Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரியோபுல் முற்றாக ரஷ்சியா வசம் வீழ்ந்தது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் யுத்தம் உட்பட ஈழ விடுதலைப் போரின் போது.. கூலிக்காக.. நேரடியாகப் பங்கேற்று எம் மக்களின் தலையில் குண்டு வீசிக் கொன்ற உக்ரேனியர்களின் நகரான மரியோபுல்.. முள்ளிவாய்க்கால் மாதத்தில்.. ரஷ்சியா வசம் வீழ்ந்தது.

இதன் போது உக்ரைன் அரச நவ-நாசிய கொள்கையுடன் செயற்பட்டு வந்த கொடிய  Azov உக்ரேனிய அரச பயங்கரவாதக் குழு முழுமையாக ரஷ்சியாவிடம் சரணாகதி அடைந்துள்ளது. நேட்டோ உட்பட்ட மேற்கு நாடுகள் அள்ளிக்கொடுத்த ஆயுதங்களையும் கையளித்துவிட்டு சரணடைந்துள்ளனர்.

கடைசி ஆள் இருக்கும் வரை போரிட்டு ரஷ்சியாவை தோற்கடிப்போம் என்று வீர வசனம் பேசி வந்த Azov உக்ரைன் அரச பயங்கரவாதிகள்.. தற்போது தமது உயிரை பாதுகாக்க சரணடையக் கேட்கப்பட்டதாக.. உக்ரைன் வீர வசனம்.. புளுகர் சனாதிபதி சமாளிப்புக்கேசன்.. துப்பித் தள்ளியுள்ளார். 

Russian army takes control of Azovstal steel plant

The Russian military says the Azovstal steelworks in Mariupol has been "totally liberated", with the last Ukrainian defenders surrendering.

The ministry said that since 16 May, 2,439 "neo-Nazis from Azov and Ukrainian troops" trapped in the steelworks "laid down their arms and surrendered".

Azovstal fighters were told to get out and save their lives, Zelensky says

https://www.bbc.co.uk/news/live/world-europe-61518209

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of map and text that says 'Latest troop movements and locations of attacks Russian military presence Ukrainian- claimed counter- offensive Under Russian control Nuclear power plant Russian-claimedcontrol Assessed Russian advance Airfield + Populated areas Zhytomyr Vasylkiv Dnipro River K”v Poltava 100km UKRAINE Izyum Dnipro ramatorsk Voznesensk Zaporizhzhia.o Luhansk "Donetsk Mykolayiv Melitopol Kherson Odesa Transnistria:Pro-Russian Transnistria: breakaway.state, home to1,500 troops Mariupol Berdyansk Sea of Azov Novoozerne Snake Island RUSSIA CRIMEA* Black Sea Sevastopol UKRAINE Source: Institute forthe Study AEl's Critical Threats Project, WorldPop research Updated 9am GMT May *Crimea was nnexed Russia in 2014 is not ecognised nternational community FT'

  • கருத்துக்கள உறவுகள்

dreamies.de (ywhxgha6krs.gif)

GIF transparent han applause - animated GIF on GIFER - by Bathis

உக்ரைனின்…. வரை படத்தை, மாற்றி அமைத்த…. புட்டினுக்கு, வாழ்த்துக்கள். 👍🏽 🤝 👏🏻

புட்டினிடமிருந்து... இன்னும் நிறைய, எதிர் பார்க்கின்றோம்.  ❤️

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாசிகளுக்கு பாடம் புகட்டிய புட்டினுக்கு வாழ்த்துக்கள்.
இனவாதம் நிறவாதம் கொண்ட உக்ரேன் நாசிகளை அடியோடு அழிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மரியுபோல் நகரம் முழுவதும் ரஷ்யா வசம்!

மரியுபோல் நகரம் முழுவதும்... ரஷ்யா, வசம்!

உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரம் முழுவதும் தங்கள் வசம் வந்துவிட்டதாக ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மரியுபோல் நகரில் ரஷ்யாவின் வசம் சிக்காமல் எஞ்சி இருந்த அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளதாக ரஷ்ய இராணுவ அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

சரணடைந்த உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

தங்கள் நாட்டின் கிழக்குப் பிராந்தியமான லுஹான்ஸ்கில் ரஷ்யப் படையினர் கணிசமாக முன்னேறியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

லுஹான்ஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த லிசிசான்ஸ்க் மற்றும் செவரோடொனட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யப் படையினர் கணிசமாக முன்னேறியுள்ளனர்.

இதுதவிர, ஒட்டுமொத்த டான்பாஸ் பிரதேசத்தில் ரஷ்யா படையினர் தங்களது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளதுடன், தாக்குதலின் தீவிரத்தையும் அதிகரித்துள்ளனர்.

டான்பாஸின் டொனட்ஸ்க் நகரைச் சுற்றிலும் உள்ள உக்ரைன் இராணுவ அரணை உடைக்கும் நோக்கில், சக்திவாய்ந்த ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் மூலம் ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

https://athavannews.com/2022/1283138

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

முள்ளிவாய்க்கால் யுத்தம் உட்பட ஈழ விடுதலைப் போரின் போது.. கூலிக்காக.. நேரடியாகப் பங்கேற்று எம் மக்களின் தலையில் குண்டு வீசிக் கொன்ற உக்ரேனியர்களின் நகரான மரியோபுல்.. முள்ளிவாய்க்கால் மாதத்தில்.. ரஷ்சியா வசம் வீழ்ந்தது.

இதன் போது உக்ரைன் அரச நவ-நாசிய கொள்கையுடன் செயற்பட்டு வந்த கொடிய  Azov உக்ரேனிய அரச பயங்கரவாதக் குழு முழுமையாக ரஷ்சியாவிடம் சரணாகதி அடைந்துள்ளது. நேட்டோ உட்பட்ட மேற்கு நாடுகள் அள்ளிக்கொடுத்த ஆயுதங்களையும் கையளித்துவிட்டு சரணடைந்துள்ளனர்.

கடைசி ஆள் இருக்கும் வரை போரிட்டு ரஷ்சியாவை தோற்கடிப்போம் என்று வீர வசனம் பேசி வந்த Azov உக்ரைன் அரச பயங்கரவாதிகள்.. தற்போது தமது உயிரை பாதுகாக்க சரணடையக் கேட்கப்பட்டதாக.. உக்ரைன் வீர வசனம்.. புளுகர் சனாதிபதி சமாளிப்புக்கேசன்.. துப்பித் தள்ளியுள்ளார். 

Russian army takes control of Azovstal steel plant

The Russian military says the Azovstal steelworks in Mariupol has been "totally liberated", with the last Ukrainian defenders surrendering.

The ministry said that since 16 May, 2,439 "neo-Nazis from Azov and Ukrainian troops" trapped in the steelworks "laid down their arms and surrendered".

Azovstal fighters were told to get out and save their lives, Zelensky says

https://www.bbc.co.uk/news/live/world-europe-61518209

ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் இலங்கை தமிழரை இழுத்துபோடுவது உணர்ச்சிபூர்வமானது, ஆனால் விவேகம் அற்றது. ரஷ்யா - உக்ரைன் விடயத்தில் நடுவுநிலமையே இலங்கை தமிழரை பொறுத்த அளவில் தேவையானது என்பது எனது அபிப்பிராயம். 

  • கருத்துக்கள உறவுகள்

Screen Shot 2022-03-11 at 1.21.13 AM தமிழ் ஈழத்தில் Screen Shot 2022-03-11 at 1.25.08 AM உக்ரைனில்

உக்ரைன் மக்களையும், குடிமனைகளையும் ரஷ்ய ஆக்கிரமிப்பு படையினர் அழித்துள்ளனர்.  சிங்களப் படையினரின் அழிவுகளுக்குள் வாழ்ந்தவர்களுக்கு இந்த அழிவுகளின் வலிகள் புரியும். ஆனால் தமிழர்களின் வலிகளை வைத்து தமது வாழ்வை புலம்பெயர் நாடுகளில் வளமாக்கியவர்களுக்கு சர்வாதிகாரி பூட்டினின் மிலேச்சத்தனமான உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பை ரசிக்கமுடியும், கொண்டாடமுடியும்.

யாழ் களத்தில் ஆசாரவாதிகளும், பிற்போக்குவாதிகளும், பிழைப்புவாதிகளும் தங்களை தமிழர்களின் போராட்டத்தின் ஆதரளவாளர்கள் என்று வேடம் போட்டுக்காட்டுவது வழமைதானே. அதில் சிலரை ரஷ்யாவின் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பு அம்மணமாக்கியுள்ளது. ஆனால் தாங்கள் அம்மணத்தை மறைக்க நேட்டோவின் எதிர்ப்பு, மேற்கின் எதிர்ப்பு என்று ஓட்டைகள் நிரம்பிய கோவணத்தை இடுப்பில் கட்டிவருவார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

GIF transparent han applause - animated GIF on GIFER - by Bathis

உக்ரைனின்…. வரை படத்தை, மாற்றி அமைத்த…. புட்டினுக்கு, வாழ்த்துக்கள். 👍🏽 🤝 👏🏻

புட்டினிடமிருந்து... இன்னும் நிறைய, எதிர் பார்க்கின்றோம்.  ❤️

T-Shirt von Wolodymyr Selenskyj ist „Zeichen des Respekts und der Loyalität“

வணக்கம் சிறித்தம்பி! இந்த கோமாளி உங்கை ஒரு சில நாட்டு பாராளுமன்றங்களிலை ஒன்லைன் மீட்டிங் குடுத்து அசத்துறார்.....இவர் செய்த தியாகம் என்னெண்டு எனக்கு தெரியேல்லை. உங்களுக்கு ஏதும் தெரியுமோ? 🤣

கண்ணிலையே தெரியுது நாஷி குணம். அவ்வளவும் விசம்.....விசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

யாழ் களத்தில் ஆசாரவாதிகளும், பிற்போக்குவாதிகளும், பிழைப்புவாதிகளும் தங்களை தமிழர்களின் போராட்டத்தின் ஆதரளவாளர்கள் என்று வேடம் போட்டுக்காட்டுவது வழமைதானே. அதில் சிலரை ரஷ்யாவின் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பு அம்மணமாக்கியுள்ளது. ஆனால் தாங்கள் அம்மணத்தை மறைக்க நேட்டோவின் எதிர்ப்பு, மேற்கின் எதிர்ப்பு என்று ஓட்டைகள் நிரம்பிய கோவணத்தை இடுப்பில் கட்டிவருவார்கள்

ஈராக்,சிரியா,லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்கா தன்னிச்சையாக தாக்கியழித்தது சர்வாதிகாரம் இல்லை.அங்கே மக்கள் நிர்கதியாக்கப்படவில்லை.

உக்ரேனுக்கு மட்டும் ஈழ அழிவுகளுடன் ஒப்பிட்டு இரத்தக்கண்ணீர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

T-Shirt von Wolodymyr Selenskyj ist „Zeichen des Respekts und der Loyalität“

வணக்கம் சிறித்தம்பி! இந்த கோமாளி உங்கை ஒரு சில நாட்டு பாராளுமன்றங்களிலை ஒன்லைன் மீட்டிங் குடுத்து அசத்துறார்.....இவர் செய்த தியாகம் என்னெண்டு எனக்கு தெரியேல்லை. உங்களுக்கு ஏதும் தெரியுமோ? 🤣

கண்ணிலையே தெரியுது நாஷி குணம். அவ்வளவும் விசம்.....விசம்.

குமாராசாமி அண்ணை...  இவர், ஒரு கோமாளி நடிகன் மட்டுமே.
அவர் தியாகமும் செய்யவில்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. 😁

ஐரோப்பாவிலை சேருகிற ஆசையிலை.... முழுசாய் கிடந்த உக்ரேனையும்,
ரஸ்யாவிடம்.... பறி, கொடுத்திட்டு நிக்கிறார். 🤣

கெட்டது   நினைத்தால்.... கெட்டது தான் நடக்கும் என்பதற்கு,
உந்தக் கோமாளி... நல்ல உதாரணம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஈராக்,சிரியா,லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்கா தன்னிச்சையாக தாக்கியழித்தது சர்வாதிகாரம் இல்லை.அங்கே மக்கள் நிர்கதியாக்கப்படவில்லை.

உக்ரேனுக்கு மட்டும் ஈழ அழிவுகளுடன் ஒப்பிட்டு இரத்தக்கண்ணீர்.

கண்முன்னால் நடக்கும் உக்கிரேன் மக்களின் இறப்புக்களையும் அழிவுகளையும் கொண்டாட்ட மனநிலையில் இருந்துகொண்டு இரசித்துக்கொண்டும் சர்வாதிகாரி பூட்டினின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திக்கொண்டும் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், லிபியாவிலும் அமெரிக்காவின் தலைமையில் மேற்கு நாடுகள் மேற்கொண்ட அழிப்புக்களையும், சிரியாவில் ரஷ்யாவின் ஆதரவோடு ஆசாத் மேற்கொண்ட பயங்கர அழிப்புக்களையும் பார்த்து நிச்சயம் கண்ணீர் உகுத்திருக்கமாட்டீர்கள்.

மனிதாபிமானமும், அடிப்படை விழுமியங்களும் இல்லாதவர்கள்தான் மக்களின் அழிவுகளைப் பார்த்து மகிழ்ந்து திளைப்பார்கள்.

அராபியர் மீதும், முஸ்லிம்கள் மீதும் பிற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் எவ்வளவு அனுதாபம் காட்டுவார்கள் என்பதை யாழ் களத்திற்கு வருவபவர்கள் நன்கு அறிவார்கள்.

ஆனால் நாம் அமெரிக்காவின் புஷ்ஷின் ஆக்கிரமிப்பையோ, ரொனி பிளேயர் அதற்கு உடந்தையாக செயற்பட்டதையோ ஒருபோதும் நியாயப்படுத்தவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் மக்கள் அழிவை எனது பதிவு மூலம் ஆமோதிக்கவில்லை; கொண்டாடவும் இல்லை.

 வருத்தமும், ரஷ்யா மீது ஆத்திரமும் தான்.

அனால், உக்ரைன் அரசு எனும்  தனது  நிலைப்பாட்டில் தவறு  இழைத்து விட்டது.

எந்த அரசும், தனது உடல், உயிர் ஊடக இருக்கும் ஆணி வேர் மற்றும் விருட்ச நலன் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

உக்ரைன் என்ற அரசு யதார்த்தமாக , ஆக குறைந்தது ஐரோப்பாவின் அங்கமாக வரலாற்று, மற்றும் இருப்பு அடிப்படையில் இருக்கிறது.

அந்த அரசை எவ்வாறு பாதுகாப்பது எனும் குறிக்கோளே உக்ரைன் எடுத்து இருக்கவேண்டிய முடிவு, நேட்டோ, eu, rusSIA எதை சொன்னாலும், செய்தாலும்.

இங்கே பலர் உக்ரைன் சண்டைக்கு போகவில்லை, ரஷ்யா உள்ளே வந்த நிலையில் எதிர்க்கிறது  எனும் கருத்து இதில் தான் முரண்பாடாக இருக்கிறது.

உக்ரைன் அரசின் முழு முதல் நலன் சண்டையை தவிர்ப்பது.

(மிகச் சிறந்த உ.ம். நரி JR செய்தது, கிந்தியாவின் கால்களில் விழுந்தது. தமிழ் தரப்பு விழுந்து இருக்கலாம், 13 இ விட அதிகாரம் கொண்ட, நிலையான அரச அமைப்பை மற்றும் பாதுகாப்பு உறுதிகளை கிந்தியா தமி தரப்புடன் ஓர் ஒப்பந்தமாக செய்ய முன்வந்து, அதை யஸ்தர்த்தமாக நடைமுறைப்படுத்தி  இருந்தால், இப்பொது ரஷ்யா Moldova இல் செய்வது போல, பெரும்பன்மை தமிழர் ஏற்றக்குக்கொண்டு இருப்பார்கள், பிரபா, புலிகளுக்கு விருப்பு இல்லை என்றாலும். அப்போது கூட புலிகள் ஏற்றுக்கொண்டனர் விருப்பம் இல்லாமல், புலிகள் மேல் கிந்தியவும் சேர்ந்து அமைதி என்ற பெயரில் அழிக்க முனைந்த போதே புலிகள் ஆயுத  எதிர்ப்பு எடுக்க, மிகுந்த பொது  ஆதரவும் இருந்தது).

எமது, இந்த நிலையை ஒப்பிட்டு பார்த்தால், உக்ரைன் அரசு (இதை அழுத்தி சொல்கிறேன்) தனது கேந்திர, ஆணி வேர், விருட்ச நலன் எது என்பதை  அறியவில்லை, அல்லது புறக்கணித்து விட்டது என்பது வெளிப்படடை.
 
நேட்டோ சொல்லிவிட்டது, உக்ரைன் உடனடியாக சேர முடியாது என்று . அதற்கு பின்னும் Ukrain சண்டை தவிர்ப்பை செய்வதற்கு ஆனா விட்டு கொடுப்புகளை செய்யவில்லை என்பதே, உக்ரைன் நலனில் இருந்து பார்க்கும் பொது, உக்ரைன் செய்த பெரும் வரலாற்று தவறு.

எல்லோரும் சொல்லலாம், ருசியா அதை கேட்டு சும்மா இருந்து இருக்கலாம் தானே என்று. ரஷ்யா இற்கு அந்த நிலையிலும், தனது பாதுகாப்பு கேள்வி குறி என்ற அச்சுறுத்தல் உணர்வு ஏற்றப்படும் போது, ரஷ்யா வேறு எவர் சொல்லுவதை கேட்கும் நிலை எடுக்க தேவை (அழுத்தம்) இல்லை என்பதை உக்ரைன் கருத்தில் எடுத்து இருக்க வேண்டும்.        

இப்பொது நேட்டோ, ரஷ்யா பல பரீட்சையில் அழிந்தது உக்ரைன். உக்ரைன் அரசு என்ற நோக்கில், உக்ரைனுக்கு இது தேவையா?

மற்றது இதில் ரஷ்யா க்கு பாரிய பொருளாதர பின்னடைவு இருந்தாலும், ரஷ்யா அதை ஆக குறைந்தது பகுதியாக நிரப்பும் தன்மை  அதன் பொருளாதாரத்தில் வரும், ஏனெனில் உலகம் முழுவதும் மேற்றுகின் ரஷ்யா பொருளதாசரை தசடையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்னொமொரு மறைமுக  விளைவு, காலம் எடுத்தாலும், இப்பொது உள்ள US மேலாண்மை financial system க்கு ஈடான ஒன்றை கட்டி எழுப்புவது.

இன்னமொன்று, அண்மையில் (April 2022) Solomon Islands இல் US, Australia, UK, EU இந்த நிலைப்பாடு, ரஷ்யா எடுத்த நிலைப்பாட்டை சரி என்று ஆக்கி விட்டது. சுருக்கமாக, Solomon Islands சீனாவுடன்  பாதுகாப்பு உடன்படிக்கை செய்தது. US சொன்னது (UK, EU எதிர்கவில்லை, ஆஸ்திரேலியா ஆதரித்தது), சீன Solomon Islands இல் நிரந்தர இராணுவ பிரசன்னம் வரும் என்றால், இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று, சீனாவையும், Solomon Islands ஐயும் எச்சரித்தது.

அத்துடன் US இன்னமும் Monroe கோட்பாட்டை இறுக்கி கடைபிடிக்கிறது. Monroe கோட்பாடு என்பது, James  Monroe எனப்படும் அமெரிக்க அதிபரால், அன்றைய நிலையில் (1823 இல், அநேகமான Spanish காலனிகள் சுதந்திரத்துக்கு தயாரான காலம்), ஐரோப்பிய   காலனித்துவ அரசுகள் மீளவும் அமெரிக்கா கண்டத்தில் தலையிடும் என்று US அறிந்த போது, அமெரிக்க கண்டத்தில் இருக்கும் அரசு மற்றும் அதிகார பீடங்களை தவிர வேறு எவரும் அமெரிக்க கண்டத்தில் தலையீடு செய்ய கூடாது. செய்வதை  US பார்த்து கொண்டு இராது எனம் பிரகடனம். Trump Venezuala பிரச்சனையில் கையில் எடுத்தது, Monroe கோட்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

Screen Shot 2022-03-11 at 1.21.13 AM தமிழ் ஈழத்தில் Screen Shot 2022-03-11 at 1.25.08 AM உக்ரைனில்

உக்ரைன் மக்களையும், குடிமனைகளையும் ரஷ்ய ஆக்கிரமிப்பு படையினர் அழித்துள்ளனர்.  சிங்களப் படையினரின் அழிவுகளுக்குள் வாழ்ந்தவர்களுக்கு இந்த அழிவுகளின் வலிகள் புரியும். ஆனால் தமிழர்களின் வலிகளை வைத்து தமது வாழ்வை புலம்பெயர் நாடுகளில் வளமாக்கியவர்களுக்கு சர்வாதிகாரி பூட்டினின் மிலேச்சத்தனமான உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பை ரசிக்கமுடியும், கொண்டாடமுடியும்.

யாழ் களத்தில் ஆசாரவாதிகளும், பிற்போக்குவாதிகளும், பிழைப்புவாதிகளும் தங்களை தமிழர்களின் போராட்டத்தின் ஆதரளவாளர்கள் என்று வேடம் போட்டுக்காட்டுவது வழமைதானே. அதில் சிலரை ரஷ்யாவின் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பு அம்மணமாக்கியுள்ளது. ஆனால் தாங்கள் அம்மணத்தை மறைக்க நேட்டோவின் எதிர்ப்பு, மேற்கின் எதிர்ப்பு என்று ஓட்டைகள் நிரம்பிய கோவணத்தை இடுப்பில் கட்டிவருவார்கள்!

கிருபனின் கோபம் சரியானது.....நியாயமானது....வரவேற்கப்படவேண்டியது...இலங்கை தமிழரின் போரட்டத்துக்கு....ஆதரவை அதிகரிப்பு செய்யக்கூடியது.....இலங்கை அரசை யார் ஆண்டபோதும். ..இன்றைய நிலையிலும்...ஓர் ஆக்கிரமிப்புயாளனென்று ...பறைசாற்றுகின்றது.இலங்கை தமிழர் ஆகிய எமக்கு தமிழ்ஈழம்  அல்லது மிகவும் உறுதியான சுயாட்சி கிடைக்கவேண்டுமானால்....எங்கு எல்லாம் ஆக்கிரமிப்பு நடக்கிறதோ அவற்றை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்   அப்படி செய்யாமல் ஆதரிப்போமாகில்.  எங்கள் விடுதலைக்கு பின்னடைவை எற்ப்படுத்தும்  🙏🤝

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

முள்ளிவாய்க்கால் யுத்தம் உட்பட ஈழ விடுதலைப் போரின் போது.. கூலிக்காக.. நேரடியாகப் பங்கேற்று எம் மக்களின் தலையில் குண்டு வீசிக் கொன்ற உக்ரேனியர்களின் நகரான மரியோபுல்.. முள்ளிவாய்க்கால் மாதத்தில்.. ரஷ்சியா வசம் வீழ்ந்தது.

எம்முடன் ஒப்பிடும்போது

உக்ரைன் அழிவுகள்  ஒன்றுமே  இல்லை

சீ இத்தனை குண்டுகளை  எம்மீது  கொட்டியவனின்  அழிவுகள்  இவ்வளவு  தானா?

இன்னும் எதிர் பார்க்கிறேன்

அடுத்து  ரசியர்கள்???

துன்பத்தை  தந்தவனுக்கு  அதையே  திருப்பிக்கொடு

(இப்பொழுதெல்லாம் இரக்கத்தை வீம்புக்கு வரவழைக்க  வேண்டியுள்ளது.  வேண்டாம்  அது  எனக்கு?)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது புராதன மற்றும் சமகால வரலாற்றை புரட்டிப் பார்த்தல், ரஷ்யா ஒன்றில் அதன் வலிந்த மற்றும் தற்பாதுகாப்பு   ராணுவ நடவடிக்கை என்பதில் மிகவும் மெதுவாகவே அதன் குறிக்கோளைகளை அடைந்தது.

Ukrain இப்போது செய்வது எல்லாம், தந்திரோபாய முன்னேற்றம் அல்லது வெற்றிகள். ஒன்றும் கேந்திர தன்மை உடையவை அல்ல.

ரஷ்யா ஐ நியாயப்படுத்த சொல்லவில்லை, உக்ரைன் கேந்திர நலனின் நோக்கில் இருந்தே இதை நான் பார்க்கிறேன்.     

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கண்முன்னால் நடக்கும் உக்கிரேன் மக்களின் இறப்புக்களையும் அழிவுகளையும் கொண்டாட்ட மனநிலையில் இருந்துகொண்டு இரசித்துக்கொண்டும் சர்வாதிகாரி பூட்டினின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திக்கொண்டும் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், லிபியாவிலும் அமெரிக்காவின் தலைமையில் மேற்கு நாடுகள் மேற்கொண்ட அழிப்புக்களையும், சிரியாவில் ரஷ்யாவின் ஆதரவோடு ஆசாத் மேற்கொண்ட பயங்கர அழிப்புக்களையும் பார்த்து நிச்சயம் கண்ணீர் உகுத்திருக்கமாட்டீர்கள்.

மனிதாபிமானமும், அடிப்படை விழுமியங்களும் இல்லாதவர்கள்தான் மக்களின் அழிவுகளைப் பார்த்து மகிழ்ந்து திளைப்பார்கள்.

அராபியர் மீதும், முஸ்லிம்கள் மீதும் பிற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் எவ்வளவு அனுதாபம் காட்டுவார்கள் என்பதை யாழ் களத்திற்கு வருவபவர்கள் நன்கு அறிவார்கள்.

ஆனால் நாம் அமெரிக்காவின் புஷ்ஷின் ஆக்கிரமிப்பையோ, ரொனி பிளேயர் அதற்கு உடந்தையாக செயற்பட்டதையோ ஒருபோதும் நியாயப்படுத்தவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை. 

""ஆனால் நாம் அமெரிக்காவின் புஷ்ஷின் ஆக்கிரமிப்பையோ, ரொனி பிளேயர் அதற்கு உடந்தையாக செயற்பட்டதையோ ஒருபோதும் நியாயப்படுத்தவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை"

கிருபன்,

நீங்கள் எழுதியதில் ஒரு சொல்லு விடுபட்டுப் போச்சு. அது என்ன சொல்லு எண்டு சொல்லுங்கோ பார்ப்போம் ?

"" எதிர்க்கவும் இல்லை "" Missing  🤣

நடுவூ நிலைமை காக்கிறீங்கள் போல..

 உந்த நடு நிலைவாதிகள், முற்போக்குவாதிகள் எண்டு சொல்லுற கனபேர் இப்பிடித்தான் சீசனுக்கு சீசன் சுருதி மாத்திப் பாடுவினம். 

இப்பிடி எத்தின பேரப் பாத்திட்டோம் கிருபன். 

ஜோச் புஸ் சொன்ன “Either you with us or against us”  இதில நீங்கள் எந்தப் பக்கம் ? 

அமெரிக்க ஆயுதப் படைகளின் தளகர்த்தர் Lloyd Austin பகிரங்கமாகவே "ரஸ்யா மீண்டும் எழ முடியாதபடி அழிக்கப்பட வேண்டும்  என்பதே தங்கள் நோக்கம்"  என்று கூறிய பின்னரும் ரஸ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்பு தனியே நில ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்டது என்று நீங்களும் உங்களைப் போன்ற நடுவூ (😏) நிலைமைவாதிகள் நம்புவீர்களானால்...........🤦🏼‍♂️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kapithan said:

ஜோச் புஸ் சொன்ன “Either you with us or against us”  இதில நீங்கள் எந்தப் பக்கம் ? 

நிச்சயமாக புஷ்ஷின் பக்கம் இல்லை. ஒரு போதும் வலதுசாரிகளை ஆதரித்தது கிடையாது ஏனெனில் எனது சிந்தனை எப்போதும் முற்போக்கான இடது சார்ந்ததுதான். 

40 minutes ago, Kapithan said:

"" எதிர்க்கவும் இல்லை "" Missing  🤣

அது உங்களைப் போன்ற பிழைப்புவாதிகளின் சிந்தனை. அதுதான் உங்களிடம் இருந்து வந்துள்ளது.

எவ்வளவு பிற்போக்குவாதியாக இருந்தாலும் புலிகளை ஆதரிக்கின்றேன், தமிழ்த்தேசியவாதி என்று சொன்னால் அரவணைத்துக் கொள்ளவும் யாழில் சிலர் இருக்கின்றார்கள். தமிழ் தேசியத்தைப் போர்வையாகக் கொண்ட பிற்போக்குவாதிகளையும், பிழைப்புவாதிகளையும் இங்கு தினமும் பார்க்கின்றோம்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

நிச்சயமாக புஷ்ஷின் பக்கம் இல்லை. ஒரு போதும் வலதுசாரிகளை ஆதரித்தது கிடையாது ஏனெனில் எனது சிந்தனை எப்போதும் முற்போக்கான இடது சார்ந்ததுதான். 

அது உங்களைப் போன்ற பிழைப்புவாதிகளின் சிந்தனை. அதுதான் உங்களிடம் இருந்து வந்துள்ளது.

எவ்வளவு பிற்போக்குவாதியாக இருந்தாலும் புலிகளை ஆதரிக்கின்றேன், தமிழ்த்தேசியவாதி என்று சொன்னால் அரவணைத்துக் கொள்ளவும் யாழில் சிலர் இருக்கின்றார்கள். தமிழ் தேசியத்தைப் போர்வையாகக் கொண்ட பிற்போக்குவாதிகளையும், பிழைப்புவாதிகளையும் இங்கு தினமும் பார்க்கின்றோம்தானே.

நம்பிட்டோம் சாமியோவ் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

நம்பிட்டோம் சாமியோவ் 🤣

தேவையற்ற பிற  விடயங்களில் எமக்குள்ளேயே பிரித்தடிபட்டாலும் சொல்வார்கள்

இந்தளவு  தான் தமிழரின் ஒற்றுமை  என?

நீ  எந்த  தளத்தில் 

ஏன் நடுவில் தான் நின்று கொம்பெடுத்தாலும்

தமிழர் தாயகத்தில்  ஒரே  கொள்கையா?

நீ எனக்கு  சகோதரம்  என் தம்பியடா நீ

இவ்வளவு  தான் என் கொள்கை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணர்.. இன்னும் முழுமையா இந்த யுத்தம் பற்றி விளங்கிக்கொள்ளவில்லை அல்லது விளங்கினதா காட்ட விரும்பவில்லை போலும்.

பெரும்பான்மை.. ரஷ்சிய மொழி பேசும் டான்பாஸ் பிராந்திய மக்களின் சுதந்திரத்தை உக்ரைன் பறித்து.. ரஷ்சியாவோடு.. நேரடியாக முரண்பட்டு.. நேட்டோ சார்பு.. ஐரோப்பிய ஒன்றிய சார்பு நிலையை வலுப்படுத்த.. நேட்டோ நாடுகளின் தேவையை பூர்த்தி செய்யமுற்பட்டதன் விளைவே இந்த யுத்தம்.

டான்பாஸ் பிராந்தியத்தில்.. தற்போது உக்ரைனில் கொல்லப்பட்டதை விட அதிகம் மக்கள் உக்ரேனியப் படைகளால் கொல்லப்பட்டிருப்பதோடு.. பள்ளிக்கூடங்கள்.. வைத்தியசாலைகள் என்று எதுவுமே மிஞ்சாது இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டு வந்தது. இது 2014 இல் இருந்து நடந்து வருகிறது.. அந்தப் பிராந்திய மக்கள் உக்ரைனில் இருந்து தாம் பிரிந்து செல்ல விரும்பியதாக இனங்காட்டிய பின்னரும்.. உக்ரைன் வலிந்து ரஷ்சியாவை வேறு நாடுகளின் தேவைக்காகப் பகைத்துக் கொள்ளும் வகையில்.. இந்த மக்களின் கோரிக்கையை நிராகரித்து அவர்கள் மீது இராணுவ அடக்குமுறைகளையும் இராணுவ ஆக்கிரமிப்பையும் வலுப்படுத்தியது.

இதன் ஒரு கட்டத்தில்.. டான்பாஸ் ரஷ்சிய ஆதரவுப் போராளிகள்.. டான்பாஸ் பிராந்தியத்தின் கனிசமான அளவை கைப்பற்றி தம் வசப்படுத்திக் கொண்டனர். தமது நிலைகளை அங்கு வலுப்படுத்தி.. முகமாலை போன்று ஒரு முன்னரங்க அரணை அமைத்துக் கொண்டனர்.. தமது கட்டுப்பாட்டில் இருந்த டான்பாஸ் பிராந்தியத்தில்.

இந்த பிராந்தியத்தை மீளக் கைப்பற்றும் நோக்கில்.. உக்ரைன் முன்னெடுத்த பல இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்த நிலையில்.. உக்ரைன் நேரடியாகவே நேட்டோ நாடுகளிடம் இருந்து ஆயுத.. இராணுவ தளபாட உதவிகளையும் இராணுவ தந்திரோபாய உதவிகளையும்.. நேரடிப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டு.. இந்தப் போராளிகள் மீது பாரிய அளவில் ஆக்கிரமிப்புத் தாக்குதலுக்கு திட்டமிட்டு வந்த நிலையிலும்.. நேட்டோவின் நேரடி ஆதிக்கம்.. உக்ரைனில் அதிகரிக்க ஆரம்பித்ததன் அடிப்படையிலும்.. ரஷ்சியா மீது மேற்குலகு தமது தேவைக்காக பொருண்மிய தடைகளை கொண்டு வந்ததன் விளைவாகவுமே ரஷ்சியா இந்த யுத்தத்திற்குள் முழுமையாக இழுத்துவிடப்பட்டது. 

சிரியாவில்.. ரஷ்சியாவிடம் தாம் ராஜதந்திர ரீதியில் தோற்க வேண்டி வந்ததற்கு பழிவாங்கும் வகையிலும் ரஷ்சியாவின் சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னான மீள் எழுச்சி கண்டும்.. நேட்டோ மற்றும் அமெரிக்க சார்ப்பு மேற்கு நாடுகளின் பகைமைத் தன்மை காரணமாக கொழுந்துவிட்டு எரிவதே இந்த யுத்தம்.

இதில்.. ரஷ்சிய மொழி பேசும்.. டான்பாஸ் பிராந்திய மக்களை தான் ஈழத்தமிழருக்கு ஒப்பிட முடியுமே தவிர.. மேற்குலக.. நேட்டோ ஆதரவும் ஆயுதமும் பெறும்.. உக்ரைன் ஈழத்தமிழர்களின் நிலையை எப்பவுமே எட்ட முடியாது. ஏனெனில் உக்ரைன் சுதந்திரம் வேண்டிப் போராடவில்லை.. மாறாக ஆக்கிரமிப்பை நோக்கி போர் செய்கிறது. 

டான்பாஸ் பிராந்தியம் விடுதலை வேண்டிப் போராடுகிறது.. ரஷ்சியா அதற்கு ஆதரவளிக்கிறது. ஈழத்தில் ஹிந்தியா செய்தது போல் அன்றி தன்னை நம்பி வந்த டான்பாஸ் மக்களை என்ன விலை கொடுத்தாலும் பாதுகாப்பதை கொண்டியங்கும் ரஷ்சியாவா.. சொந்த பிராந்தியத்தில் வாழ்ந்த ரஷ்சிய மொழி பேசும் மக்களை கொன்று குவித்து நேட்டோ.. ஐரோப்பிய ஒன்றிய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்.. உக்ரைனா சிறந்தது.. என்றால்..

ரஷ்சியா என்பது வெளிப்படை ஆகும். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Ukraine launched a military counter-offensive against pro-Russian forces in April 2014, called the "Anti-Terrorist Operation"[44] (ATO) from 2014 until 2018, when it was renamed the "Joint Forces Operation" (JFO). 

இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பதம் எம் மக்களுக்கு நன்கு பரீட்சயமாக இருக்கும். இப்படி ஒரு பதம் மூலமே அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமை நாடுகளையும் இணைத்துக் கொண்டு தன் சார்பு சர்வதேச நாடுகளையும் இணைத்துக் கொண்டு.. ஹிந்தியாவையும் சீனாவையும் இணைத்து ஒரு புள்ளியில் குவிய வைச்சு.. தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப் போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்குள் கொண்டு வந்து சிங்களச் சிறீலங்கா செய்தது.. பெரும் இனப்படுகொலையை செய்து முடித்தது. அதே பாணியை தான் உக்ரைன் டான்பாஸ் பிராந்தியத்தில் செய்தது.. செய்தும் வருகிறது.

இதனை எல்லாம் விட்டிட்டு.. மேற்குலக பிரச்சாரங்களுக்கு எடுபட்டு கிருபண்ணர் உக்ரைனுக்காக வடிக்கும் கண்ணீர் நீலிக்கண்ணீராகும். அது முற்போக்கும் அல்ல.. முழுப் பித்தலாட்டத்தின் உச்சம். 

https://en.wikipedia.org/wiki/War_in_Donbas

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இவ்வளவு காலமும் பிஸியாக்கும். லேற்றாக வந்து இப்பத்தான் விக்கிபீடியா எல்லாம் படிக்கின்றார்.🤭

யாழில் பல திரிகளும், கட்டுரைகளும், ஆய்வுகளும் நிறைய உள்ளன. அவற்றை எல்லாம் படிக்க உங்களுக்கு நேரம் இருக்காது என்பதால் @பகிடி எழுதிய அவரது உக்கிரேன் வாழ்வு அனுபவங்களையாவது படித்தால் டொன்பாஸ் பற்றிப் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவை ஒரு குண்டு ஆல் அழிக்க முடியும்....செயற்கையாக சுனாமி எற்ப்படுத்தி கடலில் முழ்கடிக்க முடியும்...ஜேர்மனியை அழிக்க 120 வினாடிகள் போதும்   ...பிரான்ஸ்யும சில நொடியில் அழிப்போம்....என்று செய்திகளும் அறிக்கைகளும்.  வந்து கொண்டிருக்கும் போது ரஷ்யா இதுவரை எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.  எனவே… இவையெல்லாம் உண்மை என்று தான் கருத வேண்டும்    ஆகவே இப்படியான  திறமையான நாட்டுக்கு இங்கே பலரும் சொன்னது போல் உக்ரேன் பாதுகாப்பு அற்ற நாடாக இருக்க 1% கூட வாய்ப்பு இல்லை.....மேலும் புதினுக்கு பதிலாக வேறு நபர் அதிபர் பதவியில் இருத்தல் இந்த போர் தொடங்கியிருக்காது பொருள்களில் விலைகளும் ஏறி இருக்காது 

ஆசை நாயகி மூலம் நான்காவது குழந்தையை உருவாக்கிய புதின். உக்ரேன் இல் பல ஆயிரம் குழந்தைகளை கண்ணை மூடிக்கொண்டு கொலை செய்கிறார்  கோத்தா இன் நிலைக்கு இவர் வருவார்...வர வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

ஐயாவுக்கு உக்ரேன் அழிவுகள், உலக பொருளாதார, அரசியல், கொள்கை மாற்றங்களில் எல்லாம் இல்லாத அக்கறை, புட்டினின் ஆசை நாயகி மீது ஏன் .....

🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

ஐயாவுக்கு உக்ரேன் அழிவுகள், உலக பொருளாதார, அரசியல், கொள்கை மாற்றங்களில் எல்லாம் இல்லாத அக்கறை, புட்டினின் ஆசை நாயகி மீது ஏன் .....

🤣🤣🤣

அவர்களுக்கு… ஆசைநாயகி இல்லையே, என்ற வயித்தெரிச்சலில் தான்…
புட்டினில் பிழை என்று, உருட்டுகிறார்கள். 🤣 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.