Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவற்காரத்தின் விலை... சடுதியாக, அதிகரிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சவற்காரத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!

சவற்காரத்தின் விலை... சடுதியாக, அதிகரிப்பு!

சவற்காரத்தின் விலையை 100%க்கும் மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இலங்கையில் 70 ரூபாய் பெறுமதியான சவற்காரத்தின் விலை 115 ஆகவும், 75 ரூபாயாக இருந்த சவற்காரத்தின் விலை 145 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுவர்களுக்கான சவற்காரத்தின் விலை 74 இல் இருந்து 175 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1278413

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் சனம் சவர்க்காரம் வாங்குதோ?!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அது தான் சனம் சவர்க்காரம் வாங்குதோ?!

அதேதான்! வேண்டக்கூடியதை எல்லாம் வேண்டி அடுக்குங்கோ வீட்டில, பின்னுக்கு உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு பனங்களி இருக்கே 🤣

3 hours ago, satan said:

அதேதான்! வேண்டக்கூடியதை எல்லாம் வேண்டி அடுக்குங்கோ வீட்டில, பின்னுக்கு உதவும்.

பின்னுக்கு உதவும் என்று கோவிற்-19 ஆரம்பத்தில் சனங்கள் எல்லாம் toilet paper க்கு அடிபட்டதைச் சொல்லுறீங்களோ ? 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

அதேதான்! வேண்டக்கூடியதை எல்லாம் வேண்டி அடுக்குங்கோ வீட்டில, பின்னுக்கு உதவும்.

4 minutes ago, Kapithan said:

எங்களுக்கு பனங்களி இருக்கே 🤣

பின்னுக்கு உதவும் என்று கோவிற்-19 ஆரம்பத்தில் சனங்கள் எல்லாம் toilet paper க்கு அடிபட்டதைச் சொல்லுறீங்களோ ? 🤣

அவர்… பின்னுக்கு உதவும் எண்டது, 😁
பிற்காலத்துக்கு உதவும் எண்டதை   “மீன்” பண்ணினவர். 😂
உங்களுக்கு எப்பவும் கெட்ட நினைப்பு. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text

May be a meme of 6 people and text that says 'இதுவரைக்கும் சோப்புக்கு போலிங்ல நின்னுருக்கியா GUEST TRoLL VAVUNIYA Lona இனிமேல் நிப்ப.....!'

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Paanch said:

உள்ளூர் உற்பத்தி என்று 60 ரூபாவுக்கு  விக்கிறாங்கள், வேறையோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆவரசம் இலை இல்லாட்டி செவ்வரத்தம் இலைய அரைச்சுப்போட்டு உடம்பிலை தேய்ச்சு குளிச்சு பாருங்கோ. அந்தமாதிரி இருக்கும்
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

அவர்… பின்னுக்கு உதவும் எண்டது, 😁
பிற்காலத்துக்கு உதவும் எண்டதை   “மீன்” பண்ணினவர். 😂
உங்களுக்கு எப்பவும் கெட்ட நினைப்பு. 🤣

இப்ப நான் என்னத்தப் பிழையாச் சொல்லிப்போட்டன். இந்தாழுக்கு பகிடியும் விழங்காது ஒரு ...... விழங்காது

🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஆவரசம் இலை இல்லாட்டி செவ்வரத்தம் இலைய அரைச்சுப்போட்டு உடம்பிலை தேய்ச்சு குளிச்சு பாருங்கோ. அந்தமாதிரி இருக்கும்
 
90-95 காலப்பகுதிகளில் சம்போ இல்லை. 
செவ்வரத்தம் இலையை அரைச்சு பாவிச்ச நினைவு. அதோட அரப்பு, எலுமிச்சை போட்டு அவிச்சு தலைக்கு தேய்த்து தோய்ந்திருக்கிறோம்.
குத்தரிசிக் கஞ்சியும் தலைக்கு தேய்ச்சிருக்கிறம். அது ஒரு பொற்காலம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

ஆவரசம் இலை இல்லாட்டி செவ்வரத்தம் இலைய அரைச்சுப்போட்டு உடம்பிலை தேய்ச்சு குளிச்சு பாருங்கோ. அந்தமாதிரி இருக்கும்
 
குளிசை போட்டுப் பன்னிரண்டு மணித்தியாலத்திற்குள் வந்த கொரோனாவை அடித்து விரட்டி மீண்டும் களம் புகுந்த கு.சாமியாருக்கு வாழ்த்துக்கள்!! அந்தக் குளிசையின் பெயரென்ன சாமியார்.???😋

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

குளிசை போட்டுப் பன்னிரண்டு மணித்தியாலத்திற்குள் வந்த கொரோனாவை அடித்து விரட்டி மீண்டும் களம் புகுந்த கு.சாமியாருக்கு வாழ்த்துக்கள்!! அந்தக் குளிசையின் பெயரென்ன சாமியார்.???😋

வயாகரா.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

ஆவரசம் இலை இல்லாட்டி செவ்வரத்தம் இலைய அரைச்சுப்போட்டு உடம்பிலை தேய்ச்சு குளிச்சு பாருங்கோ. அந்தமாதிரி இருக்கும்
 
உப்பிடி எத்தினையை புதுசு புதுசாய் கண்டுபிடித்து பாவித்தோம் சத்தம் காட்டாமல், இவையளைப்போல ஆர்ப்பாட்டமே போட்டனாங்கள்? இப்ப விளங்கியிருக்கும் கோத்தாவுக்கு எத்தனை இழப்பை ஏற்படுத்தி வருத்தினேன், அத்தனை அழிவையும் தாங்கினார்கள் இப்பிடி தாக்கவில்லையே என்னை என்று. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Paanch said:

குளிசை போட்டுப் பன்னிரண்டு மணித்தியாலத்திற்குள் வந்த கொரோனாவை அடித்து விரட்டி மீண்டும் களம் புகுந்த கு.சாமியாருக்கு வாழ்த்துக்கள்!! அந்தக் குளிசையின் பெயரென்ன சாமியார்.???😋

1 hour ago, தமிழ் சிறி said:

வயாகரா.

பக்கத்து வீட்டுக்காரர் இரண்டு பேரும் வந்திட்டினம் பேசிப்பறைஞ்சு கேள்வியும் கேட்டு பதிலும் சொல்ல......😂🤣😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/4/2022 at 13:34, தமிழ் சிறி said:

சவற்காரத்தின் விலை... சடுதியாக, அதிகரிப்பு!

நன்கு சூப்பிய  multi purpose பனங்கொட்டைகள் விற்பனைக்கு உண்டு.
உடுப்பு துவைக்கவும், உடல் கழுவவும் பொருத்தமானவை.
மூன்று 750 ரூபாய் மாத்திரம். 

Keine Fotobeschreibung verfügbar.

ஊரில் இப்பவும் மில்க்வைற் சோப் உட்பட மில்க்வைற் நிறுவனத்தின் பொருட்கள் உற்பத்தி செய்ப்படுகின்றனவா? 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

நன்கு சூப்பிய  multi purpose பனங்கொட்டைகள் விற்பனைக்கு உண்டு.
உடுப்பு துவைக்கவும், உடல் கழுவவும் பொருத்தமானவை.
மூன்று 750 ரூபாய் மாத்திரம். 

Keine Fotobeschreibung verfügbar.

யூ ரியுப்பர் ஒருவர் பனங்காணிகளில் பனம்பழம் விமுந்திருக்கா என்று தேடி திரியும்  லிங்கும் பார்க்க முடிகிறது தானே. பாவங்களா இருக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

கண்டால் வரச் சொல்லுங்க 

E42-F25-B9-7411-4449-A1-C8-0-C3598-AE2-F

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஊரில் இப்பவும் மில்க்வைற் சோப் உட்பட மில்க்வைற் நிறுவனத்தின் பொருட்கள் உற்பத்தி செய்ப்படுகின்றனவா? 

43 minutes ago, MEERA said:

கண்டால் வரச் சொல்லுங்க 

E42-F25-B9-7411-4449-A1-C8-0-C3598-AE2-F

தமிழ்முரசு Tamil Murasu: சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற்  சோப்பின் அருமை - கானா பிரபா - ஈழப்போர்காலத்துநினைவுகள்

காணொளியில் குறிப்பிட்டுள்ள படி.... போர்க் காலத்தில்,
பரந்தன் இரசாயன தொழிற்சாலை இயங்காமல் போன பின்...
மூலப் பொருட்கள் கிடைக்காததால், 
பெருமளவான அளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை என்றும்,
ஆனாலும்... கிடைக்கின்ற மூலப் பொருட்களை கொண்டு 
மிகச்  சிறிய அளவில்... மூன்றாம் தலை முறையை சேர்ந்தவரால் 
தொழிற்சாலை  நடத்தப் படுகின்றது. 

மக்களின் ஆதரவு... சென்ற தலைமுறையில் இருந்ததை விட,
தற்போது... குறைவு போல் தெரிகின்றது.
வெளிநாட்டுப் பணத்தில்... விலை உயர்ந்த சவர்க்காரங்களை 
வாங்குகின்றார்கள் போல் உள்ளது. 

இந்த தொழிற்சாலையில் சிறப்பு... 
மின்சாரத்தில் இயங்கும் உள்நாட்டு தயாரிப்பு இயந்திரங்களும்,
மின்சாரம் இல்லாத நேரம்... கையால் இயக்கப் படும் இயந்திரங்களும் உள்ளன.
நேரம் ஒதுக்கி... மேல் உள்ள காணொளியை பாருங்கள். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, தமிழ் சிறி said:

காணொளியில் குறிப்பிட்டுள்ள படி.... போர்க் காலத்தில்,
பரந்தன் இரசாயன தொழிற்சாலை இயங்காமல் போன பின்...
மூலப் பொருட்கள் கிடைக்காததால், 

சிறித்தம்பி! எப்ப இனவாத சிங்களம் தமிழர் பிரதேசங்களில் உள்ள பெரிய தொழிற்சாலைகளை இடம் மாற்ற ஆரம்பித்ததோ அன்றே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட தொடங்கி விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! எப்ப இனவாத சிங்களம் தமிழர் பிரதேசங்களில் உள்ள பெரிய தொழிற்சாலைகளை இடம் மாற்ற ஆரம்பித்ததோ அன்றே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட தொடங்கி விட்டது.

குமாரசாமி அண்ணை…
பெருமாள் சொல்வது போல்… சிங்களவன்,
தமிழனைப்  போல் கஸ்ரப்பட்டு வேலை செய்ய மாட்டான்.
அவனுக்கு…. தட்டிப் பறித்து… சாப்பிடுவதில் தான், ஆர்வம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை…
பெருமாள் சொல்வது போல்… சிங்களவன்,
தமிழனைப்  போல் கஸ்ரப்பட்டு வேலை செய்ய மாட்டான்.
அவனுக்கு…. தட்டிப் பறித்து… சாப்பிடுவதில் தான், ஆர்வம்.

ஆக மிஞ்சிப்போனால் தமிழர் சொத்துக்களை,கடைகளை இனக்கலவரம் நடத்தியாவது களவெடுத்து தின்னுவானுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில குறிப்பாக யாழ்ப்பாணததில இருக்கும் கடைகளில் சவர்க்காரத்தை வழிச்சு துடைச்சிட்டாங்கள்!(கடைக்காறனும் ஒழிச்சிருப்பான்)
தீப்பெட்டி ஒன்றின் விலை 50 ரூபா.

இனி வெளிநாட்டவர்கள் வரும்போது சொக்கிளேற் கொண்டுவராதீங்க!
அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு வாங்க.
பிரான்ஸில இருந்து வந்த சித்தி அங்கர் மா கொண்டு வந்து தந்தவ! இங்க ஒரு இடமும் அங்கர் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

D9913-BA7-7-D3-C-41-AA-A35-B-4073-EA31-F

இப்படி காசு உள்ளவன் வாங்கினால், நாள் கூலிக்கு வேலை செய்பவனின் நிலை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.