Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உபத்திரவ நாய்:  மரநாய்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உபத்திரவ நாய்:  மரநாய்.

காட்டு நாய் பார்த்திருப்பீர்கள். இது மரநாய். Weasels

File:Mustela nivalis -British Wildlife Centre-4.jpg

மிக மோசமான ஒரு உபத்திரவ விலங்கு. மிகவும் துணிச்சல் மிக்கது. தன்னிலும் பார்க்க மிகவும் பெரிய விலங்குகளையே உண்டு, இல்லை என்று பண்ணி விடும். சாப்பிட முடியுமோ இல்லையோ, கொல்ல முடியுமோ இல்லையோ, அரியண்டம் கொடுப்பதில் கில்லாடி.

கோழிக்கூட்டினுள் புகுந்து, முட்டையினை அலேக்காக தூக்கிக் கொண்டு ஓடுகிறது. பாம்பினை கூட பொறுத்த இடத்தில் பிடித்து, அலற வைக்கிறது. பெரும்பாலும், கழுத்தை குறி வைத்து கவ்விக் கொள்வதால், பாதிக்கப்படும் விலங்குகள், ஒன்றுமே செய்ய முடியாமல், தடுமாறி, அங்கும் இங்கும் ஓடும். உருளும், புரளும். 😯

இந்த வீடியோவில், தாய் பறவை இல்லாத நேரத்தில், ஒரு மரப்பொந்தினுள் புகுந்து, குஞ்சுகளை தூக்கி வெளியே வீசுகிறது. ஏன் அவ்வாறு செய்கிறது என்று அதுக்கே தெரியாது.

எலியின் வாலை பிடித்து இழுக்கிறது. தண்ணீரில் பாய்ந்து, நண்டை பிடித்துக்கொண்டோடுகிறது.

அதிலும் பார்க்க, பெரிய முயல்களை பாடாக படுத்துகிறது, சுண்டெலிக்கு விளையாட்டு, பூனைக்கு சீவன் போகுது கதை. 🤭

ஒரு மரங்கொத்திப் பறவையியினை கொலை செய்ய அதன் கழுத்து நோக்கி பாய, அது முதுகில் சுமந்தவாறே பறந்தோட, அதனை ஒருவர் கிளிக் செய்ய, அது சிறந்த புகைப்படமாகி, உலகளாவிய ரீதியில் viral ஆகியது.

மரங்கொத்திப் பறவையின் கண் சொன்ன திகில்.... உலகளாவிய ரீதியில் பேசப்பட்டது. அதன் பின்பே, இந்த மிருகம் குறித்து உலகமே தெரிந்து கொண்டது.

Incredible photo captures weasel riding on the back of a flying woodpecker  - Telegraph

Edited by Nathamuni
addition

  • Replies 60
  • Views 9.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பல பிராணிகளை மிரட்டிய… மரநாய், பூனையிடம் மாட்டுப் பட்டுப் போனார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, Nathamuni said:

உபத்திரவ நாய்:  மரநாய்.

காட்டு நாய் பார்த்திருப்பீர்கள். இது மரநாய். Weasels

File:Mustela nivalis -British Wildlife Centre-4.jpg

அட இவரே ஆள்! எங்கடை ஊரிலை மரநாய் கோழியளை புடிச்சுக்கொண்டு போட்டுது எண்டுவினம். ஆனால் இதுவரைக்கும் மரநாயை கண்ணாலை கண்டதில்லை 😁

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

அட இவரே ஆள்! எங்கடை ஊரிலை மரநாய் கோழியளை புடிச்சுக்கொண்டு போட்டுது எண்டுவினம். ஆனால் இதுவரைக்கும் மரநாயை கண்ணாலை கண்டதில்லை 😁

ஊரில் உள்ள மரநாய்…. இரவில் மட்டுமே நடமாடும்.
இது… பகலிலும், ஓடித் திரியுது. அத்துடன் மிகச் சிறியதாகவும் இருக்கின்றது.
சில வேளை இது… கீரி வகையை, சேர்ந்ததோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, தமிழ் சிறி said:

ஊரில் உள்ள மரநாய்…. இரவில் மட்டுமே நடமாடும்.
இது… பகலிலும், ஓடித் திரியுது. அத்துடன் மிகச் சிறியதாகவும் இருக்கின்றது.
சில வேளை இது… கீரி வகையை, சேர்ந்ததோ தெரியவில்லை.

Mustela.erminea.jpg

உதுதானே இஞ்சை ஜேர்மனியிலை  கார் மோட்டருக்குள்ளை உள்ளட்டு வயர்களை கடிச்சு நாசமறுக்கிறது?

Marder.

Hochspannung und Ultraschall: Hyundai wehrt die Marder ab - S & T  Autogalerie Bremerhaven

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

Mustela.erminea.jpg

உதுதானே இஞ்சை ஜேர்மனியிலை  கார் மோட்டருக்குள்ளை உள்ளட்டு வயர்களை கடிச்சு நாசமறுக்கிறது?

Marder.

Hochspannung und Ultraschall: Hyundai wehrt die Marder ab - S & T  Autogalerie Bremerhaven

அதே தான். இது, ஜேர்மனியில் காருக்கு விளைவிக்கும் சேதம் பல மில்லியனை தாண்டும்.
இதற்கென்று காப்புறுதி கூட உள்ளது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

அதே தான். இது, ஜேர்மனியில் காருக்கு விளைவிக்கும் சேதம் பல மில்லியனை தாண்டும்.
இதற்கென்று காப்புறுதி கூட உள்ளது. 

11 minutes ago, குமாரசாமி said:

Mustela.erminea.jpg

உதுதானே இஞ்சை ஜேர்மனியிலை  கார் மோட்டருக்குள்ளை உள்ளட்டு வயர்களை கடிச்சு நாசமறுக்கிறது?

Marder.

Hochspannung und Ultraschall: Hyundai wehrt die Marder ab - S & T  Autogalerie Bremerhaven

அடேங்ப்பா, கெட்டாரில் கெட்ட நாய்..... காருக்கும் குடைச்சல் குடுக்குது....😍

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

அடேங்ப்பா, கெட்டாரில் கெட்ட நாய்..... காருக்கும் குடைச்சல் குடுக்குது....😍

ஓடிய கார்… எஞ்சின் சூட்டுக்கு, இதமாக இருக்க… உள்ளே குடியிருக்க ஆரம்பிக்கும்.
அதிலும் ஒரு முறை இருந்த காரைத்தான் தேடி வரும். அடிக்கடி மாத்தாது.
உள்ளுக்கு இருக்கிற நேரத்தில்…. பொழுது போவதற்காக,
கண்ணிலை காணுற வயர், பிளாஸ்ரிக் உதிரிப்பாகங்கள் எல்லாத்தையும் கடித்து விடும்.
வயல், தோட்டங்களை அண்டிய பகுதியில்…. இதன் பாதிப்பு அதிகம் இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Is This a Weasel Riding a Woodpecker? | Snopes.com

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துக் காலங்களில்… இந்த மர நாய்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது! ஒரு ஆசிரியரின் பட்டப் பெயரும் மர நாய் என்று இருந்தது! 

வகுப்பறைகளின் சீலிங்குகள் கிடுகினால் ஆணவ! மர நாய் இரவுகளில் மூத்திரம் பேய்ந்திருக்கும்! மணம் அந்த மாதிரி. சில தடவைகள் இவற்றைக் கண்டுமிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலும் இந்த மரநாய்  செய்யும் சேதம் அதிகம் சில நேரம்களில் ஆடுகளை கூட விட்டு வைக்காது கோழிக்கூட்டினுள் புகுந்தால் அங்கு இருக்கும் கோழிகளை அனைத்தையும் கொன்றபின்தான் சிங்கன் வெளியேறுவார் சாப்பிட மாட்டார் . நாய்கள் ஒருவிதமாக அழுகை குரைப்புடன்  சத்தமிட்டால் சிங்கன் ஏரியாவுக்குள் எண்டர்  பண்ணிவிட்டார் என்று அர்த்தம் சிலர் இதை சருகு புலி என்பார்கள் அது வேறு இதுவேறு சொல்லி புரியவைக்க முடியாது . நம்ம தொடக்கம் எட்டாம் கட்டை செம்மலை வீதிக்கு அடுத்த பக்கம் உள்ள கராச்சி காடுகள் முழு நேர வசிப்பிடம் பகலில் அங்குதான் .

  • கருத்துக்கள உறவுகள்+

நானும் ஊரிலை கேள்விப்பட்டிருக்கிறன். ஆனால் இண்டைக்குத்தான் முதற்தடவையாக் காணுறன்...

நான் இவ்வளவுநாளும் ஏதோ ஓநாய் வடிவிலை இருக்குமென்டுதான் நினைச்சனான். ... என்ன உவர் சுண்டெலி மாதிரி இருக்கிறார்?😆

  • கருத்துக்கள உறவுகள்

கெட்ட சாமான் இது.

சின்ன வயசில் என் முதலாவது பிசினஸ் முயற்சியான கோழி பண்ணையை அடியோடு சாய்த்த வில்லன்😡.

இரவில் கண்ணை மட்டும் கண்டுள்ளேன்.

87 க்கு முந்திய ஒரு கறுத்த ஏரியா பொறுப்பாளரை அவரின் ஊரை சொல்லி மரநாய் என இயக்கத்தில் அழைப்பார்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்

https://www.abc.net.au/news/rural/2021-09-07/rambo-the-fox-escapes-capture-again/100436276

2 hours ago, நன்னிச் சோழன் said:

நானும் ஊரிலை கேள்விப்பட்டிருக்கிறன். ஆனால் இண்டைக்குத்தான் முதற்தடவையாக் காணுறன்...

நான் இவ்வளவுநாளும் ஏதோ ஓநாய் வடிவிலை இருக்குமென்டுதான் நினைச்சனான். ... என்ன உவர் சுண்டெலி மாதிரி இருக்கிறார்?😆

நான் நரியைதான் இப்படி சொல்லுகிறார்கள் என்று நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்+
5 minutes ago, vasee said:

https://www.abc.net.au/news/rural/2021-09-07/rambo-the-fox-escapes-capture-again/100436276

நான் நரியைதான் இப்படி சொல்லுகிறார்கள் என்று நினைத்தேன்.

அவர் ஏமாத்துககாரன்; கொஞ்சம் பெரிய ஆள்...

உவர் சுண்டெலியர்; சின்னச்சாமான்.

  • கருத்துக்கள உறவுகள்

Ratgeber: Die besten Tipps gegen Marderschäden | Augsburger Allgemeine

இந்த மரநாய்,   ஜேர்மனியில்...  ஒவ்வொரு வருடமும், 
சராசரியாக 200,000 வாகனங்களை சேதமாக்கி, 
65 மில்லியன் ஐரோ பணத்திற்கு நட்டம் ஏற்படுத்துகின்றது.

எனது காரின்... குளிர்சாதன குழாய் ஒன்றை கடித்த பின்,
அது காருக்கு கிட்ட  வராமல் இருக்க... 
மனிதருக்கு கேட்காத, அதி கூடிய ஒலி எழுப்பும்...  
ஒரு  சென்சார்  கருவியை பொருத்திய பின் ஒரு சம்பவமும் நடக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றிலும் பல வகைகள் இருக்கிறது என்று நினைக்கிறன். வெப்பவலயத்தில் இருப்பவை கருமை நிறமும், சற்று பெரிய தோற்றம் உள்ளது.    

இதை போன்றதே தேன் கரடி. honey  badger. ஆனால், தேன் கரடிக்கு பாம்பிடம் கடி வாங்கி, மயங்கி,  விடமுறித்து, மீண்டும் எழும் தன்மை இருக்கிறது.    

அனால், இந்த குடும்பம் (rodents; அணில், முயல் போன்றவையும் ) போறவற்றின் பற்கள் எப்போதும் வளருபவை (எலி போல, open rooted) போல இருக்கிறது.

அதனால் எலி போல கடித்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறே அவை பற்களை தேய்த்து அரிக்கின்றன .

மற்றது அநேகமாக எல்லா rodents உம், metabolism மிக கூடியவை. இதுவும் ஓர் காரணம் இவை எப்போதும் எதாவது உண்ணவும் அல்லது வேட்டையாடவும்.

காட்டுப் பன்றியும் இந்த எப்போதும் வளரும் (open rooted) தந்தம் உள்ளது. காட்டுப் பன்றி அவற்றிடையே சண்டை (இனப்பெருக்க காலத்தில்) அல்லது மரங்களில் தேய்த்து இந்த வளர்ச்சியை கட்டுக்குள் வைத்து இருக்கும்.   

வளர்ப்பு பண்றியிலும் இருக்கலாம். வளர்ப்பு என்றபடியால், தகுந்த நேரத்தில் அவை அகற்றப்படும் என்று நினைக்கிறன். 

மரையின் கொம்புகள் (இது சரியான பதம் அல்ல என்று ன் நினைக்கிறேன்)  மீண்டும் வளரும். 

மானின் கொம்புகள்  வளருமா என்பது தெரியவில்லை.   
 
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அட இவரே ஆள்! எங்கடை ஊரிலை மரநாய் கோழியளை புடிச்சுக்கொண்டு போட்டுது எண்டுவினம். ஆனால் இதுவரைக்கும் மரநாயை கண்ணாலை கண்டதில்லை 😁

ஊரில பழந்திண்டு கொட்டை போட்ட நாங்க என்று சொல்லுவீங்க மரநாயை காணல என்று சொல்லுறீங்க🙄🙄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஊரில பழந்திண்டு கொட்டை போட்ட நாங்க என்று சொல்லுவீங்க மரநாயை காணல என்று சொல்லுறீங்க🙄🙄

நானும் ஊரிலை காணவில்லை தான். காரணம் இரவில் திரியும் ஒரு விலங்கு என்று நினைக்கிறேன். அடுத்து, விளக்கு வைத்த பிறகு, வெளியாலை போறதில்லை எண்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்..... (நாங்கள் எல்லாம், அப்பவே பேப்படிப்புகாரர் என்று ஊரை, பேக்காட்டிக்கொண்டு திரிஞ்ச ஆக்கள் எல்லோ) 😜

  • கருத்துக்கள உறவுகள்

1975 வாக்கிலே எல்லாம் யாழ் நகரத்துக்குள் எல்லாம் மரநாய் பாம்பு எல்லாம் நிறைய இருந்தன.......கோழிகளுக்கு எல்லாம் கூடுகள் இல்லை......பூவரசு மரங்களில்தான் இரவில் அவை படுத்திருக்கும்......இந்த மரநாய் மாதத்துக்கு ஒரு கோழியாவது கொண்டுபேய்விடும் ......வீட்டில் பூனை நாய் இருப்பதால் கொஞ்சம் கட்டுப்படும்.......இப்ப எல்லா வீடுகளும் கட்டிட காடுகளாய் மாறி இருப்பதால் பாம்பும் இல்லை, மரநாயும் இல்லை.....!  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஊரில பழந்திண்டு கொட்டை போட்ட நாங்க என்று சொல்லுவீங்க மரநாயை காணல என்று சொல்லுறீங்க🙄🙄

நாங்கள் இருவரும் (மரநாயும் நானும்) நடுச்சாமத்தில் உலாவுபவர்கள் தான். இருந்தாலும் இருவரும் நேருக்கு நேர் சந்திக்காதது அவர் அதிஷ்டம். என் துரதிஷ்டம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நானும் ஊரிலை காணவில்லை தான்.

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மரநாயை காணல என்று சொல்லுறீங்க

1 hour ago, குமாரசாமி said:

நடுச்சாமத்தில் உலாவுபவர்கள் தான்

முயல், மீன் வளர்ப்பது என்று தொடங்கியதால்., இரண்டு தரம் எனது உறவுகளும் நானும் பொறிவைத்து பிடித்தோம். அதில் இருந்து தான் அவை கருமை  நிறம் என்பதும், சற்று பெரிது என்பதும் தெரியும்.

ஆனால்ல், எனக்கு நன்கு நினைவு உள்ளது, அங்கு வெளிச்சத்துக்கு அது முகத்தை காட்டவில்லை.  பொறியானது  வலை பெட்டி  ஆகையால் நாங்கள் எல்லோரும் சுற்றி பார்க்க கூடியதாக இருந்தது. 

முயலில் இருந்து தொடக்கி அறிந்ததே  அவற்றின் மற்றும் எலி, அணிலின் பற்கள் எப்போதும் வளரும் என்று.

காட்டுப் பன்றி பற்றி hunting என்று ஈர்ப்பு வந்ததால் பின்பே அறிந்தது.

honey badger பற்றி சென்ற வருடத்தில் அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நாங்கள் இருவரும் (மரநாயும் நானும்) நடுச்சாமத்தில் உலாவுபவர்கள் தான். இருந்தாலும் இருவரும் நேருக்கு நேர் சந்திக்காதது அவர் அதிஷ்டம். என் துரதிஷ்டம் 😁

இருவரும் நைட் டியூட்டி. எண்டாலும் வேற வேற செக்சன்.

ஒருவர் மரம் பாயுறது.

மற்றவர் வேலி பாயுறது🤣

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

இருவரும் நைட் டியூட்டி. எண்டாலும் வேற வேற செக்சன்.

ஒருவர் மரம் பாயுறது.

மற்றவர் வேலி பாயுறது🤣

அதுகும்…. கருக்கு மட்டை வேலி. 😂

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

இருவரும் நைட் டியூட்டி. எண்டாலும் வேற வேற செக்சன்.

ஒருவர் மரம் பாயுறது.

மற்றவர் வேலி பாயுறது🤣

நான் கேட்கலாம் நினைச்சன் நீங்க கேட்டு விட்டீங்க நம்ம இனம் நீங்க பதுங்கல் சிங்கம் சாமியார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.