Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யாவின்  "ஏரோஃப்ளோட்"  நிறுவனம்... கொழும்புக்கான, வர்த்தக விமான சேவையை... இடை நிறுத்தியது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

குழம்பிய குட்டையில்… தமிழ் அரசியல் வாதிகள்,
ரஷ்யாவுடன் ஏதாவது, “டீல்” போடுவார்கள் என்று பார்த்தால்

அங்கால அமெரிக்கா இருக்கல்லோ!

அவர்களுக்கு கோபம் வராதோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

அங்கால அமெரிக்கா இருக்கல்லோ!

அவர்களுக்கு கோபம் வராதோ?

ஓகோ…. ஆகா…. அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்களோ…. 😂
இல்லாட்டி… வெட்டி விழுத்தி விட்டுத்தான்…. அடுத்த அலுவல் பார்த்திருப்பார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் நண்பர்களை நினைவுகூறுகிறார் சரத் வீரசேகர.

மொழிபெயர்ப்பு

ஜெனிவாவில் எப்படி இலங்கைக்கு எதிரான ஒவ்வொரு பிரேரணையையும் ரஸ்யா எதிர்த்து வாக்களித்தது என்பதையும், இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் கொண்டு வந்த போர்குற்ற பிரேரணையை ரஸ்யாவும், சீனாவும் வீட்டோ பாவித்து தோற்கடித்ததையும், பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் தோள்கொடுத்ததையும் நாம் என்றும் நன்றியோடு நினைவு கூறுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

இதனைத்தான், சிங்கள இராயதந்திரத்தைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nochchi said:

இதனைத்தான், சிங்கள இராயதந்திரத்தைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 

இதனைத்தான், சிங்கள இராயதந்திரத்தைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 

(டிஸ்கி - போல்ட் செய்துள்ளேன்)

  • கருத்துக்கள உறவுகள்

17 hours ago, தமிழ் சிறி said:

குழம்பிய குட்டையில்… தமிழ் அரசியல் வாதிகள்,
ரஷ்யாவுடன் ஏதாவது, “டீல்” போடுவார்கள் என்று பார்த்தால்… 🧐
அவர்களுக்கு, அந்தளவு கெட்டித்தனம் கிடையாது. 😂
அவர்கள்… அதுக்கு, சரிப்பட்டு வர மாட்டார்கள். 🤣

அவர்கள் தங்களுக்குள் அடிபட்டாலும், பொது எதிரி என்று வரும்போது ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் தோள்கொடுப்பர். இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரிகள், இந்தியாவும் சீனாவும் எதிரிகள் ஆனால் ஈழப்போரில் நீ நான் என்று போட்டி போட்டுகொண்டு சிங்களத்துக்கு உதவவில்லை, இனம் இனத்தைத்தான் சேரும்.

சர்வதேச சட்டத்தை நடைமுறைப்படுத்திய இலங்கையை வெருட்டிய குற்றத்திற்காக ரஷ்யா இலங்கையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் நிறுவனம் கொழும்புக்கான வர்த்தக விமான சேவையை இடைநிறுத்தியது!

ஏரோஃப்ளோட் விமான விவகாரம் : நீதிமன்றத்தில் இன்று சமர்பணங்களை முன்வைக்கின்றார் சட்டமா அதிபர்

தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பாக சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புக்களை முன்வைக்கவுள்ளார்.

இன்று நீதிமன்றத்தில் அறிக்கை செய்த பின்னர் விமானத்தை விடுவிக்க எதிர்பார்ப்பதாக ரஷ்ய விமான நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த மூன்று நாட்களாக விமானம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவ்விமான பணியாளர்களும் ரஷ்ய பிரஜைகளும் நேற்று ரஷ்யா திரும்பினர்.

இதேவேளை நீதிமன்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட முடியாது என ரஷ்ய தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்த அவர், தூதுவருக்கு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இது குறித்து விளக்கமளித்ததாகவும் கூறினார்.

https://athavannews.com/2022/1285535

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய முன்னிலையில் இன்று மாலை ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம்?

ரஷ்யா – இலங்கைக்கு இடையில் பிரச்சினை இல்லை : விமான விவகாரம் குறித்து பிரதமர்

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பிரச்சினை தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அத்தோடு இந்த பிரச்சினை குறித்து வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி, அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான சேவைகளையும் டிக்கெட் விற்பனையும் குறித்த ரஷ்ய நிறுவனம் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1285521

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

ரஷ்ய விமானம் விவகாரம்: திறந்த நீதிமன்றுக்கு மாற்றுங்கள் – சட்டமா அதிபர் மனு.

ஏரோஃப்ளொட் ரஷ்ய விமானம் குறித்த வழக்கை திறந்த நீதிமன்றுக்கு மாற்ற அனுமதிக்குமாறு கோரி, சட்டமா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த விமானம், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டது.

குத்தகை பிரச்சினை காரணமாக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்த பயணிகள் நேற்று ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த பிரச்சினை காரணமாக, இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வணிக விமான சேவைகளை ரஷ்ய எரோஃப்ளொட் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது.

https://athavannews.com/2022/1285615

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ய விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் – உதயங்க வீரதுங்க

ரஸ்ய விமானம், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு... அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் – உதயங்க வீரதுங்க

ரஸ்யாவின் ஏரோஃப்ளொட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள் ஊடகமொன்றில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விமானத்தை உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் ரஷ்யாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கட்டுப்பாட்டாளர் மற்றும் விமான நிறுவனம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ரஷ்ய ஏரோஃப்ளொட் விமானத்தை இலங்கையை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை என்றும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1285630

  • கருத்துக்கள உறவுகள்

தடை நீக்கப்பட்டது என்று செய்தி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

தடை நீக்கப்பட்டது என்று செய்தி.

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் நிறுவனம் கொழும்புக்கான வர்த்தக விமான சேவையை இடைநிறுத்தியது!

ரஷ்ய விமானத்திற்கான தடை உத்தரவை இடைநிறுத்தி உத்தரவு !

ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை உத்தரவை இடைநிறுத்தி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த விமானம், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டது.

குத்தகை பிரச்சினை காரணமாக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்த பயணிகள் நேற்று ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த பிரச்சினை காரணமாக, இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வணிக விமான சேவைகளை ரஷ்ய எரோஃப்ளொட் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளது.

https://athavannews.com/2022/1285663

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமது நாட்டு விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு ரஷ்யா அதிருப்தி!

இன்று... மொஸ்கோ நோக்கி, புறப்படுகின்றது "ஏரோஃப்ளோட்" விமானம் !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏரோஃப்ளோட் விமானம் இன்று (திங்கட்கிழமை) மாலை மொஸ்கோ நோக்கி புறப்படவுள்ளது.

குறித்த விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் இன்று இடைநிறுத்தப்பட்டது.

சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவையடுத்து நீதிமன்றம் குறித்த உத்தரவை இடைநிறுத்தி உத்தரவிட்டது.

இதனையடுத்து, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள A330 வகை விமானம் (SU289) இன்று மொஸ்கோ நோக்கி புறப்படவுள்ளது.

https://athavannews.com/2022/1285713

  • கருத்துக்கள உறவுகள்

ஈயம் பூசின மாரியும் இருக்கோணும் பூசாத மாரியும் இருக்கோணும் - பெளத்த சிங்கள இராஜதந்திரம்.

5 hours ago, ஏராளன் said:

தடை நீக்கப்பட்டது என்று செய்தி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஈயம் பூசின மாரியும் இருக்கோணும் பூசாத மாரியும் இருக்கோணும் - பெளத்த சிங்கள இராஜதந்திரம்.

கோசான்… தடை உத்தரவை இடை நிறுத்தி, விமானத்தை பறக்க அனுமதி கொடுத்தமையை…
அமெரிக்கா எப்படி… எதிர் வினையாற்றும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of standing and text that says 'IMF GOVERNMENT SL RUSSIA'

May be a cartoon

May be an image of text that says '? RUSSIA ABROPしT SRILANKA LANKA TEA අද දෙරණ பவலஅத அத தர ண www.sinhala.adaderana.lk'

மேலுள்ள கருத்துப் படங்கள்... ரஷ்ய விமானத்தை, தடுத்து வைக்க முதலும்...
தடுத்து வைத்த பின்பும்...  வரையப் பட்டவை.

இன்று... அந்த விமானத்தின் தடை உத்தரவை நீக்கி, பறக்க விட்டதை,
நிச்சயம்  அமெரிக்கா,  ரசித்து இருக்காது.

ஸ்ரீலங்கா... விமானத்தை பறக்க விட்டதன் மூலம்,  ரஷ்யாவை சமாதானப் படுத்தப் போய், 
அமெரிக்காவின்... கோபத்துக்கு ஆளாகலாம் என நினைக்கின்றேன்.

"தாச்சியில் இருந்து... அடுப்பில் விழுந்த கதை" போலாகி விட்டது, ஸ்ரீலங்காவின் நிலைமை.  

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

நான் அப்படி நினைக்கவில்லை. இலங்கை மீண்டும் ஒருதரம் பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டி தப்பித்து விட்டது என்றே நான் பாக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

நான் அப்படி நினைக்கவில்லை. இலங்கை மீண்டும் ஒருதரம் பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டி தப்பித்து விட்டது என்றே நான் பாக்கிறேன்.

விலாங்கு மீன் சிஷ்டம் நெடுக பலிக்காது எண்டு நான் நினைக்கிறன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

விலாங்கு மீன் சிஷ்டம் நெடுக பலிக்காது எண்டு நான் நினைக்கிறன். 🤣

ஆக மிஞ்சி போனால் ஐயா நாங்கள் சின்ன மீன் ஐயா, எங்களுக்கு வாழ வழி விடுங்கையா, எண்டு காலில விழுந்து எஸ்சாயிடுவாங்கள் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆக மிஞ்சி போனால்

சான்ஸ் இல்லை. நீதிவழுவாத தலைவர் புரின் என்றபடியால் இனி இலங்கைக்கு பிரச்சனை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

Srilanka Vs Russia: பதற்றமான உறவு; Aeroflot-க்கு விதித்த தடையை நீக்கிய நீதிமன்றம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.