Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும் – சாணக்கியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும் – சாணக்கியன்

Sanakkiyan-020921-seithy-300x198.jpgஇலங்கையில் எதிர்வரும் எட்டாம் மாதமளவில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சுவிஸில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாங்கள் ஜனாதிபதியினை சந்தித்த போது, வடக்கு- கிழக்கில் பொருளாதார அபிவிருத்தியினை செய்வதற்காக புலம் தமிழர்கள் உதவி செய்வார்கள் என அவரிடம் மிக முக்கியமாக தெரிவித்தோம்.
ஆனால் அதற்கு நீங்கள் எங்களுக்கு அரசியல் தீர்வினை தர வேண்டும் என கூறியிருக்கின்றோம்.

இந்த விடயத்தில் அரசாங்கம் மௌனம் காக்கின்றது. எனினும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அரசாங்கத்தினை காப்பாற்ற நாம் முயற்சிப்பதாக சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியும், அதற்கு முந்தைய காலப்பகுதியிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விடயம், காணி அபகரிப்பு போன்ற விடயங்கள் தமிழ் மக்களுக்கு முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகின்றன.

நாங்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதியினை சந்தித்து பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசி வருகின்றோம்.

குறிப்பாக பொத்தவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் போது நாங்கள் முன்வைத்திருந்த கோரிக்கைகளில் இவையும் உள்ளடங்குகின்றன.

பலரும் கேட்கின்றார்கள் குருந்தூர் மலை விவகாரம் குறித்து ஏன் சாணக்கியன் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கின்றார் என்று. நாங்கள் குருந்தூர் மலையினை சென்று பார்வையிட்டுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் நீதிமன்றத்தின் உத்தரவினையும் மீறி ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி இவ்வாறான விடயங்களை செய்து வருகின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்திலுள்ள பல பகுதிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் எங்கெல்லாம் காணி அபகரிப்பிற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருந்திருக்கின்றேன். அவற்றினை எதிர்த்திருக்கின்றேன். இனினும் இருப்பேன்.

எங்களுடைய அரசியல் தீர்வின் ஊடாகவே இவற்றினை மாற்றியமைக்க முடியும். எங்களுடைய கைகளில் எங்களுடைய அரசியல் அதிகாரம் இருந்தால் நாங்கள் இதனை மாற்றியமைக்கலாம்.

இது நீண்டகால போராட்டமாக இருகின்றது. இலங்கை வரலாற்றில் இதுதான் எங்களுடைய காலமாக இருக்கலாம்.

எங்களது எதிர்காலம் எப்படியாக இருக்க வேண்டும் என சொன்னால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் ஒன்றாக வாழ வேண்டும்.

முஸ்லீம்களிடமிருந்து கிழக்கினை மீட்க வேண்டும் என கூறி நாடாளுமன்றம் வருகை தந்த பிள்ளையானும், வியாழேந்திரனும், நஸீர் அஹமட்டுன் இணைந்து தற்போது பணியாற்றுகின்றனர்.

எனவே அரசியல் இலாபங்களுக்காக வாய்களில் வந்த அனைத்தினையும் சொல்லக் கூடாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும். அப்படி செய்யாவிட்டால் கிழக்கு மாகாணம் தமிழ் மக்களுக்கும் இருக்காது முஸ்லீம் மக்களுக்கும் இருக்காது- எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும் – சாணக்கியன் – குறியீடு (kuriyeedu.com)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும் – சாணக்கியன்

இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும் – சாணக்கியன்

இலங்கையில் எதிர்வரும் எட்டாம் மாதமளவில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சுவிஸில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாங்கள் ஜனாதிபதியினை சந்தித்த போது, வடக்கு- கிழக்கில் பொருளாதார அபிவிருத்தியினை செய்வதற்காக புலம் தமிழர்கள் உதவி செய்வார்கள் என அவரிடம் மிக முக்கியமாக தெரிவித்தோம்.
ஆனால் அதற்கு நீங்கள் எங்களுக்கு அரசியல் தீர்வினை தர வேண்டும் என கூறியிருக்கின்றோம்.

இந்த விடயத்தில் அரசாங்கம் மௌனம் காக்கின்றது. எனினும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அரசாங்கத்தினை காப்பாற்ற நாம் முயற்சிப்பதாக சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியும், அதற்கு முந்தைய காலப்பகுதியிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விடயம், காணி அபகரிப்பு போன்ற விடயங்கள் தமிழ் மக்களுக்கு முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகின்றன.

நாங்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதியினை சந்தித்து பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசி வருகின்றோம்.

குறிப்பாக பொத்தவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் போது நாங்கள் முன்வைத்திருந்த கோரிக்கைகளில் இவையும் உள்ளடங்குகின்றன.

பலரும் கேட்கின்றார்கள் குருந்தூர் மலை விவகாரம் குறித்து ஏன் சாணக்கியன் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கின்றார் என்று. நாங்கள் குருந்தூர் மலையினை சென்று பார்வையிட்டுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் நீதிமன்றத்தின் உத்தரவினையும் மீறி ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி இவ்வாறான விடயங்களை செய்து வருகின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்திலுள்ள பல பகுதிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் எங்கெல்லாம் காணி அபகரிப்பிற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருந்திருக்கின்றேன். அவற்றினை எதிர்த்திருக்கின்றேன். இனினும் இருப்பேன்.

எங்களுடைய அரசியல் தீர்வின் ஊடாகவே இவற்றினை மாற்றியமைக்க முடியும். எங்களுடைய கைகளில் எங்களுடைய அரசியல் அதிகாரம் இருந்தால் நாங்கள் இதனை மாற்றியமைக்கலாம்.

இது நீண்டகால போராட்டமாக இருகின்றது. இலங்கை வரலாற்றில் இதுதான் எங்களுடைய காலமாக இருக்கலாம்.

எங்களது எதிர்காலம் எப்படியாக இருக்க வேண்டும் என சொன்னால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் ஒன்றாக வாழ வேண்டும்.

முஸ்லீம்களிடமிருந்து கிழக்கினை மீட்க வேண்டும் என கூறி நாடாளுமன்றம் வருகை தந்த பிள்ளையானும், வியாழேந்திரனும், நஸீர் அஹமட்டுன் இணைந்து தற்போது பணியாற்றுகின்றனர்.

எனவே அரசியல் இலாபங்களுக்காக வாய்களில் வந்த அனைத்தினையும் சொல்லக் கூடாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து வாழ வேண்டும். அப்படி செய்யாவிட்டால் கிழக்கு மாகாணம் தமிழ் மக்களுக்கும் இருக்காது முஸ்லீம் மக்களுக்கும் இருக்காது- எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1287754

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் புலத்து தமிழன்தானா இந்த அரசியல் வாதிகளிடமிருந்து சொத்துக்களையும் பதுக்கிய பணத்தையும் மீட்டாலே போதும் பாதி பஞ்சம் தீரும் 

  • கருத்துக்கள உறவுகள்

சாணாக்கியன் அவர்கள் முள்ளிவாய்க்காலுக்கும் பின்பாக நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழர்களைக் கொண்றொழித்த  கையோடு மகிந்தவின் கைகளிலிருந்த இரத்த வாடைகூடப் போகாமல் இருக்கும்போது அவருடன் கைகுலுக்கி அரசியல் செய்தவர் இப்போ சுமந்திரனுக்குச் செம்புதூக்கி கூட்டமைப்பில போட்டியிட்டு நாடாளுமன்றம் போனவுடன் நிறையக் கதைக்கிறார். இப்போதெல்லாம் சிங்களத்தின் இரத்த உறவுகள்தான் தமிழர் அரசியலைக் கொண்டுசெல்ல தமிழர்களால் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்திய வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்புத் துறையிலும் உளவுத்துறையிலும் எப்படி மலையாளிகளது ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ அதேபோல் இப்போது சிங்களத்தின் இரத்த உறவுகள் மற்றும் கொண்டான் கொடுத்தான் உறவுகளது ஆதிக்கம் அதிகரித்திருப்பது விரும்பத்தக்கதல்ல. 

சாணாக்கியன் மறுபடியும் தனது தந்தையரது மொழியை மறந்து தாயாரது மொழியைப்பேசிக்கொண்டு எப்போது சிங்களத்துக்குக் காவடி எடுக்கிறாரோ தெரியாது ஆனால் எப்போதோ ஒரு நாள் இது நடக்கும்.

எங்கட இளையோர் பலர் இவர் அடுத்த தேசியத் தலைவர் எணு சொல்லிக்கொண்டு திரிகினம் கருணா எனும் முரளிதரன் புலிகளது த்லைவரது இடது வலதாக இருந்தே துரோகியாகின வரலாறு எம்மிடம் இருக்கு. 

கனடாவிலிருந்து கூட்டமைப்பு தேர்தல் நிதியாக மில்லியன் கணக்கில் சேர்தத பணத்துக்கு என்ன நடந்தது எனக்கேட்ட மகளிர் அணியைச்சேர்ந்தவரை மான நஸ்ட வழக்குப்போடுகிறன் எனப் பயம்காட்டி சுமந்திரன் அடக்கியதுபோல எதிர்காலத்தில் சிங்களத்துடன் சேர்ந்து இவரும் எங்களுக்கு வாலை ஆட்டுவார். 

பிரேமானந்தாவுக்காக இந்தியா சென்று சாட்சி சொன்ன விக்கியர் (இவரும் சிங்களச் சம்பந்திதான்) அடுத்த சிங்களச் சம்பந்தி சுமந்திரன், இப்போ சாணாக்கியன் இவர்கள் எல்லாம் எமது அரசியலைத் தீர்மானிப்பது காலக்கேடாகும்.

முதலில் விருååஅம் எண்டால் உங்கட சொத்து சுகத்தை வித்து தாயகத் தமிழருக்குச் சாப்பாடு போடுங்கோ அப்புறம் பாக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Elugnajiru said:

அப்போ சம்பந்தர், சிறிதரன், மாவை, கஜேந்திரன் பொன்னம்பலம் ஆகியோரில் நம்பிக்கை வைக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எல்லாம் ரெடி 
அங்கு பஞ்சம் ஆவதில்தான் தாமதம் 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

அப்போ சம்பந்தர், சிறிதரன், மாவை, கஜேந்திரன் பொன்னம்பலம் ஆகியோரில் நம்பிக்கை வைக்கலாமா?

முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தின்போது தலைவரை தப்ப விடுவதற்காக பசில் ராஜபக்சவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இணைப்பாளராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் ஈடுபட்டதாக அறியமுடிகிறது. தவிர இந்தியா மேற்குலகம் அனைத்தும் சம்பந்தனுக்கும் ஏனைய கூட்டமைப்பு அரசியல் தலைவர்களுக்கும் புலிகளை அழித்ததன்பின்பாக தமிழர்களுக்கான தீர்வை  மிக விரைவில் நடைமுறப்படுத்த அனைத்தும் செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததாக யாழ் இணையத்தில் ஒரு கட்டுரை வந்திருந்து அதில்  சம்பந்தனையும் போர்குற்ற, இன அழிப்பு விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என கூறப்பட்டிருந்தது. தவிர புலிகளுக்கும் ரணிலுக்கு இடையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சமாதான காலத்தில் சம்பந்தனும் அவரது பரிவாரங்களும் மேற்குலக நாடுகளுக்குப் பயணம் செய்திருந்தார்கள் அப்போது நான் வாழும் நாட்டுக்கும் பயணம் செய்திருந்தார்கள் அதன்போது சம்பந்தன் மூச்சுக்கு முன்னூறு தடவை சுமந்திரனுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டு சில அறிவுறுத்தல்களை மேற்கொண்டிருந்தார் அப்போது சபை நாணயம் கருதி நாம் இவைகளைச் செவிமடுக்கவில்லை தவிர சுமந்திரன் அவர்களை எதிர்காலத்தில் தமிழர் அரசியலுக்குக் சம்பந்தன் கொண்டுவருவார் என புலம்பெயர் தேசத்தில் புலிகளின் வால்களாகிய நாங்கள் கணித்திருக்கவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் அப்போதே சுமந்திரன் தமிழர் அரசியலுக்குள் நுழைந்துவிட்டார் என்பது காலப்போக்கில் அறியக்கூடியதாக இருந்தது அப்போது சம்பந்தன் அவர்கள் சுமந்திரனை "சுமன்" என தொலைபேசி உரையாடல்களில் விழித்ததை நான் அவதானித்தேன்.

ஆக இன அழிப்புத் தொடர்பான போர்குற்ற விசாரணை என வரும்போது தமிழர் அரசியல் தலைவர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்பதே எனது கருத்து. இதில் எவரையும் விட்டு வைக்கக்கூடாது.

தவிர ஒரு செய்தியாளர் சந்திப்பில் புலிகளதான் தமிழ்தேசிய முண்ணணியை உருருவாக்கினார்களா எனச் சுமந்திரனிடம் கேட்டபோது தனக்கு அதுபற்றித்தெரியாது அப்போது நான் தமிழர் அரசியலிலோ அல்லது கட்சி உறுப்பினராகவோ இருக்கவில்லை என நழுவலான கருத்தை வெளியிட்டதை இங்கி நினைவுகொள்ளவும்

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

இங்கு எல்லாம் ரெடி 
அங்கு பஞ்சம் ஆவதில்தான் தாமதம் 

சொல்லவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Elugnajiru said:

சாணாக்கியன் அவர்கள் முள்ளிவாய்க்காலுக்கும் பின்பாக நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழர்களைக் கொண்றொழித்த  கையோடு மகிந்தவின் கைகளிலிருந்த இரத்த வாடைகூடப் போகாமல் இருக்கும்போது அவருடன் கைகுலுக்கி அரசியல் செய்தவர் இப்போ சுமந்திரனுக்குச் செம்புதூக்கி கூட்டமைப்பில போட்டியிட்டு நாடாளுமன்றம் போனவுடன் நிறையக் கதைக்கிறார். இப்போதெல்லாம் சிங்களத்தின் இரத்த உறவுகள்தான் தமிழர் அரசியலைக் கொண்டுசெல்ல தமிழர்களால் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்திய வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்புத் துறையிலும் உளவுத்துறையிலும் எப்படி மலையாளிகளது ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ அதேபோல் இப்போது சிங்களத்தின் இரத்த உறவுகள் மற்றும் கொண்டான் கொடுத்தான் உறவுகளது ஆதிக்கம் அதிகரித்திருப்பது விரும்பத்தக்கதல்ல. 

சாணாக்கியன் மறுபடியும் தனது தந்தையரது மொழியை மறந்து தாயாரது மொழியைப்பேசிக்கொண்டு எப்போது சிங்களத்துக்குக் காவடி எடுக்கிறாரோ தெரியாது ஆனால் எப்போதோ ஒரு நாள் இது நடக்கும்.

எங்கட இளையோர் பலர் இவர் அடுத்த தேசியத் தலைவர் எணு சொல்லிக்கொண்டு திரிகினம் கருணா எனும் முரளிதரன் புலிகளது த்லைவரது இடது வலதாக இருந்தே துரோகியாகின வரலாறு எம்மிடம் இருக்கு. 

கனடாவிலிருந்து கூட்டமைப்பு தேர்தல் நிதியாக மில்லியன் கணக்கில் சேர்தத பணத்துக்கு என்ன நடந்தது எனக்கேட்ட மகளிர் அணியைச்சேர்ந்தவரை மான நஸ்ட வழக்குப்போடுகிறன் எனப் பயம்காட்டி சுமந்திரன் அடக்கியதுபோல எதிர்காலத்தில் சிங்களத்துடன் சேர்ந்து இவரும் எங்களுக்கு வாலை ஆட்டுவார். 

பிரேமானந்தாவுக்காக இந்தியா சென்று சாட்சி சொன்ன விக்கியர் (இவரும் சிங்களச் சம்பந்திதான்) அடுத்த சிங்களச் சம்பந்தி சுமந்திரன், இப்போ சாணாக்கியன் இவர்கள் எல்லாம் எமது அரசியலைத் தீர்மானிப்பது காலக்கேடாகும்.

முதலில் விருååஅம் எண்டால் உங்கட சொத்து சுகத்தை வித்து தாயகத் தமிழருக்குச் சாப்பாடு போடுங்கோ அப்புறம் பாக்கலாம்.

உங்கள் கருத்தை மறுதலிப்பதற்கில்லை. 

ஆனால் , இந்தப் பிரச்சனை தொடர்பான உங்கள் முன்மொழிவென்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

உங்கள் கருத்தை மறுதலிப்பதற்கில்லை. 

ஆனால் , இந்தப் பிரச்சனை தொடர்பான உங்கள் முன்மொழிவென்ன? 

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் புலம்பெயர் தமிழர்களுக்கு  மண்டையில் எதுவுமில்லை எனும் கோதாவில் நீங்கள் காசு அனுப்புங்கோ நாங்கள் தமிழர்களை வாழவைக்கிறம் எனக்கூறிக்கொண்டு வாக்குவங்கி அரசியலுக்கு அத்திவாரம் போடுகினம்.

சாணாக்கியன் சுமந்திரன் ஆகியோர் ராஜபக்ச தரப்பையும் ரணில் தரப்பையும் இந்தியத்தரப்பையும் அடிக்கடி சந்திக்கினம்தானே அவர்களிடம் கோரிக்கையாக புலம்பெயர் தமிழர்கள் தங்களது பணத்தில் தாயகத்து உறவுகளுக்கு தற்போதைய உணவுத்தட்டுப்பாட்டை ஓரளவுக்குச் சமாளிப்பதற்காகவேனும் அவர்களாகவே இறக்குமதியில் ஈடுபட அனுமதிக்குமாறு.

கடந்தகாலங்களில் நாலாம் குறுக்குத் தெருவில் வர்த்தகம் செய்த தமிழர்கள்தானே இறக்குமதியில் ஈடுபட்டார்கள்.

மத்திய வங்கியில் வெளிநாட்டுப்பணம் கையிருப்பில் இல்லை ஆகவே அவர்களால் எந்தவொரு கொடுப்பனவுக்கும் அனுமதியளிக்க முடியாது.

ஆகவே புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளிலிருந்தவாறே சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஏற்றுமதி நிறுவனங்களுடன் தொடர்புகொன்டு இலங்கைத் துறைமுகத்தில் பொருதளைக் கையளிக்கும்வண்ணம் ஏற்பாடு செய்ய அனுமது கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தலாமே.

உலகமயமாக்கல் பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் இப்போதைய போக்கிவரத்து மற்றும் வெளிநாட்டு வியாபார வலைப்பின்னலில் இவை சாத்தியமானதே.

முதலில் பொருதளை இறக்குவதாகவிருந்தால் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டும் அப்படி முயற்சிக்கும்போது வணங்காமுடி கப்பலுக்கு நடந்த கதி நடக்கக்கூடாது.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து சிறிது சிறிதாக தனிப்பட்ட முறையில் இலங்கைக்கு எமது உறவுகள் இப்போதும் பெட்டிகளில் அடைத்துப் பொருதள் அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள் ஆனால் அதன் கையடக்க விலை ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சில்லறை வியாபாரிகளது விற்பனை விலையாக ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளது அதே பொருள் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு கப்பலில் வந்த கட்டணம், சுங்கம் உள்ளூர் ஏற்றி இறகல் செலவு அந்நிய நாணியப் பரிவர்த்தனைக் கட்டணம் ஒவ்வொரு பொருளையும் உள்ளூரில் விற்பதற்குத் தகுதியுடையதா? வழக்கத்துக்கு மாறான இராசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதா எனச்சோதனை செய்ய ஏற்படும் செலவு  இவைகளுட சில்லறை விற்பனையாளரது இலாபம் ஆகியவற்றை உள்ளடக்கியே இவை அனைத்தும் தாயகத்து உறவுகளுக்குப் போகிறது.

சரி அதை விடுங்கள்

தமிழ் நாட்டிலிருந்து மொத்த விற்பனையாளர்களிடம் புலம்பெயர் தேசத்தவர்கள் கொள்முதல் செய்து அதை தங்களது உறவுகளுக்கு நேரடியாக அனுப்புவதற்கான ஒரு வலைப்பின்னலை இந்தயாவும் இலங்கையும் சேர்ந்து செய்தாலே ஓரளவு எமது தாயகத்து உறவுகள் பயனடைவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனின் இன்றைய நிலைப்பாடு உண்மையெனில், அவரை ஆதரிப்பதில் தவறில்லை. ஆனால், சாணக்கியன் பிள்ளையானுடன் இருந்த காலத்தில் மகிந்தவுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே, இவரது உண்மையான முகத்தினைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அவ்வாறே சம்பந்தனும் வெளிப்படையாகவே புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக அடிக்கடி காட்டிக்கொண்டவர். இறுதி யுத்த காலத்தில் இந்தியாவில் தங்கியிருந்து, புலிகளை அழிக்கும் வரை இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று இந்தியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க செயற்பட்டவர். ஆனாலும், ஒரு சில கூட்டமைப்பு எம் பீக்கள் பசிலுடனும், கனிமொழி, சிதம்பரம் போன்றோரிடமும் பேசியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இவர்கள் விடுத்த வேண்டுகோள்களை சிதம்பரமோ கனிமொழியோ சட்டை செய்ததாக தெரியவில்லை. 

சுமந்திரன் வெளிப்படையாகவே புலிகளின் போராட்டத்தை எதிர்த்து வருபவர். தன்னை புலிகளின் அரசியலில் இருந்து விலத்தி வந்ததுடன், கூட்டமைப்பில் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உடையவர்களை ஒதுக்குவதில் வெற்றி கண்டவர். 

சிவசங்கர் மேனன் எழுதிய புத்தகத்தில் புலிகளை அழிக்கும்வரை மத்திய அரசு மீது அழுத்தம் செலுத்தக் கூடாதென்கிற சோனியாவின் அன்புக் கட்டளையினை விதிவிலக்கில்லாமல் தமிழகத்தின் அனைத்து அரசியட் கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறார். அதிலும் கருனாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் புலிகளை அழிப்பதை விரும்பினார்கள் என்றும், தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்கள் என்றும் கூறியிருக்கிறார். புலிகளை முற்றாக அழிப்பதற்கு பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களும் கொல்லப்படவேண்டிவரும் என்று இந்தியா நன்கு தெரிந்தே இருந்ததாகவும், ஆனால் இந்தியாவின் பிராந்திய நலன்கள் மற்றும் பாதுகாப்பு என்று வரும்போது, ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பலியிடுவதற்கு இந்தியா தயாராகவே இருந்ததென்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார். இதற்கான முழு ஆதரவினையும் ஒட்டுமொத்த தமிழகத் தலைவர்களும் தமக்கு வழங்கியிருந்ததாக அவர் தொடர்ந்து எழுதுகிறார்.. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

சாணக்கியனின் இன்றைய நிலைப்பாடு உண்மையெனில், அவரை ஆதரிப்பதில் தவறில்லை. ஆனால், சாணக்கியன் பிள்ளையானுடன் இருந்த காலத்தில் மகிந்தவுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே, இவரது உண்மையான முகத்தினைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எந்தக் கட்சியாக இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட வேண்டுமெனில் இளைஞர்களாக இருக்கும் போதே பல தியாகங்கள் செய்து பல மேடைகள் ஏறி பேச்சாளனாக மாற வேண்டும்.

அப்படி வளர்ந்து வந்தவர்கள் தான் பாராளுமன்ற உறுப்பினரானார்கள் தலைவர்களானார்கள்.

ஆனால் சுமந்திரனும் சரி சாணக்கியனும் களமிறக்கப்பட்ட போது யாருக்குமே இவர்களைத் தெரியாது.

அப்போ எப்படி யாரால் உள்வாங்கப்பட்டனர்?

விடை தெரியாத பல கேள்விகள் உள்ளன.ஆனால் யாரும் யாரிடமும் கேள்வி கேட்க முடியாது.

மூன்று மொழிகளிலும் முழங்கியவுடன் இருவரையும் பார்த்து மக்கள் திகைத்து போய் நிற்கிறார்கள்.

இனி காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சாணக்கியன் பிள்ளையானுடன் இருக்கும் போது இதே இடத்துக்கு முயன்றார் முடியவில்லை.

ஒருவேளை அவர் பிள்ளையானுடன் நின்று வென்றிருந்தால் நிலமை எப்படி இருந்திருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஈழப்பிரியன் said:

கூட்டமைப்பு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவர்களே இந்த இருவரையும் உள்ளே கொண்டுவந்தார்கள. 

அந்த 51 நட்சத்திரங்களின் கட்டுப்பாட்டில் இவர்கள் இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

கூட்டமைப்பு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவர்களே இந்த இருவரையும் உள்ளே கொண்டுவந்தார்கள. 

அந்த 51 நட்சத்திரங்களின் கட்டுப்பாட்டில் இவர்கள் இருக்கிறார்கள். 

ம் பாம்புக்கு பால்வார்த்து வளர்த்த மாதிரி தான் தமிழர்கள் நிலை.

நம்பிக்கையோடு பாலை ஊற்றுவோம்.

கொத்துற நேரம் கொத்தட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ம் பாம்புக்கு பால்வார்த்து வளர்த்த மாதிரி தான் தமிழர்கள் நிலை.

நம்பிக்கையோடு பாலை ஊற்றுவோம்.

கொத்துற நேரம் கொத்தட்டும்.

"நாங்கள் இலங்கையை உய்யவே விடமாட்டோம்" என்று தன்னிடம் லண்டனில் இருக்கும் முக்Kய பிரமுகர் ஒருவர் கூறியதாக நேற்று ஒருவர் என்னிடம் கதைக்கும்போது கூறினார்.

அவர் கூறிய விடயத்தின் உட்பொருள்  இலங்கையர் எவருக்குமே(தமிழர் உட்பட) நன்மையானதாக இல்லை. 

"நம்பிக்கையோடு பாலை ஊற்றுவோம். கொத்துற நேரம் கொத்தட்டும்" என்று நீங்கள் கூறியது 100% உண்மையானது. 

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு அக்கறை தமிழர்கள் மேல் இருந்தால் தன்னுடைய சொந்த பணத்தை கொடுக்கலாமே !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.