Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் மன்னிக்கவும், இங்கே ஒரு வரிகூட எழுதக்கூடாது என்றே நான் நினைத்தேன்... இருந்தாலும் என்னுடைய ஆதங்கத்தையும் பதிந்து விடுகிறேன்.
 
ரஞ்சித் யாழ் அகவை - சுய ஆக்கங்கள் - பகுதியில் தனது அவதானிப்பு, புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு கட்டுரை வரைகிறார். அதற்கான இடத்தை , சுதந்திரத்தை அவருக்கு கொடுக்கும் அடிப்படை மாண்பு மீறி 
தங்களது கிறுக்குப்பிள்ளை அரசியல் எதிர் வாதத்தையும் இங்கே வைக்கிறார்கள்.

உங்ககளால் முடிந்தால் ரஷியா தன்னிச்சையாக மேட்கொண்டு வரும் யுத்தம், அவர்கள் பக்கத்துக்கான ஞயாயங்களை பக்கம் பக்கமாக எழுதுங்களேன். யார் உங்களை தடுத்தார்கள்?
வெறுமனே ஆதாரமற்ற "உக்ரைன் போட்ட "பொஸ்பரஸ்" குண்டு, உக்ரைன் கொன்ற "செஞ்சோலை சிறார் " போன்ற "டிக் டொக்" வீடியோ பார்த்து உணர்ச்சி பிழம்பாவத்தை விட்டு உருப்படியாக எதையாவது எழுதுங்கள் நாங்களும் வாசிக்கலாம்.

இன்றும் கூட ஒரு வீடியோ பார்த்தேன்... கைகள் கட்டப்பட்ட ஒரு மனிதனின் நெஞ்சாங்கூடு பிளக்கப்பட்டு, தசை நார்கள் கிழிக்கப்பட்டு இதயம் துடிக்க துடிக்க பிடுங்கப்படுகிறது... பின்னணியில் "நித்திரையோ தமிழா நீ .. திரும்பிப்பாரடா" பாட்டு ஓட்டுகிறது. ஆனால் அந்த வீடியோ தென்அமெரிக்க நாட்டில் நடந்த சம்பவம் போல் தெரிகிறது.
இப்படித்தான் எம்மவரை "உணர்ச்சியுள்ள தேசியவாதிகளாக" காட்ட பாடுபடுகிறார்கள்.
நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். அதன் முடிவில் நியாயங்களை, "மாயங்களை" தீர்மானிப்பது வாசிப்பவர்களாக இருக்கட்டும்.  

  • Replies 187
  • Views 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பகிடி
    பகிடி

    நான் யாழ் தளத்தை பல ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இப்பொழுது தான் உறுப்பினர் ஆக இணைந்து கொண்டேன். நான் உக்ரைனில் 2006 புரட்டாசி மாசம் மருத்துவம் படிக்க போனேன்.2014 - 2015 அளவில் இலங்கைக்கு திரும்பின

  • முள்ளிவாய்க்காலை இன்னொரு நாட்டின் யுத்தத்துடன் ஒப்பிடுவது சுத்த அயோக்கியத்தனம் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. 

  • கிருபன்
    கிருபன்

    தமிழ் சிறி ஐயா, திரும்பத் திரும்ப மூளையில் பதியும்படி படியுங்கள்!👇🏾   பேய்க்காட்டியது ரஷ்ய ரவுடிகள்தான்..   தனது அனுபவங்களையும், உக்கிரேன் பற்றிய தகவல்களையும் தொகுத்துத் தந்த “பக

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் கூறியதுபோல அந்நியப்பட்டுவிடுவேன் என்கிற அச்சம் இப்போது வருகிறது. அதற்காக நான் நினைப்பதை எழுதாமலும் இருக்கமுடியவில்லை. சிறுகச் சிறுக சேர்த்த பலர் விலகிச் செல்லவும் சந்தர்ப்பம் இருப்பதாக நினைக்கிறேன். 

பார்க்கலாம், எதுவரை என்னால் முடிகிறதென்று.

ரஞ்சித், உக்ரைன் ரஷ்யா மோதலில்தான் எங்களுக்குள் கருத்து வேறுபாடே தவிர மற்றும்படி நாம் எல்லோரும் ஒரே குறிக்கோள் உடையவர்கள்தான் என்பது எனது கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்

முளளிவாய்க்காலில் இன அழிப்பே நிகழவில்லை தமிழ் மக்களை புலிப்பயங்கரவாதிகளிடம் இருந்து யுத்தம் செய்து மீட்டு எடுத்து இருக்கிறோம் என்றுதான் சிங்கள அரசும் கூறுகிறது.. ரஞ்சித்தும் சிறுபான்மை உக்ரேனிய ரஷ்யர்கள் வாழிடங்கள் மீது உக்ரேன் எந்த தாக்குதலும் செய்யவில்லை என மேற்குலகுக்கு வெள்ளை அடிக்கிறார்.. இவரும் இவரது கருத்தை ஆதரிப்பவர்களும் முள்ளிவாய்க்காலை தமது கருத்தை நியாயப்படுத்த ஊறுகாயாக தொட்டுக்கொள்கிறார்கள்.. உண்மையில் இவர்கள் முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி ஒப்பீட்டு கட்டுரைகள் எழுத எந்த தார்மீக உரித்தும் உடையவர்கள் அல்ல..

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னுடைய கருத்தில்லை.. இணையத்தில் சுட்டது…

சில கருத்துக்கள்(?)…

….. தனிப்பட்ட காழ்ப்புகள், பிறர்பற்றி ஏதுமறியாமலேயே கொள்ளும் முன்முடிவுகளில் இருந்து எழுபவை. இத்தகைய முன்முடிவு கொண்டவர்கள் தங்கள் மூளைக்கொதிப்பாலேயே சூழலில் சதா வெளிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். தன் எதிர்த்தரப்புக்கும் பொதுவான ஒரு முறைமையை கடைப்பிடிக்க, தர்க்கத்தை முன்வைக்க இவர்களால் இயலாது.

ஆகவே எப்போதும் தன் எதிர்த்தரப்பை, தன்னை ஏற்காதவர்களை, தன் எதிரியாக உருவகம் செய்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே வகுத்து வைத்திருக்கும் எதிரிக்கு என்னென்ன இயல்புகளுண்டோ அனைத்தையும் அவன்மேல் ஏற்றி வசை, ஏளனம், அவதூறு என சலம்புகிறார்கள். இவர்களிடம் பேசுவதென்பது குடிகாரர்களிடம் பேச்சுக்கொடுப்பதுபோல. ….

  • கருத்துக்கள உறவுகள்

சர்வாதிகாரி புரினின் விஷமப் பிரச்சாரங்களை மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

21 hours ago, ரஞ்சித் said:

புட்டினாலும்,  அரச பயங்கரவாத ஊடகங்களினாலும் பரப்பப்பட்டுவரும் இந்த நகைப்பிற்கிடமான  "இனவழிப்பு" குற்றச்சாட்டை ரஸ்ஸியாவின் சுயாதீன ஊடகங்கள் கண்டுகொள்ள மறுப்பதுடன், இவை அரசினால் புனையப்பட்ட கட்டுக்கதைகள் என்பதையும் பகிரங்கமாகக் கூறி வருகின்றன.

அப்படி அவர்களாலேயே புனையப்பட்ட கட்டுக்கதைகள் என்று நிராகரிக்கபட்ட கதைகளை கூட்டி எடுத்து ரஷ்யாவில் வாழ்கின்றவர்கள் இல்லை  மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் மற்ற  தமிழர்களிடமே பரப்பி வருகிறார்கள். சர்வாதிகாரி புரினை மகானாக ரஷ்யா நல்லதை செய்யும் நாடு மேற்குலகநாடுகள் அயோக்கியர் என்று காட்ட முயற்சிக்கிறார்கள்.உங்கள் கட்டுரை ஏமாற்றபடுபவர்களுக்கு விளக்கம் அளிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சர்வாதிகாரி புரினின் விஷமப் பிரச்சாரங்களை மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

அமைதி....அமைதி....
யாருக்கும் தெரியாமல் உங்கள் மேற்குலகின் ஆசீர்வாதத்துடன் உண்மையான சர்வாதிகாரி இருக்கின்றான்.அவன் உங்கள் அடிப்படலைக்குள் வருவான். அப்போது உங்கள் ஆய்வுக்கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுத தயாராகுங்கள்.

Saudi Arabia is sideshow compared to our real problems in Middle East |  TheHill

இவன் செய்யும் அட்டூழியங்கள் மனிதாபிமான சிங்கங்களுக்கு தெரிவதில்லை. ஒரே நேரத்தில் 80 பேருக்கு சதக்...சதக்...

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சர்வாதிகாரி புரினின் விஷமப் பிரச்சாரங்களை மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

அப்படி அவர்களாலேயே புனையப்பட்ட கட்டுக்கதைகள் என்று நிராகரிக்கபட்ட கதைகளை கூட்டி எடுத்து ரஷ்யாவில் வாழ்கின்றவர்கள் இல்லை  மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் மற்ற  தமிழர்களிடமே பரப்பி வருகிறார்கள். சர்வாதிகாரி புரினை மகானாக ரஷ்யா நல்லதை செய்யும் நாடு மேற்குலகநாடுகள் அயோக்கியர் என்று காட்ட முயற்சிக்கிறார்கள்.உங்கள் கட்டுரை ஏமாற்றபடுபவர்களுக்கு விளக்கம் அளிக்கும்.

ரஞ்சித்தின் கட்டுரை,

ரஸ்யாவையும் புட்டினையும் தூற்றுவதற்காக எழுதப்படுகின்றது என்று உறுதிப்படுத்தியதற்கு நன்றி.

ஆனால் tamilwin ஐயும் lankasri ஐயும் நம்பி கட்டுரை எழுதினால் இப்படுத்தான் இறுதியில் முடியும். 

☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்கள் மன்னிக்க வேண்டும். இடையிடையே வேலைகள் இருப்பதால் தொடர்ந்து எழுத முடிவதில்லை. முடிந்தளவிற்கு இந்தக் கட்டுரையினை நான் நினைத்தவகையில் முடிக்க முயல்கிறேன்.

சிலருக்கு இதனால் என்மீது ஆத்திரம் வரலாம். ஆனால், இது நான் படித்தும், கேட்டும் அறிந்தும் கொண்டவை.  நடப்பது இவைதான் என்கிற உணர்வால் எழுதப்படுபவை. எவரையும் தனிப்பட்ட ரீதியில் காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. இந்த நிகழ்வைத்தவிர எம்மில் பலர் எமது தேசத்தின் நிலை குறித்து ஒருமித்த கருத்தையே கொண்டிருக்கிறோம் என்பது ஆறுதல்.

சரி, தொடரலாம்,

விஷமப் பிரச்சாரம் 5: "தற்போது ஏற்பட்டிருக்கும் பதட்டமான சூழ்நிலை உக்ரேனின் திமிரான செயற்பாடுகளாலும், அவர்களை ஆதரிக்கும் மேற்குலக அதிகாரங்களின் நடவடிக்கைகளினாலுமே உருவாக்கப்பட்டது. ரஸ்ஸியா தனது நலன்களை சட்டபூர்வமான முறையில் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையின் முடிவுகளுக்கு ரஸ்ஸியா எந்த விதத்திலும் பொறுப்பாளியாக இருக்க முடியாது".

உண்மை என்னவென்றால், ரஸ்ஸியா தான் கடைப்பிடிப்பதாக ஒத்துக்கொண்டுள்ள அனைத்துச் சர்வதேச சட்டங்களையும், நடைமுறைகளையும் மீறியே உக்ரேன் மீது ஆடாத்தாக இந்த ஆக்கிரமிப்பு - அழித்தொழிப்புப் போரைத் தொடங்கி நடாத்தி வருகிறது. 2014 இல் உக்ரேனின் நிலப்பகுதியான கிரிமியாவை அடாத்தாக அக்கிரமித்தது முதல், இன்றுவரை உக்ரேன் நாட்டிற்கெதிராக தொடர்ச்சியான ஆயுத ரீதியிலான நடவடிக்கைகளைச் செய்துவரும் , ஐ நா பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடான ரஸ்ஸியா இதுவரையில் குறைந்தது 12 சர்வதேச ஒப்பந்தங்களையும், இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வுடன் கூடிய இணக்கப்பாடுகளையும்  , இணக்க ஒப்பந்தங்களையும் ஒரு தலைப்பட்சமாக மீறியிருக்கிறது. 

ரஸ்ஸியாவினால் ஒத்துக்கொள்ளப்பட்டு, பின்னர் ஒருதலைப்பட்சமாக ரஸ்ஸியாவினால் மீறப்பட்ட ஒப்பந்தங்களுக்கு உதாரணங்களாக ஐ நா சாசனம், ஹெல்சிங்கி இறுதி ஒப்பந்தம், நாடுகளின் இறைமை, பூகோள ஒருமைப்பாடு ஆகியவற்றை மதித்தல் தொடர்பான பாரீஸ் உடன்படிக்கை, நாடுகளின் எல்லைகளை மதிப்பளித்து செயற்படுதல் எனும் உடன்படிக்கை, நாடுகளுக்கிடையிலான பிணக்குகளுக்கு போரினைக் கொண்டு தீர்வுகளை அடைவதைத் தவிர்த்தல் உடன்பாடு, ஒரு சுதந்திர நாடு தனது பாதுகாப்புத் தொடர்பாக சுயாதீனமான முரையில் முடிவெடுக்கும் உரிமையினை மதித்தல் ஆகியவை உட்பட பல சட்டங்களையும், இணக்கப்பாடுகளையும் ஒரு தலைப்பட்சமாக அது மீறியிருக்கிறது. 
உக்ரேனின் இறைமை, பூகோள ஒருமைப்பாடு, அதன் சுதந்திரம் ஆகியவற்றினை அச்சுருத்தலுக்குள்ளாக்கி ரஸ்ஸியா இன்று செய்துவரும் ஆக்கிரமிப்பு யுத்தம் சட்டத்திற்கு புறம்பானது மட்டுமன்றி, நாடுகளுக்கிடையிலான அனைத்து சர்வதேசச் சட்டங்களையும் மீறும் ஒரு நடவடிக்கையாகும். ஐரோப்பாவின் பாதுகாப்புத் தொடர்பான நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வை மீறி இந்த யுத்தத்தினை நடாத்தி வரும் ரஸ்ஸியாவின் செயல், மொத்த ஐரோப்பாவினதும் பாதுகாப்பினைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

Just now, Kapithan said:

ரஞ்சித்தின் கட்டுரை,

ரஸ்யாவையும் புட்டினையும் தூற்றுவதற்காக எழுதப்படுகின்றது என்று உறுதிப்படுத்தியதற்கு நன்றி.

ஆனால் tamilwin ஐயும் lankasri ஐயும் நம்பி கட்டுரை எழுதினால் இப்படுத்தான் இறுதியில் முடியும். 

☹️

தமிழ்வின்னையும், லங்காசிறியையும் நம்பி எழுதும் அளவிற்கு நான் கருத்துப் பஞ்சம் கொண்டவனோ, மற்றையவன் எழுதியதை எனது இணையத் தளத்தில் போடும் சொந்த தேடுதல் அற்றவனோ இல்லை. ஒருவனைக் கருத்தினால் எதிர்கொள்ளமுடியாவிட்டால் எல்லோரும் எடுக்கும் கடைசி ஆயுதம் "நீ கொப்பியடிக்கிறாய்" என்பதுதான். எனக்கு அந்தத் தேவையில்லை. 

வேறு ஏதாவது இருந்தால் முயன்றுபாருங்கள். நான் எழுதுவதை உங்களால் எதுவும் செய்ய முடியாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஷமப் பிரச்சாரம் 6: "உக்ரேனில் நடக்கும் போர் மேற்கு நாடுகளின் தவறுகளாலும், நேட்டோவின் தவறினாலுமே உருவாக்கப்பட்டது. அவர்கள் தாம் ஒத்துக்கொண்ட "விரிவாக்கத்தினைச் செய்யமாட்டோம்" எனும் உடன்பாட்டிற்கு மதிப்பளித்திருந்தால் ரஸ்ஸியா தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக உக்ரேன் மீது ராணுவ நடவடிக்கையொன்றினை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. ஆகவே இந்தப் போர் மேற்குநாடுகளினால் உருவாக்கப்பட்டதே அன்றி, ரஸ்ஸியாவினால் அல்ல". 

ரஸ்ஸியாவினா தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் இந்த "விரிவாக்கம் செய்வதில்லை என்று ஒத்துக்கொண்டார்கள்" எனும் கூப்பாடு மிகவும் பொய்யானது. ஏனென்றால், அவ்வாறானதொரு உறுதிமொழி எக்காலத்திலும் எவரிடமும் நேட்டோவினால் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை. புட்டினும் அவரது ஆதரவாளர்களுன் தொடர்ச்சியாக கூறிவரும் ஒரு பரப்புரைதான், "முன்னாள் ரஸ்ஸிய அரசுத்த தலைவர் மிக்கேல் கொர்பச்சேர்விடம் நேட்டொ, ஒருமித்த ஜேர்மனியைத் தாண்டி விரிவாக்கம் செய்வதில்லை என்று வாய்மொழி உத்தரவாதம் அளித்தது" என்பது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் அனைவரும் கூறும் மிக்கேல் கொர்பெச்சேர்வ் 2014 இல் இதுபற்றிய விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில்  இப்படியானதொரு உறுதிமொழியினை நேட்டோவோ அல்லது வேறு எவருமே தன்னிடம் வழங்கவில்லையென்றும், தாம் அவ்வாறானதொரு கோரிக்கையினை முன்வைக்கவில்லையென்றும் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் என்பது. அவர் தனது பேட்டியில் பேசும்போது, "நேட்டோவின் விரிவாக்கம் தொடர்பாக நாம் அவர்களுடன் எதுவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை. நான் பதவியில் இருக்கும் எக்காலத்திலும் இது தொடர்பாக எவருமே பேசியதுமில்லை அதற்கான தேவையும் ஏற்பட்டிருக்கவில்லை. நான் முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொன்டு உறுதிபடக் கூறுகிறேன், ஒரு சிறிய கிழக்கு ஐரோப்பிய நாடு கூட என்னிடம் இது தொடர்பாக பிரச்சினையினை எழுப்பவில்லை. வோர்சோ ஒப்பந்தம் 1991 முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் கூட எவருமே இது தொடர்பாக என்னிடமோ அல்லது எனது அரசிடமோ  பேசவோ, கோரிக்கை முன்வைக்கவோ இல்லை என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஒருமித்த ஜேர்மனியைத் தாண்டி, தாம் விரிவாக்கம் செய்யப்போவதில்லையென்பதை நேட்டோவோ அல்லது நேட்டோவின் உறுப்புரிமை  நாடுகளில் ஒன்றோ ஒருபோதுமே ரஸ்ஸியாவுடனோ அல்லது அவர்களின் அதிகாரிகளுடனோ ஒப்பந்தங்களைக் கூட்டாகவோ அல்லது தன்னிச்சையாகவோ செய்யவில்லையென்பதை நேட்டோ உறுதிப்படுத்தியிருக்கிறது. 

ஒருமித்த ஜேர்மனிக்கு அப்பால் நேட்டொ விரிவாக்கம் நடைபெறாது என்று நேட்டோ உத்தரவாதம் அளித்தது என்று ரஸ்ஸியா முன்வைத்துவரும் பரப்புரை நேட்டோவின் நியதிகளுக்கு முற்றிலும் மாறானது. அப்படியான ஒரு உத்தரவாதத்தை நேட்டொ எப்போழுதும் செய்யப்போவதில்லை என்பது அதன் சாசனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நேட்டோவில் இணைவதற்கு எந்த நாடுகளும் முன்வரலாம் என்பதும், அவற்றின் விண்ணப்பங்கள் சரியான வழியில் அணுகப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என்பதும் ரகசியமானதல்ல. 

நேட்டொ என்பது நாடுகளுக்கிடையிலான ஒரு பாதுகாப்பு நட்பு ஒப்பந்தம். அது , எல்லைகளை மீறி அயல் நாடுகளை பலாத்காரமாக ஆக்கிரமிக்கும் ஒரு அமைப்பு அல்ல. ஒரு நாடு நேட்டோவில் அங்கத்துவம் அடைய விரும்பினால், அந்த முடிவானது நேட்டோவின் 30 உறுப்பு நாடுகளுக்கும், விண்னப்பிக்கும் நாட்டிற்குமிடையிலான ஒரு செயற்பாடே அன்றி இதல் மற்றையவர்கள் தீர்மானம் எடுப்பதோ அல்லது தடுப்பதோ சட்டத்திற்கு முரணானது. ஒவ்வொரு இறைமையுள்ள நாடும் தான் செல்லவேண்டிய பாதையினை முடிவெடுக்கும் அதிகாரத்தையும், தான் எவருடன் எல்லைகளைப் பகிரவேண்டும் எனும் முடிவினையும் எடுக்கும் அதிகாரத்தினையும் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த விடயத்தில் தலையிடும் உரிமை ரஸ்ஸியாவுக்குக் கிடையவே கிடையாது என்பதுதான் உண்மை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஷமப் பிரச்சாரம் 7 : நேட்டோவின் திமிரான விரிவாக்கத்தினால் ரஸ்ஸியா இன்று எதிரிகளால் சூழப்பட்டிருக்கிறது. ஆகவே தன்னைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ரஸ்ஸியா எடுத்து வருகிறது.

எந்தவொரு நாடோ அல்லது நாடுகளின் கூட்டமைப்போ ரஸ்ஸியாவை ஆக்கிரமிக்கும் நோக்கத்தினைக் கொண்டு இயங்கவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரேனும் ஐரோப்பாவின் பாதுகாப்பு ஒழுங்கு நிலைநாட்டப்படுவதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கப்போவதாக உறுதிமொழி அளித்தே வருகிறார்கள். 

நாம் கவனிக்கத் தவறும் ஒரு விடயம் தான் ரஸ்ஸியா என்பது நிலப்பரப்பில் உலகின் பெரிய ஒரு நாடு என்பதும், 140 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையினைக் கொண்டிருக்கிறதென்பதும், உலகின் மிகப்பெரிய ராணுவத்தையும், மற்றைய எல்லா நாடுகளையும் விட மிக அதிகளவான அணுவாயுதங்கலையும் கொண்டிருக்கிறது என்பதும். ஆகவே, ரஸ்ஸியா என்பது தன்னைச் சுற்றியுள்ளவர்களால் இலகுவாக அச்சுருத்தப்படக் கூடிய நாடு என்று எவராவது எண்ணினால் அது வேடிக்கையானதும், அறிவற்ற நிலைப்பாடும் ஆகும் என்பதே உண்மை.

சரி, நாம் பூகோள ரீதியில் இதை அணுகினால்க் கூட, ரஸ்ஸியாவின் மொத்த எல்லையின் சுற்றளவில் வெறும் 6 வீதமான நீளத்தையே  நேட்டோ உறுப்புரிமை நாடுகளுடன் அது பகிர்ந்துகொள்கிறது. ரஸ்ஸியாவைச் சுற்றியிருக்கும் எதிரிகள் என்று ரஸ்ஸியா குறிப்பிடும் 14 நாடுகளில் 5 நாடுகள் மாத்திரமே நேட்டோவில் அங்கத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த நாடுகளின் எல்லைகளைத்தான் ரஸ்ஸியா வெறும் 6 வீதத்தில் பகிர்ந்துகொள்கிறது.

ஆகவே, ரஸ்ஸியா தனது பாதுகாப்புத் தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதென்றால், நிச்சயமாக ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தால் அதனைச் செய்யத் தேவையில்லை. ஜனநாயக ரீதியில் , பேச்சுவார்த்தை மூலம் தீர்மானம் எடுக்க பல வேறு வழிகள் இருக்கின்றன. பல சர்வதேச அமைப்புக்கள், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள், சாசனங்கள் என்று யுத்தத்தைத் தவிர்த்து சுமூகமான முறையில் பேசித் தீர்க்கக் கூடிய பல வழிமுறைகள் இருக்கின்றன.  

ரஸ்ஸியாவுடன் தொடர்ச்சியான தொடர்பாடல்களைப் பேணுவதற்கென்று, ஐரோப்பிய ஒன்றியம் ரஸ்ஸியா தொடர்பான தனது கொள்கையில் தனியான ஐந்து சட்டங்களுக்கு அமைவாக செயற்பட்டு வருகிறது. தொடர்பாடல்களைப் பேணுவதற்கு தேவையான பல்வேறு உடன்படிக்கை முறைகளும், பேச்சுவார்த்தை நடைமுறைகளும் சர்வதேச தொடர்பாடல் முறைகளில் இருக்கின்றன.

 எவை எப்படி இருப்பினும், ஒரு இறைமையுள்ள நாடான உக்ரேன் தனது கொள்கைகளைத் தீர்மானிப்பது தொடர்பாகவும், தனது நண்பர்களைத் தெரிவு செய்வது தொடர்பாகவும் பூரணமான சுதந்த்திரத்தையும், அதிகாரத்தையும் கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

உக்ரேனின் இறையாண்மை, சுதந்திரம், பூகோள உறுதிப்பாடு மீதான வீட்டொ அதிகாரத்தினை ரஸ்ஸிய கொண்டிருக்கிறது என்ற புட்டின்னினதும் அவரது ஆதரவாளர்களினதும் நிலைப்பாடு அடிப்படையில் தவறானது,  சட்டத்திற்கு முரணானது என்பது மட்டுமல்லாமல், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நடைமுறைகளுக்கும் முரணானது. 


 

  • கருத்துக்கள உறவுகள்

 

20140830_LDM946.png

 

இவ்வளவு நேட்டோ( Nato)படை ரஸ்யாவை சுற்றி  உள்ளது போல் ரேட்டோ(Rato) எனும் படை அமெரிக்காவை சுற்றி இருந்தால் என்ன நடக்கும்??

 

image.gif

image.gif

image.gif

image.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ஸியாவின் விஷமப் பிரச்சாரத்தினுள் அகப்பட்டு, மூள்கிப்போயிருக்கும் சிலருக்காக எனது திரியின் பாதையிலிருந்து சற்று வெளியே சென்று வரவேண்டியதாகிவிட்டது. தடங்கலுக்கு வருந்துகிறேன்.

இனி, மரியோபுல்லில் நடைபெற்றும் வரும் ரஸ்ஸியாவின் திட்டமிட்ட இனவழிப்புப் பற்றிப் பார்க்கலாம்.........

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவின் ஊடகங்களை அனைத்தும்  மேற்கில் தடைசெய்யப்பட்டுள்ளன. எப்படி விசமதனமான ரஸ்யாவின் பிரச்சாரம் என அடையாளப்படுத்துவீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

.

தமிழ்வின்னையும், லங்காசிறியையும் நம்பி எழுதும் அளவிற்கு நான் கருத்துப் பஞ்சம் கொண்டவனோ, மற்றையவன் எழுதியதை எனது இணையத் தளத்தில் போடும் சொந்த தேடுதல் அற்றவனோ இல்லை. ஒருவனைக் கருத்தினால் எதிர்கொள்ளமுடியாவிட்டால் எல்லோரும் எடுக்கும் கடைசி ஆயுதம் "நீ கொப்பியடிக்கிறாய்" என்பதுதான். எனக்கு அந்தத் தேவையில்லை. 

வேறு ஏதாவது இருந்தால் முயன்றுபாருங்கள். நான் எழுதுவதை உங்களால் எதுவும் செய்ய முடியாது. 

😀

நீங்கள் உங்கள் சொந்தக் கருத்தை இங்கே எழுதுகிறீர்கள் என்பது என்க்கு மட்டுமல்ல, வாசிப்பவர்கள் எல்லோருக்குமே புரியும்.

ஆனால் அந்த சொந்தக் கருத்தை எங்கிருந்து பெற்றீர்கள், ஏன் பக்கச் சார்பாக இருக்கிறது, தவறான தகவல்களை எங்கிருந்து பெற்றிருக்கிறீர்கள் என்பது யூகிப்பது கடினமேயல்ல. 

Mகவும் முக்கியமாக கிழக்கு உக்ரேனில் இடம்பெறும் அநீதி தொடர்பாக ஒன்றுமே பேசாதிருப்பதும், இனச் சிறுபான்மையினருக்கு நடைபெறும் அநீதி தொடர்பாகவும், நாசித் தத்துவத்தை வரிந்து கட்டிக்கொண்டுள்ள Azov Battalion தொடர்பாக நீங்கள் வாயே திறக்காது மெளனம் காப்பதும் ஏன் என்று புரிந்துகொள்வதற்குக் கடினமான ஒன்று அல்ல. 

நீங்கள் உளச்சுத்தியுடன்தான் இதனை பக்கச்சார்பின்றி எழுத முனைகிறீர்களென்று எடுத்துக்கொண்டால், உங்களுக்கு இரு பக்கங்களிலும் இருந்து உண்மையான தகவல்கள் அல்லது செய்திகளை தாங்கிவரும் ஊடகங்களைதெரியாது என்று பொருள்படும். 

 

முக்கியமாக, உங்கள் எழுத்தில் உள்ள தவறு/பிழையான தகவல்களை மறுக்க அல்லது பிழைதிருத்த முற்படுகிறேனே தவிர உங்களுக்கு எழுதுவதற்கு உள்ள உரிமையில் தலையிடவில்லை. 

ஆனால் முள்ளிவாய்க்காலை இதற்குள் செருகினீர்கள் பாருங்கள், அங்கேதான் உங்கள் நோக்கம் கேள்விக்கு உள்ளாகிறது. 

முள்ளிவாய்க்காலை இந்த யுத்தத்துடன் இணைத்து எழுதியது த்வறென்று உணர்ந்தீர்களென்றால் தலைப்பை மாற்றிவிடுங்கள்.  புண்ணியமாகப் போகும். 

 

 

26 minutes ago, kalyani said:

ரஸ்யாவின் ஊடகங்களை அனைத்தும்  மேற்கில் தடைசெய்யப்பட்டுள்ளன. எப்படி விசமதனமான ரஸ்யாவின் பிரச்சாரம் என அடையாளப்படுத்துவீர்கள். 

சனநாயகம், பன்முகத்தன்மை, கருத்துச் சுதந்திரம் போன்ற கருத்துருவாக்கங்கள் தேவைக்குத் த்குந்தாற்போல மாறுபடும் என்பது இவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். ஆனால் இந்தக் கேள்வியை இலகுவாகவே கடந்து செல்வர்.

😌

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித்,

எல்லா பக்கத்தாலும் வரும் distractionஇற்கு மத்தியில் இப்பிடி ஒருங்கிணைத்து எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும், நிறுத்தாமல் நீங்கள் நினைத்ததை தொடர்ந்து எழுதி முடியங்கள்

ஒருவர் தான் நினைத்ததை, அவருக்கு சரியென்று பட்டதை எழுதுகிறார். அதற்கு ஏன் இவ்வளவு வன்மம் என்று புரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ஸியாவின் விஷமப் பிரச்சாரங்கள் வெளியுலகில் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை ஆதரித்து, உக்ரேன் அழிவதை நியாயப்படுத்தும் பலர் ரஸ்ஸியாவுக்கு வெளியே இருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்லப்போனால் ஈழத்தமிழருக்குள்ளேயே பெரும்பகுதியினர் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை ஆதரித்தும், புட்டினை ஒரு மாபெரும் வீரனாகப் போற்றியும், உக்ரேன் அழிக்கப்படுவதை கைகொட்டி ரசித்துக்கொண்டும் இருக்கிறார்கள். இவர்கள் சமூக வலையூடகங்களில் எழுதிவரும் ரஸ்ஸிய ஆதரவு, உக்ரேன் அழிவு நிலைப்பாடுகளும், முன்வைத்துவரும் கேள்விகளும் எந்த அடிப்படியில் முன்வைக்கப்படுகின்றன என்பது ஒன்றும் ரகசியல்மல்லவே? ஆகவே நான் தடை செய்யப்பட்ட ரஸ்ஸிய ஊதுகுழல்களைத் தேடிப் பயணித்து , அதன் விஷமப் பிரச்சாரங்களை தோண்டியெடுக்கத் தேவையில்லை, தாராளமாகவே அவை கிடைக்கப்பெறுகின்றன.

மரியோபுல் அவலம் பற்றி எழுதலாம் என்று நினைத்தால் ஆளாளுக்கு கேள்வி கேட்டு அலைக்கழிக்கிரார்கள் யுவர் ஆனர். பரவாயில்லை, நானும் எழுத நினைத்த ஒருவிடயம் தான், இங்கே இன்னொருவரும் கேட்டிருக்கிறார், ஆகவே இதனையும் விளக்கிவிட்டு, என் பாதையில் செல்லலாம் என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனிலிருந்து நாஜிக்களை அழிப்பதும், உக்ரேனின் ராஅணுவ வல்லமையினை முற்றாக சிதைப்பதும்தான் தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தின் முக்கிய நோக்கம் என்று புட்டின் தனது ஆக்கிரமிப்புத் தொடங்கிய நாளில் திருவாய் மலர்ந்தார். இதற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், ரஸ்ஸியாவின் நகரங்களில் போருக்கெதிராகத் திறண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக் காரர்களின் உணர்வையும் கண்டு தடுமாறிய புட்டின், போர் தொடங்கி சில நாட்களிலேயே செரும் பேரணியொன்றினை கூட்டியிருந்தார். நாஜிக் களைவு எனும் தலைப்புடன் அப்பேரணி நடத்தப்பட்டது. அங்கே குழுமியிருந்த தனது ஆதரவாளர்களிடையே பேசிய புட்டின், தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த மிகவும் தவறான காரணங்களை அடுக்கிக்கொண்டிருந்தார்.

உக்ரேன் நாடு போதைக்கு அடிமையானவர்களிடமும், நவ நாஜிகளின் கைகளிலும் சிக்குப்பட்டு பூரண முற்றுகைக்குள் அடக்கப்பட்டிருப்பதாகவும், ஆகவே உக்ரேனை மீட்கவே தான் விசேட படை நடவடிக்கையினை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ஆனால், இதிலுள்ள வேடிக்க என்னவென்றால், உக்ரேனியர்கள் ஒருபோதுமே நவ நாஜிக்களினால் முற்றுகைக்குள்ளாக்கப்படவில்லையென்பதும், அப்வர்கள் போதைக்கு அடிமையானவர்களால் ஆளப்படவில்லையென்பதும் தான். 

உக்ரேனை ஆளும் இப்போதைய ஜனாதிபதி யூத இனத்தைச் சேர்ந்தவர். 2 ஆம் உலகப் போரில் நாஜிகளுடனான யுத்தத்தில் பல குடும்ப உறுப்பினர்களை அவரது மூதாதையர் பலரை இழந்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் மொத்த உக்ரேனிலும் கொல்லப்பட்ட அப்பாவிகளின் எண்ணிக்கை 8 மில்லியன், இதில் பெரும்பாலானவர்கள் யூதர்கள். 

யூத இனத்தில் இருந்து வந்த தற்போதைய ஜனாதிபதி 2019 சனாதிபதித் தேர்தலில் 73 வீத வாக்குகளைப் பெற்றவர். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தீவிர வலாதுசாரியான ருஸ்லானின் வாக்கு எண்ணிக்கை வெறும் 1.6 வீதம் மட்டுமே. 
சரி, இந்த வலது சாரிகள் அல்லது நவ நாஜிக்களின் அரசியல் செல்வாக்கு கடந்த வருடங்களில் எப்படியிருக்கிறது என்று பார்த்தால், அவர்கள் 2012 இல் 10 வீத வாக்குகளையும், 2014 இல் 6 வீத வாக்குகளையும், 2019 இல் வெறும் 1.6 வீத வாக்குகளையும் மாத்திரமே பெற்றிருக்கிரார்கள். உக்ரேனின் அரசியலில் சிறியளவு பலம் கூட இல்லாத இந்த வலதுசாரிகள் தான் உக்ரேனை ஆள்கிறார்கள் என்று புட்டின் கூறுவது முற்றான கற்பனைக் கதையே அன்றி வேறில்லை. அத்துடன், உக்ரேனில் புட்டின் அச்சப்படும் வலதுசாரிகளின் அரசியல் பலம் என்பது அவரது சொந்த நாடான ரஸ்ஸியாவிலும், பிரான்ஸிலும், ஜேர்மனியிலும் இருப்பதைக் காட்டிலும் மிக மிக குறைவென்பதும் அவர் அறியாததல்ல.

 

தொடரும்.......

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

ரஞ்சித்,

எல்லா பக்கத்தாலும் வரும் distractionஇற்கு மத்தியில் இப்பிடி ஒருங்கிணைத்து எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும், நிறுத்தாமல் நீங்கள் நினைத்ததை தொடர்ந்து எழுதி முடியங்கள்

ஒருவர் தான் நினைத்ததை, அவருக்கு சரியென்று பட்டதை எழுதுகிறார். அதற்கு ஏன் இவ்வளவு வன்மம் என்று புரியவில்லை.

சரியைச் சரியென்றும், பிழையைப் பிழையென்றும் கூறுவது வன்மம் அல்ல, நேர்மை. . 

(நேர்மையா அது  என்னவென்று தயவுசெய்து கேட்காதீர்கள். )

 

2 hours ago, ரஞ்சித் said:

ரஸ்ஸியாவின் விஷமப் பிரச்சாரங்கள் வெளியுலகில் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை ஆதரித்து, உக்ரேன் அழிவதை நியாயப்படுத்தும் பலர் ரஸ்ஸியாவுக்கு வெளியே இருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்லப்போனால் ஈழத்தமிழருக்குள்ளேயே பெரும்பகுதியினர் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை ஆதரித்தும், புட்டினை ஒரு மாபெரும் வீரனாகப் போற்றியும், உக்ரேன் அழிக்கப்படுவதை கைகொட்டி ரசித்துக்கொண்டும் இருக்கிறார்கள். இவர்கள் சமூக வலையூடகங்களில் எழுதிவரும் ரஸ்ஸிய ஆதரவு, உக்ரேன் அழிவு நிலைப்பாடுகளும், முன்வைத்துவரும் கேள்விகளும் எந்த அடிப்படியில் முன்வைக்கப்படுகின்றன என்பது ஒன்றும் ரகசியல்மல்லவே? ஆகவே நான் தடை செய்யப்பட்ட ரஸ்ஸிய ஊதுகுழல்களைத் தேடிப் பயணித்து , அதன் விஷமப் பிரச்சாரங்களை தோண்டியெடுக்கத் தேவையில்லை, தாராளமாகவே அவை கிடைக்கப்பெறுகின்றன.

மரியோபுல் அவலம் பற்றி எழுதலாம் என்று நினைத்தால் ஆளாளுக்கு கேள்வி கேட்டு அலைக்கழிக்கிரார்கள் யுவர் ஆனர். பரவாயில்லை, நானும் எழுத நினைத்த ஒருவிடயம் தான், இங்கே இன்னொருவரும் கேட்டிருக்கிறார், ஆகவே இதனையும் விளக்கிவிட்டு, என் பாதையில் செல்லலாம் என்று நினைக்கிறேன்.

பூவை பூ என்றும் கூறலாம், புஸ்ட்பம் என்றும் கூறலாம். நீங்கள் கூறுவது போலவும் கூற்லாம். 

பதில் இல்லையென்றால் நீங்கள் கூறுவது போலவும் கூற்லாம். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீவிர வலதுசாரி அமைப்புக்கள் உக்ரேனில் இருக்கிறதென்பது உண்மைதான். இதை மறுக்கவில்லை. ஆனால், புட்டினும் பரிவாரங்களும் கூறும் இவர்களால் உக்ரேன் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டிருக்கிரதென்பது புட்டினின் உண்மையான நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறது. 

நவ நாஜிகள் அல்லது தீவிர வலதுசாரிகள் பூச்சாண்டியை புட்டினும் அவரது ஆதரவாளர்களும் கடந்த 8 வருடங்களாக ரஸ்ஸிய மக்களுக்குக் காட்டி வருகின்றார்கள். ரஸ்ஸியாவின் இந்த விஷமத்தனமான பிரச்சாரம் குறித்து கருத்துத் தெரிவித்த தி வில்சன் சென்டர் எனப்படும் சர்வதேச ஆராய்ச்சி மைய்யம், "முழு உக்ரேனும் நாஜிகளால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று புட்டின் கூறிவருவது மிகத் தவறான பிரச்சாரம் என்றும், ரஸ்ஸிய மக்களின் உணர்வுகளைச் சீண்டி தனது சொந்த லாபமீட்டலுக்காகவே இதனை அவர் செய்கிறார் என்றும் கூறுகிறது.

உக்ரேனில் 2013 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ரஸ்ஸியச் சார்பு ஜனாதிபதி , ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து, ரஸ்ஸியாவின் அழுத்தத்தின் நிமித்தம் வெளியேறினார். தமது நாடு ஐரோப்பாவின் ஒரு அங்கமாகும்,  நாடு சுபீட்சமாகும், எதிர்காலம் வளமாக பரிணமிக்கும் என்று கனவு கொண்டிருந்த பல லட்சக்கனக்கான உக்ரேனிய இளைஞர்களும் யுதவிதிகளும் அன்றைய ஜனாதிபதி ஒரு தலைப் பட்சமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைக் கண்டித்து தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர். சாதாரண ஒன்றுகூடலாக ஆரம்பித்த இப்போராட்டத் தீப்பொறி நாளடைவில் பெரு நெருப்பாக உருவெடுத்து முழு நாட்டையும் ஸ்தம்பிக்க வைத்தது. இதனை அடக்க அன்றைய ரஸ்ஸியச் சார்பு ஜனாதிபது கலகம் அடக்கும் படைப்பிரிவை அனுப்பி மிகக் கடுமையாக போராட்டக்காரர்களுடன் நடந்துகொண்டார். ஈற்றில் தனது கொடுங்கரத்திற்காக மக்களால் வெறுக்கப்பட்டு ரஸ்ஸியாவுக்குத் தப்பியோடினார். 

தனது பொம்மையான ஜனாதிபதி நாட்டை விட்டுத் திறத்தப்பட்டதும், உக்ரேனிய மக்களின் ரஸ்ஸியாவுக்கெதிரான எழுச்சியும் புட்டினை கோபப்படுத்தியது. உக்ரேன் என்பது ரஸ்ஸியாவின் பிரிக்கப்பட முடியாத பகுதி என்றும், அங்கு நடக்கும் அரசியல் தன்னால் கட்டுப்படுத்தப்படக் கூடியது என்று இறுமாப்புடன் இருந்த புட்டினுக்கு உக்ரேன் மக்களின் எழுச்சி கோபபடுத்தியதால், இதற்குப் பழிவாங்கலாக உடனடியாக உக்ரேனின் கிரிமியா எனும் பிராந்தியத்தை தனது ராணுவத்தை அனுப்பி ஆக்கிரமித்துக்கொண்டதுடன் இன்னும் இரு பிராந்தியங்களில் பிரிவினைவாத ஆயுதக் கிளர்ச்சியை ஏற்படுத்தி அவை முற்றான ஆயுதக் குழுக்களாக மாற்றுவதற்கு, ரஸ்ஸிய ராணுவத்திலிருந்து விலகிய, ஓய்வுபெற்ற, விடுமுறையில் நின்ற ஆயிரக்கணக்கான ராணுவத்தினரை அங்கு அனுப்பியதுடன்,   உக்ரேன் அரசுக்கெதிரான தொடர்ச்சியான தாக்குதல்களையும் மேற்கொள்ளத் தொடங்கினார்.  .........

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kapithan said:

சரியைச் சரியென்றும், பிழையைப் பிழையென்றும் கூறுவது வன்மம் அல்ல, நேர்மை. . 

(நேர்மையா அது  என்னவென்று தயவுசெய்து கேட்காதீர்கள். )

யாழின் ஆக்கத்துக்காக  ஒருவர் எழுதும் சொந்த படைப்பில்போய், அவர் தொடர்ந்து எழுதமுடியாத அளவுக்கு தொடர் கும்மி அடிப்பதும், அவர் எழுதுவதுக்கும் அதிகமாக, அவரது பதிவில், வேறு வேறு இடங்களில் இருந்து கொண்டுவந்து தொடர்ந்து இணைத்து குழப்புவதும் நேர்மையாகவோ அல்லது constructive criticism ஆகவோ கருதப்படுவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2014 இல் ரஸ்ஸிய ராணுவம் உக்ரேனை ஆக்கிரமித்தபோது, உக்ரேன் ராணுவம் மிகவும் பலவீனமான நிலையிலும், 2 ஆம் உலகயுத்த கால ஆயுத தளபாடங்களையும் கொண்ட ஒருங்கமைக்கபடாத ராணுவமாகவே இருந்தது. இந்த ராணுவத்தால் மிகப் பலம் பொறுந்திய ரஸ்ஸிய ராணுவத்தின் முன்னால் நிற்கமுடியவில்லை.  கடுமையான ஆள்ப்பற்றாக்குறையால் திண்டாடிக்கொண்டிருந்த உக்ரேனிய ராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் முகமாக விரும்பியவர்கள் இணையலாம் என்று அறிவித்தலை அரசு விடுத்தது. இந்த அறிவித்தலையடுத்து உக்ரேனிய ராணுவத்தில் வலதுசாரிச் சிந்தனை கொண்டோரும் இணைந்தனர். இந்த வலதுசாரி அமைப்பில் இருந்த ஒரு பகுதியினரே பின்னாட்களில் அசோவ் பட்டாலியன் என்று அழைக்கப்படும் விசேட படைப்பிரிவாக மாற்றம் அடைந்தனர். 

2015 இல் பி பி சி செய்தியாளரிடம் பேசிய வலதுசாரி படையணியான அசோவின்  தலைவர் தமது உறுப்பினர்களில் 10 முதல் 20 வீதமானவர்கள் நாஜி சிந்தனையைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொண்டார். ஆனால், இந்த சிறியளவு நாஜி ஆதரவாளர்களினால் தமது அமைப்பு தனது கொள்கையிலிருந்து மாற்றம்பெறப்போவதில்லையென்றும், அதற்கான காரணமும் தமக்கு இல்லையென்று வெளிப்படையாகக் கூறியிருந்தார். 

அசோவ் பட்டாலியன் எனும் அமைப்பு உக்ரேனின் தேசிய காவலர்கள் எனும் படைப்பிரிவின்  கீழ், அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. 2014 இல் ரஸ்ஸியா மரியோபுல் பகுதியை ஆக்கிரமிக்க எத்தனித்தபோது, அத்தாக்குதலை முறியடித்து, ரஸ்ஸியர்களின் முயற்சியைத் தோற்கடித்தவர்கள் இந்த அசோவ் பட்டாலியன் எனும் சிறப்புப் படை அணியினர்தான் என்றால் அது மிகையில்லை. 

அசோவ் படையணி பற்றி முன்னாள் உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொரெஷெங்கோவிடம் 2015 இல் பி பி சி செய்தியாளர்கள் கேட்டபோது, "எமது ராணுவத்திலுள்ள மிகச்சிறந்த போர்வீரர்கள் அவர்கள். அவர்களை நாஜிகளாக உருவகப்படுத்தும் ரஸ்ஸியாவின் பொய்ப்பிரச்சாரங்களுக்குத் தயவுசெய்து அகப்பட்டு விடாதீர்கள்" என்று சலிப்புடன் கூறினார்.

உக்ரேனிய ராணுவத்தின் மொத்த வீரர்களின் எண்ணிக்கை ஏறத்தாள 250,000 பேர். இவர்களைத் தவிரவும் இன்னும் 50,000 வீரர்கள் தேசியக் காவலர்கள் படைப்பிரிவில் இயங்குகிறார்கள். இந்தத் தேசியக் காவலர்கள் படைப்பிரிவில் வெறும் 1000 பேர் மட்டுமே அசோவ் படையணியைச் சேர்ந்தவர்கள். ஆக, வெறும் 0.33 வீதமான அசோவ் படையணியினால் உக்ரேன் ஆளப்படுவதாகவும், நாஜிகளால் உக்ரேன் அடிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புட்டினும் பரிவாரங்களும் கதறுவது வேடிக்கையே அன்றி வேறில்லை. 

சாதாரண உக்ரேனியர்களிடம் இந்த அசோவ் படையணி பற்றி செய்தியாளர்கள் வினவும்போது, "அவர்கள் சிறந்த போர்வீரர்கள். அசோவ் படையணியில் சேர இளைஞர்கள் விரும்புவதன் காரணம் அவர்களின் தீரமேயன்றி அவர்களின் ஒரு பகுதியினரின் நாஜிக் கொள்கைகளுக்காக அல்ல" என்று கூறுகிறார்கள். 

உக்ரேனின் ஜனாதிபதியின் ஆலோசகரிடம் பி பி சி அசோவ் படையணி பற்றிக் கேட்டபோது, "உக்ரேனில் இன்றிருக்கும் நாஜிகள் யாரென்று பார்த்தால், அவர்கள் ரஸ்ஸியாவிலிருந்து எம்மை ஆக்கிரமிக்க வந்த புட்டினின் பாஸிஸ்ட்டுக்கள் தானே அன்றி வேறு எவரும் இல்லை" என்று கூறுகிறார்.

உக்ரேனின் அசோவ் பட்டாலியன் படைப்பிரிவினர் சிலரின் நாஜி சிந்தனைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் சமூக வலைத்தளங்களின் கண்காணிப்பாளர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, "அவர்களின் உத்தியோக பூர்வ இணையத்தளங்களிலும், ஆதரவுத் தளங்களிலும் காணப்படும் பொதுவான அம்சம் தான் ரஸ்ஸிய ராணுவத்தை எதிர்த்துச் சண்டையிடுவதும், வெற்றிகொள்வதும்.  நாஜிகள் தொடர்பாகவோ அல்லது நாஜிக் கொள்கை தொடர்பாகவோ அவர்கள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லையென்றே தெரிகிறது" என்று கூறுகிறார்கள்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அசோவ் எனும் சொல்லே பலருக்கு நாஜிச் சொல்லாகத் தெரிவது அதிசயம் தான். ஆனால் அசோவ் எனும் பெயர் இப்படையணிக்குக் கிடைத்ததற்குக் காரணம் இருக்கிறது. 

இன்று ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டு முற்றான அழித்தொழிப்பு ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் மரியோபுல்லில் இருக்கும் "தி சீ ஒப் அசோவ்" அதாவது அசோவ் கடற்கரையில் இப்படையணியின் தலைமையகம் இருப்பதாலேயே இப்படையணிக்கு அசோவ் படையணி என்கிற பெயர் இடப்பட்டிருக்கிறது. 2014 இல் ரஸ்ஸிய படை நடவடிக்கையினை எதிர்கொண்டு வெற்றியீட்டிய இப்படையணியே இன்றும் மரியோபுல்லில் ரஸ்ஸிய தாக்குதலை எதிர்கொண்டு போராடி வருகிறது. 

ஆனால், இந்த சிறிய படைப்பிரிவை முன்வைத்து பேசும் ரஸ்ஸியா, முழு உக்ரேனுன் நாஜிகளால் ஆளப்படுவதாகக் கூறுகிறது.  உக்ரேனை ஆக்கிரமித்து நிற்கும் ரஸ்ஸியாவின் வெளிவிவகார அமைச்சர் ஐ நா வில் பேசும்போது , மரியோபுல்லில் ரஸ்ஸிய ஏவுகணையால் தாக்கியழிக்கப்பட்ட மகப்பேற்று மருத்துவமனை அசோவ் பட்டாலியனின் முகாம் என்று கூறியதோடு, ரஸ்ஸிய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 300 அப்பாவிகள் கொல்லப்பட்ட மரியோபுல் திரையரங்கின்மீது அசோவே தாக்குதல் நடத்தியதாக பொய்யுரைத்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

அசோவ் படைப்பிரிவிலிருக்கும் சிலரது நாஜிச் சிந்தனைகளை முதன்மைப்படுத்தி, உக்ரேன் நாஜிகளால் ஆளப்படுகிறது என்றும், அது ரஸ்ஸியர்களை அழிக்கிறது என்று கூறும் புட்டின் செய்ய நினைப்பதெல்லாம் இரண்டாம் உலகயுத்தத்தில் நாஜிகளால் ரஸ்ஸியர்கள் அடைந்த சொல்லொணாத் துயரங்களையும் அழிவுகளையும் மீண்டும் அவர்கள் முன் கொண்டுவந்து, ரஸ்ஸியர்களின் உணர்வுகளை உசுப்பேற்றி உக்ரேனை ரஸ்ஸியாவின் எதிரியாகக் காட்டுவதுதான். 

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்ட சில வாரங்களின் பின்னர் இந்த அழிவு யுத்தம்பற்றி சர்வதேசமெங்கிலும் இருந்து சுமார் 150 வரலாற்று ஆசிரியர்கள் கூட்டாக ஒரு அறிக்கையினை வெளியிட்டிருக்கிறார்கள். இனவழிப்பு, நாசிசம் மற்றும் இரண்டாம் உலக யுத்த வரலாறு ஆகியவற்றுடன் மிகுந்த பரீட்சயமுள்ள இந்த வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது,

" உக்ரேனியர்களை நாஜிகளாக வர்ணித்து ரஸ்ஸிய அதிபர் புட்டின் செய்துவரும் விஷமப் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது, யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது, கடுமையான தாக்கங்களை மக்களிடையே ஏற்படுத்தக்கூடியது. மிகவும் அருவருக்கத்தக்க, ஏற்றுக்கொள்ள முடியாத, மனதளவில் பலரைக் காயப்படுத்தக் கூடிய தன்மையினைக் கொண்டது. இரண்டாம் உலக யுத்தத்தில் நாஜிகளால் பாதிக்கப்பட்ட பல மில்லியன் மக்களின் மனங்களை கடுமையாகப் பாதிக்கக் கூடியதுடன், நாஜிகளுக்கு எதிராக தீரத்துடன் போராடி மடிந்த லட்சக்கணக்கான வீரர்களினதும் புனிதத்தைக் கொச்சைப்படுத்துகின்ற கைங்கரியத்தையும் கொண்டது" 

முன்னாள் ரஸ்ஸிய அமைச்சரான சேர்கி மார்க்கோவ் புட்டினின் நாஜிப் புலம்பல் பற்றிக் குறிப்பிடும்போது, "உக்ரேனியர்கள் நாஜிகளுக்கு எதிரானவர்கள். நாஜிகளை அவர்கள் வெறுக்கிறார்கள். ஆகவே யாராவது உக்ரேன் நாஜிக்களால் ஆளப்படுகிறது என்றோ அல்லது தம்மை நாஜிகளிடமிருந்து காப்பாற்றும்படி உக்ரேனியர்கள் ரஸ்ஸியாவிடம் கேட்கிறார்கள் என்றோ கூறுவது சுத்த் முட்டாள்த்தனமானது" என்று கூறுகிரார். 

இறுதியாக, எந்த நாஜீக்கள் உக்ரேனை அடிமைப்படுத்தி ஆள்கிறார்கள் என்று ரஸ்ஸியா புலம்புகிறதோ, அந்த நாட்டின் தலைவரும், யூத இனத்தவருமான உக்ரேனின் ஜனாதிபதி வொலொடொமிர் செலென்ஸ்கி ரஸ்ஸியாவின் "நாஜிப் புலம்பல்கள்" பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், "ஏறத்தாள ஐந்து வாரங்களாகியும், ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் அவர்கள் தேடும் நாஜிக்களையோ அல்லது போதைக்கு அடிமையான தலைவர்களையோ அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சிலவேளை, ரஸ்ஸியப்படை உக்ரேனில் நுழையும்போது மலர்ச் செண்டுகளுடன் தம்மை வறவேற்பார்கள் என்று புட்டின் கூறிய உக்ரேனியப் பெண்களை இன்னும் அவர்கள் தேடுவது போல  அந்த நாஜிக்களையும் அவர்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் " என்று கூறியிருக்கிறார். 

அவர்கள் தேடும் விடைகள் எனது திரியெங்கும் பரவியே கிடக்கின்றன. கண்களை மூடிக்கொண்டு தேடுவதால் சிலருக்கு அவை தெரிவதில்லை. சிலவேளை கண்களைத் திறந்து பார்க்க அவர்கள் விரும்புவதில்லை போலும்.

தமது இணையத் தளங்களுக்குச் செய்தி சேர்க்கவும், விபரம் திரட்டவும் சிலர் கேள்வி கேட்கலாம். அதற்காக எனது நேரத்தை நான் மண்ணாக்க விரும்பவில்லை. திரியுடன் தொடர்புடையது என்பதற்காக மட்டும் சில விளக்கங்களை முன்வைக்கவேண்டியதாயிற்று. 

  • கருத்துக்கள உறவுகள்

கூகிள் பே, ஆப்பிள் வாலட், மாஸ்டர் கார்ட், விசா...எல்லாம் ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது.. ஏடி எம் வங்கிகள் முடங்கி உள்ளன.. கிரடிட் கார்ட், டெபிட் கார்ட் வேலை செய்யாததால் சாதாரண அன்றாடம் காச்சி ரஷ்ய மக்கள்தான் தம் வாழ்நாள் சேமிப்பை பயன்படுத்த முடியாமல் துன்பப்படுபவர்கள்..

ரஷ்ய பக்கத்து செய்திகளை பேஸ்புக்கும், ட்விட்டரும் சென்சார் செய்து வெளியிடுகின்றன.. யூடியுப் ரஷ்ய பக்கத்து செய்திகளை முடக்கி உள்ளது.. ரஷ்ய ஊடகங்களை மேற்கு தடை செய்து விட்டது..

ஆக முதலாளித்துவம், உலகமயமாக்கல் என இந்த கம்பனிகள் பேசினாலும் இவை உலகமயான கம்பனிகளாக செயல்படவில்லை. ..அமெரிக்க கம்பனிகளாக தான் செயல்பட்டுள்ளன.

வாடிக்கையாளர் சேவையே உயிர்மூச்சு என பேசி ஆசைகாட்டி வங்கி அட்டைகளை விற்ற மேற்குலக கம்பனிகள் மீது அழுத்தம் பிரயோகித்து நம்பி வாங்கிய போருடன் சம்பந்தப்படாத சாதாரண அப்பாவி  வாடிக்கையாளர்களை வங்கியில் பணம் எடுக்கவிடாமல் முடக்கியுள்ளது மேற்குலகு…

ரஷ்யாவுக்கும் உக்ரெய்னுக்கும் இருக்கும் பிரச்சனையில் நீங்கள் எந்த பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்... நீங்கள் ரஷ்ய அரசியல்வாதிகளை அவர்களின் சொத்துக்களை தடை செய்யுங்கள் ஆனால் பாவம் அன்றாடங்காச்சி ரஷ்ய மக்கள் என்ன செய்தார்கள்..? 

நாளை உங்கள் நாடு (அது எதுவாக இருப்பினும்) அங்கு வசிக்கும் சாதாரண மக்களை கொல்லப்போகும் அதன் பொருளாதாரத்தை இந்த முதலாளித்துவ நாடுகளால் எந்த காரணத்தை காட்டியும் முடக்க முடியும் அதற்கு பெயர் ஜனநாயகம்..

முக்கியமான பிரச்சனைகளில் இப்படி இவை செயல்படுவது நியாயம் என ரஞ்சித் வகையறாக்களை போல சப்பை கட்டு கட்டலாம். ஆனால் நாளை இலங்கையில் ஒரு பிரச்சனை என சொல்லி உங்கள் உறவுகள் கிரடிட் கார்டை முடக்கி உங்கள் உறவுகளை பணம் எடுக்கவிடாமல் செய்தால் எப்படி இருக்கும்? உங்கள் ஓய்வுகால சேமிப்பின் மதிப்பு 90% ஆக சரிந்தால் எப்படி இருக்கும்..?

சீனா பேஸ்புக்கையும், ட்விட்டரையும், யூடியூபையும்,...ஏன் கூகிளை கூட தன் நாட்டில் தடுத்தது எத்தனை தொலைநோக்கான விசயம் என இப்போது தெரிகிறது..

கருத்து சுதந்திரம் என அலறும் இந்த மேற்குலகும் அதன் நிறுவனங்களும் ரஷ்ய பக்கத்து செய்திகளை முடக்கியது எவ்வகை சுதந்திரம் என தெரியவில்லை..

தப்பு நடக்கும் இடமெல்லாம் ஆஜராகி தட்டிகேட்கும் உத்தமர்கள் என்றால் நாளை எதாவது பிரச்சனை என்றால் அமெரிக்காவில் அல்லது ஜரோப்பாவில் ஆஸ்ற்றேலியாவில் கனடாவில் கிரடிட் கார்டு, டெபிட் கார்டை முடக்கும் தைரியம் இவர்களுக்கு உள்ளதா? அவர்களின் செய்திச்சேவைகளை முடக்குவார்களா..? பொருளாதாரத்தை முடக்குவார்களா?

நிச்சயம் செய்யமாட்டார்கள்.

இதுதான் இவர்கள் பேசும் கருத்து சுதந்திரம்.. மேற்குலகுக்கு முட்டு குடுப்பவர்களின் எஜமானர்கள் பேசும் ஜனநாயகம்..

இங்கு யாழில் இவர்களை ஆதரிக்கும் ரஞ்சித் சசிவர்ணம் நீர்வேலியான் போன்றவர்கள் மாற்றுகருத்து எழுதும் எம்போன்றவர்களை இங்கு எதுவும் எழுதாதே வெளியபோ என்று மீண்டும் மீண்டும் எழுதுகிறார்கள்.. தமக்கு எதிரான கருத்துக்களை ஜீரணிக்க திராணி அற்றவர்கள்.. இதுதான் மேற்குலகை ஆதரிக்கும் வெள்ளைத்தோல் மோக அடிமைகள் பேசும் ஜனநாயகம்..

எஜமானார்கள் எவ்வழியோ அவர்கள் அடிமைகளும் அவ்வழியே.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

யாழின் ஆக்கத்துக்காக  ஒருவர் எழுதும் சொந்த படைப்பில்போய், அவர் தொடர்ந்து எழுதமுடியாத அளவுக்கு தொடர் கும்மி அடிப்பதும், அவர் எழுதுவதுக்கும் அதிகமாக, அவரது பதிவில், வேறு வேறு இடங்களில் இருந்து கொண்டுவந்து தொடர்ந்து இணைத்து குழப்புவதும் நேர்மையாகவோ அல்லது constructive criticism ஆகவோ கருதப்படுவதில்லை.

சிலரின் விசமத்தனமான கருத்துக்களுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்கும்போது, அது அவர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டுகிறது. ஆகவே அவர்கள் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவதுபோல குப்பைகளை இங்கே அள்ளி வந்து கொட்டுகிறார்கள், இது எனது சொந்த ஆக்கம் என்று தெரிந்தும். 

நானும் என்னால் முடிந்தளவிற்கு அவற்றை பெருக்கி, எரித்து வருகிறேன், பார்க்கலாம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.