நானும். 

சிங்கள தலைவருக்கு தற்பொழுது சிங்கள இளைஞர்கள் பாடம் புகட்டுகின்றனர்...

எங்கன்ட தலைவர்களுக்கு இளைஞர்கள் 40 வருடத்திற்கு முதல் ஆயுதம் பாவித்தும் திருந்த வில்லை இனியும் திருந்த மாட்டார்கள் .....

சில வேளை அவர்களின்  வீட்டுக்கு முன் நின்று  தற்பொழுது நடைபெறும் கருவாக்காடு (colombo 7)ஸ்டைல் போராட்டம் நடத்தினால் திருந்துவார்கள்

4 minutes ago, satan said:

 இதற்காகவே மஹிந்தவால் தமிழரிடையே உள்நுழைக்கப்பட்டவர் இவர். அதை செவ்வனே செய்கிறார். தமிழ்க்கட்சிகளை, தேசியத்தை உடைப்பது பிரதான கடமை.

தேசிய அரசாங்கம் அமைத்தவுடன் எங்கட மக்களுக்கு தளபதி... 
ஆனால் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு சிங்கள அரசுகளின் தேசிய நலன்விரும்பி 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

தேசிய அரசாங்கம் அமைத்தவுடன் எங்கட மக்களுக்கு தளபதி... 
ஆனால் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கு சிங்கள அரசுகளின் தேசிய நலன்விரும்பி 

 இவர் எங்களுக்கு தளபதி? எங்கள் கதி அதோ கதிதான்!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

 இவர் எங்களுக்கு தளபதி? எங்கள் கதி அதோ கதிதான்!

சம்பந்தன் தன்னுடைய கொள்கைக்கு சரியான தளபதியை சிறிலங்கா தேசியத்திற்கு காட்டி விட்டுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

சம்பந்தன் தன்னுடைய கொள்கைக்கு சரியான தளபதியை சிறிலங்கா தேசியத்திற்கு காட்டி விட்டுள்ளார்

தன் மொள்ளைமாரித்தனத்திலிருந்தும்,  கையாலாகத்தனத்திலிருந்தும்  தான் தப்புவதற்காக.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

தன் மொள்ளைமாரித்தனத்திலிருந்தும்,  கையாலாகத்தனத்திலிருந்தும்  தான் தப்புவதற்காக.

60 வருடங்களாக அவர் செய்த தொழிலை இவர் செய்வார்....டிசன்டா சொல்லுவது என்றால் 
சிறிலங்கா தேசியத்திற்கு உயிர் உடல் ஆவி, தமிழ்தேசித்திற்கு நிழல் 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

சுமந்திரன் கனடா வந்த சமயம் அவர் எதோ நகர்வுகள் செய்கிறார். அமெரிக்கா கூப்பிட்டுத்தான் வந்தவர். கனடா பாராளுமன்றத்துக்கு வெளியில் நிண்டு மட்டும் போட்டோ எடுக்கவில்லை, உள்ளேயும் போய் கதைச்சவர் என்று எழுதினீர்களே கற்பிதன்.

அந்த நிலைப்பாட்டில் இருந்து ஏன் மாறினீர்கள்?

நக்கலாக கேட்கவில்லை. உங்கள் நிலைப்பாடு ஏன் மாறியது என்பதை நீங்கள் சொன்னால் சும்மை பற்றிய கணிப்பு சரிதான் என்ற முடிவுக்கு வர ஏதுவாக இருக்கும்.

பிகு: 2015 வரை இப்படி சும்முக்கு benefit of the doubt கொடுத்தவந்தான் நானும். 

அந்த நிலைப்பாட்டில் இருந்து நான் மாறவில்லை. 

திரும்ப்வும் கூறுகிறேன், TNA யை அமெரிக்கா அழைத்து கதைத்திருந்தது. அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக கூறியிருந்தார்க்ள். இந்த விடயத்தை ஒழுங்கு செய்தவர்களை நான் அறிவேன். . 

சுமந்திரன் தொடர்பான விமர்சனங்களை  மூன்று விதமாகப் பார்க்கிறேன.

1) அவரது அரசியல் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விமர்சிப்பவர்கள். 

2) அவரது தனிப்பட்ட குணநலனின் அடிப்படியில் அவரை விமர்சிப்பவர்கள்.  

3) அவர் TNA யின் தலைமைத்துவத்தை பிடித்துவிடுவார் என்கின்ற அடிப்படையில், அவரை எப்படியாவது அந்த இடத்தை பிடிக்க விடக்கூடாது என்கின்ற அடிப்படையில் அவரை விமர்சிப்பவர்கள். 

இங்கே 1)விடயத்தில் சுமந்திரனை பல இடங்களில் நான் ஆதரித்து வந்துள்ளேன். அதற்குக் காரணம்  எங்கள் அரசியல்வாதிகளிடையே உள்ள Intellectuals ன் பற்றாக்குறை. தெரிவுகள் மிகக் குறைவான இடத்தில் விரும்பியோ விரும்பாவிட்டால்லோ அவரைத் தாங்கிப்பிடிக்க வேண்டிய தேவை (தற்போதும்) இருக்கிறது.

பல இடங்களில் அவரது நிலைப்பாட்டை கடுமையாக எதிர்க்கிறேன். உதாரணமாக போராட்டம், போராளிகள் தொடர்பாக அவர்து கருத்துக்கள் ஒட்டுமொத்த தியாகத்தையும் கொச்சைப்படுத்துகின்றது. போராட்டத்தை இகழ்வது கோபத்தை கடுமையான  உண்டுபண்ணுவதோடு எங்கள் பக்கம் உள்ள நியாயமான காரணங்களை வலுவிழக்கச் செய்யும். இதனால் பல இடங்களில் அவரை எதிர்க்கிறேன்.

2) அவரது தனிப்பட்ட  குணநலனில் உள்ள குறைபாடு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் பாதிப்பை உண்டுபண்ணும். சரியான தலைமைத்துவம் எப்போதுமே தன்னைச் சூழவுள்ளவர்களது வளர்ச்சியை விரும்பும். ஆனால் சுமந்திரனது செய்கை, வளர விரும்புபவர்களை / அதற்கான தகுதியுள்லவர்களை கத்தரித்துவிடுவதாக இருக்கிறது (உ+ம் சாணக்கியன் ).  இவரது செயற்பாடு நீண்ட காலத்தில் தமிழருக்கு மிகவும் பலவீனமான அரசியல் ஆழுமைகளை உருவாக்கிவிடும். அத்தகைய அரசியல் தலைவர்கள் ஒன்று சோரம் போவார்கள் அல்லது பேரம்பேசும் துணிவுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். 

மேலே நான் கூறிய 3) வது வகையான விமரிசனங்களையே நான் கடுமையாக எதிர்க்கிறேன். இந்த வகை விமர்சனங்களுக்கு அவர்கள்(விமர்சனம் செய்வோர்) இலகுவாகத் தூக்கும் ஆயுதம் சமயம். சமயத்தை பின்னணியாகக் கொண்டு அவரை விமர்சனம் செய்யும்போது சுமந்திரனுக்கு நான் ஆதரவளிக்கிறேன். ஏனென்றால் சாதி சமய ரீதியிலான பிரிவினால் பாதிக்கப்படுவது சிறுபான்மை சமயத்தவர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகம் அதனால் பாதிக்கப்படுகிறது.

உதாரணமாக மன்னார் மாவட்டத்தில் TNA யை எதிர்த்து(உயர்குல யாழ்ப்பாண சைவ வேளாளர்) மன்னார் மாவட்ட மக்களை ஒருங்கிணைக்கும் வேலை  ஆரம்பமாகியுள்ளது. அவர்கள் தனித்து இயங்குவதற்காக ஒன்று சேர்கிறார்கள். TNA யை எதிர்த்துப் போட்டியிட கங்கணம் கட்டியுள்ளனர். 

அதற்கு அவர்களது விளக்கம், 

1) யாழ்ப்பாணத்துத் தலைமை (சைவ, வேளாளர்) மன்னாரைப் புறக்கணிக்கிறது. 

2) மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் சமயப் பூசல்கள் எல்லாவற்றிற்கும் காரணம் இந்த யாழ்ப்பாண சைவ வேளாளத் தலைமையே. உதாரணமாக திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் நிர்வாகம்(?) அல்லது உரிமையாளர்கள் அவரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தவரே. அவர்கள்தான் இங்கே பிரச்சனையை உருவாக்குகிறார்கள்.

எனவே, மேற்கூறிய காரணங்களால்தான் பல இடங்களில் சுமந்திரனை நான் ஆதரிக்கிறேன்  அல்லது பல இடங்களில் அவரை எதிர்க்கிறேன்.

(என்ன  குழப்பமாக இருக்கிறதா 🤣)

10 hours ago, putthan said:

அவர் கூறுவது சரி ,அமைச்சு பதவியை விட பெரிய விடயத்தை அவர் செய்கின்றார் ..
அமேரிக்கா
இந்தியா
சீனா
மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் எதை எதிர் பார்க்கின்றனரோ அதை அவர் முன்னிலைப்படுத்துகிறார்..

சிறிலங்கா மக்கள் ஒற்றுமையாக இன,மத பேதம் இன்றி வாழ்கின்றனர் ,
இன குழுமங்களுக்கு என தனிப்பிரதேச  அடையாளங்கள் தேவையில்லை  
 
இப்போது இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் நாளடைவில் இதுதான் நடைபெறப்போகிறது. 

ஒட்டுமொத்த இந்தியாவையும் 2% மான பிராமணர்கள்தான் ஆழ்கிறார்கள். உலகில் பல நாடுகளில் சிறுபான்மையினர்தான் நாட்டை ஆழ்கிறார்கள் என்பதையும் கவனிக்க. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

இப்போது இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் நாளடைவில் இதுதான் நடைபெறப்போகிறது. 

ஒட்டுமொத்த இந்தியாவையும் 2% மான பிராமணர்கள்தான் ஆழ்கிறார்கள். உலகில் பல நாடுகளில் சிறுபான்மையினர்தான் நாட்டை ஆழ்கிறார்கள் என்பதையும் கவனிக்க. 

மீண்டும் மீண்டும் நாடுகளையும் மக்களையும் குழப்பத்திலும், பசி, பட்டிணி எனவும் அலைய விடாமல் 75% வீதமாவது நிம்மதியா வாழவிட வேண்டும் ...

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

)விடயத்தில் சுமந்திரனை பல இடங்களில் நான் ஆதரித்து வந்துள்ளேன். அதற்குக் காரணம்  எங்கள் அரசியல்வாதிகளிடையே உள்ள Intellectuals ன் பற்றாக்குறை. தெரிவுகள் மிகக் குறைவான இடத்தில் விரும்பியோ விரும்பாவிட்டால்லோ அவரைத் தாங்கிப்பிடிக்க வேண்டிய தேவை (தற்போதும்) இருக்கிறது.

இவர் அரசியலுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது, இன்னும் விட்ட இடத்திலிருந்து பின்னோக்கியே செல்கிறது. எதுவும் இவரின் வரவால், இருப்பால் முன்னேற்றமடைந்ததாக தெரியவில்லை. அவ்வளவு திறமை இவருகிருந்திருந்தால்; முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரனை களமிறக்கி, நாறடித்திருக்க வேண்டியதில்லையே!

11 hours ago, Kapithan said:

இலகுவாகத் தூக்கும் ஆயுதம் சமயம். சமயத்தை பின்னணியாகக் கொண்டு அவரை விமர்சனம் செய்யும்போது சுமந்திரனுக்கு நான் ஆதரவளிக்கிறேன்.

11 hours ago, Kapithan said:

அதற்கு அவர்களது விளக்கம், 

1) யாழ்ப்பாணத்துத் தலைமை (சைவ, வேளாளர்) மன்னாரைப் புறக்கணிக்கிறது.

11 hours ago, Kapithan said:

மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் சமயப் பூசல்கள் எல்லாவற்றிற்கும் காரணம் இந்த யாழ்ப்பாண சைவ வேளாளத் தலைமையே

இதற்கும் சுமந்திரனுக்கும் என்ன தொடர்பு? அவர் கிறிஸ்தவர் என்பதார்த்தான் விமர்சிக்கப்படுகிறார் என்கிற முன்னைய வாதம் அடிபட்டுப்போகிறதே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இவர் அரசியலுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது, இன்னும் விட்ட இடத்திலிருந்து பின்னோக்கியே செல்கிறது. எதுவும் இவரின் வரவால், இருப்பால் முன்னேற்றமடைந்ததாக தெரியவில்லை. அவ்வளவு திறமை இவருகிருந்திருந்தால்; முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரனை களமிறக்கி, நாறடித்திருக்க வேண்டியதில்லையே!

இதற்கும் சுமந்திரனுக்கும் என்ன தொடர்பு? அவர் கிறிஸ்தவர் என்பதார்த்தான் விமர்சிக்கப்படுகிறார் என்கிற முன்னைய வாதம் அடிபட்டுப்போகிறதே?

"இதற்கும் சுமந்திரனுக்கும் என்ன தொடர்பு? அவர் கிறிஸ்தவர் என்பதார்த்தான் விமர்சிக்கப்படுகிறார் என்கிற முன்னைய வாதம் அடிபட்டுப்போகிறதே?"

மன்னார் மாவட்டத்தில்  தற்போது கலந்துரையாடப்பட்டுவரும் விடத்தைக் கூறியிருக்கிறேன். 

சமய ரீதியிலான, பிர்தேச ரீதியிலான, சாதி ரீதியிலான செயற்பாடுகள் எம்மை எப்படிப் பலவீனப்படுத்தும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். 

(மேலும் சிறு தகவல் ஒன்று - கனடாவின் Winnipeg  மாகாணத்தில் இன்று, இலங்கையில் இருந்து வந்த சிங்களம் அரசின் முகவர்களும், கனடாவில் தங்களை நிலை நிறுத்தியிருக்கும் சிங்கள Professionals ம் கனடாவில் புலம்பெயர்ந்த தமிழர்களின் செய்ர்பாடுகளை முறியடிப்பது தொடர்பாக  கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருக்கின்றனர்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.