Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்

Featured Replies

இராமாயணம் தமிழர்களுக்கு மட்டும் அல்ல. சைவத்திற்கு எதிரானது.

நீங்கள் எதைப் படித்தாலும், அதை நுட்பமாக படிக்கவும், ஆராயவும் தெரிந்திருக்க வேண்டும்.

இராமன் சிவனை வணங்கியதாக இராமாயணம் சொல்லவில்லை. பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட தல வரலாறுகள் என்று சொல்லப்படுகின்ற கதைகள் அவ்வாறன சில விடயங்களை சொல்கின்றன.

"ஆறு காண்டங்களில் நாற்பத்தி இரண்டு படலங்களில்" கம்பர் சொன்னவற்றையும் தாண்டி நீங்கள் புதிதாக ஏதாவது சொல்லி வைக்காதேங்கோ...

சிவதனுசை எவராலும் தொடக்கூட முடியவில்லை... இராமன் எழிதாக எடுத்தான் வளைத்தான் வளையும் போது முறிந்தது என்பது இராமனின் பராக்கிரமத்தை சொன்ன கம்பனின் சிந்தனை அது... பரசுராமன் வில் ஒண்றை இராமனுக்கு பரிசளித்தான் அதை வளைத்து யாரையும் கொல்ல விரும்பாத இராமன் . பரசுராமனின் தவபலன் மீதே வில் தொடுத்தான் என்பதுதான் கம்பன் சொன்னது... கம்பனின் கற்பனைக்கும் மீறி சொல்ல பட்டது அந்த விஸ்னுதனுசு.....

விஸ்னுவில் அவர்தாரங்களில் ஒண்று பரசுராமர் என்பதனால் பரசுராமர் கொடுத்த வில்லை விஸ்னுதனுசு எண்று வர்ணிக்க வெளிக்கிட்டு இருக்கலாம்... அதுக்கும் கம்பராமாயணத்துக்கும் தொடர்பே இல்லை...

  • Replies 265
  • Views 30.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திருமகன் சார்..

கற்பனை.. (imagination) சிந்தனை..(thinking) யோசனை..(idea) இவற்றிற்கு இடையில்.. அர்த்தம் புரியாமல் இங்கு பாவிக்கவில்லை என்பதை தெளிவாகச் சொல்லலாம். அப்படி பிரயோகிக்கப்பட்ட இடத்தைக் காட்டினால்.. உங்களுக்கு போதிய விளக்கமளிக்க தயாராகவே உள்ளோம்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்பர்னியம்.. ஆரியம்.. திராவிடம் என்ற சமுகப் பிரிவினை மூளைச் சலவைக்குள் இருந்து எந்தக் கண் கொண்டு பார்த்தாலும்.. அது இப்படித்தான் தெரியும்..!

நமக்கு நாசாவின் குறிப்பு உங்களினது பார்வையை விட பல மடங்கு பெறுமதியான விடயத்தை தருகிறது. இப்பாலம் தொடர்பில் தொடரப்பட வேண்டிய அறிவியல் அணுகுமுறைக்கு வழி காட்டுகிறது..!

Astronaut photography does not provide information on the age of islands in the Palk Strait, nor can it provide information on the subsurface structure or composition of the islands. We therefore cannot speculate on the validity of other origin narratives for the Palk Strait islands.

செய்மதி மூலம் பெறப்பட்ட படங்கள் மூலம் இராமர் பாலத்தின் வயதை தீர்மானிக்க முடியவில்லை. அதுமட்டுமன்றி அதன் உப தரைத்தோற்றக் கட்டமைப்பு மற்றும் அதன் கூறுகள் குறித்து எம்மால் எதுவும் கூற முடியவில்லை. அதனடிப்படையில் எம்மால்.. இப்பாலம் தொடர்பான அறுதியான உறுதியான முடிவுகளைக் கொடுக்க முடியாமல் இருக்கிறது எங்கிறது நாசாவின் குறிப்பு. இது 02- 08-2007 இல் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மதச்சடங்குகளும் வசதியான இடங்களுக்குத்தான் விஞ்ஞான விளக்கம் பேச முற்படுகிறது.

முழுமைக்கும் விஞ்ஞான விளக்கம் பேசமுற்பட்டால் விசயம் கந்தலாகிவிடும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

தற்கொலை செய்வதற்க்காக ஒருவன் உண்ணுகின்ற விசத்தில் கூட சிறுநீரகத்துக்கு நன்மைதரும் மூலக்கூறு சிறியளவில் இருந்து விட்டால், அதுக்கு மட்டும் அளந்து விஞ்ஞான விளக்கத்தை பேசிவிட்டு விஞ்ஞானமே சொல்லுகிறது இந்த விசம் மனிதனுக்கு நன்மை செய்கிறது என்று கூறுவதைப் போன்றதே இவர்களது விஞ்ஞானவிளக்கப் பாவிப்பு.

இது மனிதனால் போடப்பட்ட பாலம் என்ற தரவு நாசாவால் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டால், அவர்கள் கோட்பாட்டுக்கு கடவுள் நம்பிக்கை என்பது, உள்வாங்கல் தகவல்களில் அதுவே விவகாரமானது அல்லவா?

தமது ஆராட்சிக்கதிர்களை செவ்வாய். வியாழன்களில் இருந்து விலக்கி குவிக்கப் படவேண்டியது இந்தப் பாலத்தின் மீதே அல்லவா?

மண்ணியல் ரீதியிலான ஆய்வுகளுக்கு அடித்தளம் போட்டிருக்க வேண்டும் அல்லவா?

எங்கே அப்படி ஏதும் அலவாங்குச் சத்தம் கூட ஒன்றும் இன்னும் கேட்க்கவில்லையே!

உங்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்று சொன்னார்களா? இல்லை

நீங்கள் இப்படியே இருப்பதுதான் அவர்களுக்கு சந்தோசம் என்பதாலா?

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணம் தமிழர்களுக்கு மட்டும் அல்ல. சைவத்திற்கு எதிரானது.

நீங்கள் எதைப் படித்தாலும், அதை நுட்பமாக படிக்கவும், ஆராயவும் தெரிந்திருக்க வேண்டும்.

இராமன் சிவனை வணங்கியதாக இராமாயணம் சொல்லவில்லை. பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட தல வரலாறுகள் என்று சொல்லப்படுகின்ற கதைகள் அவ்வாறன சில விடயங்களை சொல்கின்றன.

இராமாயணம் சைவத்திற்கு எதிரானது என்று நான் சொல்வதற்கு சில காரணங்கள் உண்டு.

சபேசனின் கருத்துக்கள் அனைத்தும்.. இந்து மதத்தின் மீதும் அதனுடன் தொடர்புள்ள மக்கள் குழுமம் மீதும் எப்படியாவது தப்பபிப்பிராயத்தை வளர்த்திட வேண்டும் என்பதுதான்.

நாம் மதத்தை வெறுப்பவர்களோ விரும்புபவர்களோ அல்ல. ஆனால் மத வழிபாடு செய்யும் உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதை ஐநா கூட அங்கீகரிக்கிறது. அதில் தலையீடு செய்ய எமக்கு உரிமையில்லை.

இவருக்கு எப்படி மதத்தின் மீது அபாண்டமான பழிப்புக்களை தாந்தோன்றித்தனமாக செய்ய உரிமை உண்டோ அதே அளவு உரிமை அதை மறுக்கவும் உண்டு..!

இராமாயணம்.. சைவத்துக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதாக தெரியவில்லை. சைவத்துக்கும் அங்கு சம மதிப்பளிக்கப்படுகிறது..!

சிவ கீதை

ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாகிய ஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளியது இந்த சிவ கீதை. கீதை என்பது பாட்டு. கீதைகள் சிவ கீதை, ஸ்ரீ இராம கீதை, பகவத் கீதை, சூர்ய கீதை எனப் பலவாகும். இதில் சிவகீதை பத்ம புராணத்தைச் சேர்ந்தது.

இராமர் வனவாசத்தில் சீதையைத் தேடி வருந்திய பொழுது அகத்தியமுனிவரால் இராமருக்கு விரஜா தீட்சை செய்விக்கப் பெற்று, பாசுபத விரதத்தை அனுஷ்டிக்கச் செய்து, அதன் பயனால் சிவபெருமான் பாசுபத அஸ்திரப் படையைத் தந்து, அதனால் இராவணனை வென்று சீதையை மீட்பாய் என்று கூறி, சிவபெருமான் விஸ்வரூப தரிசனம் தந்தருளி, சிவகீதையை உபதேசித்தார். இராமர் பேரானந்த மடைந்தார்.

இக்கீதையில் பாசுபத விரதத்தால் சிவபெருமானை வழிபடும் முறையும், அனைவரும் பின்பற்ற வேண்டிய சிவநெறியாகவும், இறைவழிபாடு, இயற்கை வழிபாடு என்னும் பேருண்மையை உலகிற்கு உணர்த்தியும், மேலும் சிவபூஜா முறைகளை அருளிச் செய்திருக்கிறார்.

திரேதாயுகத்தில் நடைபெற்ற புராணச் சான்றாகும். துவாபரயுகத்தில் கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு அருளிச் செய்த பகவத் கீதைக்கு முந்தைய காலத்தே நடந்தது. சிவகீதை இராம் அவதாரத்தில் பெற்றது என்றும், கிருஷ்ணர் அவதாரத்தில் கொடுத்தது என்றும், கிருஷ்ணர் தாம் பகவத்கீதையில் "சிவோகம்-பாவனை" செய்கின்ற போது தம்மை பரமாகக் கூறினார் என்பதை அவருடைய சரித்திரங்களில் காணலாம். சிவகீதையில் சூதமுனிவர் தனது சீடர்களுக்கு உபதேசித்த காலத்தில் இதைக் கேட்டாலும், படித்தாலும், சிவசாயுச்சியம் கிடைக்கும் என்று உரைத் தருளினார்.

சிவகீதையை முன்னர் புலோலி சிவஸ்ரீ ம.முத்துக்குமாரசாமி குருக்கள் அவர்களாலும், நல்லூர் தா. கைலாசப் பிள்ளை அவர்களாலும் ஆனந்த வருடம் ஆங்கிலம் 1914-ல் வெளிவந்துள்ளது. தற்போது சிவஸ்ரீ அ.சொர்ண சுந்தரேசன், தேவகோட்டை மற்றும் திருவாடானை சிவஸ்ரீ சொ. சந்திரசேகர குருக்கள் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

இது

திருவரசு புத்தக நிலையம்,

13, தீனதயாளு தெரு,

தியாகராய நகர்,

சென்னை-600 017

மூலம் வெளியிடப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசனின் கருத்துக்கள் அனைத்தும்.. இந்து மதத்தின் மீதும் அதனுடன் தொடர்புள்ள மக்கள் குழுமம் மீதும் எப்படியாவது தப்பபிப்பிராயத்தை வளர்த்திட வேண்டும் என்பதுதான்.

நாம் மதத்தை வெறுப்பவர்களோ விரும்புபவர்களோ அல்ல. ஆனால் மத வழிபாடு செய்யும் உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதை ஐநா கூட அங்கீகரிக்கிறது. அதில் தலையீடு செய்ய எமக்கு உரிமையில்லை.

இவருக்கு எப்படி மதத்தின் மீது அபாண்டமான பழிப்புக்களை தாந்தோன்றித்தனமாக செய்ய உரிமை உண்டோ அதே அளவு உரிமை அதை மறுக்கவும் உண்டு..!

இராமாயணம்.. சைவத்துக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதாக தெரியவில்லை. சைவத்துக்கும் அங்கு சம மதிப்பளிக்கப்படுகிறது..!

------------------------------------------------------------------------------------------------------------------------------

மனித உரிமைகள் என்ற அளவுகோலுக்கூடாகவே மதவழிபாட்டு உரிமை நியாயம் பெறுகிறது ஐநாவின் சட்டதில்.

ஆனால் உங்களுடைய பக்திக்கு முதல் பலியாவது மனித உரிமைதானே இதனால்த்தான் அதை கட்டுப்படுத்த நினைப்பதும் மனித உரிமைகளின் அக்கறையின் பொருட்டே ஆகிறது.

மனிதமுன்னேற்றத்துக்கு குறுக்கே படுத்துக் கிடக்கும் இந்த நம்பிக்கைகளை துப்பரவு செய்யாவிட்டால் அதற்க்கு வழிபிறக்குமா?

மேலைநாடுகளின் முன்னேற்றதுக்கு காரணங்கள் என்ன?

வாஸ்து பார்த்துதான் மாடங்கள் கட்டுகிறார்களா? இல்லை

வேலைத்தளங்கள் திறக்கப்படும் போது பூசைகள்தான் செய்கிறார்களா?

தொடர்பு பட்ட சூழ்நிலைகளில் இருந்து வெற்றிவாய்ப்புக்களை பிழிந்தெடுக்க அவர்கள் கவனம் முழுமையாக செலவு செய்யப் படுகிறது. நாமோ அரசமரத்தை சுற்றுவதுபோல் தேவையான இடத்தை விட்டு சம்பந்தமே இல்லாத இன்னோர் இடத்தில் கவனத்தை செலவு செய்கிறோம். பகுத்தறிவின் கேள்விகளுக்கு விஞ்ஞான விளக்கம் வேறு சொல்கின்றோம். அது அவர் மனதில் நம்பிக்கையை உசார்ப்படுத்துகிறது ஆதலால் குற்றம் இல்லையாம். இப்படி ஆத்தில போட்டுட்டு குளத்திலேயே தேடவைக்கின்ற ஒரு தப்பான தொழிலை செய்ய ஊக்கப்படுத்துகிறதே என்ற கவலை இல்லையே உங்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் இரண்டு பிரதான வல்லரசுகளின் மக்களும் மத நம்பிக்கையில் இருப்பவர்கள்.! அமெரிக்கா மற்றும் ரஷ்சியா..!

இத்தாலி.. கிறிஸ்தவ மதத்தின்.. இருப்பிடமாகவே விளங்குகிறது. இஸ்ரேல்.. யூதர்களின். மத இருப்பிடமாக உள்ளது. ஏன் இந்தியா கூட இன்று பல துறைகளில் வேகமாக முன்னேறி இருக்கிறது.

மத அடிப்படைகளுக்கு அப்பால் மக்கள் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தையே நடத்தேல்லையா..??!

பிரச்சனை மதத்தில் அல்ல.. உங்கள் மனங்களில்..! ஐநாவே மத உரிமைகளை அடிப்படை மனித உரிமைகளுக்குள் வழங்கும் போது.. அதை நிராகரிக்க நீங்க யார் சார்..??! :D

-------------------------------------------------------------------------------------------------------

சுப்புறமணிய சுவாமியின் மத உணர்வு என்ன சொல்கிறது?

நாய்களின் பிழைப்பு நடத்தும் மனித உயிர்களுக்கு இது முன்வினைப்பயன் அது அவர்களுக்கு ஏற்றதே சமுதாய முன்னேற்றம் ஒன்றும் வேண்டியதல்ல. எனவே இந்தக் கொள்கையை மனித உரிமை என்ற சட்டதுக்குள் ஒளிந்து உயிர் பிழைக்க விட வேண்டுமா ஐயா?

குற்றங்கள் புரிதல் என்பது மனித இயற்கை என்ற சட்டத்துக்குள் போட வேண்டும்.

பரிகாரம் தெய்வ வழிபாட்டால் தேட வேண்டும்.

எவனுடையவோ வேர்வையை திருடிவிட்டு அதில் ஒருதுளியில் எவனுக்கோ செலவளித்து பரிகாரம் செய்வது நியாயமாகிறதாம் இவர்களுக்கு.

தூக்குக் காவடியில் தொங்கும் அவஸ்தையை விட மற்றவனுக்கு இளைக்கும் துன்பத்தை செய்யாமல் விடுவது கடினமாக இருக்கும் என்பதால் தன் ஆயுள் முழுக்க மற்றவனுக்கு துன்பத்தை செய்து சில துளி நிமிடங்களுக்கு மட்டும் தன் உணர்வுகளை வருத்தி பரிகாரம் செய்ய நினைக்கிறான். இந்தக் காவடி பக்கதன்.

சுயநலத்துக்கு பிடித்த மதம் தான் இவர்களை இப்படி எல்லாம் செய்ய வைக்கிறது.

கண்கட்டி வித்தைகளால்த்தான் தெய்வ இருப்பு நிலை நிறுத்தப் படவேண்டும் என்று சிந்திக்கத் தூண்டும் அளவு அறிவுகளை தெய்வ பக்திகள் என்று சொல்லவேண்டுமாம்.

சிவதனுசு, விஸ்ணுதனுசு என்று கம்பர் தன்னுடைய கற்பனையால் பாடவில்லை. வான்மீகி இராமாயணத்திலும் அப்படித்தான் இருக்கிறது. இது கம்பருடைய இடைச் செருகல் அல்ல.

வேண்டுமென்றால் நெடுக்காலபோவான் சொன்ன தகவல்கள் பின்பு சைவர்களால் செய்யப்பட்ட இடைச் செருகல்களாக இருக்கலாம்.

ஆயினும் நெடுக்காலபோவான் சொன்ன தகவல்கள் உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், நாம் சில விடயங்களை புரிந்து கொள்ளவேண்டும்.

பொதுவாக படைப்பாளிகள் மக்கள் விரும்புகின்ற கருத்துக்களை வெளிப்படையாகவும், ஆரவாரமாகவும் ஆங்காங்கே சொல்லிக்கொண்டு, நுட்பமான முறையில் தமது கருத்துக்களையும் எதிரான விடயங்களையும் தமது படைப்புக்குள் நுளைப்பார்கள். அந்த விடயங்கள் வெளிப்படையாக சொல்லப்படுவதில்லை. காட்சிகளாகவும், சம்பவங்களாகவும் வந்து போகும்.

"கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற திரைப்படம் தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவானது என்று நம்புகின்ற தமிழர்கள் பலர் இருக்கிறார்கள். காரணம் அந்தப் படத்தில் பல இடங்களில் காணப்படுகின்ற "சிவகீதைகள்". ஆனால் தமிழர்களின் போராட்டம் எவ்வளவு தூரம் கொச்சைப்படுத்தப்படுகின்றது என்பது நுட்பமாகப் பார்த்தால்தான் விளங்கும்

இன்றைய பேச்சு வழக்குத் தமிழில் வந்த "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படம் சொல்கின்ற செய்திகளின் அர்த்தத்தையே புரிந்து கொள்ளாத இவர்களால், இராமாயணத்தை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?´

நெடுக்காலபோவான் சிவகீதை பற்றிய தகவலை தந்தது ஒரு நல்ல விடயம்.

இன்றைக்கு சைவர்களின் வீட்டில் பகவத்கீதைதான் தொங்குகின்றது. சிவகீதை என்ற ஒன்று இருப்பதே இவர்களுக்கு தெரியாது. எப்படித் தெரியும்? சைவர்களைத்தான் இராமன் வெற்றி கொண்டுவிட்டாரே!

ஈழத்திருமகன் சார்..

கற்பனை.. (imagination) சிந்தனை..(thinking) யோசனை..(idea) இவற்றிற்கு இடையில்.. அர்த்தம் புரியாமல் இங்கு பாவிக்கவில்லை என்பதை தெளிவாகச் சொல்லலாம். அப்படி பிரயோகிக்கப்பட்ட இடத்தைக் காட்டினால்.. உங்களுக்கு போதிய விளக்கமளிக்க தயாராகவே உள்ளோம்..!

நெடுக்ஸ்..... "சார்" எல்லாம் போடாதீர்கள். :):)

நண்பர்களே, நான் வயது முதிர்ந்தவனோ அல்லது மிகவும் மரியாதைக்குரியவனோ அல்ல. பலரையும் போல் நானும் ஒரு மாணவனே. எனது 33வது வயதில் இருக்கிறேன். பெயரை மட்டும் கூறினால் போதுமானது.

சரி.

நெடுக்ஸ். இப்போதும் பாருங்கள். நீங்கள் மேலதிகமாக "idea" என்பதையும் இணைத்து விட்டீர்கள். இந்த மூன்று சொற்களிலும் நீங்கள் மிகத் தெளிவாக இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு இன்னமும் சந்தேகமே. உங்களை புண்படுத்துவதாக தயவு செய்து நினைக்க வேண்டாம். நான் கண்டு கொண்டதைத்தான் கூறினேன்.

முதல் இரண்டு சொற்களுக்கும் எனது கருத்தை எழுதிவிட்டேன். "யோசனை" என்றால் என்ன என்பதை எழுதுங்கள். (What do you mean by "idea"? )

"எண்ணங்கள்" இல்லாமல் "சொற்கள்" இல்லை (There is no word without a thought). எண்ணங்கள்... எண்ணங்களின் தொகுப்பான கோட்பாடுகள்.. இந்த கோட்பாடுகளை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வன சொற்கள் (மொழியின் அங்கம்). இந்த சொற்களை பூரணமாக அறியாமல் கோட்பாடுகளையோ அல்லது எண்ணங்களையோ அறிய முடியாது. ஏற்கெனவே இதை எழுதியிருக்கிறேன். வீணே சொற்களை பாவிப்பது எதையும் அறிய உதவாது. :unsure::)

இராமாயணம் தமிழர்களுக்கு மட்டும் அல்ல. சைவத்திற்கு எதிரானது.

நீங்கள் எதைப் படித்தாலும், அதை நுட்பமாக படிக்கவும், ஆராயவும் தெரிந்திருக்க வேண்டும்.

இராமன் சிவனை வணங்கியதாக இராமாயணம் சொல்லவில்லை. பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட தல வரலாறுகள் என்று சொல்லப்படுகின்ற கதைகள் அவ்வாறன சில விடயங்களை சொல்கின்றன.

இராமாயணம் சைவத்திற்கு எதிரானது என்று நான் சொல்வதற்கு சில காரணங்கள் உண்டு.

இப்பொழுதாவது உங்களுடைய நுண்ணறிவைக் கொண்டு சிந்தித்துப்பாருங்கள்.

இராமாயணத்தில் இராமனிடம் நாண் ஏற்றச் சொல்லி இரண்டு விற்கள் கொடுக்கப்படுகின்றன.

இப்படி இரண்டு விற்களில் ஒன்று உடைக்கப்படுகிறது, மற்றது நாண் ஏற்றப்படுகிறது

மிதிலையில் இராமன் உடைத்து நொறுக்கிய வில் : சிவதனுசு

திரும்பி வருகின்ற போது இராமன் நாண் ஏற்றிய வில் : விஸ்ணுதனுசு

சிவதனுசு உடைக்கப்படுகிறது. விஸ்ணுதனுசு நாண் ஏற்றப்படுகிறது.

இப்பொழுதாவது உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா?

திரு. சபேசன் நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறீர்கள்.

இராமனுக்கு பல்வேறு அஸ்திரங்களையும், உபதேசங்களையும் ராமாயணத்தின் பல்வேறு காண்டங்களில் வழங்குகின்ற விசுவாமித்திரனும், அகத்தியனும் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து பல வரங்கள் பெற்ற மாமுனிகள்.

அதிலும் சிவமுனி அகத்தியர் வால்மீகி ராமாயணத்தில் 3 கட்டங்களில் வருகிறார்

1. அகத்தியர் தன் தவத்தை கலைத்த காரணத்தால் தாடகையின் கணவன் சுந்தனை எரித்து சாம்பர் ஆக்குதல்

2. வனவாசம் ஆரம்பிக்கும் ராமன், குகனின் எல்லையில் பரதனை சந்தித்த பின் அகத்தியர் ஆசிரமத்திற்கு சென்று ஆசி பெறுகிறான். அப்போது சிவனின் பாசுபத அஸ்திரம் முதலானவற்றை ராமனுக்கு வழங்கும் அகத்தியர் ராமனை பஞ்சாவதி (இன்றைய மகாராஷ்டிர நாசிக் பகுதி) வனப்பகுதிக்கு சென்று ஆசிரமம் அமைத்து தங்குமாறு கூறுகிறார். இங்கே தான் ராமலட்சுமணர்கள் சூர்ப்பனகையை சந்திக்கிறார்கள்.

3. ராம ராவண யுத்தத்தின் போது ஒரு கட்டத்தில் ராமன் சோர்வடைந்து நம்பிக்கை இழக்கிறான். அப்போது ராமனுக்கு சோர்வை போக்கி நம்பிக்கையை தரும் ஆதித்திய இருதயம் என்னும் சூரியனுக்குரிய மந்திரத்தை அகத்தியர் உபதேசிக்கிறார். சூரியனின் அதிதேவதை சிவன் ஆகும்.

மேற்சொன்னவை யாவும் இராமயணத்தின் மூலப்பதிப்பான வால்மீகி இராமயணத்திலேயே உள்ளது.

சிவதனுசு பலகாலம் பாவிக்காது இரும்பு பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. ஆனால் பரசுராமன் தரும் தனுசோ பாவனையில் உள்ளது. உபயோகிக்காது பழசாகிவிட்ட சிவதனுசு நாண் ஏற்றும் போது உடைந்து விடுகிறது. உபயோகத்தில் உள்ள பரசுராமன் தனுசு உடையவில்லை. இந்த சின்னஞ்சிறு விடயங்கள் எல்லாம் உங்கள் பகுத்தறிவுக்கு எட்டுவதில்லை போல் இருக்கிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது இதை தானோ :unsure:

சைவத்திற்கு யார் எதிரி என்பதை திருச்செந்தூரில் வைரவேலையே திருடி வாயில் போட்டுக்கொண்ட கழகத்தின் கண்மணிகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வீண்புரளி கிளப்பாதீர்கள். ஆடு நனைகிறதே என்று எதுவோ அழுததாம். அது போல் தான் உள்ளது சிலரின் திடீர் சைவப்பற்றும்

Edited by vettri-vel

சிவதனுசு, விஸ்ணுதனுசு என்று கம்பர் தன்னுடைய கற்பனையால் பாடவில்லை. வான்மீகி இராமாயணத்திலும் அப்படித்தான் இருக்கிறது. இது கம்பருடைய இடைச் செருகல் அல்ல.

.

அப்படி ஒரு பாடலை (விஸ்னு தனுசு பற்றி) கம்பர் பாடவே இல்லை... ஒருவேளை எனக்கு தெரியவில்லையோ..?

விஸ்னுதனுசு பற்றி கம்பர் பாடிய அந்த பாடல்களை எனக்கு தருவீர்களா...??? படிக்க ஆவலாக இருக்கிறேன்...!

Edited by தயா

ராமாயணம் என்பது ராம + அயணம், ராமனின் பயணங்கள் என பொருள் படும். ஆகவே பால காண்டமும், ராமனின் முடிசூடலில் இருந்து தொடங்கும் உத்தர காண்டமும் வால்மீகி ராமாயணத்தில் பின்னாளில் இணைக்கப்பட்டதாக கருதுவோர் உண்டு.

வால்மீகி இராமயணத்தில் இராமன் கடவுள் அவதாரமாக கூறப்படவில்லை. உதாரண மனிதன் (ideal man), உதாரண மன்னன்(ideal king) என்ற அடிப்படையில் தான் வர்ணிக்கப்பட்டிருக்கிறான். 1574 ல் துளசிதாசர் எழுதிய துளசி ராமாயணத்தில் தான் ராமன் கடவுள் அவதாரமாக சொல்லப்படுகிறான்.

ராமாயணத்தில் வரும் லங்காபுரி தற்போதைய இலங்கை அல்ல, இந்தியாவின் மகாராஷ்டிரத்தின் ஒரு பகுதியே என்று சொல்பவர்களும் உண்டு. தங்களை இராவணின் பரம்பரையாக கருதும் ஒரு பிரிவினர் மகாராஷ்டிரத்தில் இன்னும் வாழ்கிறார்கள். இவர்கள் இன்னும் இராவணனுக்கு விழா கூட எடுக்கிறார்கள். ராமன் சூர்ப்பனகையை சந்தித்த பஞ்சாவதி வனப்பகுதி இன்றைய நாசிக் பிரதேசத்தை ஒட்டிய பகுதியே என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கேற்றாற் போல் மகாராஷ்டிராவில் இன்னும் ரவீன், ரவீனா என்னும் பெயர்கள் வழக்கத்தில் உள்ளன.

சுக்ரீவனின் கிஷ்கிந்தை கர்நாடகத்தின் பெல்லாரி பிரதேசம் என்று கருதுகிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் சேது அணையை இராமர் பூரணமாக கட்டினார் என்று நம்புவதற்கான ஆதாரங்கள் குறைவுதான். ஏற்கனவே இருந்த நிலத்தொடர்பு சில இடங்களில் தண்ணீருக்கடியில் சில அடிகள் அமிழ்ந்து விட அந்த இடங்களை கற்பாறைகள், மரக்கட்டைகள் போன்றவற்றை போட்டு நிரப்பி தற்காலிக பாலமாக உபயோகித்திருக்கலாம் என கருத இடமுண்டு.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேற்றிவேலண்னை ஆடு நனைகிறதே என்று.... பெரிய வார்த்தையளெல்லாம் பாவிக்கிறியள். மற்றப்பக்கம் சாதகமான செய்தியொண்டும் இல்லை, நல்ல செய்தி வரும்வரைக்கும் அழுத்தத்த இதிலயாவது குறைப்பமெண்டால் விடுறியளில்லை.

:unsure:

Edited by Aadhi

வேற்றிவேலண்னை ஆடு நனைகிறதே என்று.... பெரிய வார்த்தையளெல்லாம் பாவிக்கிறியள். மற்றப்பக்கம் சாதகமான செய்தியொண்டும் இல்லை, நல்ல செய்தி வரும்வரைக்கும் அழுத்தத்த இதிலயாவது குறைப்பமெண்டால் விடுறியளில்லை. :D

ஹி ஹி :unsure::)

அழுத்தத்தை குறைப்பதா?? கூடாதே.

பழம்பெரும் நூல்கள் அடங்கிய இந்த இணையத்தளத்துக்கு சென்று பாருங்கள். வேதம், வேதாந்தம் என்று எத்தனை புரட்டுக்களை பிரித்து பகுதி பகுதியாக வைத்திருக்கிறார்கள். வாசித்தீர்கள் என்றால் அழுத்தம் பன்மடங்கு கூடும். இவற்றை வாசிப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எல்லாம். :):)

http://www.sacred-texts.com/hin/index.htm

Edited by Eelathirumagan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்..... "சார்" எல்லாம் போடாதீர்கள். :):D

நண்பர்களே, நான் வயது முதிர்ந்தவனோ அல்லது மிகவும் மரியாதைக்குரியவனோ அல்ல. பலரையும் போல் நானும் ஒரு மாணவனே. எனது 33வது வயதில் இருக்கிறேன். பெயரை மட்டும் கூறினால் போதுமானது.

சரி.

நெடுக்ஸ். இப்போதும் பாருங்கள். நீங்கள் மேலதிகமாக "idea" என்பதையும் இணைத்து விட்டீர்கள். இந்த மூன்று சொற்களிலும் நீங்கள் மிகத் தெளிவாக இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு இன்னமும் சந்தேகமே. உங்களை புண்படுத்துவதாக தயவு செய்து நினைக்க வேண்டாம். நான் கண்டு கொண்டதைத்தான் கூறினேன்.

முதல் இரண்டு சொற்களுக்கும் எனது கருத்தை எழுதிவிட்டேன். "யோசனை" என்றால் என்ன என்பதை எழுதுங்கள். (What do you mean by "idea"? )

"எண்ணங்கள்" இல்லாமல் "சொற்கள்" இல்லை (There is no word without a thought). எண்ணங்கள்... எண்ணங்களின் தொகுப்பான கோட்பாடுகள்.. இந்த கோட்பாடுகளை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வன சொற்கள் (மொழியின் அங்கம்). இந்த சொற்களை பூரணமாக அறியாமல் கோட்பாடுகளையோ அல்லது எண்ணங்களையோ அறிய முடியாது. ஏற்கெனவே இதை எழுதியிருக்கிறேன். வீணே சொற்களை பாவிப்பது எதையும் அறிய உதவாது. :):)

What do you mean by "idea"?
இப்படிக் கேட்டதற்காக.. அதே வடிவில்...

Idea:- any conception existing in the mind as a result of mental understanding, awareness, or activity.

Thinking:- to have a conscious mind, to some extent of reasoning, remembering experiences, making rational decisions

Imagination:- the faculty of imagining, or of forming mental images or concepts of what is not actually present to the senses.

5 ஆண்டில ஆசிரியர் கேட்டதுக்கு அப்புறம் எங்களைப் பார்த்து இப்படிக் கேட்ட முதல் ஆள்...! ரெம்ப வீக் சார் நீங்க சில விசயத்தில..! :unsure::D

Edited by nedukkalapoovan

சிவதனுசு பலகாலம் பாவிக்காது இரும்பு பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. ஆனால் பரசுராமன் தரும் விஷ்ணு தனுசோ பாவனையில் உள்ளது. உபயோகிக்காது பழசாகிவிட்ட சிவதனுசு நாண் ஏற்றும் போது உடைந்து விடுகிறது. உபயோகத்தில் உள்ள விஷ்ணு தனுசு உடையவில்லை. இந்த சின்னஞ்சிறு விடயங்கள் எல்லாம் உங்கள் பகுத்தறிவுக்கு எட்டுவதில்லை போல் இருக்கிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது இதை தானோ :unsure:

அண்ணா நீங்கள் வேற விஸ்னுதனுசு எண்று கதையை கிளப்பி வொடாதேங்கண்ணா... சிவதனுசின் வீரியதை கம்பர் அழகான தமிழில் சிவனின் சினம் கொண்ட இமைகளை போண்றது ஏன்கிறார்... அதனால்தான் அதுக்கு பெயர் "சிவதனுசு."

'இமைய வில் வாங்கிய ஈசன், "பங்கு உறை

உமையினை இகழ்ந்தனன் என்ன" ஓங்கிய

கமை அறு சினத் தனிக் கார்முகம் கொளா,

சமை உறு தக்கனார் வேள்வி சாரவே.

பொழிப்பு என்ன எண்றால் தக்கனின் வேள்விக்கு செண்று வந்த உமையின் மீது கொண்ட சினதால் வளைந்து பலமான சிவனின் இமைகளை ஒத்தது இந்த தனுசு என்கிறார்.... அதனால்தான் அதற்கு பெயர் சிவ தனுசு...

சபேசன் சொல்லுவது காட்டுக்கதைகள்... ;)

Idea:- any conception existing in the mind as a result of mental understanding, awareness, or activity.

Thinking:- to have a conscious mind, to some extent of reasoning, remembering experiences, making rational decisions

Imagination:- the faculty of imagining, or of forming mental images or concepts of what is not actually present to the senses.

5 ஆண்டில ஆசிரியர் கேட்டதுக்கு அப்புறம் எங்களைப் பார்த்து இப்படிக் கேட்ட முதல் ஆள்...! ரெம்ப வீக் சார் நீங்க சில விசயத்தில..! :unsure::)

அப்பனே.

பொறுமை. பொறுமை. இப்பொழுதுதானே தொடங்கி இருக்கிறோம். :):)

சரி. விடயத்துக்கு வருவோம். உங்கள் கருத்துப்படி "கற்பனை" மட்டும்தான் "மனதில் இமேஜ்" களை உருவாக்குகிறதா? இல்லை சிந்தனை, ஐடியா எல்லாம் மனதில் இமேஜ்களை உருவாக்குகிறதா?

கற்பனைக்கு "not actually present to the sense" என்று எழுதி இருக்கிறீர்கள். ஒரு மனிதன், அவனுக்கு என்றுமே அறிந்தோ அல்லது உணர்ந்தோ இல்லாத ஒன்றை பற்றி "கற்பனை" அல்லது "சிந்தனை" செய்ய முடியுமா? (I am asking that can any human being think or immagine something which is completely unknown, i.e. completely insensible).

மற்றது. ஆமாம் நண்பா. நான் மிகவும் வீக். அதை நாணயமாக ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். என்னுடன் படித்த பல நண்பர்கள் இந்த களத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூட அது தெரியும். நம்மைப்போல் தெரியாதவர்கள் தானே தெரிந்தவர்களிடம் கேட்டு அறிய வேண்டும். அதுதான் கேட்கிறேன். :D:D

அண்ணா நீங்கள் வேற விஸ்னுதனுசு எண்று கதையை கிளப்பி வொடாதேங்கண்ணா... சிவதனுசின் வீரியதை கம்பர் அழகான தமிழில் சிவனின் சினம் கொண்ட இமைகளை போண்றது ஏன்கிறார்... அதனால்தான் அதுக்கு பெயர் "சிவதனுசு."

'இமைய வில் வாங்கிய ஈசன், "பங்கு உறை

உமையினை இகழ்ந்தனன் என்ன" ஓங்கிய

கமை அறு சினத் தனிக் கார்முகம் கொளா,

சமை உறு தக்கனார் வேள்வி சாரவே.

பொழிப்பு என்ன எண்றால் தக்கனின் வேள்விக்கு செண்று வந்த உமையின் மீது கொண்ட சினதால் வளைந்து பலமான சிவனின் இமைகளை ஒத்தது இந்த தனுசு என்கிறார்.... அதனால்தான் அதற்கு பெயர் சிவ தனுசு...

சபேசன் சொல்லுவது காட்டுக்கதைகள்... ;)

தல, :unsure::)

எழுத்து மாறிவிட்டதா? இல்லை காட்டுக்கதை தானா?

சரி. வானளாவிய புகழுடன் கோலோச்சிய இராவணன், மூன்று உலகங்களையும் வென்றவன், புஷ்ப்பக விமானம் வைத்து பறந்தவன், கம்பர் கூறியதுபோல்

வாரணம் பொருது மார்பும், வரையினை எடுத்த தோளும்

நாரத முனிவர்க்கேற்ப, நயம்பட உரைத்த நாவும்

தாரணி மொளலிபத்தும், சங்கரன் கொடுத்த வாளும்

வீரமும் களத்தே போக்கி, வெறுங்கையோடு இலங்கை புக்கான்.

என்று போயிருப்பானா? அல்லது அக்கணமே அவமானத்தால் மடிந்திருப்பானா? சங்கரனார்க்கு ஆயுத வியாபாரமா? அங்கு வில், இங்கு வாள். :):)

தர்மத்தின் காவலனான இராமன், ஆயுதம் இழந்த இராவணனுடன் கைகளையும் கால்களையும் ஆயுதமாக கொண்டு "துவந்த யுத்தம்" நடத்தியிருக்க வேண்டும். யுத்தத்தில் எதிரி ஆயுதம் இழந்துவிட்டால் மற்றவனும் ஆயுதங்களை எறிந்துவிட்டு மல்யுத்தம் செய்ய வேண்டும் என்பது அக்கால யுத்தமரபு. இராமன் ஏன் செய்யவில்லை? பயமா?

:):)

குறுக்ஸ். பார்த்தீரா எமது அறிதிறனின் ஆழத்தை. இதை நான் இங்கு இணைக்க வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். நீங்கள் இணைத்துவிட்டீர்கள். :D:D

நமது கல்வியின் படுபிழையான அணுகுமுறை இதுதான். யாராவது கேட்டுவிட்டால், ஒன்று புத்தகத்தை புரட்டி யாரோ சொன்னவற்றை சுமந்து வந்து கொட்டுவது. அல்லது தற்காலத்தில் "எங்கும் நிறைந்தவரும் கேட்டவுடன் ஆயிரமாயிரமாக அள்ளிக்கொடுப்பவருமான கூகிள் ஆண்டவரிடம்" சரணடைவது.

இது காலம் காலமாக, எமது சமயம் கற்பிக்கும் ஒரு வழிமுறை. என்றோ ஆதிசங்கரர் கூறியதை அது உண்மையா அல்லது அவர் ஒரு illusion இற்குள் அகப்பட்டு கொண்டாரா என்று அறியாமல் (கவனிக்க: இது "படிப்பது" அல்ல. It is not studying but learning) அதை எமது முதுகில் சுமப்பது. என்றைக்காவது பழைய குப்பைகளை கிளறாமல் எம்முடைய கூர்ந்த அறிவை பயன்படுத்தி இருக்கிறோமா? :):D

தல, :unsure::)

எழுத்து மாறிவிட்டதா? இல்லை காட்டுக்கதை தானா?

சரி. வானளாவிய புகழுடன் கோலோச்சிய இராவணன், மூன்று உலகங்களையும் வென்றவன், புஷ்ப்பக விமானம் வைத்து பறந்தவன், கம்பர் கூறியதுபோல்

வாரணம் பொருது மார்பும், வரையினை எடுத்த தோளும்

நாரத முனிவர்க்கேற்ப, நயம்பட உரைத்த நாவும்

தாரணி மொளலிபத்தும், சங்கரன் கொடுத்த வாளும்

வீரமும் களத்தே போக்கி, வெறுங்கையோடு இலங்கை புக்கான்.

என்று போயிருப்பானா? அல்லது அக்கணமே அவமானத்தால் மடிந்திருப்பானா? சங்கரனார்க்கு ஆயுத வியாபாரமா? அங்கு வில், இங்கு வாள். :):)

தர்மத்தின் காவலனான இராமன், ஆயுதம் இழந்த இராவணனுடன் கைகளையும் கால்களையும் ஆயுதமாக கொண்டு "துவந்த யுத்தம்" நடத்தியிருக்க வேண்டும். யுத்தத்தில் எதிரி ஆயுதம் இழந்துவிட்டால் மற்றவனும் ஆயுதங்களை எறிந்துவிட்டு மல்யுத்தம் செய்ய வேண்டும் என்பது அக்கால யுத்தமரபு. இராமன் ஏன் செய்யவில்லை? பயமா?

'தேறினால், பின்னை யாதும் செயற்கு அரிது

ஊறுதான் உற்றபோதே உயிர்தனை

நூறுவாய்' என, மாதலி நூக்கினான்;

ஏறு சேவகனும், இது இயம்பினான்.

ஈழத்திருமகனின் கேள்வியை இராமனின் சாரதி மாயலி இராமனிடம் கேட்ப்பது..... அதோடு இராவனனை இப்போதே கொல்லு மாறு சொல்கிறார்...

படை துறந்து, மயங்கிய பண்பினான்

இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின்

நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ?

கடை துறந்தது போர், என் கருத்து' என்றான்

அதுக்கு இராமரின் பதில் இது.... படைகளை துறந்து மயங்கிய ஒருவனை கொல்வது நீதி அண்று எண்று இராமர் மொழிந்தார் என்கிறார் கம்பர்...

சங்கரனார் இராமனுக்கு ஆயுதம் கொடுக்க வில்லை....

ம்.. தல,

இராமனுக்கு சகல "அஸ்த்திர வித்தைகளை" அருளியவர் விஸ்வாமித்திரர் (இவர் சிவனிடம் வரமாக தனுர் வேதத்தை பெற்றவர் என்று இராமாயணம் கூறுகிறது) இவை சிவன் அருளிய அஸ்த்திரங்களே. இராவணனுக்கு வாளைக் கொடுத்தவரும் சிவன்தான்.

இதிலே ஒன்றைக் கவனியுங்கள். அஸ்த்திர வித்தையானாலும், யோகக் கலையானாலும், நடனக்கலையானாலும் அவற்றை சிவனைத்தவிர வேறு எந்த ஆண் தெய்வங்களும் பெற்றதாக கூறப்படவில்லை. "ப்ரும்மாஸ்திரத்தின்" அதிதேவதையாக மட்டுமே பிரம்மதேவரை இராமாயணம் கூறுகிறது. வைதீக மதத்தின் மூலப்பொருளாக கூறப்படும் "ரிக் வேதத்தின்" முழுமுதல் கடவுள் இந்திரன் கூட இவ்வாறான எத்தகைய சக்திகளையும் பெற்றிருக்கவில்லை.

மேலும், இராமனின் வாயால் "இன்று போய் போர்க்கு நாளை வா" என்று கூறவைத்து, அவனை உயர்த்துவதற்காகவே இந்தக் கட்டம் எழுதப்பட்டது என நினைக்கிறேன். உண்மையில் இது வான்மீகி இராமாயணத்தில் இருக்கிறதா என்பதை "சம்ஸ்க்கிருதம்" கற்றவர்கள்தான் வாசித்து கூறவேண்டும். நான் அறிந்தளவில், இராமனை உயர்த்த, கம்பர் கையாண்ட ஒரு அணியே இது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தனைக் ஹரோ எண்டு போட்டால் இல்லாத, பொல்லாத எல்லாத்தையும் போட்டு பப்பாவில ஏத்துறது என்ன புதிய கதையோ? எல்லா நேரத்திலும் அது நடக்கும். கம்பர் மட்டும் என்ன விதிவிலக்கோ??

ஒவ்வொருமுறையும் அடிபடுறியள். பிறகு அமைதியாகுறியள். பிறகு ஆரம்பத்தில் கதைச்சதையே திருப்பத் தொடங்குறியள். பிள்ளைகளுக்கு வாய் உழையுறதில்லையோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அயின்ச்ரைன் அய்யா உதெல்லாத்தயும் தேடித்திரிஞ்சு படிச்சிருக்கிறியள், அதாலதான் பிரசர் கூடி அவதிப்படுறியள். நமக்கு உதுவள் light hearted entertainment.

ஹி ஹி

அழுத்தத்தை குறைப்பதா?? கூடாதே.

பழம்பெரும் நூல்கள் அடங்கிய இந்த இணையத்தளத்துக்கு சென்று பாருங்கள். வேதம், வேதாந்தம் என்று எத்தனை புரட்டுக்களை பிரித்து பகுதி பகுதியாக வைத்திருக்கிறார்கள். வாசித்தீர்கள் என்றால் அழுத்தம் பன்மடங்கு கூடும். இவற்றை வாசிப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எல்லாம்.

http://www.sacred-texts.com/hin/index.htm

அய்யா மேல நீங்கள் தந்த லிங் எங்கும் நிறைந்தவரும் கேட்டவுடன் ஆயிரமாயிரமாக அள்ளிக்கொடுப்பவருமான கூகிள் ஆண்டவரிடம் பெற்றதா அல்லது பிறக்கும்போதே உங்களுடன் ஒட்டிப்பிறந்ததா?

ஹி ஹி

குறுக்ஸ். பார்த்தீரா எமது அறிதிறனின் ஆழத்தை. இதை நான் இங்கு இணைக்க வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். நீங்கள் இணைத்துவிட்டீர்கள்.

நமது கல்வியின் படுபிழையான அணுகுமுறை இதுதான். யாராவது கேட்டுவிட்டால், ஒன்று புத்தகத்தை புரட்டி யாரோ சொன்னவற்றை சுமந்து வந்து கொட்டுவது. அல்லது தற்காலத்தில் "எங்கும் நிறைந்தவரும் கேட்டவுடன் ஆயிரமாயிரமாக அள்ளிக்கொடுப்பவருமான கூகிள் ஆண்டவரிடம்" சரணடைவது.

இது காலம் காலமாக, எமது சமயம் கற்பிக்கும் ஒரு வழிமுறை. என்றோ ஆதிசங்கரர் கூறியதை அது உண்மையா அல்லது அவர் ஒரு illusion இற்குள் அகப்பட்டு கொண்டாரா என்று அறியாமல் (கவனிக்க: இது "படிப்பது" அல்ல. It is not studying but learning) அதை எமது முதுகில் சுமப்பது. என்றைக்காவது பழைய குப்பைகளை கிளறாமல் எம்முடைய கூர்ந்த அறிவை பயன்படுத்தி இருக்கிறோமா?

அய்யா நீங்கள் பிறக்கேக்க பூரண அறிவோடு பிறந்திருப்பியள், ஆனா எங்களுக்கு உந்த கூகிள் ஆண்டவன்தான் தஞ்சம்.

:unsure:

அயின்ச்ரைன் அய்யா உதெல்லாத்தயும் தேடித்திரிஞ்சு படிச்சிருக்கிறியள், அதாலதான் பிரசர் கூடி அவதிப்படுறியள். நமக்கு உதுவள் light hearted entertainment.

மிகவும் நல்லது. :unsure::)

அய்யா மேல நீங்கள் தந்த லிங் எங்கும் நிறைந்தவரும் கேட்டவுடன் ஆயிரமாயிரமாக அள்ளிக்கொடுப்பவருமான கூகிள் ஆண்டவரிடம் பெற்றதா அல்லது பிறக்கும்போதே உங்களுடன் ஒட்டிப்பிறந்ததா?

இதற்கெல்லாம் கூகிள் ஆண்டவர் எதற்கு. இவ்வாறு பல மின்னூல் வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன.

அய்யா நீங்கள் பிறக்கேக்க பூரண அறிவோடு பிறந்திருப்பியள், ஆனா எங்களுக்கு உந்த கூகிள் ஆண்டவன்தான் தஞ்சம். :)

அப்பனே, இந்த ஓவர்நக்கல் தானே வேண்டாம் என்கிறது. சரி வேலை இருக்கிறது. நாளை பார்க்கலாம். :):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.